Aruna Kathirs en kaathal kanaa 18
என் காதல் கனா 18
சுஜினிக்கு, ஏன் சதீஷிற்குமே விவேக்கின் குரலைக் கேட்டு கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டிருந்தது. “ஏதேணும் கேட்டிருப்பானோ”என பயம் சதீஷின் முகத்தில் அப்பட்டமாக மிளிர்ந்தது. சுஜினி அவன் நிட்டிய காபி கோப்பையை, சிறிய நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள். அவளது கண்கள் இன்னமும் சதீஷின் முகத்திலேயே படிந்திருந்தன.
சதீஷோ சுஜினியின் பக்கம் தலையைத் திருப்பாமல், சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தன் கவனத்தை மாற்றியிருந்தான். சுஜினி மெல்லமாக தன் மனதை ஒரு நிலைபடுத்திக் கொண்டு, காபியை பருகி முடித்தாள்.
அவள் குடித்து முடிக்கக் காத்திருந்தவன் போல் அருகில் அமர்ந்திருந்த விவேக், காலி கோப்பையை குப்பை தொட்டியில் இடுவதற்கு தயாராக கைகளை நீட்டினான். சுஜினிக்கு விவேக்கின் சைகையைக் கண்டு எரிச்சலே எழுந்தது.
Advertisement
“நான் போட்டுடறேன்” என விவேக்கின் நீட்டிய கையில் காலி கோப்பையைக் கொடுக்காமல், தானே எழுந்து குப்பைத் தொட்டியில் சேர்ப்பித்தாள். விவேக்கின் அதீத அக்கறை சுஜினிக்கு கழுத்தைப் பிடித்து நெருக்கிவது போல் இருந்தது. கண்கள் தாமாக சதீஷின் முகத்தில் படிந்து மீள, சுஜினி வெகுவாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“இது எவ்வளோ அபத்தமா இருக்கு… என்னோட ஃப்ரெண்ட்ஸ் யாரு…நான் யார்கிட்ட பேசணும் பழகணும்னு நான்ல டிசைட் பண்ணனும்… அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, அவங்கிட்ட தான் நீ பேசணும், எங்கிட்ட பேசக்கூடாது,ஏன்னா அவனுக்குப் பிடிக்காதுன்னு சொல்லறது எவ்வளோ சில்லி…”என மனதிற்குள் நினைத்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க நிறைய பிரயத்தனப்பட்டாள்.
சதீஷின் மனநிலை விவேக்கைக் கண்ட சில நொடிகளிலேயே மாறியிருந்தது. சிரிப்போ, நட்போ, கிண்டலோ, வார்த்தைகளில் இருந்தும், பார்வையில் இருந்தும் விடைபெற்று சென்றுவிட்டிருந்தன.
Advertisement
Advertisement
[the_ad id=”6605″]
Advertisement
அந்த இடத்தில் கனமான மெளனம் சூழ்ந்து கொண்டது. விவேக் திரும்பவும் தனது புத்தகத்தினுள் அமிழ்ந்து போக, சதீஷ் விட்ட இடத்தில் இருந்து தனது உரையைத் துவங்கினான்.
சுஜினியின் கவனம் சிதறியிருந்தது சதீஷிற்கும் புரியத்தான் செய்தது. இரண்டடி தூரத்தில் அமர்ந்திருந்த விவேக்கிற்கு அறியாவண்ணம் சுஜினிக்கு ஆறுதல் சொல்ல இயலாது. முடிந்த மட்டிலும், கனிவை குரலில் வரவழைத்துக் கொண்டவன், அடுத்துப் பேசியது எதுவும் சுஜினியின் மனதில் பதியவில்லை.
வெறுமனே நேரத்தை கடத்திக் கொண்டு மற்றவர்களின் வருகைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவர்களும் வந்து சேர, பொதுவாக அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டிருந்தாள். அன்றைய மீத நாள் முழுக்க விவேக் நல்ல மனநிலையில் இருந்தான். காலையில் இருந்து பெரிதாக ஏதும் கோளாறுகள் இல்லாமல் இனிமையாகவே பொழுது கழிந்தது என மகிழ்ந்தான்.
அதிலும் சுஜினி தன்னிடம் உரிமையாக காபி வாங்கிக் கொடு என வினவியது விவேக்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.”எங்கிட்ட பாசம் இருக்கப்போய் தானடா, அவ்வளவு உரிமையா என்னை வாங்கிக்குடுக்க சொன்னா”என சதீஷிடம் சில முறை, ரானிடம் சில முறை, தன்னிடமே பலமுறை என சொல்லி சொல்லி மகிழ்ந்து கொண்டான்.
