Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அந்தியூரான் – 6

அந்தியூரான் 6
தனது தொழிற்சாலையில் வெகு வருடங்களாக வேலை செய்யும் சுப்ரமணியன் என்ற மானேஜரை பார்க்க காத்துக் கொண்டிருந்தான் தணிகாசலம்.சில நொடிகள் கடந்து தணிகாசலத்தின் அறைக்குள் நுழைந்தார் சுப்பிரமணியன்.முதுமகன் பருவத்தை கொண்டவர் போலும்.அவர் உள்ளே நுழைவதை கண்டவன்.
“வாங்க சுப்பிரமணியன் என்றழைத்து உட்காருங்க” தனக்கு எதிரே உள்ள இருக்கையை காட்ட.அவரும் அதில் அமர்ந்து கொண்டார்.
சொல்லுங்க சார்? வர சொன்னதா சொன்னாங்க


Advertisement

ஆமா கொஞ்சம் பேசனும். எனக்கு ஒரு விஷயம் தெரியனுமே சுப்பிரமணியன்?” என்றதும் புருவம் சுருக்கி யோசனையானவர்.
“என்ன விஷயம் சொல்லுங்க சார்? தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்”
“உங்களுக்கு தெரிய போயிதான் வர சொல்லிருக்கேன்.அமுதன் உங்க கூட நல்லா பேசுவார் தானேதணிகாசலம் கேட்டதும் தான் தாமதம் கொஞ்சம் பதட்டமாகி விட்டார்.

Advertisement

ஆமாங்க சார் நல்ல பையன், வேலையும் நல்லா செய்வார் அதான்

Advertisement

ஓ! இப்போ அவர் எங்க வேலை பாக்குறாருன்னு தெரியுமா?” நேரடியாக தணிகா கேட்கவும் இன்னும் பதட்டமாகி விட்டார். இருக்காதா பின்னே அமுதனுக்கும், விலாட்சிக்கும் வேலை வாங்கிக் கொடுத்து. கோவையில் வீடும் பிடித்துக் கொடுத்தது இவர் தானே.
சார் எனக்கு?…
அமுதன் என் மச்சான் சுப்பிரமணியன் மறைக்கிற அளவுக்கு இதுல விஷயம் இல்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சதை நீங்க தயங்காம சொல்லலாம்.

