Skip to content
Post Views: 1,130
மனசு 12
“டேய் சொல்லுடா, ஹாஸ்பிட்டல் போனீயா? இல்லையா? சித்தப்பா ஒரு டாக்டரை உனக்கு அறிமுகப்படுத்தினார்ல்ல? என்ன பண்ண?” கார்த்திகேயன் உதய்கிருஷ்ணா சட்டையை பிடித்தான்.
ஹாஸ்பிட்டலா? டாக்டரா? யாருக்கு? என்ன? விதார்த் பதறினான்.
Advertisement
“இதோ இவனுக்கு தான்…” என உதய்கிருஷ்ணாவை கை காட்டி அவன் பிரச்சனைக்காக விசுவமூர்த்தி மருத்துவர் ஒருவரை அவனை அணுக சொல்லி இருப்பார். அவரும் இரு முறை அவனுடன் சென்றிருக்கிறார் என்றான்..
Advertisement
அண்ணா, உனக்கு அதான் அன்னிக்கு…தடுமாறினான் விதார்த்.
Advertisement
உதய்கிருஷ்ணா அமைதியாக நிற்க, புயலென அவனை நெருங்கிய இன்பவேணி, “இன்னும் எத்தன விசயத்த மறச்சி வச்சிருக்க?” கோபமாக கேட்டாள்.
Advertisement
“நான் இருந்தா என்ன செத்தா என்னன்னு தான விட்டு போன? இப்ப எதுக்கு என்ட கேக்குற? உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை…நீ வெளிய போ…” சீறினான்.
“ஏய், என்னோட கேள்விக்கு பதில் சொல்லுடா? ட்ரீட்மென்ட் பாத்தியா இல்லையா?” கார்த்திகேயன் சினந்தான்.
பாத்தேன். இப்ப பிராபிளம் இல்ல…
பிராபிளம் இல்ல…இல்ல இல்லன்னு தான கழுத்தறுத்துட்ட. எனக்குன்னு நீ மட்டும் தான் இருக்கான்னு அப்படி டயலாக் பேசுன? எல்லாத்தையும் மறைக்கிறது தான் உன்னோட ப்ரெண்ட்ஷிப்பா? கத்தினான் கார்த்திகேயன்.
உதய்கிருஷ்ணாவிடம் பதிலில்லை.
சொல்லுடா? இவ்வளவு நடந்துருக்கு? ஒரு வார்த்த சொல்லணும்னு கூட தோணலையா? அன்னிக்கு மட்டும் சித்தி, சித்தப்பா, இன்னு எங்க இருக்காங்கன்னு அப்படி பதறுன?
அமைதியாக கார்த்திகேயனை பார்த்து, நீ சொன்னீயா? நான் சொன்ன அப்புறம் கண்டிப்பா நீ கண்டுபிடிச்சிருப்ப? சொன்னீயா? நான் கால் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது…பதிலுக்கு கேட்டான் உதய்கிருஷ்ணா.
நடந்ததை கேட்டு கோபத்துல சிம்ம தூக்கி எறிஞ்சுட்டேன். சித்தப்பா இறந்தப்ப கால் பண்ணதுக்கு நீ எடுக்கவேயில்ல..
“நீ பதில் பேசல. அதான் நான் எடுக்கல” தோள் குலுக்கி சாதாரணமாக சொன்னாலும் மனதுக்கு விசுவமூர்த்தி உயிரோடு இல்லை என்பதை உதய்கிருஷ்ணாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அண்ணா, உங்க வாக்குவாதத்த அப்புறம் வச்சுக்கோ. முதல்ல ஹாஸ்பிட்டல் வா” உதய்கிருஷ்ணா கையை இன்பவேணி பிடிக்க தட்டி விட்டு, “உன்னோட வேலைய பாரு…”
சரி, நீ வர வேண்டாம். அண்ணா எந்த டாக்டர்னு சொல்லு நாம கேட்டுக்கலாம்..
