Skip to content
Post Views: 3,337
அதிகாலை எழுந்தவன் சிறிதும் சுணக்கமின்றி புத்துணர்வுடன் பால்கனியை நோக்கி சென்றான்.
அப்படி ஒரு எதிர்பார்ப்பு துடி துடிப்பு.
சூரியனை காண காத்திருக்கும் சூரியகாந்தி போல அத்துணை துள்ளல் அவன் நடையில்.
கண்கள் விரித்து விழி அகட்டாது கீழே பார்த்தான்.
Advertisement
இந்நேரம் குலாபி பால்கணி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நேரம்.
நின்றான் நெளிந்தான் தவித்தான் துடித்தான்… நிமிடங்கள் கடந்து மணித்தியாளங்களாகி விட்டது.
ம்க்கூம் இதுவரை இருந்த மனநிலை மாறி பார்வையில் இருள் சூழ்ந்ததோ என்ற ஒரு பரிதவிப்பு.
Advertisement
தினமும் தவறாமல் வருவாளே…. புருவமுடிச்சுக்களுடன் வேக மூச்சுக்கள் சேர்ந்து மீண்டும் ஒரு முறை அவன் விழிகள் துழாவியது.
Advertisement
அவள் தரிசனம் காணா மனம் முரண்டியது. அவளை விட்டு விலகி இருப்பதாக கூறிய நாட்களில் கூட அவளை ரகசியமாய் பால்கணியில் நின்று பார்த்து விடுவான்.
அதற்குமேல் பொறுமை இல்லாமல் போய் விடவே அவசரமாய் காலைக்கடன் முடித்து குளிக்க கிளம்பியவன் பாத்ரூம் கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன் ஹரி என்னடா இப்படி இருக்க…. கன்னத்தில் தானே தட்டிக் கொண்டவன் மூன்று நாளாக க்ளீன் பண்ணாத தாடியை ஷேவ் பண்ணிக் கொண்டு குளிக்க சென்றான்.
அவனுக்கு மிக பிடித்த லைட் வயலட் நிறத்தில் நீண்ட கோடுகள் போட்ட ஷர்ட் போட்டு கருப்பு ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு தலைக்கு ஜெல் வைத்து ஸ்டைலயாய் வாரி லேசாய் களைத்து ரசித்தான்.
Advertisement
ஏதோ பொண்ணு பார்க்க போகும் மாப்பிள்ளை போல் தோன்றியது. ஒரு வகையில் இதுவும் அது தானே என்று வெட்கி சிரித்தவன் பாடி ஸ்பிரே அடித்துக் கொண்டு தன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் சரிபார்த்து ஜம்மென்று கிளம்பினான்.
“——————“
குழந்தைகளுக்கு வாங்கியh பொம்மைகள் ஸ்வெட்டர் மற்றும் கனடாவின் ஸ்பெஷல் சாக்லேட் குக்கீஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு அகிலனின் இல்லம் நோக்கி வந்தான்.
ஹாலில் மகனை மடி தாங்கி அமர்ந்திருந்தான் அகிலன்.
துள்ளளுடன் உள்ளே ஹரி நுழைவதை கண்ட அகிலனுக்கு உள்ளே உதறியது.
வாடா… சௌமி ஹரி வந்திருக்கான் காபி கொண்டுவா! கிச்சன் நோக்கி குரல் கொடுத்தான்.
இனியன் செல்லம் என்ன பண்றீங்க…. குழந்தையின் விரலை மென்மையாய் பற்றிக் கொண்டவன் கிச்சனை ஆவலாய் நோக்கினான். பவித்ராவை காணும் நோக்கில்.
குழந்தையின் சிரிப்பில் கவனம் வைத்திருந்தவன் முன்னே காபி கோப்பையை நீட்டினாள் சௌமி.
பவித்ராவின் கையில் காபி எதிர்பார்த்திருந்தவன் சௌமியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டான்.
சௌமி குழந்தைகளுக்கு டாய்ஸ் இருக்கு பாரு என்று பிக் ஷாப்பரை காட்டினான்.
சௌமி முகம் உணர்ச்சியற்று இறுகி இருந்தது.
அவன் காபி குடித்து முடிக்கும் வரை துளி சத்தமும் இல்லை.
நீ பேசு என்பது போல் கணவனிடம் ஜாடை காண்பித்துக் கொண்டிருந்தாள் சௌமி.
எப்படி? என்பது போல் தயக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன்.
இங்கே என்ன நடந்துச்சு? உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை? ஹரி கேட்க பதறிவிட்டனர் அந்த தம்பதியினர்
அது… அது ஹரி…
பவித்ரா எங்கே…? வெளிப்படையாய் அவன் கேட்க முகம் வெளிறி விட்டது அத்தம்பதியினருக்கு.
