Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 22

ஜெய் ஸ்ரீ ராம்   

EPI-22

 

சுரேஷ் சொன்னதை கேட்டு உண்மையில் சதிஷ் வாயடைத்து  தான் போய்விட்டான்



Advertisement

இதுவரை  சதிஷ் சொன்னதை சுரேஷ் மறுத்து பேசியது கிடையாது.அவனின் மேல் மதிப்பு என்பதை விட  பயம்.

ஆம் பயம் தான் சுரேஷ் மட்டும் இல்லை சக்தியை தவிர அங்கு இருக்கும்  அனைவர்க்கும் ஒரு வித  பயம்.

அவனை பகைத்து கொள்வதும்  பாம்பு புத்தில்  கையை விடு வதும் ஒன்று.

Advertisement

பணம்அரசியல் செல்வாக்கு என்று அனைத்தும் கொண்டவன் ஆயிற்றே!

Advertisement

சொல்லுங்க சதீஸ்  நான் அவரை அடிக்கலைனு அவர் சொல்லிட்டார்.

இப்போ என்ன எப்டி வெளில அனுப்ப போறீங்க ,”என்று  மேலும் சக்தி ஊக்குவிக்க,

தன்னிலை அடைந்த சதிஷ்

Advertisement

சுரேஷ் என்ன சொல்ற சக்தி உன்னை அடிச்சதா தானே நீ கம்ப்லைன்ட் பண்ண இப்போ மாத்தி பேசுற,

என்று  குற்றம் சாட்டும் குரலில் கூறியவன்,

யாராவது உன்னை மிரட்டி பொய் சொல்ல சொன்னாங்களா பயப்படாம  சொல்லு நான் பாத்துக்கிறேன்“.

சுரேஷ் திருத்தி விட்டான் என்று சதீஸிற்கு தெரியவில்லை

 

[the_ad id=”6605″]

 

 

தினகரன் மாமா வீட்டிற்கு செல்லும் முன்னே சுரேஷின் மனைவி சக்தியை அழைத்துஅண்ணா உங்க கிட்ட பேசணும் எங்க இருபிங்கனு சொல்லுங்க ரெண்டு பெரும் வரோம் .”

இல்லமா நானே வரேன்“.என்றவன்  கல்லூரி வரும் முன்பு அவர்களின் வீட்டிற்கு சென்று 

சந்தித்து  விட்டு தான் வந்தான் .

சுரேஷ் வீடு  நுழையும்  முன்  சக்தி பதட்டதோடு  தான் சென்றான்.அவன் சென்றதுமேஅண்ணா நீங்க தான் இவரை அடிச்சீங்கன்னு சொன்னாருஅது வந்து என்று சக்தி யதோ சொல்ல வர,  “நீங்க அடிச்சது தப்புனு நான் சொல்லலை அண்ணா,  

இதுவரைக்கும் இவர் பண்ண காரியம் எனக்கு தெரியாதுஇவருக்கு நீங்க குடுத்த   தன்டனை கம்மி தான் அண்ணா

காலேஜ்ல படிக்கும் போதே யன் மனசை  மாத்தி படிப்பு முடியும் முன்னவே கல்யாணம் முடிச்சி,

எங்க வீட்டையும் விட்டு கூட்டிட்டு வந்தாரு,

வந்த பிறகு தான் தெரிஞ்சது ரொம்ப பணத்தாசை பிடிச்ச மனுஷன்னு, ஆனா இவ்ளோ கேவலமான  வேலை செய்வாருன்னு நான் நினைக்கலை. அந்த பொண்ணுங்க பாவம் எங்களை சும்மா விடாது .

இவர் இப்போ திருந்திட்டார் .சட்டப்படி என்ன பண்ணணுமோ  சொல்லுங்க செய்வார்இவரோட பாவம் எங்க குழந்தைக்கு வர கூடாது.”

சக்தி சுரேசை ஏறிட்டு பார்க்க, “அவ சொல்றது எல்லாம் உண்மை தான் சார்.அந்த  கம்ப்ளைண்ட்  நான் வாபஸ் வாங்கிக்கிறேன்.”