என்னமும் செய்யுங்க என்ற பாணியில் உதய்கிருஷ்ணா செல்ல,
“கிருஷ், இன்னும் ஒரு மாசத்துல நாம கல்யாணம் பண்ணிப்போம். நீயே வருவ…” பழைய இன்பவேணி போல அவள் பேச, அவன் அசைந்த பாடியில்லை. சென்று விட்டான்.
“அக்கா…” சாயாலி இன்பவேணியை அணைக்க, அவள் தன் அன்னையை பார்த்தாள். ஆசையாக பார்த்த குழந்தையை துக்கி முத்தமிட்ட கோசலை நெஞ்சோடு ஜான்வியை அணைத்துக் கொண்டார்.
கோசலை சம்மதம் புரிந்து, அண்ணனை பார்க்க கார்த்திகேயனுக்கு கசக்கவா செய்யும்? அவன் புன்னகைத்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.
“இன்னு, தெறிக்க விடலாமா?” கையை கசக்கி விதார்த் கேட்க, “விட்டுட்டா போச்சு” என நண்பனை அணைத்து, அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
அவனுக்கும் அவள் நிலை புரிந்தது தான்.
மகா…மகா…கார்த்திகேயன் குரல் கொடுக்க, எல்லாரும் வெளியே செல்ல..மகாலட்சுமி தன் மகனுடன் சேர்ந்து அங்கிருந்த ரோஜாக்களை பறித்துக் கொண்டிருந்தாள்.
அய்யோ அண்ணி! இன்னுமா நீ இத விடல. ஆகாஷ் குட்டி அத்தைட்ட வா…என கார்த்திகேயன் மகாலட்சுமி தம்பதியினரின் புத்திரன் ஆகாஷை தன் பக்கம் இழுத்து கட்டிக் கொண்டாள் இன்பவேணி. அனைவரும் மனநிறைவுடன் இருக்க, பாட்டி அவர் பேரனை எண்ணி கவலையுடன் அவனறையை பார்த்தார்.
“எல்லாம் சரியாகிடும் பாட்டி” சித்ரலேகா பாட்டி கையை ஆதரவாக பிடிக்க, புன்னகைத்துக் கொண்டார்.
ஆகாஷ் ஜான்வியுடன் சாயாலி விளையாண்டு கொண்டிருக்க, விதார்த் மன்னிப்பு கேட்க அவளருகே வந்தான். யாரோ போல அவனை பார்த்து கடந்து சென்றாள்.
அன்றிரவு பாட்டி தன் மகன் ராமநாதனிடம் பேசி வெளியே வர, சித்ரலேகா அவளுக்கென கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றாள். அவளை பார்த்தவாரே பெரிய பேரன் அறைக்கு சென்றார்.
மாலை நடந்தவற்றை அசை போட்டவாறு நெஞ்சில் குழந்தையை சுமந்து தலைக்கு அடியில் கை கொடுத்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான் உதய்கிருஷ்ணா.
கதவு திறக்கும் ஓசையில் பாட்டியை பார்த்து, குழந்தையை மெதுவாக நகர்த்தி படுக்கையில் போட்டு கேள்வியுடன் அவரை பார்த்தான்.
பாட்டி தயங்க,
அவரை தள்ளி அழைத்து சென்று, “அவள பத்தி பேசுறதா இருந்தா கிளம்புங்க பாட்டி” என்றான் பட்டென.
இல்லயா, அந்த புள்ள சித்ரா யாரு? புத்திசாலியா பேசுது..ஆனா நம்ம வீட்ல வேலைக்கார பொண்ணு…
பாட்டி அக்காவ அப்படி சொல்லாதீங்க?
ஆறு மாசத்துக்கு முன்னாடி குன்னூர் போயிருந்தேன். நடுரோட்டுல கையில பையோட ஓடி வந்துட்டு இருந்தாங்க. என்னோட கார்ல மோத பாத்தாங்க. அவங்கள ஆளுங்க துரத்தீட்டு வந்தாங்க..அவங்கள காப்பாத்தி விசாரிச்சேன்.