ஹரி… அது என்னன்னா…. சாரி…. பவி இந்தியா போயிட்டா! சொல்லி முடித்து விட்ட திருப்தி அகிலனுக்கு.
வாட்?
ஹரி என்ன நடந்துச்சுன்னா… சௌமி இடையில் புகுந்தாள் .
சொல்லு…. அவன் குரலின் தொணி திக்கென்று இருந்தது.
அக்கா நான் ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
பவி…. நீ என்ன சொல்ற? திகைத்து நின்றாள் சௌமி.
ஆமாங்கா நான் ஊருக்கு போகணும் அகிலன் சாருட்ட சொல்லி எனக்கு டிக்கெட் போட சொல்லுங்க!
ஏம்மா…. இப்படி?
அக்கா ப்ளீஸ்…!
ஹரியை அவாய்ட் பண்ண தானே கிளம்புற?
பதில் கூறாது அவள் நிற்கும் விதமே சொல்லாமல் சொல்லியது அது தான் உண்மை என்று.
எதுவா இருந்தாலும் ஹரி வந்த பிறகு பேசிக்கலாம்.
இல்ல…. அவர் வரதுக்குள்ள நான் கிளம்பியாகணும்!
பதட்டத்தில் எச்சில் விழுங்குபவளை கூர்ந்து நோக்கினாள் சௌமி.
சௌமியின் துளைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
பவி எங்க மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா? ஆதுரமாய் அவள் கரம் பற்றினாள் சௌமி.
அக்கா உங்க மேல நம்பிக்கை இல்லாமலா இவ்வளவு தூரம் வந்தேன்?
அதே நம்பிக்கையை ஹரி விஷயத்திலும் எங்க மேல வை!
அக்கா எனக்கு மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்லை. அதிலும் ஹரியை பற்றி யோசிக்கிற ஐடியாவே இல்லை.
பவித்ரா நீ ஒரு விதமான பாதிப்புல இருக்க… இந்த நிலைமை இப்படியே இருந்துடாது. உன் வாழ்க்கையில் இதுவரை நடந்த மாதிரியே தான் இனிமேலும் நடக்கணும்னு இல்லை.
ஹரி உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாரு!
எனக்கு விருப்பம் இல்லைக்கா.
ஹரியை மறுக்க ஒரே ஒரு நியாயமான காரணம் சொல்லு!
பிடிக்க கூட ஒரு காரணமும் இல்லை.
நீ விரக்தியில் இருக்க பவி.
எப்படி இருந்தாலும் என் பதில் ஒன்னு தான்.
நாங்க உன் அம்மாட்ட பேசறோம் பவி.
அய்யோ அக்கா… நானே அவங்கட்ட பேசறது இல்ல… நீங்க பேச என்ன இருக்கு?
அவங்க வேற ஆளுங்க… ஜாதி குலம் கோத்திரம்னு யோசிக்கிறியா…?
பவி நீ மெச்சுர்டான பொண்ணும்மா… உனக்கான வாழ்க்கையை நீ மகிழ்ச்சியா நிம்மதியா வாழணும்!
ஹரி கூட வாழ்ந்தா நீ சந்தோஷமா வாழுவ….
எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம்.
பவி பிடிவாதம் பிடிக்குற நீ…!
அக்கா பாப்பா அழறா பாருங்க…. நீங்க சார் வந்த உடனே பேசுங்க… இந்த வீக்கிலே டிக்கெட் போட சொல்லுங்க! அவள் குழந்தையை பார்க்க சென்றுவிட்டாள்.
அகிலன் வந்த பிறகு மீண்டும் அதே பேச்சு வார்த்தை.
பவித்ரா…. உன் வாழ்க்கைக்கு நாங்க பொறுப்பு! அகிலன் எப்படியாவது அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
சார் மன்னிக்கனும் எனக்கு வாழ்க்கை பத்தின ஐடியா எதுவும் இல்லை.
பவி ஹரி உன்னை அவ்வளவு விரும்புறான்.
அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?
நீ ஹரிட்ட சொல்லிட்டு போ!
நான் ஏன் அவருக்கு சொல்லணும்?
நான் உங்க குழந்தைகளுக்கு தான் ஆயம்மாவா வந்தேன்னு அவருக்கே தெரியுமே!
பவித்ரா அவனை பத்தி உனக்கு தெரியாதுமா… அவன் விரும்பின முதலும் கடைசியுமான ஒரே பொண்ணு நீயா தான் இருப்ப…
அவனோட அறிவுக்கு அழகுக்கு அந்தஸ்துக்கு எத்தனை பெரிய இடத்துல இருந்தெல்லாம் பொண்ணு கொடுக்க ரெடியா இருக்காங்க தெரியுமா?
