Skip to content
Post Views: 409
சித்ரா மகனின் கோபத்தில் அவன் முகம் பார்க்க,
“பின்ன என்னம்மா? நான் படிச்சிருப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியாதா?” என்று குரல் உயர்த்தியவன்,
Advertisement
“அப்போ நான் பெரிய வேலைக்குப் போகலன்னா நீ என்னை மதிக்க மாட்ட, அப்படித்தானே?”
“அப்படியில்லடா..” என்ற சித்ராவின் குரல் தாழ்ந்தது.
Advertisement
Advertisement
இல்லை என்று சொன்னாலும் அவரின் அத்தனை வருட கனவு லாலாவின் அரசு வேலை. ஊர், உறவிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று அத்தனை ஆவல். எல்லாம் காணாமல் போக அந்த ஆற்றாமையைக் கொட்டினார்.
வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும். சரியான தருணம் என்று வாழ்க்கையில் எதுவும் கிடையாது, வாழ்க்கைக்காகக் காத்திருக்கவும் கூடாது!
Advertisement
You should not wait for perfect moment in life, life happens என்று எங்கோ படித்த நினைவு!
சில நேரங்களில் சரியான தருணங்கள் வாய்க்கலாம். அதற்காக மட்டுமே காத்திருந்தால் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி வாழ்வதாம்? தவறான தருணங்களைத் தாண்டினால்தானே சரியான பாதையை அடையாளம் காண முடியும்?
லாலாவும் அப்படியான நிலையில் இருந்தான். அரசு வேலை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று அவன் நினைத்த நாட்களும் உண்டு. ஆனால் இத்தனை வருட அனுபவம் அவனுக்கு அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்று கற்றுக்கொடுத்திருந்தது.
அவனிடமிருந்து, அவனின் எண்ணங்களிலிருந்து அவன் பெற்ற விடுதலை அலாதியானது!
“அப்படியில்லன்னா ஏன் இப்படி பேசுற மா? லாலான்றவன் வெற்றி, தோல்வி எல்லாம் நிறைஞ்சவன் மா. தோத்துட்டா நான் உன் புள்ளை இல்லையா?” என்றான் ஆற்றாமையோடு.
“எனக்குன்னு ஒரு வேலை, சொந்த கால்ல நிக்குறேன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அதையெல்லாம் நினைக்காம என்னை ஒரு வேலைக்குள்ள மட்டும் அடைக்காதம்மா.” என்றவன்,
“முதல்ல சாப்பிட வா. ரொம்ப நாளாச்சு உங்ககூட உட்கார்ந்து சாப்பிட்டு” என்றான்.
“ஏண்டா பேசுறதெல்லாம் பேசிட்டு என்னை சாப்பிட கூப்பிடுவியா?”
“பேசினது வாய், பசிக்குறது வயிறுதானே. சும்மா வாம்மா.” என்று அம்மாவின் கைப்பிடிக்க, சித்ராவின் கண்ண்ணீர் அவன் கையில் விழுந்தது.
மெனொபாஸின் தாக்குதல், ஏனோ தன்னால் முடியாததை தன் பிள்ளைகள் மூலம் சாதித்துக்கொள்ள நினைக்கும் சராசரியான ஆசையே சித்ராவுக்கு. எல்லாம் சேர்ந்து அவரை எரிச்சலூட்டியது. மகன் பேசியது மனம் என்னவோ செய்ய, அழுகை வந்தது.
“மா, வாம்மா. எனக்குப் பசிக்குது” என்று லாலா அவரின் கண்ணீரைத் துடைத்துவிட, சித்ராவுக்கு மகன் பசிக்கிறது என்றதும் எல்லாம் மறந்துபோக,
“வாடா” என்று எழுந்தார்.
வெளியே வர உதயா வாஞ்சி நாதனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்.
மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் உணவில் கவனமானார்.
