Skip to content
Post Views: 3,460
ஹரி கொந்தளித்து ஆர்ப்பரிக்கவில்லை.
அமைதியாய் உட்கார்ந்து யோசித்தான்…
குலாபி எக்கடா உன்னாரு? மி பாவா மி கோசம் வெதுகுடுன்னாரு… தலையை கோதிக் கொண்டான்.
சற்று நேரம் லேப்டாப்பில் மூழ்கியவன்…. ஆப்பிள் நறுக்கி சுவைத்துக் கொண்டே டிவியில் குத்து பாட்டை கண்டு துள்ளளுடன் ரசித்தான்.
Advertisement
ஆப்பிள் கட்டுப்படியாகவில்லை போலும் வயிறு கொர கொரவென்று சப்தமிட்டு எரிச்சல் பட்டது.
அமைதியாய் கீழே இறங்கி அகிலன் வீட்டுக்கு வந்தவன் சௌமி என்ன டிபன் பண்ணியிருக்க என்றான் சோஃபாவில் சரிந்தப்படி.
இவ்வளவு நேரமும் ஹரிக்காக வருந்தி அவன் நிலை எண்ணி கணவனும் மனைவியும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
Advertisement
இப்போது தான் டிபன் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள் சௌமி.
Advertisement
குக்கர் விசிலடித்து கொண்டிருந்தது
ஸாரி ஹரி.. ஒரு ஹாப் அன் அவர் வெயிட் பண்ண முடியுமா?
ஒன்னும் அவசரம் இல்லம்மா பொறுமையா செய்!
Advertisement
டீப்பா மீதிருந்த சௌமியின் லேப்டாப்பை ஓபன் செய்து செஸ் விளையாடினான்.
என்ன சௌமி எப்போ வேலைக்கு போகப் போற? கிச்சனை நோக்கி குரல் கொடுத்தான்.
என்னது வேலையா…நான் எங்கிருந்து வேலைக்கு போக…? குட்டீஸ் வளர்ந்த பிறகு யோசிக்கலாம்… பேசிக் கொண்டே பூரிக்கு மாவு பிசைந்தாள்.
சௌமி ஷோ கேஸ் எல்லாம் நீட்டா க்ளீன் பண்ணி இருக்கியே… உனக்கு தான் டஸ்ட் அலர்ஜி இருக்கே… உன்னை யார் இதெல்லாம் செய்ய சொன்னது?
அது நான் பண்ணல… பவித்ரா பண்ணிட்டு போனா…
ஓ…. என்றவன் விரல்கள் கூகுளில் துழாவியது.
இதயா உறங்கிவிட இனியனை தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தான் அகிலன்.
நண்பனின் முகம் பார்க்க தயங்கிய அகிலனின் விழிகள் நிலம் நோக்கியது.
அகி… குழந்தையை கொடுறா… ஆசையாய் வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டான்.
டேய் குழந்தையை தூக்க பயப்படுவியே…
பழகிக்கிறேன்… கண் சிமிட்டி சிரித்தான்.
ஹரியின் முகத்தில் சிரிப்பை கண்டவனுக்கு மெல்லிய நிம்மதி.
குழந்தை கை கால் உதைத்து ங்க… ங்க…. என்று மிழற்ற அவ்வளவு ஆனந்தம் ஹரிக்கு.
ஹரி குழந்தையை கையிலே வச்சுக்க வேண்டாம்…அதுவே சுகமா பழகிட்டா படுத்தி எடுக்கும். கீழே படுக்க வைங்க!
இருக்கட்டும் சௌமி கொஞ்ச நேரம் நான் வச்சுக்குறேன்…! ஆசையை பிஞ்சு விரல் பற்றி லேசாய் வருடினான்.
அகி நெக்ஸ்ட் வீக் இண்டியா கிளம்புறேன்… குழந்தையை கொஞ்சிக் கொண்டே அகிலனிடம் பேசினான்.
