“அடடே வா தமிழ்! என்ன இவ்ளோ காலைல வந்திருக்க? பார்த்தி வந்ததுல இருந்து உன்னால உன் வீட்டுல இருக்கவே முடியல போல!”
Advertisement
தன் குத்தலை ஹாஸ்யம் என்று நம்பவைக்க பெரிதாக நகைத்தாள் சித்ரா.
பேச்சு சத்தத்தில் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்த பர்வதம் இம்முறை முறையாக அவளை “வாம்மா!” என்று வரவேற்றார்.
Advertisement
Advertisement
மகனின் முன் இன்னொருமுறை குற்றவாளியாக நிற்க அவர் தயாரில்லை.
தமிழும் பழையதை எதையும் பெரிது படுத்தாமல் அவருக்குப் புன்னகையை பதிலாகக் கொடுத்தவள், சித்ரா பேசியதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.
Advertisement
அத்தோடு, வழக்கம் போல் தயங்கிக் கொண்டெல்லாம் நிற்காமல்,
“அத்தை! அவரு கூட கொஞ்சம் பேசணும். அவரு எங்க?” நேரடியாகவே கேட்க, இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“பார்த்தி தூங்கிட்டிருக்கான், தமிழ்! எந்திரிக்க நேரமாகும். உன்னைப் பார்த்தா வேலைக்குக் கிளம்பி வந்திருக்க மாதிரி இருக்கு. நீ வேணா போயிட்டு சாயந்திரமா வாயேன்.”
அவளின் பேச்சுக்கு செவி சாய்த்துப் போகும் எண்ணமெல்லாம் தமிழுக்கு இல்லை அதனால்,
“இல்லக்கா… நான் இப்போவே பேசணும். என்கூட பேசிட்டு அவர் தூங்கிக்கட்டும்.” என்றவள் பிடிவாதமும் இருவருக்கும் புதிதாகத்தான் இருந்தது.
“அப்டி என்ன அவசரம்? ஏதாவது பிரச்சனையா?” என்று துருவ தமிழ் வாயே திறக்கவில்லை.
பொருமிய சித்ரா, தன் மூத்த மகனை அழைத்து சித்தப்பாவை அழைத்து வா என ஏவினாள். அவர்கள் பேச்சு வார்த்தை கூடத்தில் நடந்தால் வீட்டைப் பெருக்குவது போல் ரகசியங்களைப் பொறுக்கலாமே என்ற நல்லெண்ணத்தில்.
அதற்கு வாய்ப்புக் கொடுக்காத தமிழ், “சஞ்சு! நீங்க ஸ்கூலுக்கு ரெடியாகுங்க. சித்தி போய் சித்தப்பாவை எழுப்பிக்கிறேன்!” என்றவள் ஒரு கணம் கூட தாமதிக்காமல் பார்த்தியின் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
மாமியார் மருமகள் இருவரின் முகங்களும் அதிர்ச்சி எனும் உணர்ச்சிக்கு தங்களைத் தத்துக் கொடுத்தன.
ஆனாலும் சித்ராவுக்குள் இருக்கும் கடமையுணர்ச்சி மேலெழும்ப சட்டென மீண்டவள்,
பர்வதமும் நடப்பது எதையும் தடுக்க முடியாத இயலாமையை பெருமூச்சாக வெளியேற்றியபடி கிச்சனுக்குள் சென்றார்.
இவர்கள் பாதங்களின் அடியில் திகைப்பூண்டை வைத்து விட்டுப் பார்த்தியின் அறைக்குள் நுழைந்த தமிழ் கண்டது, எந்த சலனமும் இல்லாமல் ஆழ் துயிலில் ஆழ்ந்திருந்த பார்த்தியைத்தான்.
பார்த்த மாத்திரம் ‘எத்தனை நாள் சேர்த்து வைத்த உறக்கமோ! பாவம்!!’ என்று ஒரு மனம் அவனுக்காய் உருக…
மறுமனமோ, ‘நேத்து அப்புறம் பேசலாம் தமிழ்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் என்கூட பேச முயற்சியே பண்ணல. நானா ஃபோன் பண்ணியும் அவசரம் இல்லனா அப்புறம் பேசுறேன்னு வச்சிட்டாரு. இவரால நான் ராத்திரி பூரா தூக்கத்தைத் தொலைச்சுட்டு இங்க வந்தா, இவரு என்னனா விடிஞ்சது கூடத் தெரியாம தூங்கிட்டு இருக்காரு.’ என்று அவனோடு ஊடல் கொண்டது.
ஆனாலும் அந்த மனதும் அவன் உறக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்றே அவளிடம் விண்ணப்பம் வைக்க ஏற்றுக் கொண்டாள்.
