Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 17 2

தங்களோடு வசுந்தராவும், வாசுதேவனும் வருவதை பார்த்து,மணிமேகலை  யோசனையுடன் அவர்களை பார்த்தாளே ஒழிய வாய் திறந்து… “நீங்க ஷாப்பிங் போகலையா…?” என்று கேட்கவில்லை.

ஆனால் வீரேந்திரன் கேட்டு விட்டான். “ஏன் நீங்க உங்க வேலைய பார்க்கலாமே…” என்று.

அதற்க்கு வசுந்தரா… “என்ன அண்ணா எல்லோரும் ஒன்னா வந்தோம். ஒன்னாவே வாங்கலாம். ஒரே குடும்பத்தில் எதற்க்கு தனி தனியா போய் வாங்கிட்டு.” என்று என்னவோ திருமணத்திற்க்கு  குடும்பமாக போய்  தான் வாங்க வேண்டும் என்ற ரீதியில் வசுந்தரா பேசினாள்.

ஆனால் உண்மை காரணம்.  தங்கள் திட்டம் திருமணம் வரையாவது  யாருக்கும் தெரியாது இருக்க வேண்டும் என்று நினைத்தே…வாசுவுடன் தனியே ஷாப்பிங் செய்ய மனதில் அவ்வளவு ஆசை இருந்தும், அவர்களோடு அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அனைவரும் சென்றனர்.



Advertisement

இரண்டு வருடத்திற்க்கு பின் பார்க்கும்  அத்தையையும் மாமாவையும் கண்டதும்..மணிமேகலைக்கு ஏனோ அவர்களை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

எப்போதும் மணிமேகலை யாரிடமும் இது போல் செல்லம் கொஞ்சியது இல்லை. செல்லம் கொஞ்ச நினைத்ததும்  இல்லை.

அது என்னவோ… நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நெருங்கிய சொந்தத்தை பார்த்ததினாளோ… இல்லை எப்போதும் தன் மனதில் இருப்பதை வசுந்தராவிடம் தான் எந்த ஒளிவு மறைவும் இல்லாது பழகுவாள்.

Advertisement

அவளே இன்று பொய்யாய் போனதை கண் எதிரில் கண்டாதாளோ…இன்று சங்கரி அத்தையை  இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று போல் இருந்த்து.

Advertisement

ஆனால்  மணிமேகலை அப்படி செய்யாது… எப்போதும் போல் ஒரு மெல்லிய புன்னகையோடு கேட்கும்… “அத்தை, மாமா எப்படி இருக்கிங்க…?” என்ற  நலன் விசாரிப்பை  தான் கேட்டாள்.

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

ஆனால்  அவளோட சங்கரி அத்தை அவள் செய்ய நினைத்த அணைப்பில் அவளை  தன்னோடு இறுக்கிக் கொண்டு… “நல்லா இருக்கேன் சிட்டு…நீ எப்படி இருக்க…?” என்று கேட்டவள்..

அவள் பதில் சொல்லும் முன்னவே  சங்கரி தன் அணைப்பில் இருந்து மணிமேகலையை  விலக்கி அவளை எதிரில் நிறுத்தி வைத்து விட்டு,  அவளை மேலில் இருந்து கீழ் வரை ஒரு ஆராய்ச்சி பார்வையை செலுத்தியவர்…

“ம்…கலர்  நல்லா   சிவந்த நிறத்தில்  ஆயிட்டே…ஆனா என்ன இப்படி இளச்சி போய் வந்து இருக்க…”  என்று சொல்லி அவளின் கழுத்து எலும்பை சுட்டி  காட்டி கேட்டாள்.

அப்போது தான் வீரேந்திரனுக்கும் அவளின் மெலிவு தெரிய…என்ன இவ அங்கு சாப்பிட்டாளா…?இல்லையா…?என்பது போல் அவளை பார்த்திருந்தான்.

மணிமேகலைக்கு தான் இந்த  விசாரிப்பு கவனிப்பு ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரி அத்தையும் சரி…அத்தைமாமாவும் சரி, மற்றவர்களை போல் இவளை திட்டியது இல்லை. அதே போல் தான் வீரேந்திரனும்.  அதனால் தான் அந்த சிறுவயதில் வீரேந்திரனை பிடித்து இருந்தது.

பின் நடந்த அந்த சம்பவத்திற்க்கு பின்…சங்கரி அத்தை…மாமா வந்தால்… “எப்படி இருக்கிங்க…?” என்று கேட்டு விட்டு சென்று விடுவாள்.

அவர்களும்…  “நாங்க நல்லா இருக்கோம். நீ நல்லா படி. உனக்கு பிடிச்ச பால்கோவா வாங்கிட்டு வந்து இருக்கேன். போய் சாப்பிடு.” அவ்வளவு தான் அவர்கள் பேச்சாய் இருக்கும்.

