Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவேUncategorized

சின்னஞ் சிறு பூவே

பூவே 13

 

 

 



Advertisement

 

 

“ஏட்டி,  நீ எதுக்குடி! காளியம்மா மொவகிட்ட சண்டை போட்டு வந்த” என்று கையில் ஆறுமாத மகனை

Advertisement

வைத்துகொண்டு கேட்டார்..

Advertisement

 

“எம்மோ! நா  அங்க பேசிட்டு இப்பதான் வீட்டுக்குள்ளே வரேன். அதுக்குள்ள யாரு?  உனக்கு சொன்னது” எனக் கொண்டே  திண்ணையில் அமர்ந்தாள் முனிஸ்வரி..

 

Advertisement

“ஆமா, உனக்கு தொண்டைக்குழி வரைக்கும் கோபம் ஏறினா, ஊருக்கே தெரிஞ்சிரும். அதான் காளியம்மா வூட்டு  பக்கத்துல இருந்த கோடியம்மா கெழவி தான்  வந்து சொல்லிட்டு போனாங்க…” என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

 

“அந்த காளியம்மா மொவ தான் முதல்ல ஆரம்பிச்சாங்க. எவ்ளோ தைரியம் இருந்தா வேலுவை ஆசிரமத்துல விட சொல்லுவாங்க… நல்லா நாக்க புடுங்குற மாறி நாலு வார்த்தை கேட்டிருப்பேன் அவ தான் மூஞ்சை பாவமா வச்சிட்டு வேணாம்னு தலையாட்டுனா, அதனால் அவங்க தப்பிச்சாங்க” என்றாள் கடுப்பாக..

 

“சரி சரி… என்னத்துக்குடி இவ்வளவு கோவம் உனக்கு.. அவங்க குடும்பத்துல என்னவோ! பண்ணிட்டு போறாங்க , இது உனக்கு தேவையில்லாத வேலை.. அவகூட பேசாதடின்னு நானும் பால்வாடி போன காலத்திலிருந்து சொல்லுறேன்.. எங்கனா என் பேச்சை கேட்குறியாடி” என்று சொன்ன நேரத்தில்,

 

அன்னையின் கையில் அடக்கமாக இருந்த சின்ன குழந்தை, திண்ணையிலிருந்த அக்காவை பார்த்து சிரித்துக்கொண்டே அவளிடம் தாவியது..

 

தன்னிடம் வந்த தம்பியை கொஞ்சிக்கொண்டவள்.. அன்னையை கண்டு கொள்ளவே இல்லை,

 

“ஏட்டி, எங்கன்னா பதில் சொல்லுறீயாடி” என்று இடுப்பில் கை வைத்தார்..

 

“இங்க பாரும்மா, உனக்கு ஒருத்தவங்களை புடிக்கலன்னா ! அது உன்னோட விருப்பம்.. எனக்கு புடிச்சதை தான் நா செய்வேன்.. வேலுகிட்ட என்ன தப்பு இருக்குன்னு சொல்லு அதை நா கேக்குறேன்.. அதை விட்டு அவ ஆத்தா அப்டி, பாட்டி இப்டின்னு கதை சொல்லாத, எனக்கு புடிக்காது”, என்றாள் தீர்மானமாக..

 

மகளின் பேச்சில் இவர் அசந்து தான் போனார்.. “ஏட்டி, ஒரு பெத்தவகிட்ட பேசுற மாறியா பேசுற நீ”.

 

“இங்க பாரும்மா, எனக்கு இன்னமும் ஐஞ்சி வயசு இல்லை ! நீ சொல்லுறதை அப்படியே நம்பிட்டிருக்க.. சரி எது தப்பு எதுன்னு புரிச்சிக்குறளவுக்கு அறிவும் இருக்கு படிப்பும் இருக்கு.. அதைவிட்டு நீ சொன்னதையே திருப்பி சொல்லாத” என்றாள்

 

“ரொம்ப வாய்டி உனக்கு” என்ற , அன்னையை பார்த்து சிரித்தவள்..

 

“அந்த வாய் இருக்குறதாலதான்மா, யாரும் என்னை நெருங்கல! பொண்ணை கட்டிக்கொடுக்குற வயசுல வச்சிட்டு இவ புள்ளை பெத்துக்க போறா, அடுத்து புள்ளையும் கட்டி கொடுத்து பசுவும், கன்னும் சேர்ந்து நிக்கும் பிரசவத்துக்குன்னு.. ஊர்ல எல்லாரும் சொல்லும் போது! நா, என்ன சொன்னேன் தெரியுமா ம்மா” என்று நிறுத்தினாள்..

