Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi avalUncategorized

காவலனின் கைதி அவள் -18 (2)

காவலனின் கைதி அவள் -18 (2)

மனு, ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு! நான் பண்ணுனது தப்புதான், என்னை பாரு“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து.

 

நீ சொல்றத நான் கேக்கணும்? நான் சொல்றத நீ கேட்குறீயா?”, என்று  அவள் கையை எடுத்து விட்டான்.



Advertisement

 

நான் பண்ணது தப்புதான் மனு. அதுக்கு எதுக்கு வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் கோவத்த காட்டுற? அவங்க பாவம்“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையைப் பிடித்து.

 

Advertisement

எனக்கு தெரியும் உன் வேலைய பாரு. என் ரூமுக்கு எதுக்கு வந்த? முதல்ல வெளிய போ. நான் செம்ம கோவத்துல இருக்கேன், மறுபடியும் அடிவாங்காத“, என்றான் கோவமாக.

Advertisement

 

மனு, ப்ளீஸ்! உனக்கு என் மேல தானே கோவம் என்னைய அடிச்சுக்கோ“, என்று அவன் இருக்கையையும் எடுத்து கன்னத்தில் அடித்துக் கொண்டாள்.

 

Advertisement

விக்ரம் கோவமாக அவளையே பார்த்தான். ப்ளீஸ் மனு பேசு, அடிச்சுக்கோ இப்படி நீ இருந்தா, எனக்கு உன்ன பாக்கவே பயமா இருக்கு. நீ நார்மலாகுற வரைக்கும் அடிச்சுக்கோ“, என்றாள் அழுகையுடன் அடித்துக் கொண்டே.

 

விக்ரம் அவள் இரு கன்னத்திலும் கையை வைத்து இழுத்து இதழை சிறை செய்தான். மிரு அதிர்ந்து திமிறினாள். விக்ரம் அவளை ஒரு கையால் அடக்கி தன் மொத்த கோபத்தையும் அவள் இதழில் காட்டினான்.  மிருணா ஓய்ந்து போய் கீழே விழப்போனாள். அவளை தன் மார்பில் புதைத்துக் கொண்டான் .

 

 

சிறிது நேரம் கழித்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான். கண்கள் சொருகி உதட்டின் ஓரத்தில் லேசாக இரத்துடன் அவனைப் பார்த்தாள். விக்ரம் மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தான். மிருணா பயத்துடன் பதறி எழுந்து உட்கார்ந்தாள். விக்ரம் டம்ளரில் இருந்த நீரை எடுத்து குடிக்க வைத்தான்.

 

ஸ்…”, என்றாள் வலியில்.

 

விக்ரம் டம்ளரை வாங்கி வைத்துவிட்டு, ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து பஞ்சால்  ரத்தத்தை  துடைத்தான்... வலிக்குது“, என்றாள் வலியுடன்.

 

விக்ரம் லேசான சிரிப்புடன் அவள் காலைத் தூக்கி மடியில் வைத்தான். என்ன பண்ற மனு?”, என்று காலை உருவிக் கொண்டாள்.

 

அமைதியா இருடி“, என்று இழுத்து அவள் பெருவிரலில் அடிபட்டு ரத்தம் படிந்திருந்த காயத்தை துடைத்து மருந்து போட்டு விட்டான்.

 

எனக்கு காலுல அடிபட்டது எப்படி தெரியும்?”, என்றாள் குழப்பமாக.

 

நா உன்ன கார் உள்ள தள்ளும் போது தான் உனக்கு அடிபட்டுச்சு. அதக்கூட கவனிக்காம இருந்திருக்க“, என்றான் முறைப்புடன்.

 

எல்லாம் உன்னால தான்“, என்றாள் கோபமாக. 

