Skip to content
Post Views: 2,441
யாதுமாகி #20
உள்ளுக்குள் உருப்பெற்ற அச்சத்தை உள்ளேயே அழுத்தி வைத்து துணிவை துணைக்கு அழைத்துக் கொண்டு இமைக்காமல் அவனையே பார்த்தாள் பயமில்லை என்று காட்டிக் கொள்வதற்காக…
நெஞ்சம் நிமிர்த்தி மீசையை திருகியபடி அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
அந்தோ பரிதாபம் அவளுக்கு வியர்த்து விதிர்விதிர்த்து லப் டப் கூடி அவள் அழுத்தி வைத்த அச்சம் டமால் என்று வெடித்து வெளியே குதித்து விட்டது.
Advertisement
அவன் அருகி வர வர அவளுக்கு வியர்வை மழை.
நெருங்கி வந்து நின்றவன் தலையை அழுந்த கோதிக்கொண்டே அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
என்ன லவ்வா? எந்த காலேஜ்?பஸ் ஸ்டாப்பில் நின்றவளை கோர்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்பது போல் கேள்வி கணைகளால் துளைத்தான். (அத்தியாயம் 6 ல் இந்த வரிகள் வரும் மேற்கொண்டு அதில் பார்க்க)
Advertisement
அவளுக்கு மிரட்டல் விடுக்க வந்தவன் உண்மையில் மிரண்டு தான் நின்றான்.
Advertisement
அவள் சாம்பல் வண்ண விழி சிமிட்டலில் அவன் சிக்கி சின்னாபின்னமாகி போனான்.
அவன் பெண்கள் அற்ற பூமியில் பிறந்தவன் அல்ல. ஆனாலும் அவள் விழி சிமிட்டிய க்ஷண நேரத்தில் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது.இதுவரை அவன் உணர்ந்திடாத ஒரு உணர்வு அது.
அவன் அயர்ந்த நொடியில் சுதாரித்துக் கொண்டவள் மீண்டும் துணிவை இழுத்து பிடித்து வாயாடா ஆரம்பித்தாள்.
Advertisement
அப்பா…என்ன வாய் பேசுறா! கண்ணை பாரு குறிக்காரி. மெலிதாய் முணு முணுத்தான்.ஹலோ யாரு குறிக்காரி? யாரை சொல்றீங்க? காட்டமாய் கேட்டாள்.
உன்னைத்தான் சொன்னேன்! நிறுத்தி நிதானமாக அடி முதல் முடி வரை நோக்கினான்.
அவள் விழி உருட்டி முறைக்க…. அவள் சாம்பல் நிற விழி வீச்சில் அடித்து செல்லப்பட்டது அவனது ஆண் என்ற கர்வம்.
தலையை உலுக்கி சுதாரித்துக் கொண்டவன் நீதான் குறிக்காரி. உன் கண்ணை பார்த்தால் அப்படியே குறிகார கூட்டம் போலவே இருக்கு!
ஹலோ நீங்கதான் குறிக்காரன் மாதிரி இருக்கீங்க. பாசிமணி, ஊசிமணி வாங்கலையோ சாமின்னு கேட்கிற குறிகாரன் மாதிரியே இருக்கு! பதிலுக்கு பதில் அவள் வாயாட அவனுக்குள் சுவாரஸ்யம் பிறந்து விட்டது.
இனி என்னை ஃபாலோ பண்றதை பார்த்தேன் அவ்வளவுதான் நாக்கை மடித்து ஆட்காட்டி விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தான்.
ஆமா! இவரு பெரிய மன்மதரு… இவரை அப்படியே ஃபாலோ பண்ணி வந்துட்டோம்.
இல்லையா பின்ன? கைகட்டி கெத்தாக நின்றான்.
ம்க்கும்… முகத்தை முறுக்கி கொண்டவளை ஆர்வத்துடன் நோக்கினான்.
ரொம்ப தைரியம் தான்! விழியை மேல் நோக்கி தூக்கி தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.
ஏன் நீங்க என்ன சிங்கமா?புலியா? உதறலை ஒளித்துக் கொண்டு பதிலுக்கு உறுமினாள்.