ஹரி… தயக்கமாய் கரம் பற்றினான் அகிலன்
நிஜம்ரா…!
சந்தோஷம்டா… இருந்தாலும்….
எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை மேன்…
ஸாரிடா… குரல் வறண்டது.
அகி நீ ஏன் கில்ட்டியா பீல் பண்ற…?
டிக்கெட் கன்பார்ம் பண்ணிட்டியா?
ம்ம்ம்… ஜஸ்ட் நவ்…!
சூடான பூரியை தட்டில் அடுக்கி கொண்டு வந்து டேபிள் மீது வைத்துவிட்டு சாப்பிட அழைத்தாள் சௌமி.
ஹரி வந்து சாப்பிடு!
சௌமி கிழங்கு மசாலா கிண்ணத்தை கொண்டு வந்து வைத்தாள்.
தட்டு வைத்து பரமாறிக் கொண்டவன் சௌமி நெக்ஸ்ட் வீக் இண்டியா போறேன் என்றான்.
நண்பனை படபடப்புடன் பார்த்தாள்.
என்ன அப்படி பார்க்கிற?
நத்திங்…!
நீங்க நெக்ஸ்ட் மந்த் வறீங்க தானே….? வறீங்க… அழுத்தமாய் கூறிக்கொண்டே சூடான பூரியை சுவைக்க தொடங்கினான்.
சௌமி பயத்துடன் கணவனை திரும்பி பார்த்தாள்.
ஹரி என்னடா பிளான் பண்ணியிருக்க? பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டான் அகிலன்.
என்னாரா கேள்வி இது? எனக்கும் வயசாகிட்டே போகுதுல்ல சட்டுப்புட்டுனு விவாஹம் செய்யணும்! உங்களை மாதிரி டிவின்ஸ் இல்லைனாலும் சிங்கிள் சிங்கிளா ரெண்டு குழந்தைங்க பெத்துக்கணும்…!
ஹரி… அகிலன் வார்த்தையின்றி தடுமாறினான்.
ஹே சீரியஸ் மேன்… நிஜமா இது தான் பிளான்.
சௌமி இன்னொரு பூரி! ஐந்தாவது பூரியை கேட்டு வாங்கி கொண்டான்.
இந்த ஹரி அவர்களுக்கு புதிது! இந்த பேச்சு.. இந்த அழுத்தம்… அவர்களை பட படக்க வைத்தது.
ஹரி என்ன பண்ண போற…? பயத்துடன் கேட்டான் அகிலன்.
இவ்வளவு நேரம் சொன்னேனே அதை தான் பண்ண போறேன்!
பொண்ணு… பொண்ணு…!
என்னரா டவுட் உனக்கு … பவித்ராதான் நா பாரியா அதில் உனக்கு என்ன டவுட் …?
அவ தான்….
அவ தான் என்னை வேண்டாம்னு சொல்றா… நான் சொல்லலையே….கை கழுவிக் கொண்டு வெளியேறினான்.
“—————-“
ஹலோ ஸ்ரீனி….
அய்யோ தெய்வமே நீயா…? அறண்டு தான் போனான் ஸ்ரீனி.
உனக்கு ஒரு நல்ல டாஸ்க் கொடுக்கிறேன்…!
மறுபடியுமா?
ம்ம்ம்ம்… சின்னதா ஒரு டாஸ்க்.
ச்ச… ச… ஒரு நாள் இல்ல… நாலு நாள் டைம் எடுத்துக்கோ! டேய் நிஜம்ரா.
நீ இண்டியா வரியா?
ஏன் வரக்கூடாதா?
அய்யோ தெய்வமே… யார் வேண்டாம்னு சொன்னது?
வாங்க நேரில் பாப்போம்!
ம்ம்ம்ம்…. கொடுத்த வேலையை சீக்கிரம் செய்துமுடி மேன்.
கண்டிப்பா…! இல்லன்னா விட்டுவிடுவியா?
அப்புறம் ஹரி வேறென்ன விசேஷம்?
