Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

53. கலை நாவல்ஸ் - அகதி(தீ)யில் முகிழ்த்த அனிச்சமேUncategorized

❤️ அகதி(தீ)யில் முகிழ்த்த அனிச்சமே ❤️ அத்தியாயம் 2:

புது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையில் தழுவிக் கொண்டே சில நொடிகள் நின்று கொண்டிருந்தனர்….

 

அந்நேரம் வெற்றியின் அலைபேசி ஒலிக்க, அதை ஏற்றவன், ” சொல்லுங்க சிஸ்டர்.. ” என கூற,

 



Advertisement

அவன் எதிரே நின்றிருந்தவளுக்கோ ” எங்கு தன்னை தனியே தவிக்க விட்டு சென்று விடுவானோ??” எனும் பயம் உள்ளூர ஊடுருவியது…

 

” இல்ல சிஸ்டர் நான் அவைலபிள் தான்.. எப்போ வேணாலும் கூப்பிடுங்க.. நான் வரேன்…” என கூறியவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்…

Advertisement

 

Advertisement

அதுவரை இருந்த பயம் பறந்து எங்கு அவன் திட்டி விடுவானோ எனும் புதிதாய் வேறொரு பயம் தோன்ற, ” என் துணி, பா..  பாத்திரமெல்லாம் அங்க இருக்கு…” என தன் தாய் வீட்டில் இருப்பதை கூற,

 

” அதெல்லாம் வேண்டாம்.. நீ இதை க்ளீன் பண்ணி வை.. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்…” என கூறியவன் அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வெளியே சென்றான்…

Advertisement

 

அவன் சென்ற பின் கதவை தாளிட்டு நீண்ட பெரு மூச்சு விட்ட நதிகா, ” இவர் மனசு மாறுமா?? நம்ம மேல இருந்த கொஞ்ச நஞ்ச அன்பையும் தூக்கி போட்டுட்டாரா?? இப்படி பிடி கொடுக்காம பேசுறாரே இந்த மனுஷன்… அம்மா.. நீ தான் எனக்கு வழி காட்டணும்..” என மனதோடு வேண்டிக் கொண்டவள் சில நொடிகளில் வீட்டை சுத்த செய்ய துவங்கி இருந்தாள்…

 

முழுதாய் இரண்டு மணி நேரங்கள் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முடித்தவள், உடல் அயர்வில் சோர்ந்து விட, அங்கேயே தரையில் ஒரு ஓரமாய் சுருண்டு படுத்து உறங்கிப் போயிருந்தாள்…

 

மூன்று நாட்களாகவே தன் தாயின் உடல்நிலைக்காக மருத்துவமனையில் அலைந்து திரிந்து, மறுநாள் அவர் இறப்பில் அழுது மயங்கி சோர்ந்த அவளின் உடல் இன்றும் ஓய்வின்றி வேலைகளில் துவண்டு விட, தாங்க முடியா களைப்பில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள் நதிகா…

 

அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த வெற்றி, அவளின் பொலிவிழந்த முகத்தை பார்த்து நீண்ட பெரு மூச்சு விட்டு, ” உன்ன கஷ்ட படுத்த நினைக்கல நதி… நான் இல்லேன்னாலும் இந்த மிருகங்கள் கிட்ட இருந்து உன்னை நீ பாதுகாக்க தெரிஞ்சுக்கணும்… அப்போ தான் நான் இல்லாம போன கூட உன்னால தைரியமா இந்த சமூகத்தில் வாழ முடியும்.. அதுக்கு தான் இந்த சோதனை…” என மனதோடு கூறியவன்,  தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டு வாங்கி வந்திருந்த பொருட்களை ஓசையின்றி உள்ளே வைத்தான்…

மெதுவாய் அவளருகே சென்றவன்,  குரலை செருமி  நதிகா என அழைக்க,

அவளோ உடல் அயர்வும் மன அயர்வும் ஒன்று கூடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்…

அவளை எழுப்ப மனமின்றி நின்றிருந்தவன் வீட்டைச் சுற்றி கண்களை சுழல விட்டான்…

 

