Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval 7

 

கந்தனுக்கு வள்ளிய போல கன்னனுக்கு ராதைய போல

ஆசைகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியிலே

 



Advertisement

கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க

யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை

 

Advertisement

ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெல்லாடு
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு

ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு

Advertisement

 

வைஷுவுடன் சென்றவன்…. ஊர் சுற்றி விட்டு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான்….. 

 

Advertisement

வேடிக்கை பார்த்தபடியே வைஷு வண்டியிலேயே தூங்கி விட… தூங்கிய அவளை தன் தோல் மேல் போட்ட படி வந்தான்….. 

 

அவனின் கம்பீராத்திற்கும், உயரத்திற்கும் தூங்கும் வைஷுவுடன் அவன் வீட்டின் உள்ளே நுழைய…. அவன் மேலும் ஆயிரம் முறை அழகாக தெரிந்தான் செல்லம்மாள் கண்களுக்கு…. 

 

சமையல் அறையை விட்டு வெளியே வந்தவர் தன் மகனை ரசித்து நின்று கொண்டு இருந்தார்… 

 

“இப்டி ஒளிஞ்சி நின்னு பாக்குறத விட அவனை மன்னிச்சு உங்க கோவத்தை விட்டுடலாம் இல்லை அண்ணி” அவர் பின்னால் இருந்த ஜானகி கேட்க 

 

“தாய் பாசம் இருந்தாலும்…. அந்த பாசத்தை தவிக்க விட்டவன் தானே அவன்” அதனால் அவ்வளவு சீக்கிரம் மனம் இறங்க மறுத்தது அவருக்கு… 

 

ஆனால் வைஷு மட்டும் அவரின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டு இருந்தாள்… 

 

மாடி ஏறி தன் அறை புகுந்தவன்….. அங்கு அறையில் இனியவள் இல்லாமல் போக… பார்வையை சுழற்றியவன், கண்ணில் பட்டால் இன்னியவள்… 

 

கட்டிலுக்கு சிறிது தள்ளி… பாய் ஒன்று விரித்து இருக்க… அதான் பக்கத்தில் எதோ பழைய புடவைகளை வைத்து சிறிய மெத்தை போல் அமைத்திருந்தாள்…. 

 

அதை பார்த்தவனுக்கு அனைத்தும் புரிந்து போக… குழந்தையுடன் நின்றவனை பார்த்தவள்…. எழுந்து சென்று வைஷுவை அவனிடம் இருந்து வாங்கியவள்…. 

 

அவளை தான் அமைத்து வைத்து இருந்த அந்த சேலை படுக்கையில் படுக்க வைத்தவள்…. அவளை சுற்றி தலைஅணையை பாதுகாப்பாக வைத்து அன்பிடம் எதுவும் பேசாமல் கீழே சென்று விட்டாள்… 

 

வந்தவள் முற்றத்தில் அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டு இருந்த இலக்கியனையும் விக்கியையும் கண்டவள்….நேரே சமையல் அறைக்குள் நுழைந்து விட்டால்…. 

 

அதை கண்டு கொண்ட இலக்கியன்…. அவள் பின்னே அவனும் சென்றான்… 

 

சமையல் அறையில் ஜானகி, செல்லம்மாள், ஜெயந்தி மூவரும் வேலை செய்து கொண்டு இருக்க… 

 

உள்ளே நுழைந்தவளை ஜானகி அன்புடன் வரவேர்த்தார்…. 

