Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 23

EPI-23

 

வீட்டினர் அனைவரும் மதுவை சுற்றி நிற்க அழுகையுடன் நிமிர்ந்தவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரிய வில்லை .தனிமையில் பூதாகரமாக தெரிந்தது இப்போது ஒன்றும் இல்லா விஷயமாக தெரிந்தது.

எல்லோரையும்  பார்த்து பார்த்து மலங்க மலங்க விழித்தவளை காவேரி ‘என்னடா மது என்று ஆதுரமாக கேக்க”



Advertisement

“ச்ச்ச சரியான லூசுடீ நீ  இந்த அய்யனார் சொல்ற மாதிரி நீ இன்னும் சின்ன புள்ள தான் போல ,என்று சங்கடமாக சக்தியை நிமிர்ந்து பார்க்க ,

ஒரு சின்ன விசயத்துக்கு எதுக்கு இப்படி சீன் போடுறா, என்று எரிச்ச்சலுடன் அவளை பார்த்தான்.ஹீ ஹீ என்று சிரித்தவள் .”இல்ல அம்மா……..  இவ்வளவு நாள் கூடவே இருந்துட்டு இப்போ திடீர்னு ஊருக்கு போறிங்களா ,அதான்  அழுதுட்டேன்.”

 

Advertisement

“இது ஒரு விஷயமா,அம்மாவை பிரியறது கஷ்டமா இருந்தா ,  நீ வேணும்னா ரெண்டு நாள் அவ கூட  ஊருக்கு போயிடு  வா  “என்று  விட்டு சென்றனர் இரு மாமாக்களும் .

Advertisement

 

மதுவும் சரி என்று தலை அசைத்து விட்டு  பரிமளாவை அங்கே அமர வைத்து அவர் மடியில் தலை வைத்து  விழிகளை மூடினாள் .  சக்தி அவளை ஒரு பார்வை பார்த்துட்டு வீட்டினுள் நுழைந்து விட்டான் .

மதுவின் அருகில் அமர்ந்த மனோ” மது என்மேல  கோவமா இருக்கியா “என்று அவளின் கை பிடித்து  கேக்க, அவனை பார்த்து புன்னகைத்தவள் .ஆமாயென்று  தலையசைத்து பின்பு இல்லை என்று  அசைத்தாள் .

Advertisement

“யேய்  ஏதாவது ஒரு பக்கம் ஆட்டு  லூசு,சரியான அழுமூஞ்சி  “என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்ட ,  தாயின் மடியிலிருந்து வேகமாய் எழுந்தவள்.  “டேய் நீதான் அழுமூஞ்சி” என்று அவனை அடிக்க பாய, அவன் ஓட  சிறிது நேரத்தில் அந்த இடம் கலவர பூமியாக மாறியது .

“என்ன தான் மத்தவங்க பாசமா இருந்தாலும் ஒரு  கஷ்ட்டம்னா , பொண்ணுங்க அம்மாவை தான் தேடுறாங்க “என்ற காவேரியை பார்த்து,

அது உண்மை தான் என்றாலும் தமிழினியையும்,மதுவையும் காவேரி  தன் சொந்த பெண்களாக பார்க்கும் ,காவேரியின் மனதை காயப்படுத்த விரும்பாமல் ஒரு சங்கட புன்னகையை கொடுத்தனர் பரிமளா,கங்கா இருவரும் .

மதுவும் அந்த நேரத்தில் தன் தாயை பார்க்காமல் தன் அத்தைகளை  பார்த்திருத்தால் ஒரு புன்னைகையோடு  கடந்து சென்றிருப்பாள் .

வெளியில் சொல்ல வில்லை என்றாலும் காவேரிக்கு மனம் கஷ்டமாக இருந்தது. மது இதுவரை எந்த கஷ்டத்தையும் தன்னோடு பகிர்ந்த்ததில்லை. இவர் வாய் விட்டு கேட்டாலும் ஒன்றும் இல்லை என்று கடந்து  சென்று விடுவாள் .அவளின் தாய் ஸ்தானத்தில் தன்னை வைத்து பார்க்க விலை போல ,

 

[the_ad id=”6605”]

 

 

உணவு நேரம் வந்ததும் அனைவரும்  அமர  வழக்கம் போல் கங்கா,காவேரி பரிமாற  மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். இதுவரை சக்தி மதுவோடு பேசவில்லை. தன்னுடன் அமருவாள் என்று சக்தி பார்த்திருக்க ,அவள் சென்று தன் தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள் .