குழப்பத்தைத் தீர்க்க வந்தவள் அது தீராமலே திரும்பிச் செல்ல எத்தனிக்க,
//அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்
பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்//
அவள் மொபைல்தான். அவளின் உள்ளத்து மொழிகளை வரிகளாக்கி இசையைக் கோர்த்து அமைந்த பாடலை ரிங்டோனாக வைத்திருந்தாள்.
அவசரமாக எடுத்து அவள் நிசப்தத்தில் போடும் முன் நித்திரை நீங்கி எழுந்து விட்டிருந்தான் பார்த்தி.
முழுதாய் அகலாத தூக்கக் கலக்கத்தோடே பாடல் இசைத்த திசையில் தலையைத் திருப்பிப் பார்த்தவன் விழிகள் விரிந்து, அங்கே தமிழை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்தன.
அவனின் குறைத்தூக்கம் எந்த வழி போனதென்று தெரியாமல் பட்டென எழுந்து அமர்ந்தவன்,
“ஹே… தமிழ்! நீ எங்க இங்க?” சுற்றும் முற்றும் பார்த்து இது தன்னறைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டவன்,
“வீட்டு வாசலுக்கு வரவே ஆயிரம் யோசிப்ப! இப்ப என்ன அதிசயமா ரூமுக்குள்ள எல்லாம் வந்திருக்க?” என்று குரலைத் தணித்துப் பேசினான், வெளியே கேட்டிடாதவாறு.
“நாம எப்பிடிதான் பார்த்துப் பார்த்து ஒழுக்கமா இருந்தாலும் யாரும் நம்மளை நல்ல கண்ணோட்டத்துல பார்க்கப் போறதில்ல. அப்புறம் எதுக்கு நாம அதையே பிடிச்சுத் தொங்கிட்டு இருக்கணும்? அதான் தேவையான சந்தர்ப்பத்துல நமக்கான தனிமையை ஏற்படுத்திக்கிறதுல தப்பே இல்லனு கிளம்பி வந்துட்டேன்.” என்றாள் மெல்லிய குரலில். ஆனால் தெளிவாக…
இந்த மாற்றம் எல்லாம் நேற்றைய அவள் தந்தையின் பேச்சால் விளைந்தது என்று பார்த்திக்குப் புரியாமல் இல்லை.
அதைப்பற்றி பேச்செடுத்து இந்தக் காலையைப் பாழாக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டவன்,
“ரொம்பத் தெளிவாதான் இருக்கீங்க தமிழிசை. ஆனா இப்போ அப்பிடி என்ன தேவையான சந்தர்ப்பம் அமைஞ்சிடுச்சாம் தனியா பேசுறளவுக்கு?” என்று புருவமுயர்த்தினான் ஒன்றும் அறியாதவன் போல்.
“ஏன் உங்களுக்குத் தெரியாதா, நான் எதைப்பத்திப் பேச வந்திருக்கேன்னு?”
“கல்யாணத்தைப் பத்திதான தமிழ்? அதான் நான் நேத்தே என் முடிவை சொல்லிட்டனே!”
“அதுக்கு முந்தின நாள் என் முடிவு என்னனு நான் சொன்னேனே, அதைப்பத்தி உங்க முடிவு என்னனு தெரிஞ்சிக்கத்தான் வந்தேன்!”
குரலில் ஒரு அழுத்தம் தொனித்தது.
“நீ சொன்ன மாதிரி எல்லாம் இனி என்னால யோசிக்க முடியாது, தமிழ். உங்கப்பா வேற, யாரோ ஒருத்தனை உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்னு பினாத்திட்டிருக்கார். அதைக் கேட்ட அப்புறமும் எந்த நம்பிக்கைல நான் உன்னை அவரு பொண்ணா இங்க விட்டுட்டு போவேன், சொல்லு?”
“எந்த நம்பிக்கைலனா? எனக்குப் புரியல. என் மேல இருக்க நம்பிக்கைலதான் விட்டுட்டுப் போகணும். ஏன் அது இல்லையா உங்களுக்கு?”
“புரியாம பேசாத, தமிழ்! உன்னை நம்பாம வேற யாரை டி நம்பப் போறேன் நான்?” என்று குரலை உயர்த்தினான்.
“நீதான் இப்போ தப்பா பேசுற, தமிழ்! வார்த்தை பார்த்து வரட்டும்.” என்றான் கண்டனத் தொனியில்.
அவனின் அந்தத் தொனியை தமிழ் என்றுமே மீறியதில்லை. சட்டென அமைதியாகி விட்டாள். ஆனால் அவன் வார்த்தைகள் மனதில் பெரும் வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தது.
