Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 6

இதுவரை:

ரயிலில் காப்பாற்றிய பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியாக தன் வீட்டிற்கு அழைத்து செல்லும் அன்பு… வீட்டில் ஒன்ற கஷ்ட படும் இனியவள்…. 

 

இனி :



Advertisement

 

“என் பாதைகள் என் பாதைகள் உனது

வழிபார்த்து வந்து முடியுதடி

Advertisement

என் இரவுகள் என் இரவுகள் உனது

Advertisement

முகம் பார்த்து விடிய ஏங்குதடி

 

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

Advertisement

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

 

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே….”

 

ரயிலில் ஏறியதில் இருந்து அவளின் பெயரை அவனும் கேட்க வில்லை… இவளும் சொல்ல வில்லை… சொல்வதற்காக வாய்ப்பு அமைய வில்லை என்று தான் கூற வேண்டும்….. 

 

வீட்டில் அன்பின் தந்தை அவளின் பெயரை கேட்க… அவன் யோசனையில் “இனியாள்” என்றது அவளுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது…. 

 

ஆம்.. அவள் பெயர் உண்மையில் “இனியாள்” தான்… அவளின் அக்கா அவளுக்கு வைத்த பெயர்…. 

 

அன்பு இன்று கூறவும்…” நாம தான் சொல்லி இருப்போம் ” என்று அதிகம் கண்டுகொள்ளவில்லை அவள்… 

 

“அன்புக்கினியான் -இனியாள் ” நல்ல பேர் பொருத்தம் இல்லை… கூட்டத்தில் சலசலப்பு கேட்க தான் செய்தது…. 

 

முற்றத்தில் உரையாடல் முடிந்து விட… தன் அரை நோக்கி செல்ல எழுந்த அன்பு இரண்டு அடி எடுத்து வைத்து சென்ற பின்னர் எதோ யோசித்தவனாய் நின்றவன்.. திரும்பி 

 

“”இனியா” உன் கிட்ட கொஞ்சம் பேசணும்… ரூம் வரைக்கும் வாயேன் “மிகவும் இனிமையாக கூப்பிட்டான்….. 

 

அதை பார்த்து கொண்டு இருந்த இரண்டு கண்கள் தீயில் சுட்டது போல் கொதித்து கொண்டு இருந்தது 

 

“சரி இல்லையே…. இந்த முசுடு இவ்ளோ பாசமா நம்ப கிட்ட பேச வாய்ப்பிலேயே” யோசித்த படி எழுந்தவளை 

 

“பொண்டாட்டிய விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாதோ… இப்டி பெரியவங்க முன்னாடி அநாகரீகமா தான் கூடயே கூட்டிட்டு சுத்தணுமா” பொரித்தாள் அதே பெண் மணி… 

 

அதை எதுவும் பொருட்படுத்தாமல்… இனியளை அவள் கை பற்றி இழுத்து கொண்டு சென்றான் அன்பு…. 

 

இது அங்கு இருந்த குடும்பத்தினருக்கு அன்னியோன்னியமாக பட்டது…. 

 

அவளை இழுத்து சென்றவன்… முதல் தளத்தில் ஒரு அறையின் முன் நின்று… 

 

“இதோ பாரு உன் பேர் எல்லாம் என்னனு எனக்கு தெரியாது… நாள் இங்க வரைக்கும் உன் பேர் இனியாள் தான்.. புரியுதா”… 

 

“அது இல்லாம இந்த வீடு கோவில்னா… என்னோட அம்மா அப்பா தான் இங்க சாமி… அவுங்க மனசு கஷட படும் படி எதாவது செய்தாலோ… இல்லை உண்மையை சொன்னாலோ… அந்த ரௌடிகளிடம் சிக்கினால் நேரும் நிலைமையை விட நான் மோசமாக ஆக்கிவிடுவேன்”

 

[the_ad id=”6605″]

 

 

 

“மத்தபடி என்னோட கதையை நீ கேக்காத… நானும் உன்னோட கதையை கேட்க மாட்டேன்… இங்க இருக்க வரைக்கும் நீ நிம்மதியா இருக்கலாம்”…(இந்த டயலாக்கே நீ பின்னாடி வருத்த படுவ அன்பு கண்ணா)

 

“எப்படியும் உனக்கு போறதுக்கு இடம் இல்லை… தப்பிச்சி தலை மறைவா வாழ இதை விட பாதுகாப்பான இடம் உனக்கு இருக்க வாய்ப்பில்லை… அதனால் நான் சொல்வதை கேட்டு நடப்பன்னு நம்புறேன்” மிரட்டுவதை போல் ஆரம்பித்தவன் நக்கலாகவே முடித்தான்…. 