சிறிய சமையலறை, அவள் படுத்திருக்கும் இடம் சற்று நீளமான கூடம்.. அதன் ஓரத்தில் சிறிய கழிவறை… இவ்வளவே அவ்வறையின் அமைப்பு…  புருவம் உயர்த்தி அவ்விடத்தை பார்த்தவன், ” அவசரத்தில் வந்தா காசை அதிகம் பிடிங்கிடுவானுங்க போல… இந்த இடத்துக்கு மாசம் மூவாயிரம் அதிகம் தான்.. ” என வாய்விட்டு புலம்பியவன், தன் மீசையை திருகிக் கொண்டு மீண்டும் அவளருகே வந்து ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்…

 

” இவ அம்மா இவ கல்லூரியில் படிக்கிறதா சொன்னாங்களே.. எந்த கல்லூரியா இருக்கும்?? சிவகாசியிலேயே படிக்கிறாளா?? இல்ல வெளியே ஏதாவது ஊர்ல தங்கி படிக்கிறாளா??” என சிந்தித்துக் கொண்டிருந்தவன், அடுத்தடுத்து அவளிடம் கேட்க வேண்டிய விஷயங்களை சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்…

 

அடுத்த சில நொடிகளில் வாசலில் ஏதோ சத்தம் கேட்க,

 

கதவை திறந்து வெளியே சென்று கதவை சாற்றியவன் வெளியே இருந்த சில மனிதர்களை பார்த்து கையை முறுக்கிக் கொண்டு நடந்து வந்தான்…

 

” இங்க பாருங்க.. இவ அம்மா தனியா இவளை எப்படி வளர்த்தினான்னு உங்களுக்கு தெரியாது.. இங்க இவ அம்மாவால பல குடும்பங்கள் நாசம் ஆகியிருக்கு.. இப்போ அவ பொண்ணையும் இங்கேயே தங்க வைக்கிறது சரி இல்ல…” என கூட்டத்திற்குள்ளேயே தங்களுக்குள் சலசலத்துக் கொள்ள,

 

வெள்ளை நிற சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து, தன் பாக்கெட்டில் கை விட்டு தன் கூரிய விழிகளால் அவர்களை பார்வையிட்டவன்,  ” சோ.. இங்க இருக்க பல குடும்பங்கள் அழிய என் அக்கா தான் காரணம் அப்படித்தானே??” என புருவம் உயர்த்திக் கொண்டு திமிராய் கேட்டான்…

 

மாநிறத்தில் நெடுநெடுவென ஆறடி உயரம் வளர்ந்திருந்தவன் கண்களில் தெரிந்த நெருப்பு பார்வையில் கைகளில் அரிவாள் மட்டும் இல்லாத ஐயனாராய் தெரிந்தான்  அனைவருக்கும்…

 

அவன் பார்வையில் இருக்கும் கோபத்தை கண்டு மிரண்ட சிலர், ” இந்த பொண்ணை.. இங்க… இருந்து…” என திக்கி திணறி அவனுக்கு பயந்து ஏதோ கூற வர,

 

” என் பொண்டாட்டி.. இங்க தான் இருப்பா.. தைரியம் இருக்க ஆம்பளையா இருந்தா அவளை தேடி எவனா இருந்தாலும் வரலாம்.. ஆனா ஒரு கண்டிசன்.. அவளால உங்க உயிர் போனா அதுக்கு அவ பொறுப்பு இல்ல..  அவ இங்க இருக்கணுமா இல்லையான்னு முடிவு பண்ண வேண்டியது நீங்க இல்ல.. நான் தான்.. என் பொண்டாட்டி என் கூட இங்க இதே இடத்தில் இந்த வீட்டில் தான் இருப்பா.. ” என அழுத்திக் கூறியவன், தன் முறுக்கு மீசையை மேலே திருகிக் கொண்டே, கைகளில் இருந்த கருப்பு கயிற்றை வருடியவன் ” வேற ஏதாவது பேசணுமா??” என ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான்…

 

மற்ற அனைவரும் இல்லையென தலையசைக்க, கூடத்தின் நடுவே இருந்து ஒரே ஒரு குரல் மட்டும், ” பெரிய பத்தினிக்கு பாதுகாப்பு தராரு… இவர் இல்லாத நேரம் அவ அவ அம்மா வேலையை பார்க்க தானே போறா?? அதையும் பார்க்க தானே போறோம்??” என குரல் மட்டும் ஓங்கி கேட்க,

 

சொடக்கிட்டு அனைவரையும் பார்க்க செய்தவன், ” என் பொண்டாட்டியை பத்தி எனக்கு தெரியும்.. வேற எவனும்… ப்ச்.. எந்த ####ம் பேச தேவையில்லை.. தைரியம் இருந்தா நேர்ல வந்து பேசு டா..” என திட்டிக் கொண்டே முன்னேறி கம்பீரமாய் நடக்க,

 

அதற்கு மேல் அங்கே எப்படி பேச்சு எழும்.. அங்குள்ள அனைவரும் வாய்ச்சொல் வாசிகளே அன்றி வீரர்கள் அல்லவே???

