” முடியாது பார்த்தி.. ” என்று விரைப்பாய் நின்றான் ராம்.
“மாமா… மாமா… ப்ளிஸ். ” என ராமின் கையை பற்றிக் கொண்டு கேட்க, அவனுக்கு உதவியாக,
Advertisement
“சகல முடியாதுன்னு சொல்லாத சகல. நம்ம மாப்ள அவனுக்கு உன்னைய விட்டா யாரு இருக்கா?” என சந்ருவும் மற்றொரு கரத்தை பிடித்துக்கொண்டு நிற்க ராம் கரத்தை உறுவிக் கொண்டான்.
“சகல, நம்ம மாப்ளக்கி நாம தானாய்யா இருக்கோம்.”
Advertisement
Advertisement
“அதா நீ இருக்கேல்ல. நீ ஒருத்தே போதும்.. “
“இந்தாள வச்சிட்டு நான் ஊறுக கூட போட முடியாது மாமா. எங்கூட எதுக்கு இவர கோர்த்து விடுறீங்க. ” எனப் பார்த்திபன் சந்ருவை வார,
Advertisement
“முதல்ல உனக்கு ஊறுகா போடத் தெரியுமா9? அதுன்னா என்னன்னு சொல்லு பாப்போம். ” என்றாள் மயூரி. கையில் காபி கப்புகள் அடங்கிய ட்ரேயுடன் வந்து அமர்ந்தாள். சந்ருவின் விசிறி அவள். அவளுக்கு விசிறி சந்ரு. பார்த்திபன் அப்பப்ப வந்து வந்து காத்து வாங்கிட்டு போவான். ஆனாலும் சந்ரு பார்த்திபனை விட்டு கொடுக்க மாட்டான். நம் house husband சந்ருவிற்கு பத்மாவின் இரு செல்வங்களையும் மிகவும் பிடிக்கும்.
” கரெட்டா சொன்ன செல்லம். இவனுக்கு ஆதரவா பேச வந்தா! வந்தவன இன்சல்ட் பண்ணி அனுப்புறான். டூ பேடு மாப்ள. இனி உனக்காக நான் எங்கையும் எவெங்கிட்டையும் பேசப் போறது இல்ல. சங்கத்து தலைவனா நானே இருந்துக்கிறேன்.” என்றவன் காபி கப் ஒன்றை தூக்கிக் கொண்டான்.
“மாமா அவெகிடக்குறான் லூசு பைய்யன். தலைவனாகுறதுக்கும் ஒரு திறம இருக்கு. அது இவனுக்கு இல்ல. ஆனா உங்களுக்கு இருக்கு மாமா. அதிகமாவே இருக்கு.. உங்கள மாதிரி ஒருத்தர் யாருமே இல்ல. இனி யாருமே பிறக்க போறதும் இல்ல. நீங்க சங்கம் ஆரம்பிச்சி எல்லாருக்கும் மிட்டாய் குடுங்க மாமா. ” என மயூரி சந்ருவை உற்சாகப்படுத்தினாள்.
‘பாத்துக்கங்கடா… இல்லத்தரசிகள் கொண்டாடும் நாயகன் நான். உங்களுக்கு தான் என் அருமை புரிய மாட்டேங்கிது..’ என்பது போல் பார்த்தவன்,
“உனக்கு மட்டும் பெரிய சாக்லேட்டா வாங்கி தர்றேன் செல்லம். ” என சங்கத்திற்கு ஆள் சேர்த்தான்.
“என்னையும் விட்டுடாத மாமஸ்.. சேத்துக்க.. எனக்கு சாக்லேட்லாம் வேண்டாம்.. அதுக்கு பதில கூலிங்கா ஒன்னு.. ம்…ம்… ” என பார்த்திபன் கோபித்துக் கொண்டு வசனம் பேசிய சந்ருவை சமாதானம் செய்ய, ‘என்னமும் போங்கடா.. ‘என ராம் எழுந்து தன் நடை பயிற்சியை தொடங்கி விட்டான். அதான் வெளிநடப்பு செய்து விட்டான்.
