Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 23

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..

உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..

தனிமை உயிரை வதைக்கின்றது..

கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..



Advertisement

என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..

கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..

தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..

Advertisement

துயரங்கள் கூட அட சுவையாகுது..

Advertisement

இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..

ரொம்ப ருசிக்கின்றது..!

காதல் சுகமானது..!

Advertisement

 

சொல்லத்தான் நினைக்கிறேன் ,

சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது..

 

நிமிடங்கள் மணித்துளியாய் பெருக… அந்த இருண்ட ஆள் இல்லாத சாலையில்… பைக்கின் மேல் சாய்ந்த படி நின்று கொண்டு, தன் மனதின் மாற்றங்களை யோசித்து கொண்டு இருந்தான் அன்பு… 

 

“நான் எப்படி இனியாவை காதல்” என்ற கேள்வியே தன்னுள் எழுந்து கொண்டே இருக்க..  விடை தெரியாமல் போனாலும்…. “நான் அவளை விரும்புகிறேன்.. அவள் என் வாழ்வில் இல்லை நினைப்பே என்னை கொன்று விடும் போலவே… இனி நீ இன்றி நான் இல்லை” இறுதியில் அவனின் மனதின் மொழி அவனுக்கு புரிந்தது… 

 

இதற்கு மேல் இங்கு நின்று மனம் இல்லாமல்….. வீடு சென்று இனியாவை காண வேண்டும் என்ற எண்ணத்திலேயே,  வண்டி சீறி பாய்ந்து கொண்டு இருந்தது…. 

 

வீட்டை அடைந்தவன்… கண்,  வீட்டை அலச… அவனின் தேவதை மட்டும் அவன் கண்ணிற்கு புலப்படவே இல்லை… 

 

“அதான் தெரிஞ்சிடுச்சில… எங்களுக்கும் சொன்னா நாங்களும் சந்தோச படுவோம் இல்ல… இதுல மறைக்க என்னை இருக்கு” போனில் யாரிடமோ பேசுவதை போல் அன்பை குறிவைத்த படி… இலக்கியன் அங்கு வர… 

 

அவன் தன்னை தான் கூறுகிறான் என்று புரிந்த அடுத்த நிமிடம்…அவன் கன்னம் சிவக்க… கண்கள் தரையை பார்க்க… வெக்க பட்டு கொண்டே நின்றவனை பார்த்த இலக்கியனுக்கோ 

 

“டேய் அண்ணா… நீ என்னை வேணும்னாலும் பண்ணு… ஆனா இப்டி வெக்கமட்டும் படாதா… பாக்க சகிகளா” என்றான் முகத்தை சுழித்த படி…. 

 

“என் பிள்ளைய கலாக்கலான உனக்கு தூக்கம் வராதே…. என் புள்ள எவ்வளவு அழகா வெக்க படுது பாரு… என் கண்ணே பட்டுடும் போல” டிஷ்டி கழித்தார் போல வந்தனர் செல்லம்மாவும், ஜானகியும்…. 

 

அவர்களை பார்த்தவன் முகம் முன்பு இருந்த உற்சாகம் போய்… இருக… அது ஏன் என புரியாமல் பார்த்து கொண்டு இருந்த இருவரையும் கண்ட அன்பு 

 

“அம்மா உங்களுக்கு இதுல சம்மதமா…நான் இனியாவை…. உங்களுக்கு இதில் ஆட்சேபனை இல்லையா? ” என்றான் வியப்பாக 

 

“இல்லையே” என்ற படி அவனை பார்க்க… அவனோ… 

 

“நீங்க தானே.. இனியாகும், இலக்கியனுக்கும் கல்யாணம்….இன்னைக்கு கூட பேசிகிட்டு இருந்தீர்களே!!” என்றான் தயங்கி கொண்டு 

 

அதில் சிரிப்பு வர… மூவரும் ஒன்று சேர்ந்து சிரிக்க… அன்பிற்கு எதுவும் புரியவில்லை… 

 

“வா தம்பி… உள்ள போய் பேசலாம்… இங்க வேணாம்” என அனைவரும் ஜானகியின் அறை சென்று நடந்த அனைத்தையும் அவனுக்கு விலக்க… 

 

[the_ad id=”6605″]

 

 

 

“கடைசியில நாம தான் ஜோக்கர் ஆகி இருக்கோம்” என்ற படி இலக்கியணனை பார்க்க… 

 

