Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 22

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

 

பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்



Advertisement

விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

 

ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்

Advertisement

செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

Advertisement

 

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

 

Advertisement

அனைவரும் கோவிலை அடைய… குலதெய்வ பூஜைக்காக அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து கொண்டு இருக்க… 

 

அன்பு மட்டும் வைஷு, இனியவள் அருகிலேயே, அவர்களை தன் பார்வையிலேயே வைத்து கொண்டு இருந்தான்… 

 

புஜைக்கான நேரம் ஆக… பூஜை துவங்கியது….அம்மனிற்கான உடை… அலங்கார பொருட்கள் அனைத்தும் சரி பார்த்து ஐராடிடம் கொடுத்த ஜானகி முகத்தில் பதற்றம் தெரிய… அதை கவனித்த சகுந்தலா 

 

“என்ன ஜானகி… ஒரு மாதிரி இருக்க… இப்போ என்ன பண்ணி வெச்சி இருக்க” என்றார் நேராக குற்றம் சாட்டும் வகையில்…. 

 

அதை அங்கு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்க்க… செல்லம்மாள் ‘என்ன” என்று விசாரிக்க… 

 

“அம்மனுக்கு கொடுக்க வெச்சி இருந்த குங்குமம் காணோம் அண்ணி” என்றார் பதற்றமாய்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அது தானே பார்த்தேன்… எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யும் போதே தெரியும்… இப்டி எதாவது அபசகுனமா தான் செய்வீங்கன்னு” என்றார் மீண்டும் குற்றம் சாட்டும் விதமாய்…. 

 

அதில் முகம் வாடி போய், செய்வதறியாது நின்று கொண்டு இருந்த ஜானகியை கண்ட இனியவள் மனம் பதைபதைக்க…. 

 

“நான் தான் அம்மன் புஜைக்கு தேவையான சாமான் எல்லாம் எடுத்து வெச்சேன்…அவுங்களுக்கு எதுவும் தெரியது” என்றாள் பழியை தன் மேல் போட்டுக்கொள்ளும் விதமாக 

 

இதற்காகவே காத்திருந்தவர் போல் “வெளிஆளுங்களை எல்லாம் நம்ப  வீட்டுக்குள்ள விட்ட இப்டி தான் இருக்கும்… அவுங்கஅவுங்கள வெக்க வேண்டிய இடத்தில வெக்கணும்… யார் என் பேச்சை கேக்குறா” சலித்தபடியே பேசினார் சகுந்தலா… 

 

“மன்னிச்சிடுங்க… நான் போய் கொண்டு வரேன்… அதுக்குள்ள அலங்காரம் முடிஞ்சிடும்… அதுக்கு அப்றம் தானே குங்குமம் தேவை… நான் போறேன்” என்றவளை “என்னமோ செய்” என்ற இலக்கார பார்வை பார்த்த  சகுந்தலா அதற்கு பின்னும் அமைதியாக இருக்காமல்… எதோ கூற வர… இடை மறித்த அன்பு 

 

“அதான் அவ கொண்டு வரேன்னு சொல்லுறா இல்ல… அதுக்கு அப்புறமும் எதுக்கு பேசிகிட்டு… தப்பு யார் கிட்ட நடக்கல” என்றான் இனியவளுக்கு சாதகமாய்…. 

 

அதன் பின் அனைவரும் அமைதியாகிட… “எப்படி இனியா தனியா போவ… அதுவும் இருட்டிடுச்சே” கவலையாய் கேட்டார் ஜானகி 

 

அன்பு எதோ கூற முன்வர, அதற்குள் “நான் கூட போய்ட்டு வரேன்மா” என்றான் இலக்கியன் முந்தி கொண்டு 

 

சரி என்பதை போல் அனைவரும் ஒத்துக்கொள்ள… பைக்கில் செல்வதாக முடிவாகி…இருவரும் புறப்பட்டனர்…. 