 

அதற்குள் இலக்கியனும், விக்கியும் வந்து விட.. அவர்களை கண்டவன் 

 

“நீ எல்லார் கிட்டயும் அறிமுகம் ஆன அப்றம் உன்னோட சாமானை எல்லாம் இந்த அறைக்கே கொண்டு வந்துடு… இதோ இவனுங்க உதவி பண்ணுவாங்க”….. என்று கூறியவன் இருவரையும் பார்த்து இனியலுக்கு வீட்டினரை அறிமுகம் செய்து வைக்கும் படி கட்டளை இட்டவன் தன் அரை புகுந்தான்…. 

 

பிரெஷ் ஆகி வெளியே வந்தவன்… அங்கேயே நின்று அரட்டை அடித்து கொண்டு இருந்த மூவரையும் பார்த்தவன்… வந்த சிறிது நேரத்திலேயே இருவருடன் இணைந்து பேசி சிறிது கொண்டு இருப்பவளை பார்த்தவன்…. இவாளால் தன் வீட்டில் தனக்கு பிரச்னை வராது என்பதில் உறுதி ஆனான்…. 

 

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வெளியில் போய்ட்டு வரேன்” என்றவன் இனியளை பார்த்து தலை அசைக்க 

 

அவனிடம் எதோ கூற வாய் எடுத்தவள்… சுற்றம் கருதி அமைதியானாள்…. 

 

பின் நால்வரும் கீழே இறங்கி முற்றம் வரவும்…. அன்பும் இனியவளும் முன்னே வர… மீதி இருவரும்  பின்னால் வர… 

 

அதை கண்டு ஜெஞ்சுக்குள் கருமி கொண்டு இருந்தவளோ…. அவர்களுக்கு நேரே சென்று… இனியாளை வேண்டும் என்றே இடித்து விட்டு சென்றாள் 

 

அதில் தடுமாறியவள் அன்பின் மேல் இடித்து நிற்க முடியாமல் போக… தடுமாறி விழ போனவளை 

 

அவள் இடை சுற்றி கையால் அனைத்தவன்… அவள் விழாமல் இருக்க தன்னை நோக்கி இழுக்க…அந்த வேகத்தில் அன்பின் கழுத்தில் அவள் கைகளை மலையாய் கோர்த்து தன்னை நிலை படுத்தி கொள்ள…. 

 

இவை அனைத்தையும் கட்சிதமாக படம் பிடித்தான் விக்கி…. 

 

சிறு மணித்துளிகள் கண்ணோடு கண் பார்த்து அதே நிலையில் இருந்தவர்கள்… சுற்றம் புரிந்து விலகி நிற்க….

 

பின்னால் திரும்பி இடித்தவளை முறைதான் அன்பு…. 

 

“என்னை எதுக்கு முறைக்குறீங்க? அவ தான் முன்ன பின்ன பார்க்காமல் உங்களையே சைட் அடிச்சிகிட்டி வந்தா…இதுக்கு நான் என்ன பண்ண முடியும் “

 

அவள் கூறுவது போய் என்று அங்கு இருக்கும் அனைவர்க்கும் புரிந்தாலும்… அமைதி காத்தனர்…. 

 

அன்பு மட்டும் “அவ இவனு மரியாதை இல்லாமல் பேசாதே… பேர் சொல்லி கூப்பிடு இல்லாட்டி அக்கானு கூப்டு…. இந்த மாதிரி மரியாதை குறைவை இன்னொரு வாட்டி நான் அனுமதிக்க மாட்டேன் ” எச்சரித்தே சென்றான்…. 

 

அன்பு எதோ வேலையாய் சென்று விட.. 

 

அண்ணி…..வாங்க நம்ப வீட்டு ஜீவன்களை பத்தி சொல்லுறேன்…. 

 

“முதல்ல தலை…. அப்பாவும் அம்மாவும்… அப்பா பேரு வேலுசாமி, அம்மா செல்லம்மாள் … அவுங்களுக்கு இரண்டு பிள்ளைகள். அன்பு அண்ணாவும் நானும்” என்றான் இலக்கியன் 

 

அப்பாக்கு ஒரு தம்பி, தங்கை … சித்தப்பா பேரு லக்ஷ்மணன்… இராமாயணத்து லக்ஷ்மணன் மாதிரி… அண்ணன் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை… அவரோட மனைவி சுமித்ரா…. கணவன் ஏற்ற மாணவி…. 

