Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 6 2

தான் வளர்ந்த நாட்டில், இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் எல்லாம் இல்லை என்ற போதும்… தங்கள் காதல் வாழ்க்கையை பார்த்து அது போல் அவன் வாழ நினைக்கிறான் என்று ஒரு மகனை பற்றி அனைத்தும் தெரிந்தவராய் இருந்தவருக்கு…

அதனால் தான் அந்த பெண்ணை பற்றி மகன்  சொன்ன… “அந்த பெண் அம்மா போல் இருக்கா…” என்ற வார்த்தையில்  என்னில் அவனாகவும், அந்த பெண்ணை தாயாகவும் வைத்து பார்க்கிறான் என்பதை அறிந்துக் கொண்டவருக்கு, கூடுதலாய் காதலில் இந்த தான் என்ற கர்வம் இருக்க கூடாது என்ற எண்ணமும் வந்தது.

இருந்தும் இதை பற்றி தன் மகனிடம் பேசவில்லை. தன் மகனிடம் இதை பேசினாலும் கேட்க கூடியவன் கிடையாது என்பதை  நன்கு அறிந்தவராய்…

“கடவுளிடமே என் மகன் ஆசைப்பட்ட பெண்ணுக்கும் என் மகனை பிடித்து விட வேண்டும்.”  என்று வேண்டுதல் வைத்தார்.



Advertisement

“அம்மா நமக்காக சாப்பிடாம காத்திருப்பா வா… “ தான் எதற்க்கு வந்தோமோ அதை சொன்னார்.

“டாட் எனக்கு பசிக்கல. நீங்க போய் சாப்பிடுங்க.” என்ற மகனிடன் பேச்சிக்கு… “சரி.” என்று தான் அந்த தந்தையால் சொல்ல முடிந்தது.

சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதுமே மகன் விருப்பம் தான். மலர் விழியால் கூட அவனை சாப்பிட வைக்க முடியாது என்று தெரிந்தவராய்…

Advertisement

கீழே சென்று தன் மனைவியிடம்… “அவன் பிரண்ஸ் கூட சாப்பிட்டு தான் வந்தானாம் மலர்.” என்ற சொல்லோடு தனக்கும் தன் மனைவிக்கும் சாப்பிடும் மேசையில் தட்டை வைக்க மலரோ இருவருக்கும் அதில் உணவை இட்ட வாறே…

Advertisement

“அவன் சாப்பிட்டான்னா நீங்க உடனே வர வேண்டியது  தானே…நேரம் கழிச்சி சாப்பிட கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.”

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

சிறு குழந்தையை திட்டம் செய்வது போல், வளர்ந்த அந்த தொழில் அதிபரை கண்டித்துக் கொண்டு இருந்தால் மலர்விழி.

தன் மனைவி தன்னை சிறு பிள்ளை  போல் நடத்துக்கிறார் என்று என்னாது, தன் உடல் நலம் பேணும் மனைவி மீது காதல் ஊற்று எடுக்க…

“மலர் நான் உடம்ப பார்த்துப்பேன்டா…அதுவும் என் மனைவி இவ்வளவு இளமையா இருக்கும் போது…அந்த அளவுக்கு இளமையா நான் இல்லேன்னாலும், ஏதோ மேனஜ் செய்யும் அளவுக்காவது நான் இருக்க வேண்டாமா… அதுவும் வயசு ஏற ஏற இன்னும்  அழகு கூடிட்டு போகும் மனைவியை சைட் அடிக்க வேண்டும் என்பதற்க்காவது, நான் என் உடம்பை  நல்லா பார்த்துப்பேன் செல்லம்.” என்று கீழ் தளத்தில் வில்சன் விக்டர் தன் மனைவியை கொஞ்சிக் கொண்டு இருக்கும் வேளயில்…

முதல் தளத்தில் தன் அறையில் கட்டில் மேல் கண் மூடி படுத்துக் கொண்டு இருந்த ஜான் விக்டர்… தான் அவளிடம் பேசிய பேச்சை  மனத்திரையில் கொண்டு வந்தான்.

ஜான்  விக்டர் தான் வகுப்பு எடுக்கும் அந்த அறைக்குள் நுழையும்  போதே,  கீழ் குனிந்த வாறு பேசிக் கொண்டு இருந்த  மணிமேகலையின்  நீள முடியே அவன் கவனத்தை  ஈர்க்க போதுமானதாய் இருந்தது.

