Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 17

ஒளி 17 ::

 

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன !
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன!
இரு மனம் சேர்கையில் பிழைகள்!
பொறுத்துக்கொண்டால் என்ன!
இரு திசைப்பறவைகள் இணைந்தே!
விண்ணில் சென்றால் என்ன!
என் தேடல்கள் நீ இல்லை!
உன் கனவுகள் நான் இல்லை!
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன!…

 



Advertisement

திருவிழா முடிந்து ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது… நடுவில் ஒரு முறை அவளின் மாமா போன் செய்து,

 

“ஒரு வழியா எல்லாத் தடையையும் தாண்டி அந்த இடத்துக்காரனிடம் பேசி முடிச்சுட்டோம் ரதிம்மா…இன்னும் ஒரு வாரத்தில் பத்திரம் பதிவு பண்ணிடலாம்.. நீ ஒன்னும் கவலைப்படாதே…” என்று சொல்லியிருந்தார்.   

Advertisement

 

Advertisement

இவர்கள் அந்த இடத்தை வாங்க கூடாதுன்னு நினைச்சு அதை தடை செய்ய அங்கே ஒரு கூட்டமே இருக்கே…அவங்களுக்கு வந்த வாழ்வை பாரேன் என்ற எண்ணமும்,அது எப்படி அந்த இடத்தை அவங்க வாங்கலாம் என்ற பொறாமையும் கொண்டவர்கள் தான் அந்தத் தடைகள் என்று அவர் சொல்லாமலே புரிந்தது.  

 

எப்போதும் போல அலாரம் அடித்தாலும் அதை அணைக்காமல் ஒலிக்க விட்டு அவள் இதையெல்லாம் யோசித்தவாறே படுத்திருந்தாள்..

Advertisement

 

இந்த வாரத்தில் சிவாவும் வேற இரண்டு முறை போன் செய்து அவரை மீட் பண்ணிட்டியா அட்லீஸ்ட் பெயராவது தெரிஞ்சுக்கிட்டியானு வெறுப்பேத்தறான்.. நானே அவங்களை எங்க போய் எப்படி தேடனு இருந்தா இவன் வேற…

 

அப்படி அவங்க பெயர் என்னவா இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இருந்தவள் அப்போது தான் பாடலின் வரிகளை கவனித்தாள்… 

 

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன !
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன!”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆமா இங்க டீக்கே வழி இல்லையாம் இதுல தொட்டுக்க பண்ணு கேட்குதாம்..”.என அவள் புலம்பும் போதே வீட்டின் அழைப்பு மணி அடித்தது..

 

இந்நேரம் யார் வந்திருப்பா, ஒருவேளை ஊர்ல இருந்து யாரும் வந்திருப்பாங்களோ என்றவாறே எழுந்து இரவு உடையின் மேல் ஓர் ஸ்டோலை போட்டுகொண்டு வந்து கதவை திறந்தாள்.

அவள் முன்னே மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்தை வைத்துக்கொண்டு உதட்டில் உறைந்த புன்னகையும் கண்களை நிறைக்கும் சிரிப்போடும் நின்றிருந்தவனை பார்த்தவள் உறைந்தே தான் போனாள்..

 

“ஹலோ மேம்! நான் பார்த்திபன்..” 

 

“உங்களுக்கு அசிஸ்டன்ட் செகரெட்டரியா ஜாயின் பண்ணிருக்கேன்” என்றவாறே அவளிடம் மலர்களை நீட்ட தன்னிச்சையாக அதை வாங்கினாள்.

 

அவனைக் கண்ட அதிர்வின் மகிழ்வில் அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் சிதறியது..யாரென்று தெரியாது.. பெயர் தெரியாது. இந்த நான்கு வருடத்தில் எத்தனை நாள் ஒரு முறை அவனை பார்த்து விடமாட்டோமா என்று தவித்து இருப்போம்.

 

ஏதோ நமக்கு பிடித்த பிரபலங்களின் சொல்லே வேத வாக்கு என்பது போல் சாதாரண மனிதனாக கூட இருந்தவனை அந்த அளவிற்கு தன்னுடைய பலமாக மாற்றிய தன் மனதினை என்னவென்று சொல்லுவது.