சித்ராக்காவுக்கு அம்மா இல்லையாம். சின்ன வயசுல இருந்தே சித்தியோடவும் அவங்க புள்ளைங்களோடவும் கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருந்திருக்காங்க. ஆனா அவங்க கொடுமை எல்லை மீறிடுச்சி…அவங்க அப்பாவாலையும் யாரையும் கண்டிக்க முடியல…
அப்படி என்ன பண்ணாங்கய்யா?
பணத்துக்காக அவங்க சித்தி வயசான ஆளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க பாத்துருக்காங்க. மாப்பிள்ள யாருன்னு தெரியாம வீட்டுக்குள்ள இருந்த அக்காவுக்கு ஒரு பெண்மணி தான் சொல்லி இருக்காங்க. அவங்க அப்பாட்ட கேட்டதுக்கு அவரால ஒண்ணும் செய்ய முடியலன்னு கைய விரிச்சிட்டாரு. அதான் வீட்டை விட்டு ஓடி வந்திருக்காங்க…
முதல்ல ஹாஸ்ட்டல் சேத்து விடுற எண்ணத்துல தான் இருந்தேன். அந்த வயசான ஆளு அவங்க ஏரியா கவுன்சிலராம்..ஆளுங்க எப்பனாலும் வந்துருவாங்கன்னு பயம். கல்யாணத்துக்கு முந்தைய நாள் வந்துட்டாங்க…அதான்..மறுநாள் அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போய் பேசுனேன். அவங்க என்னையும் அக்காவையுமே தப்பா பேசுனாங்க…அவங்கள அந்த கும்பல்ல விட்டு வர மனசில்ல. அதான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன். அவங்க என்னை விட ஒரு வயசு தான் பெரியவங்க. அவங்க பணத்துல தான் அவங்க குடும்பத்தையே பாத்துட்டு இருந்திருக்காங்க..
பாட்டி அவங்கள வேலைக்காரின்னு சொல்லாதீங்க. அவங்க எம்.ஏ; எம்.பில் படிச்சிருக்காங்க…
என்னய்யா சொல்ற? உங்க அத்தையும் தாத்தனும் வேற அந்த புள்ளட ரொம்ப தப்பா பேசி வச்சிருக்காங்க..
அக்கா அதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க பாட்டி. அவங்களுக்கு பாதுகாப்பான இடம் இங்க தான் கிடைச்சிருக்கு..
என்னய்யா சொல்ற? வயசு முப்பத்து நாலு இருக்கும்னு சொல்ற? மாப்பிள்ள பாக்கலாமே!
பாத்தேன். அவங்க பேக் கிரவுண்ட விசாரிக்கிறாங்க. நம்ம வீட்டு கேர் டேக்கர்னு தான் பதிஞ்சு வச்சேன். ஆனாலும் பேசுறவங்க சரியில்ல…வருத்தப்பட்டான்.
சரிய்யா, நாம நல்ல இடமா பாத்து அந்த புள்ளைக்கு முடிச்சி வைக்கலாம். அதே மாதிரி நீயும் கல்யாணம்???? பேரனை ஏறிட்டார்.
அவ பேசுனது பெருசா எடுக்காதீங்க. எனக்கு குடும்பம் உறவுகள் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை..அன்னிக்கி மாதிரி பிரச்சனைன்னா விட்டு போயிருவா…முதல்ல நான் மட்டும் தான் இருந்தேன். ஆனா இப்ப ஜானு இருக்கா பாட்டி…கண்டதையும் யோசிக்காம தூங்குங்க…சொல்லி படுத்து விட்டான். பாட்டி சிந்தனையுடன் சென்று விட்டார்.
