Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 23.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“நீ சொல்ல வரது புரியுது பாட்டி. இவன் பொண்டாட்டிக் கூட சேந்து இருக்குறதுக்கு இவனே முயற்சி செய்யட்டும். நான் அத்தைக் கிட்ட இந்த ஏற்பாடு வேண்டாம்னு சொல்லிறேன்”, என்றாள் தேன்மொழி.

 

“இதுக்கு தான் டா வாயை விடாதேன்னு சைகை செஞ்சேன்”, என்றான் செல்வா.

 



Advertisement

“நான் இப்படி இருக்கும்னு எதிர் பாக்கலையே”, என்று எண்ணிக் கொண்டு பாவமாக கதிரைப் பார்த்தான்.

 

“ஐயோ பாவம் தேனு, மன்னிச்சி விட்டுரு”, என்றான் கதிர்.

Advertisement

 

Advertisement

“நீங்க சொல்றதுனால விடுறேன் அத்தான். ஆனா அதுக்கு இவன் ஒண்ணு செய்யனும்”

 

“ஹி ஹி சொல்லு தேனு. என்ன செய்யணும்?”

Advertisement

 

“வழியுது துடைச்சிக்கோ”, என்று சொன்ன தேன்மொழி “உன்னோட மில்லுல வரும் முதல் மாச சம்பளத்தை என்கிட்ட தந்துரணும்”, என்றாள்.

 

விஷயம் அறியாமல் ஒரு ஐயாயிரம் வரும் என்று எண்ணி “இவ்வளவு தானா? கண்டிப்பா தந்துறேன் தேனு”, என்று சொல்லிக் கொண்டே அறைக்கு சென்றான் தினேஷ்.

 

உள்ளே வந்தவனை பார்த்து திகைத்து விழித்த கீதா “நீங்க…நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? அத்தை வர சொன்னாங்களா? நீங்க வெளிய போங்க நான் வரேன்”, என்று பதறினாள்.

 

அவனோ அவள் பதட்டத்தை கண்டு கொள்ளாமல் நிதானமாக உள்ளே வந்து கதவை தாழிட்டான். “ஐயோ வெளிய போங்க. யாராவது தப்பா நினைக்க போறாங்க”, என்று அழாத குறையாக சொன்னாள்.

 

“ஏய் லூசு பயப்படாத. இனி இது தான் என்னோட ரூம். புரியலையா? இனி இது நம்ம ரூம்”, என்று சொல்லி சிரித்தான் தினேஷ். அப்போது தான் அந்த அறையையே பார்த்தாள். அன்னத்தின் பொருள்கள் இருந்த இடத்தில் இப்போது இவனுடைய பொருள்கள் இருந்தது.

 

“இது எப்ப நடந்துச்சு?”

 

“தேனு தான் அம்மா கிட்ட சொல்லிருக்கா. ஜாலி ஜாலி”, என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கினான்.

 

அவன் நெருங்கியதும் “என்…என்ன.. ஜாலி? இப்ப எதுக்கு கிட்ட வறீங்க?”, என்று கேட்டவளின் குரல் நடுங்கியது.

 

அவள் அருகே வந்தவன் அவள் கன்னத்தில் இரு கைகளையும் வைத்து “உன் படிப்பு முடியுற வரைக்கும் பெருசா ஒண்ணும் நடக்காது கீது. ஆனா சின்ன சின்னதா கண்டிப்பா நடக்கும்”,என்று சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

அந்த முத்தத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் கீதா. பின் அவள் இரு கன்னத்திலும் இதழ் பதித்தவன் “கீழ போ. நான் டிரெஸ் மாத்திட்டு வரேன்”, என்றான்.

 

அடுத்த நொடி வேகமாக வெளியே வந்தவள் அனைவரின் முகத்தையும் பார்க்க தயங்கினாள். அவள் தயக்கத்தை உணர்ந்த தேன்மொழி “கீதா, இந்த படம் உனக்கு ரொம்ப பிடிக்கும்ல? வா பாப்போம்”, என்று சொல்லி அவளை அருகே அழைத்து படம் பார்க்க வைத்தாள்.