 

யாரோ ஒருவர் காதால் கேட்ட தவறான கருத்தை கொண்டு நதிகாவையும் அவள் தாய் சிந்துவையும் தவறாக சித்தரித்து, அவர்களை கவலையில் ஆழ்த்தி, அவர்களின் சோகத்தை ரசிக்கும் கொடூர ஜென்மங்கள் ஆயிற்றே அந்த சிலர்…

 

தங்களின் ஆண்மை வலிமையை காட்ட தன் மனைவியை மறந்து, சிந்து மீது ஆசை கொண்டு, அவளை தன்னிடம் பணிய வைக்க எண்ணிய பல ஜென்மங்கள் சிந்துவிடம் பெற்ற செருப்படிகள் ஏராளம் ஆயிற்றே… அதில் வந்த கோபத்தின் பிரதிபலிப்பு தான் அவளை பற்றிய எதிர்மறையான பேச்சுக்களும் இந்த பொய்யான வதந்திகளும்…

 

அதை சிந்துவின் இறுதி சடங்குகளின் போதே கண் கூடாக பார்த்தவன் ஆயிற்றே வெற்றி செல்வன்…

 

இன்று அவர்களின் பேச்சில் சினந்து அவர்களை அடித்து வீழ்த்த அவனுக்கு ஒரு நிமிடம் போதும்.. ஆனால் அவர்களின் சீரற்ற பேச்சு மற்றும் செயலால் நதிகா வாழ்வில் நிகழ்ந்த மற்றும் நிகழப் போகும் அசம்பாவிதங்களை எல்லாம் எதிர்த்து அவள் போராட கற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியவன் அத்தோடு தன் பேச்சு முடிந்து விட்டதென அங்கிருந்து மீண்டும் திரும்பி செல்லப் போக,

 

மற்றவர்கள் வார்த்தையால் அவளை வசை பாடிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தனர்…

 

அவர்களை திரும்பி ஒரு அழுத்தப் பார்வை பார்த்தவன், அவர்கள் பேச்சு தன்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை போல,

 

அவர்களின் முகத்தில் அறைந்தார் போல வாயில் கதவை அறைந்து சாற்றியவன் கதவை தாளிட்டு அவளருகே சென்று அமர்ந்தான்…

 

கதவை சாற்றிய வேகத்திலேயே அங்குள்ளவர்களுக்கு அவன் கோபத்தின் அளவு புரிய, அங்கிருந்து கலைந்து சென்றனர்…

 

இங்கோ கதவு சாத்தும் சத்தத்தில் பட்டென அடித்து பிடித்து எழுந்தவள் தன் அருகே அமர்ந்திருக்கும் வெற்றியை கண்டு பதறி போனாள்…

 

ஆம் அவன் முகம் முழுதும் இறுக்கமாய் இருக்க, கண்கள் சிவப்பேறி, கைகளை இறுக்கி மூடி கட்டுப்படுத்த முடியா கோபத்தில்  சுவற்றில் சாய்ந்து எங்கோ வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் வெற்றி…

 

அவன் அருகே எழுந்து சென்ற நதிகா,

” மா.. ப்ச்.. வெ..” என எப்படி அவனை அழைப்பதென புரியாமல் நின்றவள்,

” எ… என்னங்க.. என்ன ஆச்சு??” என பதட்டமாய் கேட்க,

 

அவனோ அவளை அமைதியாக பார்த்துக் கொண்டே, ” ஒன்னும் இல்ல.. போய் சாப்பிடு.. அங்க சாப்பாடு இருக்கு.. கொஞ்சம் மளிகை பொருட்கள் இருக்கு.. பாத்திரம் இப்போ தேவைக்கு மட்டும் வாங்கி இருக்கேன்.. அப்புறம் உனக்கு ரெண்டு செட் டிரஸ் மட்டும் வாங்க தான் என்கிட்ட காசு இருக்கு.. அதை மட்டும் வாங்கி இருக்கேன்.. வேற எதுவும் வேணுமா??” என முகத்தில் இறுக்கம் மாறாமல் கேட்டான்…

