Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 23

என்னவள்_23

 

மொத்தமாக நினைவு இழந்த நிலையில் மயங்கி இருக்க மோகன் மறுபடியும் தனது வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டு இருந்தான். ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் இவளைபார்த்து “ஐயய்யோ என்ன காரியம் பண்ணிட்டான் நேற்று தானே இந்த பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க…அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே “என்றபடி இவளை தூக்கி கொண்டு ஹாஸ்ப்பிடலுக்கு புறப்பட்டனர். தியாகு சுத்தமாக மனதால் உடைந்து இருந்தான். மோகனின் இந்த பரிணாமம் புதியது அவருக்கு…

 



Advertisement

என்ன சொன்னாலும் கொஞ்சம் மிரட்டலாக சொல்லி விட்டால் உடனே தலையாட்டி விடுவான்… அவர் அறிந்த மோகன் அப்படிதான்.  ஆனால் இன்று சக்தியிடம் நடந்து கொண்டது யாருமே கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதது.

 

இப்போது என்ன செய்வது இன்னும் நான்கு மணி நேரத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து செல்ல பெண் வீட்டில் இருந்து வருவார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது இதை நினைக்கும் போது இன்னும் பயமாக இருந்தது.  தான் தான் அவசரப்பட்டு விட்டோமோ…இவனின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமோ என்ற யோசித்தபடி பின்னால் பார்க்க இன்னும் சக்தி மயக்கத்தில் தான் இருந்தாள்.

Advertisement

 

Advertisement

அரசி முழுக்க முழுக்க பயந்து இருந்தார் அவரது கண்ணிலும் கண்ணீர் இன்னும் வழிந்து கொண்டு இருந்தது.  வருபவர்களுக்கு கூட ஏதாவது பதில் சொல்லி கொள்ளலாம் இவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டுதல் மட்டுமே அப்போது இருந்தது.  ரத்தம் வழியாமல் இருக்க தலையில் துணியை கிழித்து கட்டி இருந்தனர். வலது கையிம் வீக்கமாக தெரிந்தது.வீட்டில் இருக்கும் போது லேசாக தெரிந்த வீக்கம் ஹாஸ்ப்பிடலுக்கு வரும் போதே இன்னும் அதிகமாக தெரிந்தது.

 

வண்டி ஹாஸ்ப்பிடலில் நிற்கவுமே வேகமாக ஸ்டெச்சரில் இவளை  ஏற்றி கொண்டு செக் செய்ய அழைத்து சென்றிருந்தனர். வேகவேகமாக நெற்றி காயத்தினை  துடைத்து பார்க்க அது பெரிதாக ஆழமாக வெட்டி இருந்தது.  வேகமாக ஃடிஸ்ச் செய்ய ஏற்பாடு செய்தனர். இப்போது தான் லேசாக சக்தி அசைந்தாள்.

Advertisement

 

இரண்டு கன்னமும் வீங்கி அடித்த தடம் தெரிய நேற்று இரவு கட்டிய புத்தம் புது பட்டுச்சேலை முழுக்க இப்போது ரத்தம் பட்டு முழுக்க ரத்த கலரில் காட்சி அழித்தது. நெற்றியில் ஐந்து தையல் போட்டு இருந்தனர்.தையல் போட்டு முடிக்கவும் நர்ஸ் பெண்…டாக்டர் இந்த பொண்ணுக்கு  வலது கையும் வீங்கி இருக்கிறது டாக்டர்…

 

டாக்டர் அருகில் வந்து செக் செய்தவர் “கையில் பிராக்ச்சர் ஆனது போல தெரியுது எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்திடுங்க பார்த்துவிட்டு என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம் இந்த பேசண்ட் கூட வந்தவங்க எங்க இருக்கறாங்க அவங்கல என்னுடைய ரூம்பிற்கு அனுப்பி வைங்க என்றபடி நகர்ந்து சென்றார். “

 

உள்ளே தியாகுவும் அரசியும் உள்ளே வர…டாக்டருக்கு அத்தனை கோபம்…படிக்கட்டில் தவறி விழுந்து விட்டாள் என்று ரிஷப்ஷனில் கூறி இருக்க…கன்னத்தில் தெரிந்த கையில் அடையாளத்தை பார்த்த போதே ஒருவாராக யூகித்து இருந்தார்.” நீங்கள் தான் அந்த பொண்ணு கூட வந்தவங்களா…என்ன நடந்தது என்று கேட்க..”.இரண்டு பேருமே பதில் சொல்லாமல் அமைதி காத்தனர்.