 

“நான் எதாவது வேலை செய்யட்டுமா” செல்லம்மாள் திட்டி விடுவாளோ என்று பயந்து பயந்து அவள் கேட்க 

 

அதுவோ அவ்வழி வந்த சகுந்தலா காதில் விழுந்து விட… எதையும் எளிதில் விடாதவர்… இதை மட்டும் விட்டா வைப்பார்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

“வீட்டு பையன மடக்கி போட்டுட்டா என்ன எங்க எல்லாரையும் அதிகாரம் பண்ணி ராணி மாதிரி இருக்கலாம்னு நெனச்சுக்கிட்டு வந்தியா….. சொன்னா தான் வேலை செய்வியா… இனி இங்க தானே சாப்பிட போற… அதுக்கு ஏத்த மாதிரி வேலையும் செய்ய கத்துக்கோ ” என்றார் அவளை சிறிதும் பேச விடாமல்… 

 

அங்கு இருந்த அனைவர்க்குமே இது முகம் சுளிக்கும் செயல் போல் இருக்க… சந்தகுந்தலாவை எதிர்த்து யாரும் பேச வில்லை… இலக்கியன் மட்டும் 

 

“அத்தை எதுக்கு கோவ படுறீங்க? அவுங்க வேலை செய்யணும் அவ்வளவு தானே… நீங்க செஞ்சிகிட்டு இருக்க வேலைல அண்ணியையும் சேர்த்துக்கோங்க… உங்க மேற் பார்வையில் வெச்சி வேலை வாங்கிக்கோங்க” என்றான் மிக இயல்பாக 

 

அதில் சிடுசிடுத்தவள்… அமைதியாக அவ்விடம் விட்டு சென்றே விட்டார்…. 

 

“இலக்கியா… அது எப்படி உங்க அத்தையோட வாயையே மூட வெச்சிட்ட…அமைதியா போறாங்க… சாரா பாம்பு படம் எடுக்கும்னு பார்த்தா… பம்பிகிட்டு போகுது… எப்படி” ஜெயந்தி தன் சந்தேகத்தை கேட்க… அதை அம்மோதிக்கும் விதமாய் பதிலுக்கு காத்திருந்தாள் இன்னியவள்…. 

 

“பாம்போட வேலையை தர சொன்னேன்ல… பாம்பு படம் எடுக்கறத தவிர வேற என்ன வேலை செய்யுது…. நான் கேட்டது… நீ மொதல்ல ஒழுங்கா வேலை செய்… அப்றம் அண்ணியை சொல்லலாம்ன்ற மாதிரி சொன்னேன்…. அதை புரிஞ்சிகிட்டு தான் பாம்பு பாம்புது ” என்று முடித்தான் 

 

இனியவள் மட்டும் எதோ போல் முகத்தை வைத்திருக்க… என்ன என இலக்கியன் கேட்க 

 

“என்ன இருந்தாலும் பெரியவங்க… அவுங்கள பாம்பனு எல்லாம் சொல்ல கூடாது தம்பி” என்றால் அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு 

 

[the_ad id=”6605″]

 

 

 

அதை கேட்ட இலக்கியனோ…. இரு கைகளையும் கூப்பி. தலைக்கு மேல் கொண்டு சென்றவன்…. 

 

“செல்லம்மாள் பார்ட2வா… வீடு தாங்காது சாமி… ஏற்கனவே இந்த வீட்டு ஜந்துக்களை  சமாளிக்க முடியாமல் தவிக்குறோம்… இதுல நீங்களும் நியாயம் தர்மம்னு தூக்கிட்டு வராதீங்க அண்ணி ” என்றான் 

 

தன்னை தவறாக பேசினாலும்.. வயதை மதிக்கும் அவளின் பண்பு செல்லம்மாவை ஈர்க்க தான் செய்தது… 

 

செல்லம்மாள் எதோ செய்கை காட்ட… புரிந்து கொண்ட ஜானகி… வீட்டினர் அனைவரையும் முற்றத்தில் அழைத்தவர்…. பூஜை அறைக்கு விரைந்தாள்…. 

