Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 28

என்னவள்_28

 

காலை ஆறுமணியை தொடும் போது கார்த்திக்கிற்கு விழிப்பு வந்து இருந்தது.  அருகில் திரும்பி பார்க்க இன்னும் ஆழ்ந்து தூங்கி கொண்டு இருந்தாள் மாயா…அவனை வயிற்றோடு அணைத்தபடி…சிறு குழந்தை போல…லேசான  புன்கையோடு…

 



Advertisement

கார்த்திக்கிற்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது  மாயாவின் மாற்றம் ஒரே நாளில் மொத்தமாக மாறி இருந்தாள். இனி எல்லாமே நீ மட்டும் தான் என்பது போல…கொஞ்சம் பயமாக கூட இருந்தது கார்த்திக்கிற்கு…இவ்வளவு அதிக அன்பும் கூட கொஞ்சம் ஆபத்து தானோ என்று…கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டு இருக்க…மாயா காட்டருவி போல நிளைய பேசிக்கொண்டு இருந்தாள் இவனிடம்…ஆரம்பத்தில் இவளது வளர்ச்சி இரண்டு முறை சிறு வயதில் இவனை பார்த்தது…சமீபத்தில் தந்தை சொல்லவும் இவனை கவனிக்க ஆரம்பித்தது என…நிறைய… ஒரு கட்டத்தில் இயல்பாக இவர்களது தாம்பத்தியம் எந்த தயக்கமும் இல்லாமல் தொடங்கி இருந்தது. சிறு முத்தத்தில் ஆரம்பித்து அவளிடம்  மொத்தமாக முழ்கி இருந்தான் கார்த்திக்…இப்போது அதை நிறைத்தபடி மாயாவை பார்க்க…அவளது முகம் இப்போது கூட லேசாக சிவந்திருக்க…நேற்றைய ஞாபகத்தில் க

 

மெதுவாக தலைகோதியபடி அவளது நெற்றியில் முத்தமாட்டவன் ஹாய்…மாயா என்றபடி லேசாக அவளின் தோளை தட்ட…

Advertisement

 

Advertisement

கார்த்திக் தூங்கினதே  லேட்டு ஏன் இப்போதே எழுப்பற..நேரம் என்ன ஆச்சு…சினுங்கியபடியே அவனை இன்னும் இறுக்கமாக இன்னும் அவனிடம் நெருங்கி படுத்திருந்தாள்.

 

காலையில் அங்கே  போகணும்  மாயா..

Advertisement

நேரம் ஆறு ஆச்சு…

 

கார்த்திக் நைட்டும் நீ தூங்க விடலை பத்துமணிக்கு தான் வரச்சொல்லி இருக்கறாங்க எட்டு மணி இல்லாமல் எழுந்திருக்க மாட்டேன் நீ பேசாமல் கண்ணை மூடு என்றபடியே மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள். 

 

அடிப்பாவி நைட் அத்தனை நேரம் நீதான் பேசின…

 

[the_ad id=”6605″]

 

 

 

பேசாத கார்த்திக் பேசினா உதட்டை பிடிச்சு கடிச்சு வச்சிடுவேன் தூங்கு…என்றபடியே பெட்சீட்டை இழுத்து போர்த்தியபடி படுத்துக்கொண்டாள்.இந்த ஒரு நாளில் அவளிடம் இவன் தெரிந்து கொண்டது அவளது பிடிவாதம்…இவள் கொஞ்சம் பிடிவாதகாரி போல இருக்கு என நினைத்து கொண்டான். ஆனால் அவளது பிடிவாதத்தின் அளவு மட்டும் இன்னும் அவனுக்கு தெரியவில்லை.  ஏன் இன்னும் இவனிடம் அவளது பொத்த  பிடிவாதம் குணத்தையும் காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

 

எட்டுமணிக்கு  பேல் கார்த்திக்கால் படுத்து இருக்க முடியவில்லை மெள்ள அவளை நகர்த்தி விட்டு எழுந்து கொண்டான்…ரூம் சர்வீஸ்ஸிடம் ஃகாபிக்கு அழைத்து பேசியவன் அடுத்ததாக தனது ஃபோனில் மெயில் செக் செய்ய ஆரம்பித்தான்.  அப்போது ஃபோன் அழைத்தது. மாயாவின் தந்தை தான் அழைத்துக் கொண்டு இருந்தார்.