 

“டாக்டர் கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்ல கூடாது தெரியுமா…நீங்கள் சொன்னால் தான் நான் மேற்கொண்டு டிரிட்மெண்ட் கொடுக்க முடியும். ரெண்டு பேரும் அந்த பொண்ணுக்கு மாமனார் மாமியார்ன்னு தெரியுது கன்னத்தில் அடித்த தடம் தெரியுது. அப்போ நீங்களும் இதுக்கு உடைந்தையா…வரதட்சனை கேட்டு உங்கள் பையன் கூட சேர்ந்து நீங்களும் இந்த பெண்ணை கொடுமை படுத்தறிங்களா…சொல்லுங்க…என்று கூற…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஐயோ அப்படி எல்லாம் இல்லை டாக்டர் நேற்று தான் கல்யாணம் நடந்தது.  அவனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை போல இருக்கு அது தான் இப்படி ஆகிடுச்சு…நடந்ததை சுருக்கமாக கூற…”

 

“இவன் எல்லாம் மனுஷனா இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு…இது கிரிமினல் குற்றம் தெரியுமா…என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட் வந்துடுச்சு..என்று இவரிடம் தர…மை காட் கை உடைஞ்சு இருக்கு முதல்ல கட்டு போட ரெடி பண்ணுங்கள் என்றபடி வேகமாக வெளியேறினர். “

 

“போங்க…முன்னாடி வெயிட் பண்ணுங்கள் என்றபடி சக்தி அட்மிட் ஆகி இருந்த அறையை நோக்ஙி நகர்ந்தார்.”

 

“என்னங்க…சக்தியோடு அம்மா அப்பாவுக்கு சொல்லிடுங்க…அரசி தியாகுவின் அருகில் வந்து கூறினாள்.”

 

“என்னத்தடி சொல்ல சொல்லற… உங்க பொண்ணு அடிச்சு கையை உடைச்சிட்டான் வந்து பாருங்கன்னு கூப்பிட சொல்லறையா…அவங்களும் நம்மல மாதிரி பெரிய ஆள்டி முதல்ல உன்னோட பையனுக்கு ஃபோன் பண்ணி இன்னும் பத்து நாளைக்கு வீட்டு பக்கம் வராதேன்னு சொல்லிடு…எல்லாம் என்னோட தலையெழுத்து எதுக்கோ ஆசைப்பட்டு என்னவோ நடந்திடுச்சு…தலையில் கைவைத்து ஓரமாக அமர்ந்து விட்டார். “

 

அதே நேரம் அங்கே சக்தியின் வீட்டில் இவளை அழைத்து வர புறப்பட்டு கொண்டு இருந்தனர். சக்தியின் தகப்பனார் திவ்யா அவளின் கணவன் சிவா அபிக்குட்டி என ஒரு இன்னோவா காரை வாடகைக்கு அமர்த்தி புறப்பட்டு தயாராக இருந்தனர். திவ்யா தான் “அப்பா நான் சக்திக்கு ஃபோன் பண்ணறேன் நாங்கள் புறப்பட்டாச்சு…என்று என்று அவளுக்கு ஃபோன் செய்ய…ரிங் போய் கொண்டே இருந்தது எடுக்க தான் யாரும் இல்லை.  மறுபடி மோகனுக்கு அழைப்பு விட அவனும் அழைப்பை கட் செய்து விட்டான். “

 

யோசனையோடு நிற்க..”.திவ்யா வண்டியில் ஏறு…என்ன யோசிச்சிட்டு நிற்கற…சிவா கேட்டபடி இவளை வாசலுக்கு நேராக நகர்த்த…”

 

“சக்தி ஏதாவது வேலையா இருப்பா…நீ புறப்படு…என்று சொல்லியவன் அத்தை புறப்படறோம் என்று கூறியவன் ஏய் திவ்யா இன்னும் என்ன யோசனை…”

 

“எப்படியும் காலையிலேயே நான் கூப்பிடுவேன்னு ஆர்வமாக ஃபோனை கையில் வச்சிப்பான்னு நினைச்சேன்.  இது அவளோட நேச்சர் இல்லை சிவா. “

 

“வெரி சிம்பிள் அவங்க மாமியாருக்கோ இல்லையின்னா மாமியாருக்கு ஃபோன் பண்ணு…சக்தி எங்கேன்னு கேளு முடிஞ்சது.”

