Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி 🌹5

 விஷ்ணு நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. உனக்குள்ள இருக்கும் காதலை கண்டுபிடித்து உன்னை காதலிக்க வைக்க எவ்வளவு பாடுபட்டுச்சு அந்த பொண்ணு! அந்த பொண்ணுகிட்ட போய் கடுகடு சிடுன்னு… சுரேந்தர் மெய்யாய் வருத்தம் கொண்டான்.

 அடிங்க….எருமை, நான் அவ பின்னாடி நாக்கை தொங்க போட்டு அலைந்தேனா?கையில் இருக்கும் பேட்மிட்டன் ராக்கெட் தூக்கி குறி பார்த்து அவன் மீது வீசினான்.

 தலை சாய்த்து எஸ்கேப் ஆனவன் “ போடா நீ எல்லாம் காலம் முழுக்க முரட்டு சிங்கிளா இருந்திருக்க வேண்டியவன் “ முகத்தை துடைத்துக்கொண்டு ஓடியே போனான் சுரேந்தர்.

“—————–”



Advertisement

 நேத்ரா நூறுமுறை ம்கூம் ஆயிரம் முறை தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள் இது சரியா வருமா?

 ஏன் வராது? அவள் மனசாட்சி குட்டையை குழப்பியது.

அவனுடன் பேசாமல் ஒரே ஒரு வாரம் கூட உன்னால் இருக்க முடியவில்லையே நீ எப்படி அவன் இல்லாமல் வாழ்ந்து விடுவாய்,? கேவலமாய் கேட்டது.

Advertisement

உண்மைதான்… விஷ்ணுவை ஏன் இவ்வளவு வெறித்தனமாக பிடித்தது என்று அவளுக்கே தெரியவில்லை. அதிகம் நேரில் பார்த்துக் கொள்வதில்லை, வெளி இடங்களில் காதல் பித்து கொண்டு கரம் கோர்த்து ஒட்டி உரசி சுற்றியதில்லை ஆனால் அவள் மனதில் எப்படி இவ்வளவு தூரம் வேரூன்றினான் என்பது அவளுக்கு மட்டுமல்ல அவனுக்குமே புரியாத புதிர் தான்!

Advertisement

 கோபித்துக் கொண்டவனை அவ்வளவு எளிதில் சமாதானம் செய்ய இயலவில்லை.அவள் செல்பேசியில் அழைத்தால் அவள் அழைப்பை ஏற்பதில்லை, அவனது நண்பர்கள் மூலம் தூது விட்டால் மானாவரியாக திட்டி அனுப்பினான்.

“————-”

 தினமும் கோர்ட்டுக்கு போய்விட்டு பண்ருட்டி வடலூர் சாலையில் தான் கரைமேடு செல்வான்.அவன் ஊர் தான் கரைமேடு. வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள கிராமம்.

Advertisement

வடக்குத்து சாலையில் உள்ள பச்சைவாழி அம்மனை தரிசித்து விட்டு முந்திரிகள் அடர்ந்த கீழக்கொல்லை சாலை அருகில் ஒரு முடிவோடு காத்திருந்தாள்.

 சற்று தொலைவில் வெள்ளை நிற வெர்டிகா காரை பார்த்த உடனே எதிரில் போய் நின்றாள்.

 கிரீச் என்று பிரேக் அடித்து காரை நிறுத்தினான்.

 கார் கதவை திறந்து முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 இது என்ன பழக்கம்? அசிங்கமா ரோட்ல காரை நிறுத்திட்டு… பல்லை கடித்தான்.

இதில் அல்ல சிங்கம்? சீட்டில் ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 லூசாடி நீ?கண்கள் சிவப்பேற காரை முடுக்கினான்.