 

ஹலோ என்று இவன் அழைக்க…கார்த்திக் எத்தனை மணிக்கு இங்கே வர்றிங்க…என்று கேள்வி எழுப்பினார்… காலையில் டிபன் ஏதாவது செய்யணுமா…

 

வேண்டாம் மாமா இங்கே ஹாட்டலில் முடிச்சிக்கறோம் பத்தரை மணிக்கு அங்கே வர்றோம்…

 

மாயா என்ன பண்ணறா எழுந்திட்டாலா…

 

இல்லை தூங்கறாமாமா…எழுந்ததும் பேசாமல் சொல்லறேன் என்றவன் வேகமாக குளிக்க புறப்பட்டான். குளித்து வந்து பிறகும் தூங்கிக்கொண்டு தான் இருந்தாள் மாயா…

 

தூங்குமூஞ்சி எழுந்திரு கிளம்பலாம் இப்ப எழுந்திருக்கலே நானே உன்னை தூக்கிட்டு போய் பாத்ரூம்பில் விட்டு குளிக்க வச்சிடுவேன்.

 

போ கார்த்திக் சும்மா பேசிட்டே இருக்காதே எழுந்திட்டேன் ஃகாபி எங்கே…

 

ஏய்…என்ன  பல் தேய்க்கற பழக்கம் எதுவுமே கிடையாதா…எழுந்திரு…

 

ஃகாபி குடிக்காமல் நான் எழுந்திருக்க மாட்டேன்.  இன்றைக்கு மட்டும் ப்ளீஸ்  டயர்டாக இருக்கு…இது நன்றாகவே வேலை செய்தது…

 

ஸாரி…ஸாரி…நைட்டே சொல்லி இருக்கலாம்ல்ல…நான் கிட்டயே வந்து இருக்கமாட்டேன் ..

 

டேய்…ஃகாபிக்கு சொல்லுடா… சும்மா எதையாவது பேசிட்டு…

 

ஏய்…என்ன மாயா…மரியாதை செமையா வருது…

 

பின்னே இப்படி பேசினா…என்றவள் எழுந்து பாத்ரூம்பை நோக்கி நடந்தாள்.குளித்து வரவும் பின்புறமாக கார்த்திக் அணைக்க…பட்டென கையில் அடி விழுந்தது.

 

ஏய்…ஏன் அடிக்கற…கையை உதறியபடி கார்த்திக் கேட்க…

 

பார் நானெல்லாம் சேலை கட்டறதே உலக அதிசயம் ஏதாவது சுடிதார் எடுத்து வந்திருக்கலாம்…இந்த அம்மா இருக்கறாங்கலே இதை மட்டும் தான் எடுத்து வச்சி இருக்கறாங்க…லேசான பார்டரோடு ஒரு காட்டன்சில்க் சேலை.. இளமஞ்சல் நிறத்தில்…பார்டர் கலர்…கருப்பச்சை நிறத்தில் அதே நிறத்தில் முதுகு பக்கம் சற்றே இறக்கி தைத்த ப்ளவுஸ்….அது அவளது உடல் நிறத்தை இன்னும்  எடுப்பாக காட்டியது…கழுத்தில் இழுத்து கட்ட சிறு நாட்…. அத்தோடு இரண்டு மணிகள்

மஞ்சள் கற்கள் பதித்து இருக்க  அதை இருக்கமாக கட்டி இருந்தாள்.

உனக்கும் சேலை கலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை மைதாமாவு…என்றபடி பின்னோடு நின்றவன் மறுபடியும் அணைக்க…இரண்டு நிமிடம் கண்மூடி நின்றவள்  இப்ப நேரம் ஆகலையா கார்த்திக் என்று லேசான குரலில் கேட்டாள் 

 

நேரம் பார்த்தவன் சீக்கிரம்…சீக்கிரம் நேரம் ஆச்சு…என்றபடி புறப்பட்டான்… ஒருவழியாக இருவரும் உணவு உண்டு முதலில் கார்த்திக் வீட்டிற்கு புறப்பட்டனர். வாசலிலேயே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார் லஷ்மி…சாமி விளக்கு ஏற்ற வைத்த பிறகு…கார்த்திக்கோடு அவனது மாடி அறைக்கு அனுப்பி வைத்தார்.

 

கார்த்திக் இதுதான்  உன்னோட ரூம்பா…நாட் பேட் நல்லா தான் வச்சி இருக்கற… ஆனால் இதே மாதிரி இருக்கணும்ன்னு என்கிட்ட எதிர் பார்க்க கூடாது. 

 

என்ன எப்பபார்த்தாலும் இப்படியே பேசறே…இனி இது தான் நம்மோட ரூம்..

