Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

uyir kaakkum uyir kolli

Uyir Kaakkum Uyir Kolli – 6

கோப்புகள் பொய்யாக மாற்றப்பட்டு இருப்பதனை அறியாத ஜெயராஜ். இளம்பரிதி கல்லூரியில் இல்லாத சமயமே சரியான சமயம் என நினைத்து அவனுடைய ஒரு கோப்புகளை ஒரு பிரதி எடுத்து அதனை ஜின்வானிற்கு அனுப்பிவைத்தார். நேரமின்மை காரணமாக அவர் அதனை பிரித்து வாசிக்கவில்லை ஒருவேளை வாசித்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்கும் அது போலி என்று. ஆயினும் விதி யாரை விட்டது.

10 நாட்களுக்கு பிறகு ……..

அங்கு அந்த ஆராய்ச்சி மையத்தில்…..
“சார் வி ஆர் அண்டர் பிக் ரிஸ்க்” என்றபடி ஜின்வானிடம் வந்தார் அந்த தலைமை விஞ்ஞானி சாட்டர்ஜி.

“தி வைரஸ் இஸ் கன்டியூயஸ்லி  மியூடேட்டிங். 
அதோட மரபணு  மாறிக்கிட்டே இருக்கு சார். இந்த சிட்டுவேஷன் ல அதுக்கு வாக்சின்  கண்டுபிடிக்க முடியாது சார் 
இதுக்கு வேற ஏதாவது மாற்று வழி கண்டுபிடிக்கணும் சார்
இந்த வைரஸ் நம்ம உடனே அழிக்கணும் இது பரவ ஆரம்பிக்கிறது நமக்கு ரொம்ப ஆபத்து.”



Advertisement

“ஓ ப்ளீஸ் ஸ்டாப் பிளாப்பரிங் மிஸ்டர் சாட்டர்ஜி…… டென்ஷன் ஆகாதீங்க இப்போ என்ன அந்த வைரஸ்க்கு வேக்சின் கண்டுபிடிக்க முடியல அவ்ளோதான……. விடுங்க. ஜஸ்ட் டெஸ்ட்ராய் தி  வைரஸ்… இப்போதைக்கு அந்த வைரஸ் அவன் ஒருத்தன் உடம்பில் மட்டும் தான் இருக்கு கில் ஹிம்  அண்ட் டெஸ்ட்ராய்   ஹிஸ் போடி அஸ் வெல் அஸ் தி  வைரஸ்.
அதுக்கு நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகணும்னு அவசியமே இல்லை.
பட் யூ ஹேவ் டு கிரியேட் அனதர் வைரஸ் இன் 10 டேஸ்.”

இப்படி புதுப்புது நச்சுக் கிருமிகளை உருவாக்குவது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. இதை அவர்கள் அடிக்கடி செய்திருக்கிறார்கள் சொல்லப்போனால் இது அவர்களுடைய ஒரு தொழிலாகவே நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எந்த ஒரு கிறுமியையும் அதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்காமல் அவர்கள் வெளியிடுவது இல்லை. ஏனென்றால் இதன் மூலம் அவர்கள் பணத்தை சம்பாதிக்கவே விரும்பினார்கள். ஆபத்தை அல்ல. 
வெகு சில நேரங்களில்…….  அவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத நோய்க்கிருமியை மட்டும் தனியாய் விற்பனை செய்வார்கள் அப்படி விற்பனை செய்யப்படும் கிருமிகளுக்கு கோடிக்கணக்கில் பணமும் வசூலிக்கப்படும்.

Advertisement

ஆனால்   இப்போது அவர்கள் கண்டுபிடித்து இருக்கும் இந்தக் கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் தன்மையுடையதாக இருப்பதால் இதனை அவர்கள் மொத்தமாக அழிக்க முடிவு செய்து விட்டனர். 

Advertisement

ஆனால் அந்த கிருமி அழியுமா? அல்லது அழிக்குமா?

கண்ணாடி கூண்டில் இருந்த மனிதன் மெல்ல மெல்ல மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டிருந்தான். 

இது அனைவரின் கண்களுக்கும் புலப்படும் விதமாக நடந்து கொண்டிருந்தது.

Advertisement

ஆனால் யார் கண்களுக்கும் புலப்படாமலும் சில நிகழ்வுகள் அந்த ஆராய்ச்சி மையத்தில் நடந்துகொண்டிருந்தன.