 

இதோ இப்போதும் அதே போல தான் நமக்கு பிடித்த ஹீரோவை எதிர்பாராமல் வாழ்வில் சந்தித்தது போல அவளின் ஒர்ஷிப் ஹீரோவை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

தூங்கி எழுந்து வருவதினால் ஏதோ கனவில் இருப்பவள் போல்  நின்றிருந்தவளின் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் கண்டு ஒரு நொடி கலங்கினானோ என்ற பிரம்மையை அவனே கலைத்தான்.

 

“சாரி மேம் ! தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல இருக்கு.. எனக்கும் பக்கத்து குவாட்டர்ஸ் தான் கொடுத்திருக்காங்க.. சரி உங்களை பார்த்து ஒரு வாழ்த்து பொக்கே கொடுக்கலாம்னு தான்  வந்தேன்…”

 

அவள் இன்னும் அதே நிலையில் இருப்பதை கவனித்தவன் அவள் முன் கையையாட்டியவாறு,

 

“ஹலோ ! மேம்! மேம் !” என்றவன் அப்போதும் அவள் அசராததைக் கண்டு,

 

“குந்தவை!” என்று ஒரு முறை அழுத்தி அழைத்தான்.

 

அப்போதுதான் கனவிலிருந்து வெளியே வந்தாள், அவன் அவளின் பெயர் சொல்லி கூப்பிட்டதை கூட அவள் கவனிக்கவில்லை..

 

“ஹான் ! சொல்லுங்க ! சொல்லுங்க !”

 

“அதான் சொன்னேனே மேம் !”

 

“சாரி! ஏதோ ஒரு யோசனை !” 

 

“ஓஓ! நான் தான் உங்க அசிஸ்டன்ட் செகரெட்டரி…சேகர் இப்ப இருக்காருல்ல அவரு டிரான்ஸ்பர் வாங்கிட்டு சொந்த ஊருக்கு போறதால நெக்ஸ்ட் லெவல் ப்ரோமோஷன்ல நான் அந்த போஸ்டிங்க்கு செலக்ட் ஆகிருக்கேன்…” 

 

“இன்னைக்கு சேர சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு…இப்பதான் ஊர்ல இருந்து வந்தேன். அப்படியே உங்களை பார்த்து விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்…” என அவன் பெரிய உரையை வழங்கிவிட்டு கிளம்ப ஆயத்தமானான்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளோ இன்னமும் கனவிலே இருந்தாள்.. அவன் சொன்னதில் என்ன என்ன விஷயம் அவள் மனதில் பதிந்ததோ யார் கண்டா…

 

“சரி மேம் ! நான் கிளம்பறேன் … ஆபீஸ்ல பார்க்கலாம்…”

 

“ஒரு நிமிஷம்!”

 

“சொல்லுங்க!” 

 

“உங்க பெயரை சொல்லவே இல்லை !!” 

 

அவனோ அவளை கேலியாக முறைத்தவாறே “முதல்ல இந்த உலகத்துக்கு வாங்க ! நான் இதோட ரெண்டு முறை என்னைப்பத்தி சொல்லிட்டேன்” 

 

அவளோ அசடு வழிந்தவாறு , “சாரி ! இப்ப உங்க பேரை சொல்லுங்களேன்… நான் கரெக்ட்டா நோட் பண்ணிக்கிறேன்” என்று சிறுபிள்ளையாய் கேட்டவளிடம், புன்னகையோடு 

 

“பார்த்திபன்!”     

 

“பார்த்திபன்!” அவன் பேரை சொல்லியபடியே அவளின் விழிகள் விரிந்தது ”எவ்வளவு பேரை யோசிச்சோம் பேபி ஆனால் இந்த பார்த்திபனை எப்படி விட்டோம்…”என்று அவன் பேரின் ஆராய்ச்சியில் இருந்தவளிடம் தலையசைத்தவாறு கிளம்பிவிட்டான்.

 

அவன் சென்று சிறிது நேரம் கழித்து சுயநினைவடைந்தவள் அப்போது தான் இன்னும் வெளியே நிற்பதை உணர்ந்து நெற்றியில் அடித்துக்கொண்டு உள்ளே சென்று கதைவடைத்தாள்.

