Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 25 1

ஜெய் ஸ்ரீ ராம்

 

 

 



Advertisement

EPI-25

 

 

Advertisement

 

Advertisement

ஹே ஸ்ரீ இது ஒரு ப்ரோப்லேம்னு காலையிலே எதுக்கு  அழுதுட்டு  இருக்க   பொறுமையா தேடலாம் இங்க தான் இருக்கும்   வா இளநீர் சாப்பிடு நான் அப்புறம் தேடி தரேன் என்று இளநீரை நீட்ட

 

எனக்கு இப்போவே  வேணும் மாமா ஒழுங்கா தேடுங்க      என்று முகத்தை தூங்கி    வைத்து கொண்டாள்

Advertisement

 

ஹே இப்போ என்ன நான் தானே  போட்டு விட்டேன்  நான்  தானே கழட்டினேன்  நானே ஒன்னு புதுசா வாங்கி தரேன்   போட்டுக்கோ    என்று ஈஸியாக சொல்லவும்

 

மதுவின் ஆத்திரத்திற்கு அளவு இல்லாமல் போனது

 

நீங்க நெனச்சா போட்றதுக்கும் கழற்றதுக்கும் அது என்ன  வெறும்  சைனுன்னு  நெனச்சீங்களா  அமெரிக்கா போயிட்டு  வந்தா   நம்ம வழக்கத்தை எல்லாம் மறந்துடுவீங்களா

 

நான் ஒரு மடச்சி  நீங்க சொன்னதும் செய்ஞ்சேன் இல்ல  என்ன  சொல்லணும்  ஏற்கனவே  ஏகப்பட்ட பிரச்சனை  எல்லாம் முடிஞ்சதுனு நெனச்சேன்  இப்போ இது வேற   உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு எனக்கு ரொம்ப பயமா   இருக்கு

 

ஸ்ரீ டென்ஷன்  ஆகாத   கிழவி மாதிரி இந்த தாலி சென்டிமென்டலாம் பாக்குற  அது மிஸ் ஆனா எனக்கு ஏதாவது ஆகிடுமா  இதுக்கு தான் அம்மா கூட உட்காந்து நெறய சீரியல் பாக்காதனு சொல்றது

 

என்றவன் தன் தலையோடு அவள் தலையையும் சேர்த்து செல்லமாக முட்டி சிரிக்க

 

நான் கிழவியா என்று சிலிர்த்து எழுந்தவள் நான் அதை கழட்டாமல் இருந்ததால தான் நீங்க மூணு வருஷம் கழிச்சு நல்ல படி திரும்பி வந்திங்க  உங்கள என்கிட்ட கூட்டிட்டு வந்ததே அந்த தாலி தான் அது மட்டும்    இப்போ கிடைக்கல அவ்ளோதான் நீங்க          என்று மிரட்டியவள் மீண்டும் தேட ஆரம்பித்தாள்

 

மது தெரிந்து சொன்னாலோ தெரியாமல் சொன்னாலோ அவனை அவளிடம் கொண்டு வந்து சேர்த்தது என்னாமோ இந்த தாலி  என்பது தான் உண்மை

 

அன்று ஒரு நாள் இரவு வீட்டு தோட்டத்தில்  அவள் தந்தையின் நினைவில் அழுது கொண்டே உறங்கி இருந்த சமயத்தில்  அவள் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து விட்டு தான் அவளிடம் அவன் நெருங்கியதே!!!

 

தன் லோயர்  பாக்கெட்டில் காய் விட்டவன் அதில் இருந்ததை அவள் கழுத்தில் அணிவிக்க  அரக்க பறக்க தேடி கொண்டிருந்தவள் என்னவென்று பார்க்க அவளின் தாலி சையின்

 

அடப்பாவி நீ வச்சிக்கிட்டு தான் என்னை தேட  விட்டயா  என்று  அவனை அடிக்க துரத்த அவளிடம் சிக்காமல் தப்பித்து கோண்டே

 