மாமன், மச்சான் என இருவரும் மயூரி வீட்டில் கூடி இருந்தனர் ராமை காண. காண என்று சொல்வதை விட உதவி கேட்க என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனெனில் மாறனிடம் ஒப்படைக்க டிசைன்களை வரைய பாரதிக்கு உதவி செய்யும் படியும், திருடி மீட்ட டிசைன்களின் நகல்களைப் பாரதிக்கு தரும் படியும் கேட்க வந்துள்ளான். ராம் முடியாது என்று மறுத்து வருகிறான்.
” ஏன் மாமா.. ஏன்.. நீங்க மனசு வச்சா எல்லாம் முடியும். ” பார்த்திபன் ராமின் பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்தான்.
” நோ… நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன். நீ பண்ண சொல்றது எந்த வகையில் நியாயம் பார்த்திபா? அதுவும் டிசைன்ஸ்ஸோட காப்பிய அந்த பொண்ணு கிட்ட ஒப்படைக்கிறது, இது ரிஸ்க்.”
“எந்த ரிஸ்கா இருந்தாலும் அத ரக்ஸ் மாதிரி நமத்து போக வச்சிடலாம் மாமா. ” என்றவனை ராம் முறைக்க,
“மைம்மா ரொம்ப பாவம் மாமா. நம்மல விட்டா அதுக்கு உதவி பண்ண யாரும் கிடையாது.” என இறைஞ்ச, இருவரும் தோட்டத்தில் இறங்கி நடந்து கொண்டிருந்தனர். சொல்லப் போனால் ராம் நடக்கிறான். பார்த்திபன் அவனை நச்சரித்தபடி உடன் வருகிறான்.
“உனக்கு என்ன புத்தி கழண்டு போச்சா பார்த்தி? நம்ம கிட்ட இருந்து திருடீட்டு போன ஒருத்திக்கு உதவி பண்ண சொல்ற. அவள நம்ம கம்பெனிக்குள்ள விட்டா வேற எதையாது திருடீட்டு போய்டுவா. “
“அப்படில்லாம் திருடீட்டு போக அவ ஃப்ரெபஸ்னல் திருடி கிடையாது மாமா. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை. மைம்மாவும் ஒரு இக்கட்டான பிரச்சனைல சிக்கிட்டு இருக்கா. இப்ப நாம சிக்குன மாதிரி. சிக்க வச்சது குணசேகரன் & கோ.. அதுக்காகவே நாம களத்துல இறங்கி கபடி விளையாடணும். அப்படி பண்ணலன்னாலும் அவனுக்கு ஆப்போஷிட்டா இருக்குறவங்கள சியர் பண்ணணும்.”
“நீ சியர் பண்ணு பார்த்தி. கைல கலர் கலர் பேப்பர வச்சிட்டு IPL cricket match ல வர்ற சியர் கேர்ள்ஸ் மாதிரி நீ ஆடு. எதுக்கு மத்தவங்கள ஆடச் சொல்ற. “
“கோச்சரா இருந்து எப்படி விளையாடணும்னு சொல்லலாமே. “
” பேசாம இரு பார்த்தி. உதவி பண்றேன்னு போய் உள்ளதையும் தொலைக்க வச்சிடாத. ஏற்கனவே நம்ம கம்பெனி பேர்ல தங்க நகைச் சீட்டு மோசடின்னு சொல்லி ஒரு கேஸ் நடந்திட்டு இருக்கு. யாரு பண்ண வேல இதுன்னு கண்டு பிடிக்க முடியாம திணறீட்டு இருக்கோம். அந்த கேஸ்னால நம்ம பிஸ்னஸ் டவுனாகிடுச்சி.”
