சம்மந்தமில்லாத பெண்ணிடம் ஏன் இப்படி பேசினோம் என்று ஹரி கொஞ்சம் கூட வருந்தவில்லை.
அவளை யாரு வர சொன்னது? அவளே வந்து வாங்கி கட்டிட்டு போனா… அது அவள் தவறு என்ற திண்ணக்கம் அவனுக்கு.
அவனுக்கே அவன் மன அழுத்தம் பயத்தை கொடுத்தது.
கடந்து வராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் பிரச்னை எப்படி தீரும்? அவனுக்கும் புரிந்தது.
Advertisement
அவனுக்கு தெரியும் இதை விட்டு கடந்து போவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. என்றாலும் கொண்ட நம்பிக்கையும்,பாசமும் அவனுக்குள் ஏற்படுத்தும் வலி தான் அவனை சுற்றி சுற்றி ஒரே சுழலில் சிக்க வைக்கிறது
குழந்தைகளை தொட்டு தூக்க தான் பயம் மற்றப்படி தள்ளி நின்று ரசிப்பான். அதற்காகவே அடிக்கடி வருவான் அகிலன் வீட்டுக்கு.இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை.
டேய் நானும் சௌமியும் அட்வைஸ் பண்றோம்னு வீட்டு பக்கம் வர மாட்டேங்கிறியா? அகிலன் கேட்கவே செய்தான்.
Advertisement
ச்ச ச… அப்படி இல்லை அகி. டைம் கொஞ்சம் பிசியாவே போகுது…அமேசான் பிரைமில் நிறைய மூவிஸ், வெப் சீரிஸ் பார்க்கிறேன்… மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுது! எதையோ பேசி சமாளித்தான்.
Advertisement
“——————-“
என்றாவது ஹரி வந்தாலும்
தவறியும் அவன் முகத்தை நிமிர்ந்துகூட பார்ப்பதில்லை பவித்ரா.
Advertisement
என்ன வார்த்தை பேசி விட்டான்… இவனுக்கு யார் என்னை மதிப்பீடு செய்யும் உரிமையை கொடுத்தது? கொதிப்பை அடக்கிக் கொண்டு தான் நடமாடிக் கொண்டிருந்தாள்.
பவி அகிலன் பர்த்டே வர சனிக்கிழமை வருது…. நம்ம வீட்டுக்கு நிறைய பிரண்ட்ஸ் வருவாங்க.
வரட்டும்க்கா பார்த்துக்கலாம்.
நம்ம ஏரியாவிலே நம்ம தமிழ் மக்கள் நிறைய பேர் இருக்காங்க!
அப்படியாக்கா? வியப்பாய் கேட்டாள்..
யாரு வீட்டில் என்ன விசேஷம்னாலும் எல்லாரும் கலந்துக்குவோம்.
இங்கே அங்காளி பங்காளி உற்றார் உறமுறை எல்லாமே பிரண்ட்ஸ் தான்.
என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்திடுவோம்….!
நம்ம மக்கள் பீசா பர்கர் எல்லாம் விரும்ப மாட்டாங்க… அவங்களுக்கு இட்லி சாம்பார் மெதுவடை ஊத்தப்பம் கேசரி இப்படி இருந்தா போதும்.
அவ்வளவு தானே… ஜமாய்சிடலாம் கவலை படாதீங்க!
ஒரு முப்பது பேர் கிட்ட வருவாங்க…. வீட்டிலே செய்ய முடியும் தானே…? சற்று அச்சம் நிலவியது சௌம்யாவிற்கு.
என்னக்கா முப்பது பேருக்கா செய்ய முடியாது?
“——————“
அக்கா இட்லிக்கு நைட் ஊற வச்சிட்டா அதி காலையில் அரைச்சுடலாம் ஈவினிங் இட்லி செய்ய சரியா இருக்கும்.
ஒவ்வொன்றையும் திட்டமிட்டு அவள் யோசிக்கும் பாங்கு கண்டு சௌமியாவிற்கு பிரம்மிப்பாய் இருந்தது.
சாம்பாருக்கு சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் கூட பேசிக் கொண்டே இருவரும் உரித்து வைத்து விட்டனர்.
அக்கா கொஞ்சம் வேர்கடலை சட்னி செய்வோமா? ஆர்வமாய் கேட்டு வேர்க்கடலை வறுத்து தோல் எடுத்து பாட்டிலில் நிரப்பி வைத்தாள்.
இந்தப் பெண் வந்த இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு நாளும் ஓய்ந்து உட்கார்ந்தது இல்லை.
இந்த வேலை செய் என்று சொல்ல வேண்டியது இல்லை. அவளாகவே இழுத்து போட்டு செய்து விடுவாள்.
சம்பளத்திற்கு வேலைக்கு வந்த பெண்ணாக இல்லாமல் குடும்பத்தில் ஒருத்தியாய் அவள் அக்கறையாய் நடந்து கொண்டாள்.
கொஞ்ச நாளாகவே சௌமி மனதிற்குள் ஒரு யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது இன்னும் கணவனிடம் கூட அவள் பகிரவில்லை.