மனம் நிம்மதியடைந்தாலும் இன்பவேணியால் உதய்கிருஷ்ணா வாழ்க்கையின் வேதனையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மனம் முரண்டி அவனின் துயரத்துக்காக தவித்தது. அவன் கஷ்ட காலத்தில் தான் உடன் இல்லாமல் இருந்து விட்டோமே! என குற்றம் சாட்டியது.
பத்மா தன் அன்னையை தவறாக பேசியது தெரிந்ததிலிருந்து விதார்த் இன்பவேணி இடையே சிறு இடைவெளி தோன்றியது. ஒரே கல்லூரி, ஒரே பிரிவு, வகுப்பு என்றாலும் இன்பவேணியிடம் இடைவெளி தெரிய மிகவும் சோர்ந்து போனான் விதார்த்.
பள்ளியில் இரு வருடங்களாக நட்பு தொடர்ந்தாலும் இருவரும் அருகிலே இருந்தனர். ஆனால் கல்லூரியில் இருவருக்கும் தனித்தனி நட்பு வட்டங்கள் கிடைத்தது. அதற்காக இருவரும் பேசாமல் எல்லாம் இல்லை.
மரத்தடி நிழலில் பைக் மீது அமர்ந்து விதார்த் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் விழிகள் முழுவதும் இன்பவேணியிடமே. அவளும் அவளது தோழிகளுடன் ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
என்னடி இன்பா? உன்னோட ஆளு வச்ச கண்ணு வாங்காம உன்னையே பாக்குறான். போ பேசிட்டு வா…என்றாள் ஒருத்தி.
ஏய்ய்ய்..எத்தன தடவ சொல்லி இருக்கேன். விது என்னோட சைல்டுகுட் ப்ரெண்ட்… எங்களுக்குள்ள லவ்வெல்லாம் செட்டே ஆகாது.
“ஆமாடி இவங்களுக்குள்ள செட்டே ஆகாது,….” கேலியாக இழுத்த ஒருத்தி, அவன் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கினால் இவளிடம் பகிராமல் உண்ண மாட்டான். இவள் வாங்கினால் அவனுடன் பகிராமல் உண்ண மாட்டாள்..
சும்மா இருங்கடி…அது எங்களோட பழக்கம்…
ஆமாடி, உங்களுக்கு தெரியுமா? அந்த விதார்த் எப்போதும் இன்பா வீட்லயே தான் இருப்பான். சில இரவுகளில் அவள் வீட்டிலே கூட தூங்கி இருக்கான் அவர்களுடன் பள்ளியில் படித்த காயத்ரி கூறினாள்.
என்னடி சொல்ற?
ஆமாடி, இவ அப்பா அம்மாவுக்கு விதார்த்னா உயிருடி..
ஆமா, இப்ப அதுக்கென்ன? விது எங்க வீட்ல ஒருத்தன் தான். என்னோட அம்மா அப்பாவுக்கு அவன் மகன் மாதிரி..
ஓஓஓ! ஓஓஓ!….பெண்கள் ஓலமிட,
“ஏன்டி கத்துறீங்க? எல்லாரும் நம்மவே பாக்குறாங்க….” பல்லை கடித்தாள் இன்பவேணி.
சரிடி…அவன விடு என்ற காயத்ரி, அப்ப விதார்த் அண்ணாக்கும் உனக்கும் சம்திங் சம்திங்…
காயூ நீ ஓவரா போற…பற்களை நெறித்தாள்.
ஹேய்…நீங்க விதார்த் அண்ணாவை பாக்கணுமே! பயங்கர ஹண்ட்சம்…அவன் மட்டும் கண்கண்ணாடி அணியலைன்னா நம்ம ஹூரோக்களையே மிஞ்சிடுவான். அவ்வளவு அழகு…அவன் முடி என்ன? அவனோட கண்ண பாத்தீங்க அப்பவே ப்ளாட் தான்…அவனோட ரோஸ் லிப்ஸ் இருக்கே! காயத்ரி எல்லை மீறி உதய்கிருஷ்ணாவை வர்ணிக்க,
“ஜஸ்ட் செட் அப் காயூ…..” அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தி விட்டாள் இன்பவேணி.