 

என்ன என புரியாமல் விழித்த அனைவருக்கும் பதிலாய் கையில் தாம்பூல தட்டுடன் வந்தர் ஜானகி 

 

அதை செல்லம்மாள் கையில் வலுக்கட்டாயமாக திணித்தவர்… ஒதுங்கி கொள்ள 

 

வேறு வழி இல்லாமல்… இனியவள் முன் வந்தவர்… அவள் கையில் தட்டை கொடுத்தவர்… 

 

“இது எங்க வீட்டு பூர்வீக நகை… வீட்டுக்கு வர மருமகளுக்கு வழி வழியா தரது….. எனக்கு அடுத்து இது உன்னோடது… உனக்கு பிடிச்சா போட்டுக்கோ… இல்லை இதை மாத்தணும்னாலும் உன் இஷ்டம் தான்… அன்பு கிட்ட சொன்னால் அவன் நகை கடைக்கு கூட்டிட்டு போவான்” எங்கோ பார்த்த படி கூறி முடித்தார் 

 

இல்லை நான் இதையே வைத்து கொள்கிறேன் என்றவள்… அன்பை திரும்பி பார்க்க… முதலில் புரியாமல் முழுத்தவன்… பின் அவள் அருகில் வந்து நிற்க… 

 

இருவரும் தாய் தந்தை காலில் விழுந்தனர்…. 

 

தன் மகளுக்கு சேர வேண்டிய அனைத்தும் யாருக்கோ செல்வதை பார்க்க முடியாமல் கொதித்து கொண்டு இருந்த சகுந்தலாவை கண்ட இலக்கியன்…. 

 

“பா பாருங்க… எதோ பயங்கரமா தீயுற மாதிரி தெரியுது… என்னனு பாருங்க பா ” என்றவன் விக்கியை மாறிவிடும் நோக்கில் 

 

“டேய் விக்கி…… தீ எல்லாம் பிடிச்சா என்னடா பண்ணுறது “என்றான் விளங்கமாய் 

 

இவனின் உள்குத்து புரியாதவன்…. பையர் சர்வீஸ்க்கு கூப்பிடனும்டா… என்றான் வெள்ளந்தியாக… 

 

அப்போ கூப்டுடா… இங்க நெறைய பேருக்கு தேவை படும் என்று சகுந்தலாவை ஜாடை காட்டி விட்டு அங்கு இருந்து நழுவி கோ டான் அவன்… 

 

அவனின் வில்லங்கம் புரிய வர… தன் தாயும் தங்கையும் தன்னை முறைப்பதை பார்த்தவன்… 

 

அட பாவி… உன்ன நம்பி பேசுனா… நீ என்னை மாட்டி விட பார்த்து இருக்கியேடா என்ற படி அவன் பின்னாலேயே அவனையும் ஓடி விட்டான்…. 

 

இவர்கள் கூத்தில் கொஞ்சம் மனம் இளகினாள் இன்னியவள்… 

 

இரவு உணவை முடித்து தன் அறை சென்றாள் இன்னியவள்… அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னரே சாப்பிட வேண்டும் என்று முடிவோடு தான் இருந்தாள்… 

 

பெருமாளும், ஜெயந்தியும் சாப்பிடும் போது நீயும் சாப்பிடு… உனக்கும் அவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை என்று இதற்கும் குத்தியே பேசினார் சகுந்தலா… 

 

ஆனால் அதை எதையும் பெரிதாக எடுத்து கொள்ளும் அளவுக்கு அவள் மனம் இல்லை… 

 

சொல்ல போனால்… அவர் கூறியதில் தவறு என்ன இருக்கிறது… பாதுகாப்பிற்காக பதுங்கி இருக்கும் இடம் தானே இது…. அதுவும் வைஷு குட்டிகாக… அவளையும் தன் தோழியிடம் ஒப்படைத்து விட்டால் தன் வாழ வேண்டிய தேவையும் இருக்காது…. என்பதே அவளின் மன ஓட்டமாக இருந்தது… 

 

மறுபுறமோ…. செல்லம்மாள் மனதில் இவளின் பொறுத்து போகும் குணம் மிகவும் பிடித்து… அவளின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தாள்… 

 

