Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 11 1

மழைத்துளி 11

அப்பாவைக் கண்ட விக்ரம் அவரருகில் வந்து ,

 

“என்னாச்சுப் பா நீங்க மூணு பேரும் மட்டும் வந்துருக்கீங்க … நானே கீதுவையும் விதுவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருப்பேனே .. ” என ,



Advertisement

 

“பேரா நான் தான் நீ சிலம்பாடுறதப் பார்க்க ஆசைப்பட்டு வந்தேன். அதைப் பார்த்துட்டு நாங்க கிளம்புறோம். நீ பொறுமையா வா … எதுக்கு அலைச்சல் உனக்கு …” என்றவாறே மைதானத்தை சுற்றிப் போட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமரவும் , விக்ரமும் தங்கைகளை அழைத்து வர ..விழா மேடை அருகே சென்றான்.

 

Advertisement

அங்கு சங்கீதாவும் திலீபனும்  மர மறைவிலிருந்து  வெளியே வருவதைப் பார்த்தவன் , திலீபனை நெருங்கி ,

Advertisement

 

“டேய் மாப்ள.. தாத்தா வந்துருக்காங்கடா…. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி உங்கள தனியாப் பார்த்தாரு….”

 

Advertisement

அதுவரை அண்ணன் முகம் காண வெட்கப்பட்டு குனிந்திருந்தவள் ,தாத்தா என்றதும் ,

 

” என்ன தாத்தாவா … நான் அங்கப் போறேன்” என்று விறுவிறுவென நடந்து விட்டாள்.

 

திலீபன் , “டேய் என்னடா கல்யாணத்துக்கு முன்ன பேசக்கூடாதுனா எப்படிடா ….. ஆனா இதுவும் நல்லாதான் இருக்கு … ” என்ற திலீபனின் முகத்தில் கள்ளப் புன்னகையைக் கண்ட விக்ரம் , அவன் முதுகில் அடித்து ,

 

“டேய் நீ பேசிட்டு இருக்கிறது … உன் ஃபிரண்ட் கிட்ட இல்ல … சங்கீதா அண்ணன்கிட்ட ….”

 

“ஷ் … ஆ…தங்கச்சி மாப்ளய இப்படித்தான் அடிப்பியா .. அண்ணனாம் அண்ணன் .. தங்கச்சிங்களப் பார்த்துக்க சொன்னா , மை சங்கிய கைப் பிடிச்சு இழுத்ததக் கூட கவனிக்காம  நீ பொண்ணுங்க பின்னாடி சுத்த போய்ட்ட … ”

 

அப்போதுதான் வித்யாவின் நியாபகம் வர , “ஐயோ கீதுவும் இல்ல , பம்கினும் இல்லனா தேடுவாளே…” என்று நினைத்த விக்ரம் ,

 

“மாப்ள வா வா அவங்கள அப்பாகிட்ட விட்டுட்டு நாம போகலாம்…” என அவனும் முன்னால் வேகமாக நடந்தான்.

 

வித்யா கையில் முகம் புதைத்திருந்த அரவிந்த் , மெல்ல விடுவிக்கவும் , கண்களில் பயம் , மகிழ்ச்சி என பல உணர்வுகளையும் தேக்கி வைத்திருந்த வித்யா எழுந்து ,

 

“வருவும் , அக்காவும் என்னைத்  தேடுவாங்க … நான் வாறேன்…” எனத் திரும்பி நடக்க ஆரம்பிக்க ,

 

“நாளைக்கு எல்லாரும் வீட்டுக்கு வரதா பெரியம்மா சொன்னாங்க… நீயும் வரதானே….”