பெரிய ஹால் பெட்ரூம் தனியாக ஒன்று இருந்தது அட்டாச் பாத்ரூம்மோடு…ஹாலில் ஷோபா செட் டிவி என வீட்டிற்கு ணேவையான எல்லாமே தனியாக இருந்தது.கிச்சன் இருந்தது…அப்படியே சுற்றி பார்த்தவள் ஒகே கார்த்திக் அப்புறம் வந்து பார்த்துக்கலாம்.இப்போது புறப்படலாம் என்றபடி கீழே இறங்கி வந்தனர். வந்ததுமே பால் இருவருக்கும் கொடுத்தவர் புறப்படுங்க என்ன அனுப்பி வைத்தார்.

 

பிருந்தா எங்கே மா என்று கேட்க…அவளுக்கு இன்றைக்கு ஸ்கூல் இருக்கிறதுடா…லீவ் எடுப்பேன்னு ஒரே அடம்…திட்டி அனுப்பி வைத்து இருக்கிறேன். 

 

ஏன்மா அவளையும் மாயா வீட்டுக்கு அழைச்சிட்டு போய் இருப்பேன்ல்ல…

 

முதல் டைம் ரெண்டு பேரும் போயிட்டு வாங்க அப்புறம் அவளை அழைச்சிட்டு போகலாம் புறப்படுங்க என அனுப்பி வைத்தார்.

 

சற்று நேரத்தில் எல்லாம் மாயாவின் வீட்டிற்கு  சென்று இருந்தனர் இருவரும்.. அங்கே இவர்களை வரவேற்று அமர  வைக்கவும்.. சற்று நேரத்தில் எல்லாம்  கோவிலுக்கு புறப்பட தயார் ஆகினர்…

 

[the_ad id=”6605″]

 

 

 

மாயாவின் தகப்பனார் கார்த்திக்கிடம்…மருதமலை கோவிலுக்கு போயிட்டு வந்துவிடலாம் கார்த்திக் என்று கூறினார்…

 

மதியம் சமைக்க என மாயாவின் தாயார் வீட்டிலேயே நிற்று கொள்ள…மாயா,கார்த்திக், மாயாவின் தந்தை, கூடவே  சித்தி நான்கு பேரும் புறப்பட்டனர்.

 

அங்கே கோவிலுக்கு சென்றதும் மாயா கார்த்திக் பெயருக்கு அர்ச்சனை செய்தவரின் மொத்த வேண்டுதலுமே கடவுளே இரண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாமல் நல்ல படியாக வாழவேண்டும் என்பது மட்டுமே…கார்த்திக்கின்  மேல் நிறைய நம்பிக்கை இருந்தது ஆனால் மாயா மேல்…துளி கூட கிடையாது. 

 

ஒருவாராக புறப்பட்டு மாயாவின் வீட்டிற்கு வந்தனர் மதிய விருந்து தடபுடலாக இருந்தது.  இரண்டு பேரும் உணவு உண்டு முடிக்கவும்…கார்த்திக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கள் மாயா உன்னுடைய ரூம்பிற்கு அழைச்சிட்டு போ. என்று சொன்னவர் இவனிடம் ஐந்து மணிக்கு வீட்டுக்கு புறப்படலாம் என்று அனுப்பி வைத்தார்.. மாயாவோடு அவளது அறைக்கு போனவன்…ஏய் மாயா இதெல்லாம் என்ன என்று கேள்வி எழுப்பினான்.

 

டிரஸ்சிங் டேபிள் முழுக்க நிறைய அலங்காரப்பொருள்கள் குவிந்து கிடந்தது.

 

இதெல்லாம் பேக்கப் கிட்ஸ் கார்த்திக் நான் யூஸ் பண்ணறது…

 

போதுமா என்று கேட்டவனுக்கு அங்கே நிறைய நேரம் இருக்க பிடிக்கவில்லை.  முக்கியமாக அங்கே இருந்த வாசனை திரவியத்தின் கலந்த அந்த வாசம் சுத்தமாக பிடிக்கவில்லை. 

 

மாயா எனக்கு தூக்கம் எல்லாம் வரலை…மதியம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது.  வா கீழே போகலாம்.  இன்னோரு நாள் வரும் போது பார்க்கலாம் என்றபடி கீழே மறுபடியும் வந்து இருந்தான்.

 

இவனை பார்க்கவுமே…என்ன கார்த்திக் தூங்கலையா என்ற கேள்வியோடு மாயாவின் தந்தை அருகில் வந்தார்.

 

மதியம் தூங்கி பழக்கம் இல்லை அங்கிள் மாயாவோட ரூம்பை பார்க்கத்தான் போனேன். பார்த்தாச்சு வந்துவிட்டேன் வாங்க இங்கேயே பேசிட்டு இருக்கலாம் என்றபடி ஹால் ஷோபாவில் அமர்ந்து கொண்டான்.