சாப்பிட்டு கொண்டிருந்த  பரிமளவிடம் “அம்மா ஆ…”  என்று தன வாயை திறக்க, அவரின் பக்கத்தில் இருந்த யாழினிக்கூட சமத்தாக தானே சாப்பிட்டு கொண்டிருந்தது.அவளை திட்ட தோன்றினாலும் மாலை அவள் அழுந்த அழுகையை நினைத்து அமைதியாக  ஊட்டி விட்டார்.

இரண்டு வாய் கூட சரியாக உன்ன வில்லை.” அம்மா உனக்கு எப்டி ஊட்டனும்னு  தெரிலை .இதுல நெறய ட்ரிக்ஸ் இருக்குமா ” என்றவள்  தானே சாப்பிட ஆரம்பித்தாள்.

பரிமளா அடிப்பாவி என்று  அவளைப்பார்க்க ,சக்தி நமட்டு சிரிப்போடு தன் அத்தையை பார்த்து வைத்தான் .

உண்டு முடித்ததும் அர்ஜுன்,மனோ,யாழினி ,பரிமளா  ஊருக்கு செல்ல அவர்களை பஸ்டாண்டில் விட  சக்தி கிளம்பினான் . அவர்களோடு மதுவும் கிளம்பலாம் .யென்று    தன்னறையில் உடை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் .

சக்தி அவள் எடுத்து வைத்த உடையை பிடுங்கி வீசியவன்.” நானும் பாத்துட்டே இருக்கேன்.  நீ ரொம்ப பண்றடி ,ஒழுங்கா படுத்து துங்கற ,நான் போய் அவங்கள அனுப்பிட்டு வரேன்.”

“ஹலோ நான் ஒன்னும் ரொம்ப பண்ணலை .நீங்க தான் ரொம்ப பண்றீங்க,” என்று தன் கோழி முட்டை கண்ணை உருட்டி சிலிர்த்து சண்டைக்கோழியாய் நின்றவளை பார்த்த சக்திக்கு  அவளை இழுத்து அனைத்து ஏதேதோ செய்ய வேண்டும் போல் இருந்தது .

‘அடியே !!1என்முட்டை கண்ணி  கொஞ்சம் அடக்கிவாசி  கீழே கேற்ற போது,நான்     போய் டுவரேன் . அதுக்கு அப்புறம் நம்ம சண்டையை வச்சிக்கலாம்.

அதுவரைக்கும் நல்லா தூங்கிக்கோ இன்ணைக்கு நைட் உன்ன தூங்க விட்றதா எனக்கு ஐடியா இல்ல சரியா ,”என்று கண் சிமிட்டி கேக்க ,

சக்தியின் கேள்விக்கு மது தன்னையே அறியாமல் சரி என தலை ஆட்ட ,சக்தி தன்னவள்   நெற்றியில்   தன்  இதழை  பதித்தான் .அவன் ஸ்பரிசம் பட்டதில் கிறங்கி போய் கண்மூடி நின்றவளை  இறுக்கி அணைத்து விடு வித்தவன்.

” சமத்து  டி  கொஞ்ச நேரம் இப்படியே !1இரு மாமா சீக்ரம் வந்துறேன்.” என்று  இவளின் கன்னம் தட்டி விட்டு சென்றான் …..

அவன் சென்ற கொஞ்ச நேரம்  கழித்து  சுய உணர்வு  வர , அடப்பாவி  ஏதேதோ பேசி என்ன டைவர்ட்  பண்ணிட்டு போய்ட்டானே ……   இந்த ஐயனார் இப்படி பேசினா தப்பு இல்ல ,நான் பேசினா  மட்டும்  வயசுக்கு  தகுந்த மாதிரி பேசுனு சொல்றான்.

அவன் பேசினதுக்கு எல்லாம் சாரி கேட்டாதான் நான் பேசுவேன் .நான் அவன் மேல் கோவமா இருக்கேன்.என்று தன்  மூளைக்கு அறிவுறுத்த்தினாள்.அவனோடு தனித்திருந்தாலே  என் மூளை வேலை  செய்யாது .