அவனோ “நாம இல்ல… நீ”என்று கூறி மீண்டும் அவன் சிரிக்க… அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிலை கொண்டது

 

திடீரென முகத்தின் பிரகாசம் மறைந்து போக… யோசனையுடன் செல்லம்மாவை பார்த்த அன்பு “அம்மா, அப்போ மீரா… அவளை நான் உண்மையாக காதலிக்க வில்லையா… அவளின் மீது நான் வைத்த நேசம் பொய்யா” என்றான் அப்பாவியாய்

 

அவனை ஆதரவாய் அவனின் தலையை கோதிய படி.. அவன் அருகில் வந்து அமர்ந்த செல்லம்மாள்… “உன்னோட காதல் போய் இல்லை தம்பி… இது வெறும் காலத்தின் மாற்றம் மட்டும் தான்…..உன்னோட மனசுல மீராகாக என்ன இடம், என்ன உணர்வுகள் இருந்ததோ.. அது மெல்ல மெல்ல இனியா அந்த இடத்தை பிடிக்க ஆரம்பிச்சிட்டா… உனக்கே தெரியாமல்!!!” என்றவர் ஒரு முறை அன்பின் முகத்தின் பாவனைகளை படிக்க முயற்சித்தவர், மேலும் தொடர்ந்தார் 

 

” இதை எல்லாத்தையும் நீ உணரும் முன்னாடியே இலக்கியன் தெரிஞ்சிகிட்டேன்.. எனக்கும் ஜானகிக்கு கூட இதெல்லாம் நேத்து தான் புரிஞ்சுது… அதுவும் ஒரு சந்தேகத்தோட தான் இருந்தோம்… இந்த ஒருவாரத்தில் எத்தனை தடவை மீராவை பற்றி நெனச்சி இருப்ப, அவளுக்கு எத்தனை முறை கால் பண்ணி.. அவளை அடைய முயற்சி பண்ணி இருப்ப… இதை யோசிச்சாலே உனக்கு உன் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிடும்…நேற்று,  உன் மனதை பத்தி எனக்கு தெரியாது தம்பி… ஆனால் இன்னைக்கு, உன் மனசுல இருக்கறது இனியவள் மட்டும் தான்… அதை நீயே உணர்த்ததால தான்… இங்க இருக்க”

என்று முடுத்தவர்…. அன்பை யோசிக்க நேரம் கொடுத்து அமைதி காத்தார்… 

 

ஆம்… இந்த ஒரு வாரம்.. இல்லை இல்லை…. சிறிது காலமாகவே அவன் மீராவை அழைக்க வில்லை… இந்த ஒரு வரமாக அவளின் நினைவு சுத்தமாக வரவில்லை… என்பது உண்மை என்பதையே உணர்ந்தான்…. 

 

“ஆனால் இப்போ இனியா என்ன நினைக்குறானு தெரியலையே… அவள் மனசுல என்ன இருக்குனு எப்படி கண்டு பிடிக்கறது? ” கேள்வி எழுப்பினார் ஜானகி… 

 

“அதெல்லாம் எனக்கு முன்னாடியே அவ என்னை காதலிக்குறா… நான் தான் லேட்…என் மண்டைக்கு இப்போ தான் புரிஞ்சுது” தன்னை நொந்த படியே கூறினான் அன்பு 

 

“எப்படிபா இவ்ளோ உறுதியான சொல்லுற?”என்ற ஜானகியின் கேள்விக்கு புண் முறுவல் மட்டுமே பதிலாக வந்தது… 

 

அதை பற்றி இப்போது கேட்க வேண்டாம் என்று மூவரும் விட்டுவிட…”இனியா எங்கம்மா இருக்கா” என்றான் அன்பு 

 

“ஓஹோ இப்போ எல்லாம் இனியா இல்லாமல் இருக்க முடியலயோ… அவுங்க இருக்க இடத்தை சொல்லுயே ஆகணுமோ!!” என்றான் தன் பங்கிற்கு வம்பிழுத்த படி 

 

“அவ  அம்மனுக்கு அபிஷேகம் பண்ண தண்ணிய வீடு முழுக்க தெளிக்க போயிருக்காபா.. போய் பாரு” என்று அனுப்பி வைத்திட… அன்பும் உட்சாகமாய் அவளை தேடி சென்றான்…. 

