Irulil Thedum Oliyaai Nee 22
ஒளி 22 :::
இவன் யாரோ இவன் யாரோ! வந்தது எதற்காக!
சிரிக்கின்றான்! ரசிக்கின்றான்! எனக்கே எனக்காக!
என்னாச்சு எனக்கே தெரியவில்லை!
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை!
அட! என்ன இது! என்ன இது! இப்படி மாட்டிக்கொண்டேன்!
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்!
Advertisement
என்னவோ அந்த பாடல் வரிகளை ரசித்தவன் முகம் அவள் அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்ததும் சுருங்கியது.
“ஹே சிவா ! நானே உனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன், நீயே பண்ணிட்ட.. உனக்கு ஒரு நல்ல சேதி சொல்லணும்.”
Advertisement
Advertisement
அந்த பக்கம் அவனும், “ஹே ! நானும் உனக்கு ஒரு நல்ல சேதி சொல்ல தான் போன் பண்ணேன். ஆனால் எனக்கு தான் அது நல்ல சேதி உனக்கு அது கெட்ட சேதி…” என்றான் குறும்பாக,
“ஆஹான்! ரொம்ப பண்ணாதடா, ஒரு வேலை அது எனக்கு நல்ல சேதியா இருக்க போகுது..”
Advertisement
“உனக்கு பொறாமை ! என்ன இருந்தாலும் அந்த விஷயத்துல உன் நிலைமையை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு…” என்ற அவன் பேச்சில் இருந்த வருத்தம் அவன் குரலில் இல்லை..
“சரி ! என்ன நல்ல சேதி சொல்லு” என்று ரதி ஆர்வமாக கேட்டாள்.
“நீ முதல்ல சொல்லு !” என்று சிவா அடம்பிடிக்க,
அவன் கேட்டது தான் போதும் உடனே ஆர்ப்பாட்டமாக , “அது வந்து நான் அவங்களை” என்று பேசியவாறே திரும்பியவள் இன்னமும் பார்த்திபனின் கையைப் பிடித்துக்கொண்டு தான் சிவாவுடன் பேசி கொண்டிருப்பதை உணர்ந்தவள்,“அச்சோ! சாரி!” என்று அசடு வழிந்தவாறே கையை எடுத்தாள்.
ஆனால் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இறுகியிருந்த அவன் முகம் அவளை என்னவோ செய்ய,
சிவா ஒரு நிமிஷம் லைன்ல இரு,
[the_ad id=”6605″]
“சாரி! போன் பேசற இன்ட்ரெஸ்ட்ல கவனிக்கல.. சாரி!”
அவள் இரு முறை அழுத்தி சாரி சொல்வதை உணர்ந்தவன் ,” இட்ஸ் ஓகே!” என்றவாறு அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான்.
செல்லும் அவனையே பார்த்திருந்தவள் சிவாவின் “ரதி ! ரதி” அழைப்பில் தான் தெளிந்தாள்…
“ஹலோ! சொல்லு சிவா !”
“பிஸியா! நான் வேணும்னா அப்புறம் கூப்பிடட்டும்மா?”
“இல்ல சிவா ! நீ சொல்லு , நான் ஆபீஸ் மீட்டிங் ரூமில் இருந்தது ஞாபகம் இல்லை, ஒரு சந்தோஷத்துல உங்கிட்ட அப்படியே பேசிட்டு இருந்துட்டேன் இப்ப சொல்லு…” என்று பேசியபடியே அவளின் கேபின் வந்தாள். உள்ளே போகும் முன் பார்த்திபனின் இடம் பார்க்க, அது காலியாக இருந்தது.
“என்னோட குட் நியூஸ் கேட்க உனக்கு எவ்வளவு ஆர்வம்,” என்று அவன் அவளை கேலி செய்ததை அறிந்தவள் மற்றது மறந்து அவனிடம் வம்புக்கு நின்றாள்.
“நீ ஒன்னும் சொல்ல வேணாம், நான் போனை வைக்கிறேன்…” என வைக்க போனவளிடம்,
“ஹே ! ஹே ! சொல்றேன் ! சொல்றேன் !”
“சொல்லி தொலை,”
“அது உனக்கும் எனக்கும் ஜாதகம் செட் ஆகலையாம் அதனால நமக்கு பேசின விஷயம் கேன்சல்.. நல்லவேளை என்னோட அனுபமாவுக்கு துரோகம் பண்ணிடுவேனோனு கவலைல இருந்த என்னை அந்த ஆண்டவன் காப்பாத்திட்டார்… “என்று ஆர்பரித்தவனின் சந்தோசம் அவளையும் தொற்றியது.
“டேய்! மாமா ! உண்மையாவா சொல்ற !”