என்று யோசித்தவள் .நேராக சென்று  “அத்தை எனக்கு மனசு சரில்லை,  உங்க கூட படுத்துகிறேன்.”  என்று காவிரியுடன்  படுத்துக்  கொண்டாள்.

மருமகள் கவலையை தன்னோடு பகிர்ந்து கொள்ளவில்லையே!!! என்று நினைத்தவர்  .இப்போது   மருமகள் தன்னை தேடி வரவும் “தாராளமா படுத்துகோடா” என்றுவிட்டார் .

வீட்டிற்கு வந்த சக்தியை  மது இல்லை காலி அறை தான் வரவேற்றது .தண்ணீர் எடுப்பது போல் கீழே வர , தன்  அன்னை உடன் படுத்திருந்தவளை கண்டு ஒரு பெருமூச்சோடு அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.

 

என்றும் போல் இன்றும் சூரியபகவான் தன் பணியை செவ்வனவே செய்ய,

கடந்த திணங்களில்  சரியாக  துயில்  கொள்ளாததால் சக்தி  சற்று நேரம் கழித்து கண்விழிக்க ,அதற்குள் மது  கல்லூரி  கிளம்பி விட்டாள் .

கீழே வந்தவன் “மது எங்கம்மா”

“அவளுக்கு ஏதோ ஸ்பெஷல்  கிளாஸ்  ஆம்  .அதான் சீக்ரம் போய்ட்டா, “சென்ற நாட்களில் இருந்து இருவரும் தனி தனியாய்  செல்வதால்  வீட்டினருக்கும் எதுவும் சந்தேகம் தோன்ற வில்லை .

 

சக்திக்கு இப்போதும் புரியவில்லை,அவளுக்கு எந்த ஸ்பெஷல் கிளாஸ்சும் கிடையாது  என்பது இவனுக்கு தெரியும் ,நைட் நான் போறதுக்கு முன்னாடி நல்லா தான் இருந்தாள். அதுக்குள்ள  எதுக்கு இப்படி  லூசு மாதிரி  பண்றா ,என்றவன் அவளுடைய என்னிற்க்கு அழைக்க  அதை அவள் எடுக்கவே இல்லை .

 

இன்று நிஷா  கல்லூரியில் பொறுப்பு ஏற்பதால்,ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தனர் அதனால் சீக்கிரம் கல்லூரிவந்து சேர்ந்தான்.பிரவீன்  விழாவின் பொறுப்பை ஏற்றிருக்க  சக்தி ஓரமாக அமர்ந்திருந்தான் .பின் ஒரு பெரிய மனிதர் நிஷாவை இந்த  கல்லூரியின் முதல்வர் என்று அறிமுகப்படுத்தி ,சக்தியை  துணை முதல்வர் என்று அறிமுகப்படுத்தினார் .

 

அங்கிருந்த மாணவர்கள் ,ஆசிரியர்கள்  எல்லாம்  மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க  சக்திக்கு இது புது செய்தி என்பதால் அதிர்ச்சியாய்  பார்த்திருந்தான்.

அனைவர்  முன்னும் சக்தியை மேடைக்கு  அழைக்க  மறுத்து பேச முடியாமல்  மேடை ஏறினான்.

விழா முடிந்ததும்  நிஷாவை கேக்க,”நீங்க இங்க இருக்க வரைக்கும் இந்த  போஸ்டிங்ள இருந்துட்டு போங்க சார் .”என்று விட்டாள் .

 

[the_ad id=”6605″]

 

 

 

மதுவின் பழைய  HOD லீவ்  முடிந்து வந்து விட்டதால் சக்தி மதுவின் வகுப்பிற்கு  செல்ல முடியாமல் போய் விட்டது .

 

மதுவிற்கு  தன் தோழிகள்  மூலம்  சதிஷ்,தினகரன் விஷயம் தெரிய வந்தது .காவியா பற்றி தெரிய வில்லை என்றாலும் சக்தி தான்  அவர்களை பற்றி தெரிந்து போலிஸில் பிடித்துக் கொடுத்ததாக  தகவல் கசிய , அனைவராலும் சக்தி அந்த கல்லூரியின் ஹீரோவாக பார்க்கப்பட்டான் .

