Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 22

எனனவள்_22

 

மாலை ஆறரை ஆகும் போது அங்கே சக்தியின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து இருந்தனர். ஐம்பது பேருக்கு மேல்…வீடு பார்க்க என்று ஒர் சம்பிரதாய நிகழ்வு திருமணமான அன்று மாலையில் மாப்பிள்ளை வீட்டு சார்பில் அழைக்கும் விருந்து நிகழ்ச்சி அது…பெண் வீட்டு சார்பில் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டு அத்தனை பேருக்கும் இவர்கள் விருந்து பரிமாறுவது…மதியம் பெண் வீட்டு சார்பில் கறி விருந்து படைத்திருக்க இப்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் அது போல ஒரு விருந்து கொடுப்பது வழக்கம்…

 



Advertisement

சக்திக்காக கொண்டு வந்திருந்த அனைத்து சீர்வரிசை பொருட்களை ஹாலில் இறக்கி வைக்க…வந்திருந்த அனைவரையும் வரவேற்று ஃகாபி கொடுத்து அமர வைத்தவர்…தங்களது வீட்டை பெண் வீட்டாரோடு வந்தவர்களுக்கு சுற்றி காட்டும் நிகழ்ச்சி…

 

அங்கே அன்றைய ஸ்பெஷல்…எங்க வீட்டுக்கு வரும் பெண்ணிற்கு நாங்கள் இத்தனை வசதி செய்து இருக்கிறோம் பாருங்கள் என காட்டுவது போல…அடுத்ததாக பெண்ணின் தாயார் ,மாப்பிள்ளையின் தாயார் இருவரும் எதிர் எதியே அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் சந்தனம் முகத்தில் கையில் தேய்த்து விடுவர்…சம்பந்தார் கலைப்பது என…கலகலப்பாக நடக்கும் நிகழ்வு அது…

Advertisement

 

Advertisement

வந்திருந்தவர்களை பார்த்து அரசி வாங்க…வீட்டை சுற்றி காட்டுகிறேன் என அழைத்து சென்றார்.  கீழ் இருந்தது அறைகளை சுற்றி காட்டியவர் மாடிக்கு அழைத்து சொன்னார். 

 

மாடியில் மோகனுக்கு மட்டுமே முழுமையாக அறையை கட்டிக்கொடுத்து இருந்தனர். பெரிய ஹால் அடுத்ததாத ஒரு பெட்ரூம்… சமையல் அறை கூட இருந்தது. பெட்ரூம்பிற்கு அடுத்தபடி…தற்சமயம் அங்கே இரண்டு குடத்தில் தண்ணீர் மட்டுமே இருந்தது.  அந்த பக்கம் பெரிய காலி இடம்…அதில் அழகாக சிறு ஊஞ்சல் …கொஞ்சம் ரசிக்கும் படியே இருந்தது. 

Advertisement

 

வந்தவர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.  இதில் அரசியலின் குணம் இன்னும் பிடித்தது. அதிகமாக பேசவில்லை அதே நேரம் யாரையும் கெளரவகுறைச்சலாக நடத்தவும் இல்லை.  “மாப்பிள்ளை அவனுடைய  அம்மா மாதிரி போல இருக்கும் அதிகமாக பேசறது இல்லை தங்களுக்கு உள்ளேயே பேசிக்கொண்டனர். “

 

“மாப்பிள்ளை எங்கே என்று கேட்க…”சக்திக்கு சுத்தமாக தெரியவில்லை சொல்லிகொண்டு சென்றால் தானே தெரியும்.  அவளது அத்தையின் அருகில் சென்று கேட்டாள். “அத்தை எல்லோரும் மாப்பிள்ளை எங்கேன்னு கேட்கறாங்க என்ன சொல்ல என்று…”அவருக்கும் பதில் சொல்ல தெரியவில்லை.  வெளியே எட்டிப்பார்க்க அங்கே மாப்பிள்ளை தகப்பனார் வந்தவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அரசி அருகில் சென்று இவரை அழைக்க என்ன என்று கேட்டபடி அருகில் வரவும்…

 

“எல்லோரும் மோகனை கேட்கறாங்க என்ன பதில் சொல்ல…”

 

“இரண்டு நிமிடம் யோசித்தவர் நீ எதுவும் கேட்டால் சொல்ல வேண்டாம் நானே சொல்லிக்கறேன் என்றவர் என்ன சொல்வது என மனதிற்குள் தீர்மானித்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.”

