Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

uyir kaakkum uyir kolli

Uyir Kaakkum Uyir Kollli – 5

இரு தினங்களுக்கு பின்…..

அந்த ஆராய்ச்சி மையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் செலுத்திய கிருமி அந்த மனிதனுடைய உடம்பில் வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது. அனைவரும் அந்த மனிதனை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் அவன் உடம்பின் அத்தனை மாற்றங்களையும் இயந்திரங்கள் துல்லியமாய் கனித்துக் கொண்டிருந்தன.

“சார் நம்ம இன்ஜெக்ட் பண்ண வைரஸ் மனிதர்களை தாக்க கூடியதா தான் இருக்கு சார். அது அவனோட நுரையீரலில் மொத்தமா பரவி இருக்கு.” என்றான் அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை வின்ஞானி சாட்டர்ஜி. 
“குட் சீக்கிரமா இதுக்கான வேக்சின் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பண்ணுங்க. 
இது நம்ம நாட்டில் உள்ள யாருக்கும் பரவக் கூடாது.”

“இன்னும் டென் டேஸ் உங்களுக்கு டைம் அதுக்குள்ள இதுக்கான வேக்சின் கண்டுபிடிச்சு இருக்கணும்.” என்றார் ஜின்வான்.



Advertisement

“சார் ஆனா வைரல் டிஸ்சீஸ்க்கு வேக்சின் கண்டுபிடிக்கிறது அவ்ளோ ஈஸி இல்ல” என்றவர் கூற

“எனக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் நான் செய்து முடிங்கன்னு சொன்னா செய்து முடிக்கணும்”.

இவரைப் போன்ற சில அதிகாரிகளின் அறிவின்மையால் தான் பற்பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன உலகில்

Advertisement

வேக்சின் அதாவது தடுப்பு மருந்து ஒரு நோய் நம்மை தாக்காமல் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது அந்த குறிப்பிட்ட நோயை உண்டாகும் நோய்க்கிருமியைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. நோய்க்கிருமியை கொன்று…… அல்லது அதன் செயல்பாட்டை குறைத்து…. அதாவது அதன் வலிமையை இழக்கச் செய்து விடுவார்கள். அவ்வாறு செய்யும்போது சாதாரணமாக ஆயிரம் மடங்கு தன்னைப் பெருக்கிக் கொள்ளும் நோய்க்கிருமி வெறும் இருபது மடங்கு மட்டுமே தன்னைப் பெருக்கிக் கொள்ளும். அப்படியான சமயத்தில் நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த நச்சுக் கிருமியை பற்றிய மொத்த விபரத்தையும் சேர்த்துக்கொண்டு அதனை தாக்கி அழித்துவிடும். அதுமட்டுமின்றி அதனைப் போன்ற மற்ற நச்சுக்கிருமிகள் உடலில் புகுந்தால் அதனை உடனே கண்டுகொண்டு தன் தாக்குதலை ஆரம்பித்து விடும். இவ்வாறு உடலுக்குள் நுழையும் நச்சுக்கிருமி உடனே அழிவதால் மனித உடலில் அதன் தாக்கம் தெரிவதில்லை.

Advertisement

ஆயினும் இவ்வகையான தடுப்பு மருந்துகள் சில நோய்களுக்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம் அது வெகு விரைவில் தன்னுடைய மரபணுவை மாற்றிக் கொள்வதே ஆகும். இதனை அறிவியல் ரீதியாக (gene mutation ) என்பார்கள். அப்படி அது தன்னையே வெகுவிரைவில் மாற்றிக் கொள்வதால் நம் உடம்பிலுள்ள ஆன்டிபாடி எனப்படும் எதிர்பனுக்கள் அதன் முந்தைய வடிவத்தை அழிக்கக்கூடிய தன்மை உடையனவாய் இருந்தாலும் அதன் தற்போதைய வடிவத்தை அழிக்க முடியாமல் தோல்வி அடைகின்றன.

அதேநேரம் கல்லூரியில்……

பேராசிரியர் ஜெயராஜ் மிகுந்த குழப்பத்தில் இருந்தார். அன்று அவர் தேடிச்சென்ற இளம்பருதியின் ஆராய்ச்சி கோப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருக்க வாய்ப்பில்லை அல்லவா!!! அவன் தான் அதை சாமர்த்தியமாக இடம் மாற்றி இருந்தானே.

Advertisement

நிச்சயமாக அந்த ஆராய்ச்சி கோப்புகள் கல்லூரியை விட்டு வெளியில் செல்லவில்லை என்பது அவருக்கு தெரியும். ஆனால் மீண்டும் இளம்பருதியிடம் கேட்டால் அவன் சந்தேகம் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகமாய் உள்ளது அதனால் அவர் பலத்த யோசனையில் இருந்தார். எப்படியாவது அவர் அந்த ஆராய்ச்சி கோப்புகளை ஜின்வானிற்கு அனுப்ப வேண்டும்…… இல்லை என்றால் ஜின்வானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

அப்படியான நேரத்தில் தான் ரகு அவரை தேடி வந்தான்.
“சார் என்னோட லாக்கர் லாக் உடைஞ்சிடுச்சு சார்….. நான் ஆபிஸ் ரூம்ல கம்ப்ளைன்ட் பண்ணேன் எந்தவிதமான ஆக்க்ஷனும் அவங்க எடுக்கல நீங்க எனக்காக கொஞ்சம் பேசுங்க ப்ளீஸ். லாப் உங்க ரெஸ்பான்ஸிபிலிட்டி தானே சார்”

“சரி நான் உனக்காக பேசுறேன் லாக்கர் நம்பர் சொல்லு”

“712 சார்”

“712 வா அது பரிதியோட லாக்கர் நம்பர் ஆச்சே?”

