Niththirai Kalaiththa Maayaval 17
பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
Advertisement
பெண் இல்லாத ஊரிலே
Advertisement
கொடிதான் பூ கேட்பதில்லை
Advertisement
Advertisement
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது
வாசலின் இரு பக்கமும் ஆட்கள் அரனாய் நிற்க… வாசலிற்கு நேராக நின்ற காரில் இருந்து முதலில் ஒரு பெண் மணி ஒருவர் இறங்க… காரில் மற்றொரு கதவு வழியாக ஒரு ஆண் ஒருவர் இறங்க….
“யார் இவர்கள்” என்று குடும்பமே பார்த்து கொண்டு நிற்க… அவர்களை ஆராய்ந்த அன்பு
உயர்ரக புடவை ஒன்றை உடுத்தி…அதற்கு ஏற்றார் போல் சின்னதாக டாலர் செயின் ஒன்றும்.. தாலியும் கழுத்தில் தொங்க… தலை உச்சியை நிறைக்கும் குங்குமத்துடன்….மங்கள காரமான முகத்துடன்… இறங்கினார் இருபத்தி ஏழு வயதுடைய பெண் ஒருத்தி…
அவள் பக்கத்தில் வந்து நின்ற ஆண்… கதர்
சட்டை.. வேஷ்டியுடன்… கட்டுடல் தேகத்துடன்.. தலையை கோதி விட்ட படி இதழில் சிறு புன்னகையுடன் அவள் பக்கத்தில் வந்து நின்றான்…
இருவரும் இறங்கிய உடன் உள்ளே வராமல்… காரில் இருந்து இறங்கும் அந்த நபருக்காக காத்திருக்க… இறங்கினார் அவர்… இல்லை இல்லை அவள்….
சாதாரண காட்டன் சல்வார் உடையில்… முகத்திற்கு ஏற்றார் போல் வடிவாய் சீவ பட்ட கேசமும்…. அதான் முழு நீளமும் அவளின் முன் விட்டு இருக்க…அவளின் இடையை தாண்டி ஆடி கொண்டு இருந்தது…அழகிய நடையுடன் வாசல் வந்து சேர்ந்தாள் இனியவள்
இவர்களை பார்த்த அன்பிற்கு முதலில் எதுவும் புரியாமல் போக… இறங்கிய மூன்றாவது நபரை கண்டவன்… திகைத்தானா… மகிழ்த்தானா… அதிர்த்தனானா… என்று கூற முடியாத உணர்வில் நிற்க… கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் “நான் நிற்கவே மாட்டேன்” என்று வந்து கொண்டு இருந்தது…
சாதாரண சல்வார் என்றாலும்… அவளுக்கு அழகாய் பொருந்தி இருக்க… இத்தனை நாள் எதோ ஒரு சேலையை உடுத்தி கொண்டு திரிந்தவளை கண்டவனுக்கு… “இவள் இவ்வளவு அழகா”என்று முதல் முறை அவன் மனம் அவள் அழகை ஆராதித்தது…
“நீ அவளை கவனித்து இருந்தாள் தானே உனக்கு தெரிந்து இருக்கும்…அத்தனை நாள் நேரத்தை வீணாக்கிட்டு இப்போ வந்து அழகு அது இதுன்னு” அவன் மனசாட்சியே அவன் காலை வாறியது….அதான் பேச்சை கேட்கயகவான் போல்… மேலும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தான் அவன்….
“சின்ன அழகிய சிவப்பு ரோஜா பூ.. அவள் கேசத்தில்….கைகளில் இரண்டு வளையல்கள்… நடுநடுவே கற்கள் பதித்து, தங்கத்தில் செய்தது போல” அவனுக்குலேயே பேசி கொண்டான்….