சக்தி அவனை நம்பலாமா என்பது போல் அர்ஜுனை பார்க்க, அர்ஜுன் அவனை நம்ப வில்லையண்ணட எப்டி இருந்தாலும் மாட்ட போறோம் அதுனால தப்பிச்சிக்கலாம்னு நல்லவன் வேஷம்  போட்ரியா,”

அய்யய்யோ இல்லை  சார் நீங்க என்ன சொன்னலாலும்  செய்றேன்

 

[the_ad id=”6605″]

 

 

அர்ஜுன் 

அப்படினா நீ அப்ருவரா மாறி எல்லாத்தையும் ஒத்துக்கற இல்லையா, என்று இடைவெளி விட்டவன் .அப்போ போலீஸ் ஸ்டேஷன் போய் சரண்டர் ஆகு

சுரேஷ் சற்று அதிர்ச்சி ஆனவன் பின்பு உடனேகண்டீப்பா சார் ஆனா யன் பொண்டாட்டி, பிள்ளையை அந்த சதிஷ் எதாவது பன்னிடுவானோனு பயமா இருக்கு .”

நீ கவலை பட தேவை இல்லைநீ சரண்டர் மட்டும் ஆகு. பின்னாடி அவனும் வருவான்.நீ எந்த ஆதாரமும்,சாட்சியும் சொல்ல தேவை இல்லைஎல்லாம் எங்ககிட்ட இருக்குஅவங்க பண்ண தப்புக்கு கூட இருந்தஅவ்ளோதான் உன்மேல கேஸ் .

சரண்டர் ஆகிட்டா தண்டனையும் கம்மிஎன்று காவல் துறை அதிகாரியாய் கூற,பின்பு சரி என்று காவல் நிலையம் சென்று சரண்டர் ஆகி ,பின்பு அதிகாரிகளிடம் பெர்மிஷன் வாங்கி தான் கல்லூரி வந்துள்ளான் .

 சுரேஷ்இல்லை சார் என்னை யாரும் மிரட்டலை நானா தான் சொல்றேன்.

என்னை  எல்லாரும் மன்னிச்சிருங்கஎன்றவன் விருட்டென்று வெளியில் சென்று விட்டான்.

அவன் சென்றதும்  அனைவரும் இனி என்ன என்பது போல் தினகரனை பார்க்க, “மீட்டிங் முடிஞ்சது கிளமபலம் சக்தி எப்பவும் போல் அவரு வேலையை கன்டிநியூ பண்ணலாம்” என்று எழ பார்க்க ,

இன்னும் முடியலை தினகரன் இனிமே தான் மீட்டிங் ஆரம்பிக்க போது 

என்ற  சக்தியின் கம்பீர குரலை கேட்டு களைய ஆரம்பித்தவர்கள் மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்கள் .

இப்போ நம்ம  கொஞ்சம் வீடியோ  அண்ட்  போட்டோஸ்   பாக்க போறோம் என்று அங்கிருந்த ப்ரஜெக்ட்டரை  ஆன் செய்து ஓட விட  தினகரனும்  சதீசும்  பொது இடங்களில் வெவ்வேறு பெண்களோடு நெருங்கி நின்று 

இருந்த புகை படம்  மற்றும்  வீடியோ காட்சிகள்.அதில் முக்கால்வாசி இந்த கல்லூரி பெண்களே !!!

இதை கண்ட அனைவர் முகத்திலும் ஒரு அதிர்வு வந்தது.

தினகரனுக்கு அதிர்வோடு சேர்த்து பயமும்,

சதிஷ் கூட முதன் முறை எதிரியை குறச்சி எடை போட்டுட்டோம் போல என்று நினைத்தான்

ஆனாலும் உடனே சக்தியை நோக்கி ஒரு அலட்சிய புன்னகையை சிந்த மறக்க வில்லை .