 

[the_ad id=”6605″]

 

 

 

” தெ… தெ ..தெரியலயே…”

 

“வர்ற …நீ வரலனா.. நான் வருவேன் …” என்றுப் புன்னகைத்தவன் ,

 

கைகளை ஜீன்ஸில் விட்டு நின்றவன் , ஒரு பெருமூச்சோடு …

 

” கேண்டி … அப்படிக் கூப்பிடலாம் தானே … உனக்குத் தெரியுமா ரொம்ப நாளைக்கப்புறம் நான் கிதார் எடுத்துப் பாடிருக்கேன் …”

 

“ஓ வரு அதுதான் ஏதோ சொல்லிட்டே அப்படிக் குதிச்சாளா..” என நினைத்த வித்யாவிடம் ,

 

” எங்கம்மா இருக்கிற வரை நானும் சராசரி பையன்தான்… அடுத்த மாசம் காலேஜ்ல சேரணும்னு இருக்கிற நேரத்துல என்னன்னவோ ஆகிருச்சு … அதுக்கப்புறம்… அப்பா , தங்கச்சி , படிப்பு … பாப்பா இங்க வர்ற வரை அப்படித்தான் இருந்தேன்.” அவள் முகம் பார்த்தவன் ,

 

“பெரிசா பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்ல … எல்லார்கிட்டயும் பேசுவேன் … யாரையும் ஆர்வமா பார்த்ததுக்கூட இல்ல… ஆனா இப்ப தலைகீழ் ஃபோட்டோலயும்… தங்கச்சி பேசுறதையும் வச்சே உன்னையப் பிடிச்சு உனக்காகவே இங்க வந்துருக்கேன் … ”

 

அவளருகில் நெருங்கி  வந்து முன் நின்றவன், “என்னைய ஒரு நிமிஷம் பாரேன்…” என்றான்.

 

உடல்கள் உரசவில்லை .. ஆனால் சிறிது அசைந்தாலும் உரசி விடும் , கோடைக்கால இரவு….அணிந்திருந்த பட்டுப் பாவாடை தாவணியினால் உண்டான வெப்பம், எல்லாம் சேர்ந்து வியர்வை அரும்ப நின்றவளுக்கு இப்பொழுது வியர்வை நெற்றியிலிருந்து கீழாக காதோரம் வழிய ஆரம்பித்தது , இதில் அவனை எங்கே நிமிர்ந்துப் பார்க்க ,

 

“ப்ளீஸ் …. பாரேன்…” அவனது கெஞ்சும் குரலில் , தானாக தலை நிமிர்ந்து அவன் விழிகளைப் பார்க்க ,

 

விழியோடு விழிக் கலந்துக் கொண்டே ,

 

“எனக்கு சந்தோஷம்மோ… துக்கமோ … அம்மா இருக்கிற வரை அவங்க மடியில போய்ப் படுத்துக்குவேன். அவங்க இல்லனு தெரிஞ்சப்போக்கூட என்னால அழ முடியல … பாப்பா…பாப்பாவ  பார்த்துக்க தான் எனக்கு முடிஞ்சது. உனக்குத் தெரியுமா தெரியாது…. அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால எங்களுக்கு உறவுகளே தெரியாது .. தாத்தா இறப்புக்குத்தான் வந்தோம்… இப்ப நீ சொன்ன செய்த விஷயம் …. எங்கம்மா போல என் தங்கச்சியையும் என்னையும் நீ பார்த்துக்குவங்கிற நம்பிக்கையைத் தருது …. நம்பறேன் ….. நீ என்ன சொல்ற கேண்டி … நம்பலாம் தானே… ”

 

அதுவரை ஏதோ ஒரு பயம் மனதில் தேங்கியிருக்க… இப்போது அவனது பேச்சில் … அவனது காதலை உணர்த்திய விதத்தில் … தேங்கிய பயம் காணாமல் போக ….. இதழோர இள நகையுடன் தலை ‘ஆம்’ என்பதாக ஆட ,

 

[the_ad id=”6605″]

 

 

 

புன்னகையோடு சற்று பின்னால் நகர்ந்து கைகட்டிக் கொண்டு ,

 

“ச்சோ… க்யூட் கேண்டி … நீ இப்படித் தலையாட்டும் போது உன் ஜிமிக்கியும் சேர்ந்து ஆடும்போது….. ” என்றவன் வேறுபுறம் பார்வையைத் திருப்பி விட்டு… சிறிது நிறுத்தி அவளைப் பார்த்து மென் குரலில் …

 

“அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு…”

 