மதுவிற்கு இந்த விஷயம்  தெரிந்ததும்,தன்னை வைத்தே  ஆதாரங்களை திரட்டி விட்டு அவன் தன்னிடமே சொல்லவில்லை .அப்போ அவனின் மனதில் தனக்கான  இடம் தான் என்ன ,என்று சக்தியின் மேல் இருந்த  கோபம் இன்னும் அதிகம் ஆனது .

 

அவன் மேல் கோபமாக இருக்கிறேன் .என்று அன்றய நாள் முழுமைக்கும்  அவனையே நினைத்து  கொண்டிருந்தாள்.எப்போதும் போல் கல்லூரி முடிந்து பேருந்தில் சென்று மெய்ன் ரோடில் இருந்து தன்  ஸ்கூட்டியில் வீடு திரும்பினாள் .புதிதாக பொறுப்பு ஏற்றதால்  சக்திக்கு நிறைய வேலை இருந்ததால் .

 

வீடு வர மணி ஒண்பது ஆகி  விட்டது.காவேரி மதுவை சாப்பிட அழைக்க,”படிச்சிட்டு   அப்புறம்  சாபிட்றேன்” என்றதும் சக்தியுடன் இணைந்து சாப்பிடுவாள் ,

என்று விட்டு விட்டார் .சக்தியும் வீடு வந்ததும்  போர்டிகோவில்  அமர்ந்து படித்து கொண்டிருக்கும்

மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு தான் சென்று குளித்து  முடித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான் .

திருப்பதி உணவு உண்டதும்  ஒரு வேலையாய் வெளியில் சென்றிருக்க,காவேரியும் சாப்பிட்டு முடித்து இவர்களுக்கு தனிமை குடுக்க எண்ணி,மகனிடம்” மது இன்னும் சாப்பிடலை “என்று விட்டு    கங்கா வீட்டிற்கு சென்று வீட்டார் .

உணவை தட்டில் பரிமாறி, படித்து கொண்டிருக்கும் மனைவியின் அருகில்  சென்று  ஊட்டுவதற்காக  ஒரு கவளம் இட்லியை  அவளிடம் நீட்ட,வேண்டாம் என்று தலை அசைத்தாள் .

“இங்க பாருடி பப்ளி செல்லம். உனக்கு என் மேல  ஏதோ கோவம்னு புரியுது ,நானும் உன்கிட்ட பேசணும் .நாம சாப்பிட்டு  அப்புறம்  பேசலாம் பயங்கரமா பசிக்குது…டீப்ளீஸ்…  என்று மறுபடியும் ஊட்ட போக ,

வேண்டாம்  என்று  அவன் கையை தட்டி விட போக தவறி உணவு தட்டையும் தட்டி விட்டு விட்டாள்.தட்டு ஒரு  மூலையிலும் இட்லி ஒரு மூலையிலும் சென்று விழுந்தது.

அவ்வளவுதான்  சக்திக்கு வந்த  ஆத்திரத்துக்கு மதுவை என்ன செய்திருப்பானோ

வெளியில் சென்ற திருப்பதி வீடு திரும்பிட,அவரை கண்ட  காவேரியும்  வீடு வர

இருவரும் இந்த காட்சியை கண்டு விட்டனர்.

சக்தி   ஆத்திரத்தோடு  மதுவை நெருங்கிய சமயம்  காவேரி இருவருக்கும் இடையில் நுழைந்து விட்டார்.

மதுவிற்கும் தெரியும் அவர்கள் வீட்டில் உணவை தெய்வமாக பார்ப்பர்.தவறுதலாக ஒரு துளி  கீழே சிந்தினாலும்

காலால் மிதி படும் முன் துடைத்து விடுவர்.

ஒவ்வொரு பருக்கை சாதத்திற்கும்  தேவையான அரிசியை  உற்பத்தி செய்ய விவசாயிகள் படும் கஷ்டத்தை ஒரு விவசாயின் மருமகளாகவும் ,

மனைவியாகவும் அவளும் தானே பார்க்கிறாள் .