சக்திசொல்லுங்க தினகரன்  நான் செய்ஞ்சது மட்டும் தான் ஸ்டுடென்ட்ஸ்கு தப்பான உதாரணமா ,

இதுக்கு என்ன பதில் சொல்றிங்க ,ப்ரின்சிபல் நீங்க இப்படி பொது இடத்துல நடந்துக்குறது ரொம்ப நல்ல உதாரணம்னு சொல்ல வரிங்களா ,

தினகரன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதி காக்க  ஆவேசமாக எழுந்த சதஷ்எங்களோட பர்சனல்ஸ்  வீடியோ,போட்டோஸ் எடுக்க உனக்கு  எவ்ளோ திமிர் இருக்கணும் .உன் மேல நான் கேஸ் குடுத்தா என்ன நடக்கும் தெரியுமாடா ,”

 

[the_ad id=”6605″]

 

 

மிஸ்டர்.சதிஷ்….. மரியாதை குடுத்து பேசறது உங்களுக்கு நல்லது.

உங்களோட பர்சனல்….. அப்படின்னா உங்க  வீட்டம்மா கூட சுத்துங்க அதை விட்டுட்டு காலேஜ்க்கு படிக்க வர சின்ன பொண்ணுங்களை  மிரட்டி எதுக்கு கூட்டிட்டு போறீங்க,

என்று ஆவேசமாக கத்தியவன் இந்த ஒரு மாதம்  சதீஸ் பெண்களை மிரட்டிய போன் கால்ஸ் ரெகார்ட செய்து இருந்ததை ஆடியோவாக ஒலிக்க விட்டான்

காதல் கேக்க கூட முடியாத வார்த்தைகள் .

தினகரனுக்கு அடிமட்டமே ஆட்டம் காண ஆரம்பிக்க அப்போதும் சதிஷ் கெத்தாக  தான் அமர்ந்து இருந்தான்.

இது உண்மைன்னு எப்படி நம்ப முடியும் ஒருவேளை நீங்க யாரையாவது வச்சி என்ன மாதிரி பேசி ரெகார்ட்   பன்னிர்களாம் இல்லையா ,

அந்த நொடி உள்ளே நுழைந்த அர்ஜுன் அவன் கையில் இருந்த  பேப்பரை டேபிளில் வீசிஇந்த ஒரு மாசம் உங்க  போன்ல இருந்தது நீங்க எந்த எந்த நம்பற்க்கு  பேசியிருக்கிங்க என்கிறததுக்கு ஆதாரணம் .

அடுத்து………  காலேஜிக்கு படிக்க வந்த பொண்ணுங்களை  தப்பா விடியோ எடுத்து மிரட்டி உங்க ஆசைக்கு இணங்க வச்சி அதையும் வீடியோ எடுத்து வச்சி மிரட்டி இருக்கீங்க,

இது எவ்ளோ பெரிய கிரைம் தெரியுமா,அதுக்காக உங்களை அர்ரெஸ்ட் பண்றதுக்குக்கான அரெஸ்ட் வாறன்ட் இது என்று மற்றொரு பேப்பரை டேபிளில் வீசினான்.

அப்படி நான் மிரட்டி இருக்கேனு ஒரு பொண்ணை சாட்சி சொல்ல சொல்லுங்க நான் வரேன்.” என்று திமிரோடு சொன்னான்.

அதை உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

தேவையான நேரத்துல வந்து சொல்லுவாங்க,

அது மட்டும் இல்லை உன்னோட அனைத்து அந்தரங்க வீடியோவும் இதுல இருக்கு,

நீ மத்த பொண்ணுங்களை மிரட்டின மாதிரி இதை  நெட்ல போட ஒரு செகண்ட் ஆகாது ….என்ன போடவா …… “

அங்கிருந்த ஒருவர் எழுந்துஇந்த விஷயம் வெளியில் தெரிந்தால் இந்த காலேஜ் பேர் கெட்ரும் .அப்புறம் இங்க ஸ்டுடென்ட்ஸ் யாரும் சேர மாட்டாங்க,இருபது வருஷமா இந்த காலேஜ் ரன் பன்னிட்டு இருக்கோம்.இந்த அளவுக்கு கொன்டு வர எவ்ளவோ பாடு பட்றுக்கோம் .

 

[the_ad id=”6605″]

 

 

நேத்து வந்து பொறுப்பு ஏத்துக்கிட்ட இவங்க பண்ண தப்புக்கு எங்க எல்லோரோட உழைப்பும் வீணாகும் .