எல்லாரும் அவர்களை பார்க்க, விதார்த் அவர்களிடம் ஓடி வந்தான்.
“இன்னு என்னாச்சு?” அவன் பதற, அவனை ஒரு பார்வை பார்த்த காயத்ரி, மூச்சு ஏறி இறங்க காளியாய் நின்றிருக்கும் இன்பவேணியை கண்டு…
பாருங்கடி…நான் சொன்னேன்ல. நான் அவன பத்தி பேசுனா இவளுக்கு எப்படி ஏறுது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இன்பா, “நான் விதார்த்தோட அண்ணாவை கரெக்ட் பண்ணி அவரோட கார்ல உங்க எல்லார் கண் முன்னாடியும் இதே காலேஜூக்கு வந்து இறங்கல நான் காயத்ரி இல்ல…” என்று கழுத்தை வெட்டி காயத்ரி செல்ல, தோழிகள் அதிர்ந்து அவளையும் இன்பவேணியையும் பார்த்தனர்.
“நில்லுடி…” இன்பவேணி காயத்ரி பின்னே வந்து அவள் கை பிடித்து இழுத்து, “உன்னால கிருஷ் பக்கம் கூட போக முடியாது. தாராளமா ட்ரை பண்ணு…” சொல்லி இவளும் நகர, நடப்பதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விதார்த்.
“இன்னு…என்ன பேசுற?” விதார்த் அவள் பின் ஓட, இன்பவேணி கோபம் தணியாமல் “நீ உன்னோட வேலைய பாத்துட்டு போ” கத்தி சென்று விட்டாள்.
நேராக இன்பவேணியின் மற்ற தோழிகளிடம் வந்து பேசியதை கேட்டு அறிந்தவன் உதட்டில் சிறு புன்னகை.
வகுப்பில் அன்றைய வகுப்பை கவனிக்க முடியாமல் திண்டாடினாள் இன்பவேணி. காயத்ரி வேண்டுமென்றே அவள் முன் வந்து செல்ல இருக்க, அவள் தோழிகள் அவளை அடக்கினர்.
மதிய உணவின் போது அமைதியாக உணவு அனைவருக்கும் உள் செல்ல, காயத்ரி மீண்டும் வெறுப்பேற்றி சென்று விட்டாள்.
“உனக்கு எதுக்கு இன்பா இவ்வளவு கோபம் வருது?” ஒருத்தி கேட்க, பள்ளியில் நடந்ததை கல்லூரி தோழியிடம் கூறினாள்.
நான் எதுக்கு கோபப்படணும்? தெரியலடி. ஆனா ஸ்கூல்ல எப்பவும் போல என்னையும் விதுவையும் சேர்த்து வகுப்பினருடன் டாக் போகும் போது, நான் எதேச்சையாக என் அம்மாவை விது அத்தை பேசியதை சொல்லீட்டேன் என விசயத்தை கூறி, அவங்க வீட்டுக்கு மருமகளா போய் நீ அந்தம்மாவ பழி வாங்கன்னு ஒருத்தி சொன்னா…
விது என்னோட தோழன் மட்டும் தான்னு சொன்னேன்., அப்ப தான் கிருஷ லவ் பண்ணி அந்த வீட்டு மருமகளா போய் அவங்கள பழி வாங்க சொன்னாங்க. எனக்கு அது சரியா படல. விட்டுட்டேன்…ஆனா..இப்ப அத வச்சு தான் காயூ பேசுறா..அத விட அவ கிருஷ கரெக்ட் பண்ணப் போறேன்னு சொல்றா…கடுப்புடன் பேசினாள்.
தோழிகள் அனைவரும் சிரித்தனர்.
