Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 29

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்

கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்

நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்

காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன்



Advertisement

மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்

என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன்

இது போதுமே இது போதுமே

Advertisement

இனி என் கால்கள் வான் தொடுமே

Advertisement

 

என்ன அழகு எத்தனை அழகு

கோடி மலர் கொட்டிய அழகு

Advertisement

இன்று எந்தன் கை சேர்ந்ததே

 

செழியன், யாழினி வரவு வீட்டில் அனைவர்க்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்க… அவர்கள் இறந்து இருப்பதாய் அனைவரும் நினைத்து இருக்க… ஆனால் இன்று உயிருடன் இருப்பதும்… செழியன் கை கட்டும்  அனைவரையும் குழப்ப 

 

இத்தனை நாள் உயிருடன் இருந்தது உண்மை என்றாள்.. இனியாவை காண வராமல் இருந்தது ஏன்.. என்ற பல கேள்விகள் மனதில் எழுந்தாலும்.. அவரே கூறட்டும் என்று அனைவரும் காத்திருக்க.. இறுதியாய் பேச துவங்கினர் செழியன் 

 

அன்னைக்கு உன்னை மண்டபத்துல விட்டுட்டு… தாலியை பூஜை பண்ணி வாங்கிட்டு வர கோவிலுக்கு போகணும்னு யாழினி சொன்ன அப்போ எதோ தப்பா நடக்க போகுதுன்ற உறுத்தல் எனக்குள்ள இருந்து கிட்டே தான் இருந்துது… 

 

ஆனால் இனியாவுக்கு தகப்பனா நான் செய்ய வேண்டிய கடமைக்காக நான் கோவிலுக்கு போனேன்… இருந்தாலும் ஒரு எச்சரிக்கைகாக என்னுடைய பிஏவை லோகநாதனை கண்காணிக்க தான் விட்டுட்டு போனேன் 

 

இனியா, வைஷுவையும் கண்காணிக்க என்னோட ஆட்களை இங்கயே இருக்க சொல்லிட்டு… டிரைவரோட நானும் யாழியும் கிளம்புனோன் 

 

போகும் வழி முழுக்க படபடப்பு எனக்குள்ள இருந்து கிட்டே தான் இருந்துது… இரண்டு முறை இனியாவுக்கும் அழைத்து பேசுனேன்.. எதுவும் பிரச்னை இருக்க மாதிரி தெரியல 

 

[the_ad id=”6605″]

 

 

 

கோவிலுக்கு போய்ட்டு.. பூஜை எல்லாம் பன்னிட்டு நாங்க திரும்பி வரும் போது நாங்க வந்துகிட்டு இருந்த கார் கொஞ்சம் பழுதாகிடுச்சி..முகுர்த்த நேரமும் நெருங்குறதால, வேற ஒரு வண்டி பிடிச்சி வந்துடலாம்னு முடிவு பண்ணோம்..  

 

அதனால டிரைவர் கிட்ட சொல்லி காரை சரி பன்னிட்டு வீட்டுக்கு கொண்டு வர சொல்லிட்டு.. வேற ஒரு காரை பிடிச்சு வந்துகிட்டு இருந்தோம் 

 

அதுக்குள்ள வழில வந்த எதோ ஒரு வண்டியை எங்க வண்டினு நெனச்சுக்கிட்டு தான் அந்த லூசு லோகநாதன் ஆளுங்க அடிச்சி தூக்கி இருக்காங்க 

 

அதுக்கு அப்றம் இனியவை மெரட்டுனது.. தொரத்தி கொலை பண்ண பார்ததுனு எல்லாமே என்னோட பிஏ சொல்லி தான் எனக்கு தெரிய வந்துது 

 

இனியா அந்த வண்டியில ஏறினான்னு எனக்கு தெரியும்.. ஆனால் எங்க இறங்கினன்னு எனக்கு தெரியாது 

 

இத்தனை நாள் அவளை தான் தேடிகிட்டு இருந்தேன்… எங்க இருந்தாலும் இனியா பொழச்சிடுவான்னு எனக்கு தெரியும்… ஆனாலும் அவளையும், வைஷுவையும் பார்க்காம எங்களால இருக்க முடியல 

 

தற்செயலா தான் நாங்க கீதாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி விசாரிச்சா அப்போ… அவ இங்க இருக்கான்னு தெரிய வந்துது… 

 

அது இல்லாம உங்க குடும்பத்தை பத்தியும்.. அன்பு இனியாவை பத்தியும் கீதா சொன்னா… அதுவும் அன்பு இனியா விஷயம் கூட சந்தேகம்னு தான் சொன்னா… சரி இனியா முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துக்கலாம்ன்னு தான் நானும் யாழினியும் முடிவு பண்ணோம் 

 

இங்க வந்து எல்லாத்தையும் பேசிக்கலாம்ன்னு மொதல்ல இந்த ஊர் இன்ஸ்பெக்டர்க்கு போன் பண்ணோம்… அவர் தான் கோவில்ல நடந்த எல்லாத்தையும் சொன்னாரு.. 

