Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 12

என்னவள்_12

 

முகத்தில் சிரிப்பை மறந்து,இருக்கமான மனநிலையில் மோகன் அமர்ந்து இருந்தான். வந்திருந்ததில் ஒரு பெண்மணி “பொண்ணை அழைச்சிட்டு வாங்க எங்க மாப்பிள்ளை பக்கத்தில் நின்றால் பொருத்தம் எப்படி இருக்கிறதுன்னு பார்க்கலாம் என சத்தமாக சொல்ல”..திவ்யா தன் தாயாரிடம் குழந்தையை தந்தவள் உள்ளே சென்று அழைத்து வர சக்தியிடம் சென்றாள்.

 



Advertisement

“பொருத்தம் எல்லாம் அமோகமாக இருக்கும் அழகுல மட்டும் இல்லை படிப்பிலேயும் எங்க பொண்ணு பெஸ்ட்தான். ராணி மாதிரி இருப்பா…உங்கள் பையன் தான் எங்க பொண்ணு கிட்ட நிற்க யோசிக்கணும்.”பெண்ணிற்கு சப்போட்டாக ஒருவர் வாய் திறக்க பதிலுக்கு அவர்களது இடத்தில் இருந்து அடுத்த குரல் வந்தது. 

 

“பையனுக்கு அழகே அவனோட வேலையும் அவனோட நடத்தையும் தான் எங்க பையன் மரியாதையான பையன். இதுவரைக்கும் எங்க ஊரில் எந்த பொண்ணோட முகத்தையும் நிமிர்ந்து பார்த்தது கிடையாது.  ஊருக்குள்ள அவனுக்கு அத்தனை நல்ல பேரு தெரியுமா…”

Advertisement

 

Advertisement

“எங்க பொண்ணும் குறைஞ்ச பொண்ணு எல்லாம் கிடைத்தது அழகுல குணத்திலே எதிலேயும் குறைஞ்சவ கிடையாது.  தேசாதிதேசம் தேடினாலும் இப்படி ஒரு பொண்ணு யாருக்கும் கிடையாது”. 

 

“எங்க பையன் மட்டும்  எதில் குறைஞ்சுட்டான்…  அங்கே பொள்ளாச்சியில் வந்து கேட்டு பாருங்க எங்க பையனை பற்றி சொல்லுவாங்க…யாராவது தப்பாக ஒரு வார்த்தை பேசச் சொல்லுங்க பையனுக்கு எதிரான…யாரும் சொல்ல மாட்டாங்க அந்த அளவுக்கு நல்ல பையன். கவர்மெண்டுல வேலை நல்ல சம்பளம் அதை தாண்டி தோட்டத்தில் இருக்கற வேலை எல்லாத்துக்கும் அவனபொறுப்பாக  பார்த்துக்கறான் இது வரைக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது இதை விடவும் ஒரு பொண்ணுக்குவேற என்ன வேண்டுமாம்.”

Advertisement

 

“போதும் போதும் மாற்றி மாற்றி நாமலே பேசினா எப்படி பொண்ணு வரட்டும் பொண்ணை நேரில் பார்த்திட்டு பொண்ணு கிட்ட ரெண்டு வார்த்தை பேசினா தெரிஞ்சிடப்போகுது…யாரு பெஸ்ட்டுன்னு…”

 