 

செல்லும் இனியாவின் பார்வை… தற்செயலாய் அன்பின் மீது பட… அதில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது…. அது அவளுள் பல கேள்விகளை  உருவாக்க… யோசித்த படியே இலக்கியனுடன் நகர்ந்தாள் இனியா 

 

பின் அனைவரும் தாங்கள் வேலைகளுக்கு திரும்பிட…இனியா போன வாசல் வழியே பார்த்து கொண்டு இருந்த அன்பை பார்த்த செல்லம்மாள்… அவனிடம் வந்து 

 

“நல்லது தான் இல்ல தம்பி… இப்டி தனியா போய்ட்டு, வரன்னு இருந்தா தான் நல்லது” எரிந்து கொண்டு இருந்த அன்பின் மனதில் தாயே எண்ணெயை ஊற்றினார்…. ஆனால் அதுவும் அவனின் நன்மைக்கு தான் என்பதை இன்றே அவன் புரிந்து கொள்ளவும் போகிறான் என்பது காலத்தின் கட்டாயம்… 

 

பூஜையில் கவனம் இல்லாமல்… வைஷுவை கவனிக்க முடியாமல்… தீயில் நிற்பவனை போல் தவித்து கொண்டு இருந்தான் அன்பு…. நேரம் சிறிது சென்று இருக்க 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இதுக்குள்ள வந்து இருக்கனுமே” என்று யோசித்த படி கைபேசியில் இலக்கியனை அழைக்க… அவன் எத்தனை முறை அழைத்தாலும் எடுக்க வில்லை… 

 

பின் இனியாவின் கைபேசிக்கு அழைக்க… அது ஜானகியின் கையில் இருக்க… 

 

அவனின் தவிப்பை பார்த்த ஜானகிக்கு பரிதாபமாக இருக்க… அவனிடம் சென்றவர் “அன்பு,என் இவ்ளோ கவலைல இருக்க…வா வந்து புஜைல உக்காருபா” என்றார் பாசமாய் 

 

“இல்லை அத்தை… போனவங்கள இன்னும் காணோம்… இலக்கியன் வேற போன் எடுக்கல… இனியாவும் போனை இங்கயே விட்டுட்டு போயிருக்கா… எனக்கு என்னமோ எதோ மாதிரி இருக்கு.. நான் வேணும்னா போய் பார்த்துட்டு வரவா? ” என்றவன் குரலில் கவலை தான் அதிகம் இருந்தது…. 

 

“சரி போய்ட்டு சீக்கிரம் கூட்டிக்கிட்டு வந்துடு அன்பு” என்று அனுப்பி வைத்தவர் 

 

“இவ்வளவு காதலையும் எப்படி மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு ஒன்னும் இல்லாதவன் மாதிரி நடிக்குறியோ”வாய் விட்டு புலம்பிய படியே சென்றார்… 

 

தன் பைக்கை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான் அன்பு… போகும் வழி முழுக்க இனியாவை நினைக்கவும்.. படபடப்பும் தான் அதிகமானது அவனுக்கு 

 

செல்லும் சாலையில்…ஒரு இடத்தில்…  போலீஸ் ஜீப்புகளும்… ஆம்புலன்ஸ் வண்டிகளும் அங்கு குவிந்து இருக்க…அந்த கட்சியை பார்த்தவனுக்கு படபடப்பு அதிகம் ஆக… 

 

பக்கத்தில் ஒருவரை அழைத்து என்ன நடந்தது என்பதை விசாரிக்க… அவர் சொன்னதை கேட்டு அன்பு பயத்தில் உறைந்தான் 

 

“ஆஸிடெண்ட்  ஆகிடுச்சு தம்பி… பைக்ல ஒரு பொண்ணும் பையனும் போய்ட்டு இருந்தாக… எதிர்ல வந்த லாரி அவுங்கள அடிச்சிட்டு அவன் போய்ட்டான்” என்று அவர் கூற 

 

மேலும் படபடப்புடன் “அந்த பொண்ணு பாக்க எப்படி இருந்தா” என்றான் 

 

“அதெல்லாம் தெரியாது தம்பி… ஏதோ ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போறாங்க பாரு… பொழைக்குறது கஷ்டம் தான்” என்ற படி நகர்ந்தார் அவர்….. 