என் விவாஹம் தான்!
ஸார் புல் பார்ம்ல இருக்கீங்க போல…?
ய்யா… வாய் விட்டு சிரித்தான். அந்த சிரிப்பில் அவ்வளவு மலர்ச்சி இருந்தது.
சரி ஸ்ரீனி முடிச்சுட்டு நீயே கூப்பிடு!
ய்யா…ஷ்யூர்!
“———————“
ஹலோ அம்மா…!
ஹரி… தாரிணி குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.
அவனே அழைத்து பேசுவது அபூர்வம்!
சொல்லு ஹரி…!
ம்ம்ம்ம்மா இண்டியா வரேன்!
நிஜமா பாபு? அவரால் நம்ப முடியவில்லை.
நிஜம்மா. டிக்கெட் போட்டுட்டேன். யாருக்கும் சொல்ல வேண்டாம்.
அந்த பொண்ணு? சந்தேகமாய் கேட்டார் தாரணி.
உங்க மருமகளோட தான் வரேன்.
நிஜமா?
ம்ம்மா… நேனு ஹரிசரண்மா… அழுத்தமாய் கூறினான்.
ஹரி…. நெகிழ்ந்து உடைந்தது அந்த தாயின் குரல்.
ம்ம்மா… வருத்தப்படாதீங்க! சீக்கிரம் என் விவாஹத்தை பார்ப்பீங்க..
இது போதும் ஹரி… இது போதும்… இவ்வளவு நாள் இருந்த மன வேதனை மொத்தமாய் துடைத்து போட்டது போல் ஆனது அவருக்கு.
“——————-“
ஹரி பிரச்னை எதும் பண்ணிராதடா… அவங்க சாதாரணபட்ட குடும்பம்.. அகிலன் கெஞ்சுதலாய் கேட்டு கொண்டான்.
நான் ரௌடியா…? மீசையை நீவி சிரித்துக்கொண்டான்.
உனக்குள்ள இருக்கும் ரௌடியை எனக்கு தெரியாதா? மனதிற்குள்ளே கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டான்.
ஹரி பவித்ரா பாவம். அவ இதுவரைக்கும் பட்டது போதும்… உன் பங்குக்கு நீயும் அவளுக்கு கஷ்டத்தை கொடுத்துறாத ப்ளீஸ்…
சௌமி அவ என்னோட பவித்ரா… அவ மேல எனக்கு அக்கறை இருக்கு. அவ வாழ்க்கையில் இனி வேதனையே இருக்காது… இருக்க கூடாது! நான் பார்த்துக்கிறேன்… அழுந்த கண்களை மூடி திறந்தான்
அவ கிராமத்து பொண்ணு… அதிகம் வெளி உலகம் அறியாதவ…உன் அடாவடிக்கு அவ ஈடு கொடுக்க மாட்டா..
அவளா…. தோளை குலுக்கி சிரித்துக்கொண்டவன் அவ எவ்வளவு பெரிய கேடி தெரியுமா… உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
அகி நீங்க நெக்ஸ்ட் மந்த் வந்துருங்க! கட்டளை போல் கூறினான்.
ம்ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
என்னாரா ம்ம்ம்ம்… வந்து சேரணும்!
உன் மேரேஜில் எல்லா வேலையும் நான் தானே இழுத்து போட்டு செய்தேன்?
பீதியுடன் நண்பனை பார்த்தான் அகிலன்.
“—————–“
தேங்க்யு ஸ்ரீனி! ரெண்டு நாளையில் முடிச்சுட்ட… வெரி குட்!
இதெல்லாம் ஒரு அசைன்மெண்ட்டுன்னு… ஸ்ரீனி கடுப்பாகி போனான்.
அப்புறம்…நீ என்ன பண்ண போற ஹரி?
பண்ணும்போது தெரிஞ்சுக்குவ!