அதுனால சார்இதை போலீஸ் கேஸ் ஆக்க நாங்க விரும்பலை எங்க கேம்பஸ் குள்ள நடந்தது .

நாங்க கமிட்டில பேசி தீர்த்துப்போம்.நீங்க கிளம்பலாம்.

அர்ஜுன்   

அங்கு இருப்பவர்களை பார்த்து  காலேஜ்ல ஷேர் ஹோல்டேர்சா இருக்கவங்க 

நமக்கு எவ்ளோ பணம் வருதுன்னு மட்டும் பாத்தா பாத்தாது.

இங்க படிக்கர பொன்னுங்க பாதுகாப்பா இருக்காங்களானும் பாக்கணும்.உங்க வீட்டு பொன்னுங்கண்ணா இப்படி  தான்  கேர்ளஸ்ஸா  இருப்பிங்களா ……”

இவனுங்களுக்கு இன்னும் ஒன் ஹௌர் டைம் அதுக்குள்ள ஸ்டேஷன் போனும் 

உங்க பார்மாலிட்டீஸ் எதாவது இருந்தா முடிச்சி அனுப்புங்க,”

தொன்டையை  சரி செய்த சக்தி

இதுக்குமேல இந்த காலேஜில இவங்க ஷேர் ஹோல்டரா இருக்க நான் விரும்பலை. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா அவங்களோட ஷேர்ஸ் பிரிச்சிடலாம் .”

பின்பு அங்கு இருக்கும் அனைவராலும் கலந்து பேசப்பட்டு சதிஷ் ஷேர் கம்மி தான்  பிரிக்கறதுல எந்த ப்ரோப்ளேமும் இல்லை ஆனா தினகரன்

சக்திக்கு இக்குவல் ஷேர் அவரிடம் இருக்கிறது.

அதோடு அவங்க அப்பா தான் இதை உருவாக்க ரொம்ப கஷ்டப்பட்டவர் .என்று யோசித்தனர் அதோடு அவரை விலகினால் அடுத்து யார் இங்கு பொறுப்பு ஏற்பது என்றும் ப்ரச்சனை கிளம்பியது .

பின்பு அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து சதிஷ் ஷேர் பிரித்து கொடுத்து விடலாம்.

தினகரன் அப்பாவிற்காக ஷேர்ஸ் பிரிக்கபடாமலும்  விட்டனர்அடுத்த பொறுப்பு  சக்தி ஏற்க்க வேண்டும் என்க,அதை மறுத்த சக்தி.[தினகரன் மனைவி நிஷா இதே ஊரில் தனியார் பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறார்

 “அவங்க பொறுப்பை ஏற்கட்டும்  நல்ல திறமையானவங்க

அதோடு இப்போ பொண்ணுங்க பிரச்சனையை நடந்ததால் பொண்ணுங்க பொறுப்புல இருந்தா தான்  வெளில இருக்கவங்களுக்கு இனி இந்த பிரச்ச்ச்னை வராதுன்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கும் என்பது என் எண்ணம்என்றான் .

சக்தியின் கூற்றுப்படி    அடுத்த அரைமணி நேரத்தில் நிஷா பொறுப்பை ஏற்றார் நிஷா ஆரம்பித்தில்  மறுத்தவர் பின் தன்கணவன் செய்த குற்றத்திற்காக  மற்றவரும் பாதிக்கப்படுவதை விரும்பாமல் பதவி ஏற்றார்.                                

அனைத்தும்  முடிந்து இங்கு உள்ள காவல் அதிகாரிகளின் துணையால் தினகரன்,

சதிஷ்  இருவரையும் கைது செய்ய நினைக்க ,அடுத்த  பிரச்சனை  கிளம்பியது  சதீஷின் மாமாவின்    மூலம் .

இது எதிர்பார்த்ததது தான் என்றாலும் அர்ஜுனால் சமாளிக்க முடியவில்லை.

எவ்வளவு ஆதாரம் இருந்தாலும் சதீஷை தொடக்கூடாது என்று அவனின் மாமா MLA  மூலம் காவல் துறை அதிகாரிகளுக்கு ப்ரெஸ்ஸர் கொடுத்தார் .

