Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 6 1

அத்தியாயம்….6

அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ  மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான்  தன்னை அதற்க்கு  தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது.

ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும்,  அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட  முக அமைப்பையும், அவர்கள் உடையில் தெரிந்த கலாச்சாரத்தையும் பார்த்து,  ஒரு புது உலகத்திற்க்குள் வந்து விட்டது போல்…மிரண்டு போன மணி சோனாலியை பார்த்தாள்.

சோனாலி மணிமேகலை போல் பயம் கொள்ளாது, ஆர்வத்துடன் அங்கு  அமர்ந்து இருப்பவர்களை பார்த்தவள் அங்கு இருந்த காலி இருக்கையை காண்பித்து…



Advertisement

“வா மணி அங்க போய் உட்காரலாம்.” என்று சொன்னதும் தான் மணிமேகலைக்கு…

‘நாம் மட்டும் ஏன் பயப்பட்ட வேண்டும். இங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னை போல் தானே … அவர்களுக்கும் இது புது இடம். புது சூழல். அவர்கள் எப்படி புதியதாய் கத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அமர்ந்து இருக்கிறார்கள்.

நான் மட்டும் ஏன்  தொட்டதிற்க்கு எல்லாம் பயப்பட வேண்டும். நானும் எதிலும் குறைந்தவள் இல்லை.’ என்பதை மணிமேகலை  தனக்கு தானே சொல்லிக் கொண்டவளாய் சோனாலி பக்கத்தில் அமர்ந்தாள்.

Advertisement

முதல் வகுப்பே ஜான் வகுப்பு போல்..ஒரு சில மாணவிகள் ஆர்வத்துடன் வகுப்பறையின் வாசலை பார்த்திருந்தனர். அவர்களுக்கு  இது முதல் வகுப்பு இல்லை போல்…

Advertisement

அந்த ஒரு சில மாணவிகள் எதிர் பார்த்தது போல் ஜான் விக்டர் அந்த வகுப்பறைக்குள் நுழைந்ததும், அனைவரும்… “குட் மார்னிங் சர்.” என்று சொல்லும் போதே பெண்களின் கண்ணில் மின்னல் வந்தது என்றால்… உதடு தன்னால்… “வாவ்…” என்று  உச்சரித்தது.

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

ஆனால் நம் மணிமேகலையோ  ஜான் வகுப்பறைக்குள் நுழையும் போது மிக மும்முரமாக… “சாரி நான் க்ளாசுக்கு வரும் போது தான் லாலி சிம் கொடுத்தாங்க…” என்று  மணிமேகலை சொன்னதற்க்கு,  அழைப்பின் அந்த பக்கம் இருந்தவர்   என்ன கேட்டார்களோ…

மணிமேகலையின்… “ஆ  லாலி கொடுத்த  சிம்மை என் செல்லில் போட்டுட்டேன்.” என்ற  பதிலில்…

அந்த பக்கம் திட்டிய திட்டலில்… “சாரி சாரி…இல்ல க்ளாசுக்கு டைமாச்சி அது தான். க்ளாஸ் வந்து உங்களுக்கு நம்பர் கொடுக்கலாம்.” என்ற மணிமேகலையின் எண்ணில் அடங்கா மன்னிப்பில் அந்த பக்கம் இருந்த வீரா… மனம் இறங்கினான் போல்…

“சரி..எனக்கு இனி  வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் போடு. வீட்டுக்கு தினம் பேசு.” என்ற அதிகாரத்தோடு அந்த பக்கம்  கைய் பேசி அணைத்த பின் தான்  மணிமேகலைக்கு அப்பாடா…என்று இருந்தது.

‘இந்த வட்டிக்காரனுக்கு கோபம் ரொம்ப தான் வருது.வட்டிக்காரன் வெளிநாட்டு பறவையிடம்   தினம் பேசுவானோ…அப்படி பேசும்  போது தான் இந்த பறவை என் செல் நம்பர் கொடுத்து இருக்குமோ…” என்று  மணிமேகலை  மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்.