 

சுவரில் சாய்ந்தவாரே எல்லாம் அசை போட்டாள்.. அப்ப இவ்வளவு நாள் அவரு கவர்ன்மெண்ட் வேலைல தான் இருந்திருக்காரு அதே போல இனி இங்க என்கூட தான் வேலை செய்ய போறாரா…

  

இது தெரியாம எவ்வளவு நாள் சுத்தி இருக்கோம் என்று யோசித்தவளின் மூளையில் அப்போது தான் மின்னல் வெட்டியது இவ்வளவு நேரம் அவன் பேச்சில் அவளை தெரியும் போன்ற பேச்சு ஏதும் இல்லை…

 

அவளின் மலர்ச்சி அப்படியே இறங்கியது.. “அப்ப அவங்களுக்கு என்னை ஞாபகமே இல்லையா…”என்று கலங்கினாள்.

 

“நீ அவங்களை நினைச்சுட்டு இருந்தா அவங்களும் அப்படியே இருக்கணுமா…அதும் ஜஸ்ட் ட்ராவல் டைம்ல பார்த்தது.. அதான் இப்ப மீட் பண்ணிட்டல்ல இனி எல்லாம் நல்லதா நடக்கும் பிரீயா விடு” என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டவள்…கடிகாரம் எட்டு முறை கூவியதைக் கேட்டதும்தான் நேரமானதை உணர்ந்து கிளம்பினாள்…

 

கிளம்பி ஆபீஸ் செல்லும் போது அவளுள்ளே ஒரு படபடப்பு , இதற்கு முன் தூரமாக இருந்தவன் இனிமேல் அவளருகே..இவள் தான் அவனுக்கு உயர் அதிகாரி என்பதை மறந்து அவன் பாராட்டுமாறு நல்ல விதமாக வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வேறு..

 

ஆபீசை அடைந்ததும் காலை வணக்கம் சொல்லுபவர்களுக்கு பதில் சொல்லியவாறே வந்தவள் இவளுக்கு முன்னே அவன் வந்திருப்பதைக் கண்டு ஒரு நொடி நின்றாள்.. 

 

அவனும் அப்போது அவளை தான் எதிர்பார்த்திருப்பான் போல , மனதை நிறைக்கும் புன்னகையோடு, 

 

“குட்மோர்னிங் மேம் !” என்றான்.

 

அந்த புன்னகை அவளின் மனதை நிறைத்தாலும் ஒரு படபடப்போடு, 

 

“குட் மோர்னிங்!” என்று சொல்லிவிட்டு அவள் கேபின் சென்று விட்டாள். 

 

அவள் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றைய வேலைகளை பார்வையிட்டாள்.. திடீரென,

 

“மே ஐ கமின்!” என அவன் குரல் கேட்கவும்,

 

ஒரு நொடி அதிர்ந்து பின் ,

 

“எஸ் கமின் !” என்றவாறே,

 

 

[the_ad id=”6605″]

 

 

 

உள்ளே நுழைந்தவனை அப்போதுதான் பார்த்தாள்… அவனிடம் கவனித்த விஷயங்களில் உடை நேர்த்தியும் ஒன்று.. இப்போதும் அதே போல பார்மலில் அவளுக்கு பிடித்த இள நீல நிறத்தில் முழுக்கை சட்டையும் கருப்பு பேன்ட்டும் போட்டு இன் செய்திருந்தான்…

 

அலை அலையாய் படிந்த கேசமும் நெற்றியில் சிறு விபூதி கீற்றும் இதெல்லாம் விட இதழ்கள் சிரிக்கும் போது சேர்த்து சிரிக்கும் கண்களோடு அவளெதிரே வந்து நின்றான் …

 

“மேம்!” என்று வேறு ஒரு குரல் கேட்கவும் தான் சிந்தை கலைந்தாள்..

 

அவனுடன் சேகரும் நின்றிருந்தார்..

 

“இவருக்கு என்ன என்ன  வேலைகள்னு எல்லாம்னு ஓர் அளவுக்கு சொல்லிருக்கேன்… நான் இன்னும் ஒரு மூணு நாள் வருவேன் அதுவரைக்கும் கூட இருந்து பார்த்துகிறேன்.. இவரும் உங்களை மாதிரி தான் அதனால வேலை எல்லாம் சீக்கிரம் அவர் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துடுவார்..”