இப்படி சொல்லவும் அடுத்ததாக ஒரு சிரிப்பலை தொடற…இவர்களின் பேச்சு  எதுவுமே மோகனின் காதிற்கு விழவில்லை அவனது கவனம் எல்லாம் காலையில் நடந்ததிலேயே இருந்தது. என்றும் இல்லாமல் அன்று காலையிலேயே இவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள் செல்வி..இவனுடைய அத்தை மகள்…துருதுருவென எதையாவதுஇவனிடம் பேசிக்கொண்டு வீட்டை சுற்றி வலம்வருபவள். சின்ன வயதில் இருந்தே மாமா மாமா என்று இவனது காலையே சுற்றி வருபவள்.இவனது பேச்சு என்னவோ அவளிடம் எப்போதும் சற்று குறைவு தான்  அதை பற்றிய கவலை அவளுக்கு எப்போதும் இருந்தது இல்லை எதையாவது சொல்லி இவனிடம் ரெண்டு வார்த்தை பேசாமல் நகர்ந்தது இல்லை. 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளும் வசிப்பது அங்கேயே,அதே ஊரில்  தான்.செல்வியின்  தாயார் பொன்னிக்கு அதே ஊரில் இருந்த மாப்பிள்ளைக்கு  சீரும் சிறப்புமாக திருமணம் முடித்து தர… செல்வி பிறந்த ஒரு வருடத்திலேயே தந்தை இறந்து விட்டார். கோழிசண்டை எப்போதும் அவருக்கு பொழுது போக்கு…. பணம் கட்டி ,பெட் வைத்து விளையாடுபவர்  அன்றும் அது போலவே விளையாட சென்று இருந்தார்.அன்றைய சண்டை  தகராறில் முடிய  கத்தியால் குத்து பட்டு  உயிரை விட்டு இருந்தார். அன்றிலிருந்து இருவரின் மொத்த  பொறுப்பையும் இவர்களது குடும்பம்  பார்த்து கொண்டது.  

 

செல்வி படித்தது முதல் எல்லா செலவுகளையும் மோகனின் குடும்பம் தான் பார்த்து கொண்டது. இவர்களுக்கும் அங்கே ஒரு ஏக்கரில் தென்னந்தோப்பு இருந்தது.  செல்வி தன் தாயாரோடு அதையும் பார்த்து கொண்டாள். 

 

படிப்பை பிளஸ்டூவோடு நிறுத்தி இருந்தாள் படிக்க பிடிக்கவில்லை என்பதை விடவும் படிப்பு இவளுக்கு சுத்தமாக ஏறவில்லை என்பது தான் நிஜம்.. எப்படியோ பார்டரில் பாஸாகி இருந்தாள் செல்வி…”மேலே என்ன படிக்க போற செல்வி”, என இவளை கேட்டபோது எனக்கு படிப்பு எல்லாம் வேண்டாம் மாமா நான் அம்மா கூட தோட்ட வேலையை பார்க்க போறேன் என்ன முடித்து கொண்டாள்.சிறு வயதில் இருந்து பார்ப்பதினால் இவளது விருப்பு ,வெறுப்பு இரண்டுமே தெரிந்து இருந்தது அதனால் யாரும் அவளை வற்புறுத்த வில்லை…அதுவும் அவளது மார்க் ஒவ்வொன்றையும் பார்த்து வந்ததினினால் மறுபடியும் படி என்ற  வார்த்தை யாரும் சொல்லவில்லை.  ஆனால் செல்விக்கு படிப்பை தவிர அனைத்தும் நன்றாக வந்தது. சமையல் ஆகட்டும்,தோட்டவேலை ஆகட்டும் ஏன் மற்றவர்களை வேலை வாங்குவது ஆகட்டும் எதிலும் குறை சொல்ல முடியாது. 

 

மோகனின் தாயார் கூட” நம்ம செல்விக்கு என்ன குறை கொஞ்சம் விளையாட்டுதனம் இருந்தாலும் அத்தனை வேலையையும் அவ்வளவு சரியாக பார்த்துக்கறாலே…என அடிக்கடி சொல்வது உண்டு.”

 

இவள் மனதிற்குள் ஆசைப்பட்டது ஒன்று உண்டு என்றால் அது மோகனின் மேல் கொண்ட காதல் தான்.  இது வரை அவனிடமும் சொன்னது இல்லை  ஆனால் மனது முழுக்க எப்போதும் நிறைந்து இருப்பது அவனுடைய உருவம் மட்டும் தான். அவனுக்கும் இவளை பிடித்தே இருந்தது  என்பதும் இவளுக்கு தெரிந்ணே இருந்தது.இதுவரையிலும் எதுவும் சொல்லி கொண்டது கிடையாது.  எப்போது என்றாலும் தன் வீட்டிற்கு வரப்போகிறவள் தானே என்று நினைத்திருந்தான்.இது இப்படி இருக்க…மோகனின் தந்தை வேறு மாதிரி கணக்கு போட்டு சக்தியை இவனுக்கு பேசி முடிவு செய்து விட்டு வந்திருந்தார்.