 

“அதுவும் சரிதான் என்றபடி சக்தியின் மாமனாருக்கு அழைப்பு விடுத்தாள் திவ்யா…மாமா சக்தி எங்கே ஃபோன் பண்ணினேன் எடுக்கலை என்று சொல்லவும்…வந்த பிறகு எப்படியும்சொல்லத்தானே வேண்டும் என்று நினைத்தவர் …ஒரு சின்ன அக்ஸிடெண்ட் சக்திக்கு அடிபட்டு இருக்கு இங்கே ஹாஸ்ப்பிடல் வந்து இருக்கிறோம்…”

 

“என்னது அக்ஸிடெண்டா…எப்படி ஆச்சு..”

 

“படிக்கட்டில் இருந்து விழுந்திட்டாமா..”

 

அவர் சொல்லவுமே மொத்த குடும்பமும் புறப்பட்டு இருந்தனர் சக்தியின் தாயார் அழவே ஆரம்பித்து இருந்தார்.” அது பெரிய வீடாச்சே எப்படி விழுந்தாலோ எப்படி அடிபட்டுச்சோ…அவள் வலி தாங்க மாட்டாலே என்று அழ ஆரம்பித்து இருந்தார்.”

 

எந்த ஹாஸ்ப்பிடல் என்ன கேட்டு இவர்கள் செல்லும் நேரத்தை விடவும் அரைமணி நேரத்திற்கு முன்பாக  வேகமாக அங்கே சென்று இருந்தனர்.

 

அங்கே போய் விவரம் கேட்டு விட்டு சக்தியை முகத்தை பார்க்க மொத்தமாக உடைந்தே விட்டனர் அத்தனை பேரும்.  இரண்டு கன்னத்திலும் அடித்த தடம் தெரிய…முகம் முழுக்க வீங்கி ஒருபக்க உதடு கிழிந்து …அந்த உதடு கூட அதிகமாக வீங்கி தனியாக தெரிய…தலைமுடி இழுத்ததிற்கு அடையாளமாக கையில் கட்டோடு..

இவர்களை பார்த்தவள் சிரமப்பட்டு ஒருவாராக நடந்ததை சொல்லி இருந்தாள்….அவளை பார்க்கவும்  கோமதி அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். சிவா கோபமாக வெளியே வந்தவன் தியாகுவின் சட்டையை கொத்தாக பிடித்து எழுப்பியவன்..”.என்னய்யா நீ எல்லாம் பெரிய மனுஷன் வாழ வந்த பொண்ணு என்ன பண்ணி வச்சிருக்கற…என்னய்யா பண்ணுனிங்க… எங்கே நீ பெத்த அந்த நாய்…முதலில் அவனை கூப்பிடு என்று கோபமாக கேட்டவன் அவரை கோபமாக கன்னத்தில் அறைந்து இருந்தான்.”

 

“தப்பு எங்க பேரில் தான்  தம்பி அவரோட சட்டையை விடு… மோகன் எங்கே போனான்னு தெரியவில்லை. விட்டுடுப்பா…என அரசி ஒரு புறம் கைகூப்பியபடி அழ…”நர்ஸ் இருவர் வேகமாக அருகில் வந்து இது ஹாஸ்ப்பிடல் இங்கே இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது எதா இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு வெளியே போய் பேசிக்கோங்க…”என்றபடி  இவர்களை பிரித்து விட்டனர்..சக்தியை ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து வந்திருந்த போது கூடவே வந்திருந்த இன்னோருவர்…”அந்த பையன் அப்பவே கல்யாணம் வேண்டாம் எனக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணி தராதிங்கன்னு சொன்னான் இவர்தான் கேட்கலை வந்த அன்றைக்கே அடிச்சு மாடியில் இருந்து இந்த பொண்ணு உருட்டி விட்டுட்டான் என அவருக்கு தெரிந்ததை சொல்ல…சக்தியின் தந்தை மொத்தமாக அவர்கள் சொன்னதை செத்தேவிட்டார்.”