பாருடா ஹீரோ கெத்து காட்டுறாரு…
எஸ்… கெத்து தான்… காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
நேரில் பார்க்கும் போது இருக்கு உனக்கு… நர நரத்தான் ஸ்ரீனி.
ஹரியை நினைத்து ஒரு புறம் ஆச்சரியம்.
எத்தனை பெரிய குடும்பத்து வாரிசு… எப்படி நடந்து கொள்கிறான்!
“——————-“
ஹரி பவித்ரா விஷயத்தில் நீ ரூடா நடந்துகிட்டா அது எங்களுக்கு பெரிய சங்கடத்தை உண்டு பண்ணிடும்! சௌமியா மென்று முழுங்கி சொல்லியே விட்டாள்.
புரியல… கூர் விழியால் அவளை ஆராய்ந்தான்.
அவ எங்களுக்காக தான் இங்கே வந்தா… நீயும் எங்க பிரண்ட்… உங்க ரெண்டுபேருக்கும் பொதுவில் நாங்க தான் இருக்கோம்!
அதுக்கு?
புரிஞ்சுக்கோ ஹரி… எங்களால் தான் பிரச்னைனு ஈஸியா சொல்லிடுவாங்க!
அப்போ விட்டுட சொல்ற?
அப்படி சொல்லலை.. கம்பெல் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.
தேங்க் யூ பார் யுவர் வேல்யூபில் சஜ்ஜஷன். ஆனா விடுற ஐடியா இல்லை…! குடித்து முடித்த ஜுஸ் கிளாசை டேபிள் மீது வைத்தவன்… வரேன் என்று தலை அசைத்து தனது பெட்டியை உருட்டினான்.
அகிலன் கார் கதவை திறந்து காத்திருக்க… தன் பெட்டிகளை டிக்கியில் வைத்து மூடியவன் முன் பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.
“——————“
ஏனோ இந்த வலிகள் ஏனோ காதல் அந்த வார்த்தை தானோ.. விழித்துளி பொழிகிறேன் குடைக்குள்ளே நனைகிறேன்
உயிர்வலி உணர்கிறேன்
விலகி ஏன் போகிறேன்
ஒலியில்லா மொழியுடன் ஊமையாய் செல்கிறேன்
தயையில்லா மனதுடன் நொடிகளை கொல்கிறேன்
காரில் அவன் ஒலிக்க விட்ட பாடலை கேட்டு அகிலனுக்கு இதயம் கணத்தது.
ஏமிரா…?உம்மென்று காரை இயக்கும் நண்பனை கண்டு கொண்டான்.
ம்கூம் என்று தலை அசைத்த அகிலனுக்கு அவன் வேதனையும் வலியும் புரிந்தது.
அகி நான் வில்லனாரா…? நேரடியாக அவன் கேட்ட கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
அகி… பவியை ஏன் தெரியுமா ரொம்ப ரொம்ப பிடிச்சுது… அவ பட்ட கஷ்டம்… அவளுக்கு இருக்கும் மனகாயம். அவ பாவம்ரா…
பெத்தவங்களே நம்பாம இருக்கிறது எத்தனை வலி… என்னால உணர முடியுது! எனக்கும் வலிக்குது.
ம்ம்ம்ம்… என்றான் பெருமூச்சுடன்.
அவளை இப்போ கொஞ்சமா கஷ்டப்படுத்தினாலும் வாழ்க்கை முழுக்க கஷ்டமே அவளை அண்ட விடாம கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்!
எனக்கு தெரியாதா ஹரி? உரிமையாய் கோபித்தான் அகிலன்.
உன் பாரியாளுக்கு சொல்லு…. உங்களுக்கு எந்த தர்ம சங்கடமும் வராமல் பார்த்துக்கிறேன்.
ஏன்டா?
பின்ன… அநியாயத்துக்கு பயப்படுறா சௌமி.
ஹரி அவ பயம் ஒருபுறம் இருக்கட்டும்.எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா போதும்.
ஹ்ம்ம்ம்…. கண்டிப்பா நடக்கும்!
