Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 24

ஒளி  24 :-


நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?

கையை சுடும் என்றாலும்!
தீயை தொடும் பிள்ளை போலே!
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்! 

 



Advertisement

அவன் போன் சத்தத்தில் இருவருமே ஒரு நிமிடம் அமைதியாகினர். இப்ப தான் போன் வரணுமா என்று அவனும் , எப்போதும் போல் யாருக்காக இந்த பாடல் என்று அவளும் யோசனையில் இருக்க, பார்த்திபன் தான் சுதாரித்தான்

 

சாரி ! பிரெண்ட் கால்நீங்க சொல்லுங்க…”  

Advertisement

 

Advertisement

“நீங்க பேசுங்க! நான் வெயிட் பண்றேன்”  என்று அவள் சொல்ல,

 

“இல்லையில்லை அப்புறம் பேசிக்கிறேன். நீங்க சொல்லுங்க …”

Advertisement

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து அவள் தொடர்ந்தாள்.

 

“உங்களை  என்னோட நம்பிக்கையாக  வைச்சு இவ்வளவு நாள் நான் போராடின விஷயம் எனக்கு கிடைக்க போகுதுஅது கிடைக்கும் போது கண்டிப்பாக உங்களை நேர்ல ஒரு முறை பார்க்கணும் அப்ப நீங்க எனக்கு விஷ் பண்ணனும்னு எனக்கு ஒரு எண்ணம்…”

 

“நான் ஆசைப்பட்ட விஷயம் நடக்க போகுது , என்னோட ரொம்ப நாள் போராட்டம் முடிய போகுது… இப்ப அதுக்காக தான் ஊருக்கு போறேன் என்னை விஷ் பண்ணி அனுப்புங்க ப்ளீஸ் !…”

 

“ஆனால் எப்பவும் போல உங்களுக்கு பிடிக்காத  விஷயம் செஞ்சு உங்களை கோபப்படுத்திருக்கேன்னு  நினைக்கிறேன்அது என்னனு தெரியலஎதுவானாலும் சாரி ! பட்  ப்ளீஸ் !” என்று அவள் கையை அவனை நோக்கியவாறே  நீட்டியவளைப் பார்த்தவன்,

 

இவ்வளவு நேரம் என்ன சொல்ல போகிறாளோ என்ற பதட்டத்தில் இருந்தவன் அவள் பேசப் பேச என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

 

அதிலும் ஒவ்வொன்றும்  அவள் சொல்லும் போது அவள் முகமும் கண்களும் காட்டிய உணர்வுகளைப் படித்தவன் அவளிடம் இது போல ஒன்றை எதிர்பார்க்கவில்லை.  

 

[the_ad id=”6605″]

 

 

தான் இந்த அளவிற்கு இவளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கோமா  என்று மகிழ்ந்தாலும் அவன் எதிர்பார்த்தது இல்லாததால் வருந்தியவாறே நிமிர்ந்தான்,

இன்னமும் அவன் முன் ஏக்கமாக கை நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் உருகியேப் போனான்அவன் வருத்தம் ஏக்கம் எல்லாம் தூரப் போட்டவன்,

 

அழுத்தமாக அவள் கையைப் பற்றிய நொடி அழுதே விட்டாள், இத்தனை நாள் தன்னுள் அடக்கி வைத்திருந்த போராட்டம்  எல்லாம் வெளியே வந்தது

 

“ஸ்! ஸ் ! குந்தவை! ஒண்ணுமில்லை! ஈஸி ஈஸி ! நான் இருக்கேன்ல அழக்கூடாது...” என்றவன் அவள் கையை தன் இரு கைகளுக்குள் பொத்தியவாறே அவளிடம் பேசினான்.    

 

“எல்லாம் சரி ஆகும் ! இப்ப சரியும் ஆகிடுச்சு இல்லையா! இனி ஒன்னும் இல்லை எல்லாம் ஹாப்பி தான் சரியா!

 

எவ்வளவு தான் திடமாக போராடினாலும் தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும்ஒண்ணுமில்லை , நான் தான் கூட இருக்கேன்ல” என்ற  இந்த  இரு  வார்த்தையை  தனக்குப் பிடித்த நபரிடம்  இருந்து  எதிர்பார்ப்பது  மனித  இயல்பு  தானோ

 

அவன் ஆறுதல் பேச்சில் அழுகை நின்றாலும் இன்னும் தேம்பிக் கொண்டிருந்தவளிடம்

 

“ஓய்!”

 

அவன் அழைத்த  நொடி சட்டென்று  நிமிர்ந்தாள்,

“ஓய் ! என்ன ! இன்னும் அழுதுட்டே  இருந்தால் ட்ரெயின்  உன்னை விட்டுட்டு போயிடும்கிளம்ப வேணாமா?” என்று அவன் கேட்க,

 

“ம்ம்ம் !!” என்றவாறே அவள் தலையசைத்தாள்.

