Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyaen Viruppapizhai

Neeyen Viruppapizhai 3

பிழை: 3

 

பகையென்னும் பண்பி(ல்) அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.



Advertisement

 

(பொருள்: பகை கொள்ளுதல் என்னும் பண்பற்ற செயலை ஒருவன் பரிகசிப்பதற்க்குக்கூட (விளையாட்டிற்குக் கூடவிரும்பத்தக்க செயலாகக் கொள்ளுதல் நன்றன்று).

 

Advertisement

திருக்குறள் அதிகாரம்: 88

Advertisement

பகத்திறன் தெரிதல்“….

 

கரு நீல நிற முழுக்கை சட்டையும் அடர்ந்த சாம்பல் நிற பாண்ட்டும் அணிந்த மகிழ் தனது அலுவலகம் செல்ல தயாராகி அவனுடைய அறையில் இருந்து கீழே இறங்கினான்…  

Advertisement

 

உணவு மேஜையில் அமர்ந்து தனது காலை உணவை அருந்திக்கொண்டு இருந்த சொர்ணா தான் அண்ணன் வருவதை கண்டவள்அவனை பொருட்படுத்தாமல் தனது உணவில் கவனம் செலுத்தினாள்…  காலை உணவு உண்ண தனது அண்ணனை அவள் ஒரு மரியாதைக்கு கூட அழைக்கவில்லை…  அலட்சியமாக அவள் பணியை செய்துக்கொண்டு இருந்தாள்… 

 

அவன் அவசரமாக அலுவலகம் சொல்வதையும் அவள் கண்டுக்கொள்ளவில்லைஅதுவே சொர்ணா….

 

மகிழும் அவளை கண்டவன்அவள் செய்கையை கண்டும் காணத்தவனாக வாசலை நோக்கி சென்றான்….  மனதுக்குள்ளேஇன்னைக்கு முக்கியமான ஒப்பந்த சந்திப்பு இருக்குகாலையிலேயே அவள் ஞாபகம் வேற இன்று அதிகம் வந்ததால் கிளம்பியதே தாமதம்.. இந்த சொர்ணா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இன்னும் கிளம்பாமல் வேற உட்காந்திருக்கிறாள்….’ என்று நினைத்தவன் அமைதியாக வெளியேற…  

 

[the_ad id=”6605″]

 

 

அந்த நேரம் சமயலறையில் இருந்து வந்த யசோதா, அவனை கண்டுவிட்டு உணவருந்தாமல் செல்வதை கண்டவர் வேகமாக அவன் அருகில் சென்று… “மகிழ் கண்ணா என்னப்பா சாப்பிடாமல் கிளம்புறஉள்ள வந்து கொஞ்சம் சாப்பிடு…” என்று அவனைக் அழைக்கஎன்றும் போல இன்றும் ஒரு உணர்வற்ற முகத்துடன் அவரை கண்டவன்… “எனக்கு சாப்பாடு வேண்டாம்ஒரு மிக்கியமான ஒப்பந்தம் இருக்குஅதுக்கான மீட்டிங்க்கு எனக்கு மணியாகிறதுஅதனால் நான் கிளம்புறேன்…” என்று சொன்னவன் இன்னும் உணவருந்தும் தன் தங்கையை ஒரு பார்வை பார்த்தான்…  

 

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்களிடம் தங்கள் தொழிலை பற்றி விளக்கும் பொறுப்பை அவன் அவளிடமே ஒப்படைத்திருந்தான்…. அன்னையின் பதிலை கூட கேட்காமல் அங்கிருந்து விரைந்தான்… 

 

அவன் செல்வதை கண்ட யசோதாவிற்கு சில வருடங்களாக இப்படி தனக்குள்ளேயே இறுகி இருக்கும் மகனை கண்டு கவலையாக இருந்ததுமுன்பே அவன் மனதில் இருப்பதை எளிதில் வெளியே சொல்லாதவன் இப்பொழுது சில வருடமாக முற்றிலும் தன்னை தனக்குள் சுருக்கிக்கொண்டவனை கண்டு அவர் தாயுள்ளம் கவலை கொண்டது.

