Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 25 2

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க மதுவின் கான்வகேசன் வந்தது  அவளின் பிரிவில் அவள் தான் முதல் மதிப்பெண்  தோழிகள் வாழ்த்துக்கூறி மேடையில் ஆடுவதற்கு இவளை அழைக்க அனைவரின் முன்னும் ஆட விருப்பமில்லாமல் மறுத்துவிட்டாள்

 

அன்று இரவு எப்போதும் போல் கணவன் அழைக்க    அவள் எடுக்காமல் போக அர்ஜுன்  வந்து அவன் மொபைலை கொடுத்துவிட்டு சென்றான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தினமும் நடந்து கொண்டிருப்பதால் வீட்டினரும் கண்டு கொள்ளவில்லை

 



Advertisement

அவள் மொபைலில் அழைத்தால் எடுக்காமல் இருப்பவள்  அர்ஜுனுக்கு அழைத்தால் மறுக்காமல் பேசுவாள்  சக்தி இவளின் சிறுபிள்ளை தனத்தை கண்டு கோபம் கொள்ளாமல் அதையும் ரசிக்கவே செய்தான்

 

சிறிது நேரம் பேசிய பின் தோழிகள் கூறியதை கூற    வேண்டாம் என்று  இவன் மறுக்க    பழைய மது தலை தூக்கி விட்டாள்  அதுதான் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மது

Advertisement

 

Advertisement

மறுநாளே டான்ஸ் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டாள்  சக்திக்கு சொல்லக்கூடாது இது சஸ்பென்ஸ் என்று விட    வீட்டினரும் அமைதி காத்தனர்  ஒருவழியாக விழா நாளும் வர

 

சீப் கெஸ்ட்டாக அர்ஜுனையும் நிஷாவின் தந்தையையும் அழைத்திருந்தால் நிஷா  எப்போதும் போல்  பிரவீன் பொறுப்பை ஏற்க    விழாவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது

Advertisement

 

சக்திக்கும் நிஷா விற்கும் அனைத்தையும் சரி பார்ப்பதே வேலையாக இருக்க    அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று  பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர்

 

அப்போது மேடையிலிருந்த பிரவீன் CS பிரிவினர் என்று அழைக்க    சக்தி எதேச்சையாக மேடையை பார்க்க    அவன் மனையாள்     கவி   கனி இருவருக்கும் இடயில் சமீபத்தில் வெளியான படத்திலிருந்து குத்து பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தாள்

 

ஆடும் விதம் அழகாய்த்தான் இருந்தது  ஆனால் சுற்றியிருக்கும் மாணவர்களின் விசில் சத்தமும் உற்சாகக் குரல்களும் சக்தியின் காதில் புகையை கிளப்பியது

 

சிறப்பு விருந்தினராணா நிஷாவின் தந்தையை உரையாற்ற அழைக்க சமூகத்தில் நம்மை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு தீயவராக இருந்தாலும் நாம் எப்போதும் நல்லவர்களாய்    நியாய மானவர்களாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி விட்டுச் செல்ல

 

[the_ad id=”6605″]

 

 

 

அடுத்த காவல் ஆணையர் அர்ஜுன் மேடையேறி பெண்கள்    மற்றவர்கள் தங்களை சீண்டினால் எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்  எத்தகைய பிரச்சனை வந்தாலும் ஒடுங்கி சமுதாயத்தை விட்டுவிலகி வாழாமல் எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வாழ வேண்டும் என்று கூறி

 

சாலைகளில் பைக் ரேஸ் விடுவது போன்ற சட்ட விரோதமான செயல்களை செய்யாமல்    சாலை விதிகளை எப்போதும் மதித்து நடந்து விபத்துகளை குறைக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்

 

எவ்வளவு படித்து வாழ்வில் உயர்ந்து பெரிய வேலைக்கு சென்றாலும் விவசாயத்தையும் கைவிடாமல் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உரையை முடிக்க அங்கு விசில் சத்தம் காதை கிழித்தது

 