அது அவள் வகுப்பறைக்குள் நுழையும் போது, பக்கத்தில் அமர்ந்தவர்களிம்  பேசிக் கொண்டு இருந்ததால், அந்த இடம் ஏதோ ஒரு சின்ன சின்ன சத்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தது.

ஆனால் இப்போது என்ன  ரொம்ப அமைதியா இருக்கு…என்று நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன்னையே தன்னை மட்டுமே உற்று பார்த்துக் கொண்டு இருந்த ஒரு வெளிநாட்டுக்காரனை பார்த்ததும்…

‘இவன் ஏன்  நம்மை முறைக்கிறான்…?” என்று தான் நினைத்தாளே…ஒழிய. அவன் தான் தன் ஆசிரியர் என்று நினைக்காது மட்டும் அல்லாது தன் ஊரில் பால்காரனில் இருந்து, டீக்காரன் வரை சைட்டோ சைட் அடித்துக் கொண்டு இருந்த மணிமேகலைக்கு ஜான் விக்டரின் அழகோ…ஆளுமையோ…கண்ணில் படாது ஏன் நம்மை முறைக்கிறான் என்ற எண்ணத்தோடு மட்டுமே நினைத்து தன் முதல்  பார்வையை ஜான் விக்டரை பார்த்து வீசினாள்.

****************************************************

ஜான் விக்டர் தன் அறை நுழைவாயில் நின்றுக் கொண்டு தன்னையே  தன் தந்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார், என்று கூட உணராது  விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜான் விக்டர்.

தன் மகன் தன்னை கவனிப்பான் என்று கை கட்டி கதவு மீது சாய்ந்து நின்றுக் கொண்டு இருந்த வில்சன் விக்டருக்கு, நேரம் தான் சென்றதே ஒழிய…மகன் தான் அவரை கவனிக்கவில்லை.

பின் வில்சன் விக்டரே… “ஜான்…ஜான்…” என்று இரண்டு முறை அழைத்தும் தன்னை பார்க்காது, ஏதோ யோசனையில் இருந்த மகன் அருகில் சென்ற வில்சன் விக்டர்…

மகனின்  கை தொட்டு … “ஜான்…” என்று அழைத்ததும் தான், அவசரமாய் எழுந்து அமர்ந்தான்.

“டாட்…” என்று அழைத்த ஜான், தந்தையை என்ன…? என்பது போல் பார்த்தான்.

“அதே தான் என்ன…?ஜான். ஏதாவது பிரச்சனையா…?” என்று மகனின் தெளிவில்லாத முகத்தை பார்த்து கேட்டான்.

“ஐம் ஆல்ரைட் டாட்.” என்று தன் முகத்தை சாதரணமாக மாற்ற முயன்ற வாறே தன் தந்தையிடம் பேசினான்.

“நோ..நோ…ஏதோ ப்ராப்ளம் இருக்கு. டாட்  கிட்ட சொல்லனும் என்று நினச்சா சொல்.ஆ சொல்ல கூடிய விசயமா இருந்தா மட்டும்.” என்று வில்சன் விக்டர்  சொல்லி விட்டு, அந்த  அறையை விட்டு போக பார்த்தவரின் கை பிடித்து தடுத்து நிறுத்தினான் ஜான் விக்டர்.

தன் மகன் பிடித்த கையையும் ஜானையும் மாறி மாறி பார்த்த வில்சன், ஒன்றும் சொல்லாது அமைதியா இருந்தார். தன் மகன் தன்னிடம் பேச தடுமாறுகிறான். அதுவும் முதன் முதலாய்..

எது என்றாலும், இது  தான் எனக்கு பிடிக்கிறது. இது தான் செய்வேன் என்று ஆணித்தரமாக சொல்பவனுக்குள்,  ஏன் இந்த தடுமாற்றம் என்று வில்சன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…

“டாட் நான் அழகா தானே இருக்கேன்.” என்று  கேட்ட  ஜான் விக்டர். பின் அவனே… “அழகுன்னா  சும்மா இல்ல..எல்லோரும் பார்க்கும் படியா ஹன்சமா தானே இருக்கேன்.” என்று சம்மந்தம் இல்லாது கேள்வி கேட்ட மகனை குழப்பத்துடன் பார்த்தார் வில்சன் விக்டர்.