“ஆமா சார் அவனோடது தான் அது அவனுக்கு குட்டியா இருக்குன்னு என்னுடையதை வாங்கிட்டான். நான்தான் அவனோட லாக்கரை இப்பா யூஸ் பண்ணிட்டு இருக்கேன்”

“சரிப்பா நான் உன் லாக்கர சரி பண்ண ஏற்பாடு பண்றேன். நாளைக்கு உன் லாக்கர் சரி ஆகிடும். இப்போ நீ சந்தோஷமா போ”

அவன் சந்தோஷமாக போகிறாரனோ இல்லையோ…….. அவன் கூறிய தகவலை கேட்ட அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி………. இருக்காதா பின்னே அவர் தேடிக்கொண்டிருந்த பொக்கிஷம் இப்பொழுது அவருக்கு கிடைத்து விட்டது அல்லவா.

சிறிது தூரம் சென்ற ரகு தனது கைப்பேசியில் இருந்து இளம்பரிதி “மிஷன் கம்பிளிடட் என்ற குறுஞ்செய்தியை அனுப்பினான்”.

ஆம் இவை அனைத்தும் இளம்பருதியின் திட்டம்தான்……. ஆனால் அவன் ஏன் இவ்வாறு செய்தான்??
ஏன் தான் அரும்பாடுபட்டு காப்பாற்றிய பொக்கிஷத்தை விட்டுக்கொடுக்க நினைத்தான்?

அதனை தெரிந்துகொள்ள நாம் காணாமல் கடந்து வந்த இரு தினங்களை நோக்கிச் செல்ல வேண்டும். இரு தினங்களில் நோக்கி செல்ல வேண்டும்.

அன்று…….. பரிதியின் இல்லத்தில் பரிதி, நளினி மற்றும் ரகு உரையாடிக் கொண்டிருந்த நேரம்.

ஜெயராஜை பற்றி தனக்கு எழுந்துள்ள சந்தேகத்தினை ரகு மற்றும் நளினியிடம் கூறினான் இளம்பருதி.

“டேய் நீ சொல்றதை பார்த்தா ஜெயராஜ் சார் தான் உன் லாக்கரை உடைச்சு உள்ள இருந்து திருட பாத்தாருனு சொல்வ போல”

“ஆமா டா கண்டிப்பா அவரேதான்.”

“லூசாடா நீ எவ்ளோ பெரிய ஆளு….. எத்தனை புக்கு எழுதி இருக்காரு…. அவரு உன்னோட இந்த புடலங்காய் ப்ராஜெக்ட்ட தான் திருட போறாரு போடா? உன்னோட அனுப்பவம் அவரோட வயசு. ஐயோ மாத்தி சொல்லிடேனா? உன்னோட வயசு அவரோட அனுபவம்.”

“சரி நீ தான் அவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்றியே நம்ம லாக்கர் எக்ஸ்சேஞ்ச் பண்ணும் போது என்னோட பழைய தீசிஸ் ஒன்னு மட்டும் அந்த லாக்கரலயே இருக்கட்டும்னு நான் சொன்னேனே அந்த தீசிஸ் இப்போ அதுலருந்துதா??”

“இல்லடா……. அந்த லாக்கர் ஃபுல்லா கிளீன் பண்ணிட்டேன் இப்ப அதுல ஒன்னும் இல்ல…….என்னோட ஸ்நாக்ஸ்க்கு புதுசா ஒரு பெட்டி வாங்கி பூட்டு போட்டு வச்சுட்டேன்……. வேற எதுவுமே அதுல இல்லையே” என்றான் ரகு.

“அண்ணா….. ஏன் நீங்க இந்த மாதிரி லாக்கர்ல போய்க் ஸ்நாக்ஸ் எல்லாம் வைக்கிறீங்க?” தனது மிகப் பெரிய சந்தேகத்தை கேட்டாள் நளினி.

“அதெல்லாம் வீட்டிலிருந்து காலேஜ் வர்ற உனக்கு சொன்னா புரியாது மா…… ஹாஸ்டல்ல ஒன்னும் வைக்க முடியாது எங்க வச்சாலும் திருடிப் தின்றுவாங்க திருட்டு பசங்க”

” ஐயோ சோ சேட் அண்ணா…… கவலைபடாதீங்க…… இனிமே உங்களுக்கு தினமும் நானே ஸ்நாக்ஸ் கொண்டு வரேன்” என்று அவள் அவனுக்கு ஆதரவாய் கூற……. அவனும் அவளைப் பாசத்துடன் பார்த்தான்…… இவர்கள் இருவரையும் ஒருவன் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் இங்கே இவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் என்ன பேசறீங்க” சிடுசிடுத்தான் பரிதி.