[the_ad id=”6605″]
“புது அழகான காலணிகள்….காதில் மின்னும் அழகிய தோடுகள்… இரு கண்புருவத்தின் நடுவே அழகிய பொட்டு” ஆராய துவங்கியவனின் பார்வை அத்துமீற… உடனே கண்டித்து அவனின் மனசாட்சி
“காதல் வந்தா… செருப்பு கூட சிங்கா சங்கமா தெரியும் போல… இன்னும் இந்த பையன் என்ன எல்லாம் நம்மளை படுத்த போறானோ தெரியலையே” புலம்பிய மனசாட்சியை இப்போதும் கண்டு கொள்ளவில்லை அவன்…
வந்தவளை கண்ட குடும்பத்தினருக்கு இருப்பு கொள்ளவில்லை….. அவளை ஆர தழுவி முத்தமிட்டவர் ஜானகி தான்… அதன் பின்னர் தான் செல்லம்மாவிற்கே வாய்ப்பு கிடைத்தது….
அது வரை மாடியில் தூங்கி கொண்டு இருந்த வைஷுவும் இறங்கி வந்து விட… அவள் முதலில் பார்த்தது… இனியவளின் அருகில் இருந்த அந்த இருவரை தான்…
கீதா ஆண்ட்டி… பிரேம் அங்கிள் என்று இருவரையும் ஓடி போய் கட்டி கொள்ள… அப்போது தான் இனியவள் கூட வந்தவர்களை வீட்டினர் கவனித்தனர்….
ஆனால் வைஷு மும் எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணிய அனைவரும் அமைதி காத்தாலும்… நடந்ததை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை யாராலும்…
வைத்த கண் வாங்காமல் இனியவாளையே பார்த்து(சைட் அடித்து ) கொண்டு இருந்த அன்பின் பக்கத்தில் வந்த இலக்கியன்….
“ரொம்ப ஊத்துது அண்ணா…பாத்து வழுக்கிடபோகுது” என்றான் மிக பௌவியமாய்…
அதை புரிந்து கொண்ட அன்பு… “எனக்கு தெரியும்.. நீ மூடிக்கிட்டு நில்லு” என்றான்
“ரைட்டுடுடு… அப்போ உன் காதலி மீராவோட நிலைமை” என்றான் குதர்க்கமாக…
“யாருடா மீரா? ” என்றான் இவன் ஒரே போடாக… இனியவளின் மேல் இருக்கும் பார்வையை அகலவில்லை இவ்வளவு பேசும் போதும்…
“போ போய் குழந்தையை தூக்கிகிட்டு போ… நாங்க அவ கிட்ட பேசணும்” என்றான் அன்பு அவசரத்துடன்
“டேய்… அண்ணா… தம்பின்னு கூட இல்லாம…இந்த வேலை பார்க்க வெச்சிட்டியேடா என்னை” கண்ணில் வராத நீரை துடைப்பத்தை போல பாசாங்கு செய்தவன், அன்பை பார்க்க…
அவனுக்கு இவன் பேசியதும் கேட்க வில்லை… செய்ததும் தெரியவில்லை… இனியவளை பார்ப்பதே முழு நேர வேலையாக வைத்து கொண்டு நின்று இருந்தான் அவன்…
[the_ad id=”6605″]
“ச்சசச… கற்ற மொத்த வித்தையும் வீணாகி விடாதே… இன்னும் பயிற்சி வேண்டுமோ” அன்பை பார்த்து வேர்த்தவனாய்… வைஷுவை கூட்டிக்கொண்டு எங்கோ சென்று விட்டான்….