 

“அம்மா… நீங்க எனக்கும் கூட இந்த மாதிரி திட்டம் போட்டு ஒரு பொண்ணை செட் பண்ணி குடுத்தா என்ன?.. ரெண்டு மருமக இருந்தா உங்களுக்கு உதவியா இருக்குமேனு சொன்னேன்” என்றான் இலக்கியன் 

 

“அது வந்து இலக்கியா.. ஒரு பொண்ண பாக்கலாம் தான்… ஆனா அப்படியே நான் பார்த்து வெச்சாலும்… உன்னால அதை ஒழுங்கா காப்பாத்திக்க தெரியாதுடா… உன் வாயாலேயே கேட்டு போவ” என்ற செல்லம்மாவை… 

 

“ஏன்….,,, ஏன் நான் ஓழுங்கா காப்பாத்திக்க மாட்டேன்… எனக்கு எல்லாம் எவ்ளோ திறமை இருக்கு தெரியுமா” என்றான் கேத்தாக… 

 

“தெரியுமே… எல்லாம் எங்களுக்கு தெரியுமே… ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா… நீ அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்ட ராஜா” என்றார் ஜானகி சிரித்து கொண்டே… இருவரும் அவ்விடத்தை விட்டு நகர… அவர்கள் கூறியதால் முகம் சுருங்கியதை போல் அமர்ந்து இருந்தவன்… அடுத்த நொடியே 

 

“விட்றா விட்றா…. நம்மளோட சொந்த முயற்சில ஒரு பொண்ணா கல்யாணம் பண்றோம்” என்றவன் அடுத்த நொடியே “இத்தனை வருஷமா முடுயாலேயே இப்போ மட்டும் எப்படி” என்ற புலம்பிய படியே சென்றான் 

 

வீடு முழுதும் இனியாவை தேடியவன்… அவள் அங்கு இல்லாமல் போக… மாடு கொட்டகைக்கு சென்றவன்… அங்கு இனியா தண்ணீர் தெளித்து கொண்டு இருப்பதை கண்டவன்… அவளை நெருங்க 

 

அவனுக்கு முதுகு காட்டி தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தவள்.. அப்படியே பின்னால் நகர…அவளை நோக்கி வந்து கொண்டு இருந்த அன்பின் மேல் மோத… 

 

[the_ad id=”6605″]

 

 

தன்னை நிலை படுத்தி கொள்ள அடுத்த அடி எடுத்து வைக்க முயல… அது அவளின் காலை முறுக்கி விழும் படி செய்ய… தடுமாறியவளை அன்பு தான் அவளின் முதுகில் கைவைத்து தாங்கினான்… 

 

பின் சுதாரித்தவள்… பின்னால் நிற்கும் அன்பை பார்க்க… அவள் கண், முன் அவனை அந்த சாலையில் கண்டு… அங்கு நடந்தவை நினைவிற்கு வர.. அவசரமாக அவன் கண்ணை பார்த்தவள்… அங்கு பார்த்த அதே ஒளி… அதே மாற்றம்… தன்னை நிலைகுலைய வைக்கும் அதே உணர்வு… தன்னிலை ஊடுருவும் அதே பார்வை… தன்னுள் பல மாற்றங்களை உருவாகும் அதே விழி…. 

 

அந்த பார்வையில் மயங்கிய படி நின்றவள்.. சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து நகர ஒரு அடி எடுத்து வைக்க…வலி, கால் முழுதும் பரவி.. அவளின் முகத்திலும் அதன் தாக்கம் தெரிந்திட… அதை உணர்த்த அன்பு… அவளை தன் இரு கைகளாலும் ஏந்திய படி.. அங்கு அருகில் இருக்கும் வைக்கோல் கட்டின் மேல் அமர வைக்க… 

 

அன்பின் விழியில் விழி பார்த்து துளைத்து போனவளாய்…அவனின் செயலுக்கு  அசைந்து கொடுத்தாள் இனியா… 

 

அந்த இரவு நேரத்தின் மயக்கத்தில்… அந்த கொட்டகையில் இருக்கும் அரைகுறை வெளிச்சம்… அவனை எதோ செய்ய..அவளை அமர வைத்தவன்… கீழே ஒரு கால் மண்டி இட்டு அமர்ந்து… மறு காலில் அவளின் பாதத்தை எடுத்து வைத்தவன்…அவளின் காலில் காலணிகளை கழற்றி…கீழே எறிந்தவன்… அவளின் கண் பார்வையை நேரே சந்திதவன்… 