சிங்கம்…ஆண் சிங்கம்! மீசையை நீவினான்.
அய்யோ… இதுக்கு மேல முடியாது என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் வடிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரம் தான் பயப்படாத மாதிரியே நடிக்கிறது?
பண்ருட்டி டவுன் பஸ் எதாவது வருகிறதா என்று அவள் கண்கள் துழாவியது.
அச்சம்,மடம் கொண்டு அவள் தவிப்பதும்,தயக்கத்துடன் அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் என்று நொடிக்கு 108 வித்தைகளை காட்டிக் கொண்டிருந்தது அவள் முக பாவம்.
அவள் விழி மொழி பெயர்க்கும் செய்தி கண்டு சுருண்டு கிடந்த அவன் ரோமக் கால்கள் கூச்செறிய செய்தது.
அவன் பார்வையை அதற்கு மேல் சமாளிக்க இயலாது என்று உணர்ந்து கொண்டவள் பதட்டத்துடன் நகம் கடித்தாள்.
எட்டாம் நம்பர் டவுன் பஸ் வரவே ஹாய் ஹேண்ட்சம் பார்க்கிற மாதிரி இருக்கீங்க அதுதான் அடிக்கடி பார்க்கிறேன். ஒற்றைக் கண்ணை சிமிட்டி விட்டு ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டால்.
அடிங்… குறிகாரி! அவன் உதட்டில் முணுமுணுப்போடு பொருள் விளங்கா ஒரு ரகசிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் சென்ற பின்னும் புகை கக்கி சென்ற பேருந்து புள்ளியாய் மறையும் வரை அங்கேயே நின்றவன் அவனாக இல்லை.
அப்புறம் மச்சி அந்த புள்ளைய ரொம்ப மிரட்டிட்ட போல… பாவம் அந்த புள்ள பயந்து போச்சு! விஷமமாய் சிரித்தபடி அவன் தோளில் கை போட்டு இறுக்கிக் கொண்டான் வாசு.
யாருகிட்ட…ம்ம்ம்ம் பராக்கிரமம் காட்டியவன், மிரண்டு ஓடிட்டா…இனிமே என் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டா… கடுமையா எச்சரித்து அனுப்பிட்டேன்! மீசையை திருகிக்கொண்டான்.
ஏலே வக்கீலு… சத்தியமா முடியலடா! அவனது அடர்ந்த கேசத்தில் கைவிட்டு கிளறி விட்டு சிரித்தான் வாசு.
சரி சரி வா! அந்த புள்ளையை மிரட்டி டயர்டா இருப்ப, ஒரு ஃப்ரூட் மிக்ஸர் குடிப்போம்!அவன் கரம் பற்றி இழுத்துப் போனான்.
“———————”
விசில் அடித்தபடி ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் தலைவாரி கலைத்து மீண்டும் தலைவாரியவன் அப்படியே நின்று தன்னை வெகுவாக ரசித்தான்.
ஹாய் ஹேண்ட்சம் பார்க்கிற மாதிரி அழகா இருக்கீங்க அதுதான் அடிக்கடி பார்க்கிறேன். சாம்பல் விழி அழகி மொழிந்த மையல் மொழி அவன் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது..
நாணம் சூடிய முகத்துடன் சிரித்துக்கொண்டவன் மீண்டும் மீண்டும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான்.
கீழே கா(ளை)லை உணவிற்காக டைனிங் டேபிளுக்கு வர அங்கு ஜோதி காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தார்.
என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? வர ஆவணி 15 வந்தா முப்பது தொடங்கப் போகுது.
இவன் கூட சுத்திட்டு நிற்கிறவன் எல்லாம் பொண்டாட்டி பிள்ளைன்னு குடும்பமா இருக்கான். இவன் இன்னும் ஒத்தையில ஒய்யாரமா சுத்திட்டு இருக்கான்.
ஒரு நல்லது கெட்டதில் கலந்துக்க முடியல!எல்லாரும் கேள்வி கேட்டு குடையறாங்க.
