Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 21

 

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்

நீ என்னை நீங்கிச் சென்றாலே

வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்



Advertisement

நீ எந்தன் பக்கம் நின்றாலே

 

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்

Advertisement

பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்

Advertisement

நிஜம் உந்தன் காதலென்றால்

 

இனியன் கூறிய விஷயங்கள் எல்லாம் மனதில் உழன்று கொண்டு இருக்க….. 

Advertisement

 

“இலக்கியன் எப்படி அப்டி சொல்லலாம்… அவனுக்கும் இனியவளுக்கும் எந்த விதத்துல இணையா இருக்க முடியும்… எதுக்காக இப்டி பேசுறான் அவன்” கொதித்து கொண்டு இருந்தான் அன்பு 

 

“அவன் கேட்டதில் என்ன தவறு….ரெண்டு பேரும் நல்லா பழகுராக… ஒரு நல்ல புரிதல் இருக்கு… நல்லா பேசி பழகிக்குராக… அதில் என்ன தப்பு”என்றது மனசாட்சி… 

 

அதையும் ஏற்று கொள்ள முடிய வில்லை அன்பால்… யோசித்து யோசித்து அமைதியாய் கண் அயர்ந்தான் அன்பு 

 

மறுபுறம் சகுந்தலாவோ… முதலில் என்னை கேட்காமல் எப்படி இது நடக்கலாம் என்று எகிறினாலும்…..அவரை சமாதானம் செய்த மீனுவோ 

 

“விடுங்கமா… எப்படியோ அண்ணனும் இங்கயே இருக்கும்… அதை வச்சி நாமலும் இங்கயே இருந்துடலாம்…. நமக்கு தான் இப்போ இரண்டு உறவா ஆயிடுச்சி இல்ல” அவர் வழியில் சென்ரே அவருக்கு விளக்கம் அளித்தாள் மீனு… 

 

அதை கேட்டவர்… அதுவும் சரி தான்… பொண்ணை தான் கட்டி குடுக்க முடியல.. பையனாச்சும் இங்கயே இருக்கட்டும் என்று எண்ணி அமைதியாக…. அடுத்து நடந்த அணைத்து சடங்கிலும் மாப்பிள்ளையின் தாய் என்ற மிடுக்குடனே வளம் வந்தார்…. 

 

காலை எழுந்தவன்… இரவு இருந்த மன போராட்டம் சிறிது தளர்ந்து இருக்க…மனபாரம் சிறிது இறங்குவதாக எண்ணினான் அவன்… 

 

எழுந்தவன்… “இன்னைக்கு காயுக்காக விநாயகருக்கு பூஜை  வேற இருக்கு.. வேலை வேற நெறைய இருக்கு…இப்போவே லேட் ஆயிடுச்சி போலவே” என பரபரப்பாக கீழே இறங்கிவன் கண்ட காட்சி அவனிடம் அப்டியே உறைய வைத்தது… 

 

முற்றத்தின் நடுவில்… இனியவளை இடை வளைத்து அவளை வளைத்தார் போல்  பிடித்து கொண்டு நிற்கும் இலக்கியன் பட்டான்…. 

 

அனைவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலைகளை செய்து கொண்டு இருக்க… முற்றத்தில் இனியவள் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தாள்… 

 

மறுபுறமோ வாசலில் தோற்றங்களை கட்டி கொண்டு இலக்கியன் இருந்தான்… 

 

இனியவள் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு  இருக்க… அதில் கடுப்பான மீனு 

 

[the_ad id=”6605″]

 

 

“என்னோட அண்ணன் கல்யாணத்துல நீ யாருடி வேலை பாக்க…..அதுவும் தங்கச்சி நான் இருக்கும் போது… இடுப்பை ஓடிச்சி உக்கார வெச்சா தான் சரியா வரும்” அதே கோவத்தில் சாமிக்கு வைக்க பட்டு இருந்த எண்ணையை எடுத்தவள்…..சரியாக இனியவள் வரும் பாதையில் ஒற்றிவைக்க… 

 

அதில் கால் வழுக்கி விழ போனவளை தான் காப்பாற்ற இலக்கியன் அப்டி பிடித்து இருந்தான்…. 