 

அத்தை… அதாவது விக்கியோட அம்மா… அவுங்கள பத்தி அவனே சொல்லுவான் 

 

தங்கச்சிய கட்டி குடுத்து வெளிய அனுப்பக்கூட மனசு இல்லாத பாசக்கார அண்ணன்… ஆனால் குடும்ப சொத்தை மொத்தமாக சுருட்ட நினைக்கும் தங்கை… 

 

மேலும் தொடர்ந்த விக்கி… அம்மா பேரு சகுந்தலா… அப்பா சுந்தர்… ரொம்பவே அப்பாவியான மனுஷன்…. அம்மாவோட அடகு முறைல இருக்கவர்… அம்மா வெள்ளை காக்க மேல பறக்குதுனு சொன்னாலும் ஆமாம்னு தலை ஆட்டும் அப்பாவி ஆண் மகன்… 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவுங்களுக்கு இரண்டு பசங்க… ஒன்னு நான்….psg காலேஜ்ல இறுதி ஆண்டு விவசாய படிப்பு நடிக்குறே… என்னோட தங்கச்சி மீனாட்சி…. மீனு…. அழகு கல்வி படிக்குறா… அம்மாவோட குணம் அப்படியே அவளுக்கு…. 

 

உங்களை தள்ளி விட்டால் இல்லை… அவள் தான்… 

 

எதுக்கு என்பது போல் அவள் பார்க்க…. 

 

மீனுக்கு அன்பு மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அசை…. எங்க அம்மாவுக்கு அப்டி பண்ணி வெச்சா…சொத்து மொத்தம் தனக்கு வரும்னு அசை…. அதுல தான் நீங்க மண் அள்ளி போட்டுடீங்களே…. அதான் அந்த கோவம்…. 

 

“உங்கள முற்றத்துல வெச்சி தப்பவே குத்திக்கிட்டு இருந்தது எங்க அம்மா தான்… கொஞ்சம் ஜாக்கரதாய இருங்க” எச்சரித்தான் விக்கி 

 

மேலும் தொடர்ந்த இலக்கியன்…. இனொரு குடும்பமும் இருக்கு… அம்மாவோட தம்பி… ராமன் மாமா… மனைவி ஜானகி…. 

 

இந்த வீட்டுலயே மனுஷங்களா இருக்க இரண்டு பேர் அவுங்க தான்… மத்தவங்க எல்லாரும் காட்டுல இருந்து வந்த ஜந்துக்கள் போல… ஆனால் பாவம் அவுங்களுக்கு குழந்தைகள் இல்லை… எங்கள தான் குழந்தையாய் நெனச்சிப்பாக… 

 

அடுத்து பெருமாள் அண்ணன்…. ஆல் இன் ஆல் இந்த வீட்டுக்கு அவர் தான்…. தோட்ட வேலைல இருந்து… அப்பாவோட மூக்கு கண்ணாடி, எங்களோட கிரிக்கெட் பேட்னு இந்த வீட்டுல இருக்க எல்லா பொருளும் அவரோட பாதுகாப்பு தான்… 

 

அவரோட மனைவி ஜெயந்தி… சமையல் கட்டு அவுங்க கண்ட்ரோல்…. இரண்டு பேரும் வேலைக்கு தான் வந்தாக… இப்போ எங்க குடும்பத்தில் ஒருவர்… 

 

இவ்ளோதான் அண்ணி… எங்களோட “அன்பால் இல்லம்”…

 

இது பாசத்துக்காக வெச்ச பேரு இல்லை… அன்பு அண்ணன் இல்லாமல் இந்த இல்லாமே இல்லைனு வெச்சது…. அத்தை நீங்க தான் கட்டி காப்பாத்தணும் … முடித்தான் இலக்கியன்….. 

 

அதற்குள் வைஷுவிற்கு துக்கம் வந்து விட… வீட்டையே இரண்டாக மாற்றி விட்டால்…. 

 

புது இடம்… புது ஆட்கள் எல்லாம் அவளுக்கு தூங்கும் போது தான் நியாபகம் வந்தது போல… 

 

தன் அம்முவை தவிர வேறு யாரிடமும் செல்ல மாட்டேன் என்று ஒரே அடம்…. 

 

அட அப்படி சென்றவள் அவளிடமாவது தூங்குவாள் என்று பார்த்தாள் அதுவும் இல்லை…. 