 

மகள் சொன்னது

அன்னைக்கு தெரியாமல் இருக்கும்மா என்ன இருந்தாலும். மகள் சொல்ல கேட்க வேண்டி அமைதி காத்து நின்றார்…

 

“அப்டி நடந்தா பிரசவம் பாக்க உங்களை கூப்பிடலன்னு சொன்னேன்” என்றாள் சிரிப்புடன்..

 

மகள் சொன்னது அன்னைக்கு வலியை தான் கொடுத்தது.. முதல் பிரசவம் மகன் பிறந்த சில நொடிகளிலே இறந்து போக, அடுத்து பிறந்த நான்கும் பெண் பிள்ளைகளா இருந்தது.  உலகத்துல ஆம்பளை புள்ளை இருந்தாதான் கௌரவம்னு நெனைப்பு..

ஐந்து பிள்ளை பெற்று உடம்பு நொந்து போனாலும் ஆம்பள புள்ளை வேண்டி அவளை படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லையே! மாமியாரை எதிர்த்து பேசாத கணவன்..

 

அவனுக்கும் ஆம்பளபுள்ளை மேல் ஆசை இருக்கவே செய்தது.. ஐந்து முழு பிரசவத்தை தாண்டி , இரண்டு கருகலைப்பும் நடந்த பின்னே பிறந்தவன் தான் இப்போது மகளின் கையில் இருக்கும் மகன்.. பொம்பளைங்க வாழ்க்கை அனைவருக்கும் ஒன்னுபோல் இருப்பதில்லையே! என்று பெருமூச்சு வந்தது அந்த பெண்மணிக்கு…

 

“என்னம்மா, இன்னைக்கு போண்டா போடலையா” என்றாள். தம்பியை மடியில் தூங்கவைத்தபடி,

 

“இல்லடி , உங்கப்பாவுக்கு எதோ! வேலை வந்திடிச்சின்னு கிளம்பிட்டாரு , உங்கப்பத்தாவும் அவர்கூட தான் போயிருக்காங்க” என்றார்..

 

“சரிம்மா, நீ போய் கொஞ்ச நேரம் படு ! நா தம்பியை பாத்துக்குறேன்” என்றாள்..

 

அந்த தாய்க்கு மகள் சொன்னதை கேட்டு கண்கள் கலங்கியது..

 

***

 

வெற்றி வீட்டுக்குள் வரும்போதே! ஒருவித அமைதியை கண்டு அவன் நெற்றி சுருக்கியபடி உள்ளே வந்தான்..

 

ராமையாவிடம், மயிலம்மா மும்முரமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சி தான் அவன் விழிகளில் விழுந்தது..

 

“என்னப்பத்தா , மகன் கூட மட்டும் எதோ! இரகசியம் பேசுற , எங்க உன்பேத்தி வீட்டுல இல்லை” என்றான் பார்வையாலே சுற்றி பார்த்து..

 

“அவளை ஏன்பா! நீ தேடுற, அதுக்கும் குத்தம் சொல்லிட்டு வந்துடுவாளுங்க உன் ஆத்தாளும், அக்காவும்” என்றார் நொடிப்பாக ,

 

“என்னாச்சு அப்பத்தா, ஏன்? கொரல் (குரல்) ஒரு மாறி இருக்கு” என்று அருகே அவரின் கைபிடித்து அமர்ந்தான்..

 

பேரன் கை பற்றியதும்.. அந்த பெரிய மனிஷிக்கு கண்ணெல்லாம் கலங்கியது.. அவன் கையை பற்றியவர்.. “எய்யா, வெற்றி சொத்தை பிரிச்சிடுய்யா” என்று சொல்லும் போதே! அவர் குரல் உடைந்து போனது..

 

அன்னையின் கண்ணீரை கண்ட மகனும், மௌனமாக நின்றார்..

 

தந்தையின் மௌனத்துக்கு காரணம் புரியாமல் இருக்கும் போதே! அப்பத்தாவின் கண்ணீரை கண்டு குழம்பி போனான்..

 

“என்னாச்சு அப்பத்தா, யாருக்காக சொத்தை பிரிக்கச்சொல்லி அழுறீங்க” என்றான்…

 

“என் பேத்திக்குய்யா, இன்னைக்கு என்னெல்லாம் பேசிபுட்டாளுங்க” என்று இன்னும் உடைந்து போனார்..

 

“என்னா நடந்திச்சின்னு அழுகாம  சொல்லு அப்பத்தா , இப்ப தான் கால் வீங்கி கெடக்க மறுபடியும் எதையாவது இழுத்து விட்டுக்காத” எனக் அவரை சமாதானம் செய்ய,

 

அழுகையை நிறுத்தியவர் ‘மாலை வீட்டில் நடந்ததை அனைத்தையும் சொல்லி முடித்தார்’..