வில்சன் விக்டருக்கு குழப்பம் இருந்தாலும், தன் மகனுக்கு பதிலாய்… “நீ ஹான்சம் என்று நான் சொல்லி தான் உனக்கு தெரியுமா…? நீ படிக்கும்  போதே  பெண்கள் கிட்ட இருந்து  ஏகாப்பட்ட டேட்டிங்கு  அழைப்பு வந்ததேடா…நீ தான் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்ட…”  என்று தந்தை சொன்னதும், அவர் கை பற்றிக் கொண்ட ஜான் விக்டர்…

 

[the_ad id=”6605″]

 

 

“அதே  தான் டாட். அதே தான். படிக்கும் போது மட்டும் இல்ல டாட். இப்போ நான் காலேஜ் போற க்ளாஸ் மொத்த பொண்ணுங்களும் என்னை பார்ப்பாங்க. அவங்க பார்வையே சொல்லும், நான்  ரொம்ப அழகா இருக்கேன்னு.” என்று ஜானின் பேச்சில் இன்னும் குழம்பி தான் போனார் வில்சன் விக்டர்.

“அதான் நீயே சொல்றியே பெண்கள் எல்லோரும் உன்னையே பார்க்குறாங்கன்னு…?அப்புறம் என்ன  கேள்வி நீ அழகா இருக்கியான்னு…”

தன் மலர் கீழே சாப்பிடாது தங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பாள். மனைவியை அதிக நேரம் காத்திருக்க வைக்கிறோமே என்ற ஆதாங்கத்தில் தன் மகனிடம் பேசினார்.

“ஆனா அவ பார்க்களையே டாட்.” என்ற  ஜானின் பேச்சில், தன் மனைவி கீழே சாப்பிடாது காத்திருப்பாளே என்று அவர் எண்ணம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த மனைவி மறந்து போய்…தன் மகன் முகத்தையே கூர்ந்து பார்த்தவர்…

“அந்த பெண்ணை உனக்கு பிடிச்சி இருக்கா ஜான்…?” என்ற  வில்சன் விக்டரின் கேள்விக்கு…

“தெரியல டாட். பட் அந்த பெண் பாக்க  என் அம்மா போல் இருக்காங்க.” என்ற மகனின் பேச்சை… “என் மனைவி.” என்று தன் உரிமையை நிலை நாட்டினார் வில்சன் விக்டர்.

இது எப்போதும் நடப்பது தான். ஜான் விக்டர் மலரை  என் அம்மா என்னும் போது எல்லாம், வில்சன் விக்டர்… “என் மனைவி ஆன பின் தான் அவள் உனக்கு அம்மாவா ஆனா.”

வில்சன் விக்டர் எப்போதும் எந்த நிலையிலும் தன் மனைவி மீது இருக்கும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டார். எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலுமே…அதே போல் தான் ஜான் விக்டரும்…

ஒரு பெண்ணுக்கு கணவர் உயர்ந்தவனா…மகன் உரிமையானவனா… என்று ஒரு பட்டி மன்றம் நடப்பது போல் தான் தந்தையிடம் வாதாடுவான்.

அதே போல் இப்போதும் தன் மகனிடம் இருந்து அவனின் வாத திறமையை எதிர் பார்த்தார்.

ஆனால் அவர் மகனோ அவர் எண்ணத்தை  பொய்யாகும் வகையாக, அவர் நினைத்ததிற்க்கு எதிர் பதமாய்…

“ஓகே… ஒகே… உங்க மனைவியை நினைவூட்டினாள் அந்த பெண். போதுமா….” என்ற மகனின்  பேச்சில் அனுபவம் வாய்ந்தவருக்கு தெரிந்து விட்டது, முதல் பார்வையிலேயே அந்த  பெண் தன் மகனை வீழ்த்தி விட்டாள் என்று.