அந்த நச்சுக்கிருமி ஏற்கனவே அந்த ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைவருக்கும் பரவ ஆரம்பித்திருந்தது. அந்தக் கண்ணாடி பெட்டியினுள் இருந்த மனிதனை கண்காணித்துக் கொண்டிருந்த ஓர் இயந்திரம் பழுதடைந்ததால் அதனை அகற்றிவிட்டு வேறு ஒரு இயந்திரத்தை மாற்றி இருந்தனர். அந்த அகற்றப்பட்ட பழைய இயந்திரத்தில்   நச்சுக்கிருமி ஒட்டி இருந்தது. எவர் கண்ணுக்கும் தெரியாமல் இந்த நச்சுக்கிருமி அங்கிருந்த பலர் உடம்பிலும் புகுந்து விட்டது இதில் அந்த தலைமை விஞ்ஞானி சாட்டர்ஜி மற்றும் ஜின்வான்னுமே அடக்கம்.

ஒரு சிறு அஜாக்கிரதை பெரும் பாதிப்பினை ஏற்படுத்த இருக்கிறது.

அவர்களின் விஞ்ஞானிகள் தானே கடவுள் இல்லையே. எனவே அவர்களுக்குள்ளும் இந்த கிருமி பரவி இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கிருமி நமக்கு பரவுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தவே 10 நாட்களுக்கு மேல் ஆகும். அதற்குமுன் இது பலருக்கு பரவியிருக்கும். அப்படித்தான் அவர்கள் வேறு ஒரு நாட்டை அழிக்க உருவாக்கிய கிருமி அவர்கள் நாட்டையே அழிக்க தொடங்கியிருந்தது.

இப்பொழுது ஜின்வான் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டினார். அது என்னவென்றால் இளம்பரிதி கண்டுபிடித்து இருந்த நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமியை கொண்டு இந்தக் குறிப்பிட்ட நச்சுக்கிருமியை அளிக்க முடிகிறதா என்று பார்க்குமாறு தன் குழுவிற்கு உத்தரவிட்டார்.

ஆனால் அவரிடம் இருக்கும் ஆராய்ச்சி கோப்புகள் தான் போலியானவையே இதனைக் கொண்டு அவருக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கப்போவதில்லை ஆனால் இதனால் ஒருவர் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள போகிறார்.

“ஹவ் டர் ஹி சீட்டட் அஸ்? …….

நம்மளையே ஏமாத்திர அளவு அவன் துணிஞ்சுட்டானா?? 
இனி அவன் இந்த உலகத்துல வாழவே கூடாது ஜஸ்ட் கில் ஹிம்”

ஜெயராஜ் அனுப்பிய கோப்புகள் போலி என்று தெரிந்த பின்பு ஜெயராஜ் தான் தங்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு உத்தியைக் கையாண்டார் என நினைத்து அவரை கொல்ல உத்தரவிட்டார்.

இப்படியாக……. அவர்கள் ஜெயராஜை கொல்ல பயன்படுத்தியதும் ஒரு நட்சுக்கிருமியே ஆகும். அந்தக் கிருமியின் தன்மை யாதெனில் அது அவருடைய உடம்பில் முழுமையாக பரவி ஒவ்வொரு பாகமாக செயலிழக்கச் செய்து விடும். அத்தகைய மரணம் மிகவும் கொடூரமானது. இருப்பினும் இவனைப் போன்ற துரோகிகளுக்கு இத்தகைய தண்டனை அவசியமே.

அங்கு அவர்கள் ஜெயராஜை கொல்ல முடிவு செய்திருந்த அதே சமயம் இங்கு……

[the_ad id=”6605″]

அன்றுதான் இடைநீக்கம் முடிந்து இளம்பரிதி மீண்டும் கல்லூரிக்கு செல்ல துவங்கி இருந்தான். இத்தனை நாள் அவனுடைய எண்ணமெல்லாம் பேராசிரியர் ஜெயராஜின் அவனுக்கு இன்னும் அழைத்து அவனுடைய கோப்புகள் பற்றி பேசவில்லை என்பதுதான் இன்றேனும் அவர் அவனை சந்திக்கையில் அதனைப் பற்றி மறைமுகமாக வாவது கேட்பாரா என சிந்தித்துக்கொண்டே கல்லூரிக்கு சென்றான்.

ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் எதுவும் நிகழவில்லை. அவர் அவனை கண்டதும் ஒரு மெல்லிய புன்னகையுடன் தலையசைத்து சென்றுவிட்டார். ஏனென்றால் அவர் அவனுடைய கோப்புகள் போலி என்று  அவர் கண்டு பிடிக்கவில்லையே கண்டுபிடித்தவன் வேறு எங்கோ ஒரு தூர தேசத்தில் இருக்கிறான் அவனுக்கு இவனை தெரிய வாய்ப்பில்லை.

“ஹாய் மச்சான் வா ரொம்ப நாள் கழிச்சு காலேஜுக்கு வந்துருக்க அப்படியே ஒரு ட்ரீட் வை”

“இதுக்கெல்லாமா டா ட்ரீட்டு கேப்ப?”

