Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 14 1

அத்தியாயம்….14

மணிமேகலை ஜான் விக்டரை கைய் பேசியில் அழைப்பு விடுக்கும் போது நேரம் இரவு பதினொன்னை  கடந்து இருந்தது.நேரத்தை எல்லாம் பார்க்கும் நிலையில் மணிமேகலை இல்லை.

ஆனால் மணிமேகலையிடம் இருந்து அந்த நேரத்திற்க்கு தன்னை அழைத்ததை  பார்த்து ஜான் விக்டர் பதறி  போனவனாய்…

“மேகலை என்ன பிரச்சனை. உனக்கு ஏதும் இல்லையே…?” என்று  மிக பட படப்பாக கேட்டான்.



Advertisement

ஜான் விக்டரின் இந்த படப்பட்டப்பான பேச்சி, அப்போது தான் நேரத்தை பார்த்த மணிமேகலை தன் தலையிலேயே கொட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.சே  இவ்வளவு நேரம் கடந்து  போய் ஒரு ஆண்மகனை அழைக்கிறனே… என்னை பத்தி ஜான் சார் என்ன நினச்சிப்பார். என்று உள்ளுக்குள் மணிமேகலை கொஞ்சம்  குறுகி போனவளாய்…

“சாரி சார்.  நான் டைம் பாக்காம போன் பண்ணிட்டேன்.உங்க தூக்கத்த டிஸ்ட்டப் பண்ணிட்டேனா சார். திரும்பவும் சாரி.” என்று சொன்னவளின் பேச்சை காதில் வாங்காது.

“அதை விடு மேகலை. என்னை எந்த டைமுலேயும்  நீ  அழைக்கலாம்.  என்ன பிரச்சனை…?அதை  முதல்ல சொல்.” என்று ஜான் விக்டர் கேட்டான்.

Advertisement

சிறிது நேரம் மணிமேகலையின் பக்கம் இருந்து எந்த பேச்சு சத்தமும் இல்லாது…வெறும் மூச்சு காற்று இழுத்து விடும் அளவுக்கு ஓசை மட்டும் தான் கேட்டுக் கொண்டு இருந்தது.

Advertisement

இப்போது ஜான் விக்டர் வாய் திறக்கவில்லை. எது என்றாலும் அவளே சொல்லட்டும். ஏதோ பிரச்சனை அது மட்டும் ஜான் விக்டருக்கு தெரிகிறது. இல்லை என்றால் இந்த நேரத்தில் தன்னை அழைத்து இருக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டவனின் மற்றொரு மனதோ… உன்னை இது வரையில் எந்த நேரத்திலும் அழைத்தது இல்லையடா… என்று எடுத்துரைத்தது.

ஜான் விக்டர்… ‘பிரச்சனை என்னவாக இருக்கும் என்று யோசித்தானே தவிர…திரும்ப அவளிடம் என்ன என்று கேட்கவில்லை.

அவளோடு பழகிய இத்தனை நாட்களில்..அவளே நினைத்தால் தான், வாய் திறந்து பேசுகிறாள். எது என்றாலும்,  அவள் நினைத்தால் மட்டும் தான் சொல்வது.

Advertisement

அதை மட்டும் தான் அவன் கேட்டுக் கொண்டு இருக்கிறான். முதல் முறை தன் அன்னையிடம் தன் குடும்பத்தை பற்றி சொன்னதோடு சரி…

அடுத்து பேச்சு வாக்கில் அவள் குடும்பத்தை பற்றியோ  குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ அவள் பேசியது கிடையாது. தான் ஏதாவது கேட்டால் கூட   பேச்சை மாற்றுவது போல பேசி விடுவாள்.

இதில் மட்டும் கிடையாது. எதிலும் அவளிடம் விசயம் வாங்குவது கடினம் என்று நினைத்த ஜான் விக்டர். அவளே சொல்லட்டும் என்று  அமைதி காத்தான்.

அவன் நினைத்தது சரி என்பது போல் மணிமேகலையே…

 

[the_ad id=”6605″]

 

 

 

“சார்  நீங்க என்னிடம் பழகுவது…” என்று பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு ..பின் என்ன நினைத்தாளோ திரும்பவும்… “ என்னை நீங்க கல்யாணம்  பண்ணிக்கிற எண்ணத்தில் தானே பழகினிங்க… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?” என்று மணிமேகலை சட்டென்று கேட்டு விட்டாள்.