 

தன் பாக்கெட்டில் இருந்த, அவள் ரோட்டில் தவற விட்ட ஒற்றை கால் கொலுசை அவளின் காலை சுற்றி… அவளின் கணுகாளைகளை உரசியவாறே, கொலுசை அணிவித்தான்… 

 

அணிவித்தவன்… குனிந்து அவளின் பாதத்தில் தன் இதழ் படுத்தவன்… அவளை பார்க்க…இவர்களின் முதல் முத்தம் அவளுள் எதோ சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்த… அதில் கிறங்கி போய் எங்ககோ பரப்பது போல் இருந்தது இனியவளுக்கு… 

 

காலை மெதுவாக விடுவித்தவன்… மேலே எழுந்து… அவனை மயக்கும் அவளின் பார்வையை தந்த கண்ணிற்கு இதழ் முத்தம் ஒன்று கொடுத்திட…..ஏற்கனவே கிறங்கி இருந்தவள் தன் கட்டு பாட்டை முழுவதும் இழந்து… மந்திரித்து விட்டார் போல் அமர்ந்து இருந்தாள்… 

 

கண்ணிற்கு அடுத்து…அவளின் சிவந்து கிடைக்கும் கன்னங்களில் இதழ் பதித்தவனின் கை விரல்கள் அடுத்து  மென்மையாய், பட்டு போன்று இருக்கும் அவளின் கீழ் இதழை வருட…அந்த வருடலில் தாக்கம் அவனுள் அதிகமாக… 

 

அவள் இதழ் நோக்கி குனித்தவன்… அவனின் இதழோடு அவளின் இதழை மூடினான்… 

 

சாதாரண தீண்டலாக ஆரம்பித்த அவர்களின் முதல் முத்தம்… வேகம் எடுக்க… அவளின் இதழிலேயே உலகை அடைய முயற்சி செய்து கொண்டு இருந்தான் அன்பு… 

 

அன்பின் இந்த தீடீர் தாக்குதலை எதிர் பார்க்காத இனியா..  முதலில் அவனை விளக்க முயற்சித்தாலும்…அது எதுவும் எடுபடாமல் போக… அவளின் காதல் மனமும் விழித்து கொள்ள… அந்த முத்த யாத்திரையின் அங்கம் ஆனால்… 

 

எவ்வளவு நேரம் அவர்கள் இந்த போராட்டம் நீண்டது என்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்க.. அவர்களின் சுய நினைவிற்கு கொண்டு வந்தது மீனுவின் குரல் தான்… 

 

“இனியா… இனியா… எங்க இருக்க” என்று கத்தி கொண்டே வந்தவளின் குரல் இனியாவை முதலில் தாக்க… அதில் அவசரமாக அவனை விலக்கியவளை முறைப்புடன் பார்த்து “இப்போ எதுக்குடி தள்ளி வீட்ட” என்று மீண்டும் நெருங்க முயற்ச்சித்த அன்பை… முறைத்து விட்டு… 

 

கீழ் இறங்கி… இரண்டடி எடுத்து வைக்க… மீனு அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது… 

 

“மகாராணியை வந்து தான் அழைக்கணுமா… நீங்களே வந்து சாப்பிட மாட்டிங்களா? சீக்கிரம் வா…சாப்பாடு எடுத்து வச்சி இருக்கேன்.. சாப்பிட்டுட்டு பாத்திரம் எல்லாம் எடுத்து வைக்கணும்” என்றாள் மீனு காரமாக… 

 

“இதோ வருகிறேன்” என்பதை போல் அவளின் பின்னாலேயே சென்றவள்… செல்லும் போது அன்பை திரும்பி பார்க்க.. அவனோ விஷம பார்வையும், கள்ள சிரிப்புமாக காட்சி அளித்தான்… 

 

அவனிடம் முடிந்த வரை முறைத்து விட்டு வீட்டிற்குள் சென்றாள் இனியா 

 

உணவு சாப்பிட அவள் செல்லும் முன்பே… அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த இலக்கியனுக்கு எதிரில் அமர்ந்தாள் இனியா… 

 

