Mullai Mullaal Edukkum Viththai Kaathal 4
முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை
பாகம் – 4
விரிவுரைகள் அனைத்தும் முடிவடைந்து மதி உட்பட அவளது நண்பிகள் அரசாங்க விடுதிக்கும் மதி தனியார் விடுதிக்கும்; சென்றாள். மதி தங்கியிருக்கும் விடுதி கொழும்பின் நவலோகவில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்த்pலிருந்து பத்து ரூபாய் பஸ் தூரத்தில் தான் அந்த விடுதி அமைந்துள்ளது. விடுதி என்னமோ பத்து நிமிட பயணம் தான், ஆனால் கொழும்பு நகரம் பரபரப்பான ஒரு நகரம் என்பதால் வாகன நெரிசல்களும் சனநெருசல்களும் அதிகமாகவே இருக்கும்.
அதனால் எப்படியும் பல்கலைக்கழகத்திலிருந்து விடுதி செல்ல அரை மணிநேரம் பிடிக்கும், அதுவும் வாரநாட்கள் எனில் சொல்லவே தேவையில்லை. பயணமே வெறுத்துவிடும். கொழும்பு நகரில் மனிதாபிமானம் என்பது சாலையோரத்தில் பறந்து செல்லும் கருகிய இலைகளைப் போன்றது. வாகன நெரிசல்களுக்குள் சிக்குண்டும், விபத்துக்களில் மாட்டிக் கொண்டும் இறப்பவர்கள் அதிகம்.
தமது கம்பனியை நோக்கி காரிலும், சொகுசு வாகனங்களிலும் பயணிப்பவர்கள் அதிகம். அவ்வாறு செல்லும் போது அவர்களது எல்லையற்ற வாகன வேகத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்குக் கூட பணக்காரர்களின் பணத்தின் தேடலுக்கான நேரம் இடமளிப்பதில்லை. கொழும்பில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பணக்காரர்களும், பல மில்லியனுக்கு சொந்தக்காரர்களும் தான். தன்னலம் மிக்க சமுதாயத்தில் மனித உயிரும் உணர்ச்சிகளும் செல்லாக் காசே.
Advertisement
ஆனால் எல்லோரும் அவ்வாறான குணம் படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் மனிதநேயமற்றவர்கள் என்ற விதிக்கு விதிவிலக்காளவர்களாகவும் உள்ளனர். பிரமாண்டமான கட்டிடங்கள், கண்கவரும் மாடமாளிகைகள், பிரசித்தி பெற்ற இடங்கள், கேளிக்கை கூத்துகளுக்கென்று தனியாக அமைக்கப்பட்ட இடங்கள் என சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றித் திரியும் இடமாகவும் கொழும்பு காணப்படுகின்றது.
கிராமத்திலிருந்து செல்கின்றவர்களை ஒரு கணம் தடுமாறச் செய்கின்ற ஒரு மாயை தான் கொழும்பு நகரம். வாழ்வின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கின்ற போதுதான் மாய போதையில் அகப்பட்டவர்களுக்குத் தெரியும் தான் கண்டவையலெ;லாம் ஆதாமின் கையில் கிடைத்த மாய ஆப்பிள் என்று. பணமும் பகட்டும் வாழ்வின் மாயைகளே, அது நகரத்தில் வாழும் பணக்காரர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவற்றையெல்லாம் சிந்தித்துக் கொண்டு மதி தனது விடுதியை அடைந்தாள்.
“சுமி இப்போ எப்பிடி இருக்க? ஓகேவா? என்று தலையை தடாவி அன்பாகக் கேட்டாள் மதி. “இல்லடீ பரவால்ல.. பாம் ”சினேன்டீ, பட் நல்ல தூக்கம்டீ” என்றாள் சிரித்துக் கொண்டே. மதி, சுமி தவிர ஏனைய மூன்று நண்பர்களும் அரசாங்க விடுதியில் தங்கியிருப்பவர்கள். அதனால் மதியும் சுமியும் மற்ற மூவரை விடவும் நெருக்கமானவர்களாவவே இருந்தனர்.