“ச்ச்ச” என்று  கையை  சுவற்றில் குத்தியவன். ” அம்மா  நான் தோட்டத்து வீட்டுக்கு போறேன்”

என்று விட்டு  வண்டியை கிளப்பி கொண்டு சென்று விட்டான்.மது தான் குற்ற உணர்வில்

‘அது…அத்..த.. நான் …வேணும்னு…பண்ணல…”என்று திக்கி திணற,

“தெரியும்டா  நீ வேணும்னு பண்ண  மாட்ட ,

இருந்தாலும் இனி இப்படி பண்ணக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறியவர் .மகன் சாப்பிடாமல் போய்ட்டான் என்று கவலை உடன் வீட்டினுள் நுழைந்து கொண்டார் .

மது தன் மாவை பார்க்க .அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவர்  .எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார் .

 

தட்டு விழுந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு  அறையில் நுழைந்தவளுக்கு  “பயங்கரமா பசிக்குது டீ’  என்ற சக்தியின் குரலே கேட்டது .அவன் பர்ஸ்,மொபைல் எல்லாம்  ரூமில் தான் இருந்தது .

அப்படியே படுக்கையில் சாய இவளிற்கும்  பசிக்க ஆரம்பிக்க  அப்படித்தானா அவங்களுக்கும் பசிக்கும்.  அவங்க பசியை பாக்கமா ,நமக்கு தான ஊட்ட வந்தாங்க, இப்படி பண்ணிட்டோமே !!!

பாவம் ச்ச் ,அவனை கோச்சிக்கரமே அவங்கள   பற்றி உனக்கு என்ன  தெரியும்  என்று யோசிக்க   சாதாரனமாக அவனுக்கு பிடித்த  கலர்  என்ன, என்று கூட அவளுக்கு தெரியவில்லை.அனால் அவனுக்கு…….. எப்டி ஊட்டினால் தனக்கு பிடிக்கும் என்பது வரை அத்துப்படி .

ஒரு மனைவியா நீ அவங்களுக்கு எதுவும் செய்தது இல்லை .கடைசியில்  பசியில் இருந்தவனை சாப்பிட விடாமல் தொரத்தி விட்டுட்டியே !!என்று தோன்றவும் .

அவளால் அறையில் இருக்க முடிய வில்லை .பின்பு ஒரு முடிவு எடுத்த்தவளாய்   வருவது வரட்டும் என்று  சமையலறை சென்று ,இருவருக்கும் உணவை டிபன் பாக்ஸில்  வைத்து  எடுத்து கொண்டு  காவேரியிடம்  தோட்டத்திற்கு  செல்வதாக சொல்லிவிட்டு  எங்கே அவர் மறுத்து விடுவாரோ !!!என்று அவர் பதில் பேசும் முன்னே  ஓடி சென்று  தன் ஸ்கூட்டியை  எடுத்து கொண்டு பறந்து விட்டாள் .

காவேரி ” மது” என்று  அழைத்தது  அவள் காதில் விழவே இல்லை .பதறிய காவேரியை சமாதானப்படுத்திய திருப்பதி ,

 

[the_ad id=”6605″]

 

 

 

“புருஷன் ,பொண்டாட்டி  குள்ள அப்பா அம்ம்மாவா இருந்ததாலும்  நாம மூனாவது மனுசங்க தான்  .

எப்போ பாரு நாமளே பஞ்சாயத்து பன்ன முடியாது அவங்களுக்கான டைம்   குடு அவங்க பிரச்சனையை அவங்களே  தீர்த்து பாங்க,

நீ யாரோ நான் யாரோன்னு  இருந்தவங்க இப்போ ஒருத்தவங்களுக்காக  மத்தவங்க

உருகுற அளவுக்கு வந்துட்டாங்க, இல்ல.. அப்புறம் என்ன விடு  ” என்று விட காவேரியும் அது தான்  சரி என்று அமைதியாகி விட்டார் .

வண்டியில் சென்று கொண்டிருந்த மதுவின் மனம் .நாம பாட்டுக்கு ஏதோ அவசரத்துல  வந்துட்டோமே!!!  இந்த அய்யனார் ஏற்கனேவே கோவமா  இருக்கான் .நம்மளை என்ன பண்ண போறானோ!!

அவன் என்ன சொன்னாலும் சண்டை போடகூடாது. அடிச்சாலும் அமைதியா இருக்கனும்  என்று முடிவெடுத்தது .

 

உணவோடு  வந்த மனைவியை  அடிக்க போகிறானோ அணைக்க போகிறானோ பொறுத்து  இருந்து பார்ப்போம் .

 

மொழி தொடரும் ……..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!