 

(மகிழ் மனதில் நினைப்பதை என்றும் யாரிடமும் எளிதில் சொல்ல மாட்டான்இதுவே அவன் அவன் கண்ணம்மாவை பிரிய முக்கிய காரணமாக ஒரு நாள் இருந்ததை அவன் இன்று வரை அறியாமல் இருந்தான்)…  

 

யசோதா மகன் சென்றதை கண்டுவிட்டு அவன் செல்லும் முன்பு தனது தங்கையை திரும்பி ஒரு பார்வை பார்த்ததுமே தெரிந்ததுஇன்றைக்கு நடக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு கண்டிப்பாக சொர்ணா செல்ல வேண்டும் என்பது…  மகிழ் கோபம் பற்றி தெரிந்தவர்.. ‘இவள் எங்கே தாமதமாக சென்று அவனிடம் வாங்கி கட்டிக்க போறாளோ…?’ என்று நினைத்து அவள் அருகில் சென்றவள்… “ஏண்டி அவன் ஏதோ மீட்டிங்ன்னு அவசரமா சாப்பிடாம கூட போறான்நீ என்னன்னா இந்த இட்லியை கூட ஏதோ காணாததை கண்டது போல இப்படி சாப்பிடுற….? இந்த லட்சணத்துல நீ இன்னும் கிளம்ப வேற இல்ல…?” என்று அவளை வசை பாட…  

 

அன்னை சொன்னவற்றை காதில் வாங்காமல் அலட்சியமாக… “அம்மா அது நம்ம அலுவலகம்அதனால் பொறுமையாக போய்க்கொள்ளலாம்என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்ககேட்கவும் முடியாதுஅதனால் நான் போறப்ப போனா போதும்…” என்று அலட்சியமாக பதில் சொன்னவள் கையை கழுவிக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் அலுவலகம் செல்ல…. 

 

அவள் சொன்னதை கண்ட யசோதாவிற்குஎன்று தான் இந்த பெண்ணிற்கு பொறுப்பு வருமோ…? இல்லை இந்த அலச்சியத்திற்கு என்று மகிழின் கோபம் முகம் காண போகிறாளோ.?’ என்று வருந்தினார்… (கண்டிப்பாக ஒரு நாள் அண்ணனின் கோப முகம் கண்டு அவன் கோபத்தில் ஆடும் ருத்ரதாண்டவம் கண்டு நடுநடுங்கி நிற்க போகிறாள்)….

 

சரியாக அவள் அறைக்கு சென்று அரை மணி நேரம் கழித்து தனதரையில் இருந்து வந்த சொர்ணா அன்னையிடம் சொல்லிக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்..

 

வீட்டில் இருந்து கிளம்பிய மகிழ் தன்னுடைய ஆடி ஆர்8 எல்.எம். எக்ஸ் காரில் தனது அலுவலகம் நோக்கி சென்றான்…  அவனுக்கு காரில் பயணம் செய்வது அதுவும் தானே ஓட்டிக்கொண்டு செல்வது என்றால் மிகவும் விருப்பம்…  அவன் இந்த வரையறுக்கபட்ட பாதிப்பு(லிமிடெட் வெர்ஸன்) காரை தன்னிடம் வைத்திருந்தான்.. அந்த கார் இந்தியாவிலேயே சிலரிடம் மட்டும் தான் இருந்தது…  

 

மதுரை மாநகரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதிகண் மருத்துவமனைக்கு மிகவும் சிறப்பு பெற்ற பகுதி மற்றும் பல பெரிய பெரிய வணிக வளாகங்களை கொண்ட பகுதியான அங்கே தான் மகிழ்ன் மாறன் பைனான்ஸ் மற்றும் அனைத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் இருந்தது…  அந்த பகுதியிலேயே கொஞ்சம் ஒதுக்குபுறமாக எழுந்து நின்றது ஐந்து மாடிகளை கொண்ட அந்த அலுவலகம்…. கட்டிடத்தை சுற்றி அழகிய தோட்டம் வேறு கண்ணை கவருவதாக இருந்தது… 

 

அலுவலகத்தை சுற்றி தோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்…’ என்று சொன்னது அவனுடைய கண்ணம்மாஅவள் இல்லாத இந்த நான்கு வருடமும் அவன் அவளுடைய நினைவிலேயே பசுமையாக இருப்பது போலஅந்த தோட்டமும் பசுமையாக அவளுடைய நினைவில் இருந்தது…  

 

 

[the_ad id=”6605″]

 