எங்க சொந்தத்திலே பொண்ணு ரெடியா இருக்கு. அதுதான் எங்க பெரியப்பா சோமசுந்தரம் இருக்காறே அவர் பேத்தி.அதுதான் எங்க சிவக்குமார் அண்ணா பொண்ணு சந்திரவதனி.
கனடாவில் MBA படிச்சிட்டு வந்து இருக்கா. ஒரே பொண்ணு! எங்க சிவா அண்ணாவோட கோடிக்கணக்கான சொத்துக்கு ஒத்தை வாரிசு?கண்களில் கனவு மின்ன கணவனிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜோதி.
வதனிக்கு விஷ்ணுவை ரொம்ப பிடிக்கும்.அத்தான்,அத்தான்னு சுற்றி சுற்றி வருவாள்.நல்ல அழகியும் கூட.என்ன ஒன்று குணத்தில் அவள் நூறு ஜோதிக்கு சமம். பணத்திமிர் அவள் ரத்தத்தில் ஊறி இருந்தது. யாரையும் மதிக்க மாட்டாள் அவ்வளவு ஆணவம்.
இன்னொன்று ஜோதி அத்தை மகனை பிடிக்கும் என்பவளுக்கு அவர்களின் ஊர் பிடிக்காது.
இந்த பட்டிக்காட்டில் எப்படி இருக்கீங்க?இந்த ப்ராப்பர்ட்டியை எல்லாம் சேல் பண்ணிட்டு சிட்டி சைடு செட்டில் ஆகிடுங்களேன் என்பாள்.
அன்னத்திற்கும் சரி வேணுவிற்கும் சரி வதனியை கண்டாலே ஆகாது.
வாலிப வயதில் வதனியை கண்டால் சுரந்த ஹார்மோன் களேபரம் இப்போது விஷ்ணுவிடம் இல்லை.
தாய்மொழி,தாய் நாடு என்று எப்படி பெருமை கொள்கிறோமோ அப்படித்தான் சொந்த ஊரும்.சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊருக்கு ஈடாகுமா?
தன் ஊரை பழிப்பவள் மனிதர்களை மதிக்காமல் பகட்டிற்கு வாழ்பவளை தவறி கூட நினைப்பதில்லை விஷ்ணு.
“———–”
என்ன நான் இவ்வளவு சொல்றேன் ஊமையா உட்காரந்து இருக்கீங்க? ஜோதி எரிச்சலாய் கத்தினார்.
என்கிட்ட ஏன் சொல்ற?உன் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்து தானே சாப்பிடறான். நேரடியாக அவன்கிட்ட கேளு! வேணு நழுவிக்கொண்டார்.
பணம், பகட்டுன்னு அலையற பொண்ணு எனக்கு தேவையில்லை.கையை கழுவினான்.
அதுக்காக வெறும் பய மகளா பார்த்தா கட்டி வைக்க முடியும்? ஜோதி பொறுமினார்.
விஷ்ணு அமைதியாக எழுந்து கொண்டான்.
சின்ன பிள்ளைனா நாலு அரை கொடுத்து புரிய வைக்கலாம். முப்பது ஆகுது, மொன்னையா இருந்தா என்ன செய்ய முடியும்?
கோடிக் கணக்குல வர ஸ்ரீதேவியை வேண்டாம் என்று உதைத்து தள்ளினா நமக்கு தானே நஷ்டம்? புலம்ப தொடங்கி விட்டார்.
எனக்கு என் அப்பன்,பாட்டன் சம்பாதித்து வைத்த சொத்தே போதும்! கோடியோடு கோடி சேர வேண்டாம்.தாயின் முகம் பார்த்து நிமிர்வாய் தெளிவாய் பதில் உரைத்து விட்டு கிளம்பினான்.
“——————-”
கிப்ட் ஷாப்பில் எதேச்சையாய் பார்த்தாள். முறுக்கு மீசை ஹேண்ட்சம் அங்கு யாருடனோ பேசியபடி நின்று கொண்டிருந்தான்.
சட்டென்று திரும்பியவன் அவளை பார்த்து விட்டான். கண்கள் சிவந்து, மீசை துடித்தது.