 

“அங்கே சக்தி திவ்யாவிடம் என்னை இங்கே இருந்து கூப்பிட்டுட்டு போயிடுங்கக்கா என்னால இங்கே முடியாது பயமாக இருக்குக்கா…”என்று சொல்லியபடியே மயங்கி இருந்தாள் அவளது தோற்றம் மேலும் பயத்தை தர…”நர்ஸ் என்ன சத்தமாக அழைத்தாள் திவ்யா. “

 

“வேகமாக வந்து நர்ஸ் பல்ஸ் செக் செய்தவர் ரொம்ப பயந்து இருக்கறாங்க

அவங்கலால அந்த நிமிடத்தை இன்னும் கடக்க முடியலை அதனால்தான் இந்த மயக்கம் இனி யாரும் பேசண்டை டிஸ்டப் பண்ணாதிங்க…அவங்க தூங்க ஊசி போடறேன் என்றபடி கையில் ஏறிக்கொண்டு இருந்த குளூக்கோஸில் மருந்தை ஏற்றினார். “

 

அங்கே சிவா…தனது மாமனாரிடம்  “மாமா இவங்கல சும்மா விடக்கூடாது இங்கே இருக்கற போலீஸ் ஸ்டேசனில் கம்ளைண்ட் பண்ணிட்டு வரேன். நம்ம பொண்ண இப்படி  ஆக்கினவனை சும்மா விடக்கூடாது. ” 

 

சக்தியின் தகப்பனார் எதுவும் பதில் சொல்லவில்லை.  எல்லாமே முடிந்தது என்பது போல அமர்ந்து இருக்க .”.தியாகு அருகில் வந்தவர் தப்பு என் பேரில் தான் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு கட்டுப்படறேன். போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணுவிங்களா பண்ணுங்கள் எந்த தண்டனை தந்தாலும் வாங்கிக்கறேன்…என்று அவர்கள் எதிரில் வந்து நின்றார் …”

 

“சை…பேசாத யா.”..என்றபடி சக்தியின் தகப்பனார் வேகமாக எழுந்தவர்…”சிவா ஹாஸ்ப்பிடலில் பேசிட்டு நம்ம பொண்ண அழைச்சிட்டு போகலாம் இந்த ஊர் நமக்கு வேண்டாம்.  கோயம்புத்தூரில் நல்ல ஆஸ்பத்திரியில் பார்த்துக்கலாம் போதும்… கேட்டதும் போதும்….என் பொண்ணு வாழ்ந்ததும் போதும்…. இதுக்கு மேல  என் பொண்ணு பேர் எதிலேயும் வரவேண்டாம். கம்ளைண்ட் கொடுத்தா டிவியிலேயும் பேப்பரிலேயும் என் பொண்ணோட பேரை போட்டே அசிங்க படுத்துவாங்க…என்றபடி கோமதி இருக்கும் திசை நோக்கி நகர்ந்து சென்றார். “

 

அவர் சொல்வதும் நியாயமாக பட்டது சிவாவிற்கு…

அடுத்து ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு இருந்தனர் கோயம்புத்தூர் நோக்கி அங்கே இருந்த பிரபல மருத்துவ மனையில் சேர்க்க தொடர்ந்து சிகிச்சை அழிக்கப்பட்டது சக்திக்கு…விழிக்கும் போது பயத்தில் அலற…ரொம்பவும் 

சிரமப்பட்டு போயினர் வீட்டில் உள்ள அனைவருமே…ஒரு வாரம் வரைக்கும் இருக்க இப்போது தலையில் தையல் பிரித்து ஒரு பிளாஸ்திரி மட்டுமே ஒட்டி இருந்தது.  கையில் இன்னும் இரண்டு கட்டு மாற்ற வேண்டும் என்று  கூறி இருந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

பத்து நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினாள் சக்தி அதற்கு முன்பே இவர்கள் அனுப்பிய சீர்வரிசை பொருட்கள் திருமணத்திற்கு செல்வான தொகை என மொத்தமாக அனுப்பி இருந்தனர் டெம்போவில் ஏற்றி…மோகனின் உறவினர்கள் என யாரும் வரவில்லை.  இங்கே இவர்களது ஊரில் இவர்களுக்கு இருந்த மரியாதை எங்கே வந்தால் அடித்து விடுவார்களோ என்ற பயமும் இருந்தது.  மொத்தமாக சக்தியின் வாழ்க்கை ஒரே நாளில் முடிவுக்கு வந்து இருந்தது. 

 

இங்கே வந்து மூன்று மாதம் முடிந்து இருக்க.. சதா சர்வ நேரமும் எதையோ இழந்தது போல…கிட்டத்தட்ட பைத்தியம் போல எதையோ வெறித்தபடி அமர்ந்து இருந்தாள். கை கட்டு முழுவதுமாக எடுத்து விட்டு இருந்தனர்…பெரிதாக வெளியே தெரியாவிட்டாலும்  வலி இன்னமும் இருந்தது. கூடவே அவ்வப்போது அன்றைய நாள் கனவாக தொடர நிறைய நாள் தூக்கத்திலேயே அலறிக்கொண்டு  இருந்தாள்.இதை பார்த்து தாய், தந்தை இரண்டு பேருமே கண் கலங்கினர்.