 

சரி அதுவும் நல்லது தான்.. பொண்ணு ஆசை பட்ட மாதிரியே எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சினு தான் வீட்ல இருக்கவங்கள பார்த்து பேசலாம்னு வந்தோம் 

 

என்றவர் அனைத்தயும் கூறி முடிக்க.. அன்பிற்கு தான் “ஹப்பாடா” என்று இருந்தது.. எங்கு சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் நடந்ததால் இனியாவை தாங்கள் கூடவே கூட்டி சென்று விடுவார்களோ என்ற பயம் வேறு அவனுள் அதிகமாகவே இருந்தது 

 

செழியன் பேசியதில் இருந்து.. அவர்களுக்கும் இதில் சம்மதம் என்பது புரிய வந்த பின் அனைவர்க்கும் இதில் மகிழ்ச்சி தான் 

 

அடுத்து அடுத்து வரும் நாட்களில் சடங்குகளிலுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று அனைவரும் முடிவெடுக்க… இன்னும் ஒரு வாரத்தில் முகுர்த்தத்திற்கு நாள் குறிக்க பட்டது 

 

அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க.. அங்கு இலக்கியன் மட்டும் சோக கீதம் பாடி கொண்டு இருந்தான்

 

[the_ad id=”6605″]

 

 

 

அந்த வீட்டில் வந்து சிரித்து நேரமே ஆனாலும்.. வீட்டோடு ஒன்றிய விட்டார் யாழினி… எதோ பல நாள் பழக்கம் போல அதை செய்வது, இதை செய்வது என்று ஓடி கொண்டு இருக்க 

 

“நீயேமா இதெல்லாம் செய்யுற.. போய் உக்காரு போ… நாங்க பாத்துக்குறோம்” என்று செல்லம்மாள் கூறியும் கூட, யார் பேச்சையும் கேட்க வில்லை அவர் 

 

அதற்கு மாறாக இனியா தன் மாமனோடு அமர்ந்த இடத்தை விட்டு நகர கூட இல்லை 

 

“அண்ணா.. எனக்கு என்னமோ நீ கல்யாணம் ஆகியும் கூட சன்யாசம் தான் போகணும்னு நினைக்குறேன்.. அங்க பாரு மாமா மாமான்னு உன்னை கண்டுக்க கூட இல்லை” இலக்கியன் தன் பங்கிற்கு அன்பை வெறுப்பேத்த 

 

அவளை தனியாக சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்து கொண்டு இருந்தான் அன்பு… பாவம் இரவு வரை காத்திருக்க மட்டும் தான் போகிறோம் என்பது தெரியவில்லை அவனுக்கு 

 

மறுபுறம் வைஷுவோ இந்த வீட்டில் தனக்கு உண்டான புது உறவுகளை எல்லாம் யாழினிக்கு அறிமுகம் செய்து கொண்டு இருந்தாள் 

 

அம்மா இது சித்து, இது பாட்டி, இது ஆடு இது மாடு என்று வீட்டில் இருக்கும் ஒருவரை விட வில்லை அவள் 

 

இரவு வரை வீடு பரபரப்பாகவே போய் கொண்டு இருக்க.. அன்பிற்கும் இனியாவிற்கும் தனியே சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை 

 

அதற்காக இனிய கவலை படவில்லை என்றாலும் அன்பு தான் தேய்ந்து கொண்டு இருந்தான் 

 

இரவு ஆனதும் மொட்டை மாடியில் நிலவை ரசிக்க சென்ற அன்பின் கண்ணிற்கு.. அவனின் நிலவு அவனுக்கு முன்னாலேயே அங்கு காத்திருந்தது ஆச்சர்யமும், சந்தோஷமும் தான் தந்தது 

 

அவளை பின்னால் இருந்து அணைத்த படியே… 

 

“என்ன மேடம். இங்க வந்து நீ நின்னுகிட்டு இருக்கீங்க… உங்க மாமா வரேன்னு சொன்னாரா” என்றான் கிண்டலாக 

 

“ஆமாம் மாமாகாக தான் காத்திக்கிட்டு இருக்கேன்… என் மாமாவும் தான் வந்துட்டாங்களே” அவன் புறம் திரும்பி, கண்ணடித்த படியே சிரித்து கொண்டே சொல்ல 

 

“அடி பாவி.. ஊர்ல இருக்கவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கு… நீ என்னை காதலிக்குறேன்னு.. என் கிட்ட ஏன்டி சொல்லல” என்றான் பொய் கோபத்துடன் 

 