ஏன்டி சிரிக்கிறீங்க?
ஏய் பைத்தியம், உனக்கு விதார்த் அண்ணாவ பிடிச்சிருக்கான்னு கண்டுபிடி. காயூ அவர கரெக்ட் பண்ணா உனக்கு எதுக்கு கோபம் வரணும்.??? காயூ நம்ம தோழி தான். நீ உதவலாம். உன்னால ஏத்துக்க முடியல. நீ ஜெல்லஸ் ஆகுறடி. உனக்கு விதார்த் அண்ணாவ பிடிச்சிருக்கு..
அய்யோ! அந்த உம்மணாமூஞ்சிய எனக்கு பிடிக்குமா? நெவர்…நடக்கவே நடக்காது..
சரி, அப்ப நான் சொல்றத செய். உன்னால செய்ய முடியலைன்னா கண்டிப்பா நீ அவர லவ் பண்றன்னு அர்த்தம்.
“என்ன செய்யணும்?” உதட்டை பிதுக்கி கேட்டாள்.
விதார்த் அண்ணாட்ட போய், உங்கள என்னோட ப்ரெண்ட் காயூவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கள லவ் பண்றா. அவள ஏத்துப்பீங்களான்னு கேளு…
இன்பவேணி தோழியை முறைக்க, கேட்டா தான்டி உம் மனசுல என்ன இருக்குன்னு தெரியும் என்றாள் மற்றவள்.
“சரி, ட்ரை பண்றேன்” முகத்தை கோணலாக்கி பெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இவளையே கவனித்துக் கொண்டிருந்த விதார்த்திற்கு என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் தன் அண்ணன் சம்பந்தப்பட்டது என்று மட்டும் புரிந்தது.
அன்று இரவு ஏழு மணிக்கே வீட்டிற்கு வந்திருந்தான் உதய்கிருஷ்ணா. அண்ணனும் தம்பியும் டேபிள் டெனிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடைக்கு செல்ல வெளியே வந்த இன்பவேணி உதய்கிருஷ்ணாவின் காரை பார்க்கவும் பொருட்களை வாங்கி அன்னையிடம் கொடுத்து, “அம்மா..விதுவ பாத்துட்டு வாறேன்” என கூறி உதய்கிருஷ்ணா வீட்டிற்கு வந்தாள்.
தயக்கமெல்லாம் இல்லாமல் அவள் உள் நுழைய, ராமநாதன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹாய் அங்கிள்…
வாம்மா…ரொம்ப நாளா ஆளவே காணோம்.
“சும்மா தான் அங்கிள்” அவள் விழிகள் சுழல, விது உதயோட டேபிள் டென்னிஸ் விளையாண்டுட்டு இருக்கான். போய் பாரும்மா…
“ஓ.கே அங்கிள்” என அவர்கள் இருக்கும் இடம் சென்றாள். இருவரும் இவள் வரும் அரவம் கேட்டு நிற்க, கண்ணாடி இல்லாமல் வியர்த்து வழிய நின்றிருந்த உதய்கிருஷ்ணாவை பார்க்கவும் காயத்ரி கூறியது தான் நினைவில் வந்தது..
“ஆமால்ல… கிருஷ் ஹீரோ மாதிரி தான் இருக்கான்” என உதய்கிருஷ்ணாவையே இன்பவேணி பார்த்துக் கொண்டிருக்க, விதார்த் அவளருகே வந்தது கூட தெரியவில்லை. உதய்கிருஷ்ணா நெருங்கி வர வர பயமானது இன்பவேணிக்கு.
பயம் என்ன விலைன்னு கேக்குறவ அவனை பார்த்து நின்று விட,
என்ன வேணி?
விதார்த்தை பார்த்து உதய்கிருஷ்ணாவை பார்த்தவள், “கிருஷ் நான் உன்ட ஒன்னு கேக்கணும்?”
