Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Galattaa Kaathal

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 16.2

கலாட்டா 16.2

 

மறுநாள் காலை நீதிமன்றதுக்கு கிளம்பிய ராஜகோபால், டிரைவரை மறுத்துவிட்டு தானே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றார். அலுவலகம் சென்று அவருக்கு வேண்டிய பத்திரத்தை எடுத்துக்கொண்டு செல்லலாம் என அவர் முடிவெடுக்க, சென்னை ட்ராபிக், ‘விட்டுடுவேனா உன்னை?’ என அவரை சோதித்தது.

 



Advertisement

அலுவலகத்துக்கும்  நீதிமன்றத்துக்கும்  இடைப்பட்ட ஒரு சிக்னலில் அவர் மாட்டிக்கொண்டு தவிக்க,  ராஜகோபாலின் வக்கீல் அழைத்துவிட்டார்.

 

“சார், ஹியரிங்க்கு நேரமாச்சு! ஜட்ஜே வந்தாச்சு! எங்க இருக்கீங்க நீங்க?” என பரபரக்க, “சிக்னல்ல மாட்டிக்கிட்டேன் சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க… வந்துடுறேன்” என சொல்ல, “சார், பர்ஸ்ட் கேசே நம்மளுது தான்! முடிஞ்சவரை வர பாருங்க சார்… பல வருஷமா இழுக்குற கேஸ் இது” என்றார் அலுப்பாய்.  

Advertisement

 

Advertisement

ராஜகோபால் சிக்னலில் இருந்து தப்பித்து அடுத்த ஐந்தே நிமிடத்தில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டார். ‘ஐயோ’ என அயர்ந்துப்போக, நேரம் ராக்கெட் வேகத்தில் பறந்துக்கொண்டிருந்தது. வக்கீல் மறுமுறையும் அழைத்துவிட்டார்.

 

இதற்குமேல் அலுவலகம் சென்றுவிட்டு கோர்டுக்கு போக எப்படியும் நேரம் இடம் கொடுக்காது என உணர்ந்த ராஜகோபால், தன் அலைபேசியை எடுத்து ஆதிக்கு அழைத்தார்.

Advertisement

 

நான்கு ஐந்து ரிங் போனபின்னே, அழைப்பை ஏற்ற ஆதி, “ஹூஸ் திஸ்?” என வினவ, “ஆதி, நான் ராஜகோபால் பேசுறேன்ப்பா” என்றார்.

 

“ராஜகோபாலா? யாரது?”

 

ஆதியிடம் இருந்து இந்த கேள்வியை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நொடி திகைத்தவர், “தன்யாவோட அப்பா பேசுறேன்” என சொல்ல, அவன் மரமண்டையில் அப்போது தான் பல்ப் எரிந்தது.

 

“ஹோ! சார், சொல்லுங்க! என்ன மொபைலுக்கு கூப்பிட்டுருக்கீங்க? உங்க நம்பர் என்கிட்ட இல்ல அதான்” என வேக வேகமாய் சமாளித்தான்.

 

“நம்பர் இல்லன்னா பரவால்ல… ராஜகோபால் கூட யாருன்னு நியாபகம் இல்லன்னா…..” என்று அவர் இழுக்க,

 

“ஹிஹி சார்! சார் சார்ன்னு சொல்லி சார் பேர் மறந்து போயி” என்றான் அசடு வழிய.

 

அதற்குமேல் வெறும் பேச்சு பேச நேரம் போதாமல், “ஆபிஸ் வந்துட்டியா ஆதி?” என்றார்.

 

“யெஸ் சார்”

 

“அப்போ எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணணும்! ப்ளீஸ்” என ராஜகோபால் இறைஞ்சலாய் சொல்ல, “ப்ளீஸ் எல்லாம் எதுக்கு சார்? என்னனு சொல்லுங்க, செஞ்சுடலாம்” என்றான் ஆதி தெம்புடன்.

 

“ஒன்னும் இல்ல, என்னோட ஆபிஸ் ரூம்ல பெர்சனல் லாக்கர்ல ஒரு முக்கியமான பைல் இருக்கும், அதை எடுத்துக்கிட்டு ஹைகோர்ட் வரைக்கும் வரணும்! முடியுமா?”

 

அவர் சொல்ல ஆரம்பிக்கும்போதே தன் கேபினை விட்டு வெளியேறியிருந்தான் ஆதி.

 

[the_ad id=”6605″]

 

 

 

“உங்க ரூம்க்கிட்ட தான் போயிட்டு இருக்கேன் சார்! இன்னும் அரைமணி நேரத்துல அங்க வந்துடுறேன்” என ஆதி உறுதியாய் சொன்னதும், “இந்த சின்ன வேலைக்கு உன்னை அலைய விடுறேன்னு நினைக்காத ஆதி! என்னோட லாக்கர்ல நிறைய முக்கியாம பைல்ஸ் இருக்கு, வேற யார்க்கிட்டயும் என்னால சொல்ல முடியாது” என்றார் ராஜகோபால் தயக்கமாய்.