அவன் முறைத்துப் பார்க்க…மதர் ப்ராமிஸ் நான் உங்களை ஃபாலோ பண்ணி வரல! எங்க மம்மி டாடி வெட்டிங் ஆனிவர்சரிக்கு கிஃப்ட் வாங்க வந்தேன். சின்ன குரலில் பாவமாய் சொன்னாள்.
அவள் சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
அழகாய் உதட்டை இறுக்கி சமத்தாய் புன்னகையை அடக்கிக் கொண்டான்.
நல்லாவே வாய்விட்டு சிரிக்கலாம். இன்னும் அழகா இருப்பிங்க! சொல்லிவிட்டு ஓடியே போனாள்.
சிரித்துக்கொண்டே அவள் சென்ற திக்கை வெறித்து கொண்டிருந்தான். ஏனோ மனம் வெறுமையாகி கிடந்தது.
“—————–”
ஹாய் ஹண்ட்சம் பேட்மிண்டன் நெட்டுக்குள் நுழைந்து அவன் புறமாய் வந்து நின்றாள்.
ராக்கெட்டை தூக்கி அவள் முகத்தில் அடிப்பது போல் ஓங்கினான்.
பயத்தில் கண்ணை சிமிட்டி இருக்கி மூடிக்கொண்டாள்.
உன்னை யாரு இங்கே வர சொன்னது? ஆமா.. நான் இங்கே இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? அவளை முறைத்தவன் சந்தேகமாய் வாசுவை பார்க்க அவன் ஓடியே போனான்.
ரொம்ப ஓவரா போற…பல்லை கடித்தான்.
ஜஸ்ட் ஒரு ஓரமா நின்னு உங்க கேமை பார்த்துட்டு போய் விடுறேன். அவள் அப்பாவி போல் சிரித்தாள்.
என்னடி லந்தா? முறைத்தான்.
ம்க்கூம் லவ்! சிரித்தபடியே அவன் காதோரம் சன்னமாய் கிசுகிசுத்தாள்.
அவன் ரௌத்திரம் கொண்டு எரிதழல் கக்க… அசால்டாய் சாம்பல் வண்ண விழி சுழற்றி அவனை மயக்கினாள்.
அப்படி பார்க்காதே! பல்லை கடித்தான்.
எப்படி பார்க்கிறேன்? இமை கொட்டி கொட்டி சிணுங்களுடன் கேட்டாள்.
அவள் பார்வையில் சிக்கிக் கொள்ளும் மனதை சிக்கல் அறுத்து மீட்க முடியாமல் தவித்தான்.
ஏன்டி வெறுப்பேத்துற? உங்க ஆத்தா அப்பன் உன்னை சுதந்திரமா உலவ விட்டுட்டு என்ன பண்றாங்க? அக்கினி பிழம்பு பொங்கியது அவன் வார்த்தை வீச்சில்.
பதில் பேசாது தலை குனிந்து நின்றாள்.
ஓய்…ராக்கெட்டால் அவள் முகம் நிமிர்த்தினான்.
அவள் விழி கலங்கி குளம் கட்டி தளும்பிக் கொண்டிருந்தது.
இப்போ எதுக்கு இங்கே வந்து அழுது வடியற? நீ யாரு என்னனு எனக்கு தெரியாது, நான் யாருனு உனக்கு தெரியாது. அப்புறம் எந்த தைரியத்தில் என்னை தேடி வந்திருக்க?
ஒன்னு படி, இல்லைனா மேரேஜ் பண்ணிக்கோன்னு டாடி சொல்லிட்டாங்க. Stanford University ல சீட் கிடைச்சிருக்கு, விசா கூட ரெடி ஆயிடுச்சு!
டேடியோட தங்கச்சியோட மூத்தார் பையன் CTS ல என்ஜினியரா இருக்காரு. டேடி அந்த வரனை பேசி முடிக்க ஆர்வமா இருக்காங்க மூக்கை உறிஞ்சி கொண்டே பேசினாள்.
ஆமா…இதை எல்லாம் என்கிட்ட ஏன் சொல்ற?