“நான் உங்களை காதலிச்சேனா… நான் எப்போ சொன்னேன்.. நீங்களா நெனச்சிகிட்டா நான் பொறுப்பாக முடியுமா” இவளும் வம்பிழுக்கும் விதமாக 

 

“என்னடி சொல்லுற” முதலில் அதிர்ச்சி ஆனவன் போல் நடிக்க… பின் “உன்னோட தோழி தான் சொன்னாங்க” என்றான் கண்ணடித்த படியே 

 

“என்னோட தோழியா யாரு” என்று யோசித்த படியே இருந்தவளின் முன் அந்த டைரியின் கிழிந்த ஒரு பக்கத்தை அவன் எடுத்து காட்ட 

 

அதை கண்டவுடன் அது என்ன என்று புரிந்து கொண்டவள் முகம் வேகத்தில் சிவக்க “இதை எதுக்கு நீங்க படிசீங்க.. இதெல்லாம் சீட்டிங் என்றாள் வெக்க பட்டு கொண்டே 

 

அவளை அணைத்த படி.. அந்த நிமிடத்தை ரசித்தவனின் ரசனையில் குண்டை தூக்கி போட்டாள் இனியா 

 

“ஆமாம்… நான் காதலிக்குறது இருக்கட்டும்… நீங்க  எப்படி சார்… உங்க மனசுல யார் இருக்கா” என்றாள் குதர்க்கமாய் அவனை விட்டு விலகி நின்று 

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஏன் உனக்கு தெரியாதா இதுக்கு பதில்” என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி 

 

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும்… யாரோ தூங்கும் போது கூட மீரா மீரான்னு தான் புலம்பிகிட்டே தூங்குவாங்க..மத்த படி அவர் மனசுல வேற யாரும் இருக்க மாதிரி எனக்கு தெரியாதுபா” என்றாள் சலித்து கொண்டு 

 

“ஹய்யையோ.. ஒன்ன தங்குன அப்போ நாம உளறி இருக்கோம் போலயே… கரெக்ட்டா சொல்லுறா” என்று யோசித்தவன் 

 

“அது இனியாக்கு முன்.. இது இனியாக்கு பின்”என்ற படி அவளை நெருங்க முயற்ச்சித்தவனை தடுத்தவள்  

 

“அதை எப்படி நான் நம்புறது… காதலை நிரூபிக்கும் கண்ணா… இல்லாட்டி செல்லுபடி ஆகாது” என்றாள் இடுப்பில் கை வைத்து கொண்டு 

 

“என்னாது நிரூபிக்கணுமா.. அது எப்படிடி பண்ண முடியும்… என்ன பண்ணனும்ன்னு சொல்லு.. நான் பண்றேன்” என்றான் வேறு வழி இல்லாமல் 

 

“நான் சொல்லி நீங்க பன்னுறதுக்கு, நீங்க ஏன் காதலிக்கனும்…எதுவா இருந்தாலும் சொந்த முயற்சியில் பண்ணுங்க பாஸ்” என்ற படி பல்லுப்பு காட்டி விட்டு அவள் கீழே ஓடி விட்டாள் 

 

நடந்த வற்றை அனைத்தையும் இலக்கியனிடம் கூறியவன்… அவன் இதற்கு தீர்வு தருவான் என்று பார்த்தால்… வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான் 

 

வெச்சாளா இனியா வேட்டை… அனுபவி ராஜா அனுபவி… என்று அவன் ஒரு புறம் வெறுப்பேத்த 

 

விக்கியை கேட்கலாம் என்றால் முதல் இரவு என்று அவன் சென்று விட 

 

“அட பாவிங்களா… முதல் இரவு கொண்டாட வேண்டிய என்னை… காதல் டெஸ்ட் வெச்சி பாஸ் பண்ண சொல்லுறாங்களே”புலம்பிய படியே அவன் அமர்ந்து இருக்க 

 

“எவ்வளவு ஆட்டம் ஆடுன..  கொஞ்சம் பச்ச மண்ணை பக்கத்துல வெச்சி இருக்கோம்ன்ற நெனப்பு கூட இல்லாம…எவ்வளவு ரொமான்ஸ்” கடவுள் இருக்கான் குமாரு என்று அவன் ஒரு புறம் சுற்ற 

 

பெரியவர்கள் அனைவரும் இரண்டு நாளில் நிச்சயதார்தம் என்பதால்… அடுத்த நாள் மோதிரம்.. துணி மணி அனைத்தையும் வாங்கி வர செல்லலாம் என்று முடிவெடுத்து சீக்கிரம் இறங்கி போக 

 

செழியனுக்கு தான்… மறுபடியும் எதோ சரி இல்லை என்ற உணர்வு வாட்ட… முற்றத்தில் யோசித்த படி அமர்ந்து இருந்தார்.. 

 

                    மாயம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!