 

“இது ஒரு மேட்டரே இல்லை சார்! நீங்க லாக்கர் பின் சொல்லுங்க”

 

ஆதி கேட்டதும் தயங்காமல் கடவுசொல்லை சொன்னார் ராஜகோபால். அவருக்கு வேண்டிய கோப்பின் அடையாளத்தை சொல்லி அவனை எடுக்க வைத்தவர், “கொஞ்சம் சீக்கிரமா வா ஆதி” என்ற வேண்டுதலோடு அழைப்பை துண்டித்தார்.

 

பைலை எடுத்துக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றான் ஆதித்யா.

 

காபி மேக்கர் அருகே, குவளையில் காபியை நிரப்பிக்கொண்டே, “கண்ணும் கண்ணும் நோக்கியா, நான் காலையில் குடிப்பது காபியா?” என கோகுல் உற்சாகமாய் பாடிக்கொண்டிருக்க,

 

“தொட்டு தின்பது வருக்கியா? நீ பொறுக்கியா?” என எசப்பாட்டு பாடிய ஆதி, கையில் இருந்த பைல் கொண்டு கோகுலின் தலையில் அடித்தான்.

 

 

“ம்ச்! எதுக்குடா அடிக்குற?” களைந்த தலையை சீர் செய்துக்கொண்டே கேட்டான் கோகுல்.

 

“என் மாமனாரை பார்க்க நான் வெளில போறேன்… என் பொண்டாட்டி வந்தா சொல்லிடு!” என லிப்டுக்குள் புகுந்தான் ஆதி.

 

“ஹும்ம்… எல்லாம் என் நேரம்டா!!! போய் தொல” என வாழ்த்தி வழியனுப்பி வைத்தான் கோகுல்.

 

பைக்கில் புகுந்து புகுந்து லாவகமாய் ட்ராபிக்கை ஏமாத்தி சென்றுக்கொண்டிருந்தான் ஆதி. அவனது அலைபேசி விடாமல் பேன்ட்டுக்குள் கத்திக்கொண்டிருந்தது.

 

‘ஒருவேளை சாரா இருக்குமோ?’ என்ற எண்ணத்துடன், தொடுதிரையை பார்க்காது அழைப்பை இயக்கி ஹெல்மெட்டுக்குள் திணித்து, “ஹலோ?” என்றான் ஆதி.

 

“ஆதி கண்ணாஆஆஆ….!!! ஹவ் ஓல்ட் ஆர் யூ?” என சிரித்தார் தெய்வானை.

 

“ம்ம்ம்? அறுவது முடிஞ்சு எண்பது ஆரம்பிக்குது” என கடுப்பாய் சொன்ன ஆதி, “எப்போ கால் பண்ணா, எப்போ திருப்பி கூப்புடுறமா நீ?” என்று கேட்க,

 

“அம்மா ஒரே பிசிடா! நேத்து நைட் ஒரு ஹவுஸ் பார்ட்டிக்கு போயிருந்தோம் நானும் மதுவும்… அதான் உன் கால் அட்டென்ட் பண்ணல” என சொல்ல,

 

“எதே, ஹவுஸ் பார்ட்டியா?” என வாயை பிளந்தான் ஆதி.

 

“ரொம்ப ஷாக் ஆவாத! நம்ம மினி ஆன்ட்டி வீட்டுக்கு தான் போனோம்! ‘பிரியாணி பார்ட்டி!’ செம்மையா சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் டேன்ஸ் ஆடிட்டு விடிய காலைல தான் வீட்டுக்கு வந்தோம்…” என அசால்ட்டாய் சொல்ல,

 

“ஏம்மா, ஹவுஸ் பார்ட்டி போற வயசா உனக்கு? உன்னையே பாட்டின்னு கூப்பிட பேரன் வந்தாச்சு!” கிருஷ்ணாவின் மகனை மனதில் வைத்து ஆதி சொன்னதும், “ஷட் அப் ஆதி! அவனே என்னை ‘திவா திவா’ன்னு ஸ்டைலா கூப்பிட்டுட்டு இருக்கான்! நீ தேவையில்லாம பேசாம எதுக்கு கூப்பிட்டன்னு சொல்லு!” என்றார் தெய்வா கறாராக.       

 

“அதானே! நீ எங்க போறன்னு பாக்க வேண்டியது உன் புருஷன் வேலை! எனக்கென்ன கவலை?” என ஆதி அசட்டையாய் தோள் குலுக்கும்போதே, “அந்த இம்சை வீட்ல இல்லாததால தானே நாங்க ஜாலியா இருக்கோம்” என போனிலேயே கொக்கரித்து சிரித்தார் தெய்வானை.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அப்பா இல்லியா? எங்கம்மா?”

 

“அந்த வீணா போனா கேஸை கட்டிக்கிட்டு இன்னும் சுத்துறாருடா!  சென்னை தான் போயிருக்காரு…” என்றதும், ஏனோ ஆதிக்கு மனம் நெருடியது.

 

“எப்பவும் கேஸ் ஹியரிங் வந்தா போக மாட்டாரு தானேம்மா?”