ஆனால் இன்று சங்கரி அத்தையின் இந்த அதிகப்படி பாசத்தில் குழம்பி போனவளாய்… “ஒல்லி எல்லாம் ஆகல. இந்த ட்ரஸ்  பாக்க அது  போல இருக்கு.” என்று  மணிமேகலை கொஞ்சம் கூச்சத்துடன் தான்  சொன்னாள்.

ஆனால் சங்கரி அப்போதும்  விடாது… “இல்ல இல்ல நீ இளச்சி தான் போய் இருக்க…என்னோட முதல் வேலை  உன்னை நல்லா சாப்பிட வெச்சி கொஞ்சம் உடம்பை ஏத்துறது தான்.” என்று சொன்னவர் பின் தன் மகனிடம்…

“ஏய் நீ தான் உடம்பை ஏத்த இளைக்கன்னு என்ன என்னவோ  உடற்பயிற்ச்சி  செய்வீயே…சொல்லு சொல்லு என் மருமக உடம்பை ஏத்த என்ன செய்ய வேண்டும்.” என்று கேட்டதற்க்கு…

வீரேந்திரன் பதில்  அளிக்காது மணிமேகலையையே பார்த்திருந்தான். அதே போல் தான் சங்கரி அத்தை சொன்ன  உடற்பயிற்ச்சி என்ற வார்த்தையில் மணிமேகலையின் கண் தன்னால் வீரேந்திரன் பக்கம் செல்ல…அப்போது தன்னையே பார்த்திருந்த வீரேந்திரனின் பார்வையில் என்ன இருந்தது என்று அவளுக்கு விளங்கவில்லை என்றாலும், அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை விலக்கவும் செய்ய முடியாது அவனையே பார்த்திருந்தாள்.

இவர்களின் பார்வையை கூட பாராது சங்கரி அத்தை தொடர்ந்து பேசிய…. “பிள்ள பெத்துக்காவாவது உடம்புல தெம்பு வேணாமா…இப்படி இருந்தா எப்படி நீ பிரசவ வலிய தாங்குவ…?”

சங்கரி சொன்ன அந்த வார்த்தையில் ஏனோ மணிமேகலையின் கன்னம் தன்னால் சிவந்து போக…வீரேந்திரனின் விழி வீச்சையும் தாங்கிக் கொள்ள முடியாது வெட்கத்தில் தலை குனிந்துக் கொண்டாள்.

சங்கரி அத்தை பேச்சில் இது வரை யார் மாப்பிள்ளை என்று அறிந்துக் கொள்ள கூட விருப்பம் இல்லால் இருந்தவளின் மனதில்…என் குழந்தைக்கு தகப்பனாய்  யார்  வர உள்ளான் என்று மனதில் கேள்வி எழ…

யாரிடம் கேட்பது என்று நிமிர்ந்து பார்த்தவளின் எதிரில் வீரேந்திரன் நின்றுக் கொண்டு இருந்தான். வீரேந்திரனின் பார்வை இப்போது தன் மீது இல்லாது தன் அன்னையிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.

வீரேந்திரனிடம் கேட்கலாமா…  “மாப்பிள்ளை யார்…?” என்று யோசனையுடன் அவனையே பார்த்திருக்க…தன் அன்னையிடம் பேசிக் கொண்டு இருந்த வீரேந்திரனுக்கு என்ன  தோன்றியதோ  சட்டென்று திரும்பி மணிமேகலையை பார்த்தான்.

தன்னையே பார்த்திருந்த மணிமேகலையை பார்த்து… “என்ன…?” என்பது போல் தன் புருவத்தை உயர்த்தி கேட்டதில், என்ன கேட்க நினைத்தோம் என்பதை கூட மறந்தவளாய்…

“ஒன்றும்.” இல்லை என்பது போல் உதட்டசைவில் சொல்ல…வீரேந்திரனின் பார்வை அவள் கண்ணில் இருந்து கொஞ்சம் கீழ் இறங்கி அவள் உதட்டையே பார்த்திருந்தான்.

இதை எல்லாம் பார்த்திருந்த வசுந்தராவுக்கு, தாங்கள் விரும்பி மணக்கிறோமா…இல்லை  இவர்கள் விரும்பி மணந்துக் கொள்கிறார்களா…? என்று குழம்பி போய் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

வாசுதேவனும் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். இவர்களின் இந்த செயல் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியை  கொடுத்தது என்று கூட சொல்லலாம்.