“நீயும் சாப்பிடும்மா” என்று உதயாவிடம் சொல்ல,
“உட்காருங்கத்த” என்று சித்ராவுக்கும் உணவு வைத்தாள். நால்வரும் உண்டு முடிக்க, வாஞ்சி நாதன் கை கழுவி வர,
“அப்பா” என்று லாலா தயக்கத்துடன் தொடங்க,
“இங்க பாருடா உன் வாழ்க்கை, உன் முடிவு. இனிமே எங்கிட்ட அதைப் பத்தி பேசாத” என்றார் பட்டுக்கொள்ளாதவண்ணம்.
லாலாவுக்குச் சுருக்கென்றது. பெருமூச்சுடன் அவன் உதயாவைப் பார்க்க, அவள் கண்களால் அவனை சமாதானம் செய்தாள்.
லாலாவும் உதயாவும் பெற்றவர்களுக்குப் படுக்க ஆயத்தம் செய்துகொடுத்து, அவர்கள் அறைக்குள் அடைந்தனர்.
வாஞ்சிநாதன் சித்ராவிடம்,
“இங்க பாரு சித்ரா, அவன் வாழ்க்கை. அவனுக்கு கல்யாணமாகிடுச்சு, இனிமேலும் நம்ம அவன் எடுக்கிற முடிவுகள்ல தலையீடாம இருக்கிறதுதான் நமக்கு மரியாதை” என்றார்.
“என்னங்க இப்படி சொல்றீங்க? அவன் முடிவுல உங்களுக்கு வருத்தமில்லையா?”
“வருத்தமிருக்கு, அதுக்கு என்ன செய்ய முடியும்? நியுஸ்ல பார்க்கிறோம்தானே கொஸ்டின் பேப்பர் லீக் ஆகுறது, காசு கொடுத்து வேலை வாங்குறதுனு. இதுல ரொம்ப அதிர்ஷ்டம் இருக்கவங்களுக்குத்தான் இப்போ கிடைக்குது. இந்த விஷயமெல்லாம் எனக்கு இப்போ தெரிஞ்சதுனு இல்லை, ஆனாலும் அந்த அதிர்ஷ்டம் நம்ம பையனுக்குக் கிடைச்சிடாதன்னா அப்பன்னா ஒரு ஆசை”
“அவனும் அறிவான புள்ளைதானே? ஆனா இவ்வளவு மனசுக் கஷ்டப்பட்டுப் பேசும்போது நம்மளும் அவனைப் போட்டுப் படுத்தலாமா? நேத்து வந்த பொண்ணு, அது அவனைப் புரிஞ்சிக்குது” என்று சொல்ல,
“அப்போ நான் புரிஞ்சிக்கல சொல்றீங்களா?” என்று சித்ரா ஆரம்பிக்க,
“இல்லைதான்!” என்றார் பட்டென்று.
“நம்ம பையனைக் கேள்விக் கேட்கிற உரிமை மட்டும்தான் நமக்கு இருக்கு. அந்த பொண்ணை வாய்க்கு வந்தபடி பேசுற?” என்று அதட்டலாக வாஞ்சி நாதன் கேட்க,
“அத்தை என்னைப் பேசுறப்போ எல்லாம் இப்படி நீங்க பேசினதே இல்லை” என்று சித்ரா வருந்தி சொல்ல,
“ஏண்டி, நீ கம்முனு போவ. இல்லை நீயே பதில் பேசுவ. அதுக்காக அந்த கோவத்தை வந்த புள்ளைக்கிட்ட காட்டுவியா?” என்றார் கடுப்பாக.
“சக்தி அம்மா சரோவைப் பேசினா நீ சும்மா இருப்பியா?” என்று கேட்க, இவர் எங்கே பேசுவது? மகளே பேசிவிடுவாள் என்று தெரியும். பேசியும் பார்த்திருக்கிறார்தானே? ஆனால் உதயா அப்படியெல்லாம் பேசியது இல்லை. அதனால்தான் எளிதாக அவளை ஏச முடிந்தது போல.