 

 கமிஷனரிடம்  எவ்வளவோ அர்ஜுன் வாதாடியும் சதீஷை 

அரெஸ்ட்  செய்ய மறுத்து விட வாரண்ட் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை,

இன்றய சமுதாயத்தில் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் நியாயம் இதுதான் .

சதீஷின் ஏளன பார்வை சக்தியை தொடந்ததோடு ,”இப்போ என்ன பண்ண முடியும் உன்னாலஎன்றுவாய்விட்டேகேட்டான்

ஒரு வாரமாய் சேகரித்த அனைத்து  ஆதாரங்களுமலும் வீண்.

இவனை இப்படியே விட்டால் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் வெளையாடுவானோ !!!!

எங்கு சென்றாலும் அதிகாரமும்,பணமும்  மட்டுமே பேசும்.

இப்படிப்பட்டவர்களை  நம் வெல்ல வேண்டும்  என்றால்  

அவர்களை விட நாம் பலம் வாய்ந்தவராக இருக்க     வேன் டும் .

சக்திக்கு பொறுமை பறந்து விட்டது,இவன் சட்டப்படி ஜெயில்க்கு போனா கூட என்ன  பண்ண போறான்,வேளாவேளைக்கு சாப்பிட்டு ஜாலியா ராஜா மாதிரி உள்ள இருந்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு பெய்ல  வந்துடுவான் .

இல்லை இது சரி இல்லை இவனை நான் முடிகிறேன்.மச்சான் அப்புறம் உங்க சட்டம்  என்னஆக்க்ஸன் எடுக்குதுனு பாக்கிறேன்.” என்ற சக்தி அனைவரின் முன்பும் சதீஷை  அடிக்க பாய்ந்து விட்டான்.

மனோவும் ,ப்ரவீனும் அவனிடம் இருந்து சக்தியை பிரித்தெடுத்து தனியாக அழைத்து சென்று அமைதி படுத்தினர் .

அர்ஜுன்மச்சான் இவனை உள்ள தள்ள ஒரு வலி இருக்கு உன்னோட பிரன்ட் பைந்தமிழ் நம்ம அமைச்சருக்கு வேண்டப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்.

நீ பைந்தமிழ்க்கிட்ட சொல்லி அமைச்சர் கிட்ட பேசி பாக்க முடியுமான்னு கேளு. அமைச்சர் நெனைச்சா பெயில் கூட கெடைக்கமா இவன் உள்ள களி தின்னுட்டு இருக்க வேண்டியது தான் .

சக்தியும் அதே போல் பைந்தமிழிடம் பேசஇவ்வளவு  சீரியஸ் ஆனா பின்னாடி தான்  என்கிட்ட சொல்லுவியா ,முன்னாடி சொல்லி இருந்தாஇந்நேரம் அவன் கேஸ் முடிந்திருக்கும்.’ என்று சக்தியை கடிந்தவன் மறுநிமிடமே  அமைச்சரிடம் பேச அடுத்த சில மணி  நேரங்களில் தினகரனும்,சதீசும் நான் பெய்லபிள்  கேசில் கைது செய்ய பட்டனர் .

தினகரன் செல்லும் முன் ஏதோ நிஷா விடம் பேச வர ,ஒற்றை கையை உயர்த்தி அவனை தடுத்தவள் .

கூடிய சீக்கிரம் டிவோர்ஸ் பேப்பர் வரும் சைன் பண்ணி அனுப்புங்கஎன்று வாயிலை நோக்கி கைக்காட்டினாள் .  

அவர்கள் சென்றதும் கையோடு  சக்தியும் நிஷாவிடம் தனது ரெசிங்ங்னேஷன்  லெட்டரை நீட்ட அங்கிருந்து அனைவருக்கும் இது அதிர்ச்சியை தந்தது .

பின்  நிஷா சுதாரித்து ஏன் என்று கேள்வியாய் பாக்க ,

நான் வந்த வேலை முடிஞ்சது இதுக்கு மேல நீங்க நல்லா ரன் பண்ணுவீங்கன்னு நமபிக்கை இருக்குசோ நான் கெளம்பறேன் .”