 

“அதான் எனக்கே தெரியுமே” என்று அவள் மைண்ட் வாய்ஸ் ஓட,

 

“ஓகே சார்…ஈவினிங் சின்னதா ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க… உங்க மாற்றலையும் இவரோட அறிமுகத்தையும் முறையா சொல்லிடலாம்…”

 

“சரி மேம் ! நான் போய் அதற்கான ஏற்பாட்டைக் கவனிக்கிறேன்” என்று அவர் வெளியேற, இருவரும் தனித்து விடப்பட்டனர்.

 

அவனை கண்டதும் பேச யோசித்த ஆயிரம் விஷயங்களில் ஒன்று கூட அவள் நினைவில் வரவில்லை..அவனே அந்த அமைதியை கலைத்தான்.

 

“உங்களோட திட்டம் எல்லாம் பார்த்தேன்..உண்மையான உழைப்புக்கான அங்கீகாரமும் மக்களுக்குரிய சலுகைகள் கிடைக்க எடுத்த முயற்சிகளும் நல்லா இருக்கு…இன்னும் நிறைய திட்டம் இது போல நீங்க கொண்டு வந்து அது வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்று அவன் பாராட்டியதும் அவள் முகம் மலர்ந்து இதழ்கள் புன்னைகையில் விரிந்தது.

 

அத்தனை சீக்கிரத்தில் இவன் அங்கீகரிப்பவன் இல்லை என்பதை அறிவாள், வந்த முதல் நாளே அவன் பாராட்டு வார்த்தை கேட்டு வானில் பறந்தாள்.. 

 

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரிய்ய்ய்…”

 

“தேங்க்ஸ்! கண்டிப்பா” ஆனால்..

 

“என்ன ஆனால்!”

 

“இது போல நிறைய பண்றதுக்கு எனக்கு உங்க சப்போர்ட்டும் தேவை!”

 

“அவ்வளவு தானே ! கண்டிப்பா அதெல்லாம் சிறப்பா பண்ணிடலாம்.. நான் போய் இப்ப அவருக்கு ஹெல்ப் பண்றேன்” என்று கிளம்பி விட்டான்…

 

மாலை மீட்டிங்கில் அவளின் கம்பிரத்திலும் பேச்சிலும் ஒரு நொடி அவனை அசரடித்தாள்… கிளம்பும் போது அவளிடம் தேடி வந்து அதற்கும் பாராட்டி அவனின் போன் நம்பர் கொடுத்தான்… 

 

“இனி உங்க பிளான் எல்லாம் நான் தான் ஆர்கனைஸ் பண்ண போறேன்…ஒரே ஆபீஸ் ஒரே குவாட்டர்ஸ் உங்களுக்கு ஆபீஸ் விஷயமா ஏதும் பேசணும்னா தேவைப்படும்ல அதனால நோட் பண்ணிக்கோங்க” என்று நம்பர் கொடுத்தான்…

 

“உங்க நம்பர்ல இருந்து எனக்கு ஒரு மிஸ்ட் கால் குடுங்க நான் சேவ் பண்ணிக்கிறேன் …”

 

அவன் சொன்ன எண்களை தன் போனில் அழுத்தியவள் அது ஒலிக்கும் வரை காத்திருந்தாள்… ஆனால் பிஸி என்றே வந்துகொண்டிருக்க, கால் வந்ததிற்கான அறிகுறியாக அவன் போன் ஒலிக்க அந்த பாடலை கேட்டு அதிர்ந்து நின்று விட்டாள்…ஆனால் அவனோ பாடலை ரசித்துக்கொண்டு  போனையே புன்னைகையோடு பார்த்திருந்தான்…

 

நீ அந்த ரதியின் மன்மதனும் இல்லை !

அந்த குந்தவையின் தேவனும் இல்லை !

இந்த ரதிக்குந்தவையின் பார்த்திபன் என்பதை அறிந்த நொடி உணர்ந்தேன்!

உன்னை விட உன் பெயர் என்னில் அதிகம் தாக்கம் தரும் என்று ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!