போதாக்குறைக்கு சுஜினி விடை பெற்றுச் செல்லும் சமயம், தன்னிடம் “சி யூ விவேக்”என மொழிந்தவள், சதீஷும் ஒன்றுமே பேசாமல் அவனைக் கடந்து போனது விவேக்கின் மன மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரித்திருந்தது. நடையில் ஒரு துள்ளல் சேர்ந்துவிட, சதீஷிடம் சகஜமாக பேசி சிரித்து வந்தான்.
பூங்காவில் இருந்து நேரே மதிய உணவை முடித்துக் கொண்டு விடுதிக்கு வந்ததும், நண்பர்கள் இருவரும் அவரவரது அறைக்குள் சென்று விட, அசதியுடன் அடுத்த தினம் கொண்டு செல்ல வேண்டிய அசைன்மெண்டுகளை சரிபார்த்தவண்ணம் படிக்கும் மேஜையின் மீது அமர்ந்தான் சதீஷ்.
கலங்கிய கண்களுடன் பதிலுக்காக தன் முகத்தை ஏறிட்ட சுஜினியின் உருவம் சதீஷின் கவனத்தில் நுழைந்து அலைகலைத்தது. சுபாஷிணியுடன் ஏதேணும் சண்டையிட்டாலும், சதீஷே பேசிவிடுவான்.
அதுவுமின்றி, சுபாவை ஒருவர் சமாதானம் செய்ய வேண்டும், அவளாக வந்து பேசுவாள் என கனவிலும் எதிர்பார்க்க இயலாது. ஏனென்றால், போட்ட சண்டை மறந்து, சதீஷ் தானாக வந்து மன்னிப்பு கோரி சமாதானம் செய்யாதது பெரிய சண்டையாக உருவெடுத்திருக்கும். அவளுடன் கழித்த பொழுதுகளில் இனிமையானவை என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால், இன்று சுஜினி “எங்கிட்ட பேச மாட்டியா சதீஷ்?” என கண்களில் லேசான நீருடன் வினவியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு நொடி, நண்பனாவது மண்ணாங்கட்டியாவது என்று கூட தோன்றிவிட்டது. சட்டென ரானிடம் இருந்து கைப்பேசியை வாங்கியவன், ரானின் கைப்பேசியில் இருந்தே சுஜினியின் தோழி எம்மாவிற்கு அழைத்திருந்தான்.
அதே நேரம், பெண்களின் டார்மில் சதீஷைப் பற்றியும் விவேக்கைப் பற்றியும் சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. சுஜினி கண்ணாடி ஜன்னலில் கீழ் போடப்பட்டிருந்த திவானில் கால்களை குறுக்கிக் கொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்தவண்ணம் அமர்ந்துவிட, எம்மாவும் வித்யாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
சதீஷ் நடந்து கொண்டது சரியே என வித்யா ஆமோதிப்பாக பேச, எம்மா வித்யாவின் கருத்தை மாற்ற முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்.
“எனக்குப் புரியவேயில்லை. இன்னொருத்தனுக்குப் பிடிக்காது, அதனால நீ எங்கிட்ட பேசாதன்னு யாராவது சொல்லுவாங்களா…சுத்த ஹம்பக்…”என எம்மா படபடத்தாள். வித்யாவிற்கு எம்மாவிடம் விளக்கம் சொல்லி புரியவைப்பதைக் காட்டிலும், அமைதியாக அமர்ந்திருந்த சுஜினியின் மனதை மாற்றமுடியுமா என எதிர்பார்ப்பு மிளிர பேசினாள்.
“அவனோட ஃப்ரெண்டுக்கு நல்லதுன்னு நினைச்சுதான் பேச வேண்டாம்னு சொல்லறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? சதீஷ்கிட்ட இப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப்பை நான் எதிர்பார்க்கலை…” என வித்யா உண்மையான உணர்ச்சியுடன் மொழிந்தாள்.
“இன்ஃபாக்ட் ஒரு வேளை ரோல் ரிவர்ஸ் ஆகி, விவேக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா விவேக் செல்ஃபிஷ்ஷா தான் முடிவெடுப்பான்..” என நிறுத்திய வித்யாவின் குரலில் சதீஷை ஒரு சின்ன லெவல் ஹீரோ போல் பாவித்து பேசிக் கொண்டிருந்தது புரிந்தது.