ஆமாம் லூசு தான்! ஹிட்லர், இடிஅமீன், முசோலினி எல்லாம் சேர்ந்த சர்வாதிகாரி நீங்கள் என்று தெரிந்தும் இந்த வெட்கம் கெட்ட மனசு உங்களை தேடுதே… அவள் கண்ணில் கண்ணீரோடு காதலும் வழிந்தது.

 யூ டர்ன் அடித்து காரை இந்திரா நகர் ஆர்ச் கேட் வழியாக டவுன்ஷிப் செல்லும் வழியில் வில்லுடையான் பட்டு கோயிலுக்கு செல்லும் கிளைப்பாதையில் நிறுத்தினான்.

 மாலை மங்கும் நேரம் என்பதால் அவ்வழியில் நடமாட்டம் குறைவு!

 காரை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பியவன்,என்ன காரை நிறுத்தி கலாட்டா பண்ற? கோபம் போல் விரைப்பாய் கேட்டவனின் மனதிற்குள் காஷ்மீரத்து குளிர்ச்சி.

 சும்மாதான்… உங்களை பார்த்து இரண்டு வாரம் ஆச்சு! மெசேஜ் பண்ணினால் ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க, கால் பண்ணினா அட்டென்ட் பண்ண மாட்டேங்கறீங்க… தழும்பும் விழி நீர் மறைத்து தலை கவிழ்ந்தாள்.

 அதுக்கு?வேண்டுமென்றே சீண்டினான்.

ம்கூம் என்று உதட்டை பிதுக்கி ஒன்றுமில்லை என்பதை போல் தலையாட்டினாள்.

 என்னை பார்க்க உனக்கு என்ன அவசியம்?குத்தல் போல் கேட்டான்.

 என் புருஷனை பார்க்க காரண காரியம் வேணுமா? சுளீர் என்று கேட்டாள்.

 புருஷனா? விழி விரித்தான்.

 உங்க கையால் தாலி கட்டிக்கிட்டா தான் பொண்டாட்டியா? எப்போ உங்ககிட்ட என் லவ்வை சொல்லி உங்களை கவிழ்த்தேனோ அப்போவே நீங்க என் புருஷனாகிட்டீங்க!

கூச்சம் இல்லாதது போல் காட்டிக்கொண்டு அவன் சொன்னதை அவனுக்கு திருப்பி சொல்லி விட்டாள்.

அப்போ… நீ என் பொண்டாட்டிங்கிற…?

உள்ளர்த்தம் கொண்ட விழிகளால் அவள் செப்பு மேனியை வருடினான்

அவன் நக்கலை புரிந்தவள் சட்டென்று அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

என்னங்கடி நடக்குது? பே… என்று பார்த்தான்…

அவள் நாணமுற்று குங்குமமாய் சிவந்து போனாள்.

 நம்ப இயலாது அவளை பார்த்தான்.அவளது நாண சிவப்பு அவனை மிகவும் இம்சித்தது.

 அவளை மூச்சு முட்ட அணைத்து முகம் முழுவதும் முத்தமிடும் அவா மேலோங்கியது.

விஷ்ணு இது ரொம்ப தப்பு! ஏன்டா தப்பு தப்பா யோசிக்கிற? நீயும் இரண்டு பெண்களோடு பிறந்தவன் என்று கடுமையாக மூளை எச்சரித்தது.

 உணர்ச்சிக்கு அணை போடவே காரை வேகமாக கிளப்பினான்.

 இப்போ எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க?

 டைம் ஆகுது.. ஈவினிங் ஒரு கிளையன்ட் வர சொல்லி இருக்கேன்.

 அப்படியா? சிரித்துக்கொண்டே ரியர் வியூ மிரரை வளைத்து தன் புறம் திருப்பி முகம் பார்த்தாள்.

 அவள் செய்கை புரியாமல் அவன் விழிக்க… நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்? கொஞ்சலாக கேட்டு கண் சிமிட்டினாள்.

 இவ இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கா போல…! அய்யோ கண்ட்ரோல் மிஸ் ஆகுதே…தலையில் அடித்துக் கொள்ள தோன்றியது.