“பின்ன! நான் என்ன பொய்யா சொல்றேன்.. உன் நிலைமையை நினைச்சால் தான்……..” என்று இழுத்தவனின் பேச்சில்,
“என் நிலைமைக்கு என்ன டா?” என்று இடையிட்டாள்.
“இந்த மாமாவை கட்டிக்க முடிலனு நீ கஷ்டப்படுவல்ல.. அதான் எனக்கு வருத்தம்… ஆனால் நீ ஒன்னும் கவலைப்படாத, மாமா! உனக்கு பொருத்தமா ஒரு வத்தலோ தொத்தலோ ஒரு ஈயமோ பித்தளையோ பார்த்து தரேன் சரியா…” என்று கேலி பேசியவனை ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்து,
[the_ad id=”6605″]
“எனக்கு பித்தளை பார்க்கறது இருக்கட்டும் உனக்கு ஒரு தகரடப்பாவது கிடைக்குதா பாரு?” என்று நக்கலடித்தாள்.
“தங்கம் போல சும்மா தகன்னு தகன்னு ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணல….…”
“உன் பெயரை தகரடப்பான்னு மாத்திக்கிறியா?” என்று அவள் குறும்போடு இடையிட,
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..இப்ப உன் குட் நியூஸ் சொல்லு…”
“ஹே ! ஆமாமா! நீ போட்ட மொக்கையில அதை மறந்துட்டேன் பாரு, நான் அவரை மீட் பண்ணிட்டேன் அதை விட குட் நியூஸ் அவர் என்னோட ஆபீஸ் தான்.. இப்ப தான் ஜாயின் பண்ணாங்க.. அவர் பெயரைக் கூட தெரிஞ்சிக்கிட்டேனே…” என்று துள்ளலாக அவள் சொன்னாள்.
“ஹே சூப்பர் ! சூப்பர் ! ரதி ஹாப்பி போல,”
“எஸ் ! எஸ் ரொம்ப ஹாப்பி! இப்ப கூட இரண்டு நாளா ஆபீஸ்ல பிரச்சனை.. அவங்க தான் சப்போர்டிவ்வா இருந்தாங்க..”
“ம்ம்ம்! நியூஸ்ல பார்த்தேன்! உனக்கு ஏதும் ப்ராப்ளேம் இல்லைலல..” என்று அக்கறையை விசாரித்தவனிடம்,
“அதெல்லாம் இல்லை! ஐ ம் ஓகே! சரி நீ சொல்லு இந்த விஷயம் உனக்கு யார் சொன்னா?” என ரதி கேட்க,
“எல்லாம் சொல்றேன், எனக்கு ட்ரீட் வேணும்…”
“ட்ரீட்டா? எதுக்கு ?”
“பின்ன அவரை மீட் பண்ணிட்டல்ல… அப்புறம் நீ வேற டிவியில வர அளவுக்கு பெரிய அப்பாடக்கர் ஆஃபீசராக இருக்க… அதனால எல்லாத்துக்கும் சேர்த்து கொடு…”
“ஆஹான்! அதை அப்புறம் முடிவு பண்ணுவோம்.. முதல்ல நீ எல்லாம் சொல்லி முடி..”
“உன்கிட்ட இருந்து அப்புறம் வசூல் பண்ணிக்கிறேன், எனக்கு வாசுகி அத்தை தான் சொன்னாங்க, சாரி சாரி அவங்க சொல்லல அவங்ககிட்ட போட்டு வாங்கினேன்“, என்று சொல்லி சிரித்தான்.
“என்ன சொல்ற?” ரதி குழப்பமாக கேட்க,
“ஆமாம்! அந்த இடம் இன்னும் ஒரு வாரத்தில ரிஜிஸ்டர் பண்ணறதுக்கு நல்லநேரம் பார்க்க ஜோசியர்கிட்ட போயிருக்காங்க…அப்படியே நமக்கும் பார்க்கறதுக்காக அத்தை நம்ப இரண்டு பேரோட ஜாதகம் கொண்டு போயிருக்காங்க… அப்ப தான் எல்லாம் தெரிஞ்சு இருக்கு.. நமக்கு பேசியிருக்கறதை நீ சொல்லி தான் எனக்கு தெரியும், பெரியவங்க யாராவது என்கிட்ட அதை பத்தி பேசினா அவங்ககிட்ட என்ன சொல்லி மறுக்கறதுனு யோசிச்சுட்டு இருந்தேன் … நல்லவேளை அப்படி ஒரு சந்தர்ப்பம் வரல…” என்ற அவன் பேச்சில் இருந்த கவலையையும் நிம்மதியும் ரதி உணர்ந்தாள்.