 

அன்பிற்கு ஆம்புலன்ஸ்ஸை நெருங்க தைரியம் இல்லாமல்… ஒரு முறை இலக்கியனுக்கு அழைத்தவன்… அவன் அப்போதும் எடுக்காமல் போக…. வெறுபில் பார்வையை சுழற்றியவன் கண்ணில் ஒற்றை கால் கொலுசு ஒன்று பட… அதை  கையில் எடுத்தவனுக்கு உலகமே சுற்றுவதை போல் இருந்தது… 

 

“இது… இது..  இனியாவோட கொலுசு தானே”அவள் கால்களை அலங்கரிக்கும் அந்த கொலுசுடன் புலம்பினான் அன்பு… நடு வீதியில் நின்று கொண்டு 

 

இதற்கு மேல் பொறுக்காமல்… ஆம்புலன்ஸ்ஸை நெருங்க முடிவெடுத்தவன்… அதை நெருங்கும் வேளையில்… ஆம்புலன்ஸ்ஸின் கதவுகள் அடைக்க பட்டு… அது சென்று விட்டது…. 

 

செல்லும் அதையே பார்த்த அவனுக்கு கதவின் வழி தொங்கும் எதோ ஒரு துணி தெரிய… அது சேலையோ துப்படவோ… மயில் நீல நிறத்தில் இருந்தது… 

 

அதை கண்டவன் மனம் மேலும் துடிக்க…கோவிலுக்கு முன் அவளை நீல நிற புடவையில் கண்டது… அப்போது நடந்த அணைத்து சம்பவமும் மனதில் ஓட… 

 

“நான் நினைக்குற மாதிரி இருக்க கூடாது கடவுளே… அது அவளா இருக்க கூடாது…இப்டி ஒரு விஷயத்தை என்னை பார்க்க வைக்காதே” பலமுறை இறைவனை வேண்டினான் அன்பு 

 

வேண்டி கொண்டே ஆம்புலன்ஸ்ஸை நெருங்க எத்தனிக்க… அது அதற்குள் அவனை விட்டு தூரம் சென்று விட்டது… 

 

அதன்  பின்னாலேயே தலை தெறிக்க அன்பு ஓட.. அவன் ஓட்டத்தை விடவும் ஆம்புலன்ஸ்ஸின் வேகம் அதிகமா இருக்க… அது எங்கோ காற்றில் கரைந்து விட்டு இருந்தது…. 

 

ஆனாலும் விடாமல் ஓடியானவை தரையில் இருந்த எதோ இன்று தடுக்க… அதில் தடுக்கி கீழே விழுந்து… இரண்டு முறை புரண்டு… தன் அழகிய வெள்ளை சட்டை முழுவதும் ரோட்டின் மண் ஒட்டி கொள்ள… அதை எதுவும் பொருட்படுத்தாமல்… தன்னை தடுக்கிய பொருளை அவன் பார்க்க… 

 

அது இன்னதென்று முலைக்கு புரியும் முன்,  புரிந்து கொண்ட இதயம்… ஒரு, இரு முறை நின்று துடித்தது என்று தான் கூற வேண்டும்…. 

 

அது ஆண்கள் அணியும் காலின் செருப்பு… அதுவும் ஒற்றை கால் செருப்பு… அதை கண்டவனுக்கு அது யாருடையது என்பதை யூகிப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை… 

 

அது இலக்கியனுடைய ஒற்றை கால் செருப்பு… அதை பார்த்தவன் மனம் கண்ணீரில் மிதக்க… அதன் வெளிப்பாடாய் அவனின் கண்களும் குளமாகின..   

 

அங்கு நின்று தன் ஆற்றாமையை நினைத்து உள்ளுக்குள் குமுறி கொண்டும்… வெளியில் கத்த வேண்டும் போல் இருக்கும் அவனின் கோவத்தை கட்டு படுத்த முடியாமலும்… கண்ணில் நீர் ஒரு புறம் ஆறாக ஓடி கொண்டு இருக்க..  நிலைமை தன் கை மீறி சென்றதாக உணர்த்த அன்பிற்கு… தன் ஆற்றாமையை நினைத்து கோவம் வர… அந்த மொத்த கோவமும் அவனின் வண்டியின் கண்ணாடியின் மேல் பட்டது 

 

அவனின் அந்த தாக்குதலை தாங்காத அந்த கண்ணாடி அடுத்த நிமிடமே உடைந்து போக.. அதன் சில துண்டுகள் அன்பின் கையை பதம் பார்க்கவும் தவறவில்லை… 

 

கையில் ரத்தம் ஒழுக… ஒரு கையில் கொலுசும்… மறு கையில் செருப்பும் வைத்து கொண்டு… யாருக்கு அழுவது என்பது புரியாமல் நிற்கும் அவனிற்கு… மனம் முழுதும் இனியாவின் நினைவு தான்…. 