” ஓ… அப்படியா… கீழ விழுந்து கிடக்குற நம்மோட பிஸ்னஸ்ஸ தூக்கி நிறுத்த க்ரேன் எதாவது வச்சிருப்பிங்களே. அந்த க்ரேன் என்னென்னன்னு சொல்லுங்க கோப்போம்.” என விளையாட்டாகவே கேட்க, ராமிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“ஒன்னு அந்த மும்பைக்காரன்… சஞ்சய்.. அவனோட டீல முடிச்சா நமக்கு பைனான்ஸியல் ரீதியா சப்போட் கிடைக்கும். அத்தோட நிறைய டயமென்ட்ட நம்ம பிஸ்னஸ்க்கு யூஸ் பண்ண முடியும். “
“அடுத்த க்ரேன். “
“Diamond festival… “
“என்ன?”
” வரப்போற அட்சய திருதி அப்ப ஒரு festival நடத்த ஏற்பாடு பண்ணிருக்கோம். கூடவே Exhibitionல கலந்துக்க போறோம். நம்மல மாதிரியே நிறைய ஜூவெல்லரிஸ் கம்பெனி அதுல கலந்துக்க போது. அதுல நம்மோட unique வான excellent டிசைன்ஸ்ஸ காட்சி படுத்தினா… நமக்கு வேல்டு லெவல்ல நிறைய கஸ்டமர்ஸ்ஸ நம்ம பக்கம் வரவைக்கும். நம்ம பிஸ்னஸ்க்கு அது ரொம்ப முக்கியம்.
அதுக்கான ஏற்பாடுகளும் நடந்திட்டு இருக்குற இந்த நேரத்துல நம்ம எதிரியோட ஆள பக்கத்துல வச்சிக்கிறது புத்திசாலித்தனம் கிடையாது. நம்ம டிசைன்ஸ் லீக் ஆனது பெரிய மிஸ்டேக். அது மாதிரி மறுபடியும் நடக்க கூடாதுன்னா நாம் கவனமா இருக்கணும்.. மிஸ்டர் சஞ்சய் கிட்ட காட்டுன நம்ம டிசைன் நமக்கு திரும்ப கிடைச்சதே தெரியாத விஷயம். அது மாறன் கைக்கு போகலங்கிறது ரொம்பவும் ஆறுதலான விசயம். “
“அதத்தா நானும் சொல்ல வர்றேன் மாமா. ஃப்ரெபஸ்னல் திருடியா இருந்தா. இன்னேரம் அதை மாறன் கைக்கு மாத்தி விட்டு, காசு பாத்திருப்பா. ஆனா மைம்மா அப்படி பண்ணல. அவள ஏமாத்தி மிரட்டி செய்ய வச்சிருக்கான். நமக்கு டிசைன் கிடைச்ச மாதிரி அவளுக்கு அவளோட வீடு கிடைக்கணும் மாமா. ப்ளீஸ்… நம்புங்க… மைம்மாக்கு நான் பொறுப்பு மாமா. ” என்க, நீயா.. என்பது போல் ஏற இறங்க பார்த்தான் ராம்.
” நீங்க மூணுமாசம். உங்களோட செல்வாக்க பயன்படுத்தி அவளுக்கு ட்ரெயினிங் குடுக்க ஏற்பாடு பண்ணா. மைம்மா நல்ல டிசைனரா வருவா. அவ கூட கான்ட்ராக்ட் போட்டு வேலைக்கி சேத்துக்கலாம். அவ பண்ற டிசைன கண்காட்சிக்கு வைக்கலாம். புது புது ஐடியாவோட… புது புது டிசைன்ஸ்… புது புது கஸ்டமர்ஸ்… அதுவும் பணக்கார வாடிக்கையாளர். புது புது பாதைல இருந்து நிறைய நிறைய லாபம் கிடைக்கும். ” என ஆசை வார்த்தைகளைச் சொல்ல,
“டிரெயினிங் குடுக்குறது பிரச்சின இல்ல பார்த்தி. அடுத்ததா நீ சொன்னியே அது தா பிரச்சன. “
“மாமா… நாம அந்த டிசைன்கள மைம்மா கிட்ட குடுத்தாத்தா அது மாதிரியே வேற ஒன்ன ரெடி பண்ண முடியும். அப்ப தான் அவளோட வீடு, கைக்கு கிடைக்கும்.” என்றான் பார்த்திபன்.