அனைவரும் தன்னை பார்க்க,  அவன் பார்வை மட்டும் அவளிள் மட்டுமே நிலைத்து நின்றது.

பின் அவன் கவனித்ததில் அவள் பேசியில் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்ற தெரிந்த கணமே…யாருடன் இருக்கும். அதுவும் ஒருவன் நுழைவதை கூட கவனிக்காத அளவுக்கு முக்கியமானவர்கள் யார்…?

இதை எல்லாம் ஜான் விக்டர் நினைக்கும் போது, மணிமேகலையின் முகம் கூட அவன் ஒழுங்காக பார்க்கவில்லை. பக்க வாட்டில் சரிந்து விழுந்த அவளின் முடியின் நீளத்தையும், குனிந்து இருந்து பேசியில் பேசியதால், நெற்றியை மட்டுமே பார்த்திருந்தவன் அவள் பேசியில் பேசி முடித்து விட்டு நிமிர்ந்து காட்டிய அவள் முகத்தை பார்த்ததும்…

‘எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ… என்று எண்ணும் அளவுக்கு, அவள் கண்ணில் தீட்டி இருந்த அந்த கண்மையில் இருந்து, அவள் மூக்கில் இடம் பெற்று இருந்த அந்த மூக்குத்தி தொடங்கி… நெத்தியில் நடுவில் ஸ்டிக்கர் பொட்டும். பொட்டுக்கு மேல் இடம்  பெற்றிருந்த திருநீறும்…பொட்டுக்கு கீழ் இடம் பெற்றிருந்த குங்குமமும்…. கழுத்துக்கு  கீழ் அவன் பார்வை போகும் முன்னே அவள் தன் முகத்தை பார்த்ததும்…

அவள் தன் முகத்தை நன்றாக பார்க்க வேண்டும் என்று  நினைத்து தான்… “என்ன போனில் பேசிட்டியா…?” என்று கேட்டான்.

தன்னை பார்க்கும் பெண்கள் ஒரு நிமிடம் தன் கண்ணை  விழி விரித்து பார்த்து தான் செல்வர். அந்த மைய்யிட்ட கண்கள் அவ்வாறு தன்னை பார்க்க வேண்டும் என்று கருதியே…அவன் கேள்வி கேட்டது…

ஆனால் அதற்க்கு எதிர்வினை தான் மணிமேகலையிடம் இருந்து அவன் எதிர்ப்பாக்காது தன்னை  ஆர்வத்தோடு  விழிவிரித்து பார்ப்பதற்க்கு பதில்…

அவள் விழி சுருக்கி யோசனையுடன் தன்னை பார்த்த அந்த பார்வையில், லேசாக அவன் கர்வம் கொஞ்சம் அசைத்து பார்த்தது.

பின்  தானும் அவளை… அமரும் மாறு பணித்தவன்… “புது மாணவி.. மாணவர்கள் உங்கல அறிமுகப்படுத்திக்கோங்க…” என்று ஜான் விக்டர் சொன்னதும்…

ஒருவர் பின் ஒருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.  யாரின் பெயரும் அவன் மனதில் பதியவில்லை.

அப்பெண் நீள முடியும்…நீல சுடியும் அப்பெண்ணின் பெயரை கேட்க ஆவளோடு காத்துக் கொண்டு இருந்தவன்…

அவள் எழுந்து நிற்கவும்…உடல் பர பரத்தது தான். ஆனால் அதை ஒரு துளியும் காட்டிக் கொள்ளாது. நின்றவளை பார்த்தான்.

மணிமேகலை எழுந்து நிற்க்கும் போது அவள் கண் முன், லாலி கையில் வைத்திருந்த தன் பெயர் பலகை நியாபகத்திற்க்கு வந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

கூடவே சோனாலி சொன்ன நீ நீயாக இரு என்ற வார்த்தை மனதில் தோன்றியதும் தன்னால்…. “என் பெயர் க. மணிமேகலை.” தூய தமிழில் சொன்னாள். ஜான் விக்டருக்கு தமிழ் தெரியும்.

அது என்னவோ ஜான்  விக்டர் அம்மா  மலர் விழிக்கு தமிழ் மீது தீராத காதல். வில்சன் விக்டருக்கு மலர் மீது தீராத காதல். அதன் எதிரொலி எப்போதும் வீட்டில் தமிழ் தான் பேசுவது.