அது முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, “சரி.. நான் வரேன். நேரமாச்சு!” என்று நகர, எட்டி அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டான் பார்த்தி.
தமிழ் அதிர்ந்து போனவள், “எ..என்ன பண்ணுறீங்க நீங்க? கையை விடுங்க. நான் போகணும்.” மெல்லிய குரலில் படபடத்தபடி கையை உருவ முயன்றாள்.
பார்த்தி அதற்கு அனுமதிக்காமல் பிடியை இறுக்கிக் கொண்டவன்,
“நாம எப்பிடி இருந்தாலும் அவங்க, அவங்க இஷ்டத்துக்குதான நம்மைப் பத்திப் பேசப் போறாங்க! அதுக்கு எதுக்கு நாம கட்டுப்பாடா இருக்கணும்னு கொஞ்சம் முன்னாடி நீதான கேட்ட?”
உதட்டுக்குள் முகிழ்த்த சிரிப்புடன் அவள் சொன்ன பாடத்தை மாற்றிப் படிக்க, தமிழ் வாயில் கை வைத்தாள்.
“நான் எப்போ அப்பிடி சொன்னேன்? நீங்க… நீங்க பொய் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா?”
“பொய்யே சொல்லாம இருக்க நான் ஒன்னும் அரிச்சந்திர மகாராஜாவோட மறு ஜென்மம் இல்ல. சந்தர்ப்பம் அமையும் போது ‘பொய்மையும் வாய்மையிடத்து!’ என்ற வள்ளுவரோட குறளுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிற சாதாரண மனுஷன்தான். ஆனா உன்கிட்ட மட்டும் சந்தர்ப்பம் சூழ்நிலையை காட்டி நான் பொய் சொன்னதே இல்லை. ஏன்னா மனசாட்சிக்கு உண்மையா இருக்கவன்தான மனுஷன்?”
‘என் மனசாட்சியே நீதான்.’ என்று ஒப்புக் கொடுத்தவனிடம் கைகளோடு உயிரையும் அவன் பிடிக்குள் கொடுத்துவிட்டு நின்றாள் தமிழ்.
அவனோ மேலும் அவளை உருக்கும் மொழிகளை உள்ளத்தின் அடியில் இருந்து ஜெபிக்கலானான்.
“நான் பொய் சொல்லல தமிழ்! நிஜமா உங்கப்பா அப்பிடி பேசினதுல இருந்து எனக்குப் பயமாதான் இருக்கு. அதுக்கு அர்த்தம் உன்னை சந்தேகப்படுறேன்றது இல்ல. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து, நீ எனக்கு இல்லனு ஆகிடுச்சுனா, நான் என்ன பண்ணுவேன்னு யோசிக்கக் கூட என்னால முடியலடி.
நானும் எனக்காகத் துடிக்குற சுயநலவாதி மனுஷன்தான் தமிழ். என் ஆயுள் வரைக்கும் நான் சந்தோஷமா வாழணும். அதுக்கு கண்டிப்பா நீ வேணும் எனக்கு. அதுக்கு இந்தக் கல்யாணம் இப்போ நடக்கிறதுதான் ஒரே வழினா, அதுக்காக நான் எதையும் தியாகம் செய்யத் தயாரா இருக்கேன்.” என்றவன் மொழிகளில் நெஞ்சில் நிறைந்த பெருங்காதலுடனும் விழிகளில் வெட்டித் தெறித்த லட்சம் கோடி மின்னலுடனும் அவன் விழிகளைக் கலந்தவள்,
“அப்பிடினா????” என்று எதிர்பார்ப்புடன் கேள்வி தொடுக்க…
பார்த்தி அவளின் முகத்தில் வந்து தேங்கிய தேஜஸை ஆசை தீராமல் பார்த்தபடியே,
“அப்பிடினா… உன் ஃபோன்ல வச்சிருக்க பாட்டுக்கு இனி வேலை இல்லனு அர்த்தம். இனி உனக்கானது எல்லாம் தொலைவில இல்ல, ரொம்ப பக்கத்துலயே கிடைக்கும்.” என்றான் குறும்பாக.
அவன் சொல்லி முடிக்கவில்லை. தமிழ் பாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு விசும்பத் தொடங்கினாள்.
அவள் அடக்கி வைத்திருந்த ஏக்கங்களும் தவிப்புகளும் பெரும் மூச்சடைப்பு பந்துகளாய் விசும்பல்களிடையே வந்து போகப் பார்த்திக்குப் பயந்து வந்தது.