“முடியாது பார்த்தி… யாரோ ஒருத்திக்காக நம்ம குடும்பத்த நான் சிக்கல்ல மாட்டு விட மாட்டேன். ” என ராம் திட்டவட்டமாக மறுத்தான்.
“என்ன சகல வாக்குவாதம் பலமா இருக்கு.” எனச் சத்தம் போட்டு சொன்ன சந்ரு, மெல்லிய குரலில், “நம்மோட 24/7 கண்கானிப்ப மீறி எதையும் அவளால எதுவும் பண்ண முடியாது. அப்படியே உனக்கு பயம்மா இருந்தா ஒரே ஒருக்க மட்டும் டிசைன கண்ணுல காட்டு. எதுக்கு ஜெராக்ஸ் எடுத்து நோட்டிஸ் குடுக்குற மாதிரி குடுத்தாத்தான பிரச்சன. ” அவர்களுக்கு பின்னால் வந்த சந்ரு ஐடியா கொடுத்தான்.
“ஆமா மாமா. மாம்ஸ் சொல்றது கூட சரிதா. ” என்று ஒத்து ஊதினான் பார்த்திபன்.
“எதுக்கு ஆதரவு வேணும்? நீங்க எதப்பத்தி பேசுறீங்க.” எனப் புரியாது மூளை குழம்பி போய் கேட்டாள் மயூரி.
“அது நம்ம பார்த்தியோட ஃப்ரெண்ட்டு. வேல வேணும்னு கேட்டிருக்கு. அதா நாமலும் ஒரு கம்பெனி வச்சிருக்கோமே அதுல ஒரு வேலைய போட்டுக் குடுக்குறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு வந்திருக்கான். பண்ண ப்ராமிஸ்ஸ காப்பாத்தணும். இல்லன்னா சாமி வந்து கண்ண குத்தும். மூடியிருந்தாலும் திறக்க வச்சி குத்தும்னு சொல்லிட்டு இருக்கேன். ” சந்ரு சமாளிக்க,
மயூரி பார்த்திபனை நம்பி யாரையும் சேர்க்க வேண்டாம் என்றாள். பார்த்திபன் உடன்பிறப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
பாரதி தான் ஏமாற்றி டிசைன்களை வழிப்பறி செய்தது என ராமிடமும் சந்ருவிடமும் மட்டுமே கூறி இருந்தான் பார்த்திபன். மற்ற யாருக்கும் இப்போது வரை அது பாரதி தான் என்று தெரியாது.
ஏர்போர்ட்டில் மறந்து வைத்து விட்டு வந்த லக்கேஜ்ஜில் அது இருந்தது. ஆஃபிஸ்ஸில் கேட்டு வாங்கியாயிற்று என்று தான் அனைவரிடமும் கூறியிருந்தான். பிறர் பார்வைக்கு பாரதியை களவாணியாக காட்ட மனம் வரவில்லை பார்த்திபனுக்கு.
பாரதியின் மெக்கானிக் ஷெட்…
அங்கு தான் பாரதி லேப்டாப்புடன் அமர்ந்திருந்தாள். பாரதிக்கு கணினி புதிது இல்ல. ராஜா மூலம் அதை இயக்க கற்றுக் கொண்டவள் தான். ஆனால் டிசைன்களை வடிவமைக்க என சிறப்பு மென்பொருள்(software) அது தான் புதிது.
அது கற்றுத் தரத்தான் ராமிடம் கேட்டான் பார்த்திபன்.
“இங்க பாரு பார்த்தி, எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு துளி அளவு கூட நம்பிக்க இல்ல. அதுலயும் மாறனுக்கு வேல செஞ்சவள…” என்பதற்குள்,
“மிரட்டியோ! கிரட்டியோ!. எப்படி வேண்ணாலும் இருந்திட்டு போட்டும். நான் அந்த பொண்ண நம்ப மாட்டேன். ” என அழுத்தம் திருத்தமாக ராம் சொல்லி விட்டான்.