சார் நீங்க உங்க பிரண்டை தூக்கி வைத்து கொண்டாடுறதில் தப்பில்லை… எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு அதில் விருப்பு வெறுப்புகள் இருக்கு.
எனக்கு ஹரியை பிடிக்கல சார்… நான் இந்தியாக்கு போயே ஆகணும்!
இன்னும் இன்னும் பிரச்னையை இழுத்து போட்டுக்க நான் ரெடியா இல்லை.
அவனை பத்தி உனக்கு தெரியல பவித்ரா…. அகிலன் நெடுமூச்சு விடுத்தான்.
தெரிஞ்சுக்க விரும்பல சார். நான் வசதியா வாழ விரும்பல சார் நிம்மதியா வாழணும்… இப்போதைக்கு எனக்கு அது தான் வேணும்.
உன் நிம்மதிக்கு எந்த குந்தகமும் வந்துடாதும்மா.
சார்…. நீங்க என் அண்ணன் மாதிரி… என் மனசுல ஹரியை பத்தின எவ்வித எண்ணமும் இல்லை.
தயவு செய்து என்னை அனுப்பிடுங்க! கை கூப்பி கண் கலங்கி நிற்பவளை தவிப்புடன் பார்த்தான்.
சரி உனக்கு ஹரி வேண்டாம்… அதோட விடு! அதுக்கு ஏன் இந்தியா போகணும்? இன்னும் ரெண்டு மாசம் இருந்தால் நாம எல்லாருமே ஊருக்கு கிளம்பிடலாம். எப்படியாவது அவளை பிடித்து வைக்க முயன்றாள் சௌமி.
இல்லக்கா அவர் எனக்கு டைம் கொடுத்துட்டு போயிருக்கார். அவர் வரதுக்குள்ள நான் போயிடணும். இல்லைனா தேவையற்ற சங்கடங்கள் வரும்.
சொன்னா கேளு பவி! இப்போ டிக்கெட் கிடைக்குறது கஷ்டம்.
அக்கா இந்த வீக் டிக்கெட் இருக்கு நான் சேர்ச் பண்ணி பார்த்தேன். டைரக்ட் பிளைட் தான்னு இல்லை… கனெக்ட்டிங் பிளைட்னாலும் ஓகே தான். சீக்கிரம் சாரை புக் பண்ண சொல்றீங்களா? நானே புக் பண்ணவா?
உனக்கு ஏம்மா அவ்வளவு பிடிவாதம்?
பிடிவாதம் இல்ல… தன்மானம்.
ஹரிட்ட ஒரு வார்த்தை.
அக்கா என்மேல பிராமிஸ் அவருக்கு நீங்க சொல்லக்கூடாது.
பவித்ரா… ஒரே குரலாய் அலறிவிட்டனர் அகிலனும் சௌமியாவும்.
ஆமா நான் கிளம்புறது அவருக்கு தெரியக்கூடாது.
அவன் எங்களை துளைத்து எடுத்துடுவான் அகிலன் வேதனை கொண்டான்.
உங்களை ஏன் துளைக்கணும்? நீங்க எப்படி பொறுப்பாவீங்க?
பவித்ரா கல்யாணமே வேண்டாம்னு இருந்த ஹரி உன்னை பார்த்து தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்.
எப்படியாவது இந்த பெண்ணின் மனசை மாற்றிவிட முடியாதா என்ற நப்பாசை அவனுக்கு.
சார் முடிவு எடுத்த பிறகு எவ்வளவு நேரம் பேசினாலும் என்ன மாற்றம் வந்துடப் போகுது?
நீங்க டயர்டா இருக்கீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ப்ளீஸ்.
தான் பிடித்த பிடியில் நிற்பவளை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியாது என்று விட்டு விட்டனர்.
அகிலனுக்கு பவித்ராவின் மீது கோபமும் கூட… இப்படி ஒரு மாப்பிள்ளை ஏழு லோகம் தேடினாலும் கிடைக்குமா? இந்த பைத்தியக்காரப் பெண் கையில் கிடைக்கும் வைரத்தை தூக்கி வீசி விளையாடுகிறாளே…
அவளை கரைக்க முடியாது என்று தெரிந்து விட்ட படியால் டிக்கெட் பார்க்க தொடங்கினான்.
இந்த பெண் ஹரிக்கு சரிவருவாளா என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றாமல் இல்லை.
அப்படி என்ன இவள் பெரிய அப்சரஸ் என்று கூட அவன் மனம் முணு முணுத்தது.
அவன் வந்து கேட்டால் என்ன சொல்வது…? என்ற கவலை வேறு வெகுவாய் ஆட்கொண்டது.
உங்க வீட்டுக்கு தகவல் சொல்லணுமே… சௌமியா நினைவு வந்தவளாய் கேட்டாள்.
