Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 21

ஒளி 21 ::-

 

பூப்பது மறந்தன கொடிகள்!
புன்னகை மறந்தது மின்னல்!
காய்ப்பது மறந்தது காடு!
காவியம் மறந்தது ஏடு!
யானோ நின்னை மறக்கிலேன்!
மறக்கிலேன்!நின்னை மறக்கிலேன்!




மதிய உணவு செய்யும் சத்துணவு பணியாளர்கள் முதல் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் வரை அனைவரையும் வர வைத்திருந்தாள். உடன் பார்த்திபன், சேகர் மற்றும் சில முக்கிய ஊழியர்கள் இருந்தனர்.



Advertisement

   

அவர்களுக்குள்ளாகவே பேசி வைத்தது போல ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்து வந்தனர். ரதி அதை எதையும் சட்டை செய்யாமல் அலட்சியமாக நின்றிருக்க, 

 

Advertisement

அந்த அலட்சியம் மீறி அவளிடம் இருந்த தீவிரத்தைக் கண்டு மிரண்டு தான் போயினர். ஆனால் இப்போது வரைக்கும் அவர்கள் செய்த செயலின் விபரீதத்தை அறியாத அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்லுவது.        

Advertisement

 

“அப்ப இப்பவரைக்கும் எதனால குழந்தைங்களுக்கு புட் பாய்சன் ஆனதுனு உங்களுக்கு தெரியாது?” என ரதிக் கேட்க,                       

 

Advertisement

“பூச்சி ஏதும் விழுந்திருக்கும் அது தான். என்ன தான் கவனமாக சமைச்சாலும் நமக்கே தெரியாம இதுபோல ஏதும் நடக்க தானே செய்யும். இனி இதுபோல நடக்காம பார்த்துகிறோம்” என்று அலட்சியமாக தலைமையாசிரியர் சொன்னார்.

 

“ஓஓ! இனி நடக்காம பார்த்துக்கறீங்க சரி இப்ப ஏன் நடந்தது?”

 

“அது தெரியாம நடந்து இருக்கும்” என்று அவர் சொல்ல,

 

ரதியோ சமைப்பவரிடம் திரும்பி , “அப்ப நீங்களும் அவர் சொல்ற காரணங்களை ஒத்துக்கறீங்க அப்படி தானே?”  

 

“ம்ம்ம்.. ஆமா மேம் !”

 

“ம்ம்ம்.. சமைக்கும் போது சமைக்கற பொருள் எப்படி இருக்குனு பார்க்க மாட்டீங்களா?” என்று ரதி கேட்டதும்,  

அவர்களுக்கு பக்கென்றது, ஐயோ!

 

“அதெல்லாம் பார்த்து தான் சமைப்பாங்க..” என்று தலைமையாசிரியர் சொல்ல,

“ஓஓ ! அப்படியா சார்,  உங்க வீட்ல சமைக்கும் போது கூட எண்ணெய்யோ  பருப்போ கெட்டு போய் இருந்தா அதை அப்படியே சமைச்சு உங்க குழந்தைக்கும் கொடுத்து நீங்களும் அதையே சாப்பிடுவீங்களா?” என்று ரதி சொன்னதும்,

 

அதிர்ச்சியில் அவர்கள் முகம் வியர்க்க ஆரம்பித்தது. 

 

[the_ad id=”6605″]

 

 

 

“சொல்லுங்க !” என்ற அவள் அதட்டலில்,

 

“அது…… அது…. வந்து !” என்று அந்த சத்துணவு பணியாளர்கள் இழுக்க.. இவ்வளவு நேரம் அலட்சியமாக நின்ற தலைமையாசிரியரும் அதிர்ந்தார்.

 

“அது வந்து வீணா தானே போகுதுன்னு கொஞ்சமா நல்லா இருக்கற பொருள் கூட கலந்தோம்… ” என்று ஒருவர் சொல்லி முடிக்க டேபிளில் இருந்த வாட்டர்பாட்டல் வேகமா பறந்து போய் இன்னொரு கண்ணாடி டேபிள் மீது விழ அந்த டேபிள் நொறுங்கியது.

 

அவளின் ஆவேசம் பார்த்து பார்த்திபன் உட்பட எல்லோரும் அதிர்ந்து தான் போயினர்.