 

சக்தியின் தந்தை பொள்ளாச்சி சந்தைக்கு வரப்போக பழக்கம் நட்பாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல அந்த நட்பு உறவாக மாறினால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து  இருந்தது இருவருக்கும்… ஏற்கனவே நல்ல வசதி இரண்டு குடும்பத்தினருமே…இவர்களது குடும்பம், மோகனை பற்றிய விசாரனை எல்லாம் இவருக்கு பிடித்து விட சக்தியின் தந்தை தனது சம்மதத்தை சொல்லி இருந்தார்.

 

மோகனின் தந்தையோ…தனது பணத்தோடு  சக்தியின் வீட்டு பணமும் சேர வேண்டும் என நினைத்தவர் மகனை பற்றி சொல்லவும் அவரும் ஏற்கனவே விசாரித்து இருக்க மகிழ்ச்சியோடு தன்  சம்மதத்தை சொல்லி விட்டு வீட்டிற்கு பெண் பார்க்க வரச்சொல்லி  சென்று இருந்தார். 

 

இருவருக்கும் பணம்,அந்தஸ்து மட்டுமே முதலில் தெரிய மோகனின் தந்தைக்கு மகனின் மனம் செல்வியை சுற்றி வருவது சுத்தமாக அவருக்கு தெரியவில்லை.  அவரே முடிவு செய்து  கொண்டார் மோகனிடம் எதுவுமே கேட்காமல்,ஏன் எதுவுமே சொல்லாமல் உறவினர்கள் அனைவரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

 

ஆனால் வீடடில் நடப்பது பாவம் அவருக்கு எதுவுமே தெரியவில்லை செல்வி தினமுமே ஏதாவது சொல்லி கொண்டு, எதையாவது எடுத்து கொண்டு காலையில் இங்கே வந்து விடுவாள் காலையில் முதலில் பார்ப்பது மோகனின் முகமாக இருக்க வேண்டும் என்பது எப்போதும் அவளுடைய எண்ணம்…அதற்கு ஏற்றாற்போல் அந்த ஊரில் உள்ள பலரும் செல்விக்கு என்ன கொறைச்சல் கட்டிக்கிட்டு போக முறைமாமன்  வீட்டோடு இருக்கிறான் என்ற பேச்சு இவளை அப்படியே யோசிக்க வைத்து இருந்தது. 

 

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது ஆரம்பம் முதலே இவளது நினைவு தெரிந்த நாளில் இருந்து செல்விக்கு மோகன் தான் என இரண்டு வீட்டாரும் அடிக்கடி பேசிக்கொண்டு இருக்க…இவளும் அப்படியே மனதிற்குள்முடிவே செய்து இருந்தாள். ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை என்பது போல அவர்களது வீட்டிற்கு வந்து அழைத்துசென்றிருந்தனர் இருவரையும் மோகனின் தாய் தந்தை இருவரும்…

 

“பொன்னி மோகனுக்கு பொண்ணு பார்த்து இருக்கிறேன் மேட்டுப்பாளையம் பக்கத்தில் இன்றைக்கு சாயங்காலம் அங்கே புறப்படறோம் ரெண்டு பேரும் வந்திடுங்க என கூற…ஏற்கனவே தனது மகள் செல்வி மோகனை விரும்புவது தெரிந்திருக்க பொன்னி சண்டையிட ஆரம்பித்தாள்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஏண்ணா புதுசா இப்படி பேசறிங்க இத்தனை நாளா என்ன சொல்லிட்டு இருந்திங்க மோகனுக்கு செல்வியை கட்டுவேன்னு தானே பேசிட்டு இருந்தோம் இப்ப தீடின்னு இப்படி சொன்னால் எப்படி?  என்னோட பொண்ணுக்கு என்ன  குறைச்சல் அதை முதலில் சொல்லுங்க என கேட்க…இரண்டு பேருக்கும் வாக்கு வாதம் துவங்கி இருந்தது. நானும் வசதியாக தானே இருக்கிறேன் இருக்கற சொத்து தோட்டம் எல்லாம் அவளுக்கு மட்டும் தானே அப்புறம் ஏன் இப்படி செஞ்சிங்க…