இல்ல இனிமே சொல்ல மாட்டேன்.உங்க கண்ணு முன்னே வரமாட்டேன். அழுதபடியே ஓடினாள்.
டேய் விஷ்ணு என்ன மனுஷன்டா நீ?இந்த பொண்ணை விட பெஸ்ட் சாய்ஸ் உனக்கு வேற எங்கே கிடைக்கும்? உங்க வீட்ல எப்படி தேடி பிடிக்க போறீங்க? வாசு கத்தினான்.
டேய் மச்சி நீ கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லாம இருந்த அவ்வளவுதான் கல்யாணமே வேண்டாம்னு இல்லை.
நான் அந்த பொண்ணு கூட பேசிட்டேன் உங்க ஆளுங்க தான். உங்க அளவிற்கு இல்லைனாலும் அவளும் வசதியான வீட்டு பொண்ணு தான். நல்லா படிச்ச பொண்ணு. எவளவோ ஒருத்தியை கட்டிக்க தானே போற தானே அது இந்த பிள்ளையா இருந்தா என்ன?
உன்மேல் எங்களுக்கு அக்கறை இருக்கு மச்சி.உனக்கு இந்த பொண்ணு பொருத்தமானவ. ஒன்னு சொல்லட்டுமா இந்த பொண்ணு மட்டும் தான் பொருத்தமானவ. அப்புறம் உன் இஷ்டம். சுரேந்தர் தன் பங்கிற்கு கத்தி விட்டுப் போனான்.
ஸ்டேடியத்தின் சிமெண்ட் பெஞ்சில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் விஷ்ணு.
அம்மா பேச்சுக்கும், குணத்திற்கும் இந்த பொண்ணு எப்படி செட் ஆகும்? நிர்மலமான ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் லேசாக கசியத் தொடங்கியது.
“——————-”
ஏதாவது ஒரு வகையில் அறிந்தோ அறியாமலோ அவன் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தவள் இரு வாரமாக அவன் கண்ணில் படவே இல்லை.
விஷ்ணுவால் அந்த சாம்பல் நிற விழி அழகியின் தரிசனம் காணாமல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
என்னாச்சு எனக்கு? விஷ்ணு நீ இவ்வளவு வீக்கான ஆளா?! தன்னையே நொந்து கொண்டான்.
அவன் உயிரோடு கலந்து வெள்ளை அணு சிவப்பணுக்களோடு காதல் அணுவையும் உட்பகுத்திவிட்டால் போலும்.
டேய் சுரேன் அவ நம்பர் சென்ட் பண்ணு!
எவ நம்பர்? தெரியாதது போல் கேட்டான்.
மகனே நேரில் வந்தேன் தூக்கிப்போட்டு மிதிப்பேன்.
எவளுக்காக வக்காலத்து வாங்கினியோ அவளோட நம்பர்.
இது… இது கரெக்ட். இப்படி பணிவா கேட்டா அனுப்பப் போறோம்.
எருமை உன்னை நேரில் வந்து வச்சிக்கிறேன்.
இந்த டயலாக் எல்லாம் என் தங்கச்சி கிட்ட பேசு மச்சி. அவன் கலாய்ப்பில் இவன் உடல் உஷ்ணம் பூசிக் கொண்டது. கோபத்தில் அல்ல வெட்கத்தில்.
“————–”
ஹலோ… இவன் ஒற்றை சொல்லுக்கு விசும்பலே கேட்டது மறுமுனையில்.
ராங் நம்பருக்கு அழைத்து விட்டோமோ…..? அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் தொடர்பு கொண்டான். அதே விசும்பல் தான்.
ஹலோ நான்…தடுமாறினான்.
தெரியும்!என்றாள்.
இவளுக்கு நம்ம நம்பர் தெரியுமா? அந்த தடி பயலுக தான் கொடுத்திருப்பானுங்க.
நான் உன் கூட பேசணும்!
எனக்கு உங்க கூட பேச இஷ்டம் இல்லை.தாட்சண்யமின்றி அழைப்பை துண்டித்தாள்.
error: Content is protected !!