எம்மாவும், சுஜியும் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, வித்யா மேலும் தொடர்ந்தாள். “பட், சதீஷ் இஸ் குட் கை…தனக்குப் பிடிச்ச போதும், தன் ஃப்ரெண்டுக்கு குடுத்த வார்த்தைக்காக தள்ளிப் போறன்னா, அதை நாம மதிக்கணும்…கஷ்டப்படுத்தக் கூடாது….ஹி இஸ் அ ட்ரூ ஃப்ரெண்ட்…”என வித்யா எம்மாவிற்கு பதிலளிப்பது போல் சுஜினிக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரியாக அந்த நேரம், எம்மாவின் கைப்பேசி “டெஸ்பசிட்டோ” பாடலை அலறியது.
கைப்பேசியை காதிற்குக் கொடுத்தவள், “சுஜி, ஃபோன் ஃபார் யு”என சுஜினியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு, “ட்ரூ ஃப்ரெண்டாம்…மை ஃபூட்”என வார்த்தை வெளிப்படாமல் உதட்டளவில் சைகை செய்து வித்யாவிடம் கண்சிமிட்டினாள்.
அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து வித்யா சட்டென எழுந்து கொள்ள,”சதீஷா?” என எம்மாவிடம் வினவ, அவள் கண்சிமிட்டி ஆமாம் எனச் சிரித்தாள். சுஜினிக்கு கொஞ்சம் தனிமையை பரிசளிக்க எண்ணிய இருவரும் வெளியே சென்றுவிட, சுஜினி கைப்பேசியை காதிற்குக் கொடுத்தாள்.
“ஹலோ…ஹலோ…சுஜி… நான் சதீஷ் பேசறேன்…”
“ம்ம்ம்…சொல்லுங்க”என முடிந்த வரையிலும் சாதாரணமாகவே பதிலளித்தாள் சுஜினி. இருமுனைகளிலுமே கனமான மெளனமே நீடித்தது. சற்றைக்கெல்லாம், சுஜி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளைப் பொருத்தவரையில், தன்னிடம் பேச அழைத்திருந்த விஷயமே அலாதியாகத் தோன்றியது.
சதீஷிற்கோ நீர் கோர்த்த கண்களுடன் தன்னை எதிர்நோக்கியவளின் முகமே பிரதானமாகப்பட்டது. “ஆர் யு ஆல்ரைட்?” என மெல்ல சதீஷ் வினவ, சுஜினிக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரிபடவில்லை. “ஐ வில் பி”என்று மட்டும் பொதுவில் பதிலளித்தாள்.
“நான் விவேக்குக் தெரியாம தான் கால் பண்ணறேன். சோ, இஃப் யு டோண்ட் மைண்ட், அவன்கிட்ட எதும் காமிச்சுக்காத. “என தன்னிலை விளக்கம் வேறு அளித்தான். ஆனால் இவ்விஷயத்தை சுஜினி முன்னறே யூகித்திருந்தாள். ரானின் எண்ணில் இருந்து எம்மாவின் எண்ணிற்கு , தலையை சுற்றி மூக்கைத் தொட்டு, அழைப்பு வந்ததிலிருந்தே சுஜினி கண்டுகொண்டாள்.
அதனாலேயே லேசாக கோபமும் எட்டிப்பார்த்தது. “பேசணும்னு தோணினா நேராவே பேச வேண்டியது தானே. எதுக்கு இப்படி திருட்டுத்தனமா…”என வாய் வரை வந்து விட்டிருந்த வார்த்தைகளை பெரும்பாடுபட்டு சொல்லாமல் விடுத்தால், வாய் வெறுமனே “ம்ம்…என்ன விஷயம் சொல்லுங்க..”என மட்டும் முனுமுனுத்தது.
சுஜினியின் எண்ணவோட்டம் சதீஷிற்கும் புரிந்திருக்க வேண்டும், மறுமுறையில் நிறைய தடுமாற்றம் தெரிந்தது. சதீஷின் தடுமாற்றத்தையும் மெளனத்தையும் கவனித்தில் கொண்ட சுஜினியின் மனம், சட்டென மாறிப் போனது. “சே பாவம், எந்தப் பக்கமும் போக முடியாம எப்படி கஷ்டப்படறான்..”என எண்ணினாள்.
[the_ad id=”6605″]
சற்றே கோபத்தைக் குறைத்து, “சொல்லுங்க சத்தீஷ்…என்ன விஷயம்?”என சாந்தமாகவே வினவினாள். “உன் டார்ம்க்கு கீழ கொஞ்சம் வா..” என்றான் சற்றே அதிகாரமாக. அவனைச் சென்று சந்திக்க மனம் ஒப்பவில்லை. அதனால் அதைக் கூறாமல்“இந்த நேரத்திலையா? மணி பத்துக்கு மேல ஆச்சு.”என்றாள் சுஜினி.