 

ஆனால் இவை எதுவும் தெரியாதா அன்பிற்கோ “நேத்து எதோ விளையாட்டா சொல்லுறான்னு பார்த்தா… இப்டி நடு வீட்டுல இப்டி நின்னுகிட்டு இருக்காங்களே… இவளை பாரு… நேத்து வரைக்கும் என்னோட மனைவின்னு இந்த வீட்டுல சொல்லிட்டு… இவனோட எப்படி நிக்குறானு!!!” கொதித்தவன் 

 

அதே கோவத்தில் “பெருமாள் அண்ணா பெருமாள் அண்ணா எங்க இருக்கீங்க… பின்னாடி மாடு எல்லாம் கத்துது பாருங்க… போய் தண்ணீ காட்டுங்க” கத்தி கொண்டே அவர்களை தாண்டி சென்று விட்டான் 

 

அவனிடம் கவனித்தால் படி.. இனியவளை விட்டு விலகிய இலக்கியன்..”இவரு எங்களை பாக்கலையாம்…நாங்க இப்டி நிக்குறது அவருக்கு பிரச்சனை இல்லையாம்… அடேய் உன்னை உன்னோட வழியிலேயே வந்து பிடிக்கிறேன் பாரு” சிரித்து கொண்டு இருக்க 

 

“வீட்டுல இருக்க மாடுகளை எல்லாம் காலைலயே மேய்ச்சலுக்கு அனுப்பிட்டாக… அது தெரியாம மாடு கத்துது ஆடு முட்டுதுனு….காமெடி பண்ணிக்கிட்டு” மேலும் சிரிப்பு வந்தது அவனுக்கு 

 

விழ போனவளை பிடித்தவன்… அப்போதே அவளை விட்டு இருப்பான் தான்… சரியாக அந்த நேரம் பார்த்து வந்தான் அன்பு…அவனை கண்டவம் அவனை மேலும் வெறுப்பேத்த மேலும் அவளை பிடித்த படி நின்று கொண்டு இருந்தான்… 

 

 அவன் செய்யும் அனைத்தும் இனியவளுக்கு எதிராக அன்பிற்கு கோவத்தை வர வாழ்க்கைக்கும் என்பதை அறியாமல் இருந்தான் இலக்கியன்… 

 

பூஜைகளின் வேலைகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டு இருக்க..  அன்போ ஒரு புறம் “எப்போது வெடிக்கலாம்” என்ற கோவ தீயிலே இருந்தான்… 

 

அன்பின் அறையிக்கு எதிரே இருந்து போ சாரத்தை முற்றத்திற்கு தொங்க வைத்து கொண்டு இருந்தாள் இனியவள் 

 

அவளின் கவனம் முழுவதும் வேளையில் இருக்க… முடித்து திரும்பியவள் எதிரே வந்த அன்பின் மேல் மொத்த… 

 

இதற்காக காத்திருந்தவன் போல் “ஏய் அறிவில்ல…கண்ணு தெரியலையா… இப்டி வந்து இடிக்குற… பொண்ணு மாதிரி நடந்துக்கோ…..கொஞ்சம் கூட நாகரீகமே இல்லையா” பொங்கியவன் மேலும் தொடர்ந்து 

 

“ஆமாம் எதோ அக்கா இறந்துட்டாக.. மாமா இறந்துட்டாகனு எதோ சொல்லி அழுதுகிட்டு எல்லாம் இருந்த..  ஆனால் இப்போ உன்னை பார்க்க அப்டி தெரியலையே… ரொம்ப சந்தோசமா ஆடி பாடி சுத்திகிட்டு இருக்க”  என்றான் கோவமாய் 

 

அவன் பேசியதை கேட்டு கொண்டு இருந்தவள்… அவன் இறுதியில் கூறிய வார்த்தைக்கு கண்ணில் நீர் சுரந்து கொள்ள “உங்களுக்கு மத்தவங்க கிட்ட பேசவே தெரியாதா..  இல்லை என்னை உங்களுக்கு பிடிக்காத… அதனால எப்பயுமே என் மேல இப்டி எறிஞ்சி விழுறீர்களா? நானும் உங்க கிட்ட வராம ஒதுங்கி ஒதுங்கி போனாலும் நீங்களே வந்து தேவை இல்லாமல் ஏன் பேசுறீங்க” பதில் அளித்தாள் அதே கோவத்தில் 