“அந்த பொண்ணுக்கு ட்ரைனிங் குடுக்க நான் ஏற்பாடு பண்ணிட்டேன். ஷாட் ப்ரியர்டுல தேவையான எல்லாத்தையும் சொல்லித் தந்திடுவாங்க. அது மட்டும் தா என்னால முடியும். அதுக்கறம்… ” என்றவன் கடவுள் செயல் என்பது போல் கரத்தை மேலே உயர்த்தி காட்டிச் சென்றான்.
கடலில் நீச்சல் தெரியாது தத்தளிக்கும் எதிரிக்கு ரப்பர் டியூப்பையாவது வீசி எறிந்து விட்டு செல்ல நினைத்தான். திறமை இருந்தால் கரை ஏறட்டும். இல்லையேல் அவ்வளவு தான் மறந்து விட்டு வேறு வேலையை பார்ப்போம். இது ராமின் எண்ணம்..
ஆனால் பார்த்திபனால் அப்படி இருக்க முடியவில்லை. பாரதி, ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல. அவனின் மனம் கவர்ந்த நங்கை என்பதால் கரை ஏற்றி விட தன்னால் ஆனா அனைத்தையும் செய்தான். மடிகணினி உட்பட வரைவதற்கு தேவையான டிஜிட்டல் பென், பேடு வரை வாங்கி வந்து குவித்தான்.
“நீ ஒன்னியும் ஓசிக்கி செய்ய வேண்டியதில்ல. காச வாங்கிக்க.” எனச் சொல்லி பணத்தை அவனிடம் திணித்தாள்.
“இட்ஸ் ஓகே… செலவுக்கு ஆகும். பட் இதே டயலாக்க சொல்லித்தா எனக்கு காஃபி வாங்கி குடுத்து ஏமாத்துன. அதெல்லாம் மறக்க முடியுமா சொல்லு?” என அவன் ஏமாறிய கதையை பொறுமையாக சொல்லியவன்,
“ஆமா நீ என்ன படிச்சிருக்க? “
“அது தெரியாமத்தா எனக்கு டிரெய்னிங் குடுக்க ஒரு ஆள் கிட்ட சேத்து விட்டியா?”
“அட சொல்லும்மா! என்ன டிகிரி படிச்ச?.”
“டிகிரியா! நான் ஸ்கூலே முடிக்கல. “
“என்ன? ஸ்கூலே முடிக்கலயா? அப்றம் எப்படி இங்லீஸ்ல பேசுற. ஹிந்தில கூட அன்னைக்கி எங்கிட்ட பேசுனியே. என்னை ஏமாத்த வசதியா இருக்கும்னு மனப்பாடம் பண்ணிட்டு வந்தியா?”
“இன்னாய்யா வேணும் உனக்கு. சும்மா நோசநோசன்ட்டு. எனக்கு தமிழ் படிக்க பேச எழுதன்னு மூணுமே தெரியும். இங்லீஸ் பேச படிக்க வரும். அது போக தெலுங்கு மலையாளம் ஹிந்தின்னு நாலு பாஷ பேசி பழகிருக்கேன். போதுமா?.”
“வ்….வாவ்.. எப்படி மைம்மா? ஆறு லாங்குவேஜ்… ப்பா.. நீ நடமாடும் நாளந்தாவா எப்பருந்து மாறின? ரகசியத்த சொல்லு கேப்போம்.”
“ரகசியம்லாம் ஒன்னியுமில்ல. வர்ற கஸ்டமருட்ட பேசி பேசி கத்துக்கிட்டேன். எங்க ஏரியால ஹந்திகாரனுங்க ஜாஸ்தி. க்யா க்யான்னு பேசி பழகிடுச்சி. போதுமா வெளக்கம். ” என்றவளை ஏற இறங்க பார்த்தபடி, அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு அவளை வறுத்தெடுத்தான். அவனுக்கு பாரதியைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருந்தன. ஆனால் அதற்கு பதில் சொல்லும் அளவுக்கு பொறுமை தான் பாரதியிடம் இல்லை.
