Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 41 (இரண்டாம் பாகம்)

சிவா அர்ஜுனன் வீட்டிற்கு வந்து சென்று இரண்டு நாள் ஆகி இருந்தது… நிரவி கோவத்தில் இருந்ததால் அவனிடம் பேசவில்லை… அவன் பேச முயற்சி செய்தாலும் அதை தவிர்த்து பேசாமல் சென்று விட்டாள்… அவனுக்கு அது ஏம்மாற்றமாக இருந்தது… இருவரும் நேருக்கு நேர் நின்று பேசி நிறைய நாட்கள் ஆகி இருக்க இன்றும் பேச வாய்ப்பு அமைந்தும் அவள் பேசாமல் சென்றது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது…

அன்று அனைவருக்கும் விடுமுறை எனவே இளைய தலைமுறை மட்டும் தோப்பு வீட்டிற்கு சென்றனர்… அனைவரும் விளையாடி கொண்டு இருக்ரித்திகா மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள்… அதை சிவாவை தவிர்த்து யாரும் காணவில்லை… சசியும் ஒரு வேலையாய் தோப்பு வந்தவன் அங்கு தான் இருந்தான்… அவனும் கவனித்து தான் இருந்தான்… ரித்திகா வீட்டிலும் அமைதியாய் இருப்பதை… அர்ஜுனன் சுபா இருவரும் கவனித்து கேட்டும் எதுவுமில்லை என கூறி சமாளித்து இருந்தாள்…



Advertisement

சிவா யாரும் கவனிக்காதவாறு ரித்திகாவிடம் சென்றவன்இன்னும் அத நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கியாஅங்க ஒன்னுமே நடக்கல.. அவங்க அப்படி தான் அப்படினு நினைச்சிட்டு விட்ரனும்அவங்க எல்லாம் உன் ப்ரெண்ட்ஸே இல்லைஅது மட்டுமில்லாம அந்த பொண்ணுங்க அந்த பொறுக்கி கூட சேர்ந்து பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவவீட்டுலையும் இப்படி தான் இருக்கியா நீஎன கேட்டு கொண்டு இருக்கும் போதே சசி அங்கு வந்துவிட்டார்

சிவா ரித்திகாவுக்கு என்ன ஆச்சுஅவ ரெண்டு நாளா ஆளு சரியில்லஅண்ணாவும் சுபாவும் கேட்டு கூட சொல்லல.. நீ எதோ ஆறுதல் சொல்லிட்டு இருக்கஎன்ன நடந்ததுநீங்க பெரிய ஆளு ஆகிட்டா எங்க கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டிங்களாஎன கேட்டார்

Advertisement

மாமா நீங்க அந்த பக்கம் வாங்க நான் சொல்றேன்.. ரித்து நீ அங்க போய் அவங்க கூட விளையாடுஎன்று ரித்திகாவை அனுப்பி வைத்தவன் சசியை கட்டிலில் அமர வைத்து விட்டு இவனும் அவர் அருகில் அமர்ந்துமாமா ரெண்டு நாள் முன்னாடி நீங்க எல்லாம் ஒரு விசேஷத்துக்கு போய் இருந்திங்கஅன்னிக்கு நீங்க போனது எனக்கு தெரியாது.. அதனால உங்களை பாக்க வீட்டுக்கு வரலாம்னு வந்துட்டு இருந்தேன்கோவை ஒரு வேலையா போய் இருந்தேன் முடிச்சிட்டு வரலாம்னு வந்துட்டு இருந்தேன்அப்போ கோவை இருந்து நம்ம ஊருக்கு வரப்ப ரெண்டு மூனு பிள்ளைங்கரெண்டு பசங்க நின்னுட்டு இருந்தாங்கஅவங்களுக்கு நடுவுல ரித்திகா சேலை முந்தானையை உடம்புல சுத்திகிட்டு அழுதுட்டு நின்னுட்டு இருந்தாஒரே அழுகைநான் போனதும் மாமானு என் பின்னாடி வந்து நின்னுட்டா….”