 

அதன் பின் நாட்கள் றெக்கை கட்டிக் கொண்டு சென்றது. ஒரு மாதம் கழித்து தொங்கிய முகத்துடன் மில்லில் இருந்து வீட்டுக்கு வந்தான் தினேஷ்.

 

“என்ன ஆச்சு டா டல்லா இருக்க? ரொம்ப வேலையா?”, என்று கேட்டான் கதிர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அனைவரும் கேள்வியாக அவனைப் பார்த்தார்கள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லை.நானா வேலை செய்றேன்? ஆட்கள் தானே வேலை பாக்குறாங்க?”, என்றான் தினேஷ்.

 

“அப்ப எதுக்கு டல்லா இருக்க?”

 

“அட போண்ணா, மில்லுல மாசம் மாசம் ஒரு ஐயாயிரம் பத்தாயிரம்னு வருமானம் வரும்னு நினைச்சு தேனுக் கிட்ட ஒரு மாச சம்பளத்தை தறேன்னு சொன்னேன்.ஆனா மொத்த வருமானம் நாப்பத்தஞ்சாயிரம். இப்ப எல்லாத்தையும் கொடுக்கணுமே”

 

“ஹா ஹா, இதை வாக்கு கொடுக்குறதுக்கு முன்னாடி யோசிக்கணும்?”, என்று சொல்லி சிரித்தான் கதிர்.

 

“நீ என்ன ஐயாயிரம் பத்தாயிரம் வரும்னு நினைக்கிறதுக்கு மாவு மில்லுன்னு நினைச்சியா? சுத்தி இருக்குற அத்தனை ஊர்ல இருந்தும் இங்க வந்து தான் நெல்லு மூட்டையை இறக்கணும். தா தா. எனக்கு ஒரு அட்டிகை வாங்கணும்னு நினைச்சேன்”,என்று சொல்லி அவன் கையில் இருந்து பணத்தை பறித்துக் கொண்டாள் தேன்மொழி.

 

“ராட்சசி”, என்றான் தினேஷ்.

 

“ஐயோ பாவம், இந்தா கொஞ்சம் வச்சிக்கோ”, என்று சொல்லி அவன் கையில் சிறிது பணத்தைக் கொடுத்து விட்டு சென்றாள் தேன்மொழி.

 

அதை எண்ணிப் பார்க்கும் போது ஐயாயிரம் இருந்தது. “இவ்வளவாது தந்தாளே”,என்று எண்ணிக் கொண்டான்.

 

அப்போது தீவிர யோசனையில் இருந்தான் செல்வா. “இல்லாத மூளையை எதுக்கு டா சுரண்டிட்டு இருக்க?”,என்று கேட்டான் கதிர்.

 

“இல்லைன்னா, கஷ்ட பட்டு படிச்சு, பாஸ் ஆகி வராத இங்கிலீஷ் எல்லாம் பேசி ஒரு வேலை வாங்கி அம்மா அப்பாவை, சொந்த ஊரை விட்டு பிரிஞ்சு போய் இருக்குறதுக்கு உன்னையும் தினேஷ் அண்ணனையும் மாதிரி நானும் இங்கயே இருக்கலாமோன்னு தோணுது”, என்றான் செல்வா.

 

“டேய், நான் விவசாயம் படிச்சேன் அதனால விவசாயம் செய்றேன். தினேஷ் படிச்ச படிப்பு அவனோட மில்லுல இருக்குற மெஷினை சரி பண்ண யூஸ் ஆகும். ஆனா நீ படிக்கிறது கம்ப்யூட்டர் சம்பந்தமா. அதுக்கு நம்ம ஊர்ல என்ன வேலை இருக்கு? தேவை இல்லாம யோசிக்காம வேலையைப் பாரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

செல்வாவும் அந்த யோசனையை அப்போதே விட்டுவிட்டான்.