இல்லை சார்  இப்போ முடியாது கொஞ்ச நாள் கழிச்சு வேணும்னா போங்க

எனக்கு இங்க இன்னும்  என்ன பண்ணனும்னு கூட தெரியாது

இதுல ஸ்கூல் பாத்துக்கணும் வீட்ல பிள்ளைங்க,  சோ ப்ளீஸ் ” என்று முடிக்க ,அதையே மற்றவர்களும் சொல்ல  வேறு வலி இல்லாமல்இந்த செம் முடியற  வரைக்கும் ஓகே” என்று ஓத்து கொண்டான் .

தினகரன்  செய்தது தவறு என்றாலும் தன கணவனை ஜெயிலுக்கு அனுப்பியவன் மேல் கோவப்படாமல் ,

இந்த பெண் இவ்வளவு நட்பு பாராட்டுவதே போதுமானதாக இருந்தது

 

அனைத்தும் சுமுகமாக முடிந்த பின் அர்ஜுன்,மனோ இருவரும் கிளம்புவதாக  சொல்ல ,சக்தியும் விடுப்பு சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

மாலை கல்லூரி முடியும் நேரத்திற்கு சரியாக  வந்து நின்றது மனோவின் அப்பாச்சியும் ,சக்தியின் என்பீல்ட்டும் .

மனோவை கண்டதும் விழிகளில் மின்னல் வெட்ட காவியா வந்து நின்றாள்.

மாணவர்கள் யாருக்கும் சதிஷ் ,தினகரன்  விஷயம் தெரியாது .

அனுமன் இலங்கைக்கு சீதையை தேடி சென்று…. பின் திரும்பிய போது ராமனின் தவிப்பை பார்த்து கண்டேன் சீதையை ….. என்றது போல்எல்லாம் முடிந்ததுஎன்றான் தன்னவளை பார்த்து .

அவள் விழிகளில் நீர் நிறைந்தாளும் அதற்கு நேர்மறையாய்  முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது

இவளின் பின்னோடு வந்த மது  சக்தியை தாண்டி மனோவின் வண்டி அருகில் செல்ல 

அங்கு காவியாவை பார்த்ததும்.

யாரோடும் பேசாமல் அமைதியாக கல்லூரி பேருந்து நிற்கும் இடம் நோக்கி சென்றாள் .

அவள்  சென்றதை கண்ட சக்திக்கு கோபம் தலைக்கேறியது .

எவ்வளவு திமிர் இவளுக்காக நான் நின்னுட்டு இருக்கேன் .இவ பாட்டுக்கு போறா ,என்று அவள் செல்லும் திசையை முறைத்து பார்த்து நின்றிருந்தான் .

இங்கு கல்லூரி பேருந்தில் செல்லும் மதுவிற்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது.

நான் கோவமா வந்திட்டா அப்படியே விற்றுவியா,நான் தான் உன்னை எப்பவும் தேடறேன் ,

நீ என்னை தேடறது இல்லை.நீ இப்படி தான்னு எனக்கு தெரியும்

ஆனா மனோ கூட என்ன கண்டுக்கலை இல்லை .ஒரே நாள்ள   அவனுக்கு கூட நான் வேண்டாதவளா ஆயிட்டேன்.

சக்தி இல்லாத இந்த மூனு வருசத்துல என்னை எப்படி பாத்துக்கிட்டான்.

அதெல்லாம் அவன் அன்னன்  இல்லாததால செஞ்சி இருக்கான்.

இப்போ அவன் வந்ததும் இவன் வாழ்க்கையை பாத்துட்டு போய்ட்டான்.

ஆனா நான் இவனை சின்ன வயசுல இருந்து  என்  தோழனா தான் பாத்தேன்.இப்போ அவனும் அந்நியமாய் தெரிந்தான் .

எல்லாம் என்னை விட்டு போய்ட்டாங்க, யாரும் எனக்கு இல்லை என்று ஏதேதோ நினைத்து கொண்டிருந்தாள்.