இப்போதும் ஜான் விக்டர் அமைதி காத்தான் தான். ஆனால் இந்த அமைதிக்கு காரணம் அதிர்ச்சி. ஆமா ஜான் விக்டர் இது போல் அவள் கேட்பாள் என்று  அவன் சிறிதும் நினைத்து கூட பார்க்கவில்லை.

ஜான் விக்டரிடம் இருந்து எந்த  வித பதிலும் இல்லாது போக திரும்பவும் மணிமேகலையே… “அப்போ சும்மா இங்க இருப்பவங்க போல…டேட்டிங்…”

ஜான் விக்டர் அவளை அடுத்த வார்த்தையை மணிமேகலையை   பேச  விடாது…  “முதல்ல நீ சொன்ன கல்யாணம் செய்துக்க நினச்சி தான் பழகினேன்.” என்று அவசரஅவசரமாக சொன்ன ஜான் விக்டர்.

பின் மிக நிதானமாக…  “உன்னிடம் மட்டும் இல்லை. நான் இது வரை எந்த பெண்ணிடமும்  டேட்டிங் அந்த எண்ணத்தில் பழகினது இல்லை.” என்று சொன்னவன்…

தொடர்ந்து… “இன்னும் கேட்டா நான் பெண்களிடம் ரொம்ப பழகினது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.”

இந்த விசயங்கள் அனைத்துமே சோனாலி புன்னியத்தில், மணிமேகலைக்கு ஏற்கனவே தெரியுமே… தான்  கேட்டது ஒரு வகையில் மணக்க கேட்டது போல தான்.

அவள் எதிர்  பார்த்தது தான் கேட்ட உடன்  ஜான் சார்  மகிழ்ந்து போவார். உடனே …”சரி.” என்பார் என்று தான்.

ஆனால் தான்  கேட்டதற்க்கு எந்த வித பதிலும் சொல்லாது அமைதி காக்கவும் , நாம் அவசரப்பட்டு  கேட்டு  ஜான் சாரின் பார்வையில் மதிப்பு இழந்து போய் விட்டமோ என்று நினைத்து தான் அப்படி கேட்டாள்.

இப்போது ஜான் விக்டரின் பதிலில். “அப்போ அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணம் செய்துக்கலாமா…?” என்ற மணிமேகலையின் அவசரத்தில்…

ஜான் விக்டர் புரிந்துக் கொண்டது. அவள் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து விட்டார்கள். அதுவும் அடுத்த மாசத்தில்…

இவள் பயிற்ச்சியே அடுத்த மாசம் தானே முடிவடைக்கிறது. ஓ அப்போ அதை கணக்கு செய்து தான் அவள் கல்யாணம் முடிவு எடுத்து இருக்காங்க.

என் கணிப்பு படி மாப்பிள்ளை இந்தியாவில் இருப்பவனாக தான் இருக்க வேண்டும். மணிமேகலையின் ஆசை தான் அவனுக்கு தெரியுமே…

உடனே முடிவு எடுத்து விட்டான். அவனுக்கு இவ்வளவு சீக்கிரம் மணிமேகலையை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.

எதிர் பார்க்காதது கையில் கிடைக்கும் போது அதை கெட்டியாக பிடித்துக் கொள்வது தான் புத்திசாலி தனம். தான் ஒரு புத்திசாலி என்பதை ஜான் விக்டர் நிரூபித்தான்.

மணிமேகலையிடம் எதற்க்கு இந்த அவசர திருமணம். உன் வீட்டில் ஒப்புதல் பெற வேண்டாமா…என்று எதுவும் கேட்காது.

மணிமேகலை  கேட்டதற்க்கு… “சரி.” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான்.

ஜான் விக்டர் ஏன்..?எதற்க்கு…?என்று காரணம் கேட்பார். நாம் என்ன சொல்வது என்று  குழம்பி இருந்தவளுக்கு ஜான் விக்டரின் இந்த ஒப்புதல், மணிமேகலைக்கு   ஒரு நிம்மதியை கொடுத்தது எனலாம்.

எனினும் சந்தேகம்…ஜான் விக்டர் எதற்க்கு சரி என்றார் என்று..அதனால் திரும்பவும் … “நீங்க சரின்னு சொன்னது கல்யாணத்துக்கு தானே…” என்று உறுதி படுத்திக் கொள்ள கேட்டாள்.