இனியாவில் பின்னால் வரும் அன்பை பார்த்தவன்… “அண்ணா வாடா சாப்பிடலாம்… நாளைக்கு காயுக்கு நலங்கு வேற செய்யணுமாம்… அதனால சீக்கிரம் தூங்க போகணும்… சாப்பிடு ” என்றவனின் அருகில் அமர்ந்த அன்பு 

 

“நான் இப்போ தாண்டா புல் மீல்ஸ் சாப்பிட்டேன்… எனக்கு பசி இல்லை… நீயே சாப்பி்டு” என்றவனின் பார்வை இனியா மீதே பதிந்திட 

 

அவன் கூறிய அர்த்தம் புருந்தவளாய் “இவனை” என்று பல்லை கடித்து கொண்டு, முடிந்த வரை முறைக்க… அவனோ தெனாவட்டாக அவளின் இதழின் மீதே பார்வையை பதித்து இருந்தான்… அதில் மேலும் கூச்சம் வர… தட்டை மட்டுமே பார்த்து சாப்பிட துவங்கினாள் இனியா.. 

 

தட்டில் இருந்த சாதத்தில் ஒரு பிடியை வாயில் வைத்தவளின் முக மாற்றத்தை கண்ட அன்பிற்கு… அனைத்தும் புரிந்து போக… 

 

அடுத்த வாய் அவள் வைக்கும் முன்… தடுத்தவன்… அவன் உண்டு பார்க்க… அவனின் முகம் அஷ்ட கோணலுக்கு மாறியது… அதை கவனித்த இலக்கியன்… “என்ன” என்பதை போல் அன்பை பார்க்க… அவனோ தட்டை கண்ணால் ஜாடை காட்ட 

 

அவனும் ஒரு வாய் வைக்க… அது நாவில் வைக்க தகுதியற்ற உணவு என்பதை புரிந்தவன் அப்படியே துப்பி விட்டான்… 

 

இது அனைத்தும் யாரின் செயல் என்பதை யூகித்த அன்பு… மீனுவை அழைக்க.. அவளோ…. அன்பு அழைக்கிறான் என்ற குஷியில் ஓடி வர 

 

“மீனு, உங்க அண்ணன் கல்யாணத்துக்கு ரொம்பவே ஓடி ஆடி வேலை செய்யுற…வா வந்து சாப்பிடு… நானே உனக்கு பரிமாறுறேன்” என்ற படி அவளை அமர வைக்க.. 

 

அன்பு கூறுகிறான் என்ற ஆசையில் மறு பேச்சு பேசாமல் அமர்ந்தவள்… தன் முன் இருக்கும் உணவை கண்ணால் கூட பார்க்காமல் அன்பின் மேல் பார்வையை பதித்த படி… எடுத்து வாயில் வைக்க…அதன் பிறகு தான் அனைத்தையும் உணர்த்தவள்…

 

“இல்ல மாமா… நான் ஏற்கனவே சாப்டுட்டேன். எனக்கு பசி இல்ல”என்று சொன்னவளை விடாமல் இரண்டு வாய் சாப்பிட வைத்தவர்கள்… மூன்றாம் வாய் வரும் போது….அன்பு அதை தடுத்து 

 

“ரெண்டு வாய் சாப்பிடவே உனக்கு கஷ்டமா இருக்கே… அப்போ இத்தனை நாள் இனியாவுக்கு இதை தானே நீ குடுத்த…அவ எவ்வளவு கஷ்ட பட்டு சாப்பிட்டு இருப்பா” என்று இனியாவிற்கு சாதகமாய் பேச… அதில் கோவம் கொண்ட மீனு 

 

“என்ன இனியா இனியான்னு எல்லாரும் அவளோட புராணமே பாடுறீங்க… அவ என்ன வானத்துல இருந்தா குத்துச்சா…என் அண்ணனோட கல்யாணத்துல இவ யார் வேலை பார்க்கறதுக்கு…எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யுறா…அதனால தான் இன்னைக்கு காலைல வழுக்கி விழட்டும்னு எண்ணெயை ஊத்தினேன்… இப்போ கேட்டு போன சாப்பாட்டை குடுத்தேன்” என்றாள் எதோ தன் மேல் குற்றம் இல்லாதது போல… 

 

“இல்லை மீனு.. நான் இங்க இருக்றதே இந்த கல்யாணத்துக்கு தான்… அதுக்கு அப்றம் போய்டுவேன்…அதுக்குள்ள நீ என் இப்டி பண்ணுரே” பரிவாய் பேசிய இனியாவை 