“சரி விடு ! எப்படி இருந்தாலும் நீயோ இல்லை நானோ கண்டிப்பா இதைப்பற்றி வீட்ல பேசி இருப்போம்… நமக்கு அந்த கஷ்டம் இல்லாம கடவுளே இப்படி ஒரு வழி பண்ணியிருக்கார்.. என்ன வீட்ல எல்லாரும் ஆர்வமா இருந்தாங்க , இப்ப வருத்தப்படுவாங்க… போக போக அதுவும் சரியாகிடும்.. “என்று ரதி அவனை சமாதானப்படுத்தினாள்.
“ம்ம்ம் ! அது என்னவோ உண்மை தான் .. ஆமா அவர் பெயர் என்ன ?” என சிவா கேட்க,
“அவங்க பெயரா பார்த்திபன்…” புன்னகையோடு சொல்ல,
“ஓஓஓஓ!”
“என்ன ஓஓ!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, எப்போ ஊருக்கு போற?”
“அடுத்த வாரமா இருக்கும்னு நினைக்கிறேன், மாமா போன் பண்ணதும் அதுக்கு தகுந்த மாதிரி கிளம்ப வேண்டியது தான்…நீ வரலையா?”
“அதே தான் ! அப்பா சொன்னதும் கிளம்பனும்..”
“சரி சிவா ! அப்ப ஊர்ல பார்க்கலாம்.. வைக்கவா..”
“ம்ம் ! சரி ரதி! பார்த்துக்கோ… வைக்கிறேன்”
அதன் பின் அவள் வேலையில் மூழ்க, சேகர் உள்ளே வந்தார்.
“சொல்லுங்க சார்!”
“நாளைக்கு இங்க என்னோட லாஸ்ட் ஒர்கிங் டே மா !”
“சாரி சார், இந்த பிரச்சனைல அதை மறந்துட்டேன். நான் உங்களுக்கான ஆர்டர் எல்லாம் ரெடி பண்ணிட்டேன், நீங்க வர திங்கட்கிழமை அங்க ஜாயின் பண்ணிக்கலாம்.. நான் தபால்ல கொடுத்தறேன்…” என்று ரதி சொல்ல,
“சாரி எல்லாம் எதுக்குமா? பரவாயில்லை… ஞாபகப்படுத்தலாம்னு தான் வந்தேன்… நான் கிளம்பறேன்மா…” என்று வெளியேறினார்.
அவர் வெளியேறியதும் இவள் உடனே பார்த்திபனுக்கு அழைத்தாள்,
“ஹலோ !”
“ஹலோ ! சொல்லுங்க யாரு பேசறீங்க ?” பார்த்திபன் கேட்க,
[the_ad id=”6605″]
“யாரா ? அப்ப அவருக்கு என்னை தெரியலையா? ஆமா! நீ எப்ப அவருக்கு நம்பர் கொடுத்த அவருக்கு உன்னை தெரியறதுக்கு?” என்று கேலி செய்த மனசாட்சியிடம், ஆமால்ல, இருந்தாலும் என் வாய்ஸ்ல கூடவா கண்டுபிடிக்க முடியலை? என்று பொய்யாய் அதனிடம் கோபித்தவள்.
“நான் ! ரதி பேசறேன் !”
“எந்த ரதி ?”
“என்னது எந்த ரதியா? ஏன் உங்களுக்கு எத்தனை ரதியை தெரியும் சார் ? ரதிக்குந்தவை பேசறேன்” என்று முறைத்தவாறே பதில் சொன்னாள்.
அவன் தான் அவளால் ஏற்கனவே வேறு உலகம் போயிருந்தானே, ரதி என்று சொன்னதும் உணராதவன் ரதிக்குந்தவை என்றதும் தான் இந்த உலகம் வந்தான்.
அப்போது தான் அவளின் கேலியை கேட்டவன், “தெரிஞ்ச ஒரு ரதிக்கே இந்த நிலைமை இதுல இன்னும் எத்தனை ரதியாம்” என்று முணுமுணுத்தான்.
“என்ன சொல்றீங்க?”
“ஒண்ணுமில்லை, சொல்லுங்க எதுக்கு கால் பண்ணியிருக்கீங்க? “என்று அவன் ஒட்டாமல் பேசுவது அவளுக்கு வருத்தமாக இருந்தது.
“கொஞ்சம் என்னோட கேபின் வாங்க ! “என்று அவன் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தாள்.
போனை வைத்தவளின் யோசனை எல்லாம் அவனுக்கு கால் பண்ணும் போது கேட்ட காலர்டீயூனில் தான் இருந்தது…
உன் கெஞ்சல்களை விட
உன் அதட்டலைத் தான் ரசிக்கிறேன் !
அது தான் எனக்கான உரிமையாகத் தெரிகிறது!
