Skip to content
Post Views: 4,065
அடேய் அவன் ஒரு அட்டு வேஸ்ட்… பிரைவேட் பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கான். மாசம் முப்பதாயிரம் சம்பளம். ஜாப்பில் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது… இன்னும் வேலை கத்துக்கலைன்னு மேனேஜர் அவனை கடிச்சு குதறிட்டு இருக்கார்.
அதுவாடா கேட்டேன்…?
அவங்க அம்மா அவனுக்கு தீவிரமா வரன் பார்த்துட்டு இருக்காங்க… கும்பகோணத்தில் ஒரு வரன் செட்டாகிற மாதிரி இருக்கு.
அவுனா…?
Advertisement
ம்ம்ம்ம்…வேற சொல்லுறா!
கூல் மேன்… அவன் கால் ஹிஸ்ட்ரி மொத்தம் பிரித்து மேஞ்சிட்டேன்….. இந்த மாசம் முழுக்க ஒரு ISD கால் கூட பேசல. இன் கமிங்கும் இல்லை அவுட் கோயிங்கும் இல்லை.
நீ சொல்ற நம்பரில் இருந்து கண்டிப்பா அவனுக்கு கால் வரவே இல்லை.
Advertisement
இதெல்லாம் ஒரு டாஸ்க்குன்னு கொடுத்து என்னை அசிங்கப்படுத்திட்ட நீ…!
Advertisement
ஹே கூல் டவுன் ஸ்ரீனி. அப்புறம் வேற என்ன ஸ்பெஷல்?
சொல்லவா…? பீடிகையுடன் கேட்டான்.
சொல்லு மேன்!
Advertisement
சொல்லிடுவேன்!
அடச்சீ சொல்லு மேன்.
அவன் தான் அட்டு பீஸா இருக்கான். ஆனா அவன் தங்கச்சி ராதிகா செம்ம பீஸா இருக்கா…
தொங்கா… நின்னு சம்போத்துனாரு (திருடா உன்னை கொல்ல போறேன் ) என்றவன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.
ஹரி ஒன்னு சொல்லவா?
சொல்லுறா?
அந்த பவித்ரா பொண்ணு அப்படி ஒன்னும் அழகா இல்லை. பேக்கிரவுண்டும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லை. நம்ம லெவலுக்கு ஏன் இப்படி….?
ஸ்ரீனி… உனக்கு நான் கொடுத்த டாஸ்க் இது இல்லை.
ஹரியின் மிரட்டலில் மறுமுனை கப்சிப்.
ஹரி கோவிச்சுட்டியா? அந்த பவித்ராவோட தங்கச்சி கூட செம்ம அழகு தெரியுமா? இவங்களை விட அந்த பொண்ணு இன்னும் சிவப்பா அழகா இருக்கா.
கேதே போன் பெட்டு (எரும போனை வை )
பவித்ரா தங்கச்சி உனக்கும் தங்கச்சிரா… உன் அப்பா என்னோட மாமா.
அப்போ எனக்கு ராதிகாவே ஓகே…
டேய் அவ எனக்கு தங்கச்சி முறைரா…மீண்டும் குலுங்கி சிரித்தான்.
தொங்கா நின்னு சம்போதுனாரு… இப்போது ஸ்ரீனி சொல்ல…
ஸ்வீட் ராஸ்கல்… செல்லமாய் திட்டி தீர்த்தான் ஹரி.
ஒரு வார காலமாக அலைப்புற்றிருந்த மனம் அதுவாகவே சமன்பட்டு போனது.
ஒரு ஆசுவாச பெருமூச்சுடன் கண்மூடி சிறிது நேரம் நின்றான்.
மகளே ஒரு வாரமா என்னை என்ன பாடு படுத்தின..? இருடி வரேன்…!
“——————–“
அகிலனும் சௌமியும் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று விட பவித்ரா கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
தன் பின்னே நிழலாட அச்சத்துடன் திரும்பி பார்த்தாள்.
சிவந்த விழிகளுடன் மூக்கு விடைக்க அவளை முறைத்து நின்றான் ஹரி.
டிபன் சாப்பிடறீங்களா…? நாக்கு குழறியது.
வேண்டாம்…. அவளை நெருங்கி வந்தான்.
ஸ்க்ரப்பரும் கையுமாக நின்று கொண்டிருந்தவளுக்கு அவன் பார்வையும் நெருக்கமும் உள்ளுக்குள் பீதியை கிளப்பியது.
இன்னும் அவளை ஒட்டிக் கொண்டு அவன் நிற்க… இருவரும் எதிரும் புதிருமாக… அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோதி அவளை கலவரப்படுத்தியது.
எ… என்ன வேணும்? அவள் உதடுகள் டைப் அடித்தது.