 

இன்னொன்னு, நான் இங்க இருக்க வேலை எல்லாம் செய்யுறது காயுக்கும் விக்கிக்காகவும் தான்…அதனால நான் இங்க இருக்க வரைக்கும் தயவு செஞ்சி என்கிட்ட பேசாதீங்க”கை கூப்பிட உத்தரவிட்டே சென்றாள் 

 

செல்பவளையே பார்த்து கொண்டு இருந்த அன்பு “இவளை” என்பதை போல் பல்லை கடித்து கொண்டு நின்று கொண்டு இருக்க

 

இதை எதையும் அறியாத இலக்கியன்… அவ்வழி வந்து… அன்பை பார்த்து “என்னடா அண்ணா… அப்றம் அண்ணி எப்போ வராங்க… கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சிடுச்சு… சீக்கிரம் வர சொல்லு” என்றான் அன்பின் மனநிலை புரியாமல்…. 

 

“எந்த அண்ணியைடா” என்றான் பல்லை கடித்து கொண்டு 

 

“மீரா அண்ணியை தான்டா சொல்லுறேன்” என்றான் நக்கலாய் 

 

“தம்பி இலக்கியா… இது வரைக்கும் நீ என்கிட்ட அடி வாங்கி இருக்கியாபா” என்றான் இலக்கியன் தோல் மேல் கை போட்டு கொண்டு அவனை கழுத்தோடு இருக்கியா படி 

 

“இல்லடா… இல்லடா… விடுடா… வயசு பையன்… செத்து கித்து தொலைக்க போறேன்… எனக்கு எவ்வளவு கனவு இருக்கு தெரியுமா… வாலிப கனவை வீணாகிடுவ போல” அன்பிடம் இருந்து தன்னை விடுவித்த படி 

 

“இனிமேலும் அடி வாங்காம இருக்கணும்னா… இனிமேல் என் கிட்ட இப்டி எல்லாம் பேச கூடாது சரியா” என்றான் கிட்டத்தட்ட இலக்கியனை அடிக்கும் விதமாய்…. 

 

சிறிது நேரத்திலேயே அவனின் எச்சரிக்கை நிஜமாக போவதை இருவருமே அறிய வில்லை 

 

“வர வர…. இந்த வீட்ல மரியாதையே இல்லடா… கொழந்த புள்ள முன்னாடி ரொமான்ஸ் பண்றது… கொழந்த புள்ளைய அடிக்குறதுனு எல்லை மீறி போய்ட்டு இருக்கீங்க…பாத்துக்குறேன் உங்க எல்லாரையும்… எனக்குன்னு ஒரு தேவதை வருவா… அவ வந்த அப்றம் பேசிக்குறேன்” அங்கு நடந்தவை தெரியாமல் அவன் ஒரு போக்கில் போய்க்கொண்டு இருந்தான்…. 

 

சிறிது நேரம் அறையில் அமர்ந்து யோசித்தவனுக்கு… தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது நான்கு புரிந்தது..  மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று தீர்மானத்துடன் கிளம்பினான் அன்பு 

 

கீழே சென்று பார்க்க… பூஜை முடிந்து. வந்தா உறவினர்களுக்கு குங்குமம் கொடுத்து கொண்டு இருந்தாள் இனியவள்… 

 