Advertisement

நான் என்னனு கேட்டதும் எல்லாமே சொல்லிட்டாஅங்க அய்யனார்புரத்துல அந்த கடைசி மச்சு வீடு இருக்குல்ல அந்த பொண்ணுக்கு ரித்திகாவோட பயோலொஜிக்கல் அப்பா அம்மா அர்ஜுனன் மாமா சுபா அத்தை இல்லைனு தெரிஞ்சு இருக்குஅதை சொல்லி கிண்டல் பண்ணிட்டே இருக்கும் போலஅன்னிக்கு செலிப்ரேசன்னு சாரீ கட்டிட்டு போய் இருப்பா போல.. ரொம்ப நாளா ஒரு பையன் இவளுக்கு ப்ரொபோஸ் செய்ய ட்ரை பண்ணி இருப்பான் போலஆனா அந்த பொண்ணுக்கு அவனை பிடிச்சு இருக்கு போல அதுல காண்டான அந்த பொண்ணு ரித்திகாவை கெட்டவளா காட்டிக்க அவன்கிட்ட இங்க வெச்சு ப்ரொபோஸ் பண்ணாத… வெளிய ஒரு இடத்துல சப்ரைஸா பண்ணலாம்னு இன்னும் ரெண்டு மூனு பொண்ணையும் கூட்டிட்டு இவை கிட்ட வந்து நாம அவுட் பஸ்ல போகலாம்னு கூட்டிட்டு வந்து இருக்கு.. இவளும் நம்ம ஊரு தானே அப்படினு நம்பி அவ கூட பஸ் போய் இருக்கா…”

ஆனா அந்த பொண்ணு நடு வழியில இறக்கி விட்டு ரொம்ப மோசமா பேசி இருக்குஇவ அந்த பையனை பார்த்து அந்த பொண்ணு கிட்ட கேட்க அந்த பொண்ணு நீ என்ன யோக்கியமா நீயே அந்த வீட்டுல ஓசி தானு இருக்கஇவனுக்கு சரினு சொல்ல உனக்கு என்னபெரிய அழகினு நினைப்பாநீ போட்டு இருக்குறது எல்லாம் சுத்த தங்கமா என்ன.. அப்டினு சொல்லி இவ போட்டு இருந்த நகையை தொட வந்து இருக்குஅது மட்டும் இல்லாம அந்த பையன் தப்ப தொட வந்து இருக்கான்…”

அப்போ தான் நான் வந்தேன்.. அந்த பசங்க எல்லாம் என்னை பார்த்ததும் ஓடிட்டாங்க…. மேடம் செம அழுகைகஷ்டப்பட்டு சமாதானம் செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்வர வழில கூட அழுகை தான்கொஞ்சம் கோவமா பேசி அழுகையை நிறுத்தி தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்ஆனா இப்போ அது பிரச்சனை இல்லை …” என்று கூறி நிறுத்தினான் சிவா

Advertisement

யாரு டா அது.. நம்ம வீட்டு பொண்ணை இப்படி பண்ணதுஇது பிரச்சனை இல்லைனா வேற என்ன பிரச்சனைஆளு யாருனு சொல்லு ரெண்டு ஒன்னு பாக்கலாம்…” என்று கோவமாக கூறினார்