நீ தான் வேணும்னு கேட்டா கொடுத்துடுவியா…?
அவள் லப் டப்பை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டிருந்தான்.
இந்த மாதிரி என்கிட்ட நடந்துக்காதீங்க…. கையில் இருந்த ஸ்க்ரப்பரை வீசிவிட்டு ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்தாள்.
என்ன பண்ணுவ…? அவள் ஆள்காட்டி விரலை இறுக்கி பிடித்தவன் அவளை சொடுக்கி இழுக்க… அவள் வலுவாய் கால் ஊன்றி நிலைப்படுத்தி நிற்க… ஸ்ட்ராங்கான ஆளு தான்… இதழ் வளைத்து
புன்னகைத்தவன் அவள் இதழ் நோக்கி குனிந்து அவளை பயமுறுத்திக் கொண்டே மளிகை சாமான் வைத்திருக்கும் இடத்தில் அவள் வைத்திருக்கும் மொபைலை எக்கி எடுத்தான்.
ஏய் என்ன பண்றீங்க?
இதுவரை பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தவள் வீரா வேசத்துடன் அவன் கையைத் தட்டினாள்.
ம்ம்ம் 911 ஹெல்ப் லைனுக்கு கால் பண்ண போறேன்… கொசுவை அடிப்பது போல் அவள் கரத்தை அடித்து தள்ளி விட்டு வெளியே நடந்தான்.
ஹலோ என் மொபைல்… என் மொபைல் கத்திக் கொண்டு பின்னாடியே ஓடினாள்.
மொபைலை ஆட்டி காட்டிவிட்டு அவன் அறைக்குள் நுழைய கடுஞ்சினத்துடன் அவளும் உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் கதவை பட்டென்று சாத்தி தாழ்ப்பாள் போட்டான்.
ஏய்… பைத்தியம் என்ன பண்ற…? அவளுக்கு வியர்க்க தொடங்கியது.
ம்ம்ம்ம் எனக்கு போரடிக்குது உன் அத்தானோட பேசுவோமா? சட்டமாய் கட்டிலில் அமர்ந்து கால் மீது கால் போட்டு தோரணையாக கேட்டான்.
எ.. என்ன சொல்ற… என் அத்தான்கிட்ட நீ ஏன் பேசணும்? கோபத்தில் அவளுக்கு முகம் சிவந்து வார்த்தைகள் ஒருமைக்கு தாவி இருந்தது.
உங்க மேரேஜை எங்கே எப்போ வச்சுக்கலாம் என்று ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணலாமே…. அதுக்குதான்.விஷமமாய் கண் சிமிட்டி சிரிப்பவனை நடுக்கத்துடன் பார்த்து நின்றாள் பவித்ரா.
அந்த கவலை உனக்கு வேண்டாம்…நாங்க பார்த்துக்குவோம்…. உதடு கடித்து பதட்டத்தை மறைத்தாள்.
எப்படி தினமும் போனில் பேசி பேசி டிஸ்கஷன் பண்ணுவீங்களா…? அவன் குரலின் வித்தியாசம் உணர்ந்து அவன் கண்களையே பார்த்தாள்.
மொபைலை கொடுத்துட்டு வெளியில் போங்க…. வாசல் நோக்கி கை நீட்டினாள்.
அத்தான் அத்தான்னு என்னை ஒரு வாரமா வெறுப்பேத்தின உன்னை அப்படியே விடுறதா… ஏதாவது பண்ணணுமே… கட்டிலில் இருந்து துள்ளி குதித்து இறங்கி வந்தவனைக் கண்டு நான்கடி பின்னே நகர்ந்தாள்.
இது கொஞ்சம் கூட நல்லா இல்லை… எச்சில் விழுங்கினாள்.
அது தான் நானும் சொல்றேன். இந்த போன் கொஞ்சம் கூட நல்லா இல்லை. இனி உனக்கு வேண்டாம்.
நீங்க யாரு சார் அதை சொல்ல…? எரிச்சலில் குரல் உயர்ந்தது.
மீ பர்த்தா… புரியலையா… என் பாஷையில் என்ன சொன்னேன்னா உன் புருஷன்னு சொன்னேன்… புருவம் உயர்த்தி காதலுடன் சிரித்தான்.
ச்சீ… யாரு யாருக்கு புருஷன்?
ம்ம்ம்ம்… உன் பாஷையில் சொல்றேன். நான் உனக்கு புருஷன்.
உங்க கற்பனைக்கு நான் பொறுப்பாக முடியாது மிஸ்டர்.
ஏன் உன் அத்தானை விவாஹம் செய்யும் கற்பனையை விட இது ஒன்னும் மோசமில்லையே…?
கிருஷ்ணா குடும்பத்துக்கு கொடாலு ஐ மீன் மருமகளா வரது பெருமை தான்.