அவன் சென்றது தான் தாமதம்
“என்னமா அச்சு உனக்கு… எதுக்கு எத்தனை நாள் எங்க கிட்ட எதுவும் சொல்லாம விட்டுட்ட… உனக்கு ஒன்னும் இல்லையே” அவளை ஆராய்ந்த படி பேசினார் செல்லம்மாள்
“இத்தனை நாளா என்னை அம்மா, அம்மான்னு கூப்பிட்டது எல்லாம் உண்மைன்னு நெனச்சேன்… ஆனால் நீ எல்லாம் வாய் வார்த்தையாக தான் கூப்பிட்டு இருக்க” ஆதங்கத்தில் பேசினார் ஜானகி
பின் தொடர்ந்த இனியவள்
“என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க… உங்க யார் கிட்டயும் போய் சொல்லணும்னு நான் இப்டி பண்ணல… அன்பு என்னை இங்கு கூட்டிட்டு வந்த அப்போ… உங்க எல்லாரையும் பார்த்த அப்போ இந்த இடம் பாதுகாப்பாக இருக்குன்னு நெனச்சி தான் நான் ஒன்னும் பேசலை… எப்படியும் கொஞ்ச நாள் தானே இருக்கப்போறோம்ன்னு தான் அமைதியா இருந்தேன்…
ஆனால் இங்க வந்த கொஞ்ச நாள்லயே எனக்கும் இந்த வீட்டிற்கும் ஒரு பிணைப்பு வந்துடுச்சி… என்னால் இங்க இருந்து போக முடியாதோ அப்படின்ற பயம் வந்துடுச்சி….அதனால் தான் அன்பு கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இங்க இருந்து போகலாம்னு இருந்தேன்…
அப்போதான் லோகநாதன் ஆளுங்க என்னை கடத்த முயற்சி பன்னிடாக…நல்ல வேலையா பிரேம் அண்ணா வந்து என்னை காப்பாத்தி தூக்கிட்டு போய்ட்டாரு…
அதான் இப்போ வைஷுவை கூட்டிட்டு உங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” இறுதியில் அனைவரின் தலையிலும் இடியை இறக்கும் வகையில்…
அதுவரை… முதன் முதலாக தன்னை பெயர் சொல்லி அழைத்தவளையே ஆசையாய் பார்த்து கொண்டு இருந்தவன்… அவள் வீசுய கடைசி குண்டில் நிலைகுலைந்தான்
உடனே இலக்கியனை தேடியவன்… அவனை காணாமல் போக… அவனை அனுப்பியதற்கு தனியே நொந்த்து கொண்டான்…
பெருமாளை அழைத்தவன்… “உடனே போய் இலக்கியன் எங்க இருந்தாலும் தூக்கிட்டு வாங்க” உத்தரவு பறந்தது அவனிடம் இருந்து
இலக்கியனை அழைக்க”இப்போ புரியுதா… நான் இந்த வீட்டுக்கு எவ்வளவு முக்கியம்னு… ஐயா வேலையா இருக்காரு.. வர முடியாதுனு போய் சொல்லுங்க” என்ற கொஞ்சம் திமிராகவே
விஷயத்தின் வீரியத்தை உணர்த்த பெருமாள்.. அவனை கடைசியில் தூக்கி கொண்டு வந்து அன்பின் முன் நிறுத்தினார்
பெருமாளை கடுப்புடன் பார்த்த இலக்கியம் “இவர் அவ்ளோ ஸ்ட்ரிங்கா இல்லை நான் அவ்ளோ வீக்க்கான்னு தெரியலையே” என்று ஆராய்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில்
அவன் முதுகில் சுளீர்ர்ர் என பதிந்தது அன்பின் ஐந்து விரல்களும்…