 

தன் பக்கத்து செழிப்பை காட்ட இங்கும் பிரியாணி வருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சிக்கன்,மட்டன்,மீன் என எதையும் விடவில்லை.  கூடவே சைவம் சாப்பிடுபவர்களுக்கு தனியே செய்து இருந்தார். வந்தவர்கள் அனைவருக்கும் பரம திருப்தி…குறை என்றால் இது வரையிலும் மாப்பிள்ளை வராதது தான். 

 

[the_ad id=”6605″]

 

 

 

இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது  என்று முடிவு செய்த தியாகு…

“மோகனோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு அவன் அங்கே பார்க்க போயிட்டான் கொஞ்சம் நேரத்தில் வந்திடுவான் என்ன சொல்லி இருந்தார். காரணம் ஏற்புடையதாக இருந்தாலும் கல்யாணத்தன்னைக்கே இப்படி போகலாமா நாளைக்கு போய் பார்க்கலாம்ல்ல..வீடு நிறைச்சு ஆளுங்களை வச்சிட்டு இப்படி செய்து இருக்க வேண்டாம் என்ற முனுமுனுப்பும் கேட்டது. “

 

சிவாதான் பேசியவருக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தான் “பெஸ்ட் ஃப்ரெண்டுன்னா அப்படி தான் எதுவுமே ஓடாது…சரி நாம எப்போது புறப்படலாம் என்று தன் மாமனாரிடம் கேட்டான். “

 

“எல்லோரும் சாப்பிட்டாச்சுன்னா புறப்படவேண்டியது தான் மாப்பிள்ளை.  சக்தி கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம். காலையில் நாம வரலாம் சக்தியையும் மாப்பிள்ளையையும் கோவிலுக்கு அழைச்சிட்டு போக என்று புறப்பட்டு ஆரம்பித்தனர்.”

 

“அம்மா சக்தியிடம் நீ குழந்தை எல்லாம் இல்லை மாப்பிள்ளை கிட்ட பார்த்து நடந்துக்கோ..”.காலையில் வர்றோம் என்று ஒவ்வொருவராக புறப்பட்டனர். சக்திக்கு மறுபடியும் அழுகை வர திவ்யா தான் அருகில் வந்து தேற்றினாள். 

 

“சக்தி அழாதே இங்கே இருக்கற பொள்ளாச்சி தானே…வண்டியை எடுத்தா நேரடியாக வரப்போகிறோம் அழக்ககூடாது…காலையிலேயே வந்திடறோம் என்று புறப்பட்டனர். “

 

அவர்கள் கிளம்பும் போதே பத்தரைமணியை தாண்ட இவளை முதலிரவிற்கு அலங்கரிக்க ஆரம்பித்தனர் மோகனின் உறவினர்கள் இருவர்…ஒரளவு அலங்கரித்தவர்கள் இரண்டு முழம் பூ தலைக்கு வைத்து “மேலே போய் மோகன் ரூம்பில் இரும்மா…வந்திடுவான் என்று அனுப்பி விட்டு கீழே பேசிக்கொண்டு இருந்தனர்.”

 

மேலே போனவளுக்கு என்ன செய்வது ஒன்றும் தெரியவில்லை. யாரோ நண்பனுக்கு அடிபட்டு ஹாஸ்ப்பிடலில் இருக்கிறான் இவன் பார்க்க போய் இருக்கிறான் அவ்வளவு தான் இவளுக்கு தெரிந்த தகவல் எத்தனைமணிக்கு வீட்டிற்கு வருவான் தெரியவில்லை…வீட்டிற்கு வருவானா இல்லையா அதுவும் தெரியவில்லை.  அப்படியே அங்கிருந்த ஹோபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

பெட்ரூமிற்கு கூட செல்ல மனமில்லை.  அவன் வந்தபிறகு சென்று கொள்ளலாம் என்று அமர்ந்து விட்டாள் நேரம்தான் வேகமாகநகர்ந்து கொண்டு இருந்தது.  