உண்மை என்னவென்றால் சக்தியின் உதாசினத்தை அவளால் தாங்க முடியாமல் போக ..அந்த ஆதங்கம் மோனோவின் மீதும் திருப்பிவிட்டது .

மற்றைய  நாட்களாய் இருந்தால் அவளே கவியாவோடு மனோவை அனுப்பி இருப்பாள் .

பாவம் அவளுக்கு தெரியவில்லை மது கடந்து சென்றதும் மனோ அவளை நோக்கி  செல்ல,

” நான் அவளை பாத்துக்குறேன் நீ காவியா கூட பேசிட்டு கூட்டிட்டு போய்  சீக்ரம் வீட்ல விடு”  என்று 

சக்தி சொன்னது .அப்போதும் மனது கேக்காமல் தான் மனோ காவியாவோடு சென்றான் .

 சக்தி அர்ஜுனிடம்  “மச்சான்  நான் வரதுக்குள்ள  அவ காலேஜ் பஸ்ல போய்ட்டா  அப்பா வண்டி எடுத்துட்டு  போய் பஸ்டேண்ட்ல இருந்து  அவளை கூப்டுக்கோ,நான் வர லேட்டா ஆகும் போலஎன்று கூற ,

அர்ஜுனும் இதை சாதரணமாக எடுத்து கொண்டு  மதுவை அழைத்து வர சென்றான்.பேருந்தில் இருந்து இறங்கியவளுக்கு தன அண்ணனை கண்டதும்  அழுகை பீறிட்டு கிளம்ப பார்க்க……

அதற்குள்  அவர்களின் உறவினர் ஒருவர் அர்ஜுனை நலம் விசாரிக்க ஆரம்பிக்க,

அவர்களோடு பேசிக்கொண்டே  தங்கையை வண்டியில் ஏற்றி கிளப்பினான் .அவளும் அழுகையை அடக்க பெரும் பாடு பட்டு போனால் .

அவளின் முகத்தை பார்த்திருந்தால்  அர்ஜுன் கண்டு கொண்டிருப்பான் .

அந்த உறவினரும் இவர்களோடு பேசிக்கொண்டே இவர்கள் வண்டிக்கு இணையாக வர ,

பின்னல் அமர்ந்து வரும் தன் அன்பு தங்கையின் முகத்தை இவன்   காணவில்லை.

வீட்டை அடைந்ததும்  ஊருக்கு செல்ல வேண்டி பரிமளா தனது உடமைகளை வெளியில் கொண்டு வைத்து சரி பார்த்து கொண்டிருக்க,

அவரை கண்டதும்  ‘அம்மாஎன்று ஓடி சென்று  அவரை கட்டி கொண்டு ஹோ என்று  அழுக ஆரம்பித்து விட்டாள்.பரிமளா வந்ததும் வாராததுமாய் கட்டி கொண்டு அழும் மகளை  பார்த்து பதறி விட்டார் .

அர்ஜுனிற்கும் ஒன்றும் புரியவில்லை  இப்போது தான் நினைவு வந்தது நொடிக்கு

 ஆயிரம் வார்த்தை பேசும் தங்கை இவ்வளவு நேரம் அமைதியாய்  வந்தது .

அவனும் பதட்டத்தோடுஏனடா” என்று விசாரிக்க இருவரையும் மாற்றி மாற்றி கட்டிக்கொடு அழுதாளே  தவிர  பதில் கூறவில்லை .பரிமளாவிற்கு தெரிந்து அவள் தந்தை இறப்பிற்கு பின் இப்போது தான் இப்படி அழுகிறாள் .

அவள் அழுகையில் வீடே அவளை சுற்றி நிற்கவெகு நேரம் அழுது முடித்தவள்தேம்பலோடுஅம்மா  நானும் உன்கூட வரேன் எனக்கு யாரும் இல்லை .என்னையும் கூட்டிட்டு போமா ……”

இவளின் பதிலில் வீட்டினர் திகைத்து நிற்க அப்போது தான் வீடு நுழைந்த 

 மனோவும்சக்தியும்  ஸ்தம்பித்து நின்று விட்டனர் .

 

மொழி தொடரும் ………..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!