பெண்களும்   சார் நீங்கள் சிங்கிளா    கமிட்டடா    சிங்கிளா  இருந்தா நாங்க ரெடி      என்று கத்திக் கொண்டிருந்தனர்  இன்னும் சிலர்   நீங்க அப்படியே காக்க காக்க சூர்யா இல்லை இல்லை சிங்கம் சூர்யா மாதிரியே இருக்கீங்க      என்று  கூறிக் கொண்டிருக்க    ஒரு அழகான புன்னகையோடு அவர்களைத் தவிர்த்து விட்டான்

 

முன் சக்தியின் காதல் கிளம்பிய புகையை விட இரண்டு மடங்கு தமிழின் காதில் கிளம்பியது

 

மாணவர்களுக்கு பட்டம் அளிக்க ஆரம்பிக்க நிஷாவின் தந்தையும் அர்ஜுனும்             ப ட்டமளித்து வாழ்த்து தெரிவித்தனர்  நிஷாவும் சக்தியும் மேடையிலேயே சற்று ஒதுங்கி நின்று இருந்தனர்  பிரவீன் தன் ஆழ்ந்த குரலில்   அடுத்ததாக மிஸஸ்  மது ஸ்ரீ சக்தி பிரியன் என்று அழைக்க மதுவே ஒரு நொடி ஜெர்க் ஆகி விட்டாள்

 

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் ஒரு நொடி நிசப்தத்தில் அதிர்ந்தது  அவளை இன்று தன் மனைவியாக அறிமுகப்படுத்த தான் ஆட வேண்டாம் என்றான்  இவள் எங்கே கேட்டாள்   முட்டைக்கண்ணி   என்று அவளை பார்த்து வாயசைக்க

 

சட்டென்று சுதாரித்த மதுஸ்ரீ நிஷாவின் தந்தை அருகில் சென்று நிற்க   பிரவீன் அவளை பார்த்து   மிஸஸ்  சக்தி பிரியன்  உங்க வெற்றிக்கான கரணம் என்ன என்று வினவி   அவளிடம் மைக்கை நீட்ட

நிஷாவின் தந்தையிடம்   இப் யூ டோன்ட் மைன்ட்    என் குடும்பத்தை இங்கு அழைக்கலாமா   என்க    அவர் அருகில் வந்த சக்தி வேண்டாம் என்று மறுக்க

 

அவர் புன்னகையோடு சரி என்று ஒத்துக் கொண்டார்    மாமா    அத்தை வாங்க என்று அழைத்த பின்னரே அம்மா வாங்க என்று அழைத்தாள்  மொத்த குடும்பமும் மேடையேற

 

எவ்வளவு பெரிய குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று அனைவரும் பார்த்திருந்தனர்  பெரியவர்களை முன் விட்டு தமிழின் பின்னால் மானோ யாழினியை தூக்கி கொண்டு மேடையேறி கொண்டிருந்தான்

 

மேடையேறிய  அதே சமயம் புடவையின் கீழ் தலைப்பு காலில் பட்டு தமிழினி சற்று தடுமாற    மேடையில் இருந்து பாய்ந்து வந்த அர்ஜுன் அவளை தாங்கி பிடித்து விட்டான்

 

சக்தி தேவையா என்று குற்றம் சாட்டும் பார்வை பார்க்க     மதுவின் உற்சாக முகம் வாடியது  திருப்பதி மேடை என்றும் பாராமல்   மது குட்டியை எதுக்கு தேவையில்லாம முறைக்கிற    தமிழை மாப்பிளை பிடிச்சிட்டாரு இல்லை விடு   என்று கடிந்து கொள்ள

 

மற்றவர்களுக்கு இது கேட்கவில்லை என்றாலும் அருகிலிருந்த நிஷாவின் தந்தை பிரவீன் அனைவரும் காதிலும் விழுந்தது சற்று சங்கடமாக இருந்தது  பின் அனைவரும் திரும்பி சக்தியை பார்க்க    அவன் முகம் வாடவோ    கோபமோ இல்லை சாதாரணமாகத்தான் இது எனக்கு அடிக்கடி வழக்கம் என்பது போல்இருந்தது