 

“ஏய்… நீ வாயை மூடு… நீ யார் இந்த வீட்டுல… இது என்னோட வீடு… இங்க நீ எனக்கு அதிகாரம் பண்ணாத” என்று, அவள் முடித்தது தான் தாமதம்… 

 

இலக்கியனின் ஐந்து கை விரல்களும் அவள் கன்னத்தை பதம் பார்த்தது…அதில் அதிர்ந்தவள்… 

 

“என்னையாவா அடிச்ச…அதுவும் இவளுக்காக… அம்மா கிட்ட சொல்லி இவளை என்னை பன்றேன் பாரு” என்று பொங்கியவளை 

 

“ஆமாம் ஆமாம்… போ போய் கூட்டிட்டு வா… உங்க அம்மாவ… அவுங்க அருமை பொண்ணு பண்ண விஷயத்தை சாட்சியோடு காமிக்க உதவியா இருக்கும்” ஏகாதலமுடன் பதில் அளித்தான் அன்பு… 

 

தான் முற்றிலும் மாட்டி கொண்டோம்… தப்பிக்க வழி இல்லை என்பதை புரிந்தவள்… அழுது கொண்டே தன் அறை புகுந்தாள்… 

 

பின் சாப்பிடும் மனத்து அங்கு யாருக்கும் இல்லாமல் போக… அன்பு ஜானகியை தேடி, நாளை சடங்கிற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய போக… 

 

இனியா வைஷுவிடம் செல்ல… இலக்கியன் தன் அறை சென்றான்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

சென்றவன்… தன் அறையில் கண்ட காட்சி அவனை அதிர செய்ய… “ஹையோ”… என்று கத்திய படியே திரும்பி கொண்டான் 

 

அங்கு விக்கியும் காயுவும் ஒருவரை ஒருவர் அணைத்த படி… காதல் உலகில் பயணித்து கொண்டு நிற்க… அதை அறைக்குள் நுழைந்த இலக்கியன் பார்த்து விட்டான்… 

 

அவனின் கத்தலில் விலகியவர்கள்… இலக்கியன் அருகில் வந்து நிற்க… அப்போது அவர்கள் பக்கம் திரும்பிய இலக்கியன்… 

 

வெக்க பட்டுக்கொண்டு… தரையை பார்த்த பிடி… காலில் கோலம் இடும் விக்கியும்,  தைரியாமாய் அவனை எதிர்கொள்ளும் காயுவும் பட 

 

“நம்ப குடும்பத்துல பொன்னுங்க வெக்க படவே மாட்டாங்க போல… பாரு எப்படி நிக்குதுனு”… விக்கியை பார்த்தவன் “டேய்…ச்சீசீ… வெக்க படாத… பாக்க சகிகளை” என்றான் கடுப்புடன்… 

 

பின் செல்ல முற்பட்ட காயுவின் பின்னாலேயே செல்லும் விக்கியை அழைத்தவன்… “சார் நீங்க எங்க போறீங்க….அவளுக்கு கீழ  போக வழி தெரியும்… நீ மூடிக்கிட்டு இங்கயே இரு” என்றவன் 

 

“மச்சா… என்னடா இப்டி பண்ணுற… நீ தான் காயு கூட நான் பேச உதவி பண்ணனும்… நீயே இப்டி பண்றியேடா” என்றான் சலிப்புடன் 

 

“டேய்… நான் அவளுக்கு அண்ணன்டா… மாமா வேலை பாக்க சொல்லிற” என்றவரிடம் “நாளு பேரு நல்லா இருக்கணும்னா செய்யலாம் மச்சி தப்பில்ல” என்றவனை கொள்ளும் பார்வை பார்த்தவன் 

 

“யாரு அந்த நாளு பேரு? நீ காயு உனக்கு பிறக்க போற ரெண்டு குழந்தைகள்…அப்டி தானே” என்றான்  கடுப்புடன் 

 

“ஆமாம் மச்சா” என்றான் விக்கி இளித்து கொண்டே…. 

 

அதில் கடுப்பானவன்… “சோதிக்காதீங்கடா என்னய்யா… எந்த பக்கம் பார்த்தாலும் லவ்வோ லவ்வா இருக்கு… நானும் பாவம் இல்லையாடா” என்றான் இல்லாத கண்ணீராய் துடைத்த படி 

 

  

 

                  மாயம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!