 

ஒரு நாள் வயலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் கதிர். “அத்தான்”, என்று சொல்லிக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்த தேன்மொழி “உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்”, என்றாள்.

 

“காலைலே என்னோட பொண்டாட்டி என்ன ஒரே கொஞ்சல்? என்ன சொல்லணும் தேனு? சொல்லு”, என்று குழைந்து வந்தது கதிரின் குரல்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க? நான் அன்னைக்கே சொல்ல வந்தேன்”

 

“அட ஆமால்ல? நிறைய பிரச்சனைல இதெல்லாம் மறந்துருச்சு தேனு. இப்ப சொல்லு”

 

“கூடிய சீக்கிரம்….”

 

“கூடிய சீக்கிரம்., என்ன மா?”

 

“நீங்க அப்பா ஆக போறீங்க?”, என்று சொல்லி விட்டு அவன் நெஞ்சிலே முகம் புதைத்துக் கொண்டாள்.

 

“என்ன?”, என்று கத்தியவன் “தேனு நிஜமாவா?”, என்று கேட்டான்.

 

“ஆமா”, என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன் “உன்னையே குட்டி பாப்பாவா பாத்த மாதிரி இருக்கு டா செல்லம். இப்ப நமக்கே பாப்பா வர போகுது. சந்தோஸமா இருக்கு. வா எல்லார் கிட்டயும் சொல்லுவோம்”, என்று சொல்லி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

“அத்தான் நீங்க போகும் போது அம்மா வீட்ல என்ன விட்டுட்டுப் போறீங்களா? மதியம் சாப்பிட வரும் போது கூட்டிட்டு வாங்க”

 

“சரி வா, அத்தை வீட்லயும் சொல்லணுமே? ஆனா நடத்தி தான் கூட்டிட்டு போவேன். கொஞ்ச நாள் வண்டில போக வேண்டாம்”

 

அவள் சரி என்று சொன்னதும் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான். இருவரும் வந்து விட்டார்கள் தான். ஆனால் எப்படி அனைவருக்கும் சொல்ல என்று இருவருக்குமே தயக்கமாக இருந்தது.

 

“அத்தான் சொல்லுங்க”, என்று அவன் காதில் முணுமுணுத்தாள் தேன்மொழி.

 

“எப்படி சொல்லணும்னு தெரியலையே டி”

 

“ஐயோ, என்னமோ வா சொல்லுவோம்னு கூட்டிட்டு வந்தீங்க. உங்களோட…. போங்க”, என்று சொன்னவள் அன்னம் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

“அம்மா வீட்டுக்கு போறியா தேனு?”,என்று கேட்டாள் அன்னம்.

 

“ஆமா பாட்டி, அப்புறம் பாட்டி…..”

 

“என்ன டா கண்ணு?”

 

“உனக்கு கொள்ளு பேரனோ பேத்தியோ வர போறாங்க”, என்று சொல்லி விட்டு அவள் தோளிலே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

வெகுவாக சந்தோஷப் பட்ட அன்னம் வேணி மற்றும் மதியை அழைத்து விஷயத்தை சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசமே. பின் அனைவரிடமும் சொல்லி விட்டு தேன்மொழி வீட்டுக்கு வந்தார்கள்.

 

அங்கே அவர்களிடமும் விஷயத்தை சொன்னதும் அவர்களும் சந்தோஷப் பட்டார்கள். பின் சிறிது நேரம் இருந்து விட்டு கதிர் வயலுக்கு கிளம்பினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“யாரோ கல்யாணத்தன்னைக்கு என் மருமகனைப் பிடிக்கவே இல்லைன்னு சொன்னாங்க. இன்னைக்கு என்னன்னா அவனை வயலுக்கு விடுறதுக்கு கூட கவலைப் படுற மாதிரி இருக்கே”,என்று சொல்லி சிரித்தாள் சகுந்தலா.