தன் பலகீனத்தை மறைக்க அவன் வலுவாய் முறைத்து வைத்தான்.

 பாரேன் வேதவள்ளி பெத்த பொண்ணு அழகாத்தான் இருக்கு போல… இந்த விசுவாமித்திரருக்கு என்னை பார்த்து பயம் வந்துடுச்சு! மீண்டும் ஒற்றை கண் சிமிட்டி சிரித்தாள்.

 அடிங்க…. அடங்க மாட்ட போலிருக்கே? ஒரு கை ஸ்டியரிங் பிடிக்க மறுக்கையால் அவள் குர்த்தாவின் காலரை பற்றி இழுத்து தன் தோள் மீது சாய்த்து கொண்டான்.

 விசுவாமித்திரருக்கு இந்த மேனகை மேல் மோகம் வந்துடுச்சு! இப்போ என்ன பண்ணலாம்? இங்கேயே பர்ஸ்ட் நைட் முடிச்சுடுவோமா? சீரியஸாய் கேட்டான்.

 எது ஃபர்ஸ்ட் நைட்டா? இதுவரை துணையாய் நின்ற தைரியம் சமயம் பார்த்து காலை வார…நடுங்கி போனாள். அவள் முகத்தில் துளிர்த்த வியர்வை அவள் பயத்தை வெட்ட வெளிச்சமாய் காட்டியது.

 நீ…நீங்க ஏன் இப்படி பேசுறீங்க?நீங்க ரொம்ப நல்ல மாதிரி தானே… உலர்ந்து போன நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

 அவள் தலையில் முட்டி அவள் செய்தது போலவே கண்ணடித்து சிரித்தான்.

 அவளுக்கு லேசாய் உதற தொடங்கியது.

 என்ன செல்லம் உனக்கு ஓகே தானே? அவள் போனிடெயிலில் சிக்காத முடிகள் கற்றையாய் அலை பாய்ந்து நெற்றியை மூடிநின்றது. அதை அழகாய் விலக்கி விட்டு அவள் முகம் நோக்கினான்.

 எ…எனக்கு ஹிந்தி கிளாஸ் இருக்கு! சீக்கிரமா வீட்டுக்கு போகணும் ப்ளீஸ்….வாட்சைப் பார்த்தாள்.

  கேடி…எப்படி சமாளிக்கிறா பாரு! குபீர் என்று பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

 கீழக்கொலையில் அவளை இறக்கிவிட காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.

 என்னவோ ஃபர்ஸ்ட் நைட் அப்படி இப்படின்னு உளறின மாதிரி இருந்துச்சு…வேப்பிலை அடிப்போமா…? கித்தாய்பாய் கேட்டாள்.

 ஓ….மெயின் ரோட்டுக்கு வந்துட்டோம் என்ற தெம்பு போல…? மேலும் கீழுமாய் அவளை பரிகாசமாய் பார்த்தான்.

 என்ன மேன் லுக்கு? ஒற்றை ஆட்காட்டி விரலால் அவன் முக வடிவை அளந்தவள் தயக்கம் உதறி சட்டென்று அவன் நெற்றியில் முத்தம் பதித்து தடால் என்று கார் கதவை திறந்து குதித்தாள்.

 ஏய்…பார்த்து! சரியான வாலு பொண்ணு…

 மிஸ்டர் விசுவாமித்ரா நீங்க அதுக்கெல்லாம் சரி படமாட்டிங்க! பை என்றவள் சிரித்துக்கொண்டே வ்வவ்வவ்வ என்று பழிப்பு காட்டி விட்டு ஓடினாள்.

 காதல் முக்கால்,காமம் கால் என்று அழகிய பார்வையால் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்

 அவள் ஒன்றுக்கு ஒன்று இலவசமாய் கொடுத்த இரு முத்தம் அவனை கிறக்கம் கொள்ள செய்தது.