அடியே என் ஆசை பொண்டாட்டி    நீ தூங்கி எழுந்ததும் கொடுக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள   நீ நல்லா   பீல்  பண்ணிட்டு இருந்த  சரி எவ்ளோ நேரம் போதுன்னு பாத்துட்டு இருந்தேன்  சும்மா சொல்ல  கூடாது செம பர்பாமன்ஸ்

 

அடிங்க     என்று அவனை நெருங்கியவள் அவனின் வெற்று முதுகில்  அடிக்க   அவளின் அடிகளை வாங்கி கொண்டே அவன் நிமிரவும் பழனி அவ்விடம் வரவும் சரியாக இருந்தது

 

இவர்களின்  அந்நியோன்னியத்தை  கண்டவர் வாஞ்சையுடன் புன்னகைத்து அங்கிருந்த தென்னந்தோப்பினுள் நுழைய இவர்களும் அவரிடம் தலை அசைத்து விட்டு அவரவர் வாகனத்தில் வீடு திருப்பினர்

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய இரவின் இனிமைகளோடு அந்த நாளும் சிறப்பாகவே சென்றது   திருப்பதிக்கும்  காவேரிக்கும் பிள்ளைகளின் நேற்றைய கோபம்  போய் இன்றய இனிமையை கண்டு மகிழ்ச்சியே!!!

 

நேற்றைய இரவின் பின் மது விற்கும் அவனின் மேல் இருந்த எல்லாம் கசப்புகளும் மறந்து விட்டிருந்தது  எவன் சொன்னான் ஐ லவ் யூ சொன்னால் மட்டும் தான் காதல் என்று  அதை வாயால் சொல்லாமல் உணர்விலும் வெளிப்படுத்த முடியும்

 

சக்தியும் அதைத்தான் உணர்த்தி அவளையும் உணர வைத்து விட்டான்  மதுவின் மனம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மகிழ்ச்சியாய் இருந்தது  ஏன் யுஎஸ்ஏ விற்கு இவளை விட்டு சென்றதை கூட மறந்து விட்டிருந்தால்

 

அவளைப் பொறுத்தவரை கனவன் அவன் மனதில் அன்றும் இன்றும் என்றும் அவளே!!அவள் மேல் அவன் கொண்ட காதல் தானே !!!ஆண் என்ற கர்வத்தையும் மறந்து அவளுக்கு இவ்வளவு பணிவிடை செய்கிறான்

 

அவளின் மனம் அறிந்து நடக்கிறான்  இதைவிட ஒரு பெண்ணிற்கு வேறு என்ன வேண்டியிருக்கிறது  இந்த நொடி இந்த உலகத்தில் மகிழ்ச்சியானவர் யார் என்றால் நான் மட்டும்தான் என்று சொல்வாள்

 

நொடிகள் நிமிடங்களை கடந்து நாட்களாய் மாற இப்போது மதுவின் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே !!!

 

ஆம்  அவளுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் கணவன் அவளிடம் கேட்டது அவளுடைய மதிப்பெண்கள் மட்டுமே!!! கல்லூரியின் எல்லா மாணவர்களிடமும் துணை முதல்வரை கேட்டுக் கொண்டதோடு அவளை கணவனாகவும் கேட்டது

 

இறுதி ஆண்டு என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே அவனது கோரிக்கை  அவளின் எதிர்காலத்திற்கும் இது நன்மை தானே!!! அதனால் அவளும் முழு மூச்சோடு இறங்கிவிட்டால்  இயல்பிலேயே நன்றாக படிக்கும் மாணவிதான் அதற்கு அவளின் பள்ளி மதிப்பெண்களும் ஒரு சான்று கணவன் உடன் இல்லாத கசப்பினாள்

 

படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாள்  பாசானால் போதும் என்று நிறுத்தி விட்டு இருந்தால்  திறமை இருந்தும் இப்படி இருக்கிறாளே!!! என்று தான் சக்தி ஆரம்பத்தில் அவளை கடிந்து கொண்டான்  அதன்பின் இதற்கு காரணம் தான் என்று புரிந்ததால் அவனே அதை களையவும் செய்துவிட்டான்

 