 

அவளை சந்தித்த முதல் நாள் முதல் இன்று அவளை திட்டியது வரை அனைத்தும் அவனுக்கு காட்சியாய் கண் முன் ஓட…. 

 

வேறு ஒன்றும் செய்ய முடியாதவனாய்… தன் வண்டியில் அமர்ந்து கிளப்ப முயற்சிக்கும் போது ஒரு குரல் 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அண்ணா…இங்க இருந்து பைக் ரிப்பேர் பண்ற கடை எங்க இருக்கு… எவ்ளோ நேரம் ஆகும்” என்ற படி நின்று கொண்டு இருந்தவளை தான் வண்டியின் உடைந்த கண்ணாடி வழி பார்த்த அன்பிற்கு அது மாயை போலவே தெரிய… 

 

நம்ப மறுத்து… பைக்கில் தலை சாய்த்து அமர்ந்து இருக்க… மறுபடியும் அதே குரல்… இத சமயம் அது மாயையாக தோன்றாமல்… அது அவனுக்கு மிகவும் அருகில் கேட்க… திரும்பி பார்த்தவன்… 

 

முகத்தில் தெளிவு தெரிய… கண்கள் நிம்மதி அடைய… இதழில் சிரிப்பு படர… அவளையே பார்த்து கொண்டு இறந்தவன், சிறிது நேரத்தில் பார்வையும் முகமும் இருக…. 

 

கண்ணீர் வடிந்த கண்ணில் கோவம் குடி கொள்ள… முகம் கோவத்தில் ரத்த சிகப்பில் மாற…. வண்டியை விட்டு இறங்கியவன் 

 

அங்கு நின்று சிரித்து பேசி கொண்டு இருக்கும்… இனியவை பார்த்தவன்… 

 

அங்கு இருந்த படியே “இனியா” என்று கத்த…அதில் அதிர்ந்து திரும்பியவள் முகத்தில்,  அன்பின் முகத்தில் தெரிந்த கோவத்திற்கு இணையாக பயம் தெரிய ஆரம்பித்தது…. 

 

அவளை நெருங்கியவன்… அவளின் இரு தோள்பட்டைகளையும் பிடித்தவன்…. அவளை உலுக்கி கொண்டே ” பைத்தியமாடி  உனக்கு… உன்னை எங்க எல்லாம் தேடுறது… பைத்தியம் காரன் மாதிரி ரோட்ல சுத்திக்கிட்டி இருக்கேன்டி…..அறிவிருக்கா… போன்னை வீட்ல வெச்சிட்டு வந்துட்ட…அந்த இலக்கியனும் போன் எடுக்க மாட்டேங்குறான்” என்றவன் அவளை மேலும் தன் புறம் இழுத்தவன் 

 

“நான் எவ்ளோ பயந்துட்டேன்னு தெரியுமாடி  உனக்கு..  மறுபடியும் உன்னை தொலைச்சிட்டேன்னு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமாடி ….அந்த…அந்த ஆம்புலன்ஸ்ஸுல நீ இருந்து இருந்தா என்னன்ற எண்ணமே எனக்கு சாகுற மாதிரி இருந்துதுடி … உண்மையிலேயே உனக்கு எதாவது ஆகி இருந்தா நான் என்ன பண்ணி இருப்பேன்” என்றான் ஆவேசகமாக… 

 

அவன் பேசுவதை அனைத்தையும் புரியாத பார்வை பார்த்து கொண்டு இருந்தவள்… அவன் கூறிய இறுதி இரண்டு வரி… அவளை எதோ செய்ய… அன்பை தன் இதயத்திற்கு மிக அருகில் உணர்ந்தவள்… தன் கையை பற்றி இருந்த அவனின் கையை உதறி தலியவளாய் 

 

“செத்து இருந்தா என்ன… ஆமாம் நான் அந்த ஆம்புலன்ஸ்ல செத்தே போயிருந்தா என்ன இப்போ.. உங்களுக்கு என்ன வந்துது… நான் உயிரோட இருக்குறதுலயும் சாகுறதுலயும்… நான் யார் உங்களுக்கு… நீங்க ஏன் துடிக்கும்… எனக்காக” அதே படபடப்பில் கத்தியவளை தன் புறம் மேலும் இழுத்து… தனக்கு மிகவும் அருகில் நிற்க வைத்து 