Advertisement

அப்படியும் தயக்கம் இருந்தா விடுங்க நான் பார்த்துக்குறேன்.இத்தனை நெருங்கி வந்தவனுக்கு அவங்களைக் கண்டு பிடிக்கத் தெரியாதா என்ன?” என்றவனைப் பார்த்து உண்மையில் பயந்து போனார் சுப்பிரமணியன்.
தணிகலசத்தை பத்தி அவர் அறியாதது இல்லை,ஆனால் இது குடும்பச் சிக்கல் அல்லவா. இதில் தான் பேசினாலும் தவறாகி போகும் பேசா விட்டாலும் தவறாகி போகும்.
சார் அவருக்கு நான் தான் சார் வேலை வாங்கிக் கொடுத்தேன். பொறுப்பான பையன் சார் சின்ன பையன் வேற குடும்பத்தை பார்க்க வேண்டி தவிக்கும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியல சார். அதான் என்னால முடிஞ்ச சின்ன உதவி
அது தெரிய போயி தான் உங்களை கூப்பிட்டு வச்சு பேசிகிட்டு இருக்கேன்
அவர் என்கிட்ட கேட்கும் போது மறுக்க முடியல அதான். அவருக்கும் அவர் தங்கைக்கும் வாங்கிக் கொடுத்தேன் கோவையில் காந்தி புரத்துல வீடு பார்த்துக் கொடுத்தேன் சார். என் மச்சான் அங்க தான் இருங்காங்க அவங்களை வச்சு தான் எல்லாம் செஞ்சேன்
ரொம்ப நன்றி சுப்பிரமணியன் நீங்க போகலாம்என்றதும் அவர் எழுந்து கொள்ள.அவன் சடாரென எழுந்த வேகத்தில் கொஞ்சம் பதறி.
சார்! சார்! என்னை நீங்க தப்பா எண்ணி வைக்காதீங்க சார்!?”
கண்டிப்பா இல்லை சுப்பிரமணியன் நீங்க பாருங்க. எனக்கு அவங்க வீடு விலாசம் மட்டும் கொடுங்கஎன்றதும் தயங்கி கொண்டே ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தவர், தணிகாசலம் முகம் பார்த்து நிற்க.அவரை பார்த்து  புன்னகை கொண்டவன்.சிறுதும் தாமதம் செய்யாமல் கோவைக்குக் கிளம்பி விட்டான்.
இவனது வரவை அறியாமல் போன விசாலாட்சி இன்று பார்த்து விடுமுறை எடுத்து கொண்டாள்.இன்று அவளின் பிறந்த நாள் வேறு.காலையில் இருந்தே அவளது மனம் சரியில்லை. வழமைக்கு அதிகமாக குமாரியின் எண்ணம் வேறு.
நித்தமும் குமாரியின் எண்ணமிருந்தாலும் அவளை ராணியாகப் பார்த்துக் கொள்ள அத்தனை சொந்தமிருக்கும் என்று எண்ணி தன்னைத் தானே சமாளித்துக் கொள்வாள்.
கணவன் என்றவனை எவ்வகையிலும் உணர்ந்திராதவள். அவன் பெற்ற பிள்ளையை மட்டும் அணு அணுவாக உணர்ந்திருந்தாள்.அவளின் கணிப்பு படி இந்நேரம் குமாரி அவளைத் தேட தொடங்கி இருப்பாள். அதனை எண்ணி கொண்டே அமைதியாகப் படுக்கையில் சுருண்டு கொண்டவளை பார்த்த அமுதன், “விசா!” என்றழைக்க.
ஹ்ம்ம்! சொல்லு அண்ணா?”
என்ன பண்ணுதுஎன்றதும் வெடுக்கென எழுந்து அமர்ந்தவள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஏன்?”
அப்புறம் எதுக்கு வேலைக்கு வரல
கொஞ்சம் அலுப்பா இருக்குஎன்றவளை கூர்ந்து பார்க்க தலையைக் குனிந்து கொண்டவளை பார்த்துக் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். அவன் சென்றதும் அவளது அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் மரகதம்.
விசா!
உங்களுக்கு என்னம்மா?”
ஏன்டி நான் பேசுனாலே சலிச்சுக்குற
நீங்க சலிக்கிற மாதிரி தான் பேசி வைக்கிறீங்க. இப்போ என்ன அதை சொல்லுங்க?” கொஞ்சம் எரிச்சலாகக் கேட்டவள் கன்னம் பற்றி.
மேலுக்கு என்ன பண்ணுது விசா? மனசுல எதையும் எண்ணி வைக்கிறியா?
சத்தியமா நல்லா இருக்கேன்மா கொஞ்சம் அசதியா இருக்கு வேற ஒன்னுமில்லை” என்றவள் சில நொடி மௌனம் கொண்டு,
குமாரி என்ன பண்ணுறான்னு தெரியலம்மா.அவளை எண்ணித்தான் கவலையா இருக்கு.
இத்தனை தூரம் பேசுறவ எதுக்குடி வந்த? பேசியிருக்கலாம் தானே?
ஐயோ! நீங்க ஆரம்பிக்காதீங்கம்மா நானா வந்தேன்? பேச யாரு இடம் கொடுத்தா? அதை முதல சொல்லுங்க நீங்க?என்றவள் மீண்டும் சுருண்டு கொள்ள சரியாக அந்நேரம் வெளியில் கார் சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து கதவை தட்டும் சத்தமும் கேட்க.மகளை விட்டு “யாரு?” குரல் குடுத்து கொண்டே போனால் மரகதம்.
அங்கே தணிகாசலத்தைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து பின்பு மகிழ்ச்சி பொங்க “வாங்க! வாங்க தம்பி!” என்று அழைக்க.
