Skip to content
Post Views: 3,440
அடமாய் அவள் வாயிலில் நிற்க… வாடா அம்மாயி என்று உள்ளே இழுத்து கதவடைத்தான்.
அவள் மேனி வெட வெடக்க…. பொங்கிய கண்ணீருடன் அறையை ஆராய்ந்தாள்.
மருண்டு நிற்கும் அவளை கண்டு ஆறுதலாய் தலை கோதி நேசம் உணர்த்த தன் கரம் நீட்டினான் ஹரி.
அவன் கரம் முன்னே நீட்ட அவள் பின்னே நகர்ந்தாள்.
Advertisement
ஹேய் குலாபி நீ இந்த நிமிஷம் மிஸ்டர் சங்கர நாராயணன் பொண்ணு மிஸ் பவித்ரா.
எப்போ சட்டப்படியும் சம்பிரதாயப்படியும் மிசஸ் ஹரிசரணா மாறுவியோ அப்போ நீ எனக்கு மட்டுமே சொந்தம்.
நான் மிஸ் பவித்ரா மேல பாஞ்சுட மாட்டேன். சேம் டைம் மிசஸ் பவித்ராகிட்ட ஓஞ்சுடவும் மாட்டேன். என் ரைமிங் கரெக்ட்டா….? தலை சாய்த்து அழகாய் சிரித்தான் ஆளுமை நிறைந்த ஆணழகன் அந்த அன்பழகன்.
Advertisement
கொஞ்சம் பயம் நீங்கிய அணங்கவள் அவனை விழி வெட்டி பார்க்க…
Advertisement
ஸாரி மிஸ் பவித்ரா என்று எக்கி அவளை இறுக்கி ஆள் விழுங்கும் அவள் கண்ணிமையில் முத்தம் வைத்தான்.
அச்சத்தில் அவள் கண்கள் மூட….
ஹலோ மிஸ் பவித்ரா அவ்வளவு தான் முடிஞ்சுது… நீங்க ரொம்ப இமாஜின் பண்ணிக்க வேண்டாம். ஹரிசரணுக்கு செல்ஃப் கண்ட்ரோல் அதிகம்.
Advertisement
அவன் பேச்சும் அந்த குரலில் இருந்த சொல்ல தெரியாத உணர்வும் அவளை ஏதோ ஏதேதோ செய்தது.
பேசணும்னு சொன்னீங்க…. பயந்து பயந்து கேட்டாள்.
பேசுவோமே… நீ அயோத்தி ராமர் கோயில் பற்றி என்ன நினைக்கிற? வெகு தீவிரமாய் கேட்டான்
அடப்பாவி.. இவன் என்னை உதை வாங்க வைக்க போறான்… அவள் மலங்க மலங்க விழித்தாள்.
ஹே குலாபி நீ பேசணும்னு சொன்னியேரா…. உதடு மடித்து ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தான் .
நீங்க தான் பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க… கொஞ்சம் சிடு சிடுப்பு கூடியது அவளுக்கு.
சொன்னேனா…ஞாபகம் இல்லையே… நெற்றியை தேய்த்தான்.
என்ன விளையாடறீங்களா? கோபசிவப்பு கொழுந்து விட்டது.
விளையாடணும் தான் ஆனா இப்போ இல்லை… கண்சிமிட்டினான்.
மண்டூகம் போல் நின்றவளுக்கு அவன் கண்ணடித்த விதத்தில் புரிப்பட்டு விட்டது.
நான் கிளம்புறேன்… அவள் வேகமாய் வெளியேற முனைந்தாள்.
ஹே குலாபி… நான் இன்னும் பேசவே இல்லையே… மறுபடி எஸ்ஸாக பார்க்கிற…
ஏன் என்னை மிரட்டுறீங்க…? கோபம் முகிழ்ந்தது அவளுக்கு.
ரொம்ப டென்ஷன் ஆகாதரா.. பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் இரு…!
அவன் வாஷ் ரூம் செல்ல.. அறையை நோட்டம் விட்டாள்.
இங்கே தங்க ஒரு நாளுக்கு எவ்வளவு இருக்கும்…? இவ்வளவு பெரிய ஹோட்டலா இருக்கே… எப்படியும் இருபத்தைந்து முப்பதாயிரம் இருக்கும் போல… அறையை அலங்கரித்த ஓவியங்களையும் பொன் மஞ்சள் நிறத்தை வாரி வழங்கிய பல்புகளையும் விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிடிச்சிருக்கா… அவளுக்கு வெகு அருகாமையில் அவள் பிடரி முடி சிலிர்க்க காதல் சொட்டும் இன்ப ராகமாய் குரல் குழைத்து கேட்டான்.