எனக்கு எந்த எருமை பெருமையும் வேண்டாம். எனக்கு என் அத்தான் இருக்காரு….!
அமைதியாய் பேசிக் கொண்டிருந்தவனுக்கு சுர்ரென்று ஏறியது.
அடிங்க…. கையாளாகாம அம்மா முந்தானைக்கு பின்னாடி நின்னுட்டு இருக்கான் அவனை போய் அத்தான் பொத்தான்னு கலர் கலரா ரீல் சுத்திகிட்டு… கையை ஓங்கி விட்டான்.
இப்போ என்ன சார் உங்க பிரச்னை?
நீ தான் பிரச்னை!
இல்லாத நம்பருக்கு,கால் பண்ணாமலே இந்த டப்பா போனை வச்சுக்கிட்டு என்னை எவ்வளவு வெறுப்பேத்தின? எவ்வளவு பெரிய கேடி வேலை பார்த்திருக்க. ஓவர் ஸ்மாரட்ன்னு நினைப்பு!
அத்தான் சாப்டீங்களா? அத்தான் தூங்கினீங்களா? அத்தான் மூச்சு விட்டீங்களா? அத்தான் ரெஸ்ட் ரூம் போனீங்களான்னு…. பொய் பொய்… எவ்வளவு பொய் சொல்லி இருக்க… மொபைலை தூக்கி சுவற்றில் அடித்தான். அது தூளாய் சிதறி உயிரை விட்டிருந்தது. அவனுக்கு இன்னும் புசு புசுவென்று மூச்சு முட்டியது.
நான் ஒன்னும் பொய் சொல்ல…,
மூச்….பல்லை உடைப்பேன்… அவன் ஜாதகத்தையே அலசிட்டேன்….அவன் எங்கே வேலை பார்க்கிறான்,எவ்வளவு சம்பளம் வாங்குறான்,அவன் மேனேஜர் யாரு மேனேஜர் ஸ்டெப்னி யாருங்குற வரைக்கும் எனக்கு தெரியும்!
உங்கத்தம்மா நீ இந்தியாக்கு போறதுக்குள்ள அவனுக்கு மேரேஜ் செய்ய தீவிரமா இருக்காங்க. உன் வீட்டிலேயும் உனக்கு தீவிரமா வரன் தேடிட்டு இருக்காங்க!
இவ்வளவு தூரம் தன்னை பற்றி அவன் ஆராய்ந்தது அவளுக்குள் எரிமலையாய் பொங்கியது.
போதும் நிறுத்து.. எங்க பர்சனல் விஷயத்தில் தலையிட உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? உளவு பார்த்தியா…? அசிங்கமா இல்ல… என்ன ஜென்மம் நீ!
வேண்டாம்னு சொன்னா ஒதுங்கி போக தெரியல நீ என்ன மனுஷன்? என்ன டிசைன் நீ…? இப்படி கொழுப்பெடுத்து திரியறன்னா உன் வளர்ப்பை சொல்லணும்!
உனக்கு எவளாவது வேணும்னா இங்கே நிறைய பொண்ணுங்க இந்திய பையனுங்க மேல கிரஷ்ஷா இருப்பாங்களாம் ட்ரை பண்ணி பாரு… ஏன் என் உயிரை வாங்குற…
மேற்கொண்டு அவள் பேச முடியாமல் கழுத்தோடு கை கொடுத்து அப்படியே தூக்கி விட்டான்.
ஆவேசம் கொண்ட அய்யனார் போல் அவன் நிற்க கண்டு அவளுக்கு திகிலாகி போனது.,
அவன் கரம் தொண்டையை நெறிக்க இருமல் வந்து கரகரத்து மூச்சு முட்டியது. ஓரடிக்கு மேல் அந்தரத்தில் அவள் மிதக்க… அவன் ஆவேசம் தணிந்தபாடில்லை.
நான் கொழுப்பெடுத்து திரியறேனா? சொல்லுடி… எங்கே பார்த்த…. எவ கூட பார்த்த….? அவளை அள்ளி சுருட்டி கட்டிலில் தள்ளினான்.
அவள் பயந்து பின்னால் நகர்ந்து செல்ல…..
இப்போ ஏன் ஓவர் ரியாக்ட் பண்ற…?
ரேப் சீன் எல்லாம் இல்லை… பாவா அந்த மூடில் இல்லை.
ஆமா என் வளர்ப்பு பத்தி உனக்கு என்ன தெரியும்? சொல்லுடி
நான் என்ன டிசைன்னு உனக்கு சீக்கிரம் காட்டுறேன். என் கொழுப்பை உன்கிட்ட காட்டுறேன்… உன்கிட்ட மட்டும் காட்டுறேன்.
உன்னை கஷ்டடுத்தக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருக்கேன் தெரியுமா?