அவன் திரும்பி பார்த்த இடத்தைப் பார்த்தவள் , ஒன்றும் இல்லாது ,

 

” எதை அத்தான்…” என வெகுளியாக கேட்க , அவளது அறியாமையில் பலமாகச் சிரித்தவன் ,

 

” கேண்டிய தான் ….” என்று விட்டு ,

 

“நீ இப்படி முழிச்சுட்டு இருந்தா சாப்பிட்டாலும் சாப்பிட்டுருவேன்…  வா.. வா” என நடக்க ஆரம்பிக்க…

 

“நான் இங்க இருக்கிற எல்லா நாளும்  பேசுறனோ இல்லையோ உன்னையப் பார்க்க ஆசைப்படுறேன். நிஜமா… திலீப் கல்யாணம் முடிஞ்சதும் உன்னைப் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா தெரியாது. நீயும் என் தங்கச்சிப் போல சின்ன பொண்ணுதான் … உன் படிப்பும் என்னால டிஸ்டர்ப் ஆகக்கூடாதில்லயா …சரி நாளைக்குப் பேசலாம் .. நீ சொன்னது போல தேடுவாங்க வா ” என்றவன் கோவிலை நோக்கி கைகாட்டி , ” நீ முன்னால நட ” எனவும்,

 

முதலில் அங்கிருந்து  நகர்ந்தால் போதும் என்று நினைத்தவளுக்கு இப்போது அரவிந்துடன் இன்னும் சிறிது நேரம் இருக்க மாட்டோமா என்ற எண்ணம் தோன்ற… பின்னால் திரும்பி திரும்பி அரவிந்தைப் பார்த்துக் கொண்டே நடக்க ,

 

வித்யாவின் பார்வையிலயே அவளைப் புரிந்துக் கொண்டவன் விழிகளை மூடித் திறந்து ‘போய் வா ‘ என்பது போல் தலை அசைக்க , அவளும் ‘ சரி’ என்பதாக தலையசைக்க ,

 

அரவிந்த் சிரித்துக் கொண்டே, ” ஊஃப் … இவ கடிச்சு சாப்பிடாமா விட மாட்டா போலவே….” என இடுப்பில் கை வைத்தவன், அங்கு சென்றுக் கொண்டிருந்த சங்கீதாவை நோக்கி கைகாட்டினான் .

 

திடுக்கிட்டவள் தமக்கையைப் பார்த்ததும்  திரும்பாது  சங்கீதாவோடு  சென்று இணைந்துக் கொண்டாள். இருவரும் ஒரு அசட்டுப் புன்னகைப் புரிந்துக் கொண்டு நடக்க ,  ‘எங்கிருந்தாய்’ என்று இருவருமேக் கேள்விக் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இவர்களை எதிர்கொண்ட வருவோ ,

 

“எங்கண்ணிப் போனீங்க … எங்கடி போன ” என சங்கீதாவிடமும் வித்யாவிடமும் கேட்டவள் ,

 

” வித்யா நீ சொன்னது சரி தாண்டி… நான் ஸ்டேஜ் ஏறி இறங்குறப்போ … ” என நடந்ததைச் சொல்ல வர , அதற்குள் தங்கைகளை கண்டு அருகில் வந்த விக்ரம் , வருவின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டு தலையில் அடித்துக் கொண்டே , அவர்கள் முன் வந்து ,

 

” விது … கீது … தாத்தா கிட்ட போய் உட்காருங்க .. சிலம்பாட்டம் முடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்புங்க …” என அவர்களை முன்னால் செல்ல விட்டு ,வருவிடம் ‘ஷ்’ என உதட்டில் விரல் வைத்து, சொல்லாதே என்பது போல் காட்டினான்.

 

“இந்த விக்ஸ்டப்பா ஏன் இப்படி சொல்லாத சொல்லாதனே சொல்லிட்டு இருக்கு ….” என

 

அவனது செய்கையில் கோபம் கொண்டாலும் , அதன் பிறகு அவள் வாய் திறக்கவில்லை. எங்கே வரு திரும்பக் கேட்டு விடுவாளோ என்ற பயத்தில் சங்கீதாவும் வித்யாவும் அவளிடம் வேறு எதுவும் கேட்காமல் தாத்தாவிற்கு பின்புறம் இருந்த இருக்கைகளில்  சென்று அமர்ந்துக் கொண்டார்கள்.