தினகரன் இல்லாத காரணத்தால் அலுவலக விஷயங்கள் ஆரம்பத்தில் புரியாமல் சற்று தடுமாறி நிஷாவும் சக்தியும் கற்றுக்கொண்டனர்  நிஷாவிற்கு இதோடு பள்ளி வேலைகளும் இருப்பதால் கல்லூரியில் அனைத்துப் பொருட்களும் சக்தி உடையதாக மாறிவிட்டது

 

அதிக வேலை காரணமாய் மதுவை தனியாகவே கல்லூரிக்கு சென்று சென்று வர கூறி இருந்தான்  அவளும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டால்  இரவு உணவு மட்டும் இருவரும் இணைந்து உட் கொண்டனர்

 

ஒரு பக்கம் மனோ காவியாவின் காதல் குறுஞ்செய்திகளும் வீடியோ காலிலும் வளர்ந்து கொண்டிருந்தது  ஏ ஆர் ரகுமான் இசைக்கும் அனைத்து இசைகளும் இவர்களுக்காகவே என்பதுபோல் கனவுலகில் சுற்றிக் கொண்டிருந்தனர்

 

தினகரன்   சதீஷ்   சுரேஷ் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றனர்  கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் இவர்களின் முகங்கள் மற்றும் கல்லூரியின்பெயரும் வெளிவராமல்  தனியார் கல்லூரி என்று மட்டுமே !!!செய்திகளில் கூறப்பட்டது

 

நாட்கள் மாதங்களக்ளைமாரி மதுவின் தேர்வுகளும் முடிவடைந்து விட்டது

 

இன்று காலையில் இருந்து மதுவின் மாமாக்கள் இருவர் வீட்டிலும் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்தது  காரணம் என்னவென்றால் சற்று முன்னர் அவர்களுக்கு எட்டிய நற்செய்தி

 

அர்ஜுன்   தமிழினி தம்பதியினரின் இரண்டாவது மகவு உறுதி செய்யப்பட்டுள்ளது   யாழினி பிறந்து நான்கு வருடங்கள் முடிந்து  இப்போது கர்ப்பம் தரிப்பதால் வீட்டினர் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி  கங்கா   காவேரி  சக்தி மது அனைவரும் சென்னை செல்லவிருப்பதால் தான்இவ்வளவு ஆர்ப்பாட்டமும்

 

யாழினி கருவில் இருக்கும் பொழுது மூன்று மாதத்திலேயே தமிழினி கிராமத்திற்கு வந்து விட்டால்  அதேபோல் இப்போதும் அழைத்து வந்துவிடலாம் என்று கூற   அது முடியவே முடியாது என்று அர்ஜுன் மறுத்து விட்டான்  இது மறைமுகமாக தமிழினியின் முடிவும் கூட

 

கர்ப்பமாய் இருக்கும்போது தாய் வீட்டில் இருப்பது நம் நாட்டின் நியதி என்றாலும் பெண்கள் கணவனை விட்டுப் பிரிவதை விரும்புவதில்லை  கணவனுடன் இருக்கவே  தமிழினியும்  விரும்புவதால் இரண்டாவது குழந்தைதானே என்று அவள் பிறந்த வீட்டிலும் சரி என்று விட்டனர்

 

அதோடு பரிமளாவும் தமிழினியை தன் பிள்ளை போல் அக்கறையாய் பார்த்துக் கொள்வதால்  யாழினியும் பள்ளிக்குச் செல்வதால் தாயைப் பிரிந்து வாடாமல் இருக்கும்  என்பதும் ஒரு காரணம்

 

சென்றவர்கள் இரண்டு நாள் இருந்து விட்டு திரும்ப   தமிழினி கரு உருவாகி இருப்பதாள் மதுவிற்கு கல்லூரி முடிந்து விட்ட காரணத்தினால் அவளின் தாய் சென்னையிலிருக்கச் சொல்ல   சக்தியை பிரிய மனமே இல்லாமல் ஒத்துக்கொண்டாள்

 

ஒரு மாதம் கழித்து வந்தவன் செய்த காரியம் மதுவிற்கு அவ்வளவு  கஷ்டமாக         இருந்தது        என்பதை விட அதிர்ச்சியாக இருந்தது