“சரி சரி மச்சான் டென்ஷன் ஆகிட்டான் தங்கச்சி நம்ம அப்புறமா பேசலாம் …… இப்ப நீ சொல்லுடா”

“என்னோட பழைய தீசிஸ் அங்கிருந்து காணாமல் போயிருக்கு”

“ஆமாடா காணாமல் போய் இருக்கு ஆனா அத சார் தான் எடுத்தார்ன்னு 
எப்படி சொல்ற வேற யார் வேணா எடுத்து இருக்கலாமே….. அந்த குரங்கு பயக்குமார் கூட எடுத்திருக்கலாம்…”

“வேற யாருக்கும் எதுவும் தெரியாது டா…….. அதுமட்டுமில்லாமல் பிரின்ஸ்பல் சார் கிட்டயும் அவர்தான் என்னுடைய ரிசர்ச் பத்தி தப்பு தப்பா சொல்லி இருக்காரு…… அது எனக்கு கண்டிப்பா தெரியும்….. அவர் யாரு…… ஜெயராஜ் சார்!! அவரால யார வேணா கன்வின்ஸ் பண்ண முடியும் எத்தனையோ விஷயத்துல அத நம்ம பார்த்திருக்கோம். ஆனா…… பிரின்சிபல் சார் இன்னைக்கு என்ன பேசக்கூட விடாம சஸ்பெண்ட் பண்ணி வெளிய அனுப்பி இருக்காரு…. கண்டிப்பா இது எல்லாத்துக்கும் அவர் தான்டா காரணம்”

“சரிடா நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம் ஒருவேளை உன் ப்ராஜெக்ட்ட அவரு திருடி அவ‌ர் பேர்ல பப்ளிஷ் பண்ணனும் நினைச்சிருந்தா…. அவரே அதப்பத்தி பிரின்ஸ்பல் சார் கிட்ட தப்பு தப்பா ஏன் சொல்லணும் ???”

“செம பாய்ன்ட் அண்ணா” என்றாள் நளினி ரகுவை பாராட்டி அவர்கள் தான் இப்போது பாசமலர்கள் ஆகிவிட்டார்களே….

“அதாண்டா எனக்கும் பெரிய புதிரா இருக்கு ஆனா இதுல ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்குடா இல்லனா இதெல்லாம் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.” என்றான் பரிதி சிந்தித்த வாறு

“சரிடா நீ சொல்றத நான் நம்புறேன் இப்ப என்ன பண்ணலாம்” என்றான் ரகு நல்ல நண்பனாக.

“நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்……. “

“என்ன ஹெல்ப் டா? சொல்லு”

“நானுமா அத்தான் உங்க மிஷன்ல நானும் இருக்கேனா ஐ ஜாலி”

“நளினி இது விளையாட்டு இல்ல ரொம்ப சீரியஸா பண்ணனும்”

“ஓகே டன் அத்தான்” என்றவள் கூறவும் அவனுடைய திட்டத்தை அவர்களுக்கு 
விளக்கினான்.

அந்தத் திட்டத்தின்படி முதலில் அவர்கள் இளம்பரிதியின் ஆராய்ச்சி சம்பந்தமான அனைத்து பொருட்களையும் கல்லூரியிலிருந்து அவன் வீட்டிற்கு கொண்டு வந்தனர். அதற்கு பதிலாக அவன் கொடுத்த போலி மாதிரிகளை அங்கே வைத்துவிட்டனர். இதையெல்லாம் அவர்கள் மறுநாள் செய்துமுடிக்க….

இரண்டாம் நாள்தான் இளம்பருதி கூறியதுபோல ரகு ஜெயராஜிடம் சென்று பேசி வந்தான்.

அவர்கள் ஜெயராஜின் உண்மையான திட்டத்தை தெரிந்து கொள்வதற்காகவே போலி மாதிரிகளை அங்கு வைத்துவிட்டு அவருக்கு அதைப்பற்றிய தெரியவைத்தனர். 
ஒருவேளை ஜெயராஜ் அதை தனக்காக உபயோகித்துக் கொள்ள போகிறார் என்றால் அவை போலியானவை என்பதை தெரிந்துகொள்ள அவருக்கு ஒருநாள் போதும். பின்னவர் பருதி இடம் வந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டுத்தான் ஆகவேண்டும் அப்போது அவர் வசமாக மாட்டிக்கொள்வார் இதுதான் அவனுடைய திட்டம்.

ஜெயராஜ் ஒரு திட்டம் போட……. 
பரிதி ஒரு திட்டம் போட…..
அங்கு ஜின்வான் ஒரு திட்டம் போட….
இவர்கள் அனைவரின் திட்டத்தையும் முறியடிக்க
ஆண்டவன் ஒரு திட்டம் போட்டார்.


This is purely a work of fiction.

Except for the facts about vaccine. It was referred from known websites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!