அன்பிற்கோ…. தன்னுடைய சுயநலனிற்காக யாரோ ஒரு பெண்ணை தும்புருத்துவது அவன் மனதை உறுதி கொண்டே தான் இருந்தது… அதுவும் அவனே அவளை காலையில் அலட்சியமாக பேசியது…. அவனின் அத்தை அவளை வறுத்தெடுப்பது… என அனைத்தும் அவனின் நிம்மதியை கெடுத்தது… 

 

அதுவும் சாகும் அளவிற்கு மன துன்பத்தில் இருந்திருக்கிறாள் என்றாள்…. தன்னை விட வாழ்வில் மிகவும் துயரத்தை சந்தித்து இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது… 

 

இரவு கீழே விரித்த படுக்கையில் படுக்க போனவளை மேலே குழந்தையுடன் மெத்தையில் படுத்து கொள்ளும் படி அன்பு சொல்ல… 

 

அவளோ விரக்தி சிரிப்புடன் “என் பாதுகாப்புக்காக நான் இங்க ஒளிஞ்சி இருக்கேன்… எனக்கு போறதுக்கு இடம் இல்லை….. பேசுவத்துக்கு உரிமை இல்லை… அப்டி பட்ட நான் உங்கள் மெத்தையை பயன் படுத்த என்ன தகுதி இருக்க முடியும்” காலையில் அவன் கூறிய அதே நக்கலான சுதியில் முடித்தாள்…. 

 

அவள் பேசியதை கேட்ட அவனுக்கு பல்லை கடித்து கொண்டு கோவம் வர…. தலையணையுடன் சோபாவில் சென்று படுத்து கொண்டான்…. 

 

படுத்தவனுக்கு துக்கம் சிறிதும் வரவில்லை.. முதலில் கோவம் வந்தாலும்… பின் தெளிந்த மனதாய் யோசித்தவனுக்கு… அவள் கூறுவதில் தவறு இல்லையே… 

 

உனக்கு இது தேவை தான் அன்பு….. ஒன்னும் அறியாத பொண்ணை இப்டி கஷ்ட படுத்துற உனக்கு இதுக்கு மேலயும் தண்டனை கிடைக்கணும்…. மனசாட்சி ஒரு புறம் கடிந்து கொண்டு இருந்தது…. 

 

இவை அனைத்திலும் அன்பை வாட்டியது ஒரே கேள்விதான்…. அவள் மெத்தைமேல் படுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன…. நான் ஏன் சோபாவில் படுக்க வேண்டும்… நான் மெத்தையிலேயே படுத்து இருக்கலாமே…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

மீராவோடு இருந்த போது கூட….. தரையிலோ… வேறு எங்கோ அவனுக்கு படுத்து பழக்கம் இல்லை… மெத்தை இல்லாமல் அவனால் உறக்கம் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது…. அப்டி பட்ட நான் இன்று சோபாவிலா என்று நினைக்கும் போது அவனுக்கே அவனின் செயல் புதிதாக இருந்தது…. அதே குழப்பத்தில் கண் தூங்கியும் போனான்….. 

 

பாதி இரவில்…. எங்கோ எதோ யாரோ தன்னை அழைப்பது போலும்… தேடுவது போலும் அவனுக்கு தோன்ற கனவில் எதோ இருக்கிறோம் என்று நினைத்தவன் 

 

சிறிது நேரத்தில் விசும்பல் சத்தம் கேட்க… கண்ணை திறந்து பார்த்தவனுக்கு… அது எதோ அவனுக்கு மிக அருகில் இருப்பது போல் தோன்ற….

 

அறையை அறைந்தவன்…. அங்கு இனியவள் இல்லாமல் போக… அவளை அறையில் தேடியவன்…. பலகணி பக்கம் சென்று பார்க்க… 

 

கால்கள் இரண்டையும் சுருக்கி கொண்டு… தன் முகத்தை அதில் புதைத்து…. அழுது கொண்டு இருந்தாள்….. 

 

                   மாயம் தொடரும்……. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!