“நீ அப்போவே  கடைசி  நிமிஷம் ஓடி வந்து  ரன்னிங்கில தான் ட்ரைன்ல ஏறுவ, இப்ப மட்டும் உனக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன”  என்று கேலி செய்தவனை முறைத்தாள்.

 

“ஹான் ! இதான் உன் லுக்கேநீ  ஆசைப்படற  எல்லா  விஷயமும்  உனக்கு  கிடைக்கும் . எப்பவும் எதுக்காகவும் உன்னோட நம்பிக்கையும் தைரியத்தையும்  மட்டும் விட்டுடாதஅதே  போல இனி  எதுவானாலும் என்ன வேணும்னாலும் நீ நேரடியாக  என்கிட்ட பேசலாம் சொல்லலாம்.. ஏன்னா  நான்  உன் முன்னாடி தான் இருக்கேன்எங்கயும் போகல சரியா?”

 

“ம்ம்ம் !”

 

“எப்படி ஸ்டேஷன் போக போற? நான் கொண்டு வந்து விடட்டா?”

 

“இல்லை ! டிரைவர் அண்ணா அந்த பக்கம் தான் போகணும் அதனால அவங்களே அங்க விடறேன்னு சொன்னாங்க…” என்று  ரதி சொன்னாள்.

 

“ம்ம்ம்! பத்திரமாக போகணும் ! அங்க போயிட்டு ஒரு மெசேஜ் அனுப்பனும்! சரியா!”

 

“ம்ம்ம் ! நான் கிளம்பறேன்”  என்று  அவள் கையை விலக்க  அவளின்  கையை  மறுபடியும்  ஒரு  முறை அழுத்தி விடுவித்தான்.

 

“ஏதோ ஒரு ஆசை நிறைவேறினதுக்கு என்னோட வாழ்த்து வேணும்னு என்னை தேடியிருக்க நீ, ஆனால் அதேபோல உன்னோட எல்லா ஆசையாகவும் சந்தோஷமாகவும் நான் இருக்கணும்னு ஆசைப்படறேன்.”

 

“எனக்கு உன்மேல இருக்க காதலை விட உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாத அளவுக்கு ஏக்கம் இருக்கு… எனக்கே எனக்காக என்னோட எல்லா உறவாகவும் நீ வேணும்னு பேராசை இருக்கு…”   

 

மனதில் அவளோடு பேசியவன் இது போல அவளிடம் சொல்லவும் பேசவும்  நிறைய  இருந்தாலும்  இப்போது அதற்கான தருணம் இல்லை என்பதை அறிந்து வேறு ஏதும் பேசாமல் அவளை வாழ்த்தி வழி அனுப்பினான்.

 

மனதில் இத்தனை நாள் இருந்த ஏக்கமோ இல்லை ஒருவரிடம் மற்றவர் பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்போ இருவரையும் மனம் விட்டு பேச வைத்திருந்தது. ஆனால் அதை  இருவருமே உணரவில்லை… 

 

அவள் தன்னை மறந்திருப்பாள் என்ற ஏமாற்றத்தில் இருந்தவனுக்கு அவன்  தான் அவளின் இத்தனை நாளின் தேடல், அதிலும் அவனைப் பற்றி பேசும் போது அவள் முகம் காட்டிய வண்ணங்கள் இதெல்லாம் அறிந்தவனுக்கு சந்தோஷத்திற்கு அளவில்லை.

 

இத்தனை நாள் போராட்டம் , அவனை தேடிய தேடல் ஆகியவற்றால்  கலைத்திருந்தவளுக்கு இன்று நினைத்ததை எல்லாம் அவனிடம் பேசிய நிம்மதியோ இல்லை அவனின் ஆறுதல் வார்த்தைகளோ ஏதோ ஒன்று நிறைவைக் கொடுத்தது உண்மை. அந்த நிறைவோடு மறுநாள் காலையில் தன் சொந்த ஊரில் இறங்கினாள்…. 

 

இந்த முறை அவளை அழைத்து செல்ல பழனி நின்றிருக்க, புன்னகையோடு அவரருகே வந்தாள்.

 

“எப்படி இருக்கீங்க மாமா ? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

 

[the_ad id=”6605″]

 

 

அவளின் தெளிந்த முகத்தைக் கண்டு, அவரும் அதே புன்னகையோடு “எல்லாரும்  நல்லா  இருக்கோம்.. போகலாமா?” என்று  அவர் கேட்க,

 

“ம்ம்ம் !” என்றவாறு வீட்டிற்கு சென்றாள்.