அதனால் ஜான் விக்டருக்கு, தமிழ் நன்றாகவே தெரியும். இருந்தும் அவள் பேசிய இந்த தூய தமிழ்…இவளுக்கு தமிழ் பிடிக்குமோ…அப்போ இந்தியாவையும் பிடிக்கும் தானே…இங்கயே இருக்க விரும்ப மாட்டாளா…?

அவள் தன்னை ஆர்வமாக பார்க்கவில்லை. மேலும் அனைவரும் ஆங்கிலத்தில் தங்களை அறிமுகப்படுத்த இவள் மட்டும் தமிழில்.. நிரந்தரமாய் இங்கு இருக்க பிடிக்காதோ… தன் படுக்கையில் கண் மூடி படுத்திருந்தவன் மனது முழுவதும் இதுவே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

****************************************************

இந்தியாவில்…

சங்கரி வீராவின் அம்மா அவன் தட்டில் உணவை பரிமாறிய வாறே… “வீரா நீ மணிக்கிட்ட ஊருக்கு போகும் முன்னவாவது  உன் விருப்பத்தை சொல்லி இருக்கலாம்.” என்று தன் ஆதாங்கத்தை தன் மகனிடம் சொன்னவர். இதை எத்தனை முறை  தன் மகனிடம் சொல்கிறார் என்று அவருக்கே தெரியாது.

சங்கரிக்கு என்னவோ மணிமேகலையை அவ்வளது தூரம் படிக்க வைக்க விரும்பவில்லை. அவள் தன் அண்ணா பெண் மட்டுமாக இருந்தால், அவர் இவ்வாறு கருதி இருக்க மாட்டார்.

ஆனால் தன் மகனுக்கு பிடித்தமான பெண்ணாகவும், அண்ணன் மகள் இருந்து விட்டமையாலும்…இப்போது தன் மகனின் வயது இருபத்தியெட்டு  முடிந்து இருபத்தி ஒன்பதில் அடுத்த மாதம் அடி எடுத்து வைக்க காத்துக் கொண்டு இருக்கும் வேளயில்…

இன்னும் தன் மகனுடைய திருமணம் காண, இரண்டு வருடம்  காத்துக் கொண்டு  இருக்க வேண்டும் என்ற கவலை ஒரு பக்கம் என்றால், விசேஷத்திற்க்கு போகும் இடம் எல்லாம்…

“என்ன சங்கரி உன் மகனோட சின்ன பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தையும் பிறந்துடுச்சி…இன்னும் நீ பெண்ணே பாக்க ஆராம்பிக்கல போல…” என்று கேட்டால் பரவாயில்லை…

கூடுதலாக… “என்ன உன் மவனை அடுத்தவளுக்கு விட்டு கொடுக்க மனம் இல்லையா…?” தன்னை  வில்லி மாமியார் போல் பேசியதை கேட்க கேட்க அவர்கள் மீது வரும் கோபத்தோடு தன் மகன் மீது தான் அதிகம் கோபம் வந்தது.

தன் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்… உன் திருமணத்தை மணிமேகலையோடு முடித்து கொடுத்து விடுவேன் என்று  சங்கரி சொன்னதற்க்கு…

வீரா சொன்ன… “அம்மா என்னை அவங்க சொன்னாங்க. இவங்க சொன்னாங்கன்னு  எல்லாம் கட்ட கூடாது. அவள் மனசு சொல்லி என்னை கட்டனும்.” என்று வசனம் பேசும் மகனிடம்…

“சரிடா அவ மனசு என்னத்தை சொல்றது அதையாவது கேட்டு  சொல்லுடான்னா…”

“அதற்க்கு இது நேரம் இல்லை.” என்கிறான்.

தன் ஆதாங்கத்தை சாப்பாடு பரிமாறிக் கொண்டு தீர்த்து விட்டு செல்பவருக்கு, எந்த பதிலும் சொல்லாது தன் அறைக்கு சென்ற வீராவுக்கு அங்கு இருந்த தன் உடற்பயிற்ச்சி செய்யும் கருவியை பார்த்ததும் வீராவின் முகத்தில் தன்னால் புன்னகை வந்தது.

பத்து வருடம்  முன்…அனைவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள்.  மூன்று மாமன் அத்தைகள் அத்தை பிள்ளைகள் என்று இருந்த போதும், இவன் அனைவரிடமும் அளவோடு தான் பேசுவான்.