 

“ஏன் துடிக்குறேன்னா கேக்குறே…நான் துடிக்காம வேற யார்டி  துடிப்பா… நான் பதராமா வேற யார்டி பதறுவா” என்றவனை விட்டு மேலும் இரண்டடி தள்ளி நின்றவள் 

 

“அதான் ஏன் துடிக்குறீங்க… யார் நீங்க எனக்கு” என்பவளை நெருங்குயவன்… அவளின் கேர்ள்விகளுக்கான கோவத்தில்… 

 

“ஆமாடி துடிப்பேன்… ஏன்னா நீ என்னோட பொ…”என்று ஆரமித்தவன்… தான் கூற வருவது அவனுக்கே புரிய வர…அதிர்ச்சியில் வாயை மூடி கொள்ள… 

 

தன்னை விட்டு இரண்டடி பின்னால் செல்லும் அன்பை குழப்பத்துடன் பார்த்து கொண்டு இருந்தவளின் கண்ணனோடு கண் பார்த்தவனுக்கு அவனின் மனதின் மொழி மிக அழகாக புரிய ஆரம்பித்தது…. 

 

“அப்போ நான் உன்னை காத….”முடிக்கவும் தைரியம் இல்லை அவனுக்கு…. 

 

“இது எப்படி… எப்போல இருந்து… அதுவும் நான் எப்படி… உன்னை போய்…” என்ற பல கேள்விகள் அவனுள் எழு….

 

அந்த சமயம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தான் இலக்கியன்… அன்பு இனியாவுடன் நிற்பதை பார்த்தவன்… அவர்களை நெருங்கி 

 

“என்னடா அண்ணா… பாக்காம இருக்க முடியலையா” என்றான் மொட்டையாக..அவனின் அதே விளையாட்டு தோணியில்… 

 

“என்ன” என்பதை போல் பார்த்த இனியாவிடம் “எங்க அண்ணன் என்னை தனியா எங்கயும் விட மாட்டான்… அதான் என்னை பிரிஞ்சி இருக்க முடியலையான்னு கேட்டேன்” என்றான் சமாளிக்கும் விதமாய்… 

 

அவன் வந்து அங்கு நின்று பேசியதையும் கண்டு கொள்ளாமல் எதோ ஒரு குழப்பத்தில் மண்ணை பார்த்து நின்று கொண்டு இருந்தவனை.. அழைத்தவன்…

 

அவனின் குழம்பிய முகம் தெரிய…அதில் தெரியும் பாவனைகள் இன்னதென்று புரிய வில்லை அவனுக்கு… மீண்டும் அவனிடம் எதோ பேசியவனுக்கு 

 

“நீ இனியாவ கூட்டிகிட்டு வீட்டுக்கு போ நான் பின்னாடி வரேன் “என்பது மட்டுமே பதிலாக வந்தது…. 

 

“என்ன இவன்… இனியவ நம்ப கூட அவனே அனுப்புறான்… அதிசயமா இருக்கே” நினைத்த படி இனியாவை பைக்கில் அமரவைத்து கொண்டு சென்றான் இலக்கியன்… 

 

போகும் இனியவை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்த அன்பு…செல்லும்  அவளின் பார்வையும் தான் மேல் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் மனதில் மின்னல் அடிக்க… உடல் முழுதும் மின்சாரம் பாய…. எங்கோ வானில் பார்ப்பது போல் இருந்தது…. இது அனைத்தும் அவனுக்கு புது உணர்வாக இருக்க… இதை அவன் மனம் விரும்ப தான் செய்தது… 

 

கண்ணாடி வழியே இனியாவின் பார்வை அன்பின் மேல் இருப்பதை உறுதி செய்து கொண்ட இலக்கியன்…அன்பின் முகத்தில் தெரிந்த மாற்றமும் கண்முன் வர… புண் முறுவலுடன்…. 

 

“ரெண்டு பக்கமும் எரிய ஆரம்பிச்சிடுச்சு” மகிழ்ச்சியாய் புண் முறுவலுடனே சென்றான்.. 

 

                                 மயக்கம் தொடரும்…..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!