 

அங்கே ஐசியூ வாசலில் தலையில் கைவைத்து அமர்ந்து இருந்தாள் மோகன்.  போனில் தகவல் தெரியவும் வேகமாக வந்து இருந்தான். இவனை பார்த்ததுமே” எல்லாம் உன்னால் தான்டா…என்னுடையபொண்ணை எனக்கு இல்லாமல் பண்ணிடுவே போல இருக்கு…அழுதபடியே இவனையும் இரண்டு அடி அடித்தவர் ஓரமாக அமர்ந்து எதை எதையோ சொல்லி அறற்றிக்கொண்டு இருந்தார்.”

 

மிகவும் சீரியஸாக அங்கே செல்வியின் அட்மிட் ஆகி இருந்தாள். குடித்தது வீரியம் மிகுந்த பூச்சிமருந்து அங்கே வீட்டிலேயே மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து இருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஹாஸ்ப்பிடலின் இருககையில் சாய்ந்து அமர்ந்திருந்த பொன்னிக்கு நினைவு நடந்ததையே மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்தியது. அழுதழுது முகம் நன்றாக வீங்கி இருந்தது.  உள்ளே அவளுக்கு நடந்த சீகிட்சையை பார்த்து இன்னும் பயந்து போய் இருந்தாள். நான்கு முறை வாந்தி எடுத்தவளுக்கு அதற்கு மேல் வயிற்றில் எதுவுமே இல்லாமல் ரத்தத்தோடு கடைசியாக வாந்தி எடுக்க… தன்னுடைய உயிரே தன்னிடம் இல்லை பொன்னிக்கு…

 

கையில் குளூக்கோஸ் ஏறிக்கொண்டு இருக்க…அங்கங்கே டியூப் மாட்டி இருக்கு…கண் கொண்டு பார்க்க முடியவில்லை பொன்னிக்கு…

 

எல்லாமே நன்றாக தான் நடந்தது பட்டு சேலை உடுத்தி தலைநிறைய பூவைத்து அழகாக  அலங்கரித்து அமர வைத்து இருக்கு…மாப்பிள்ளை வீட்டில் அதிகமாக யாரும் வரவில்லை  மாப்பிள்ளை அவனுடைய அம்மா, அப்பா, பெண் பார்த்து கொடுத்த புரோக்கர் நால்வர் மட்டுமே வந்து இருந்தனர். பெண்ணை பிடித்தால் மேற்கொண்டு பேசிக்கொள்ளலாம் என்ற முடிவோடு வந்திருக்க அழைத்து வந்து முன் நிறுத்துவதற்கு அரைமணி நேரம் முன்பு பாத்ரூம் சென்றவள் எடுத்து வைத்திருந்த மருந்தை குடித்து விட்டு வந்து இருந்தாள். ஏற்கனவே காலையில் இருந்து சாப்பிடாதது உடனே வேலையை காட்டி இருந்தது. 

 

அழைத்து வந்து முன் திருத்த வந்து நிற்கவுமே மயங்கிய விழுந்து விட்டாள் பொன்னி தான் வேகமாக தூக்க…அருகில் நெருங்கிய போதே தெரிந்து விட்டது பூச்சிமருந்தின் வாடை அவளுக்கு…

 

“ஏண்டி இப்படி பண்ணின நான் என்ன செய்வேன் “என அழ ஆரம்பிக்க வந்திருந்த மாப்பிள்ளை தான் “முதலிலேயே விருப்பம் கேட்டு இருக்கலாம் பரவாயில்லை இப்போது அழுது எதுவுமே ஆகப்போகிறது இல்லை  பொண்ணை முதலில் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம் என்றுடைய வண்டியிலேயே கொண்டு போகலாம் என இவர்களை அழைத்து வந்து ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்தவன் அம்மா அப்பா ரெண்டு பேரையும் இறக்கி விட்டுட்டு வந்து பார்க்கிறேன் என்ன சென்று இருந்தான்.”