அவளை நெருங்க முயற்சிக்க.. வேலுச்சாமி அன்பை அழைத்து “பின்னாடி தேங்காய் மூட்டை இருக்கு பாரு தம்பி… அதை சமையல் அறையில் கொண்டு போய் வை… உங்க அம்மா கேட்டுகிட்டு இருந்தாக” வேலையை சொல்லி விட்டு செல்ல… வேலையை முடித்து விட்டு இவளிடம் வருவோம் என்று சென்று விட்டான் 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் அங்கு நகர… கூட்டத்தில் இருந்த ஒரு பெண்… அவ்வழி போய்க்கொண்டு இருந்த செல்லம்மாவை அழைத்து “என்ன அக்கா… மருமக இல்லனு சொன்னீங்க… எல்லாம் வேலையையும் இழுத்து போட்டு பண்ணிக்கிட்டு இருக்கா… பேசாம இவளையே அன்புக்கு கட்டி வெச்சிடுங்க…பொண்ணும் பாக்க லட்சணமா தங்கமான பொன்னாத்தான் தெரியுது” வந்தவர் ஒரு பக்கம் எண்ணெய் ஊற்ற… 

 

“அட.. ஆமாம்… இது ஏன் நமக்கு முன்னாடியே தோணல.. அதான் அன்பு விரும்புற பொண்ணு காணோமே…. இவளையே கட்டி வெச்சிட்டா” தனக்கு தோன்றிய எண்ணத்தை ஜானகியிடம் கூற.. அவருக்கோ கொள்ளை மகிழ்ச்சி 

 

இனியவளை தன்னுடனே வைத்து கொள்ளலாம் என்ற ஆனந்தம் வேறு….. திடீரென அவரின் உற்சாகம் மறைய ” அண்ணி ஒரு வேலை அன்பு முடுயாதுனு சொல்லிடா… இனியவள் ஒதுக்காம போய்ட்டா… என்ன பண்றது? ” என்றார் குழப்பமாய் 

 

“அதெலாம் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க ஜானகி… ரெண்டு பேருக்குளையும் எதோ நடக்குது… அவுங்க பத்துக்குற பார்வை பார்த்த தெரியல” என்றார் உறுதியாய் 

 

“எதுக்கும் நம்ப அன்பு கிட்ட ஒரு வார்த்தை கெடுக்குவோம் அண்ணி” என்றவரை அவசரமாய் தடுத்த செல்லம்மாள் 

 

“நாம கேட்ட உடனே சம்மதம் சொல்லிடுவாங்க பாரு… அதெல்லாம் நாம கேட்டா ஒதுக்க மாட்டாங்க… அவுங்களே முதல்ல உணரணும்… உணர வெக்கணும்” என்றார் செல்லம்மாள், விளங்கமாய் 

 

அவரை புரியாமல் கேள்வி பார்வை பார்த்த ஜானகியை பார்த்தவர் “அதுக்கும் திட்டம் வெச்சி இருக்கேன்… திட்டம் எல்லாம் அவன் தான் பொதுவானா…. எனக்கு போட வராதா”என்றவர் அன்பை தேட 

 

அவனோ வீட்டின் பின் புறத்தில் இருக்கும் தேங்காய்களை கோணியில் போட்டு கொண்டு இருந்தனர் 

 

அவன் இருக்கும் இடம் கண்டு கொண்டு.. தாங்கள் பேசுவது அவனுக்கு கேட்கும் என்பதை உறுதி படுத்தி கொண்டு… ஆரம்பித்தனர் இருவரும் 

 

“என்ன அண்ணி எதுக்கு என்னை இங்க கூட்டிகிட்டு வந்தீங்க? ” என்றார் நாடகத்தின் முதல் படியாய் 

 

“சத்தம் போடாத ஜானகி… நம்ப மீனா அக்கா வந்தாக இல்ல…அவுங்க ஒரு யோசனை சொன்னாங்க…அதான் வீட்ல தேவதை மாதிரி ஒரு பொண்ண வெச்சி இருக்கீங்களே… அவளை அப்படியே வீட்டுக்கு மருமகளா ஆகிட வேண்டுவது தானேனு கேட்டாங்க” அன்பு இவர்களின் பேச்சில் கவனம் செலுத்துகிறானா என்று உறுதி செய்து கொண்டு மேலும் தொடர 

 