அதே போல் தான் அத்தை மகன் இருவரும் கேட்டால் பதில் என்ற முறையில் மட்டும் தான் பேச்சு இருக்கும். ஆனால் மணிமேகலை…

அவளை நினைக்கும் போதே  அவன் உதட்டில் தழுவிய சிறிய புன்னகை  பெரிதாக விரிந்தது. வீரா அப்போது தன் முதல் வருட கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த சமயம் தன் பரந்த தோள்களை பார்த்து உடன் படிக்கும் பசங்க…

“பெண்களுக்கு இது போல் ஷேல்டர் ப்ராடா இருந்தா தான் பிடிக்கும். உன்னை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் பார்.” என்ற பேச்சில் அந்த வயதிற்க்கு உறிய ஒரு கிளர்ச்சி…ஆர்வம்… ஏதோ ஒன்று தன் உடலை இன்னும் பேணுவதில் வீராவுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அதன் விளைவு  சென்னையில் அதற்க்கு என்று  இருக்கும் உடல் பயிற்ச்சி  மைய்யத்தில் தன் உடலுக்கு மேலும்  வலுக்கூட்ட தன் பயிற்ச்சியை செய்பவன்..

 

[the_ad id=”6605″]

 

 

தன் ஊரில் தன் வீட்டிலேயே அதற்க்கு உண்டான கருவியை வாங்கி உடல் பயிற்ச்சி செய்வான்…

சில சமயம் மொட்டை மாடியில்  உடல் பயிற்ச்சி செய்யும் போது,  பத்து வயதான  மணிமேகலை எப்போதும் தன்னை “அத்தான்.. அத்தான்…” என்று சுற்றி வருபவள்  அவனின் இந்த உடல் வளர்ச்சியை  பார்த்து..

“எப்படி அத்தான் இங்கு எல்லாம் இப்படி வீங்கு போய் இருக்கு…”

ஆசையோடு தன் ஹாம்சை பிடித்து பார்த்து மகிழ்ந்தவளுக்கு, மேலும் தன் உடல் வளர்ச்சியை காட்ட எண்ணி…

தன் மார்பின் பகுதியில் தசை பிண்டங்களை கொண்டு வந்து சேர்த்து அதை அசைத்து அசைத்து காட்டவும், அதை தொட்டு தொட்டு பார்த்து…

“அத்தான் நல்லா இருக்கு அத்தான்.” அந்த சிறுபெண்ணின் இந்த ஆச்சரியம் அவனுக்கு ஒரு பெருமையை கூட்டியது.

இன்னும் இன்னும் என்று… தன் இருகையையும் மடக்கி  தன் காதை தொடும் படி செய்து மணிமேகலை ஊஞ்சாடுவற்க்கு ஏதுவாய் வழி வகுத்து…

“இதில் நீ தொங்கேன்…” என்று சொல்லி அவளை ஊஞ்சல் ஆட்டுவான்.

ஒரு சில பயிற்ச்சிக்கு வெயிட்டுக்கு பதிலாய் அவளை உபயோகிப்பான். அதாவது அவன் மல்லாக்காக படுத்துக் கொண்டு,  தன் இரு கையையும் தூக்கி அவளை அதில் பிடித்து  கொண்டு இருகையையும்  கீழே விடாது பயிற்ச்சி செய்வான். அவன் அவ்வாறு செய்யும் போது அதுவும் தன் கைய்யோடு அவளையும் தன் முன் கொண்டு  வந்து பின் மேல்  தூக்கி என்று செய்யும்  போது  அவளுக்கு அவ்வளவு குஷியாக இருக்கும்.

அதனால் அவன் எப்போது  ஊருக்கு வந்தாலும், அவனுக்கு முன் இவள் எழுந்து அவனிடம்… “அத்தான் எப்போ எக்ஸைஸ் செய்வீங்க…?”ன்று கேட்டுக் கொண்டே வீராவின்  பின்னே சுற்றி திரிவாள்.

வீராவும் தன் அறையில் பயிற்ச்சி  செய்யாது மொட்டை மாடிக்கு வந்து உடற்பயிற்ச்சி செய்வபன் மறக்காது மணிமேகையையும் அழைப்பான்.

அப்போது மணிமேகலைக்கு பன்னிரெண்டு வயது. வீராவுக்கு பத்தொன்பது வயது. வீரா மணி மேகலையை  குழந்தையாய் குழந்தையாய் மட்டுமே பார்த்த சமயம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!