 

முதலுதவி எல்லாம் செய்து இன்னும் இருபத்தி நான்கு மணிநேரம் உத்திரவாதம் கொடுத்து விட்டு போய் இருந்தனர் டாக்டர்கள்…

 

ஏற்கனவே வீட்டுக்கு வந்தவர்கள் ஊருக்கே செய்தியை பரப்பி  இருந்தனர். காட்டு தீ போல பரவி இருந்தது செய்தி…மாமா பையனை கட்டிக்க ஆசைபட்டா…முடியலைங்கவும் உயிரையை விட முடிவு பண்ணிட்டா…

 

இந்த செய்தி இவனின் காதிற்க்கும் வர புறப்பட்டு வந்து விட்டான். அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற செய்தி கேட்டால் மட்டுமே அங்கிருந்து கிளம்பி வேண்டும் என்ற முடிவோடு…தந்தை விடாமல் ஃபோனில் அழைக்க சற்று நேரம் பார்த்தவன் சுவிச்ஆப் செய்து விட்டு அமர்ந்து இருந்தான். 

 

விடியற்காலம் ஆன பொழுது லேசாக அசைந்தாள் செல்வி…அசைந்த மறு நொடியே  பெருத்த ஓசேயோடு மறுபடியும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

 

வாந்தி எடுக்கவும் வெளியே இருந்து பார்த்தபடி இருந்த பொன்னி தான் வேகமாக அருகில் வந்தாள். ” ஐயோ… மறுபடியும் வாந்தி எடுக்கறாலே என பயந்தபடி கூற.”..அருகில் இருந்த நர்ஸ் தான் இவளுக்கு பதில் கூறினாள்.”வாந்தி எடுக்காமல் இருந்தால்தான் கஷ்டம் வாந்தி எடுத்தா பயம் எதுவும் இல்லை வயிற்றில் இருக்கற கசடு எல்லாம் வெளியே வந்துவிடும் என்றபடி முடிந்து இருந்தது க்ளூகோஸை எடுத்து விட்டு புதிது மாட்டி விட்டார்.”

 

அப்போதும் மோகன் அங்கேயே தான் அமர்ந்து இருந்தான். காலையில் திருமணம் முடிந்தது தெரியும் அப்படி இருந்தும் இங்கே உட்கார்ந்து இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை  இரண்டு முறை மோகனிடம் கோபமாக “புறப்படு மோகன் இன்னும் ஏன் இங்கே இருக்கற…உன்னோட வீட்டுக்கு போ…என்று சொன்னதை அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை…

அங்கேயே பிடிவாதமாக அமர்ந்து இருந்தான்.”

 

இதற்கு மேல் செல்வியை விட முடியாது என்று முடிவு செய்தவன் அவளுக்கு இனி எதுவும் ஆகாது என தெரியவும் வீட்டிற்கு புறப்பட்டான்.

 

புறப்படும்போதே அத்தனை கோபம் அவனுக்கு  தாயின் பேல் தன் தந்தையின் மேல்…கடைசியாக சக்தியின் பேல்…இவனுடைய எந்த தப்பும் இந்த நிமிடம் வரைக்கும் அவனுக்கு தெரியவில்லை. 

 

விடியற்காலையில் ஐந்து மணிக்கு திரும்ப வீட்டிற்கு வந்தான் வாசலிலேயே தியாகு அமர்ந்து இருந்தார்..”.எங்கடா போயிட்டு வர்ற இத்தனை நேரம்…எங்க போய் இருப்பான் என்று தெரிந்துமே கோபமாக கேட்டார்”. அவரை முறைத்தபடியே வேகமாக உள்ள நுழைந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“டேய் கேட்கறேன்ல நீ பாட்டுக்கு போறே பதில் சொல்லுடா…இவர் கேட்டது எதுவுமே காதில் விலாதவன் போல வேகமாக மாடிப்படி ஏறினான். “

 

வெறுமனே சாத்தி இருந்த கதவை திறக்க அங்கே ஹோபாவில் இரவு செய்து விட்ட அலங்காரத்தோடு ஹோபாவில் சாய்ந்து அப்படியே தூங்கி இருந்த சக்தியை  பார்க்கவுமே இவனுக்கு இன்னும் கோபம் கூடி இருந்தது.  எல்லாமே இவளால் தான் என்று நினைத்தவன் வேகமாக அருகில் சென்று கொத்தாக தலைமுடியை பிடித்து எழுப்பியவன் பளார் என்று கன்னத்தில் அறைந்து இருந்தான். 