மடிக்கணினியை ஆன் செய்து அதன் முன் அமர, அதில் ராமும் அவன் ஏற்பாடு செய்து தந்த டிரைனரும் தெரிந்தனர்.
“நான் என்ன கொரோனா காலத்து ஸ்கூல் ஸ்டூடென்ட்டா… ஆன்லயன்ல கூகுள் குரூம்ஸ் zoom மீட்டிங்கள பாடம் கத்துக்க.” என முதலில் சலித்துக் கொண்டாலும், பாரதிக்கு ராமின் மீதும் பார்த்திபன் மீதும் எந்த கோபமும் வரவில்லை.
‘தான் செய்த செயலுக்கு பார்த்திபன் இந்த உதவி செய்வதே பெரிது. இதில் ராஜ மரியாதையை எதிர்பார்ப்பது தவறு. சந்தேகம்! இந்த அளவுக்கு கூட இல்லை என்றால் எப்படி.? ‘ என நினைத்தவளுக்கு ராம் கற்று தந்த விதம் பிடித்திருந்தது. எளிதாக அவளுக்கு புரியும் படி கற்றுத் தந்தான்.
முதலில் மறுத்தவன் தான் ஆனால் அவனுக்கு கற்பித்தல் மிகவும் பிடிக்கும். அதிலும் ஆர்வமுடன் தன் பேச்சிற்கு காது கொடுத்து கற்றுக்கொள்ளும் கற்பூர புத்திக்காரர்களை மிகவும் பிடிக்கும். பாரதி கற்பூர புத்திக்காரி. தன் எண்ண அலைகளுக்குள் பொருந்தி இருந்தால் அதை விட அதிகம் பிடிக்கும். அந்த வகையில் பாரதியை ராம் சிஷ்யையாக ஏற்றான். முதலில் டிசைன் பற்றி ஆரம்பித்த பாடம் பின் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்டில் வந்து நின்றது.
தங்கம் எப்படி நகையாக மாறுகிறது என்பதில் தொடங்கி தூய தங்கத்தில் சேர்க்கப்படும் பிற உலோகங்கள் வரை அடிப்படையாக வகுப்பெடுத்தவன், பின் வந்த நாட்களில் எப்படி சந்தைக்கு வருகிறது? அரசாங்கத்து வரி… மக்களுக்கு கிடைக்கும் லாபம். வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபம். அதிலிருக்கும் போட்டிகள்.. அதை எப்படி சமாளிப்பது?. என அனைத்தையும் பாரதியிடம் ஒப்பித்தான். ஏன் என்று தெரியாத போதும் பாரதிக்கு ராம் கற்றுத் தந்தான்.
ஒன்றை கற்றுக் கொள்வதற்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் போதும். அதை பாரதியை வைத்து தெரிந்து கொள்ளலாம். கணினி, ஆங்கிலம் என பிற மொழிகளும் நவீன சாதனங்களும் அறிவை வளர்க்கும் உரம் தானே தவிர… விதை அல்ல…
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் விதை. பாரதி மனதில் விழுந்த விதை. அதை ராம் விதைத்தது. நம் மாணிக்கம் எதிர்பார்த்த அனைத்தும் பாரதியிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
சொல்லப் போனால் அந்த ஆன்லயன்ல கிளாஸ் அவளுக்கு வசதியான ஒன்று தான். ஏனெனில் ராமுடனும் பார்த்திபனிடமும் பாரதி பழகுவது வீரமாறனுக்கு தெரிந்தால் வீடு கை மீறி போய்விடும். அது வெறும் வீடு மட்டுமாக இருந்தால் விட்டு விடலாம். தன் உழைப்பு. கனவு லட்சியம் என கருதும் போது அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியே வந்தது. வெறி கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தந்தது.
காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருக்காது. சில நேரங்களில் அது நத்தை வேகத்தில் நகர்ந்தாலும் பல நேரங்களில் அது இருளை கிழித்துக் கொண்டு செல்லும் ஒளியை போல் வேகமாக சென்றே விடுகிறது. இதோ இரு மாதங்கள் முடிந்து விட்டது.
சந்தனமும் ஜவ்வாதும் கலந்த மணம் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தது. அது கூடவே மல்லிகை சாமந்தி என வேறு பல சுகந்த மணம் வீசி ஒரு தெய்வீக உணர்வை தந்தது.
கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே…
உத்திஷ்ட னரஷார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம்…
சுப்ரபாதம் பாடலை தவிர வேறு எந்த சத்தமும் அங்கு இல்லை. கண் மூடி இறைவனை வேண்டிக் கொண்டு வெகு நேரம் நின்றவர், கண் திறந்து சந்தனத்தை குழைத்து வைந்திருந்த குவளையில் தன் மோதிர விரலை விட்டு, சிறிது எடுத்து தன் வெற்று நெற்றியில் கீற்றாக கோடு போட்டார். அதன் நடுவே குங்குமத்தையும் வைத்துக் கொண்டவர், விரலில் ஒட்டியிருந்த சந்தனத்தை உள்ளங்கைகளில் தேய்த்து அதன் வாசத்தை தன் நாசியில் நுகர்ந்த படியே வெளியே வந்தார்.
அவர் தான் குணசேகரன்.
“ஏங்க சாப்பாடு ரெடி.” என்பதை எப்படி குணசேகரனிடம் அடிவாங்காமல் சொல்வது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தார் அவரின் மனைவி பூங்கொடி. ஏனெனில் பூஜை அறையில் இருக்கும் போது அவரைத் தொந்தரவு செய்தால் அடி நிச்சயம். தொந்தரவு செய்யாவிட்டாலும் அடி விழும் தான். ஆனாலும் விடிந்த இனிய காலை பொழுதை அடி தடியுடன் தொடங்க வேண்டாமே! என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு நின்றார்.
“என்னம்மா நீ தனியா புலம்பிட்டு இருக்க. காச்ச கீச்ச அடிக்கிதா?” என மாறன் அன்னையின் தலையில் கை வைத்தான்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல. இன்னைக்கி ஜானவிக்கு பிறந்த நாள் டா. அவள போய் பாக்கணும்.. அதுக்கு உங்கப்பாட்ட கேட்கணும்.. “
“ஓ… அதா அவரு நல்ல மூடுல இருக்கும் போதே பர்மிஷன வாங்கிடுவோம்னு நிக்கிறியாக்கும்.”
“இல்ல நல்ல மூடுலயே வச்சிருக்கணும்னு நிக்கிறேன். “
“எனக்கு அந்த மாதிரி யாரும் அனுமதி தர தேவையில்ல. என்னோட வருங்கால மனைவிய பாக்க எப்பனாலும் போகலாம். ஈவ்னிங் பார்ட்டி இருக்குன்னு சொன்னா. “
“எம்மருமகளுக்கு எதாச்சும் வாங்கி வச்சிருக்கியாடா?. இல்ல நம்ம கடைல இருந்து எடுத்திட்டு வரச் சொல்லவா! ” என ஆவலுடன் கேட்டார் பூங்கொடி.
“ம்.. ” என்றவன் வருங்கால மனைவிக்கு பரிசாக தான் வாங்கி வைத்திருந்த பரிசை பற்றி சொல்ல, சத்தமில்லாமல் சிரித்தார் அவள்.
ஜானவி, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பிஸ்னஸ் மேனின் மகள் தான். எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்பவரின் மகளுடன் தன் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார் குணசேகரன். அரேஜ் மேரேஜ் தான்.
இதோ சில வாரங்களில் திருமணம். அதற்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருந்தன.