நீயா விரும்பி என்னை ஏத்துக்கணும்…உனக்கு எப்படி புரிய வைக்க…? எப்படி சொன்னா உனக்கு புரியும்னு ஒவ்வொரு நாளும் நான் எவ்வளவு யோசித்து மண்டை காஞ்சு உட்கார்ந்துருக்கேன் நீ அத்தான் பொத்தான்னு வெறுப்பேத்துற…
நீ வேண்டாம்னா என்னால விட முடியாது. எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு… ஏனோ தெரியல என் மனசுக்கு உன்னை பார்த்தாலே ஒரு இதம்.
சார் ப்ளீஸ்…. என்னை விட்ருங்க.. கண்ணீருடன் கை கூப்பினாள்.
இப்போ எதுக்கு கண்ணீர் விட்டு என்னை கலங்க வைக்குற…? இன்னும் கோபம் கூடியது அவனுக்கு.
இங்கே பார் பவித்ரா என் அம்மாட்ட கூட சொல்லிட்டேன் உன்னை மருமகளா கொண்டு வரேன்னு.
அய்யோ சார் என் அம்மா…
உன் அம்மா அக்செப்ட் பண்ணிக்கிட்டா உனக்கு ஓகே தானே…?கூர்மையாய் அவள் முகத்தை படிக்க முயன்றான்.
சார் எனக்கு மேரேஜ் பண்ணிக்கவே விருப்பம் இல்லை… புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!
ஏன் இந்த சுந்தர தெலுங்கனை பிடிக்கலையோ…?
சார் எனக்கு யாரும் வேண்டாம்… நான் இப்படியே இருந்துட்டு போறேன்…
நீ இருந்துருவரா அம்மாயி நான் இருக்க மாட்டேனே… எனக்கு என் குலாபி வேணும்! அவளை சீண்டிகிட்டு கொஞ்சிகிட்டு கடைசி வரை காதலோட ஒரு சிம்பிளான லைஃபை வாழனும்..அழகா லட்டு லட்டா ஆண் ஒன்னு பெண் ஒன்னு பெத்துக்கிட்டு அதுகளுக்காக ஓடி ஓடி உழைக்கணும்.
பவிம்மா நா பங்காரம்.. நான் எப்போவோ என் மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன்ரா . நீ ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளிக்கு சொந்தம்.
சார்…
இரு நான் பேசிடறேன்… உன்கிட்ட தனியா பேச சான்ஸே கிடைக்கல… இன்னைக்கு பேசிடறேன்.
உன்னை ஏன் பிடிச்சுதுனு காரணம் தெரியாது. ஆனா அவ்வளவு பிடிச்சிருக்கு!
உன்னை மாதிரி தான் நானும் யோசித்தேன் மேரேஜ் பண்ணி என்ன பண்ண போறோம் இப்படியே இருந்துடுவோம்.
என் தம்பிக்கு மேரேஜ் பண்ண சொல்லிட்டேன். அவன் பொண்டாட்டி இப்போ கன்சீவா இருக்கா…
எனக்கு இப்போ வாழணும்னு ஆசை வந்திருக்கு. உன்னோட வாழணும்.
உன் மேல பர்ஸ்ட் கோபம் வந்துச்சு அடுத்து லவ் வந்துச்சு அப்புறம் சாஃப்ட் கார்னர் வந்துச்சு. என் குலாபி நிறைய கஷ்டப்பட்டுட்டா இனி அவ வாழ்க்கையில் கஷ்டமே இருக்க கூடாதுன்னு வெறி வந்திருக்கு.
என் வீட்டுல கூட ஒத்துக்குவாங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா அதுக்காக உன்னை விட்டுட முடியாது..
யார் ஏத்துக்கலைனாலும் ஐ டோண்ட் கேர். நான் இருக்கேன் உனக்கு. நீ மட்டும் போதும் எனக்கு..
பிராஜெக்ட் விஷயமா கனடா போறேன் சாட்டர்டே நைட் கிளம்புறேன்… வர ஒன் வீக் ஆகும்..
ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ நல்லா யோசி …நான் வரும்போது நல்ல பதிலை சொல்லு!
கண்ணீர் கரைபுரள அவள் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.
பேசி முடித்து விட்ட நிம்மதியுடன் கதவை திறக்க சென்றவன் மீண்டும் வந்து கண்ணீருடன் அமர்ந்திருந்தவளின் கரம் பற்றி தன் மார்பில் வைத்துக் கொண்டவன்
குலாபி நேனு நின்னு பிரேம்சிஸ்துனானு. தளர்ந்து அமந்திருந்தவளை மென்மையாய் அணைத்து நெற்றியில் இதழ் பதித்து புயலாய் வெளியேறினான்.
——தொடரும் ——–
error: Content is protected !!