 

இல்லையென தலையசைத்த நதிகா, மெல்ல எழுந்து அவனை பார்த்துக் கொண்டே சென்று சில நிமிடங்கள் வரை பொருட்களை அடுக்கி வைத்தவள் இருவருக்குமான உணவை ஒரே தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு வந்தாள்…

 

அவளை நிமிர்ந்து பார்த்தவன், ” எனக்கு பசிக்கல.. உனக்கு மட்டும் தான் வாங்கினேன்.. சாப்பிட்டு படு.. தூக்கம் வரலனா மட்டும் சொல்லு.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” என கூறி பாயை விரித்து கீழே படுக்க,

 

அவளோ  வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு அவனருகே சென்று அமர்ந்து, உணவினை அவன் வாய்க்கு நேரே நீட்டி அவனை பார்க்க,

 

அதில் ஏளனமாக சிரித்தவன், ” இந்த மாதிரி சில்லியா பிகேவ் பண்ணாத நதி… இதுக்கெல்லாம் மயங்கி பாசத்துல பொங்கி வழியுற ஆள் நான் இல்ல… போ போய் சாப்பிடு…” என கூறி தன் அலைபேசியில் கவனத்தை மாற்றினான்…

 

நீண்ட பெருமூச்சு விட்டு தடுமாற்றமாய் அவனை மாமா என அழைத்தவள், ” தனியா சாப்பிட எனக்கு மனசு வரல.. அதே நேரம் சாப்பாட்டை வீண் பண்ணவும் முடியாது என்னால… சோ இதை வேஸ்ட் பண்ணாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்.. அண்ட்  இன்னொன்னு உங்க தோரணையில் சொல்லணும்னா, என் அம்மாவுக்கு உரிமையா தம்பின்னு நீங்க தான் எல்லா இறுதி சடங்கும் செய்தீங்க.. அப்போ நீங்க எனக்கும் உரிமையுள்ள மாமா தான்.. இனி இப்படி தான் கூப்பிட போறேன்.. என் கணவனா இல்ல ஒரு நண்பனா என் கூட சாப்பிடுங்க பிளீஸ்…” என அழைத்தாள்….

 

அதில் வாய்விட்டு  சிரித்தவன், ” நீயும் மத்த பொண்ணுங்களை மாதிரி இப்படி மாமா மச்சான் அத்தான் சொல்லி என்னை மாத்த நினைக்காத நதிகா.. நான் அப்போவே சொன்னது போல தான்.. எனக்கு அன்பு, பாசம் இதெல்லாம் கொடுத்த வலியில் எல்லா உணர்வுகளும் மறுத்து போயிடுச்சு… ” என விரக்தியாக கூறியவன் முகம் இறுக்கமாய் இருக்க,

 

அவளோ அவன் உணர்வுகளை புரிந்து வருந்தினாலும் விடாப்பிடியாக,

” அதெல்லாம் சரி தான்.. எனக்காக இல்ல.. ஓடி ஓடி நீங்க செய்யும் இந்த வேலைக்காகவாவது உங்க உடம்பில் தெம்பு வேணும்.. ம்ம்.. ஒன்னு நீங்களா சாப்பிடுங்க.. இல்ல நான் ஊட்டி விடறேன்…” என தயக்கத்தோடு மிரட்டியும் பார்த்தாள்….

அவளை முறைத்துப் பார்த்தவன், பிடிவாதமாக நிற்கும் அவளை கண்டு

” இப்போ என்ன நான் சாப்பிடணும் அவ்வளவு தானே??” என கேட்டு அவள் வைத்திருந்த தட்டில் இருந்து கொஞ்சமாய் உணவை எடுத்து உண்டவன், ” இப்போ நீ சாப்பிடு..” என கூறி எழுந்து சென்றான்…

ஒரே நாளில் அதிகமாய் அவனை வற்புறுத்த விரும்பாதவள், அவளும் உணவை உண்டு முடித்து,

கீழே படுக்கையில் இருந்த அவனிடம் இருந்து இரண்டடி தூரம் தள்ளி தனியான ஒரு பாயில் படுத்துக்கொண்டே நதிகா அவனிடம் கேட்ட கேள்வியில், அவளை அதிர்ந்து பார்த்தான் வெற்றி செல்வன்…

 

❤️ தொடரும்…❤️

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!