 

இவங்க எல்லாரும் தான்  இந்த வெற்றிக்கு காரணம்    என்ற அழகான  புன்னகையோடு பட்டத்தைப் பெற்றவள்    பின் அனைவரோடும் கீழிறங்க திரும்ப   சக்தியின் விழிகளில் அவளை மெச்சும் புன்னகை எட்டிப் பார்த்தது

 

போட்டோகிராபர்   சார்    ஃபுல் ஃபேமிலிய ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்றார்  அவர் இதுபோல் பெரிய குடும்பத்தை திருமணம் போன்ற வைபவங்களில் மட்டுமே பார்க்க முடியும்

 

அப்படியே பார்த்தாலும் ஒரு சிலரின் முகத்தில் கோபம் தான் இருக்கும்   சிரிப்பை போட்டோவிற்காக கேட்டாலும் கிடைக்காது  இங்கு என்னடா வென்றால் பற்பசை விளம்பரம் போல் சிரித்துக் கொண்டிருந்தனர்

 

நிஷாவின் தந்தை    பிரவீன்  இருவரும் தள்ளி நிற்க    அர்ஜுனும் தள்ளி வருவான் என்று கீழே இருந்தவர்கள் எதிர்பார்க்க    அர்ஜுனோ  யாழினியை மனோவிடம் இருந்து கையில் வாங்கிக்கொண்டு  தமிழினியுடன் இணைந்து நின்றான்

 

அவன் அவ்வாறு நின்றதும் கீழ் இருந்த பெண்களின் கூட்டத்தில் ஒரே சத்தம் எழ அதை எதுவும் கண்டு கண்டு கொள்ளாமல்  சிறு புன்னகையோடு போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்றுகொண்டிருந்தான்  அந்த நொடியில் தமிழினியின் மனதில்

 

[the_ad id=”6605″]

 

 

 

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேராய் பார்த்து தான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடலொன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

 

என்று முணுமுணுத்துக்கொண்டது  மது திரும்பி சக்தியை ஒரு பார்வை பார்க்க சக்தியும் அமைதியாய் மதுவின் அருகில் நின்று கொண்டான்

 

சக்தியின் செயலை பார்த்த பிரவீனுக்கு சிரிப்புதான் வந்தது  அன்று சுரேஷை அவ்வளவு அடித்தவன்   இன்று மனைவியின் ஒரு பார்வையில் அமைதியாக நின்று விட்டானே!!! என்று  இருந்தது ம்ம் எல்லோரும் தன்னை போலத்தான் என்று சிரித்துக் கொண்டான்

 

இவர்களின் குடும்ப ஒற்றுமையைப் பார்த்த சிலர் அந்த குடும்பத்தில் நாமும் இணைந்து விடலாம்  என்று தனித்திருந்த மனோவை பார்த்திருக்க    மது போட்டோகிராபரிடம்    ஒன் செகண்ட்’ என்றவள்  அதுவரை மாணவிகளோடு நின்று இவர்களை ரசித்த காவியாவை அழைத்து மனோவின் அருகில் நிற்க வைத்து   இப்போ எடுங்க   என்றாள்

 

மதுவின் செயளால் காவியாவின் விழிகளில் வெளியில் வராமல் நீர் கோர்த்து விட்டது  அதை உணர்ந்தவனாய் மனோவும் காவியாவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான்

 

வீட்டினர் அனைவரும்  மகிழ்ச்சியோடு பார்த்திருக்க    அழகான ஒரு குடும்ப போட்டோ வை கிளிக் செய்து விட்டார் அந்த போட்டோகிராபர்  அவரைக்கேட்டால் இந்த வருடம் எடுத்த சிறப்பான புகைப்படம் இந்த புகைப்படம் என்றே கூறுவார்

 

மனோவை பார்த்திருந்த பெண்களோ வட போச்சே என்ற ரியாக்ட்ஷனில் இருந்தனர்

 