அவன் பார்வையில் புதிதாய் பிறந்தவள் மேனி விரைத்து செல்கள் சிலாகித்தது.அவன் கார் செல்லும் திக்கையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 என் விஷ்ணு என் உயிரில் உறைந்த என் விஷ்ணு! கர்வமாய் காதலாய் புல்லரித்து நின்றிருந்தாள்.

 நேத்ராம்மா நேத்ராமா கதவை தட்டும் மங்களம் குரலில் கடந்த கால நினைவுகள் அறுந்து நிகழ் உலகிற்கு வந்து சேர்ந்தாள்.

 அம்மா விஷ்ணு தம்பி உங்களுக்கு மதிய சாப்பாடு கொடுக்க சொல்லுச்சு! உணவு டிரேயை டீப்பா மீது வைத்தவர், அம்மா பெரியம்மா குழந்தையை தூக்கிட்டு வர சொன்னாங்க என்று பிரணவை தூக்கிக் கொண்டு போனார்.

 தன்னை எப்படி தாங்குகிறான்! என்ன தவம் செய்தேன் இவனுடன் காதல் கொள்ள, ஊடல் கொள்ள… பிரம்மித்து போனாள்.அவன் காதலிலும் அளவு கடந்த அக்கறையிலும் ஆளுமையிலும் புது புது பரிணாமத்தில் பரிமளிக்கிறது.

“————–”

 உணவு உண்டு விட்டு மொபைலில் சற்று நேரம் மூழ்கியவள் பிரணவ் அழுகுரல் கேட்டு குழந்தையை வாங்கி வந்தாள்.

குழந்தைக்கு பசியாற்றி அவனுடன் விளையாடி நேரத்தை கழிக்க…குழந்தை உறங்கிய பிறகு சற்று நேரம் டிவி பார்த்தாள்.

 சமஸ்தானத்தின் மகாராணி போல் கர்வமான நடையுடன் கெட்டி சரிகை கொண்ட பனாரஸ் பட்டு சரசரக்க உள்ளங்கை அகல வெள்ளி கொத்து சாவி கலகலக்க ஜோதி கூடத்திற்கு வந்தார்.

 அவர் முகம் காணவோ அவருடன் பேசவோ விருப்பம் இல்லாதவள் அமைதியாய் எழுந்து தனதறைக்கு போனாள்.

 எவ்வளவு திமிரு இவளுக்கு! என் கால் தூசுக்கு பெறாதவ…எல்லாம் என் மகன் கொடுக்கிற இடம்! பல்லை நர நரவென்று கடித்தார் ஜோதி. தான் ஆசைப்பட்ட சந்திரவதனி தனக்கு மருமகளாய் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?! அவரின் பெருமூச்சு சுடு மூச்சாய் மாறியது.

“———————”

 நேத்ரமா உங்களுக்கு ஏதோ பார்சல் வந்திருக்கு! மங்களம் வந்து தகவல் சொல்லிவிட்டு போனார்.

 நமக்கு பார்சலா? யாரு அனுப்பி இருப்பாங்க? என்னவா இருக்கும்?குழப்பத்துடன் கீழ் இறங்கி வந்தாள்.

 அமேசானில் இருந்து வந்திருப்பதாக கூறினார் டெலிவரி பாய்.

 என்னவா இருக்கும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது! பரபரப்பாய் பிரித்துப் பார்த்தாள்.

 அவள் நெடுநாள் தேதிய சித்ரா பானர்ஜியின் Arranged marriage, Sister of my heart என்ற இரு நாவலும் ஜெயந்தா மகாபத்ராவின் A father’s hours என்ற கவிதை தொகுப்பும் இருந்தது.

 ஹூ என்று உற்சாகமாய் கூவியபடி தனதறைக்கு தூக்கி கொண்டு ஓடினாள்.

 செல்பேசி சிணுங்கி அழைத்தது… யார் என்று தெரிந்தே எடுத்தாள்.