அதனால் அப்பெண்ணை அறியும் ஆவளில்… “அந்த பெண் யார் ஜான்…? எங்க ஹான்சம் மகனை கூட சட்டை செய்யாத அளவுக்கு அழகா…? என்று கேட்ட வில்சன் விக்டர்.

தொடர்ந்து… “உன் கூட ஒர்க் பண்றாளா…?” என்ற தந்தையின் கேள்வியில்..

கொஞ்சம் தயங்கி  தயங்கி தான்… “ஸ்டுடண்டு டாட்.” என்று மகன் தந்த தகவலில், அந்த தந்தையும் கொஞ்சம் யோசித்தார் தான்.

தன் மகன் முகத்தை பார்க்கும் போது அவன் முகத்திலும், அதே சிந்தனை சாயல் தெரிந்தது. பின் வில்சன்  விக்டர் என்ன நினைத்தாரோ…

“காதலுக்கு ஜாதி இல்லை. மதம் இல்லை. தேசம் இல்லை என்று சொல்றாங்க. அப்போ காதல் ஒன்று மனதில் எழுந்தா…அதாவது உண்மையான காதல் மனதில் தோன்றினா… எதுவும் தப்பு இல்ல ஜான்.”

தந்தையின் பேச்சில் … “நான் அதை பற்றி யோசிக்கல டாட். அவ ஏன் என்னை ஆர்வமா பார்க்கல…” என்ற மகனின் கேள்வியில்..

“ஜான் உனக்கு அந்த பெண்ணை பிடிச்சி இருக்கா…?” என்று முதல் கேட்ட கேள்வியையே வில்சன் விக்டர் கேட்டார்.

“ம் பிடிச்சி இருக்கு. அதான் நான் பார்த்தேன். ஆனா அவ என்னை பார்க்கலை… நான் வந்தது கூட தெரியாது போனில் பேசிட்டு இருந்தா…” என்ற மகனின் பேச்சி தந்தைக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

ஒரே மகன் பிறக்கும் போதே செல்வ நிலையில் பிறந்தவன். எப்போதும் எங்கும் அவன் தான் முதன்மையில் இருப்பவன். இருந்து ஆக வேண்டும்  என்ற எண்ணமும் தன் மகனுக்கு இருக்கிறது என்று ஒரு தந்தையாய் தன்  மகனை பற்றி தெரிந்து வைத்திருந்தார் வில்சன் விக்டர்.

ஆனால் இப்போதும் ஒரு பெண் மனதுக்கு பிடித்த பெண்ணை பற்றி பேசும் போதும் மகனின் இந்த பேச்சு…அவருக்கு பிடித்தமானதாய் இல்லை.

 

[the_ad id=”6605″]

 

 

“ஜான்  பிடித்த பெண்ணுக்கு நம்மை பிடிக்குமா என்று தான் தெரியனுமே தவிர… பிடிச்சி தான் ஆகனும் என்று எந்த  வித கட்டாயமும் இல்லை. அதுவும் இந்த பெண் தான் உனக்கு எல்லாம் என்ற அந்த எண்ணம் உனக்கு வந்தா…முதல்ல இது போல் பேசுறது என்ன… மனசுலேயும் நினைக்க கூடாது.” என்று சொன்னவரின் பேச்சில்…

“என்னது அவளுக்கு என்னை பிடிக்காம போகுமா…? அது எப்படி பிடிக்காதுன்னு பார்க்குறேன்.” எப்போதும் இருக்கும் அந்த திமிர் தனம், ஜான் விக்டரை  இவ்வாறு பேச வைத்தது.

வில்சன் விக்டருக்கு மகனின் இந்த  போக்கு  பிடிக்கவில்லை என்றாலும், ஒரு தந்தையாய் தன் மகன் ஆசைப்பட்ட பெண்ணுக்கு இவனை பிடிக்க வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!