“நான் சரின்னு சொன்னது உன்னை கல்யாணம் செய்துக்க தான் மேகலை. அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். இன்னும் கேட்டா இந்த கல்யாணத்தை நான் ரொம்ப ரொம்ப ஆவலா எதிர் பார்க்கிறேன்.” என்று  ஜான் விக்டர் கொடுத்த நீண்ட விளக்கத்தில் தான் மணிமேகலை ஒருவாறு அமைதியானாள்.

பின் தயங்கி… “ஆன்டி..அங்கிள் …” என்று அடுத்து என்ன பேசுவது என்று மணிமேகலை தயங்கி தன் பேச்சை நிறுத்தினாள்.

ஜான் விக்டர்… “உன் ஆன்டி…அங்கிளுக்கும்…நம்ம கல்யாணம்  ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தான் கொடுக்கும்.” என்று சொல்லி மணிமேகலையின் பேச்சை முடித்து  வைத்தவன்…

“சரி நேரம் ரொம்ப ஆயிடுச்சி. தூங்கு. நான்  மார்னிங் உன்னை வந்து  பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்று சொன்ன ஜான் விக்டருக்கு அடுத்து அவளிடம் காதல் மொழி பேச ஏனோ முடியவில்லை.

இந்த கல்யாணம் முடிவானால் மேகலை தன்னோடு இருப்பாள். அதை நினைத்து அவனுக்கு சந்தோஷமே…ஆனால் இந்த கல்யாணம் என்ற உடன் இந்த ஹார்மோன்ஸ் எல்லாம் கன்னா பின்னா என்று வேலை  செய்யுமாமே…ஆனால் ஜான் விக்டருக்கு  அது எல்லாம் வேலை செய்யவில்லை போலும்…

காலையில் இந்த விசயத்தை தன் அன்னை தந்தையிடம் சொல்ல வேண்டும். சர்ச்சில் பாதிரியாரை பார்க்க வேண்டும். கல்யாணத்திற்க்கு  உண்டான பதிவை கொடுக்க வேண்டும். என்று அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைவிலேயே தூங்கி போனான்.

“மேகலையும் நானும் அடுத்த மாசம் கல்யாணம் செய்துக்க போறோம்.” என்று எப்போதும் சாப்பிடும் போது பேசிக் கொள்ளும் சமயத்தில் இவ்வள்வு பெரிய விசயத்தை ஒரு செய்தியை சொல்லும் மகனை அதிர்ந்து பார்த்தார் வில்சன் விக்டர்.

ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் மலர் விழியோ… “நீ உன் விருப்பத்தை மணிக்கிட்ட சொல்லிட்டியா ஜான்.” என்று ஆவளோடு கேட்டார்.

இதற்க்கு ஜான் என்ன பதில் சொல்வான். பதில் சொல்லாது யோசிப்பவனை வில்சன் விக்டர் சந்தேகத்துடன் பார்த்தார்.

பின்.. “நீ அந்த பெண்னை போஸ் பண்றியா ஜான்…?” என்ற தந்தையின் கேள்வியில்.. கோபம் கொண்ட ஜான் விக்டர்…

நேற்று  இரவு  தனக்கும் மணிமேகலைக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் சொல்லி முடித்தவன்…

“நான் உங்க மகன் டாட்…ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்க மாட்டேன்.” என்றும் சொன்னான்.

“ஒரு பெண்ணின்   சூழ்நிலையை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கிறது கூட தப்பு தான் ஜான். எனக்கு என்னவோ அந்த பெண் யாரையோ ஏமாத்த தன்னையே ஏமாத்திக்கிறாளோன்னு தோனுது ஜான்.

அந்த பெண்ணுக்கு உன் மீது காதல் இல்ல ஜான். மரியாதை தான் இருக்கு. அவள் பார்வையில்  நீ ஜான் சார் மட்டும் தான்.” என்று வில்சன் விக்டர் சொன்னார்.

“எனக்கும் அது தெரியும் டாட்.” என்ற  ஜான் விக்டரின் பேச்சில் வில்சன் விக்டர் அதிர்ந்து போய் மகனை பார்த்தார்.

திரும்பவும் ஜான் விக்டர்… “மேகலைக்கு என் மீது காதல் இல்லை. மரியாதை இன்னும் அவ மனசுல நான் அவரோட சார தான் பாக்குறா…” என்ற ஜான் விக்டரின் பேச்சில்..