 

“போக மாட்டாருதான்!!! ஆனா, நம்ம கம்பெனி பிராஞ்ச் ஒன்னு சென்னைல ஆரம்பிக்கனும்ன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாருல? அதுக்கு நல்ல இடம் ஒன்னு வந்துருக்கு! அதை பேசி முடிக்கணும்ன்னு சொன்னாரு! எப்டியும் ஒரு பத்து நாள் இருப்பாரு அங்க” என்ற தெய்வா,

 

“அதுவரைக்கும் நம்ம கம்பெனியை நாந்தான் பார்த்துக்கப்போறேன்… ஹிஹி” என்றார் பெருமையாய்.  

 

தந்தையிடம் திருமண விஷயத்தை ஆரம்பிக்கலாம் என்றெண்ணி தாய் வழி தந்தைக்கு சேதி பரிமாற, நேற்று முதல் முயன்றுகொண்டிருந்தான் ஆதி.

 

தந்தை இப்போது ஊரில் இல்லை என்றதும், தாயிடமும் ஒன்றும் சொல்லாது அழைப்பை வைத்துவிட்டான்.

 

நீதிமன்ற வளாகத்திற்குள் ஆதி நுழைய, பெரிதாய் அவன் தேடுவதற்கு அவகாசம் கொடுக்காது ராஜகோபாலே அவனை தேடி வந்தார்.

 

“வந்துட்டியா ஆதி… வா வா” என்ற ராஜகோபாலிடம் அந்த கோப்பை கொடுத்தவன், “சரியான்னு பார்த்துக்கோங்க சார்” என்றான்.

 

“இது தான் ஆதி” என தலையசைத்தார் ராஜகோபால்.

 

“நேரமாச்சுன்னு சொன்னீங்களே? இன்னும் கேஸ் ஆரம்பிக்கலையா?”

 

ராஜகோபால், “நம்ம வர லேட் ஆகும்ன்னு நமக்கு முன்னாடி வேற கேஸை அனுப்பிருக்காங்க! அது இப்போ முடிஞ்சுடும்! அடுத்து நம்ம தான்!!!”

 

“என்ன கேஸ் இது?” என ‘கேட்கலாமா? வேண்டாமா?’ என பெருந்தயக்கமாய் திணறிக்கொண்டிருந்தான் ஆதி.

 

அவனை அதற்குமேல் திணற விடாமல், “இந்த கேஸ் எனக்கு சாதகமாய் முடியனும் ஆதி! என் பலவருஷ வைராக்கியம் இது” என்றார் ராஜகோபால்.

 

“என்ன கேஸ் சார் இது?”

 

“ம்ம்ம்? எங்க பூர்வீக நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு! பல வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு… அவன் வந்தா நான் வர மாட்டேன், நான் வந்தா அவன் வர மாட்டான்… ரெண்டு பேரும் வந்தா தீர்ப்பு வராது…. இப்படியே இத்தனை வருஷம் ஓடிடுச்சு”

 

ஆதி குழப்பமாய், “அந்த ‘அவன்’… ‘எவன்’ சார்?” என்று கேட்க, சுற்றிலும் பார்த்த ராஜகோபால், ஓரிடத்தை காட்டி, “அதோ அங்க நிக்குறானே… அவன்தான்” என்றார். தன் வக்கீலுடன் மும்முரமாய் பேசிக்கொண்டிருந்தார் அவர்.

 

அவர் காட்டிய திக்கில் எட்டிப்பார்த்த ஆதிக்கு, மூச்சு அப்படியே தேங்கிப்போனது. கண்கள் புருவம் வரை விரிந்துப்போனது. தலைக்கு மேல் இரண்டு இடிசத்தம் கணப்பொழுதில் எடிட்டிங்கில் வர, “டேய் தகப்பா….?????” என அதிர்ந்து போய் நின்றான் அயல்நாட்டு அதிபரை பார்த்து.

 

[the_ad id=”6605″]

 

 

 

கண்ணில் பட்ட ஜெயதேவை வெறுப்புடன் பார்த்துக்கொண்டு, “நம்பிக்கை துரோகி! நண்பனா இருந்து என் கழுத்தருத்தவன்!!! வாழ்க்கைல எந்த ஒரு சூழ்நிலைலயும் அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்” என துவேச வசனத்தை ஆவேசமாய் பேசிக்கொண்டிருந்தார் ராஜகோபால்.    

 

ஸ்லோ மோஷனில் ஜெயதேவையும் ராஜகோபாலையும் மாற்றி மாற்றி பார்த்த ஆதி,

“நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?” என உள்ளுக்குள் அழுதுக்கொண்டே கோகுலுக்கு அழைக்க, அவனோ ஆதிக்கு மேல் அதிர்ந்துப்போய்,

 

“டேய், இன்னும் உன் ப்ளாஷ்பேக்கே முடியலை! அதுக்குள்ள உங்க அப்பாக்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்கா? ஐயோ! சுகர் பேஷன்ட்ரா நானு!!!” என ஆபீசிலேயே மயங்கி சரிந்தான்.

 

-கலாட்டா தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!