அம்மா அப்பாவை நான் நலம் விசாரித்தேன்னு சொல்லு! ராம், ராம் வைஃபை கேட்டேன்னு சொல்லு.
ம்ம்ம்ம்ம்ம்…. என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.
ஊருக்கு போய் ரீச்சாகிட்டு கால் பண்ணு!
டைரக்ட் பிளைட் ஹைதராபாத் தானே…?
ம்ம்ம்ம்….
ராம் ஏர்போர்ட் வந்து பிக்கப் பண்ணிக்குவானா?
ம்ம்ம்ம்…
வீட்டில் எதுவும் பிரச்னை பண்ணிடாதே… பவித்ரா பற்றி எடுத்து சொல்லி புரிய வை!
வேற ஸ்டேட்,வேற கல்ச்சர், வேற லாங்குவேஜ் எல்லாமே எதிரெதிர். ரொம்ப யோசிப்பாங்க தான்… உடனே சண்டைக்கு பாஞ்சுடாதே… தாரும்மா எல்லாம் பார்த்துக்குவாங்க. உன் நாயனா சின்னாயனாட்ட கொஞ்சம் பணிவா பேசு!
சரிடா உன் அட்வைஸ் கிளாஸ் முடிஞ்சுதா ஏர்போர்ட் வந்தாச்சு!
கங்கிராட்ஸ் மச்சி…கட்டி அணைத்து வாழ்த்து கூறினான் அகிலன்.
தேங்க்ஸ் என்று உளமார்ந்து நன்றி கூறினான் ஹரி.
கையசைத்து வழி அனுப்பி
சென்று விட்டான் அகிலன்.
“—————“
மும்பை… சத்திரபதி சிவாஜி மஹாராஜா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது விமானம்.
விமான நிலைய காத்திருப்பு அறையில் அரை மணி நேர ஓய்வு… முகம் கழுவி கொண்டு இலகுவான உணவை எடுத்துக் கொண்டான்.
மீண்டும் அவனுக்கு விமான அறிவிப்பு…
மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் உள்நாட்டு விமான நிலையத்தில் சென்று இறங்கினான்
அங்கு தயாராய் இருந்த காரில் ஏறிக்கொண்டான்.
ஏர்போர்ட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹோட்டல் கோல்டன் ஹவேலி (Hotel Golden Haveli )சென்று சேர்ந்தான்.
ஏற்கனவே முன்பதிவு செய்த அறைக்கு சென்று தன் உடைமைகளை கூட எடுத்து பத்திரப்படுத்தாமல் கட்டிலில் விழுந்தான்.
ஏறத்தாழ முப்பத்திரண்டு மணி நேரம் பயணம்… சரியான உறக்கம் இன்மை, உடல் சோர்வு எல்லாம் சேர்த்து அசதியில் உடல் ஆடிவிட்டது.
படுத்தவன் அடுத்த நிமிடமே உறங்கி போனான். கிட்டத்தட்ட எட்டு நாள் ஆகிறது அவன் வயிரார உண்டுநி ம்மதியாய் உறங்கி.அவ்வளவு அமைதி…. நிம்மதி… தன்னை மறந்து சுற்றம் மறந்து….சரியான தூக்கம்.
மாலை ஆறுமணிக்கு கட்டிலில் விழுந்தவன் மறுநாள் காலை ஒன்பதுக்கு மேல் தான் கண் விழித்தான்.
கண் விழிக்கும் போதே உற்சாகம்… மூளையும் மனதும் எவ்வித அலைபுறுதலும் இல்லாமல் நிர்மலமாய் இருந்தது…
இலகுவான மனநிலையை ரசிக்கும் பொருட்டு… படுக்கையை விட்டு எழாமல் உருண்டு புரண்டு கையை காலை விரித்துக் கொண்டான்.
அப்பாடா என்ற அந்த நிம்மதி அடுத்தவருக்கு புரிவது கொஞ்சம் கடினமே…
error: Content is protected !!