“நான் திரும்ப குவைத் போறதைப் பத்தி பேசும்போதெல்லாம் சாதாரணமாதானடி பேசுவ! ஆனா உள்ள இவ்ளோ அழுத்தத்தை வச்சிருந்திருக்க இல்ல?” வருத்தமாய் கேட்டுக்கொண்டே அவள் முதுகை நீவி விட்டான்.
“இல்…இல்ல… நான் அப்போலாம் ஓரளவு திடமாதான் இருந்தேன். நேத்தைக்கு அப்புறம்தான்…” என்றவள் சொல்ல வருவது அவனுக்கும் புரிவதாய்.
வார்த்தைகளற்ற அவன் வருடல்களில் விரைந்து தன்னைத் தேற்றிக் கொண்ட தமிழ், அதன் பின்னே தான் இருக்கும் நிலை உறைக்க, அவசரமாய் அவனை விட்டு விலக எத்தனித்தாள்.
ஆனால் பார்த்தி அவ்வளவு அவசரம் காட்டவுமில்லை. அவளை விலக அனுமதிக்கவுமில்லை.
“வி..விடுங்க.. நே…நேரமாகுது!”
“அநியாயம் பண்ணாத தமிழ்! இவ்வளோ நேரம் நீ என்னைப் பிடிச்சு வச்சிருக்கும் போது, நான் எதுவும் சொன்னேனா? அழகாதான பிடிச்சு வச்சிருந்தேன்? இப்போ நான் பிடிக்கும் போது மட்டும் ஏன் இப்பிடி…” என்றவனை மேலே பேச விடாதவள்,
“நீங்க பிடிச்ச வரைக்கும் போதும். நிஜமாவே எனக்கு டைமில்ல!”
தமிழ், தன் மென் போராட்டங்களைக் கைவிட்டு விட்டு கண்மூடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள், ‘இந்தா! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் என்னை உனக்குள் பிடித்து வைத்துக் கொள்.’ என்று சொல்வது போல்.
தன் ஆசைக்காக பெண்மையின் நாணத்தைத் தியாகம் செய்யும் காதலியின் இளக்கத்தில் மெய்யுருகி நின்ற பார்த்தியினுள்ளும் காதலின் ஆடிப்பெருக்கு.
ஒற்றைக் கரம் கொண்டு அவளை அணைத்தவன் மறு கரத்தின் விரல்கள் மூலம் பார்வைக்குத் தெரிந்த அவள் இடது கன்னத்தின் மீது வெள்ளோட்டம் நடத்தினான்.
சாதாரணமாக என்றால் இருவரிடையே இத்தகைய நெருக்கங்களை பார்த்தி அனுமதித்திருக்கமாட்டான். திருமணம் செய்வது என்று முடிவெடுத்ததாலோ என்னவோ அவளிடம் இருக்கும் உரிமையை இன்று ஒருபடி அதிகமாகவே நுகர முயன்றான். அள்ளி முத்தாடும் ஆசையும் முகிழ்த்தது.
“தமிழ்! ரெண்டு நிமிஷம் இருக்கியா? நான் முகம் கழுவிட்டு வந்துடுறேன்.”
“ஹ்ம்ம்..” என்று அவனில் இருந்து பிரிந்து நின்றவளுக்கும் அவன் நோக்கம் புரிந்ததோ என்னவோ, அவள் கன்னங்கள் இரண்டும் சூடாகி சிவந்திருந்தன.
அதைத் தன் ரசனைப் பார்வையால் வருடிக் கொண்டே சென்றவன், சொன்னது போல் இரண்டே நிமிடங்களில் வந்திருந்தான்.
வந்தவன் முகத்தைக் கூடத் துடைக்க செய்யாது, ஒரே பாய்ச்சலில் அவளை நெருங்கி அவள் இரு கன்னங்களில் அழுத்தமாகத் தன் ஈர இதழ்களைப் பொருத்தி விட்டிருந்தான்.
தன் முகத்தோடு இழைந்த அவன் முகத்தின் ஈரலிப்பும் அதையும் மீறி உணர்ந்த அவனின் வெப்பக் கதகதப்பும் தமிழை சிலிர்க்க செய்ததுதான் என்றாலும் அதையும் மீறி எழுந்த கேலிச் சிரிப்பை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள்.
அதைக் கண்டு கொண்டவனோ, “எதுக்கு சிரிக்கிற?” என்றான் கேள்வியாக.
“ம்ஹூம்..” என்று மெல்லிய சிரிப்போடே மறுத்துத் தலையசைத்தாள்.