“ஏன்டா இப்டி அடிச்சா” சத்தம் வராமல் எகிறினான் இலக்கியன்
“எப்போ வர சொன்ன எப்போ வர” என்றவன்… விஷயத்தை கூறி அவனை அனுப்பி வைத்தான் அன்பு
அதற்குள் வீட்டினர் அனைவரும் இனியவளை தங்க வைக்க போடும் பால் அனைத்தையும்
“எதுக்கு இன்னும் இங்க இருந்துகிட்டு உங்களுக்கு தொல்லை குடுக்கணும்… என் தோழி வீட்டுக்கே போறேன்… உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என்று அணைத்து பால்களையும் நோ பால் ஆக்கி கொண்டு இருந்தாள் இனியவள்
[the_ad id=”6605″]
பேசி கொண்டு இருந்தவர்களின் நடுவில் புகுத்த இலக்கியன்
“வீட்டினர் கவனத்திற்கு” என்றான் சத்தமான குரலில்
“தம்பி அந்த பக்கம் போய் விளையாடுபா” என்றார் ராமன் மிகவும் சீரியஸ்சாக…
அதை கேட்ட அன்பிற்கு சிரிப்பு வந்தாலும்.. அதை அடக்கியவன்…
இவர் பெரிய ரயில் அதிகாரி… அனௌன்ஸ்மென்ட் பன்றாரு… சொன்ன விஷயத்தைமட்டும் செய்யாமல் வந்த…கழுத்தை அறுப்பது போல் கையால் செய்கை கட்டியவனை கண்டு திடுக்கிதவன்
“இந்த வீட்டுல வயசான கிழடுகட்டையும் நம்மள மதிக்கறது இல்ல…பசங்களும் மதிக்குறது இல்லை… என்ன கொடுமை சார் இது” புலம்பிய படியே
“ஒரு நிமிஷம் இங்கயா” என்றான் சத்தமாக… என்ன என்பதை போல் அனைவரும் அவனை பார்க்க…இனியவளை நெருங்கியவன்
“இப்போ என்ன.. நீ எங்களுக்கு பாரமா இருக்க கூடாது… தொலை பன்ன கூடாது… அதனால நீ இங்க இருந்து போகணும்னு சொல்லுறே… அதானே” என்றான் மிகவும் கூல்லாக
ஆம் என்று தலை அசைத்த இனியவளை நெருங்கிவன்
“நீ இங்க முன்ன மாதிரி என்னோட அண்ணியா தங்குனா தானே பிரச்னை… எங்க வீட்டு கெஸ்ட்டா தங்கிட்டு போ… அப்போ உனக்கு பிரச்னை இல்லைல”என்றவனை குழப்பமாய் பார்த்தனர் அனைவரும்
“நம்ப காயத்திரியை பொண்ணு பார்க்க வாரங்கல…அது அப்டியே போச்சுன்னா… கல்யாணம் முடிவாகும்… அதுல கலந்துக்க மாட்டியா”…என்றான் ஒரே போடாக
அதில் அவள் குழம்பி இருக்கும் இருக்கும் நேரத்தில்
இலக்கியன் கூறியது போலவே வீட்டினர் அனைவரும் அவளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்க… மீண்டும் தொடர்ந்த இலக்கியன்
“பாரு.. நீ தங்க மாட்டேன்னு சொன்னதும் நம்ப காயத்திரி எவ்ளோ சோகமா ஆகிட்டான்னு” சோகமாய் நின்று இருந்த காயத்ரியை, அவளின் சோகத்திற்கு காரணமே தெரியாமல் பயன் படுத்திக்கொண்டான் இலக்கியன்….
இறுதியில் இன்னியவள் சம்மதித்து… தங்குவதாக ஒத்து கொள்ள… ப்ரேமையும் கீதாவையும்… திருமணம் முடித்து வருவதாக கூறினாள் இனியவள்….