“வா…உட்கார்ந்து பேசலாம்” என உதய்கிருஷ்ணா அமர்ந்து அவளுக்கு கை காட்ட, அவள் விதார்த் கையை அழுத்தி பிடித்து அவனையும் உடன் அமர வைத்தாள்.
சொல்லு வேணி?
அது…கிருஷ்..என்று இருவரையும் பார்த்து…கிருஷ்..நா…வந்து…கிருஷ்…
மெலிதாக புன்னகை தொடங்கி அவன் இதழ்கள் விரிய, பிரம்மித்து அவனை பார்த்தாள்.
“வேணி பேச தயங்குறாளா?” உதய்கிருஷ்ணா கேட்க,
ஹா…இல்லையே!..ஆமா..இல்ல..அய்யோ…என்னால சொல்ல முடியல…
என்ன சொல்லணும்? கல்லூரியில் எதுவும் பிரச்சனையா? விதார்த்தை பார்த்தான்.
“இல்லை” விதார்த் தலையசைக்க,
ஆன்ட்டி அடிக்க வர்றாங்களா?
இல்ல….நான் வாரேன் என்று இன்பவேணி எழ, இருவரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
இன்னு…நில்லு…நேரடியா சொல்லு? விதார்த் அவளை மறித்தான்.
விது, அந்த காயூ சொன்னால்ல நீ கேட்டேல்ல?
ஆமா..நானும் கேட்டேன். இதெல்லாம் சாதாரணம்…இதுல என்ன?
விதார்த்தை முறைத்து, இது சாதாரணமா? அவ என்ன சொன்னா உனக்கு காதுல விழுந்தது தான?
“அழகா இருந்தா இந்த பேச்சேல்லாம் வரும் தான்” விதார்த் சிரிப்புடன் சொல்ல,
“பக்கி பரதேசி…போடா…என்ட பேசாத. வீட்டுக்கு வந்த முட்டய மூஞ்சில போடுறேன்” விறுவிறுவென வெளியேறினாள் இன்பவேணி..
தாங்கமாட்டாமல் பகபகவென சிரித்தான் விதார்த்.
என்னடா சொல்றா? நீ எதுக்கு இப்படி சிரிக்கிற?
சிரித்ததில் வந்த கண்ணீரை துடைத்து, “நாளைக்கு நான் அவட்ட என்னன்னு கேட்டு சொல்றேன்” விதார்த் கூற, தோள் குலுக்கி வெளியே வந்தான்.
என்னால கிருஷட சொல்ல கூட முடியல. அப்ப ப்ரெண்ட்ஸ் சொன்ன மாதிரி நான் கிருஷ லவ் பண்றேனா? அறையில் பூட்டிக் கொண்டு இன்பவேணி அழுதாள்.
காதல் வந்தால் மகிழ்ச்சியில் அனைவரும் கூத்தாடுவர். இப்பேதையோ கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.
அறைக்கு வந்த உதய்கிருஷ்ணா எப்போதும் போல அவனறை திரையை விலக்க, இன்பவேணி அறை இருளில் இருந்தது. மாடியில் வெளிச்சம் தெரிய…பக்கத்து அறை சென்று திரையை நகர்த்தி பார்த்தான்.
அழுத முகத்துடன் நிலவை பார்த்து தனியாக பேசிக் கொண்டிருந்தாள்.
“ஹனிக்கு என்னாச்சு? இப்படி இருக்க மாட்டாளே! அழுதிருப்பாளோ? ஆன்ட்டி அடிச்சிட்டாங்களோ? நாளைக்கு எப்படியாவது அவளிடம் பேசணும்…” எண்ணியவாறு உதய்கிருஷ்ணா துயில் கொள்ள, தந்தையின் கட்டாயத்தில் உண்டவளுக்கு நித்ராதேவி வர மறுத்தாள்.
“நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உனைத் தேடித் தான்
ஓடுது தேடுது…”
error: Content is protected !!