“ஆமா அத்தான் கண்டிப்பா நீங்க ட்ரீட் வச்சே ஆகணும்”

“டே சார் என்கிட்ட எதுவுமே கேக்கலடா இந்த டாக்குமெண்ட் சேஞ்ச் பண்ணி வச்சத பத்தி…….கன்ஃபார்மா நீ பார்த்தியா அவர் என்னோட தீசிஸ் எடுத்துட்டு போனத??”

“ஆமாடா எடுத்துட்டு போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு…… திருப்பிக் கொண்டு வந்து அவரே உள்ள வச்சத நான் என் கண்ணால பாத்தேன்”

“ஜெராக்ஸ் எடுத்திருக்காரு ஆனா அவரு ரீட் கூட பண்ணல??? என்று அவன் தீவீர சிந்தனையின் ஊடே கூற…….

” ரீட் பண்ணிருந்தா மட்டும் என்னடா பண்ணப் போறாரு….”  என்றான் ரகு  
அவனுக்கு என்னவோ நண்பன் இந்த விஷயத்தில் மிக அதிகமாய் சிந்திப்பதாகவே தோன்றியது. அவன் அவனுடைய ஆராய்ச்சி பற்றிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய பின்பும்….. அவன் இன்னும் அதனுள்ளேயே உழன்று கொண்டிருந்தது  ஏன் என்பது ரகுவிற்கு புரியவில்லை

“இப்ப என்ன பாத்து சிரிச்சிட்டு போறாருல்ல……  ரீட் பண்ணிருந்தா சிரிச்சிருக்க மாட்டார் முறைத்திருப்பார்……..” என்றான் ரகுவினுடைய நக்கலான கேள்விக்கு விடையாய்.

“நல்லதுதானே அத்தான் நீங்க அவர்கிட்ட மாட்டலல இப்போ??”

“எப்பவுமே நம்ம எதிரி நம்ம நினைக்கிறத பண்ணா தான் நமக்கு நல்லது……”

“விடு மச்சான் எப்ப பார்த்தாலும் யோசிச்சுக்கிட்டு……… உன்னோட தீசிஸ் தான் உன்கிட்ட பத்திரமா இருக்கு இல்ல அப்புறம் என்ன பி ஹாப்பி”

  அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க மீண்டும் ரகுவே…..

“தலைவர் என்ன சொல்லிருக்காரு தெரியுமாடா……….” என்ன சொல்லி இருக்காரு என்று அவன் கேட்க

ரகு நளினியிடம் தங்கச்சி ஸ்டார்ட் என்று கூற இருவரும் ஒன்றாய் பாடினார்கள் “லைஃப் இஸ் வெரி ஷாட் நண்பா….. ஆல்வேஸ் பி ஹாப்பி…….  டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அன் கோ  கொஞ்சம் சில் பண்ணு மாப்பி………  இப்போ ட்ரீட் வை பேபி…….”

“நீங்க ரெண்டு பேர் மட்டும் கூட இருந்தீங்கன்னா எனக்கு எந்த பிரச்சினையும் வராது…… டா”

” ரொம்ப புகழாத மச்சான் கூச்சமா இருக்கு…….”

“என்னா என்னோட பிரச்சினையை நீங்கதானே” என்று கூறி இளம்பரிதி சிரிக்க…..

தங்கச்சி ஸ்டார்ட்…….. என்று கூறி மீண்டும் இருவரும் கோரசாக பாடினார்கள்……….. “யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று…….” 
மூவரும் சேர்ந்து சிரித்தபடியே கல்லூரி உணவகத்தை அடைந்தனர்.

இளம்பருதியை எப்பொழுதும் ரகுவும் நளினியும் கலகலப்பாக வைத்திருந்தாலும்…… அவனுடைய ஆழ்மனது ஏதோ ஆபத்து நிகழ போவதாய்  உணர்த்தியது.

அன்று இரவே திருடன் போல் வேடமணிந்த ஜின்வானின் ஆள் ஜெயராஜின் வீட்டிற்குள் புகுந்து அவனை மயக்கமடையச் செய்து அதன்பின் அவன் உடம்பில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் நச்சுக் கிருமியை செலுத்தி விட்டான்.

அது ஜெயராஜ் செய்த துரோகத்திற்கு ஜின்வான் கொடுத்த தண்டனை ஆனால் உண்மையில் அவன் துரோகம் செய்தது அவனுடைய நாட்டிற்கும்…… அவனுடைய பணிக்குமே……. எது எப்படியிருந்தாலும் அது அவன் செய்த துரோகத்திற்கான தண்டனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!