“நல்லா இருக்கீங்களா?” என்றவாறே உள்ளே நுழைந்தான் தணிகாசலம்.
நல்லா இருக்கேன் தம்பி நீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்றவள் அவன் அமர நாற்காலி எடுத்து போட்டு தண்ணி கொண்டு வந்து குடுக்க.
அதனை பருகியவன், “எல்லாரும் நல்லா இருக்கோம். எங்க வீட்டுல யாருமே இல்லையா?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவன் குரல் கேட்டு வெளியில் வந்து விட்டாள் விசாலாட்சி.
அவனை கண்டதும் அவள் புருவம் சுருக்கி நிற்க.அவனும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்.சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.
அத்தை!” முதல் முறையான அவனது அழைப்பில் சிறு பதட்டம் கொண்ட மரகதம்.
சொல்! சொல்லுங்க தம்பி”
நான் விசாலாட்சியை கூட்டிகிட்டு கிளம்புறேன்” என்றதும் வாயெல்லாம் பல்லாக ஓ! தாராளமா போங்க” என்றவரை விசாலாட்சி எரிச்சலாகப் பார்க்க. தணிகாசலமோ மாமியாருக்கு சிறு புன்னகையைக் குடுத்து.
விசாலாட்சியைப் பார்த்து “கிளம்பலாமா?” முதல் முறையான நேரடியான பேச்சு.
எங்க அண்ணன் வந்து சொல்லாம நான் வர மாட்டேன்? அது முறையும் இல்லை. அதுவும் போக என்ன? ஏதுன்னு? சொல்லாம போ! வாண்ணா! என்ன அர்த்தம்? எனக்குப் புரியல?” தணிகாசலத்தை நேர் கொண்டு பார்த்து விசாலாட்சி கேட்டு வைக்க. அவளை ஆழ்ந்து பார்த்து வைத்தான் தணிகா.
இருவருக்குமான முதல் உரையாடல் இது.அதுவும் நேர் கொண்டு பார்த்துப் பேசுவது.திருமணத்திற்கு முன் ஒரே வார்த்தை. திருமணத்திற்குப் பின்பு ஓர், இரு வார்த்தை.இது மட்டுமே இவர்கள் பேசி கொள்ள.தற்போது தன்னைப் பார்த்து நேருக்கு நேர் பேசும் பெண்ணைக் கூர்ந்து பார்த்து வைத்தான் தணிகாசலம்.
வளைந்து கொடுக்கும் ஆளுமில்லை தாழ்ந்து பேசும் குணமும் இல்லை அல்லவா, ஓ! அப்போ அமுதனை கூப்பிடுங்க பேசிடுவோம்?” கட்டளையாகச் சொல்லியவனை இன்னும் கடுமையாக பார்த்தவள்.
கூப்பிடுங்கன்னா என்ன அர்த்தம்? யாரு போவா? நான் தான் போகணும் எனக்கு முடியலன்னு தான் வேலைக்கு போகல என்னால எங்கையும் போக முடியாது.அப்படி பார்க்க வேண்டி தேவை இருந்தா.எங்க அண்ணன் வேலைய விட்டு வர எட்டு மணி ஆகும். அதுவரை இருந்து பார்த்துட்டு போங்க” கொஞ்சம் குரலை உயர்த்தி பேசியவளை தணிகாசலம் புருவம் ஏற்றி பார்த்தான்.
மகளின் பேச்சில் பதறி போன மரகதம், “இந்தாரு விசா என்ன பேச்சு இது? மரியாதை இல்லாம?” மகளைக் கடிந்தவர் பெரும் பயத்தோடு மருமகனை நெருங்கி.                 
தம்பி! நான் அமுதனை கொண்டு வந்து விடச் சொல்றேன்” என்றதும் படாரென எழுந்தவன்.
நாளைக்கு காலையில எல்லாரும் அந்தியூர் வந்துடுங்க நான் கார் அனுப்பி வைக்கிறேன்”
ம்மா! அண்ணன் வராம எதுவும் பேச முடியாது.அப்படி போறதா இருந்தா கூட நம்ப பஸ்ல போவோம்” என்றவளை இப்போது முறைத்து பார்த்தவன்.
நான் கிளம்புறேன் அத்தை”
சாப்பிடுங்க தம்பி ஒன்னுமே குடிக்காம கூடப் போறீங்களே”
பின்னுக்குப் பார்த்துப்போம் ஒரு நாள் வந்து சாப்பிடலாம்” என்றவன் எழுந்து கொண்டு விசாலாட்சியை தோரணையாக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல. அவளும் அவனுக்கு சலிக்காத பார்வை பார்த்து நின்றாள்.
மருமகனை வாசல் வரை சென்று மரியாதையாக அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த மரகதம்.
அறிவு இருக்காடி வீடு தேடி வந்தவர் கிட்ட இப்படி தான் பேசி வைப்பியா நீ ? என்ன யோசனையில் இருக்க நீ? அங்க போறதா எண்ணமிருக்கா? இல்லையா?”
நான் உங்க கிட்ட எதுவுமே பேச விரும்பலம்மா அண்ணன் வரட்டும்” என்றவள் தாய் கத்த, கத்த அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.
தணிகாசலம் அமுதன் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று. அவனைப் பார்த்து பேசிவிட்டு தான் வீட்டுக்கு வந்திருந்தான்.அமுதனை நாளை வீட்டுக்கு வர சொல்ல பெரும் வாக்கு வாதத்திற்குப் பிறகு அவனும் வருவதாக ஒத்துக் கொண்டான்.