 

குடிக்க பால் குடுத்தாலும் குடிக்க வில்லை… உணவும் எதுவும் உன்ன வில்லை…. 

 

வீட்டின் அணைத்து அங்கமும் கூடத்தில் தான் கூடி இருந்தனர்…. செல்லம்மாள்  உட்பட… தன் கோவத்தை விட்டு பேதியை தூக்க போக… அவரிடமும் போக மாட்டேன் என்று விட்டால்…. 

 

இதில் சகுந்தலா வேறு…. 

 

“குழந்தையா இல்லை பிசாசா இது… இப்டி கத்துது…வீட்ல வெச்சி தானே வளத்த… இல்லை ஜூல ஏதும் வளந்துதா”…. விஷத்தை கக்கினார்…. 

 

தன்னை கூறிய போது பொறுத்து கொண்டவள் 

..குழந்தையை சொன்னதும் மனமும் முகமும் ஒரு சேர வாட்டம் கண்டாள் 

 

அதை உணர்ந்த செல்லம்மாள்… மருமகளுக்காக பேச முன் வந்தார்…. 

 

“குழந்தைனா அப்டி தான் இருக்கும்… என் நம்ப குழந்தை பண்ணாததயா என் பேத்தி பண்ணிட்டா…. அதுக்காக இப்டி விஷத்தை ஏன் கொட்டுறீங்க” அதட்டியே விட்டார்… 

 

இதுவரை அவர் சகுந்தளவிடம் அப்டி பேசியது இல்லை என்பது வேற இனியாளின் மேல் கோபமாக திரும்பியது.. அதே கோபத்துடன் இனியளை முறைத்தவர் தன் அறை புகுந்தார்….. 

 

கோவமாக இருந்தாலும் தன் பேத்தியையும் மருமகளையும் எதாவது பேசுவதை ஏற்று கொள்ளாத செல்லம்மாவை பார்த்த வேலுசாமிக்கு அனைத்தும் விரைவில் சரி ஆகி விடும் என்ற நம்பிக்கை வந்தது…. 

 

இதற்கிடையில் வீடு திரும்பிய அன்பு… வீட்டு முற்றத்தில் கூடி இருந்த கூட்டத்தை பார்த்து சிறிது பயந்தாலும்….  

 

பின் அவனுக்கு விஷத்தை விளக்கினார் ஜானகி… அதில் ஆசுவாசம் பெற்றவன்… 

 

இனியாளிடம்…. “குழந்தையை நம்ப ரூம்க்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே… ஏன் இப்டி அழ வெச்சிகிட்டி இருக்க” என்றான் 

 

“எங்க கொண்டு போனாலும் அமைதியா இருக்க மாட்டேங்குறா…. அழுதுகிட்டே இருக்கா…. யார் கிட்டயும் போக மாட்டேங்குறா” அழும் குழந்தையை தட்டி குடுத்த படி பதில் அளித்தால் 

 

[the_ad id=”6605″]

 

 

 

இங்க குடு பாப்பாவை… நான் பாத்துக்குறேன் என்று வாங்க போனவளை தயக்கத்துடன் பார்த்தவள் 

 

அவனே குனிந்து குழந்தையை கையில் வாங்கினான்…. ஏனோ இவனிடம் வந்த வைஷு அடுத்த நொடி அமைதியாகி விட்டால்…. 

 

அனைவர்க்கும் இது மகிழ்ச்சியான ஆனந்தமாக இருக்க… அன்புக்கும் இனியவளுக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது…. 

 

“வைஷு குட்டி…. நாம பைக்ல வெளிய போலாமா” என்றவனை போலாம் என்பது போல கழுதை கட்டி கொண்டு அவள் கூற 

 

அடுத்த நொடி பைக்கில் பறந்தனர் இருவரும்… 

 

இதில் செல்லம்மாள் மெச்சிய விஷயம்… அவன் அந்த பைக் வாங்கி ஆறு மாதம் வரை தான் அதை பயன் படுத்தினான்….பின் டெல்லி சென்று விட்டான்…  அந்த ஆறு மாதமும் அவன் யாரையும் வண்டியில் ஏற்றியது இல்லை… வேறு யாருக்கும் வண்டி பயன் படுத்த அனுமதியும் இல்லை…. 

 

அப்படி பட்ட பட்ட பெருமை வாய்ந்த வண்டியில் இன்று வைஷு ஏறுகிறாள் என்றால்….. அப்பா மகளின் உறவு தான் அவருக்கு மேன்மையாக பட்டது…. 

 

                மயக்கம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!