“பிச்சிடுவேன் தமிழ்! உன் சிரிப்பே சரியில்ல. அப்பிடி எதை நினைச்சு சிரிக்கிற சொல்லு!”
செல்ல மிரட்டல் விடுத்தவன், சொல்லாமல் செல்லவியலாது என்று சொல்வது போல் அவளை சுவரோடு சிறை செய்தான்.
“நினைக்கிறதை எல்லாம் சொல்ல முடியாது. விடுங்க, நான் போகணும். வந்து ரொம்ப நேரமாச்சு.”
“நீ நினைக்கிறது, உனக்கு நடக்கிறது எதையும் எனக்கு சொல்லமாட்டேன்னு எனக்குத்தான் நல்லா தெரியுமே! குறைஞ்சது இதையாச்சும் சொல்லு!”
அவனின் இந்த வார்த்தைகள் விளையாட்டாக வந்ததல்ல. அவள் மேலான அப்பட்டமான குற்றச்சாட்டை சுமந்து வந்தன. அவன் பார்வையும் சடுதியாக மாறி அவன் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க, தமிழும் பார்வையிலேயே அவனிடம் மன்னிப்பை யாசித்தாள்.
“இனியும் இந்த மாதிரி இருக்காத, தமிழ்! எதுவா இருந்தாலும் தயவு செய்து என்கிட்ட சொல்லு, சரியா?” என்றிட, அவளும் தலையாட்டினாள்.
“சரி.. இப்போ சொல்லு. எதுக்கு சிரிச்ச?”
“அதை விடமாட்டீங்களா நீங்க?”
“இப்போதான சொன்ன, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவேன்னு! அந்த நல்ல பழக்கத்தை இதுல இருந்து ஆரம்பி.” என்று கொக்கி போட, சொல்லாமல் விடமாட்டான் என்று புரிந்தவள்,
“இல்ல… கன்னத்துல முத்தம் குடுக்கத்தான் அவசர அவசரமா பிரஷ் பண்ணிட்டு வந்திங்களானு…” என்று அவனைப் பார்க்க முடியாமல் பக்கவாட்டில் எங்கோ பார்த்தவாறு இழுத்தவளை விழி விரியக் கண்டான் பார்த்தி.
“ஹே… பேசுறது என் தமிழ்தானா? இல்ல, உள்ள அந்நிய மொழி எதுவும் கலந்திடுச்சா?” கேலி இழையோடக் கேட்டவனைத் திரும்பி முறைத்தாள் அவள்.
“கோவப்படாத டி. நிஜமாவே சந்தேகம் வந்துடுச்சு.”
“நீங்க ஆற அமர உக்காந்து மொழி ஆராய்ச்சி பண்ணுங்க. நான் கிளம்புறேன்.” நகரப் போனவளைப் பிடித்துக் கொண்டவன்,
“எங்க கிளம்பிட்ட? உன் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்க வேணாமா?” விழிகளில் குறும்பு கூத்தாடக் கேட்டவனைப் பார்த்து அவளுக்கும் சிரிப்பு வர, “ம்ஹூம்…” என்று சிரித்துக் கொண்டே மறுப்பாகத் தலையசைத்தாள்.
“ஏனாம்? நீதான கேட்ட?”
“அது… சும்மா கேலி பண்ணத்தான். மத்தபடி அந்தக் கட்டுப்பாடும் கண்ணியமும் தான் பார்த்தி என்றதுல எனக்குப் பெருமைதான்.” என்றவளைத் தானும் ஏக பெருமையோடே அணைத்து அவள் நெற்றியில் முத்தியவன்,
“கிளம்பு தமிழ். இனி நீ இங்க இருக்கிறது சரியா வராது. எனக்குள்ள இருக்கிற நல்லவன் நழுவிட்டே போறான்.” சிரித்துக் கொண்டே சொன்னவன் அவளிடம் இருந்து விலக, அவளும் மனம் முழுதும் விரவிக் கிடந்த மகிழ்வுடனும் நிம்மதியுடனும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
நேற்றைய தினத்துக்கு நேர்மாறான இன்றைய நாளின் இனிமைமைகளை நாள் முழுதும் இருவரும் அசை போட்டுக்கொண்டே இருந்தனர்.
மொத்தம் மூன்றே மூன்று முத்தங்கள். மூன்றுமே அவசர முத்தங்கள். ஒவ்வொன்றும் ஒரு நொடிக்கு மேலே நீடிக்கவில்லை.
ஆனால் அதன் ஜில்லிப்பு ஆண்டுகள் கடந்தும் தமிழின் நெஞ்சாங் கூட்டில் நிலைத்து நின்றது. அவள் உயிரையும் பிடித்து வைத்தது.