Advertisement
Advertisement
[the_ad id=”6605″]
Advertisement
இரவு ஒன்பது மணி, மதியின் தொலைபேசி அலறியது. மதி ஆசையோடு “அப்பா, அம்மா எப்படியிருக்கீங்க? என்று சந்தோஷம் பொங்கக் கேட்டாள். “மதிமா நாங்க நல்லா இருக்கோமம்மா. நீ எப்படியிருக்க? சுமி நல்லாயிருக்காளா? என்று ஆரம்பித்தார் அருணாச்சலம். “அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்காள், நீங்க எப்படி இருக்கீங்க, சதீ எப்படி இருக்கான்? என்று மதியின் கையிலிருந்த தொலைபேசியை பறித்து மதியின் பெற்றோரிடம் நலம் விசாரிக்கத் தொடங்கினாள் சுமித்ரா.
“அக்கா நான் நல்லாயிருக்கேன், என்னோட கூடப்பொறந்த ஒன்னு இருக்குமே… அந்த மாட்டுக்குக் கூட நான் இங்க இருக்கிறது ஞாபகம் வரல்ல.. நீங்க கேட்டீங்க பாருங்க.. அப்படியே ஹாட் அஹ் டச் பண்ணிட்டீங்க அக்கா என்று எதிர்பார்ப்புத் தந்த ஏமாற்றமும் கவலையுமாக புலம்பித் தீர்த்தான் சதீஸ்.
மதி அப்போது தான் தன் தவறை புரிந்து கொண்டாள், இலேசாக தனது நாக்கைக் கடித்துக் கொண்டு “சோரிடா செல்லம், நான் உன்ன கேக்க தான் வந்தேன், அதுக்குள்ள இந்த சுமி போனை பறிச்சிட்டாள்டா… என்று சமாளிக்க நினைத்தாள். “இந்த சமாளிபிகேஷன் எல்லாம் வேறு யார்கிட்டயாச்சும் சொல்லு… ஒம்பது மணியாகினா நீ கோல் பண்ணுவியே என்டு என் ஆருயிர் நண்பன் மஹீய அவொய்ட் பண்ணிட்டு வந்துட்டேன், அவன் வீட்டுல பெமிலியா சமைக்கிறாங்களாமாம், என்னையும் கூப்பிட்டான், அவங்க அம்மா எப்பிடி சமைப்பாங்க தெரியுமா? நல்லா டேஸ்ட்;டா இருக்கும், சிக்கன், இரால், நண்டுன்னு நிறைய வர்க்கம் ம்ம்.. எனக்குத்தான் கொடுத்து வைக்கல.. என்றான். “ஏன்டா டேய் எவ்வளோ கஷ்டப்பட்டு உனக்கு பிடிச்ச புட் ஐடமா செஞ்சு தாறேன். ஒரு நாளைக்கு அப்பிரஷியட் பண்ணியிருப்பியா? சும்மாவா சொன்னாங்க முற்றத்து மல்லிகை மணக்காதென்டு” சலித்துக் கொண்டாள் மகேஸ்வரி.
“அம்மா மஹியோட அம்மா டேஸ்ட்டா சமைப்பாங்கன்னு தான் சொன்னேன், உன்ன விட டேஸ்ட் ஆஹ் சமைப்பாங்கன்னு சொன்னேனா? என்று மகேஸ்வரியைக் கொஞ’சி விட்டான். “டேய் சதீ உண்மைய சொல்லுடா என்னால உன் பிரண்ட் அஹ் அவொய்ட் பண்ணினன்டு கவலையா, இல்ல அவங்க சாப்பாடா மிஸ் பண்ணிட்டோம்டு கவலையா” என்று மதி கேட்க
“நான் இல்லன்டு சொன்னா மட்டும் நீ நம்பவா போற? என்றான் சதீஸ் நக்கலும் நையாண்டியுமாக. திண்ணி மாடு என்று சண்டைபிடிக்க ஆரம்பித்தாள் மதி. “விடுடீ இவ வேற” என்று சுமி அவர்களுடன் பேச ஆரம்பித்தாள். மதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அதிகமான நேரங்கள் சுமியுடனேயே கதைத்தார்கள். சுமிக்கு அதிலொரு ஆனந்தம். அவர்களும் சுமியின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுப்பதேயில்லை.