 

“இப்படி ஒரு வேலை செய்ய உங்களுக்கு வெட்கமா இல்ல, உங்க குழந்தை உங்களுக்கு வெல்ல கட்டி மத்தவங்க குழந்தைங்கன்னா வெறும் பொம்மையா? கொஞ்சம் கூட பின் விளைவுகளை யோசிக்காம நீங்க பண்ணினதால இன்னைக்கு அந்த குழந்தைங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க..”

 

“எனக்கு ஒரு விஷயம் புரியல, அப்படி என்ன அரசு மேல உங்களுக்கு விசுவாசம் , வேஸ்ட்டா போகுதுனு நிறைய சேமிச்சிருக்கீங்க போல ? ஆனால் அந்த சேமிப்பு அரசுக்கா இல்ல உங்களுக்கானு தான் தெரியல”  என்று நக்கலாக ரதி கேட்கவும்,

 

அங்கே பெரும் அமைதி,

 

“எதுக்கு இப்ப தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க ? என்ன, துறை ரீதியாக சஸ்பெண்ட் பண்ண போறீங்க அவ்ளோ தானே ? அதை விட்டு எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்றீங்கன்னு?” தலைமையாசிரியர் எரிச்சலாய் கேட்டார். ஒரு சிறு பெண் தங்களை ஏவுவதா, இப்படி அதிகாரம் செய்வதா என்ற ஆத்திரம் அவருக்கு ..

 

“ஓஓ! நீங்க சொல்றது சரி தான் … நான் தான் தேவையில்லாமல் பேசி என்னோட எனர்ஜி வேற வேஸ்ட் பண்றேன்… ஒரு ஐந்து நிமிஷம், நீங்க உங்களுக்கான ஆர்டர் வாங்கிட்டு கிளம்பிடுங்க..”

 

“சேகர் சார், ஆர்டரை எடுத்துட்டு அப்படியே அவங்களையும் கூட்டிட்டு வாங்க…”

 

“ம்ம்ம்! சரிமா !” என்றவாறே அவர் நகர,

 

“பார்த்திபன்! நீங்க அவங்ககிட்ட அந்த பார்ம்ல சைன் வாங்கிடுங்க…”

 

“ம்ம்ம் !சரி!” என்று அவனும் ஒரு சிரிப்போடு நகர்ந்தான்.    

 

அவர்கள் கொண்டு வந்து கொடுத்த ஆர்டரை படித்து பார்க்காமலே வெறும் சஸ்பெண்ட் தானே என்று அலட்சியமாக கையெழுத்திடும் போது சேகருடன் வந்த நபர்களை பார்த்து குழம்பினர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆர்டர்ல என்ன இருக்குனு படிச்சு கூட பார்க்காம சைன் பண்ற உங்களை பார்க்கும் போதே உங்க திறமை தெரியுது.. ஆனாலும் சொல்லவேண்டியது எங்களோட கடமையில்லையா?” என்று ரதி நக்கலோடு கேட்டாள். உடனே அவளே,

 

“உங்க எல்லோரையும் ஆன் ஸ்பாட் டிஸ்மிஸ் பண்றேன்.. அது மட்டுமில்லாம உங்க மேல துறை ரீதியாகவும் மற்றும் பொதுநல வழக்குன்னு இரண்டுமே பைல் பண்றேன்.. எதுவானாலும் நீங்க இனி கோர்ட்ல பார்த்துக்கோங்க.. இப்ப நீங்க இவங்களோடு  கிளம்பலாம்..” என்று அங்கிருந்த போலீசை காட்டினாள். 

 

டிஸ்மிஸ்லேயே அதிர்ந்து நின்றவர்கள் போலீஸ் கேஸ்ன்னு சொன்னதும் அசையவேயில்லை..

சுதாரித்த தலைமையாசிரியர், “மேம், உங்க மினிஸ்டர் அண்ட் பள்ளி கல்வித்துறை சார்பாக எங்க மினிஸ்டர் சைன் இல்லாம இது ஏதும் நீங்க பண்ண முடியாது” என்று அலட்சியமாக சொன்னவர் ரதியின் நக்கல் சிரிப்பில் குழம்பி நின்றார்.

“நீங்க சைன் பண்ண பேப்பரை படித்திருந்தால் உங்களுக்கு இந்த குழப்பமே வந்திருக்காது, அதில் ரெண்டு மினிஸ்டரும் அது சம்பந்தமான உயர் அதிகாரிகளும் ஏற்கனவே சைன் பண்ணிட்டாங்க…” என்று புன்னகையோடு பார்த்திபன் அவரின் குழப்பத்தை நிவர்த்தி செய்து,“இப்ப நீங்க கிளம்பலாம்ல..” என்றான்.