நானே சொல்லிக்கிறேன்… நீங்க கொடுத்த போன் இருக்குக்கா.
டிக்கெட் புக் செய்துவிட்டேன் என்று அகிலன் ஊர்ஜிதமாக சொல்வதற்குள் பெட்டியை கட்ட தொடங்கி விட்டாள் பவித்ரா.
சாட்டர்டே ஆஃப்ட்டர் நூன் பிளைட் என்று பதிவு செய்த விபரத்தை காண்பித்தான்.
சௌமியும் சரி அகிலனும் சரி அவளுடன் சரியாக பேசுவதில்லை. அதை பொருட்படுத்தும் நிலையில் அவள் இல்லை.
இருக்கும் நான்கு நாட்களும் குழந்தைகளை அவ்வளவு கொஞ்சி மகிழ்ந்தாள்.
விதம் விதமாய் சமைத்து கொடுத்தாள்.
வீட்டை ஒழுங்கு படுத்தி வைத்தாள்.
பவி ஊருக்கு போறல்ல தம்பி தங்கைகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போகணும் இல்லையா… ஷாப்பிங் போயிட்டு வா!
அக்கா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நம்ம ஊருல என்ன கிடைக்கல? எதுக்கு இங்கிருந்து தூக்கி சுமந்துட்டு போகணும்? எல்லாவற்றிற்கும் தயாராய் ஒரு பதில் வைத்திருப்பவளை ஆயாசமாய் பார்த்தாள்.
கிளம்பும் நாளும் வந்தது. சாக்லேட்ஸ்,நட்ஸ், ட்ரை ப்ரூட்ஸ் எல்லாம் சௌமி கொண்டு வந்து ஒரு பை நிறைய வைத்தாள்.
எவ்வளவு கட்டுப்படுத்தியும் பவித்ராவிற்கு கண்ணீர் உடைபெடுக்க தொடங்கி விட்டது.
அக்கா ஸாரி… உங்களுக்கு ஹெல்புக்கு வந்துட்டு இப்படி பாதியிலே கிளம்புறேன். சாரிக்கா… சௌமியின் தோளில் சாய்ந்தவள் தேம்பி தேம்பி அழுதாள்.
பரவாயில்லை பவி…. அவங்க அவங்க சூழ்நிலையையும் பார்க்கணும் இல்ல… சென்னையில் லேண்ட் ஆனதும் கால் பண்ணு!
நான் என் மாமியாருக்கு சொல்லிட்டேன். நீ உங்க வீட்டுக்கு சொல்லிட்ட தானே…
ம்ம்ம்ம்… என்று தலை அசைத்தாள்.
அக்கா ஒன்னு சொல்லவா? நீங்க எனக்கு உடன் பிறவா சகோதரி மாதிரி இல்ல… உடன் பிறந்த சகோதரி மாதிரி என்னை அவ்வளவு அன்பா அக்கறையா நடத்துனீங்க… இந்த மூனு மாசம் நான் ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருந்தேன். தேங்க்ஸ்கா…
குழந்தைகளை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.
கண்ணீருடன் புறப்பட்டு விட்டாள்.
ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்ட அகிலன்
எக்சேஞ்ச் செய்த இந்திய ரூபாய் நோட்டுக்கள் சிவற்றை அவள் கையில் கொடுத்து விட்டு. உன் அக்கவுண்டில் அமவுண்ட் டிரான்ஸ்பர் பண்ணி இருக்கேன். பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா என்றான்.
தேங்க்யு ஸார்… மனமார நன்றி கூறினாள்.
பவித்ரா ஒன்னு சொல்றேன் உனக்கு… உனக்கு ஹரிசரணை மட்டும் தான் தெரியும். அவனை நந்தமூரி எர்ரபள்ளியா உனக்கு தெரியாது. இனி பார்ப்ப…. கையசைத்து விடைபெற்றவனை கண்டு மௌனமாய் சிரித்து விட்டு சென்றாள்.
சாரி ஹரி எங்களால் முடிந்தவரை அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினோம்.
உனக்கு தெரிய படுத்த முடியாத நிலை… அகிலன் அவ்வளவு வருந்தினான்.
சௌமியின் கண்களில் நீர் கோர்த்தது.
புரியுதுரா… நான் இதை எதிர்பார்த்தேன்.
அவ என்னை ஈஸியா எடை போட்டுட்டா… நான் அமெரிக்காவில் இருந்தாலும் ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளி தான்.
அவ எங்கேயும் ஓட முடியாது ஒளிய முடியாது.
இனி நான் பார்த்துக்கிறேன்.
ஹரி…!
டேய் நான் உங்க ஊரு மாப்பிள்ளைரா… நண்பனின் தோளில் தட்டியவன் தலையை கோதிக் கொண்டு வெளியேறினான்.
—– தொடரும் ——-
error: Content is protected !!