மாமா அமைதியா இருங்கஇதுக்கு தான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லலஉங்க கிட்ட சொன்னா கோவமா எதோ பண்ணுவீங்ககர்ணன் மாமா கிட்ட சொன்னா உடனே அர்ஜுனன் மாமா காதுக்கு போயிடும்.. நான் முகுந்தன் சித்தப்பா கிட்ட சொல்லி சித்தப்பாவை வெச்சு பேசிட்டேன்இனிமே எந்த பிரச்சனையும் வராதுஅதே மாதிரி அந்த பையனையும் மிரட்டியாச்சுஇப்போ பிரச்சனை அது இல்லைரித்திகாவை மாமா விவரம் தெரிஞ்ச பின்னாடி இங்க கூட்டிட்டு வந்தாங்க.. அதுனால அந்த பொண்ணுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மைஅருஜுனன் மாமா பாசமும் சுபி அத்தை பாசமும் தான் அவ அனாதை இல்லை இந்த வீட்டு பொண்ணு அப்படி மனசுல பதிஞ்சு இருக்குஇப்போ திரும்பியும் அனாதை அது இது அந்த பொண்ணு பேசுனது மனசை ரொம்ப பாதிச்சு இருக்குரெண்டு நாளா நான் பேசி பார்த்தேன்ஆனா அது இருந்து வெளிய வர முடியலஅது தான் மனசு கொஞ்சம் மாறட்டும்னு தோப்புக்கு கூட்டிட்டு வந்தேன்.. தனியா கூட்டிட்டு போக முடியாதுநீங்க தோப்பு இருப்பிங்க தெரியும் அது தான் உங்க கிட்டயும் சொல்லிடலாம்னு வந்தேன்என்று கூறி முடித்தான்

சரி வீட்டுல நான் பாத்துக்குறேன்நீ அன்னிக்கே சொல்லி இருந்தா ரித்திகாவை சமாதானம் செஞ்சு இருக்கலாம்அர்ஜுனன் அண்ணாவும் சுபாவும் ரித்திகா வீட்டுல ஏன் இப்படி இருக்கானு தெரியாம கவலையா இருந்தாங்கஎன்று கூறிவிட்டு எப்போ லீவு முடியுது உனக்குவாணன் மாமா கல்யாண பேச்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போலநீ ஏன்டா இப்போ வேண்டாம்னு சொல்ற…” என்று கேட்டார்….

மாமா ஒரு ரெண்டு மூனு வருஷம் போகட்டும்ப்ளீஸ் நீங்களாச்சும் அப்பா கிட்ட சொல்லுங்கஎனக்கு கல்யாணம் பண்ண தோணவே இல்லை..” என்று கெஞ்சலாக கூறினான்..

இன்னும் மூணு வருஷம்இன்னும் நிரவிக்கு பதினெட்டு வயசு ஆகலனு மூணு வருஷம் போகட்டும்னு சொல்றியா…” என்று கிண்டலாக கேட்டார்

சிவாவோமாமா அப்படி எல்லாம் இல்லை.. நிரவியை நான் அப்படி…” என்று அவன் கூறி கொண்டு இருக்கும் போதே நிரவி எதோ கோவமாக பேசி கொண்டு இருப்பதையும் ரித்திகா அழுதவாறு தலை குனிந்து இருப்பதை தான்….

வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினான்சசியும் அதை பார்த்து வேகமாக செல்லும் போது நிரவி அங்கு இருந்து கோவமாக செல்ல ரித்திகாவும் அந்த இடத்தை விட்டு ஓட பார்த்தாள்ஆனால் அதற்குள் சிவா அவளை பிடித்து நிறுத்தியவன் நிரவியை தடுக்காமல் அவளை தடுத்து கொண்டு இருந்த கார்த்திகாவை நோக்கிஎன்ன ஆச்சு கார்த்திஇங்க என்ன நடந்ததுனு மறைக்காம சொல்லு…” என்று கண்டிப்பாக கூறினான்

அதுஅண்ணாஅது வந்து..” என்று அவள் தயங்க சசியும்என்ன ஆச்சு கார்த்திகுட்டிமா ஏன் கோவமா பேசுனா…” என்று கேட்டார்..

மாமா அண்ணா இவங்க கிட்ட பேசிட்டு இருந்ததை பார்த்து கோவமா வந்தவஏன் எங்க வாழ்க்கை வந்தமுதல் அப்பா அம்மா என்கிட்ட பேசுறதை குறைச்சிகிட்டாங்கஅப்பறம் சிவா மாமா…. ஏன் அவங்க இத்தனை நாள் என்கிட்ட பேசலனு தெரியாம இருந்தேன்ரெண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சது அதுக்கு காரணம் நீ அப்படினுஏன் எனக்கு பிடிச்சவங்க எல்லாரையும் என்கிட்ட இருந்து பிரிக்குறபோ போய் உங்க அப்பா அம்மா இருக்குற இடத்துக்கே போஅப்படினு ரொம்ப கோவமா பேசிட்டா மாமாஎனக்கு ஒண்ணுமே புரியலஅவ நான் சொல்றதை கேட்குற நிலைமை இல்ல…” என்று வருத்தமாக கூறினாள்