வீரேந்திரனுக்கு மணி தான்  பெண் என்று தெரிந்து தான் இதோ கல்யாணம் வரை வந்து இருக்கிறது. மணிமேகலையின் பேச்சில் இருந்து அவளுக்கு   மாப்பிள்ளை யார்…? என்று கூட தெரியாது இருக்கிறாள்.

மாப்பிள்ளை வீரேந்திரன் தான் என்று தெரிந்தால், அவளின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும்…?இந்த திருமணத்திற்க்கு  ஒத்துக் கொள்வாளா…? அதுவும் வசுந்தராவின் மூலம் அவளின்  எண்ணமான வெளிநாட்டு  மாப்பிள்ளை..அங்கேயே இருக்க தான் அவளின் திட்டம் என்பதை  கேட்டதில் இருந்து…வீரேந்திரனை மறுத்து விட்டால் என்ன செய்வது…? என்று  கொஞ்சம் பயந்து போய் தான் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர்களின் இந்த பார்வையை பார்த்து  அப்பாடா என்று ஆனான். இப்படி பலர் பலவாரு அவர்கள் அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ப யோசனை செய்துக் கொண்டு இருந்தனர்.

வீரேந்திரன் தங்கள் அறைக்கே உணவை வர வழைத்தவன்  மணிமேகலையிடம் … “சாப்பிட்டு ரெஸ்ட் எடு.  ஈவினிங் கூட உன்னால  முடிஞ்சா போகலாம். இல்லேன்னா ஷாப்பிங்  நம்ம ஊரிலேயே  பார்த்துக்கலாம்.” என்று சொன்னவனுக்கு…

“சரி…சரி…” என்பது போல் தலையாட்டிவளின் முன் வைக்க பட்ட உனவு அனைத்துமே அவளுக்கு பிடித்ததாய் இருக்க…ஏதோ யோசனையில் வீரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எதுவும் யோசிக்காதே..சாப்பிட்டு தூங்கு.” என்று வீரேந்திரன் சொல்லவும், மணிமேகலை அமைதியாக  உண்ண ஆராம்பித்தாள்.

ஆனால் அந்த அமைதியை கெடுக்கும் வகையாக வசுந்தரா சொன்ன… “நம்ம ஊரில் ஷாப்பிங்கா…?என்ன அண்ணா… சென்னை வரை வந்துட்டு இங்கு வாங்காம்மால்  அந்த பட்டிக்காட்டில் போய் வாங்க சொல்றிங்க.” என்ற அவள் பேச்சில்…

 

[the_ad id=”6605″]

 

 

“இத்தனை வருசம் அதே பட்டிக்காட்டில் வாங்கிய ட்ரஸை தானே உடுத்திட்டு இருந்த…” என்று கேட்ட வீரேந்திரன்..

பின்… “நான் சொன்னது மணியிடம் அங்கே வாங்கிக்கலாமுன்னு…உனக்கு இங்கே தான் வாங்கனும் என்றால் வாசுவை கூட்டிட்டு நீங்க எப்போவும் போகும் மாலுக்கு போய் கூட வாங்கிக்கலாம்.” என்று சொன்னவனின் பேச்சு..

அத்தோடு நில்லாது…. “அந்த மால் கூட நீங்க தங்கி இருக்கும் பக்கத்தில் தானே இருக்கு…?”

என்னிடம் உங்கள் நரித்தனம் பலிக்காது என்பது போல்  வசுந்தாராவையும், வாசுவையும் பார்த்துக் கொண்டே சொன்னவன்…

மணிமேகலையின் பக்கம் திரும்பி… “நீ சாப்பிட்டேனா போய் ரெஸ்ட் எடு. உன்னை யாரும் தொந்தரவு செய்யாம நான் பாத்துக்குறேன்.” என்று வசுந்தராவின் எண்ணம் புரிந்தவனாய், வீரேந்திரன்  அவர்கள் எடுத்து இருந்த பக்கத்து அறைக்கு மணிமேகலையை அனுப்பி வைத்தான்.

மணிமேகலையும் வசுந்தராவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வீரேந்திரன் சொன்ன அறைக்கு சென்றாள். இங்கு வந்ததில் இருந்து மணியிடம் தனியே பேசி எப்படியாவது இந்த திருமணம் நல்ல முறையில் நடந்து  முடிய வேண்டும் என்று  சொல்ல  நேரம் கிடைக்காதா…என்று  காத்துக் கொண்டு இருந்தவளுக்கு, வீரேந்திரனின் இந்த பேச்சும்,  அதை கேட்டு மணிமேகலை சென்றதும் பிடிக்காது போனது.

வீரேந்திரன் தான் மாப்பிள்ளை என்று தெரியாது அவன் சொல் பேச்சு கேட்கும் மணிமேகலை, அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால்…என்ன ஆகும். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!