எ… என்ன கேட்டீங்க… ஆடாது அசையாது நின்று கொண்டாள்.
இந்த ரூம் பிடிச்சிருக்கான்னு கேட்டேன். சிரித்தான்… பேதை அவள் நிலை கண்டு ரசித்தான்.
ம்ம்ம்ம்ம்…
அப்போ ஹனிமூன் டிரிப் இங்கே தான்… அவள் காதில் ஆடிய குட்டி தொங்கட்டானை ஆட்டிவிட்டு சிரித்தான்.
இதெல்லாம் பேச தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?
பேசணும் தான்… கொஞ்சம் ரசிச்சுட்டு வெட்கப்பட்டு சிரிச்சுட்டு அப்புறம் சீரியசா பேசுவோம்… மீண்டும் சிரித்தான்.
பேச்சுக்கொரு முறை வெகு இயல்பாய் வெகு அழகாய் சிரித்து தொலைத்தான்.
எனக்கு டைம் ஆகுது!
நம்ம இண்டிக்கு போலாமா? இலகுவாய் கேட்டவனை ஆயாசமாய் பார்த்தாள்.
பதில் சொல்லும் மூடில் அவள் இல்லை… ஏற்கனவே பேச வேண்டியது அனைத்தும் அவள் பேசிவிட்டதாய் நினைத்தாள்.
அம்மாயி சொல்லுறா…. நாம ஆந்திரா போயிடலாம்.. இப்போவே…
சார் எனக்கு டைம் ஆகுது…!
பவிம்மா நாம விவாஹம் பண்ணிக்கலாம். அம்மாட்ட உன்னைபத்தி .. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்கிறது பத்தி உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குங்கிறது வரைக்கும் தெளிவா உறுதியா சொல்லிட்டேன். அம்மாக்கு டபுள் ட்ரிப்பில் ஓகே.
எனக்கு ஓகே இல்லை சார்… நகத்தை சுரண்டினாள்.
அப்படியா… என் கண்ணை பார்த்து சொல்லு!
சொல்றேன்… எனக்கென்ன தயக்கம்…?
சொன்னாள்.. பதறாமல் சிதறாமல் அழகாய் அவன் கண்களை ஊடுருவி சொன்னாள். உங்களை எனக்கு பிடிக்கல… என்னை தொல்லை பண்ணாதீங்க ப்ளீஸ்…!
ஹா… ஹா… அப்புறம்… ரௌத்திரப் பார்வையுடன் அவளை நெருங்கியவன் அலேக்காய் தூக்கி போய் கட்டிலில் அமர வைத்தான்.
அவள் லப் டப் அதிகரிக்க அஞ்சி அமர்ந்திருந்தாள்.
தாவி அவள் இடையை கட்டிக்கொண்டு மடியில் தலை சாய்த்தான்.
சார்… என்ன பண்றீங்க…? பதறி அவன் தலையை விலக்க முயன்றாள்.
உஷ்… சுரு சுருன்னு ஏறுது… என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்.
அவஸ்தையாய் அவள் நெளிவதை பொருட்படுத்தாமல் ஆசுவாசமாய் கண் மூடினான்.
விழி உருட்டி முறைப்பவளின் கரம் பற்றி தன் சிகைக்குள் நுழைத்து அவனே கோதிக் கொண்டான்.
அவள் தவிப்புடன் பார்க்க…
என்ன பார்க்கிற… மனசு ரொம்ப ஏங்கி கிடக்கு…! எவ்வளவோ வலி நெஞ்சை அழுத்தி மூச்சு முட்ட வைக்குது.
எனக்கான வேதனையை இறக்கி வைக்க ஒரு மடி தேவைன்னு மனசு அமைதியா அழுகுது.
கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கிறேன் ப்ளீஸ்… கலங்கிய கண்களை தாழ்த்தி மறைத்துக் கொண்டான்.
அவன் ஆசுவாசம் செய்ய அவகாசம் கொடுக்காமல் மொபைல் அழைத்தது. அவன் கண்டு கொள்ளாமல் போகவே அழைத்து ஓய்ந்தது.
மீண்டும் அழைத்தது. ம்ப்ச்.. இதுவேற… கடு கடுத்து எழுந்தமர்ந்தான்.