“சரி நீ வரவேண்டாம்… நா வர்றேன்” என்றான் சற்றும் தயங்காமல்.
“இல்ல..இல்ல வேணாம்… நான் வர்றேன்…” என்றவள் சொன்னது போல், கைப்பேசியை அணைத்து எம்மாவிடம் கொடுத்தாள். அறையில் வெளியே நின்றிருந்தவர்களிடம் எதுவும் சொல்லாமல் படிகளில் கீழே இறங்கினாள்.
சொன்னது போலவே இவர்களது டார்மின் கீழே ஓரமாக சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவன், இவள் இறங்கி வரவும் இவளருகில் வந்தான். “கொஞ்சம் நடந்துட்டே பேசமாலா?” என அவன் வினவ, சம்மதமாக சுஜினி தலையசைத்தாள்.
மறுமுனையில் நிலவிய மெளனம் மெல்ல கரைந்து போயிருக்க, “அது வந்து சுஜி…எனக்கு எப்படி உனக்கு சொல்லிப் புரியவைக்கன்னு சத்தியமா தெரியலை. சீ, எனக்கு விவேக் ரொம்ப முக்கியம். அவன் மனசை கஷ்டப்படுத்தற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.” என்று அவன் நிறுத்தினான்.
“ஒ, என்னை சமாதனாப்படுத்த பேசப் போறான்னு நினைச்சேன்.. இது அவனோட தன்னிலை விளக்கவுரையா? உர்ராங்குட்டான்..” என மனதிற்குள் சதீஷை திட்டியவள், அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஓரளவு யூகித்துக் கொண்டாள்.
சுஜினி மெளனமாக இருக்க, சதீஷ் மேலும் தொடர்ந்தான் “இவ்வளோ நாளும் அப்படித்தான். இப்போ, கொஞ்ச நாளா…அதுவந்து…உங்கிட்ட நான் பேசறது…ஐ மீன் எந்த தப்பான அர்த்தத்திலையும் இல்ல..சும்மா பேசறது அவனுக்கு…ஐ மீன்..”
“ஈசி ஈசி…சத்தீஷ்….ஏன் இவ்வளோ தடுமாற்றீங்க? நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியாம இல்ல.. சரியா… ஐம் நாட் எ ஃபூல்…”
“புரியுதுல்ல.. அப்பறமும் ஏன்…”
“ஏன்னா..?ஏன் என் பின்னால அலையறன்னு கேட்கறீங்களா சத்தீஷ்?”
“அய்யோ சே சே… அப்படியில்ல..”
“பின்ன வேற எப்படி? இத பாருங்க… விவேக்கு என்னை பிடிச்சிருக்கு .. அது எனக்கு தெரியும்… அதே மாதிரி தான் எனக்கும்.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு…”
“சுஜி…அது வந்து…”
“வெயிட்… வெயிட் நான் இன்னும் சொல்லி முடிக்கலை. உங்களை எனக்கு பிடிச்சிருக்குன்னா, உடனே கண்டதும் கன்னா பின்னான்னு காதல்னு உளறமாட்டேன். ஐ லைக் பீயிங் வித் யூ…” எனக் கூறிய சுஜி, சதீஷின் முகத்தில் கவனமாக கண்களைப் பதித்திருந்தாள்.
“ஐ மீன்.. உங்க கூட பேச, சிரிக்க, ஃப்ரெண்டிலியா..இப்படி…ஐ லைக் மை டைம் வித் யு… அவளோ தான்..காம்பிளிகேட்டா நான் ஆக்கலை. அதே மாதிரி உங்களுக்கும் என் கூட பேச, சிரிக்க பிடிச்சிருக்குன்னும் எனக்குத் தெரியும். நான் சொல்லறதை அக்செப்ட் பண்ணறீங்களா? என அவனிடம் வினவினாள்.
“ம்ம்ம்” என்று மட்டும் தலையசைத்தான் சத்தீஷ். சுஜினி என்ன சொல்ல வருகிறாள் என சத்தியமாக சதீஷிற்குப் புரியவில்லை. விரும்புகிறேன் என்கிறாளா? பிடிக்கும் என்கிறாளா? விருப்பமும் பிடித்தமும் ஒன்றே தானே அல்லது வேறு வேறா? என மூளை குழம்பியது.