 

[the_ad id=”6605″]

 

 

 

சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் அவளுக்கு  மாஸ்டர்ஸ் அட்மிஷன் போட்டுவிட்டு வந்திருந்தான்

 

இவனைப் பிரிந்த ஏற்கனவே ஒரு மாதம் அவளுக்கு ஒரு யுகமாய் கடந்து சென்றிருக்க  இவனால் இவ்வளவு ஈசியா இந்த வேலையை செய்து விட்டான்

 

நாம் இவனைப் போல் ஒரு குழந்தையை கற்பனை செய்து கொண்டிருக்க  இவன் இப்படி செய்துவிட்டானே !!!என்னை பிரிவது இவனுக்கு வருத்தம் இல்லையா   என்று ஆற்றாமையாய் வந்தது

 

என்ன ஆனாலும் முடியவே முடியாது  நான் படிக்கப் போவதில்லை என்று வீட்டில் அனைவரிடமும்  எடுத்துக் கூற   அவர்களை சுலபமாக சமாளித்தவன்

 

இவளை தனிமையில் அழைத்து அலுங்காமல் குலுங்காமல் அவள்   தலையில் ஒரு குண்டை போட்டு விட்டான்

 

நீ மட்டும் சரி என்று சொல்லவில்லை  என்றால் நான் திரும்ப அமெரிக்கா சென்று விடுவேன்     என்பது தான் அது

 

அவள் அவனை நம்பாமல்  பார்க்க   அதை உணர்ந்து தன் நண்பன் பைந்தமிழிற்கு  அழைக்க   அவன் அவர் அழைப்பை ஏற்று    சொல்லு ப்ரோ    என்றதும்

 

ஹான் பங்கு எப்போ அமெரிக்கா போலாம்னு கேட்ட இல்லையா   நாம ரெண்டு பேரும் அமெரிக்கா போறோம்  இன்னும் ரெண்டு நாள்ள   டிக்கெட் இருக்கான்னு பாரு     என்றதும்

 

அந்தப் பக்கமிருந்த பைந்தமிழ்    நான் எப்போ ப்ரோ அப்படி சொன்னேன்

 

எங்க பங்கு ஏர்போர்ட்ல தான் இருக்கியா   உன் செகரட்ரிக்கு வரலை அவனுக்கு போட்ட டிக்கெட் இருக்கா  எப்போ பிலைட்  ஈவினிங்க் சரி சரி

 

அங்கு பைந்தமிழோ தன்னைச் சுற்றிப் பார்த்தான்  கர்நாடகாவில் ஏதோ ஒரு கிராமத்தில் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தான்  இந்த ஊருக்கு பஸ் வருதோ இல்லையோ!!! நான் பிளைட்டுக்கு எங்க  போவேன் என்று பெருமூச்சு விட

 

சக்தி    ஓகே நான் சென்னையில தான் இருக்கேன்  இன்னும் 30 நிமிஷத்தில் உன் முன்னாடி நிப்பேன் வைக்கவா

 

சரி அப்படியா வா வா என்றவன் மொபைலை அனைத்து திடீர்னு இவன் என்ன லூசாய்டானா  நாம தான மப்புல எப்பவும் உளறுவோம்  அப்பவே இந்த சொந்தம் குடும்பம்   பொண்டாட்டி அப்படின்ற காமெடி எல்லாம் வேணாம் சொன்னேன்

 

[the_ad id=”6605″]

 

 

கேட்டானா  நைட்   கூப்பிட்டு பேசணும் என்று தன் வேலையை பார்க்க சென்று விட்டான்

 

சக்தி பேசியதைக் கேட்ட மதுஸ்ரீ திக்பிரமை பிடித்து நின்று கொண்டிருந்தாள்  அவளின் முன் காவேரி திருப்பதியின் மகிழ்ச்சி படர்ந்த முகம் நிழலாடியது

 

இவன் நிற்கும் தோரணையை பார்த்தால் போய்விடுவான் என்று தான் தோன்றியது  பின்  என்ன செய்ய   வாராவாரம் சனி   ஞாயிறு பார்க்க வர வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டாள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!