 ஹலோ நேத்து குட்டி சாப்டியா? உயிரைக் குழைத்து வார்த்தையில் நனைத்து மென் குரலில் கேட்டான் அவளை ஆளும் மணாளன்.

ம்ம்ம்ம்… நீங்க? ஒற்றைச் சொல்லில் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள்.

 மழை கன்ஃபார்ம் இன்னைக்கு! ரொம்ப நாளைக்கு அப்புறமா என்னை சாப்பிட்டியான்னு கேட்டிருக்க! வலியைச் சொன்னானோ வார்த்தைக்காக சொன்னானோ? அவளுக்கு சுரீர் என்று வலித்தது.

 தேங்க்ஸ் என்றாள் பேச்சை மாற்றும் விதமாக…

 தேங்க்ஸ்?…எதுக்கு?

அமேசான்ல புக்ஸ் ஆர்டர் போட்டு இருந்தீங்களா?

ஓ புக்ஸ் வந்துடுச்சா? அது தான் இந்த ஹேப்பினஸா? புக்ஸ் மேல இருக்கும் லவ் புருஷன் மேலும் இருந்தால் லைஃப் சிறப்பா இருக்கும்! அவனது காதலை செவி வழி மூளைக்கு கடத்திட துடித்தது அந்த வார்த்தை.

லவ் இல்லாம தான்…. சீற்றத்துடன் ஆரம்பித்தவள் சட்டென்று ஆஃப் ஆனாள்.

நேத்துக்குட்டி “கமான் சொல்ல வந்ததை சொல்லி முடி!”

 அவள் வாயை திறந்தால் தானே..?

 காதல் இல்லாம தான் பிள்ளை பெற்றேனான்னு கேட்க வந்தியா?

அவள் மறுமொழி உரைக்க தயாராக இல்லை.

 நேத்ரா, பிள்ளை பெற கொஞ்சம் காதலும்,மூர்க்கமான காமமும்,துளி விந்துவும் போதும்!

 காதல் கட்டிலோடும்,தொட்டிலோடும் முடிய கூடியதா? அவன் சினந்தான்.

 அவள் சொல்ல வந்ததும் அதை தான்! காதல் இல்லாமலா கூடி குலாவி குழந்தை பெற்றேன் என்று கேட்க வந்தாள்.

 நல்ல வேளை அவள் கேட்கவில்லை!

 அவளை எதிர் தரப்பு வக்கீல் போல் எண்ணிக் கொண்டு அவன் பாயிண்ட் பாயிண்டாக கிழித்துக் கொண்டிருக்கிறான்.

 குழந்தை எழுந்துட்டான்…தப்பி பிழைத்து போனை வைத்துவிட்டு கட்டிலில் விழுந்தாள்.

 அவள் காதல் அவன் உணராதது அல்லவே… அது இமயத்தை விட உயரம்! பசிபிக்க விட ஆழம்! நைலை விட நீளம்.

 அவள் காதலை திகட்ட திகட்ட கொட்டவோ அவன் அளவின்றி கொட்டும் காதலில் மூழ்கி திளைக்கவோ ஏதுவான சூழல்தான் இங்கு நிலவவில்லை.

 ச்சீ… என்னடா இது வாழ்க்கை!என்று புலம்பாத நாளில்லை.

 எல்லாம் இருக்கு பெட்டியில பருப்பு கடைய சட்டி இல்லன்னு ஒரு ப(கி)ழமொழி உண்டு!

நேத்ராவின் நிலையும் அது தான்.உயிரை கடத்தி உயிரை கொடுக்கும் காதல் கணவன்,நவரத்தினத்திலும் மேலான பொக்கிஷமான அழகிய குழந்தை,அள்ள அள்ள குறையாத செல்வம்.எல்லாம் இருக்கிறது! இருந்து என்ன செய்ய? ஏக்கமாய் சுருண்டு படுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!