 

“கிண்டல் பண்ணாத மா. அத்தானுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்குமாம். அதை சொல்ல தான் அவங்களுக்கு சந்தர்பம் அமையலை. நீ சின்ன வயசிலே இது தான் டி உன் அத்தான். அவனை தான் நீ கட்டிக்கணும்னு சொல்லி சொல்லி வளத்துருக்கணும்”, என்று சொல்லி சிரித்தாள் தேன்மொழி.

 

“அடப் பாவி என் மேல பழியா?”, என்று சிரித்தாள் சகுந்தலா.

 

“அம்மா டி தேனு”, என்று அழைத்தாள் சண்முகம்மாள்.

 

“என்ன பாட்டி?”

 

“கீதா கிட்ட சொல்லி அவளோட அம்மா அப்பா கிட்ட பேச சொல்லுத்தா. துரைராசுவும் ரேகாவும் ரொம்ப வருத்த படுறாங்க”, என்றாள்.

 

“சொல்றேன் பாட்டி, கொஞ்ச நாள்ல சரியாகிரும். உனக்கு உடம்பு எப்படி இருக்கு?”

 

“புன்னு தான் ஆர மாட்டிக்குத்தா”

 

“நல்ல இனிப்பை இனிப்பை சாப்பிடு. பின்ன எப்படி ஆறும்?”, என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே “தேனு வாழ்த்துக்கள். அத்தை இப்ப தான் சொன்னாங்க”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தாள் ராதா.

 

“வந்த உடனே உங்களை கேட்டேன் அண்ணி. நீங்க குளிக்கிறீங்கன்னு பெரியம்மா சொன்னாங்க. கூடிய சீக்கிரம் நீங்களும் நல்ல செய்தி சொல்லணும் சரியா?”, என்றாள் தேன்மொழி.

 

“அம்மாடி தேனு, கதிர் வருவானா? மதியம் ரெண்டு பேருக்கும் இங்க தான் சாப்பாடு. சாயங்காலமா போ சரியா?”, என்றாள் செல்வி.

 

‘சரி பெரியம்மா. அத்தான் கிட்ட சொல்றேன். ஆமா ரெண்டு அண்ணனும் எங்க?”

 

“வயலுக்கு போய்ட்டாணுங்க. உன் பெரியப்பாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டாங்க. அண்ணனை கேட்ட அப்புறம் தான் நினைவு வருது. சகு அந்த போட்டோவை எடுத்து பிள்ளை கிட்ட காட்டு”,என்று செல்வி சொன்னதும் “என்னது மா?”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“நம்ம செந்திலுக்கு ஒரு வரன் வந்திருக்கு தேனு. இந்தா போட்டோ. பொண்ணு நல்லா இருக்கு. நீ பாத்துட்டு சொல்லு”, என்று கொடுத்தாள் சகுந்தலா.

 

“நல்லா இருக்காங்க மா. அண்ணன் கிட்ட காட்டிட்டீங்களா?”

 

“இன்னும் இல்லை”

 

“சரி நானே இன்னைக்கு காட்டுறேன்”,என்று சொல்லி மதியம் அவன் சாப்பிட வரும் போது அதை அவனிடம் காட்டினாள்.

 

சிறிது வெட்கப் பட்டுக் கொண்டே அதைப் பார்த்த செந்தில் “பிடிச்சிருக்கு”, என்று சொல்ல கண்ணனும் கதிரும் அவனை ஓட்டித் தள்ளினார்கள்.

 

“உங்க அப்பா கிட்ட சொல்லி பொண்ணு வீட்ல பேச சொல்லணும்”,என்றாள் செல்வி.

 

மதியம் அங்கேயே உணவருந்தி விட்டு கதிர் வயலுக்கு சென்றான். பின் மாலை வந்து அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.

 

வீட்டுக்கு வாரிசு வரப் போவதை அறிந்த செல்வா, தினேஷ், கீதா மூவருக்கும் சந்தோசமே.

 

 

காதல் தீயை நீர் அணைக்குமா?….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!