 

அப்பத்தா சொன்னதை கேட்டவனுக்கு.. மனதுக்குள் என்னவோ உடைந்து போனது. வேலுவை நினைத்து..

 

“அக்கா, கொஞ்சம் வாய்துடுக்கா தான் பேசும்னாலும், இப்படியெல்லாமா பேசிச்சு அப்பத்தா” என்றான்..

 

“இதை விட அதிகமாகவே பேசிட்டாய்யா அவ, அவளுக்கு வரவர எம்பேத்தியை கண்டா ஆக மாட்டுதுய்யா. இனியும் ஒன்னா இருக்க வேணாம்யா, நானும் வேலுவும் தனியா இருந்துக்குறோம்.. ஏதோ எங்களால முடிஞ்சதை கஞ்சி காய்ச்சி குடிச்சிக்குறோம்.. என்ன வரம் வாங்கி வந்தாளோ? அவபடாத பாடு பட்றா” என்று கண்ணீர் விட்டார்..

 

ராமையை , அன்னையை நெருங்கி. சைகையிலே கைகளை ஆட்டி ” நீங்க போனா, நானும் உங்க கூடவே வந்துடுறேன்.. என் தம்பி மகளை தான் விட்டுட்டேன். அவன் பேத்தியும் என்னால விட முடியாதும்மா, நானும் என் பேத்தி கூடவே வந்துடுவேன்” சொன்னதும்.

 

மகனின் கைகளை பிடித்துக்கொண்டார். ” இல்லைய்யா, நீ அழுகாதய்யா” என மகனை சமாதானம் செய்ய பார்க்க..

 

“ரெண்டு பேரும் கொஞ்சம் அழுறதை நிறு‌த்துறிங்களா” என்று சத்தம் கூட்டி கத்தினான்..

 

அவன் சத்தத்தில் இருவரும் அழுகையை நிறுத்தி அவனை பார்த்தனர்..

 

எழுந்து நின்றவன் மயிலம்மா அருகே குனிந்து ” கொழவி சொத்தால்லாம் பிரிக்க முடியாது.. மொத்த சொத்தும் உம்பேத்திக்கே கொடு , எனக்கு வேணாம்.. சும்மா இவ சொன்னா, அவ சொன்னான்னு தனியா போக நெனைச்ச அவ்ளோதான் உனக்கு.. அக்கா பேசினாலும் சரி அம்மா பேசினாலும் சரி உனக்கு வாய் இருக்குல்ல நீயும் திருப்பி பதில் கொடு அதை விட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்க..

உன் கைக்குள்ளே வச்சு , அவளையும் அப்படியே வளத்து விட்டிருக்க.. எதை சொன்னாலும் முகத்தை பாவமா வச்சிகிட்டு அழ வேண்டியது” என்று இருவரையும் முறைத்தவன் அறையை விட்டு வெளியேறினான்..

 

பேரனின் தலை மறைந்ததும், கண்களை துடைத்துக்கொண்டு மகனை பார்த்து சிரித்தார் மயிலம்மா.

 

“பாத்தியாய்யா, எம்பேரன் கோவப்பட்டாலும் நியாயத்துக்குத்தான் பேசுவான்…” என்றார் பெருமையோடு.

 

ராமையாவும் மெல்ல சிரித்தார். சைகையில் “அவனுக்கு உங்க மேல இருக்கும் பாசம்தான் ம்மா இப்படி கோவமா வருது…” என்றார்.

 

வீட்டுக்குள் மூச்சு முட்டுவது போல இருந்தது வெற்றிக்கு.

 

அப்பத்தா உடைந்து பேசிய வார்த்தைகளும், வேலுவைப் பற்றிய நினைப்புகளும் மனதை ஏதோ அழுத்திக்கொண்டே இருந்தது.

வேகமாக பின்கட்டிற்கு வந்தவன், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு நிமிர்ந்து நிற்க, அவன் பார்வையில் விழுந்தாள் வேல்விழி.

 

தொழுவத்தை தாண்டி வந்து அவள் முன் நின்றான்.

 

அருகில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள், “மாமா…” என்று அவசரமாக எழுந்து நின்றாள்.

 

“ஒக்காரு… நா ஒன்னும் டீச்சர் இல்ல,” என்றவன் கல்லின் மறுபக்கத்தில் அமர்ந்தான்.

 

அவன் அமர்ந்ததை பார்த்தவள், “நா வீட்டுக்கு போறேன் மாமா…” என்று எழ முயல,

 

“நா உன்கூட பேசத்தான் வந்தேன்…” என்று அவள் கைகளை பிடித்து மீண்டும் அமர வைத்தான்.

 

“என்ன மாமா பேசணும்?” என்று தயக்கமாக கேட்டாள்.

