Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 18

ஒளி  18 ::::

 

எனைத்தான் அன்பே மறந்தாயோ!
மறப்பேன் என்றே நினைத்தாயோ!
என்னையே தந்தேன் உனக்காக!

ஜென்மமே கொண்டேன் அதற்காக!
சுந்தரி கண்ணால் ஒரு சேதி!



Advertisement

சொல்லடி இந்நாள் நல்ல தேதி!
நான் உனை நீங்க மாட்டேன்!

நீங்கினால் தூங்க மாட்டேன்!
சேர்ந்ததே நம் ஜீவனே!

Advertisement

பாடலின் வரிகளை கேட்டு அவள் அதிர்ந்து நிற்க அவனோ அந்த  வரிகளை ஒரு புன்சிரிப்போடு ரசித்துக் கொண்டிருந்தான். அவள் நம்பரில் இருந்து அவனுக்கு அழைப்பு போகவில்லை. 

Advertisement

 

அவளிடம் அந்த அதிர்வு எதனால் என்பது அவள் அறியாதது என்பதை விட அவள் உணராதது. எப்போதும் அவனை இப்படி பார்க்காததாலா அல்லது அதனை அவன் ரசித்த விதமா, அதுவும் பாடல் வரிகளுக்கே அவன் கண்கள் காட்டிய வண்ணங்களா… அவள் இந்த ஆராய்ச்சியில் இறங்கும் முன்னர் சுதாரித்தாள்.     

 

Advertisement

போன் ஒரு முறை முழுதாய் அடித்து ஓய்ந்ததும் தான் சுற்றம் உணர்ந்து அவளை கவனித்தான். “சாரி ! வீட்ல இருந்து போன், நான் பேசணும் நீங்க என் நம்பர்க்கு உங்க பெயர் போட்டு ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பிடுங்க நான் சேவ் பண்ணிக்கிறேன்” என்றவாறே அவளிடம் தலையசைத்து கிளம்பி விட்டான்.

 

வீட்ல இருந்து என்றால் யாரா இருக்கும்? பேமிலி எல்லோரையும் இங்க கூட்டிட்டு வந்திருப்பாரா? யார் யார் இருப்பாங்க? என அவன் குடும்பம் பற்றிய சிந்தனையில் இருந்தவளை சேகர் வந்து கலைத்தார்.

 

“நீங்க இன்னும் கிளம்பலையா?”

 

“இதோ கிளம்பிட்டேன் சார். நீங்க எப்ப ஊருக்கு போறீங்க? எல்லாம் பேக் பண்ணிட்டிங்களா?”

 

“ம்ம்ம்…நான் இந்த வாரம் கிளம்பறேன். எல்லாம் ஏற்கனவே எடுத்து வைச்சாச்சு, அங்க சொந்த வீடிருக்கு…அப்ப அப்ப அங்க போயிட்டு வருவோம் அதனால பெருசா எந்த தேவையும் இல்லை…ஜஸ்ட் இங்க இருக்கறது எல்லாம் அங்க கொண்டு போய் வைக்க போறோம், அவ்ளோ தான்.”

 

“ம்ம்ம்.. நம்ப சொந்த இடத்திலே போய் இருக்கறது நல்லது தான் சார்.. நீங்க சொல்றது கேட்க சந்தோஷமா இருக்கு..”

 

அவர் சிரிப்போடு தொடர்ந்தார்,

 

[the_ad id=”6605″]

 

 

 

“பார்த்திபன் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரியறாரு, நம்ப டிபார்ட்மெண்ட்லயே அசிஸ்டன்ட் லெவெல்ல சேர்ந்து ஐந்து வருஷத்துல இந்த பதவிக்கு வந்து இருக்காரு… கை சுத்தம் மட்டுமில்லாம விவரமான ஆளும் கூட, இருக்க இடத்தோட விவரம் மட்டும் இல்லாம எல்லாமே தெரிஞ்சு வைச்சு இருக்காரு…” 

 

“இதெல்லாம் விட யார் யாருகிட்ட எப்படி நடந்துக்கணும் எப்படி நடக்க வைக்கணும்னு எல்லாம் சரியாய் கணிச்சு நடந்துக்கறார்.அவர் கிட்ட நிறைய பிளான்ஸ் இருக்கு..” 