 

வாரநாள் என்பதால் வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, ஆண்கள் வேலைக்கு கிளம்ப என்று எல்லோரும் இருந்த பரபரப்பிலும் அவளைக் கவனித்தனர்.

 

“வா! ரதிம்மா!” என்று அவளின் அம்மாச்சி எப்போதும் போல அழைக்க, சிரித்தபடியே உள்ளே வந்தாள்.

 

நலம் விசாரிப்பும் காலை உணவும் முடிந்ததும் ஹாலில் எல்லோரும் இருந்தனர்.

 

“நாளைக்கு நேரம் நல்லா இருக்கும்மா! காலைல ஒரு பத்து மணிக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம்.. நாளைக்கு மறுநாளும் முகூர்த்த நாள் அன்னைக்கே நம்ப இடத்தில சின்னதாக ஒரு பூமி பூஜை போட்டுடலாம்…” என்று  பாண்டியன் சொல்ல,

 

“மாமா ! பூமி பூஜை மட்டும் ஒரு இரண்டு வாரம் கழிச்சு போடலாமாஎனக்கு லோன் கிடைக்க பத்துநாள் ஆகும்.. அதான்..”

 

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைஆரம்பிக்கனும்னு முடிவு பண்ணியாச்சு  அப்புறம்  என்ன? கொஞ்சம் கொஞ்சமாக பணம் எப்படி கிடைக்குதோ அதுக்கு ஏற்றவாறு கட்ட ஆரம்பிக்கலாம்.. இப்போதைக்கு பூஜை முதல்ல போட்ருவோம்…” என்று சரோஜா சொன்னார்.  

 

“ஆமா ! ரதிம்மா ! கையில இருக்கிறது போட்டு ஆரம்பிச்சுடலாம்.. சிவாவும் லோன்க்கு போட்டிருக்கான்.. அதனால ஒன்னும் பிரச்சனையில்லை.. சிவாவுக்கு வேற காலாகாலத்துல கல்யாண பண்ணனும்…” என்று பாண்டியன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

 

“வாவ்வ்! ஒரு வழியாக எனக்கு கல்யாணம் பண்ணனும்னு எங்க அப்பாக்கு தோணிடுச்சுசூப்பர் பா!” என்று சிவா என்ட்ரி கொடுத்தான்.

 

“அதெப்படிடா கரெக்டாக கல்யாணம் பத்தி பேசும் போது என்ட்ரி ஆகுற”, என்று இந்திராவும்,

 

“ஏன்டா? கல்யாணம் தவிர வேற ஏதும் பேச மாட்டேங்குற?” என்று வள்ளியும் கேட்க..

 

“இந்த வயசுல அதை தான் பேச முடியும். நீங்களாவே பேசுவீங்கன்னு நானும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்றது” என்று எல்லோரையும் முறைத்தவாறே கேட்டவனைப் பார்த்து, ரதி சிரிப்பை அடக்க முடியாமல்  பக்கென்று  சிரித்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் முறைத்தவனை,

 

“டேய்! போ போய் வந்த வேலையை பாரு !” என்று பாண்டியன் அதட்ட

 

“சரி ரதி! இன்னைக்கு பேங்க்கு போய்  பணம் எடுக்கற வேலை சாட்சி கையெழுத்து இதை எல்லாம் முடிக்கணும்அதான் உன்னை முன்னாடியே வர  சொன்னோம் சிவாவை கூட்டிட்டு போய் அந்த வேலை எல்லாம்  இன்னைக்கு முடிச்சுடு கூட எதுக்கும் ஞானத்தையும் கூட்டிட்டு போ…” என்று பழனி சொன்னதும்,   

 

“ம்ம்ம்! சரி மாமா ! அம்மா ! பெரியம்மா பெரியப்பா வரலையா?” ரதி கேட்க,

 

“பூஜைக்கு வந்துடுவாங்க அம்மு !..” என்று சாந்தி சொன்னார்.

 

“சரிம்மா !”

 

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்யவே அந்த நாள் ஓடியது! மறுநாள் பத்து மணி போல்  ரதி மற்றும் சாந்தியின் பெயரில் ஒரு பாகமும் சிவா மற்றும் ஞானம் பெயரில் மறு பாகமும் முறையாக பத்திரப் பதிவு செய்தனர்.

 

பத்திரத்தில் ரதி கையெழுத்திடும் போது, “அப்பா ! நான் உங்க ஆசையை நிறைவேத்திட்டேன்.. நீங்க எதிர்பார்த்ததை விட நல்ல நிலைமையில நான் இருக்கேன்ப்பாஆனால் நீங்க இல்லாம இந்த சந்தோசம் எனக்கு நிறைவாக இல்லைப்பாநீங்க எனக்காகவாது இருந்திருக்கலாம்ப்பா …” மனதளவில் தன் தந்தையோடு பேசியவாறே கையெழுத்திட்டு நிமிர்ந்தாள்.