அவள் கூறியதும் சசி நிரவியிடம் செல்ல சிவா ரித்திகாவிடம்அவ சொல்றானு தற்கொலை பண்ணிக்க போறியா நீகொஞ்சமாச்சும் உன் அப்பா அம்மாவை பத்தி நினைச்சு பார்த்தியாசொல்லு என்னை பார்த்து பதில் சொல்லுஎன உலுக்கினான்….

அவள் அமைதியாக நிற்கசொல்லு என்ன நடந்து இருந்தாலும் நீ தற்கொலை பண்ணி இருக்கலாமாதற்கொலை எதுக்கும் தீர்வு இல்லவீட்டுல தெரிஞ்சா துடிச்சு போயிட மாட்டாங்கஅவ தான் அறிவு இல்லாம பேசுறானா நீயும் பேசனும்எனக்கும் அவங்க அப்பா அம்மா தான் அப்படினுஅத விட்டுட்டு தற்கொலை பண்ண போறாளாம்….” என்று அவளிடம் கூறிவிட்டுகார்த்தி நிரவி எப்ப இருந்து மத்தவங்களை இப்படி எடுத்து எரிஞ்சு பேச ஆரம்பிச்சாஅவ இப்படி பேசுனா கண்டிக்க மாட்டியா நீநீயே சொல்லு இன்னிக்கு அவ பேசுனது சரியா…” என்று கேட்டான்

அண்ணா அது இவங்க வந்தது இருந்தே கொஞ்சம் இன்செக்யூரா பீல் பண்ணாஅத்தையும் மாமாவும் இவங்க கஷ்டப்பட கூடாதுனு அவளை கொஞ்சம் சரியா பாத்துக்க அப்படினு நினைக்குறா அதோட நீங்களும் அவளோட சரியா பேசுறது இல்லை.. போக போக பேசுறதே இல்லைஉங்க மேல தப்பு இல்ல ண்ணா உங்களுக்கும் வேலை அவளுக்கும் படிப்புரெண்டு நாள் முன்னாடி அவ உங்க ரெண்டு பேரையும் பார்த்து இருக்காநீங்க இவங்களை வண்டில கூட்டிட்டு வந்ததை பார்த்து இருக்கா ஆனா நீங்க இவங்களை பாக்காம தனியா வந்த மாதிரி சொன்னிங்களாம்அதே மாதிரி இன்னிக்கு அவ கூட பேசாம இவங்க கூட பேசுனது அவளுக்கு கோவம் வந்துருச்சுஅது மட்டும் இல்லாம நீங்க இவங்களை லவ் பண்றதா நினைச்சு இருக்கா…. இதனால தான் நான் சொல்ல சொல்ல கேட்காம இவங்களை வந்து பேசிட்டா….” என்று கூறினாள்

சிவா கார்த்திகா சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்டவன்எனக்கு என்ன சொல்றது தெரியல கார்த்திநான் தான் இன்னும் அவளை அஞ்சு வயசு பொண்ணா பாக்குறேன் போல அவ இன்னிக்கு அப்படி இல்லைடா நானும் வளர்ந்துட்டேன் எனக்கும் வயசு ஆகிடுச்சு அப்படினு புரிய வெச்சிட்டா…. நீ சொல்றதை பார்த்தா நிரவி என்னை லவ் பண்றா போலசொல்லு கார்த்தி அவ என்னை லவ் பண்றாளாஎன்று கடினமாக கேட்க அங்கு சசியிடம் லவ் சிவா மாமா சசிப்பாஎன்று அழுது கொண்டே கூறி கொண்டு இருந்தாள் நிரவிகா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!