 

சில நொடிகள் அவளை அமைதியாக பார்த்தவன்,

 

“ஸ்கூல் எப்படிப் போகுது? எதோ விழா நடத்தப் போறாங்களாமே… அப்படியா?” என்றான்.

 

“ஆமா மாமா… போன வருஷம் புதுசா வந்த சிவராணி டீச்சர், அஞ்சலி டீச்சர் எல்லாரும் சேர்ந்து ஹெச்எம் சார்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டாங்க. இந்த ஒரு மாசமா பிராக்டீஸ் நடந்துச்சு. இன்னும் பத்து நாள் தான் இருக்கு… சனிக்கிழமை ஆண்டு விழா…” என்றாள் முகம் மலர்ந்து.

 

“ஓ! அப்படியா”..

 

“ஆமா மாமா , நம்ம ஊர் தலைவர்கிட்ட கூட பேசிட்டாங்க…” என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே இருந்தான் வெற்றி.

 

அவள் பேசும் போது கண்களில் தெரிந்த அந்த ஆர்வம், அவனை அறியாமலே சிரிக்க வைத்தது.

 

“அதுல நீ என்ன பண்ண போற?” என்று கேட்டான்.

 

“நானா?” என்று தன்னையே கை காட்டியவள்,

“டான்ஸ் ஆடுறோம். நானும் முனீஸ் தான் ஜோடி அப்புறம் ஒரு நாடகமும் இருக்கு…” என்றாள் சற்றே வெட்கத்துடன்.

 

“பார்றா” என்று ஆச்சரியப்மட்டவன்.. “நல்லா ஆடுவிங்களா ரெண்டு பேரும், என்ன பாட்டுக்கு டான்ஸ் ஆட போறீங்க” என்றான்..

 

“அது இரகசியம் மாமா! முன்னே சொல்லிட்டா , சுவாரஸ்ஸியம் இருக்காதே” என்றாள் சிரிப்புடன்..

 

“ஓ! அப்படி எந்த பாட்டுக்கு ஆடுறீங்கன்னு நானும் பாக்குறேன்” என்றான் அவளை பார்த்து..

 

“பாக்க தானே போறீங்க எங்களோட ஆட்டத்தை” என்று புன்னகையுடன் கூறியவளை பார்த்தவன், ஒரு நொடி அமைதியாக அவன் பார்வை அவள் முகத்தில் நிலைத்தது..

 

பேசிக்கொண்டே சிரிக்கும் அவள் முகமும், கண்களில் மின்னிய உற்சாகமும் அவனது கவனத்தை மொத்தமாக கவர்ந்திருந்தது.

 

ஊரில் தினமும் பார்த்த முகம் தான். ஆனாலும் அந்த கணம் மட்டும் புதிதாய் தெரிந்தாள் பாவையவள்.

 

அவள் சிரிப்பை ரசித்தபடி நின்றவன், “சரி, அப்போ நானும் பாக்குறேன்” என்று கூறினான்.

 

“என்ன மாமா நீ! சந்தேகமா சொல்லுற” என்றாள் உதட்டை பிதுக்கி…

 

இதுவரை ஆடவனின் பார்வை முகத்தில் மட்டும் இருந்த நிலை மாறி, இப்போது அவள் உதட்டில் மையம்கொண்டது..

 

அவள் வேணா பள்ளி செல்லும் சிறுமியாக இருக்கலாம்.. ஆடவன் வயது இருபத்திஐந்து கடந்திருக்க, அவனின் உடலில் உள்ள ஹார்மோன்கள் தன் வேலையை காட்ட. தலையை குலுக்கி நிகழ்வுக்கு வந்தவன்..

 

அவள் முகத்தை காணாது “எங்க அம்மா ஆளை காணோம்” என்றான்..

 

“அது பெரியம்மா வீட்டுக்கு போயிருக்காங்க மாமா.. குழம்பு எடுத்துட்டு” என்றாள்..

 

“அப்படி என்ன குழம்பு செஞ்சிங்க” என்று அவள் புறம் திரும்பினான் இப்போது!

 

“தாத்தா , வேலைக்கு போன எடத்துல ஏரி மீன் புடிச்சிட்டு வந்தாங்க மாமா.. அது தான் பாட்டி குழம்பு செஞ்சி எடுத்து போயிருக்காங்க” என்றாள்

 

“அப்படியா…” என்றவன் மெல்ல தலையாட்டினான்..

 

வீட்டிற்குள் இருந்த கனமான

மனநிலையை விட, அவளுடன் இ

ப்படி சாதாரணமாக பேசிக்கொண்டிருப்பது மனதுக்குள் ஏதோ இதமாக இருந்தது வெற்றிக்கு..

 

இனி இந்த இதமான மனநிலை அவனுக்கு இருக்கப்போவது இல்லை என்று யார் சொல்வது அவனுக்கு…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!