 

இன்னமும் விசாரிக்க என்று யாராவது வந்து கொண்டே இருந்தனர். ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்  சக்தியை திவ்யா தன்னோடு அழைத்து கொண்டு ஊட்டிக்கு சென்று இருந்தாள்… அங்கும் வீட்டில் இருந்தது போல மெளனமே தொடர… ஒரளவிற்கு பொறுமை காத்தவள் ஒருகட்டத்திற்கு மேல் தனது மகளை அவளிடம் அடிக்கடி கொடுத்து அவளது மனதை மாற்ற… அது கொஞ்சம் வேலை செய்தது…சக்தி அபிநயாவோடு மொத்தமாக ஒன்றி இருந்தாள் … நாட்கள் வேகமாக நகர்ந்தது …இவளது திருமணம் முடிந்து ஒரு வருஷம் முடிந்திருக்க சட்டப்படி விவாகரத்து கேட்டு…அனுப்பி வைத்தனர் சக்தியின் சார்பில்…மறுபடியும் சமரசம் பேசவோ…அங்கே சென்று பார்ப்பதற்கோ யாருக்கும் விருப்பம் இல்லை…கோபம் மட்டுமே அவர்களின் மேல் அதிகமாக இருந்தது…

 

விவாகரத்து கொடுப்பதற்கும்  மோகன் பக்கத்தில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை…எல்லாமே எளிதாக முடிய..விவாகரத்து கிடைக்கவும்…தொடர்ந்து ஊட்டியில் இருக்க சக்திக்கு பிடிக்கவில்லை தன்னுடைய வீட்டிற்கு போகிறேன் என நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருந்தாள்…

 

[the_ad id=”6605″]

 

 

 

இங்கே மேட்டுப்பாளையம் வரவும் மறுபடியும் பார்க்க என ஒவ்வொருவராக  வர ஆரம்பித்தனர் ஒருகட்டத்திற்கு  மேல் பொறுக்க முடியாமல் யோசித்தது தான்…

 கொஞ்ச நாள் வேலைக்கு போனால் என்ன ?…நடந்த நிகழ்வில் இருந்து வெளியே வர இந்த வேலைக்கு போகும் திட்டம் உதவியாக இருக்கும் என்று தோன்றியது.

 

புது இடம் புது மனிதர்கள் என மாறினால் நன்றாக இருக்கும் என தோன்ற… திவ்யாவின் கணவரிடம் “வேலை எதாவது வாங்கி தாங்க மாமா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்க முடியும்…கொஞ்சம் மாற்றமாக இருக்கணும் என்று கேட்க.”..அவனுக்கு தெரிந்த நன்கு பரிட்சயமான இடத்தில் இவளுக்கு வேலை வாங்கி கொடுத்து இருந்தான்.

 

விவாகரத்து வாங்கிய சில நாட்களிலேயே  மோகன் செல்வியை மணந்து கொண்டான் இதுவும் ஒரு நாள் முருகேசன் கோமதியிடம் சொன்னது…

 

இன்னமும் யாருக்கும் மனது ஆறவே இல்லை சக்தியை நினைக்கும் போது….  மனதின் ஓரத்தில் என்றும் மறையாத வடுவாக அனைவர் மனதிலும் தேங்கி இருந்தது. இதையெல்லாம் யோசித்தவள் தூங்கும் போது இரண்டு மணியை தாண்டி இருந்தது.  அதன் பிறகும் கூட ஏதேதோ கனவுகள் இவளை துரத்த விழித்து இவள் எழுந்த போது காலை பத்து மணியை தாண்டி இருந்தது. 

 

சக்தி நேற்றைக்கு உடம்பு கொஞ்சம் முடியலை தலைவலின்னு சொன்னே இல்லையா…அதனால  அந்த பொண்ணு ரேஷ்மா கிட்ட ஆபீஸ்சுக்கு  லீவ்ன்னு சொல்லிவிட்டேன் என்றபடி ஃகாபியோடு இவளை காண வந்தார். ஏனோ இன்றைக்கு வேலைக்கு போகும் எண்ணமும் அவளுக்கு இல்லை…சரிமா என புன்னகையோடு எழுந்து சென்ளாள்.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!