 

“இளவயதுக்காரங்களான நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த துறையை வழி நடத்தினா மக்களுக்கும் சரி இங்க வேலை செய்யறவங்களுக்கும் சரி நிறைய பலன் கிடைக்கும். என்னோட அனுபவத்துல கணிச்சது இதெல்லாம்…”

 

அவர் சொல்வதையெல்லாம் சிறு சிரிப்போடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவர் சொல்லி தான் இதெல்லாம் அவளுக்கு தெரியணும் என்று இல்லை, எப்படி வந்த ஒரே நாளில் இவர் கணித்தாரோ அதே போல தானே அவளும் அவனை பார்த்த ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டாள்.  

 

அவளின் அமைதியான சிரிப்பைக் கண்டு “என்ன, நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”  

இரண்டு பேரும் இளவயது, இவங்களுக்கு கீழே வேலை செய்யறவங்கள பத்தி புகழ்ந்து பேசுவது பிடிக்கலையோ என்று அவர் யோசனையாக கேட்டார்.

 

“அச்சோ! அப்படிலாம் இல்ல, எப்பவும் எங்களை போல யங்ஸ்ட்டரை வேலை செய்யற இடத்தில பெரியவங்க இது போல புகழ்ந்து பேசறது ரொம்ப குறைவு சார்,அதான் அதை சந்தோஷமா பார்த்துட்டு இருக்கேன்”.. 

 

“நீங்க சொல்றது சரி தான்.. பெரியவங்க எனக்கு தான் எல்லாம் தெரியும்னு சின்னவங்களை அதட்டுறது, சின்னவங்க உங்களுக்கு எல்லாம் நான் மரியாதை தரணுமா என்ற அலட்சியப்படுத்துவது… இதனால தான் இரண்டு பேருக்கும் ஒத்து போகல.. ஆனா நீங்க ரெண்டு பேரும் அப்படி இல்லையே அதனால் தான் தயங்காம என்னோட கணிப்பை சொன்னேன்.”

 

“ம்ம்ம்… நீங்க சொல்றது சரி தான்.. அப்பறம் உங்க பொண்ணு கல்யாண விஷயம் என்னாச்சு சார்..”

 

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. பையன் எங்க ஊரு தான்.. அங்க போன ஒரு மாசத்துல என்னோட பெரிய பொண்ணுக்கு நிச்சயம் வைச்சு இருக்கேன், முறையா நேர்ல வந்து அழைக்கிறேன் நீங்க கண்டிப்பா திருச்சிக்கு வரணும். முன்னாடியே சொல்லி வைக்கிறேன்.”

 

“கண்டிப்பா வரேன்..”

“சரிமா! ரொம்ப நேரம் ஆச்சு போல உங்களை கிளம்ப விடாம நிறுத்தி வச்சுட்டு பேசிட்டு இருக்கேன்..”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்… வீட்டுக்கு போய் மட்டும் என்ன பண்ண போறேன்..நீங்க கிளம்புங்க, நானும் கேபின் லாக் பண்ணிட்டு கிளம்ப வேண்டியது தான்.. இப்ப நீங்க போகும் போதோ இல்ல அங்க ஜாயின் பண்ணும் போதோ ஏதும் தேவைன்னா கூப்பிடுங்க சார்..”

 

“சரிமா! நான் கிளம்பறேன். நீயும் பத்திரமா கிளம்பு..” 

 

“ம்ம்ம் சரி..” என்றவாறே சிறிது நேரம் கழித்து அவளும் கிளம்பினாள்.

 

எப்போதும் எல்லாரிடமும் ஒதுங்கி இருப்பவள் என்னவோ சேகரிடம் மட்டும் அப்படி ஒதுக்கம் காட்ட முடியவில்லை.. அவரின் வயதான மரியாதையான தோற்றமா அல்லது அவரின் மென்மையான குணமோ ஏதோ ஒன்று அவரிடம் இந்த அளவிற்கு பேச வைத்தது.

 

பார்த்திபனைப் பற்றி அவர் சொன்னவற்றை எல்லாம் அசை போட்டபடியே இருப்பிடம் வந்தவள் “அவர் குவாட்டர்ஸும் இங்க தானே சொன்னாரு..” எதுவா இருக்கும் என்று யோசனையோடு உள்ளே சென்று எப்போதும் போல அவள் வேலைகளை முடித்து உறங்கி விட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

மறுநாள் அலுவகம் செல்ல கிளம்பி வெளியே வந்து அவள் அலுவக வண்டிக்காக காத்திருக்கும் போது தான் அவனும் பார்க்கிங் இடத்திலிருந்து வெளியே வருவதை பார்த்தாள். 