“அப்போ எதுக்கு ஜான் இப்படி அவசர அவசரமா அவளை  கல்யாணம் செய்துக்க பாக்குற..கொஞ்சம் பொறுமையா உன் மனச அவளுக்கு புரிய  வெச்சி அப்புறம் கல்யாணம் செய்துக்கலாம் தானே …” என்று கேட்டார்.

“இல்ல டாட். அது என்னவோ  அவளுக்கு என் மீது காதல் என்ன..?குறைந்த பட்சம் இந்த வயசுல வர்ற ஈர்ப்பு கூட  அவளுக்கு என் மீது வரல… என்னை அவள் காதலித்து தான் நான் அவளை கல்யாணம் செய்துக்கனுமுன்னு  நினச்சா..அது இந்த ஜென்மத்துக்கு  முடியாது.

 

[the_ad id=”6605″]

 

 

 

அதான் அவள் கேட்டதும் நானும் உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். எனக்கு தெரியும் டாட். நான் செய்யிறது தப்புன்னு…ஆனா மேகலைய பார்த்திலிருந்து…அவ நம்ம வீட்ல இருக்க வேண்டிய பொண்ணுன்னு என் மனசு சொல்லுது டாட்.” என்ற மகனின் பேச்சில் வில்சன் விக்டர் ஆடி தான் போனார்.

தெரியாதவனாய் இருந்தால் சொல்லலாம். நீ செய்வது தப்புன்னு…ஆனா எனக்கு நான்  செய்வது தப்பு. எனக்கு வேற வழி இல்ல என்று சொல்லும் மகனிடம் அவர் என்ன என்று சொல்வார்.

இருந்தும்… “ஏதுன்னாலும் கொஞ்சம் யோசிச்சி செய் ஜான். இது உன் வாழ்க்கை மட்டும் இல்ல. எங்க சந்தோஷம் நிம்மதி…எல்லாம் உன் மகிழ்ச்சியில் தான் இருக்கு.” என்று ஒரு தந்தையாய் தன் மகனின் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாய்  இருக்க வேண்டும் என்ற ஆதாங்கத்தில் சொன்னார்.

பின் அனைத்திற்க்கும் தன் மகனுக்கு பக்க பலமாய் இருந்தார். பாதரியாரிடம் பேசியதில் இருந்து கல்யாண புடவை கல்யாணத்திற்க்கு வேண்டியதை  அனைத்தும் வாங்கும் வேலை அமெரிக்காவில் கலிப்போனியாவில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் அதே வேளயில்…

இந்தியாவில் கிருஷ்ணகிரியில்… உள் இருக்கும் கிராமத்தின் அந்த பெரிய வீட்டில் வீடு முழுவதும் உறவு முறை கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டு இருந்தது.

பங்காளி முறையில் இருக்கும் ஒருவர்…  “கல்யாணத்துக்கு சாமி கும்பிடுறது எல்லாம் பெண் இருக்கும் போது தான் செய்வாங்க…நீங்க ஏன் மணி இல்லாம செய்யிறிங்க…?” என்று உறவு முறையில்  இருக்கும் ஒருவர் வம்பு பேச இருப்பர்.அந்த ஒருவர் தான் இவர்.

அதற்க்கு தெய்வநாயகி தன் வெண்கல குரலில்… “ அவளுக்கு படிப்பு அடுத்த மாசம் தான் முடியுதே…அதுக்கு அப்புறம் பார்த்து தான் பறக்க டிக்கட் போட்டுட்டு வருவா…

என் பேத்தி என்ன உங்க பேத்தி மாதிரி பக்கத்து டவுனில் போய் படிக்குதுன்னு நினச்சிப்புட்டிங்கலா…எல்லாத்துக்கும் ஓடியாற…நம்ம ஜாதி ஜனத்துல படிக்காத படிப்ப  என் பேத்தி படிக்கிறா…” என்று மணிமேகலையை பற்றி பெருமை பீத்திக் கொண்டு இருந்தார் தெய்வநாயகி…  இதை எல்லாம் கேட்க தான்  நம் மணிமேகலைக்கு கொடுத்து வைக்கவில்லை.

எப்போதும் தன் பேத்தியை பெருமையாக பேசாதே தெய்வநாயகியின் இந்த பேச்சை கேட்டு ஊரே ஆச்சிரிப்பட்டதோடு,  வீடும் ஆச்சரிப்பட்டு தான் போனது.