இறுதியாக தங்களை பற்றி கூறியவர்கள்… நான் கீதா … இனியவள் கூட படிச்சவ… இவர் பிரேம் என்னோட கணவர் பிரேம்… நாங்க ரெண்டு பேரும் படிக்கும் போதே காதலிக்க ஆரம்பிச்சோம்… அது வீட்டுக்கு பிடிக்கல…
அப்போ இனியவளோட மாமா தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி…எங்களுக்கு சின்னதா ஹாஸ்பிடல் கட்டி கொடுத்து.. மதுரைல வாழ எல்லா ஏற்படும் பண்ணாரு… இப்போ நாங்க உயிரோட இருக்றதே அவரால தான்…
இனியவளுக்கு ஒரு பிரச்னைணா நான் எப்படி சும்மா இருக்க முடியும்… கூடிய விரைவில் அனுப்பி வெச்சிடுங்க… வாக்குறுதியோடே சென்றனர் இருவரும்…
பின் இரவு வரைக்கும் இனியவளை தாங்கினார் குடும்பத்தினர்…வைஷு குட்டியை கூட கண்டு கொள்ள வில்லை.. பாவம் குட்டி… இலக்கியனுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்து கொண்டு இருந்தது…
இந்த இலக்கியம் வேறு. பல முறை சத்தம் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை… அவனும் “எனக்கும் ஒரு காலம் வரும்” என்று வசனம் பேசி விட்டு போய் அமர்ந்து கொண்டான்…
எப்படியும் இரவில் அறைக்கு தானே வருவாள்… அங்கு பார்த்து கொள்ளலாம் என்று அமைதியாய் கண்ணால் மட்டுமே இனியாளை அளந்து கொண்டு இருந்தான் அன்பு…
அமைதியாய் இருந்த அன்பை நெருங்கியவன்…. அப்றம் அண்ணன்… “கேஷ்ஷா செக்க்கா” என்றான்
அவனை “எதுக்குடா” என்பது போல் கடுப்பாய் பார்த்தவன்
“அதான் இனியவள் இங்க தங்க… என்னோட முலையை பயன் படுத்தினேன் இல்ல…அதுக்கு என்றான்” இல்லாத கொலரை தூக்கி விட்டு கொண்டு
அவனை பார்த்து அசிங்கமாக சிரித்தவன்….. “மரியாதையா போறியா.. இல்லை சூடு தனியாய் மூஞ்சில ஊதுவா” என்றான் கடுப்புடன்
“ஓஹோ…அந்த அளவுக்கு பயம் விட்டு போச்சா… இருடி உன்னை கதற விடுறேன்” என்று நினைத்தவன்
“அம்மா, அம்மா” பாசமாக கத்தி கொண்டு சமையல் அறையில் புகுந்தான்
“இப்போ இனியவள் எங்கம்மா தாங்குவா… முன்ன அண்ணியா இருந்ததால அண்ணன் கூட தங்குனாக… இப்போ அப்டி முடியாது இல்லமா” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல…
இனியவளை ரசித்து கொண்டு இறந்தவனின் காதிற்கு இவை விழ… திடுக்கிதவன்… சமையல் அறை அடைவதற்குள்
“இனியவள் காயத்ரி அறையில் உறங்குவாள்” என்ற சாசனத்தை இயற்றினார் செல்லம்மாள்
அன்பை பார்த்து ஏளனமாக சிறிது கொண்டே சென்றவனை துரத்தி கொண்டு சென்றவன்… அவன் அசை தீர இலக்கியனுக்கு பரிசளித்த பின்னே ஓய்ந்தான்…
இரவு ஆகி.. அனைவரும் சாப்பிட்டு.. உறங்க சென்று விட… வைஷு இலக்கியனுடன் உறங்கி விட…
பாவம்… பாழாய் போன தூக்கம்… அன்பிற்கு வரவே மாட்டேன் என்று சண்டை இட்டு கொண்டு இருந்தது…
சரி தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம் என்று எண்ணியவன் கீழே சமையல் அறை செல்ல…
அங்கு யாரோ இருவரின் நிழல் போல் கருத்த உருவம் இன்று தெரிய.. முதலில் அலட்ச்சியமாக எடுத்து கொண்டவன்…
அந்த உருவம்… தன் கையில் எதையோ எடுத்து… அதை திறந்து… யோசித்து கொண்டு நிற்கும் போது
அந்த அரைகுறை வெளிச்சத்தில் அந்த நிழலில் கையில் இருப்பதை பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்…
எலி பாசனம்(rat killer) என்று இருந்தது அதில்… அதை கிட்ட தட்ட வாயின் அருகில் கொண்டு சென்று விட்டார் அந்த நிழல் நபர்
மாயம் தொடரும்…..