 

தலையில் முடியை பிடித்து இழுக்கவுமே கண் விழித்தவள் எந்த காரணம் இல்லாமல் அடிக்கவும் ஏன் அடிக்கறிங்க…முடியை விடுங்க என இவளது எதிர்ப்பை காட்டியபடி கையை பிரித்து விட அவன் நன்றாக பிடித்து கைகளுக்குள்  சுருட்டி இருந்தான்.அது வேறு உயிர் போவது போல் வலிக்க ஆரம்பித்தது. அவள் பார்த்தது ஆக்ரோஷமாக  இவளை கொலை செய்து விடுவேன் என்று முடிவோடு இருப்பது போன்ற அந்த தோற்றத்தை தான். 

 

“நான் உன்கிட்ட என்னடி சொன்னேன்..கல்யாணத்தை நிருத்துன்னுதானே…இப்பப்பாரு என்னோட செல்வி அங்கே சாகக்கிடக்குறா எல்லாத்துக்கும் நீதான் காரணம்…”

 

“விடு…விடு…”என்ற சத்தம் எதுவும் அவனது காதிற்கு கேட்கவில்லை விடாமல் பளார் பளார் என்ற அறைமட்டும் வேகமாக விழுந்தது. ஏற்கெனவே இவன் வேகமாக போவதை பார்த்து தயங்கி நின்றவர் மேலே சத்தம் கேட்கவும் வேகமாக படி ஏறி வந்து இருந்தார். அரசியும் ஏற்கனவே விழித்து இருக்க இருவரும் வேகமாக வர..அங்கே பார்த்தது சக்தியை அடித்து கொண்டு இருப்பதை தான். 

 

“அரசியோ…டேய் விடுடா உனக்கு என்ன வெறியா பிடிச்சு இருக்கு அந்த பொண்ணை விடுடா ஒன்றும் செய்யாதடா…ஊரான் விட்டு பொண்ணு என ஒரு புறம் இழுக்க…”மறுபுறம் இன்னும் வேகமாக இழுத்துக்கொண்டு இருந்தான். இவனது ஆக்ரோஷப்பிடியில் இருந்து அவளை இருவராலும் பிரித்து விடமுடியவில்லை அந்த ஹாலை ஒருமுறை அந்த கடைசி வரைக்கும் சென்று வாசலுக்கு அருகில் வந்து இருந்தனர். ஏற்கனவே இவர்கள் வீட்டில் சொந்தக்காரர்கள் தங்கி இருக்க அவர்களும் இப்போது வந்து இருந்தனர். என்ன ஏது என எதுவும் தெரியாமலேயே மோகனின் கையை முதலில் பிரித்து விட்டனர்.

 

ஒருவழியாக அவனிடம் இருந்து பிரித்துவிட்ட போது  சக்திக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது நிற்க கூட முடியவில்லை…கன்னத்தில் அறைந்தது வேறு தீயாய் எரிய..நிமிர்ந்து சுற்றிலும் பார்க்க ம்ற்பட்டாள். அதற்குள் உறவினர்கள் மோகனை பிடித்து இருக்க அவர்களிடம் இருந்து திமிறியவன் சற்றும் எதிர்ஓஆராத நேரத்தில் சக்தியை வேகமாக அவனது  காலால் உதைத்து தள்ளி இருந்தான்.  இதை எதிர் பாராத சக்தி வெளியே வந்து வந்துவிழுந்த அவளது தலை படிக்கட்டின் நுணியில் இடித்து விட அடித்த வேகத்தில் நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதே கோபத்தோடு தந்தையை தள்ளியபடி வெளியேறியவன் சற்றும் கவனிக்காமல் மறுபடியும்  வேகமாக அவளை மோதி தள்ளி விட்டு வேகமாக வெளிமேறினான்.

 

நிற்க கூட அவகாசம் இல்லாமல் தள்ளி இருக்க படிக்கட்டில் உருண்டு இருந்தாள் சக்தி இருபது வரைக்கும் இருந்த படிக்கட்டில் கீழ் வரைக்கும் உருண்டவளின் ரத்தம் படிக்கட்டு எங்கும் வழிந்திருந்த கீழே வந்தபோது மொத்தமாக சுயநிறைவை இழந்து மயங்கி இருந்தாள். நெற்றியில் வழிந்த ரத்தம் தரையில் நீளமாக வழிய ஆரம்பித்தது.

 

தொடரும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!