அலுவலக சுற்று சுவர் தாண்டி உள்ளே வந்த மகிழ் தனது காரை அதை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன்…. சுற்றும் இருக்கும் அழகிய தோட்டத்தை கண்டவன்… ‘உன்னோட ஞாபகம் இல்லாமல்  ஒரு நொடி கூட என்னால இருக்க முடியலடீபிலீஸ் எங்க இருந்தாலும் என்கிட்ட வந்துடுடீ…’ என்று  மனதுக்குள்ளே அவளிடம் பேசியவன்கடமை அழைக்க தான் எப்பொழுயதும் அணியும் கோபம் என்னும் முகமூடியை அணிந்தவன்வேக நடை போட்டு அலுவலகம் உள்ளே செல்லஅவனை கண்ட பணியாளர்கள் அனைவரும் மரியாதையுடன் அவனுக்கு வாழ்த்து சொல்லஅதற்கு சிறு தலையசைப்பு கூட இல்லாமல் தன்னுடைய அறை இருக்கும் மூன்றாம் மாடிக்கு படிகள் வழியே நடந்தே சென்றான்…. அங்கு நடக்கும் அனைத்தையும் அறிந்தவனாக… 

 

மூன்றாம் தளத்தில் இருந்த தன்னுடைய அறையில் சென்று அமர்ந்தவன்… ‘எப்படியும் தனது தங்கை வர குறைந்தது அரைமணிநேரம் முதல் முக்கால் மணிநேரம் வரை ஆகும் எனவும்அவளிடம் போய் தான் கொடுத்த வேலையை நினைத்து தன்னையே முட்டாள்…’ என திட்டிக்கொண்டவன்அவர்கள் நிறுவனம் பற்றிய தகவல் அனைத்தையும் அவனே ஒப்பந்தகாரர்களிடன் சொல்ல தன்னை தாயார் படுத்திக்கொண்டன்… 

 

அடுத்த பத்துநிமிடத்திற்கெல்லாம் அவர்களுடன் மீட்டிங் அறையில் இருந்தான்அந்த ஒப்பந்தம் அவனுடைய காய்கனி ஏற்றுமதி குறித்ததுஅவன் புதியதாக ஒரு நாட்டுடன் அந்த ஒப்பந்தம் போடுவதாக இருந்ததுஅதற்கு அவனுடைய அனைத்து நிறுவனங்கள் பற்றியும் அவர்களுக்கு தெரிவிப்பது அவனுடைய கடமை அதனாலேயே அவன் அந்த பொறுப்பை சொர்ணாவை நம்பி ஒப்படைத்தான்… 

 

ஆனால் அவள் எப்பொழுதும் போல அலட்சியமாக இருக்கிறாள்… ‘எல்லாம் அந்த அப்பா கொடுக்கும் செல்லம்…’ என்று நினைத்தவன்வந்தவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்….  

 

அவன் நினைத்ததை போலவே மீட்டிங் தொடங்கி அரைமணிநேரம் கழித்தே அங்கே சொர்ணா வந்தாள்வந்தவள் தாமதமாக வந்ததற்கு எவரிடமும் ஒரு சின்ன மன்னிப்பு கூட கேட்காமல் அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டாள்…. அவளை முறைத்து பார்த்த மகிழ்அதன் பிறகு தன்னுடைய வேலையை தொடர்ந்தான்… 

 

அவனுக்கு அந்த நிமிடம் கூட… ‘தன்னுடைய கண்ணம்மா இங்கே இருந்தால் அவளுடைய சிரித்த முகத்திற்கே எதிரிகள் கூட சந்தோசமாக கைகோப்பார்கள்…’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை….  

[the_ad id=”6605″]

 

சொர்ணா அவள் யாரையும் மதிக்காமல் நடந்துக்கொள்வதற்கு இதுவே பெரிய உதாரணம்…. ஆனால் அவளும் ஒருவனுடைய அன்பிற்காக தன்னுடைய ஆணவம் செருக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனிடம் ஒருநாள் அவனுடைய அன்பை வேண்டி தவமிருப்பாள்அவளுக்குள்ளும் இருக்கும் நற்பண்புகள் அவனால் வெளிவரும். ஆனால் அதற்குள் அவள் உடன் இருப்பவர்களை என்ன என்ன படுபடுத்த போகிறாளோ..?

 

உடன் பிறந்தவளே ஆனாலும்,

செருக்கு என்னும் ஆணவம்,

அவளை அளிக்க காத்திருக்க,

உடன் பிறந்தவன் காப்பானா,

உடன் வருபவன் மற்றுவனோ,

இல்லை காலமெல்லாம் அவள்

இப்படியே ஆணவதுடன் 

இருந்துவிடுவாளோ? என்றும்,

அன்பிற்கே அழியா மதிப்பென்று

தெரிந்து நடப்பாளோ, காலம்

பதில் சொல்ல காத்திருக்கிறதோ…?

 

பிழை விருப்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!