“இப்டி பட்ட பொண்ணு நமக்கு கிடைக்குறது கஷ்டம்… தாய் தகப்பன் சொந்தம் பந்தம்னு எதுவும் இல்லாதவ…தெரிஞ்சே இவ்ளோ நல்ல பொண்ண வெச்சிகிட்டி எதுக்கு வெளிய போகணும்… இன்னைக்கு இனியா கிட்ட பேசுறேன்… அவளுக்கும் சம்மதம்னா காயூ கல்யாணத்தோட இவங்களுதும் வெச்சிடலாம்” என்று முடித்தார் செல்லம்மாள் 

 

“ஒரு வேலை இனியவள் ஒதுக்களைனா என்ன பண்றது அண்ணி” இல்லாத சந்தேகதுடன் கேட்டார் ஜானகி 

 

எப்படி ஒதுக்காம போவா….அதான் ரெண்டு பேரும் நல்லா பேசிக்குராக… பழகுராக… வைஷு கூட நல்ல ஓட்டிகிட்டா அவனோட” உறுதியாய் கூறினார் செல்லம்மாள் 

 

முட்டையை தூக்கி கொண்டு அவ்வழி வந்தான் அன்பு… இவர்கள் பேச ஆரம்பித்ததில் இருந்தே அனைத்தையும்புண் முறுவலோடு கேட்டு கொண்டு இருந்தான் தான்…. இப்பொது எதுவும் தெரியாதவன் போல் அவ்வழி வர 

 

“ஆடு தானா வந்து சிக்குது பாரு”முணுமுணுத்தபடி பேச ஆரம்பித்தார் ஜானகி 

 

“என்ன அன்பு… இங்கயா இருக்க… நாங்க உன்னை கவனிக்கவே இல்லையே” என்றவரை பார்த்த செல்லம்மாவிற்கு 

 

“எப்பா என்னா நடிப்பு… பின்னுற போ ஜானகி” மணத்துக்குளேயே மெச்சி கொண்டார் 

 

“அண்ணி..  அதான் அன்பு இங்க இருக்கான் இல்ல.. அவன் கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுடலாம்… ஒரு வேலை முடிஞ்ச மாதிரி இருக்கும்” என்று ஜானகி மொழிய

 

“ஒன்னும் இல்லை தம்பி… இனியவளை நம்ப வீட்டு மருமகளா ஆக்கிக்கலாம்னு ஒரு யோசனைப்பா… இன்னும் இனியவள் கிட்ட பேசல… அதான் நீ என்ன நீ நினைக்குறனு சொல்லிட்டா… நாங்க அடுத்து ஆகவேண்டுயத்தை பார்ப்போம்” என்றார் வழி மொழிந்த படியே 

 

“அது வந்துமா… நானும் இதுவரைக்கும் இதை பத்தி யோசிச்சது இல்லை… ஆனால் நீங்க சொல்லுறீங்கன்னா யோசிக்குறேன்மா… ஆனால் எனக்கும் இனியவளுக்கும் எப்படி ஒத்து போகும்னு தெரியல…அதான்…. ” அவனை முடிக்கவும் விடாமல் இடை மறித்த ஜானகி 

 

“என்ன தம்பி சொல்லுற… உனக்கும் இனியவளுக்கும்னு நாங்க எப்போ சொன்னோம் ….. நாங்க இலக்கியன் இனியவளை பத்தி தானே பேசுறோம்.. ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் சூப்பர் இல்ல” பெருமிதமாய் கூறினார் ஜானகி 

 

“என்னாது!!!” என்றவனின் முகத்தில்… அதிர்ச்சியும்… அதிருப்தியும் நன்கு தெரிந்தது 

 

அதை கண்ட இருவருக்கும்… தாங்கள் திட்டம் வெற்றி என்று புரிந்து விட… விஷம புன்னகை புரிந்தவர்கள்… ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருக்கும் போது 

 

“இனியாக்கு போயும் போயும் இலக்கியனா” என்றான் அஷ்டா கோணத்தில் முகத்தை வைத்து கொண்டு

 

அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு… “ஆமாம் தம்பி… ஏன் இப்டி கேக்குறே” என்றார் ஜானகி 

 

“அவன் இப்போதான் படிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கான்… அவனுக்கு போய் எப்படி டாக்டர் பொண்ணை” இதெல்லாம் சரி வராதுமா என்றான் நேராக 