சதீஷ் வேறு எதுவும் சொல்லாது போக, சுஜினி மேலும் தொடர்ந்தாள். “தேங்க்ஸ்… அக்செப்ட் பண்ணதுக்கு. சோ, ஜஸ்ட் ஒரு விருப்பம் அவளோ தான். உடனே உங்க தோளைப் பிடிச்சு தொங்கிட்டு இமோஷனலா டிபெண்ட் ஆகி.. 24மணி நேரமும் ஃபோன், மெசேஜ்ன்னு.. தொல்லை பண்ண போறேன்னு நினைக்காதீங்க… நான் அப்படியெல்லாம் இல்ல..ஐம் மோர் இண்டிபெண்டண்ட்”
“குட்…” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் சதீஷ் இம்முறையும்.
“சத்தீஷ்.. குழப்பமா இருக்குல்ல.. நான் பேசறது..” எனக்கூறி கலகலவென நகைத்தவளுடன் புன்னகைக்காமல் இருக்க அவனாலும் முடியவில்லை.
“தெளிவா குழப்பற சுஜி…”என்றான் சிரிப்புடன்.
“கரெக்ட்… அதான் நான் எதிர்பார்த்ததும். புரிஞ்சமாதிரியும் இருக்கணும்..ஆனா புரியக் கூடாது…”
“அம்மா தேவதை.. சொல்லுங்க.. என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டீங்க.. அதுக்கு ஒரு முடிவும் சொல்லுங்க…நேரமாகுது.. குளிர் வேற ஊசியா குத்துது.. சீக்கரம் போலாம்..” என்றான் கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டே.
“அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி சுத்தி சுத்தி பேசிட்டு இருக்கப் போறேன்.” என்ற சுஜினியை ஒரு முறை முறைத்தவன், “சரி… எனக்கும் இதுபத்தி என்ன சொல்ல, எப்படி யோசிக்கன்னு தெரியலை.. இப்போ என்ன பண்ணனும் அதை மட்டும் சொல்லு..”
[the_ad id=”6605″]
“குட்.. இப்படி ஃப்ரேங்கா பேசறது ரொம்ப நல்லது… நானும் என் மனசில என்ன நினைக்கறேன்னு சொல்லறேன்.. எனக்கு விவேக் மேல எந்த இடிரெஸ்டும் இல்லை..ஐ மீன் நான் யாரையும் லவ் பண்ணலை. விவேக்கையும் சரி, உங்களையும் சரி..” என தெளிவாகவே பேசினாள்.
“ஆனா உங்க கூட ஸ்பெண்ட் பண்ணற டைம் நான் நானா இருக்கேன், ஹேப்பியா இருக்கேன். அதுக்காக நீங்க ரொம்ப நல்லவன்னு சொல்லலை. விவேக் கெட்டவரும் இல்லை. அவன் ரொம்ப நல்லவன்.. உங்கள விட நல்லவன்” என விவேக்கிற்கு சான்றிதழ் வழங்கினாள்.
“சரி.. அதுக்கு”
“அதே நேரம் எனக்கு உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண பிடிச்சிருக்கு. வெயிட்.. திரும்ப சொல்லறேன், ஐ டோண்ட் லவ் யு. ஐ ஜஸ்ட் லைக் யு. அதே தான் உங்க ஃபீலும். ஐ அண்டர்ஸ்டாண்ட். சோ, என் கூட எந்த கண்டிஷன்சும் இல்லாம கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க.. என்னை அவாய்ட் பண்ணறதை என்னால ஏத்துக்கு முடியலை. அதுவும் உங்களுக்கு பிடிச்சும், ஃப்ரெண்டுக்காக அவாய்ட் பண்ணறது, ஐ ஃபீல் இன்சல்டிங்க்… நான் சொல்லவர்றது புரியுதா?”
“ஓரளவு.. உன்னை அவாய்ட் பண்ணக் கூடாது. பிகாஸ் இட் இஸ் அஃபெக்டிங்க் யுவர் ஈகோ… அது நல்லாப் புரியுது…”என்றான் சதீஷ் சிரிப்புடன்.
“குட்… யு அண்டர்ஸ்டுட்.. ஈகோங்கற வார்தையை யூஸ் பண்ணாம புரியவைக்க இன்னும் எவளோ நேரம் கிளாஸ் எடுக்கணுமோன்னு நினைச்சேன்… சோ, இதுக்கு எதாவது சொல்யூஷன் இருக்கா? இந்த ஈகோ வியாதிக்கு? எனக்கு தெரிஞ்சு இல்லை..” என நகைத்தவள் சத்தீஷை ஸ்னேகமாகப் பார்த்தாள்.