கேட்டுக்கொண்டு இருந்த செல்விக்கு அப்போது அழமட்டுமே முடிந்தது ஆனாலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “

 

சற்று நேரம் வரைக்கும் யோசித்தபடி இருந்தவள் வேகமாக மோகனின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அட்டென் செய்தவனிடம் “நான் உங்ககிட்ட பேசணும் மாமா அங்கே இருக்கற பிள்ளையார் கோவிலுக்கு இப்போது உடனே வாங்க நான் அங்கே உங்களுக்காக காத்துட்டு இருப்பேன் என்றபடி கட் செய்தவள் இரண்டில் ஒன்று என்ன என்பதை இன்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனக்கு நேராக கோவிலுக்கு புறப்பட்டாள் செல்வி…”

 

அருகில் சென்ற பெரிய வாய்காலில் தண்ணீர் நிறைந்துஒட்டிக்கொண்டு இருக்க அதற்கு அருகில் ஆவமரத்தடியில் அமைதியாக அமர்ந்து இருந்தார் அந்த பிள்ளையார்…சற்று தொலைவில் இவனின் வருகைக்காக நகம் கொறித்தபடி காத்திருந்தாள் செல்வி…”இது வரையிலும் அதிகமாக பேசியணு கிடையாது.  பார்க்கும் போது ஒரு சின்ன சிரிப்போடு கடந்து செல்பவன் தான் ஆனால் இன்று இவள் பேசும் போது என்ன பதில் சொல்லப்போகிறானோ என்ற தவிப்பு நிறைய இருந்தது அவளுக்கு…”

 

சொன்னது போலவே சற்று நேரத்தில் எல்லாம் வந்து சேர்ந்திருந்தான் மோகன். “என்ன செல்வி ஏன் கூப்பிட்ட வீட்டுக்கு வரவேண்டியது தானே ஏன் இங்கே வரச்சொன்ன என்ன கேட்டான்.”

 

“மாமா வீட்டுக்கு அத்தையும் உங்கள் அப்பாவும் வந்துஇருந்தாங்க அவங்க சொன்னது உண்மையான மாமா…அப்போ இத்தனை நாள் சொன்னது பொய்யா எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து உங்களுக்கு நான் எனக்கு நீங்கன்னு தானே பேசிட்டு இருந்தாங்க இப்போது வேற பொண்ண பார்க்கறேன்னு சொல்லறது எந்த வகையில் நியாயம் எனக்கு பதில் சொல்லுங்க மாமா…நீங்கள் இல்லாமல் என்னால வாழ முடியாது உங்களுக்கு புரியுதா இல்லையா…இது வரைக்கும்நான் உங்கள் கிட்ட சொன்னது இல்லை அதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்து இருக்க வேண்டாம். “

 

“செல்வி எனக்கும் எதுவும் தெரியலை செல்வி…இப்பதான் சொன்னாங்க நானும் அவங்ககிட்ட சண்டை போட்டுட்டுதான் வந்து இருக்கறேன். ஸாரிஉன்கிட்ட சொன்னது இல்லை ஆனாலும் எனக்கு உன்னை பிடிக்கும். “

 

“எனக்கு தெரியும் மாமா உங்களுக்கும் என்ன பிடிக்கும்ன்னு இப்போது என்ன செய்விங்க நீங்க ஒரு வேளை எனக்கு கிடைக்கலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் இதை மட்டும் மனதில் வச்சிக்கோங்க…”

 

“பைத்தியம் மாதிரி உளராதே நான்  உன்கிட்ட சொன்னேனா…வீட்டில் எப்போதாவது பேசினாங்கன்னா  நீ இப்படி சொல்லுவியா…”

 

“உங்களுக்கு தெரியாது மாமா காலையில் வந்தவங்க ரெண்டு வேன் சொல்லி இருக்கு ரெண்டு பேரும் புறப்பட்டு வந்திடுங்கன்னு சொல்லிட்டு போறாங்க இதை சொல்லும் போது அழைத்து ஆரம்பித்து இருந்தாள் செல்வி…”

 