கொஞ்சம் நாளாகவே தெய்வநாயகியின் பேச்சில் பேத்தியை பற்றி பீத்தல் இருக்க தான் செய்தது. வீடோடு பேசிய பேச்சை கேட்கும் போதே…இரு மருமகள்களுக்கும் காதில் புகை கிளம்பும்.

இன்று ஊரே கேட்கும் படி பேசிய அத்தையின் பீற்றலில் தன் மகன்  வாசுதேவை திட்டிக் கொண்டு இருந்தார் அந்த வீட்டின் இரண்டாம் மருமகள்.

“ஏன்டா  பொம்பள பொண்ணு அங்கு போய் படிக்கனுமுன்னு நின்ச்சி இருக்கு. ஆம்புள  பையன் உனக்கு ஏன்டா அந்த நினப்பு வரல…” பாவம் முப்பதை தொட இருக்கும் நேரத்தில் கேட்டால் அவன் என்ன சொல்வான். அப்போதைக்கு பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அன்னையை பார்க்க தான் முடிந்தது.

“சரி படிப்பு தான் இப்படி போச்சி…காதலாவது வெளிநாட்டு பொண்ணா பத்து பண்ணியா…இதே ஊரு  இதே தெருவு…சீ பொறந்ததும் இங்கே… வாக்கப்பட்டதும் இங்கே…இப்போ சம்மந்தம் பேச போறதும் இங்கே…எல்லாம் என் தலையெழுத்து.” என்று தலையில் அடித்துக் கொண்டே அந்த பக்கம் நகர்ந்து போனதும் தான் வாசுவுக்கு உயிரே வந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

பின் மனதில்… ‘நல்ல வேள மணி  ஆசைப்பட்ட படி அங்கயே வேலை பார்த்துட்டு அங்கே இருக்கும் ஒருவனை கல்யாணம் செய்துட்டு  பெரியப்பா பெரியம்மாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டி போகல…

அப்படி மட்டும் நடந்து இருந்தது… என் அம்மா அவ்வளவு தான், என் சாப்பிட்டில் என் அம்மா விசம் வெச்சி கொன்னு போட்டாலும் போட்டு இருப்பாங்க. என் வசு புன்னியத்தில் நான் தப்பிச்சேன்.” என்று நினைத்துக் கொண்டான்.

ஆம் வசுந்தரா மணிமேகலை படிக்க வெளிநாட்டுக்கு சென்றதும், வாசுவை பார்க்க முடியாது போய் விட்டது. வாசு  மாதத்திற்க்கு ஒரு முறை தான் சனி ஞாயிறுகளில் ஊருக்கு வருவான்.

வந்ததும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அடுத்த வீதியில் இருக்கும் வசுவின்  வீட்டை  சுற்றி சுற்றி  வட்டம் அடிப்பான்.

அப்படி வட்ட மடிக்கும் போதே தன் வண்டியின் ஆரனையும் சேர்த்து தான் அடிப்பான். அவன் எதிர் பார்த்தது போல் வசு வெளியில் வந்து பார்த்ததும் அவளின் முக  தரிசனத்தை தரிசித்து விட்டு, வீட்டுக்கு வந்த்தும் முதல் வேலை நாயை கூட்டிக் கொண்டு முன் பக்க தோட்டத்தில் நிற்பது தான்.

வசு எந்த ஹாங்கில் நிற்பாள் என்று வாசுவுக்கு நன்கு தெரியும். அவளுக்கு தன்னை தெரியும் படியும். தான் அவளை பார்க்கும் படியுமான பொசுஷனில் நின்றுக் கொண்டு விடுவான்.

பின் அவன் எதிர் பார்த்தது போல…ஏதாவது சாக்கு சொல்லி வசு இங்கு வந்து விடுவாள். இப்படி வெறும் பார்வை பரிமாற்றமாய் இருந்த அவர்களின் காதல்…

மணிமேகலை வெளி நாட்டுக்கு படிக்க சென்ற பின் …பார்ப்பது கூட முடியாது போனது.

அப்போது தான் வாசு உணர்ந்தான் வசு என்றும் வேண்டும் என்பதை, அதை செயல்படுத்த எப்போதும் போல் ஊருக்கு வந்ததும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வசுவின் வீதியில் வட்டம் இட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!