மனம் குறுகுறுக்க சித்ரா அமைதியாகிவிட்டார். வாஞ்சி நாதன் அடுத்துப் பேசியதற்கெல்லாம் ஆமாம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறு பதில் இல்லை.
அறைக்குள் நுழைந்த லாலா அப்படியே தரையில் போட்டிருந்த மெத்தையில் சாய்ந்தான். கட்டில் இருக்கும் அறையை அப்பா, அம்மாவிற்குக் கொடுத்திருந்தார்கள்.
உதயா ஓய்வறை சென்று வரவும் பட்டென்று எழுந்து மெத்தையில் உட்கார்ந்தான் லாலா.
“ஏன் இவ்வளவு வேகமா எந்திரிக்கிறீங்க?” என்று கணவனை அதட்டிய உதயா அவனருகே உட்கார, அப்படியே அவளை இறுக அணைத்திருந்தான் லாலா.
“என்னாச்சு?” உதயா மெல்ல தலை நிமிர்த்தி அவனிடம் கேட்க,
“என்னாகணும்? ஒன்னுமில்லை. உன்னைக் கட்டிக்க எனக்குக் காரணம் தேவையில்லை” என்றான்.
உதயா பதிலின்றி அவன் தோள் சாய,
“ஏன் உதயா? அப்படி எங்கிட்ட எது உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சது? எங்கப்பா, அம்மா எல்லாருமே என் முடிவுல ரொம்ப வருத்தப்படுறப்போ, நீ ஒன்னுமே சொல்லல. அது என் மேல இருக்க காதலா இல்லை உன்னோட முட்டாள்த்தனமா? எவ்வளவு யோசிச்சாலும் எனக்குப் பதிலே இல்லை. நீ என்னை இப்படியே ஏத்துக்கிறது சந்தோஷம்தான், ஆனாலும்..” என்று இழுத்தான்.
லாலாவுக்கு உண்மையில் உதயா அவனை அப்படியே ஏற்பதில் ஏக ஆனந்தமே, ஆனாலும் ஏன் என்று தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. நிறைந்த நிம்மதி.
மனித மனம் அப்படித்தானே? ஏன், எதற்கு என்ற காரணங்களைத் தேடி, சந்தோஷங்களையும் துக்கங்களையும் நியாயப்படுத்திக்கொள்ளும்? அப்படித்தான் லாலாவின் நிலையும்.
‘அப்படி நம்ம என்ன செஞ்சிட்டோம்னு இவளுக்கு இவ்வளவு பிடிக்குது?’ என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. தான் ஒன்றுமே இல்லை என்ற தாழ்வெண்ணம் தலைவனிடம்.
உண்மையில் லாலா என்பவன் காஃப்காவும் அவரின் கதைகள் போலவும் இருப்பவன். ஜெர்மன் எழுத்தாளர் காஃப்கா இன்று உலகில் பலராலும் போற்றப்படுகின்றவர். ஆனால், அவர் எழுதிய கதைகள் மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது இல்லை, எப்போதும் ஒரு தாழ்வெண்ணம் அவரிடம். தன் கதைகள் தன் நண்பரிடம் எரிக்கச் சொன்னவர் அவர்.
அப்படித்தான் சில மனிதர்கள்! அவர்களின் உன்னதம், அவர்களின் பலம் அவர்களுக்கே தெரிவதில்லை. காஃப்காவின் எழுத்து இன்று பலருக்கு ஆறுதல், தனிமையில் இருப்பவர்களுகான தேறுதல். ஆனால் அவர் எழுத்துகள் அவருக்கு நம்பிக்கைத் தரவில்லை.
அப்படித்தான் லாலாவும் அவனை நம்பவில்லை.
உதயா சட்டென்று அவனிடமிருந்து விலகியவள், அவன் முகத்தைத் தன் கையில் தாங்கி,
“ஏன் பிடிக்காம இருக்கணும்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
லாலாவோ, “ஏன் பிடிக்கணும்?” என்று கேட்டு, அவள் மூக்கோடு உரசினான்.
error: Content is protected !!