“—————–“
அகிலன் வீட்டு ஹால் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பவித்ரா கிச்சனில் பிஸி.. பைனாப்பிள் கேசரி செய்து ஹாட்கேசில் எடுத்து வைத்து விட்டு. சின்ன வெங்காயம் பூசணிக்காய் போட்டு அரைத்து விட்ட சாம்பார் செய்து நெய் தாளித்து கொட்டி மூடி வைத்து விட்டு மிளகாய் சட்னி, வேர்க்கடலை சட்னி என அரைத்து வைத்தாள்.
அக்கா மூனு ஈடு நாற்பத்தஞ்சு இட்லி ஊத்திட்டேன்… பொங்கல் கொஞ்சம் செய்திருக்கேன். ஆனியன் ஊத்தப்பம் கொஞ்சம் ஊத்தி வச்சிட்டேன்…எவ்வளவு பேர் வராங்கன்னு பார்த்துட்டு அப்புறம் வேணா இட்லி ஊத்திக்கலாமா?
அப்படியே செய்வோம் பவி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துடுவாங்க….நீ போய் பிரஷ்ஷாகிட்டு வா!
அக்கா நான் வடை போடணும்!
நான் பார்த்துக்கறேன் நீ போ…
எனக்கென்ன… நான் நல்லா தான் இருக்கேன் இன்னும் என்ன பிரஷ் ஆகணும் … நீங்க போய் குழந்தைகளை பாருங்க!
குழந்தைங்க ஹரியோட இருக்காங்க…!
ஹரிக்கு குழந்தைகளை தூக்க தெரியாது… ஆனா இன்னைக்கு அவங்க கையை பிடிச்சுட்டு விளையாடுறாரு.
குழந்தைகளின் பிஞ்சு கரங்களை தன் விரல்களில் பற்றிக் கொண்டவனுக்கு உடல் நடுங்கி சிலிர்த்தது. புல்லரித்தது அவனுக்கு.. ஒரு குழந்தயின் ஸ்பரிசம் நாடி நரம்புகளை இப்படி மீட்டுகிறதே…
குழந்தைகள் மிழற்றியது அவனுக்கு தேவகானமாக இனித்தது.
நா பிரியத்தமா பங்காரம் நா சின்ன ராஜுவி…. குழந்தைகளை அவ்வளவு அவ்வளவு கொஞ்சினான்.
“——————–“
முகம் கழுவி பாசி பச்சை வண்ண காட்டன் புடவை உடுத்தி கண்ணுக்கு மை தீட்டி வில்லாய் வளைந்த இருபுருவங்களுக்கு மத்தியில் சிறிய மெரூன் வண்ண வட்ட பொட்டை ஒட்டிக் கொண்டவள் அடர்ந்த கூந்தலுக்கு சிக்கு எடுத்து ஜடையாய் பிண்ணி அரை முழத்திற்கு குறைவான மல்லியை சூடிக் கொண்டாள். அவ்வளவு தான் பத்து நிமிடத்தில் தயாராகி வந்து விட்டாள்.
அக்கா நீங்க போய் குழந்தைங்களை பாருங்க… அவசரமாய் ஓடி வந்தாள்.
பவி நான் வடை போட்டுட்டு இருக்கேன்.. நீ குழந்தைங்களை துடைத்து பவுடர் போட்டு டிரஸ் மாத்தி விட்டுடு!
இல்லக்கா… நீங்க போங்க!
பவி என் கையெல்லாம் மாவு… நானே பார்த்துக்கிறேன். நீ போம்மா.
தயங்கி தயங்கி அறைக்குள் நுழைந்தாள். மெல்லிய கொலுசொலி கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.
அந்த வீட்டில் கொலுசொலி என்றாலே பவித்ரா தான். சௌம்யா கொலுசு போடுவதில்லை.
தன்னிடம் ஏதோ பேச வருகிறாள் என்று எதிர்பார்த்தான். குழந்தைகளை துடைக்கும் வெட் வைப்ஸ் , டிஷ்யூ, பவுடர், குழந்தைகளுக்கான உடைகள் என்று எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்று விட்டாள்.
மீண்டும் உள்ளே வந்து இனியனை தூக்கிக் கொண்டு சென்றாள்.
குழந்தைக்கு டயப்பர் மாற்றி துடைத்து பவுடர் பூசி புத்தம்புது காட்டன் குர்தா அணிவித்து கன்னத்தில் திருஷ்டி பொட்டிட்டு ஹாலில் படுக்க வைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தாள்.
இதயாவின் கரம் பற்றி நா பங்காரு அம்மாயி, நா மஹாராணி அவன் சிரித்து கன்னம் வருடிக் கொண்டிருக்க இவர்கள் தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருக்க கண்டு
ஒருநிமிடம் தயங்கி நின்றவள் குழந்தையை தூக்க வந்தாள்
நான் அவ்வளவு வலுவானவள் என்றா என் விதி நினைக்கிறது…. வலித்த இதயத்தை நீவிக் கொண்டாள்.
என்ன ஒரு கேவலமான பார்வை பார்க்கிறான்…. யார் யாருக்கெல்லாம் பயந்து ஒதுங்கி செல்ல வேண்டியிருக்கு….ஊப் என்று மூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டவள் தண்ணீரை எடுத்து ஒரு மிடறு வாயில் ஊற்ற அவள் இடையில் ஒரு கரம் ஊர்ந்ததும் வாயில் இருந்த நீர் புரையேறி மூக்கின் வழி ஒழுகியது.