 

அவள் மனதை உணர்ந்தார்களோ, “அம்மு ! இது சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரம்.. ஏதும் போட்டு குழப்பிக்காதேஅப்பா எங்கையும் போகல.. நீ வேணும்னா பாரு இந்த உலகத்தில் இருக்க  எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்கிற  மாதிரி மாமா உனக்கே  பையனா  வந்து பொறப்பாருஎன்று பழனி அவள் தலை கோதியவாறு ஆதரவாக சொல்ல அதற்கு  சிறு  புன்னைகை  புரிந்தவளின் போனில் மெசேஜ் வந்ததற்கு ஒலி கேட்டது.

 

 தன்னிச்சையாக அதை  திறந்தவள், அது பார்த்திபனிடம்  இருந்து  என்பதை அறிந்ததும்  தானாக அவள் முகம் மலர்ந்தது. சரியான தருணத்தில் அவன்  அனுப்பிய வாழ்த்தை பார்க்கும் போது எல்லாமே கிடைத்த  நிறைவு  அவளிடம்

 

மறுநாள் பூஜைக்கு ஆயத்தமாயினர்.ஒட்டு மொத்த குடும்பமாக முகத்தில் புன்னைகையோடும் மனதில் நிறைவோடும் எல்லோரும் ரதியின் வீடிருந்த  இடத்திற்கு  சென்றனர்

 

அந்த தெருவே அவர்களை மகிழ்வோடும் ஆவலோடும் வரவேற்க, பொறாமையும் நினைத்ததை சாதித்து விட்டாளே என்ற வஞ்சகமும் சேர்த்து மறைமுகமாக அவளை வரவேற்றது, அவள் உண்மை உறவுகள் என்று நினைத்த போலி முகங்கள்…

 

சாந்திக்கோ தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி அது அவரின் முகத்தில் பிரதிபலித்தது.  விழுந்த நாங்கள் எழுந்து விட்டோம் என்ற பூரிப்பு அவரிடம்..

மற்றது எதையும் கண்டுக்கொள்ளாமல் வந்து விசாரிக்கும் அக்கம் பக்கத்தினர் எல்லோருக்கும் சந்தோஷமாக பதிலளித்து அதன்பின் பூஜை முடிய நேரம் ஆனது.

 

[the_ad id=”6605″]

 

 

எல்லாம் முடிந்து மதியம் போல எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகும் போது, ரதி மட்டும் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று பின் தங்கிவிட்டாள்.  அவள் மனநிலையை உணர்ந்து மற்றவர்களும் கிளம்பினர்.

 

நான்கு வருஷத்திற்கு முன்பு இந்த இடத்தை தங்களிடம் இருந்து பறித்தது, தங்களை அவமானப்படுத்தி வெளியே துரத்தியது எல்லாம் விட அவள் உயிராக நினைத்த தந்தை அவளை விட்டு சென்றது என்று அனைத்தும் இப்போது அவளை அலைக்கழித்தது.

 

அவள் விலக்கிய நினைவுகள் தானாகவே இன்று அவளை வந்து சேர்ந்தது. அதைக் கலைப்பது போல போன் இசைத்தது,

 

சிவா தான் அழைத்தது “ரொம்ப நேரம் இருக்க வேணாம் சீக்கிரம் வந்துவிடு” என்றான்…  எந்த யோசனைக்கும் போக கூடாது என்று அங்கிருந்தபடியே போனை ஆராய்ந்தாள். அப்படி ஆராயும் போது பார்த்திபனின் ஸ்டேட்டஸ் பார்த்தாள்,

 

“என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்!

நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்!

நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்!

உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்!

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே!

என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே!

நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே!

நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே!

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா!

ஓட்ட வைக்க நான் இருக்கேன்!

கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி!

 

எப்போதும் போல் இந்த பாடல் யாருக்காக வைத்து இருப்பாங்க என்று யோசித்தவள் இது தனக்கானது தான் என்று உணராமல் போனது அவளின் அறியாமையோ…

 

அவளின் யோசனையில் தன் தந்தை இதைப் பற்றி சொன்னது நினைவில் வந்தது. எங்கு சுத்தி வந்தாலும் நினைவுகள் தன் தந்தையை நோக்கியே செல்வதை உணர்ந்தவள் தானாகவே அதை நோக்கி பயணித்தாள்… 

 

“உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா!!!”

 

உன் நம்பிக்கை நான் !

உன் பலம் நான் !

உன் தைரியமும் நான் !

உன் பலவீனமும் நானாக இருக்க!

காதலோடு உன் அனைத்துமாக நான் எப்போது இருப்பேன் ?!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!