வீடியோ காலில் அகிலன்.
போச்சு… இவனா…? முணங்கி கொண்டே அழைப்பை ஏற்றான்.
டேய் ஹரி எங்கே இருக்க? நீ வீட்டுக்கு போகலையா…? ராம் கால் பண்ணினான்…
எங்கேடா இருக்க…?
ராஜஸ்தானில் இருக்கேன்!
எது ராஜஸ்தானா?
அங்கே எதுக்கு போன?
நாலு ஒட்டகம் வாங்கலாம்னு வந்தேன்.
கொழுப்பு கூடிருச்சுடா உனக்கு….ஆந்திராக்கு போகாம இங்கே என்ன பண்ற?
என் குலாபி கூட ரொமான்ஸ் பண்ண வந்தேன்!
என்னடா உளறுற…?
எது உளறலா…? இப்புடு சூடு மேன்.. மொபைலை பவித்ரா பக்கம் திருப்பினான். அவள் அவமானத்தில் கண்ணீர் தளும்ப தலை கவிழ்ந்திருந்தாள்..
டேய் என்னடா பண்ணிட்டு இருக்க… ஆடித்தான் போனான்.
லவ் பண்ணிட்டு இருக்கேன்.
ஹரி நீ ரொம்ப தப்பு பண்ற!
பொறுக்க முடியாது பல்லை கடித்தான்.
ச்சீ… நான் எதுவும் பண்ணலரா… நாணம் போல் உதடு கடித்து கண் சிமிட்டினான்.
செருப்பு….!
நீ ஏன் ராஜஸ்தான் போன.. சொல்லுடா ?
ஹனிமூன் ட்ரிப்லாம் இல்லரா..
பல்லை உடைக்க போறேன்… ஏன்டா இப்படி எல்லாம் பண்ற…?
கூல் மிஸ்டர் அகிலன். இவ ஏன் வந்தான்னு கேளு?
பவித்ரா என்னம்மா இதெல்லாம்?
ம்ம்ம்… அவள் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை… வாய் திறக்கவும் இல்லை.
ஹரி நான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை… அந்த பொண்ணும் நீயும்…. எப்படிரா… அவளும் மாயவரம் போகலை… நீயும் எர்ரபள்ளி போகலை… என்ன கண்ணாமூச்சு நடக்குது?
அதான் கரெக்ட்டா சொல்லிட்டியே… கண்ணாமூச்சுன்னு.
மேடம் நமக்கு தெரியாம வேலை தேடி ராஜஸ்தான் வந்துட்டாங்க.
உனக்கு எப்படித் தெரியும்?
அம்மாயி அவளை புத்திசாலியாவும் என்னை முட்டாளாகவும் நினைச்சுட்டா…
பவித்ரா… உன்னை எரிக்க போகிறேன் பார் என்பது பார்த்துக் கொண்டிருந்தாள்.
சௌமியோட லேப்டாப்பில் தான் மேடம் வேலை தேடி இருக்காங்க… பிரண்ட் சந்தியாக்கு வேலை கேட்டு மெயில் பண்ணியிருக்காங்க…!
ரகசியமா பிளான் பண்ணினவங்க சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் பண்ணாம விட்டுட்டாங்க. மெயில் லாக் அவுட்(log out) பண்ணாம விட்டுட்டாங்க. அதை பார்த்து தான் கண்டுபிடித்தேன்
உனக்கு அப்போவே தெரியுமா?
ம்ம்ம்ம்… அசட்டையாய் சிரித்தான்.
இவ்வளவு எக்ஸாக்டா கண்டுபிச்சிருக்க…!
எஸ்…. அவ இந்த உலகத்தில் எந்த மூலை முடுக்கில் போய் ஒளிந்தாலும் தேடி போவேன்.
ஹரி மனசுக்குள்ள ஒன்னு பிக்ஸ் பண்ணிட்டா அது தான் ஃபைனல்.
பவி ராஜஸ்தானில் இருக்கான்னு எங்கட்ட ஏன்டா சொல்லல…? அவ்வளவு கோபம் அகிலனுக்கு.
சொல்லிருந்தா… போய் பார்த்துட்டு வான்னு வழி அனுப்பி இருப்பீங்களோ ?
அகிலன் டென்ஷனில் முறைத்தான்.
இப்போ எதுக்கு முறைக்கிற?