 

அங்கே சமையல் அறையை ஒதுங்க வைத்து கொண்டு இருந்தனர் மாயாவின் தாயாரும் ,சித்தியும்… இவளை பார்க்கவும்…தாயார் மெதுவாக மாப்பிள்ளை உன்கிட்ட நல்ல விதமாக நடந்துக்கறாங்க தானே…நீயும் கொஞ்சம் விட்டுகொடுத்து போ…இங்கே மாதிரி பிடிவாதம் பிடிக்காதே…என்று சொல்ல…இவளது சித்தி…

 

அக்கா மாயா புத்திசாலி அவள் பார்த்துக்குவா…என்று அவரை அதற்குமேல்  பேசவிடாமல் நிறுத்தி இருந்தார்.

 

மாலை மாயாவின் தகப்பனார் மாயாவிடம் பேப்பரை நீட்டி மாயா இதை பாரு இதற்கு மேல வேற ஏதாவது தேவை இருந்தா எழுதிக்கொடு…இந்த வாரம் இதெல்லாம் வாங்கி அங்கே அனுப்பிடறேன். 

 

வாங்கி பார்த்தவள் பேனாவில்மறுபடியும் சிலரை எழுத ஆரம்பித்தாள். என்ன  எழுதறே என கார்த்திக் அருகில் வந்து பார்க்க… அந்த லிஸ்டை பார்த்தவன் வேகமாக வாங்கி கிழித்து இருந்தான்.வீட்டுக்கு தேவையான பிரோ,கட்டில் மொத்த வீட்டுக்கு தேவையானது அந்த லிஸ்டில் இருந்தது. 

 

அங்கிள் வீட்டுக்கு தேவையானது எல்லாமே அங்கே இருக்கு. அதற்கு மேலே இப்போதைக்கு எதுவுமே தேவை இல்லை.  நீங்க எதுவும் எனக்கு வாங்கி தர வேண்டாம்.  மாயா உனக்கும் தான்.  இனி எது வேணும்னாலும் என்கிட்ட கேளு… அப்பாகிட்ட லிஸ்ட் போடறதை நிருத்து…என்றபடி சீக்கிரம் புறப்படு…உன்னோட டிரஸ் மட்டும் போட எடுத்துட்டு வா போதும் அதற்கு மேல எதுவும் வேண்டாம். 

 

கார்த்திக் இதெல்லாம் எனக்கு தர வேண்டியது அதை ஏன் நீங்க வேண்டாம்ன்னு சொல்லறிங்க…. உங்களுக்கு கொஞ்சம் கூட பிழைக்க தெரியலை…அப்பா கடைக்கு போகும் போது சொல்லுங்க நான் வரேன் எனக்கு பிடிச்சு டிசைனில் எல்லாம் பார்த்து வாங்கணும்.

 

மாயா புறப்படலாம்…உனக்கு வேணுங்கறதை வீட்டுக்கு போணதும் லிஸ்ட் போடு நான் வாங்கி தர்றேன். கொஞ்சம் கோபமாக சொல்ல…வாய்க்குல்லேயே…

வேண்டாம்னா போங்கலேன் எனக்கா நஷ்டம் என்றபடி புறப்பட்டாள்.கார்த்திக்கின் எண்ணம் எதுவும் கேட்க கூடாது என தெளிவாக இருக்க மாயா அப்படியே எதிர் பதமாக இருந்தாள். 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஏன் இதெல்லாம் அவளது நீண்ட காலம் கனவும் கூட…நிறைய வேண்டும் என்று  எப்போதும் அவளது தந்தையிடம் பட்டியல் இடுவாள் சிலநேரம் தாயார் கூட ஏன் மாயா இத்தனை சிரமம் இந்த வீட்டையே மடிச்சு எடுத்துவிட்டு போயிடு என்று பலநேரம் சொல்லி இருக்கிறார்.

 

அதை உபயோகப்படுத்துவாலோ இல்லையோ பாரு …நான் இதெல்லாம் எடுத்துவிட்டு வந்து இருக்கிறேன் என்று கர்வமாக சொல்ல வேண்டும்… காட்ட வேண்டும் இப்படியான குணம் அவளுடையது… 

 

இப்படி எதிர் எதிர் துருவங்களாக இருவரது மனமும் இருக்க இனி வரப்போகும் காலத்தில் எப்படி வாழப்போகிறார்கள் என்று  காலதேவன் கூட சிரித்தபடி இவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!