 

தலை குனிந்தவாறே அவர்கள் செல்ல போலீஸ் அவர்களை அழைத்து சென்றனர்.

 

“மீடியா எல்லாரும் வந்திருக்காங்கம்மா..” 

 

“ம்ம்ம் … போகலாம் சார்” ! என்றவாறே தன்னிச்சையாக பார்த்திபனை திரும்பி பார்க்க, அவள் தன்னை நோக்கி திரும்புவாள் என்பதை எதிர்பார்த்தவன் போன்று நெஞ்சில் கை வைத்தவாறு, கண் மூடி ஆறுதலாக தலையசைத்தான்.

 

ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவாறு அவர்களை எதிர்கொண்டாள்.

நடந்த தப்புகளையம் அதற்கு வழங்கிய தண்டனையையும் விவரித்தாள்.

எல்லோரும் பாராட்டினாலும் , “இந்த தண்டனை அதிகமில்லையா?” என்று ஒருவர் கேட்க,

 

அவளோ புன்னைகையோடு, “முறையான தண்டனைகள் இல்லாததால் தான் இன்றைக்கு குற்றங்களோட எண்ணிக்கை அதிகமாக இருக்கு.. அவங்க எதிர்பார்த்த மாதிரி சஸ்பெண்ட் தானேன்னு தப்பு பண்ணற அரசு அதிகாரிகளுக்கு இதெல்லாம் ஒரு பாடமா இருக்கும்னு நினைக்கிறேன்…”  

 

“நீங்க சொல்றதும் சரி தான் மேம் ! இனி நடக்காம இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் கொண்டு வந்திருக்கீங்க?”

 

“ஏற்கனவே இருக்கற நடைமுறைகளில் ஒரு சில மாற்றம் செய்து புது ரூல்ஸ் எல்லாம் மீடியாக்கு ஒரு காப்பி அனுப்பி இருக்கோம் அதை விவரமாக நீங்களே மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துடுங்க…” என்று அவள் உரையை முடித்தாள்.    

 

“சூப்பர் மேம்! உங்களோட இந்த திட்டங்கள் வெற்றியடைந்து மக்கள் நன்மை பெறட்டும்” என்று ஒருவர் வாழ்த்த,

 

“இதில் நான் மட்டும் இல்லை, என்னோட மொத்த துறையும் பின்னாடி இருந்து வேலை செய்யறாங்க. அவங்களுக்கும் எனக்கு சப்போர்ட்டாக இருக்க என்னுடைய இணை செயலதிகாரிகளுக்கும் இதன் மூலமாக நன்றியை சொல்லிக்கிறேன்”, என்றவாறே சேகரையும் பார்த்திபனையும் பார்த்து புன்னகைத்தாள்.   

எல்லோரும் அவளை பாராட்டியவாறே கலைந்து செல்ல சிறு புன்னைகையோடு அதை ஏற்றாள்.

 

சேகரும் அவர் பங்கிற்கு வந்து பாராட்டிவிட்டு நகர, பார்த்திபன் அருகே வந்தான். எப்போதும் அவனை ரசிக்க வைக்கும் சிரிப்போடு, “குட் ஜாப்!” என்றவாறே அவளுக்கு கை கொடுத்தான். 

 

[the_ad id=”6605″]

 

 

முதல் முறையாக அவன் கைக் கொடுத்து பாராட்டுவதை ஏற்கும் போது அவளில் ஒரு படபடப்பு… அவளின் கைகளில் இருந்த வளையலைப் பார்த்ததும் அவன் கண்கள் புன்னகையைப்  பிரதிபலித்ததோ…

 

அவர்கள் மோனநிலையை கலைப்பது போல ரதியின் போன் அடிக்க, இந்த முறை அவளின் ரிங்டோன் கேட்டு ஆச்சர்யமாவது இவன் முறையாயிற்று…

 

உன் வார்த்தை கொடுக்கும் அதிர்வை விட 

உன் பார்வை என்னை நடுங்க செய்கிறது !!

அதிலும் உன் கண்கள் சிரிக்கும் போது அதனுள் நான் சிறையாகிடுவேனோ என்று தான் நடுங்குகிறேன் !!

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!