அமுதனிடம் பேசிவிட்டு தான் விசாலாட்சியின் நாடியை பார்க்க வந்திருந்தான் போலும்.அவனுக்கு மனைவியை பற்றி ஒன்றும் தெரியாது அல்லவா.அதனால் அவளது தற்போது மனநிலையைப் படிக்க வேண்டி தான் அங்கு வந்தான்.
இப்போதும் அவளை கணிக்க முடியா விட்டாலும் கையாளும் அளவுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.
அதன் பின் விடயம் முத்து தொடங்கித் தங்களது ஆறு அக்கா மார்களும், அவர்களது கணவனுகளுக்கும் சென்று நிற்க.நாளை விடியலுக்கு அனைவரும் அங்கே கூடுமாறு பார்த்துக் கொண்டான் தணிகாலசம்.
இரவு வேளை உணவை முடித்துக் கொண்டு சிவராமன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருக்க.வேலைகளை முடித்துவிட்டு  அவருக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் சிவகாமி.
என்னங்க?”
சொல்லு சிவா?”
விடியலை எண்ணி பயந்து வருதுங்க” மனைவி எதனை எண்ணி சொல்கிறாள் என்றதை அறிந்தவர்.
கலகம் வரட்டும் சிவகாமி அப்போதான் வழி பிறக்கும் பேச்சு வரட்டும் பார்த்துக்குவோம்”
பேச்சு வர்றது பெருசில்லை அது எல்லை தாண்டி போகாம பார்த்துக்கனுமுங்க அதான் முக்கியம்”
நீ சொல்லுறது சரி தான். நம்ப வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு அதை நம்ப விட்டுக் கொடுக்கக் கூடாது சிவா”
மக, மருமகன், பேரன், பேத்தி, பையன்னு யாரையுமே விட்டு கொடுக்க முடியாது என் பயமே அது தான். இப்போ யாருக்குன்னு பேசி நிக்குறது.என் வயசுக்கு ஒரு நாளும் நம்ப வீட்டுல இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்தது இல்லை” கவலையாகச் சிவகாமி சொல்ல.
சிவராமனும் அதனை ஒத்துக் கொண்டார், “எனக்கும் வருத்தமா தான் சிவா இருக்கு. நம்பப் பசங்க கண்ணையும், கருத்தையும் உறுத்தி வைக்காம. அதே சமயம் மருமக பொண்ணுக்கும் நியாயம் பண்ணிடனும் அது ஒன்னு தான் நம்ப வேலை”
கணவன் சொல்வது நன்கு விளங்க, “நம்ப இதை எப்படி கையாள போறும்ன்னு தான் பயமா இருக்கு.ராணி ஒரு விதம்,வைரம்,பவளம் அவளுங்க ஒரு விதம்,தங்க பொன்னும்,அன்பும் ஒரே ரகம்.சிறுசு அழகி அது ஒரு ரகம்.
நம்ப பொண்ணுகளை எண்ணி தான் பயமே.என்னத்த பேசி வைப்பாளுங்களோ தெரியல” தனது மகள்களை எண்ணி பயந்து நின்றார் சிவகாமி.பேச்சு என்று வந்தால் பெண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதுவும் இது போல் பஞ்சாயத்து வந்தால் கேட்கவா வேண்டும்.அதுவும் ஆறும் சேர்ந்து வந்தால் கண்ணைக் கட்டியது சிவகாமிக்கு.
பொண்ணுங்க வாய் திறக்காத மாதிரி பார்த்துக்கோ சிவகாமி அப்படியும் பேச்சு வந்தா நம்ப பேத்திய வச்சு தான் சமாளிக்கனும்”
நாளைக்கு உங்க பேத்தி மட்டும் சரியா பேசி வச்சுட்டா போதும் அவளுங்களே அடங்கிப் போயிடுவாளுங்க”
“பொண்ணுக பக்கமும் தப்புன்னு சொல்ல முடியல சிவா.அதுங்களுக்கும் தம்பி நல்லா இருக்கனும் யோசிக்கிற ஆளுங்க தான் என்ன பேச்சு தான் பெருசு” 
“நானும் முழுசா அவளுங்களை தப்பு சொல்லல.ராணி பயத்தையும் தப்புனு சொல்ல முடியாது புரிதல் இல்ல அவ்வளவு தான். பெத்த பொண்ணை இழந்து நிக்கிறா.பேத்தியை எண்ணி அவ பயந்து வைக்கிறது நியாயம் தானே,ஆனா என்ன? நம்ப அம்மா கிட்ட தானே பிள்ளை இருக்குன்னு யோசிக்கல பாருங்க.அது தான் வருத்தமா இருக்கு.”
அது தான் எனக்கும் புரியல சரிவிடு. மருமக பொண்ணு பேத்தி கிட்ட இருக்குற உறவை கண்ணுல பார்த்துட்டாங்கனு வை எல்லாம் சரியா போகும் குலசாமிய வேண்டிக்க பார்ப்போம் நாளைக்கு கதைய”
ஹ்ம்ம்!” பெருமூச்சை விட்டாள் சிவகாமி. அதன் பின் இருவரும் வெகு நேரம் தங்களது பிள்ளைகளைப் பற்றியும் நாளைய பொழுதை பற்றியும் பேசி கொண்டு இருந்து விட்ட பிறகே உறங்க சென்றனர்.
அடுத்த நாள் விடியல் அந்தியூரில் ஒரு தினுசாக தான் விடிந்தது…
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!