 

[the_ad id=”6605″]

 

 

விக்ரம் எழுந்து பக்கத்தில் வந்து உட்கார்ந்து, அவள் முகத்தில் இருந்த மூடியை ஒதுக்கி, காதுக்குப் பின்னால் சொருகினான். மிருணா கூச்சத்தில் நெளிந்தாள்‌. விக்ரம் லேசான சிரிப்புடன், அவன் விரல் பட்டு இருந்த கன்னத்தை வருடினான். ஏன்டி இப்படி கோவப்பட வைக்கிற? நீ வெளியில்ல  போனதுனால எத்தன பிரச்சன வரப் போகுதுன்னு தெரியல. ஆசையா பாக்க ஓடி வந்தவன இப்படி உன்னையே அடிக்க வச்சுட்டியேடி“, என்றான் வருத்தமாக.

 

எனக்கு அந்த டைம்ல மூளை வேலையே செய்யல. சங்கவி அழுகவும் எனக்கு வேற எதுவும் தோணல“, என்றாள் வருத்தமாக.

 

[the_ad id=”6605″]

 

 

 

என்னால நீ சொல்றத புரிஞ்சுக்க முடிஞ்சாலும், உன் மேல உள்ள கோவத்த கட்டுப்படுத்த முடியல. சாரி டி! ரொம்ப வலிக்குதா?”, என்றான் வருத்தமாக.

 

இல்ல, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பப்பா.. இன்னும் ரெண்டு அடி விழுந்திருந்தது, என் பல்லு கொட்டி இருக்கும்போல. என்ன அடி!”, என்றாள் லேசான கோபத்துடன்.

 

விக்ரம் அவளை அணைத்து,சாரி டி குட்டிமா“, என்றான் வருத்தமாக.

 

இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு“, என்றாள் பொய்யான கோபத்துடன்.

 

என்ன?”, என்று விலகி அவள் முகத்தை பார்த்தான்.

 

இரு இரு சொல்கிறேன்“, என்று நகர்ந்து உட்கார்ந்து, என்னைய ஒரு நாள் முழுக்க ஊர் சுத்த கூட்டிட்டு போகணும்“, என்று மறுபக்கம் வேகமாக இறங்கி ஓடினாள்.

 

உன்னஇருடி“, என்று துரத்தினான். சிறிது நேரத்திலே அவனிடம் மாட்டினாள். அவள் இடுப்பில் கை வைத்து இழுத்து,இதுக்கே உன்ன அடிச்சேன், இதுல ஊர் வேற சுத்தனுமாடி? இன்னும் அடி வேணும் போல“, என்றான் கிண்டலாக.

 

முதல்ல என்னைய விடு“, என்று கையை எடுத்துவிட பார்த்தாள். விக்ரம் சிரிப்புடன் அவள் தலையில் லேசாக முட்டினான்.என்னடா, என்னைய சிறைப்பிடிக்க பாக்குறியா?”, என்றாள் புருவம் உயர்த்தி.

 

ஏற்கனவே என் சிறையில தான் இருக்கீங்க மேடம்“, என்றான் சிரிப்புடன்.

 

.. விடு“, என்று நகர போனாள். விக்ரம் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். விக்ரமின் போன் அடித்தது. மிருணாவிடம் இருந்து விலகி அதை எடுத்தான்.

 

வாட்?”. 

 

……….

 

சரி, நான் உடனே கிளம்புறேன்“, என்று போனை வைத்துவிட்டு, ராகவ்ராகவ்…”, என அவன் ரூமில் உள்ள கதவின் வழியாக ராகவ் ரூமுக்கு சென்றான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

என்னடா?“, என்று வேகமாக வந்தான்.

 

நாம உடனே கிளம்பானும், பாஸ்ட்“, என்றான் வேகமாக.

 

நாம இப்ப தானே டா வந்தோம்“.

 

போற வழியில சொல்றேன்“, என்றான் அவசரமாக.

 

என்ன நடந்தது? எதற்காக உடனே கிளம்புகிறார்கள்? அவசரமாக கிளம்பி போகிறவர்களின் வழியில் ஆபத்து இருக்கிறதா?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்………………………….

 

கைதியின் சிறை தொடரும்…………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!