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி… நம்ப நிலத்துல உழவு பார்த்து… அப்டியே இங்கயே இருந்துடட்டும் ரெண்டு பேரும்… நான் பேசுறேன்.. இனியவள் கிட்ட” என்றவரை என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தவன்… வெறுத்து போனவனாய் அங்கு இருந்து சென்று விட்டான்…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

இதை அனைத்தையும் இவர்கள் பின்னால் இருந்து கேட்டு கொண்டு இருந்த இலக்கியன்… “அம்மா செமமா செமமா… என்னோட அம்மானு நிரூபிச்சிட்டமா… இனி அவன் வாயில இருந்து உண்மை வந்து தான் ஆகணும்” என்றான் உச்சாகமாய்… 

 

“எல்லாத்தையும் கேட்டுட்டியாடா” என்று முதலில் பயந்தாலும்… இலக்கியனின் பதிலே அவனுக்கு தங்கள் திட்டம் புரிந்து விட்டது என்பதை நான்கு விலக்கி விட்டது… 

 

“பாவம் அன்பு தான்… தலையை பிச்சி கொண்டு… அம்மாக்கு கூட இலக்கியனுக்கு இனியாவ கட்டி வெக்கணும்னு தோனி இருக்கு பாரு… ஹையோ நான் வேற இனியாவ திட்டிட்டேனே… அதனால ஒருவேளை சரின்னு சொல்லிடுவாளோ” என்ற யோசனையே அவனுக்கு பீதியை கொடுக்க… இரவு குலதெய்வ பூஜைக்கு செல்லும் வரை அறையை விட்டு வெளியே வர வில்லை அன்பு 

 

மயில் நிற புடவையில்… அழகாய் வந்து நின்றாள் இனியவள்… அவளை பார்த்த அன்பு சொக்கி போய் நின்று கொண்டு இருக்க… அதை கவனித்து வீட்டா இலக்கியன் 

 

“ஹை இலக்கியா. . நீயும் நானும் ஒரே கலர்ல டிரஸ் போட்டு இருக்கோம் என்றான்” அன்பிற்கு கேட்கும் வகையில்

 

அங்கு வந்தா வைஷு குட்டியோ… “நானும் ஒரே கலர்” என்றாள் திக்கி திணறி 

 

அவளை அன்போடு தூக்க வந்தா இலக்கியனை முந்தி கொண்ட அன்பு….. 

 

“என் கிட்டயும் வைஷு இருப்பா… நானும் பார்த்துக்குவேன்” காரமாய் பதில் அளிக்க 

 

“இனியவளை பார்த்த அன்போ நானும் கோவில் தான் போறேன்..  நீயும் அங்க தானே போகணும்.. வா என் கூட” கட்டளை இட… யோசித்தவளை பார்த்த வைஷு “அம்மு… வா போலாம்.. நாம கார்லா போலாம்… ஜாலியா” என்றது கை தட்டி கொண்டு 

 

இனியவளும் சரி என்று அன்புடன் செல்ல ஒத்துக்கொள்ள… அன்பின் கையில் வைஷு… வலது பக்கம் இனியவள் என்று மூவரும் ஒரு சேர செல்வதை கண்ட இலக்கியனுக்கு ஆனந்தத்தில் கண்ணில் நீர் வந்தது என்று தான் சொல்ல வேண்டும் 

 

அவர்கள் அழகை பார்த்து கொண்டே நின்று இருந்தவன் பின்னால் வந்த செல்லம்மாவும், ஜானகிகும் கூட ஆனந்த கண்ணீர் வந்தது தான் உண்மை… 

 

“நாம பாக்குறது உண்மையிலேயே நடந்துடனும்டா இலக்கியா…. என் புள்ள வாழ்க்கை இனி ஆச்சும் சந்தோசமா மாறனும்” கண்ணீர் வடித்த படி செல்லம்மாள் கூற… 

 

“மாறும்மா… கண்டிப்பா மாறும்… மாறலனா நான் மாத்தி  காட்டுவேன்” என்றான் கண்ணில் வழிந்த நீரை துடைத்த படி 

 

                  மாயம் தொடரும்…. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!