 

அங்கு ஏற்கனவே அம்மு , சாரு என உறவுப்பெண்கள் அமர்ந்திருக்க அவர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 

அங்கு வந்த பிரதாப் சிலம்பக் கம்புகளுடனும் , கோவில் நிர்வாகம் சார்பாக போட்டியில் பங்கேற்பவர்கள் பெயர் எழுதப்பட்ட ஒரே மாதிரியான ஆடைகள் சிலவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து திலீபனிடமும் விக்ரமிடமும் கொடுத்தவன் வருவைக் கண்டதும் வித்யா அருகில் வந்து,

 

” தங்கச்சி அந்தப் புள்ளய ஒரு சேர் தள்ளி கொஞ்சம்  உக்காரச் சொல்லுமா , இதையெல்லாம் வைக்கணும் …” என்றான்.

 

வித்யாவும் அவள் பெயர் சொல்லி அழைத்துச் சொல்லவும் , வைத்துவிட்டு திரும்பி வந்தவன் ,

 

“வரு… அது என்னப் பேர் …. ஒரு வேளை வரலெட்சுமியோ…. லெட்சுமி ….ம்மாவ்.. உன் மருமக பேரு லெட்சுமி … ” எனத் தனக்குள் சிரித்துக் கொள்ள , பிரதாப்பைக் கவனித்துக் கொண்டிருந்த விக்ரம் அருகில் வந்து ,

 

“சகல … தானா சிரிக்கிற ….நேரமாகுது வா….”

 

“சகல ….. எங்கம்மா உனக்கு மகாலெட்சுமி மாதிரி தான் பொண்ணு பார்க்கணும்னு சொல்வாங்க , லெட்சுமியே மருமகளா வரப்போகுதுனு காட்டப் போறேன்…”

 

“யாருடா அந்த லெட்சுமி … ” எனக் குழம்பிய விக்ரமிடம் ,வருவைச் சுட்டிக் காட்ட ,

 

“அட பம்கின் பேர் லெட்சுமியா … ” என நினைத்தவனிடம் ,

 

[the_ad id=”6605″]

 

 

 

” எப்படியும் திலீப் கல்யாணம் வரை இங்க தான் அவ இருக்கப் போறதா மாமா சொல்லிட்டு இருந்தாரு … அதுக்குள்ள ரூட் போட்டு வச்சிரமாட்டேன்.… வா வா போகலாம் .. ” என அவன் முன்னால் செல்ல ,

 

அருகில் நின்றிருந்த திலீபனிடம் ,

 

“மாப்ள…. பேச்சிலர் பார்ட்டி இன்னைக்கு தாரேன்னு சொன்ன ஞாபகமிருக்குல்ல…”

 

“மறப்பனா மச்சான்…. பிரதாப் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்டா….” என,

 

“அம்மாவ வெய்ட் பண்ண வேண்டாம்னு சொல்லணும்டா , இப்போதைக்கு கீது தான் ஃபோன கையோட ஒட்ட வச்சுருக்கிறா… அவளதான் வீட்டுக் கதவ திறக்க சொல்லணும் வா” என்றவாறு விக்ரம் சட்டையை மாற்றினான்.

 

தங்கைகளிடம் மாற்றிய சட்டையைக் கொடுக்கப் போக , அங்கே  வித்யாவைச் சுற்றி பெண்கள் அனைவரும் பதற்றத்துடன் நிற்க, தாத்தாவும் அப்பா சித்தப்பா எல்லோரும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

என்னவோ என்று விக்ரம் வேகமாகப் போக , அவனைக் கண்டு திலீபனும் அரவிந்தும் பின்னாலயேச் சென்றனர்.

 

விக்ரம் அருகில் வர பயத்திலும் வலியிலும் இருந்தவள் கண்களில் நீர் தேங்க , அண்ணனின் சட்டையைப் பிடித்துக் காலைக் காட்டி ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!