“ப்ளீஸ் அழாதே செல்வி என்னால பார்க்க முடியலை இப்ப சொல்லறேன் கேட்டுக்கோ கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தால் அது உன் கூட தான் இதை மறந்திடாதே இன்றைக்கு போனது வேணும்னா எதிர் பாராமல் நடக்கலாம்  கல்யாணம் என்ன இஷ்டப்படி தான் நடக்கும் உன் பேல் சத்தியம் அழாமல் போ நான் இருக்கிறேன் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”

 

“உன்னை நம்பிதான் இப்போது போறேன் மாமா என்ன தவிர்த்து வேற யாரையாவது கல்யாணம் பண்ணின என்னோட இறப்பு செய்தி தான் உன் காதிற்கு வரும் என்றபடி அவனது கைக்குல் இருந்த தனது கையை உறுவிக்கொண்டு வீட்டை நோக்கி அழுதபடி வேகமாக ஒடி இருந்தாள்.”

 

“வீட்டிற்கு வந்தவனால் எதையும் யாரிடமும் பேச முடியவில்லை அப்போதே அருகில் இருந்த சொந்தங்கள் வந்து இருந்தனர் எதுவுமே கூறாமல் சட்டையை அணிந்து கொண்டு தோட்டம் வரைக்கும் போயிட்டு வரேன்மா எனக்கு புறப்பட்டு வந்து இருந்தான். புறப்படுவதற்கு சற்று முன்புதான் மறுபடியும் வீட்டிற்குள் நுழைந்தான்.”

 

“இவனது அத்தை வீட்டில் இருந்து இரண்டு பேருமே இங்கே வந்திருக்கவில்லை காலையுயில் தந்தை, தாயிடம் பேசியதை வந்தவுடனேயே இவனது தாயார் இவனிடம் சொல்லி இருந்தார்..”

 

“செல்வியல நினைத்து பார்த்தவனுக்கு வருத்தமாக இருந்தது எப்படியும் தணியாக அங்கே அவளது ரூம்பில் அழுதுகொண்டு இருப்பாள் என்ற எண்ணமே மனம் முழுக்க வியாபித்து இருந்தது. ஏதோ ஒரு சட்டையை அணிந்தவன் தன்னை ஒரு முறை கூட கண்ணாடியில் பார்க்காமல் ஏனோ,தானோ என்று புறப்பட்டு இங்கே பெண் பார்க்க வந்து இருந்தான்.”

 

இது எல்லாமே  அவனது கவனத்தில் வர… இருக்கும்  இடமோ,சுற்றிலும் கேட்ட சத்தமோ எதுவும் அவனது கவனத்தை கவரவில்லை. சக்தியின் கையில் ஃகாபியை கொடுத்து அனுப்பி இருந்தனர் அவர்களது வீட்டில் வந்து இருந்த மாப்பிள்ளை உறவினர்களுக்கு கொடுத்தவள்,மோகனின் தாய்,தந்தைக்கும் கொடுத்து விட்டு மோகனுக்கு கொடுக்க அவன் எதிரில் வந்து நின்றிருந்தாள் சக்தி. 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அருகில் இருந்தவர் மாப்பிள்ளை ரொம்ப நேரமாக பொண்ணோட  முகத்தை பார்த்துவிட்டு இருக்கறிங்க கையில் கொண்டு வந்து இருக்கற ஃகாபியை வாங்குங்க அப்புறமாக பார்ப்பிங்கலாம் என்ன அருகில் இருந்தவர் இவனை லேசாக உழுக்க…அதை தொடர்ந்து கேட்ட சிரிப்பலையோடு எதிரில் நின்றிருந்த சக்தியை நிமிர்ந்து பார்த்தான்”.

 

இரண்டாவது முறைமாக” ஃகாபியை எடுத்துக்கோங்க என சங்கீதமாக ஒலித்த சக்தியின் குரல் இப்போது காதில் தெளிவாக விழுந்தது கூடவே சுற்றிலும்  கேட்ட சிரிப்பொலிக்கு நடுவில்..நிமிர்ந்தவன் சக்தியின் முகத்தை பார்த்தபடி ஃகாபியை எடுத்தான்…எடுத்தவனின்  கண்கள் சக்தியை மட்டுமே பார்த்தது…மோகனின் கண்களில் முழுக்க முழுக்கஅப்போது  இருந்தது பிடித்தமின்மை மட்டுமே …”

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!