அன்றைய விழா சிறப்பாக முடிய அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்  அடுத்த நாள்  மனோ   மது வோடு சேர்த்து பரிமளாவின் குடும்பம் சென்னை செல்ல நினைக்க

 

அங்கிருந்து மதுவை கிளப்புவதற்குள் அனைவருக்கும் போதும் என்றானது  காவேரி அனைத்து நின்றவள் நகரவே மாட்டேன் என்று அடம்பிடிக்க    அவர் இங்கவே இருக்கட்டும் என்று தன்மகனை பார்க்க

 

சக்தியும் ஒரு நொடி இங்கேயே வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தவன்  மனைவியின் வளமான எதிர்காலம் இதனால் கெட கூடாது என்று எண்ணி    தன் மனதை கல்லாக்கிக்கொண்டு

 

காவேரியிடம் இருந்து பிரித்து அவளை வழி அனுப்பி விட்டான்  அவனுக்கு மட்டும் அவளைப் பிரிந்து கஷ்டம் இல்லையா    என்ன    ஆனால் அவன் கஷ்டத்தை விட அவளுக்கு மாஸ்டர்ஸ் தான் முக்கியம்  என்று அவனுக்கு தோன்றியது

 

அவளை பிரிய மனமில்லாமல் அவளோடு சென்னையில் வசிக்க தான் காலேஜில் ரெசிக்னேஷன் கொடுத்தான்  நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை

 

[the_ad id=”6605″]

 

 

 

பின்பு என்ன செய்வது இரண்டு வருடம் தானே சமாளித்து தான் ஆக வேண்டும் என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்  ஒருவழியாய் மாதங்கள் கடந்து வருடங்களாக அந்த ஒரு வருடமும் இரண்டு வருடங்கள் ஆனது

 

இதற்குள் அர்ஜுன் தமிழனியின் மகன்  இந்த பூமியில் அடி எடுத்து வைத்து விட்டு இருந்தான்  கணவனைப் பிரிந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சின்ன குட்டியின் வரவில்     ராஜகுமாரி மதுவிற்கு  குட்டி இளவரசி    இளவரசன் உடன் சேர்ந்து நாட்கள் மகிழ்ச்சியாகவே ஓடிவிட்டிருந்தது

 

அதுவும் அந்த குட்டி இளவரசன் முதன் முதலில் வாய்திறந்து    அத்த    என்றழைக்க மதுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது

 

சக்தியை மணக்கும் முன் இருந்த குறும்பான மது   இப்போது இரண்டு மடங்காக திரும்பி விட்டிருந்தாள்

 

குட்டி அர்ஜுன் தன் தாயின் கருவில் உதித்ததிலிருந்து முதல் பிறந்த நாள் வரை மது தமிழினியுடன் இருப்பதால்

 

ஒரு குழந்தை பெறாமலே பிறந்த குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன்அண்ணன் மகனிடம் இருந்து கற்றுக் கொண்டாள்  யாழினியின் ஆசைப்படி குட்டி அர்ஜுனுக்கு  ஆருஷ்    என்று  பெயரிட்டனர்

 

இந்த இடைப்பட்ட நாட்களில் சக்தி  ஒருமுறை கூட மதுவை ஊருக்கு வர அனுமதிக்கவில்லை

 

வாரம் ஒரு முறை  மாமா    அத்தை களோடு  இவனும் படையெடுத்துக்கொண்டிருக்க நாட்கள் அதிக கஷ்டம் இல்லாமல் சென்றிருந்தது

 

அவளின் மாஸ்டர் சும் முடிந்துவிட ஆருஷின் பிறந்தநாளிற்கு வரும் தன் வீட்டினர் உடன் கிராமத்திற்கு சென்று விடலாம்  என்று இவள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து இருக்க

 

திரும்பவும் சக்தி போட்ட ஒரு அணு குண்டு அவளின் தலையில் பேரிடியாக இறங்கியது அதன் பொருட்டு சக்தியின் வாழ்வில் இருந்தே மது வெளியேறி இருந்தாள்

 

மொழி தொடரும்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!