 

இவளை பார்த்ததும் “குட் மோர்னிங் மேம்! கிளம்பியாச்சா?”

 

“குட் மோர்னிங் ! கிளம்பிட்டேன்! வண்டிக்காக வெயிட் பண்றேன்.”

 

“ஓஓ! சரி நீங்க வாங்க! நான் கிளம்பறேன்” என்று சென்று விட்டான்.

 

“அச்சோ இங்க எங்க ஸ்டே பண்ணி இருக்காங்கனு கேட்டு இருக்கலாம்… அதை நான் மறந்துட்டேனே?”

 

அதன் பின் இவளும் ஆபீஸ் சென்று அன்றைய வேலையில் இறங்கினாள்.. அலுவக விஷயமாக நிறைய பேசினார்கள் ஆலோசித்தார்கள்..

 

தீடிரென அவள் போன் வைப்ரேட் ஆகியது, அதை எடுத்து பேசப் பேச அவள் முகம் பதட்டமாகியது. இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தவள் “இதோ உடனே கிளம்பி வரேன்” என்றபடி போனை வைத்தாள்.

அவள் அதிர்ச்சியை எல்லாம் எதிரே இருந்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஏதோ சீரியசான விஷயம் என்று தோன்றியது.

 

நீங்கா படபடப்போடு , “நான் வெளிய போயிட்டு வரேன். நீங்க இதெல்லாம் பார்த்து முடிச்சு வைங்க” என்றவாறே அவள் போன், பேகை எடுத்துக் கொண்டிருந்தவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

 

அதை பார்த்ததும் கண் கலங்கியவாறு தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள்.

 

இப்போது சோர்ந்து அமரக்கூடாது, நமக்கு நேரம் இல்லை என்று அவளுக்கு அவளே சொல்லியபடியே “ம்ம்ம்..சேகர் சார் வேற ஒரு முக்கியமான வேலையா போயிருக்காரு.. அதனால் நீங்க என்கூட வாங்க.”

 

“நானா? வேற யாரும் கொஞ்சம் சீனியரை கூட்டிட்டு போங்களேன்” என்றவன் அவள் கலக்கம் இன்னும் கலையாததைக் கண்டு “சரி வாங்க! போகலாம்” என்றான்.

 

வண்டியில் ஏறி அமர்ந்ததும் இன்னும் பதட்டத்தை விடாதவளிடம்,

“முதல்ல தண்ணீ குடிங்க ! பொறுமையா மூச்சு விடுங்க.. எதுவானாலும் பார்த்துக்கலாம். சரி பண்ணிடலாம். ஒண்ணுமில்லை சரியா..”

 

ம்ம்ம் … என்றபடியே அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.    

 

“பயப்படாம பதட்டப்படாமால் என்னனு கொஞ்சம் பொறுமையா யோசி..” என்று பார்த்திபன் சொல்ல, 

 

இதே போல ஒரு முறை ட்ரைனில் சொல்லியிருக்கானே பயம் தான் உன்னோட முதல் எதிரி என்று, அன்றைய நாளில் அவன் சொன்ன வார்த்தைகளை இன்று நினைத்து தன்னை நிலைப்படுத்தியவள், “இவங்க தான் கூட இருக்காங்கல்ல எதுவும் ஆகாது… எல்லாம் சரி பண்ணிடலாம்” என்று நினைத்தவளுக்குள்  தானாகவே ஒரு தைரியம் வந்தது.   

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் பேச்சு ஒரு திடத்தைக் கொடுக்க, கர்ச்சீப்பை தண்ணீரில் நனைத்து முகத்தை அழுந்த துடைக்கொண்டு, சில பல போன் கால்கள் செய்து பேசினாள்.

 

அவள் பேசுவதிலிருந்து விஷயத்தை கிரகித்தவனுக்கும் அதிர்ச்சியே! 

 

ஐயோ! என்றானது. யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் எப்படி சரி செய்ய போகிறோம் என்று இருவரும் யோசனையில் இருந்தனர்.

 

அந்த பயம் கூட என்னை மிரட்ட பயம் கொள்ளும் நீ என்னுடன் 

இருக்கும் போது!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!