அவளை தேடி வந்திருக்கேன் ஓடி வந்திருக்கேன்… அவ்வளவு தான்.
அவ வீட்டுல தேடுவாங்களே… நான் என்ன சொல்ல?
அவ இண்டியா வரேன்னு வீட்டுல சொல்லி இருக்க மாட்டா…!
ஆனா என்னோட அம்மா அவ வீட்டுக்கு சொல்லி இருப்பாங்கடா… அகிலன் இருதலை கொல்லி எறும்பாய் தவித்தான்.
நோ பிராப்ளம்… நானே அவ மாமா மணவாளனுக்கு சொல்லிட்டேன்.
ஹரி… அகிலன் வாய் பிளந்தான்.
எஸ்… எல்லாம் சொல்லிட்டேன்.
பவித்ரா முகத்தில் கலவரம் கூடியது.
யாரை கேட்டுட்டு எங்க மாமாட்ட பேசினீங்க…? இதுவரை காட்டாத அவள் கோப முகம் இப்போது வெளிப்பட்டது.
உன் சார்பா உங்க வீட்டில் பேச அவர் தானே வருவார்….?
உங்களுக்கு எப்படி அவரை தெரியும்?
உன் தம்பி யுவராஜ்,உன் பெரியப்பா பரமசிவம், இறந்து போன உன் தாத்தா ஆதிமூலம் பற்றிக் கூடத் தெரியும்!
அகிலனே அதிர்ந்து நின்றான் என்றால் பவி…?
சார் இவர் பண்றது எதுவும் சரியில்லை…. எனக்கு அளவுக்கு அதிகமா டார்ச்சர் கொடுக்கிறார்.நான் போலீஸ் கம்பளைண்ட்னு போக ரொம்ப நேரம் ஆகிடாது…. அகிலனிடம் முறையிட்டாள்..
அப்படியா… சரி நீ போலீஸ் ஸ்டேஷன் போ!
அகி நான் அப்புறம் கால் பண்றேன்…!
டேய்… டேய்… ஏன்டா இப்படி நடந்துக்குற? அடுத்து என்ன செய்து வைப்பானோ என்று அகிலன் பயந்து தான் போனான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க… காலிங் பெல் அழைத்தது.
அகி புட் (food)வந்திருக்கு… நான் அப்புறம் பேசறேன்… மறுமுனையின் பதிலை எதிர் பார்க்காது துண்டித்தான்.
சுட சுட உணவு பதார்த்தங்கள் வந்திருந்தது.
பவி சாப்பிடு!
எனக்கு வேண்டாம்!
போலீஸ் ஸ்டேஷன் போய் ஈவ் டீஸிசிங் கேஸ் கம்ப்ளைண்ட் பண்ண தெம்பு வேண்டாம்.
அவள் எதுவும் பேசாது அமைதியாய் ஷாலின் நுனியை திருகிக் கொண்டு நின்றாள்.
வா சாப்பிடலாம். உன்னை பார்க்க போகிறோங்கிற எக்சைட்மெண்டில் மதியம் சரியா சாப்பிடல…
நீங்க சாப்பிடுங்க! எனக்கு வேண்டாம்.
எனக்கு கெஞ்சிட்டு இருக்க பிடிக்காதுரா அம்மாயி. அவள் வாயில் உணவை திணித்தான்.
அவன் பார்க்கும் பார்வையிலே உணவு வழுக்கிக் கொண்டு இரைபைக்குள் சென்றது.
பாவா ஊட்டினா தான் சாப்பிடுவியா? கேட்டுக் கொண்டே அடுத்த வாயை ஊட்டினான்.
நானே சாப்பிட்டுக்கிறேன்… பிளேட்டை அவனிடம் வாங்கிக் கொண்டாள்.
பாவாக்கு ஊட்டி விடணும்னு உனக்கு தோணலை பாரு! சிரித்துக்கொண்டே தனக்கான உணவை ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக்கொண்டான்.
அமைதியாய் இருவரும் சாப்பிட்டனர்.
பவிம்மா நாளை மறுநாள் ஆந்திரா போறோம். கைகுட்டையால் வாய் துடைத்தான்.
போங்க!
போறோம்!
இல்ல… நான் வர மாட்டேன்.
ஹா ஹா ஹா…. அப்புறம்?
கால் மீது கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்தான். சிங்கம் ஒன்று சினங்கொண்டு அமர்ந்திருப்பது போலவே இருந்தது.
error: Content is protected !!