இரவு 11 மணியாகியது. எல்லோரும் போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள். மதியும் சுமியும் சிரித்து சிரித்துக் கதைத்துக் கொணடிருந்தார்கள். மதிக்கு சிங்களம் நன்றாகத் தெரியும், அவள் பதுளையில் வசித்ததனால் அவளால் சரளமாக சிங்களம் பேச முடியும். ஆனால் சுமித்ராவினால் சிங்களம் வாசிக்க முடியுமே தவிர அதனுடைய அர்த்தத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. அவர்களது அறையில் மதி, சுமியைத் தவிர ஏனைய நால்வரும் சிங்களப் பெண்கள். மதி அவர்களுடன் அவ்வளவாகப் பேசுவதில்லை.
ஏனெனில் சுமிக்கு சிங்களம் விளங்காததால் சிங்கள மொழியில் அவர்களுடன் பேசுவது சுமிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றபடியால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் தருவதோடு இயன்றளவு ஆங்கிலத்திலேயே பேச்சுவார்த்தை நடக்கும்.
[the_ad id=”6605″]
“மதி எனக்கு உன்னோட பெமிலிய ரொம்ப பிடிச்சிருக்குடீ, அவங்களோட பழகும் போது மனசு நிம்மதியா இருக்கு” என்றாள் சுமி. “ஐயோ நீ இத இப்பதாண்டி சொல்லுறாய், பட் அம்மா, அப்பா உன்ன பார்த்த முதல் நாளே அப்பிடி சொல்லிட்டாங்க.. பார்றா இது என்ன ரிலேஷன்சிப்போ தெரியயில்லை. ஒரே மாதிரி இரண்டு பேரும் யோசிச்சாங்க நினைச்சாங்க அது உண்மையாம்டி.. ஐ மீன் சைகோலொஜிகள் பெக்ட்” என்றாள் மதி.
“இவங்க சைகோலொஜில பி.எஜ்.டி முடிச்சிருக்காங்க பாரு…(மதி முறைத்தாள்) பட் கேட்க நல்லாத்தான் இருக்கு.. முறைக்காதடீ சகிக்க முடியல..” என்று மதியின் கன்னத்தைக் கிள்ளிவிட்டாள். இருவரும் அப்படியே தத்தமது படுக்கையில் உறங்கிப் போனார்கள். அடுத்த நாள் காலையில் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
“சுமி லேட் ஆச்சுடி சீக்கிரமா வாடீ… உன்ன என்ன பண்றது?” என்று அறையின் வாசலில் நின்று கத்தினாள் மதி. “ஏண்டீ என்னோட பேர ஏலம் போடுற… வர்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று ஒரு அழகான சிவப்பு நிற சல்வார் ஒன்றை அணிந்து வந்தாள் சுமி. சுமியும் மாநிறம் தான், வயதுக்கேற்ற உயரம், அழகான வதனம், தோடம்பழ உதடுகள் என் நம்ம ஹீரோயினுக்கும் சுமி சலைத்தவளல்ல.
எல்லா திரைப்படங்களிலும் காட்டுவதைப் போல நம்ம கதையிலயும் ஹீரோயின எல்லா பொண்ணுங்கள விடவும் கொஞ்சம் தூக்கலா காட்டியிருக்கேன் அவ்வளோதான்.
“இந்த சல்வார் எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு பாறேன்” எனக் கூற தனது அரிவாள் போன்ற இரு புருவங்களையும் உயர்த்தி “உனக்கு செம்மயா இருக்குடீ” என்று கூறினாள் மதி.
அதில் அதிசயிப்பதற்கு என்ன இருக்கிறது என்று யோசிக்காதீங்க. சுமி போட்டிருக்கிறது மதியோட சல்வார். “நைட் அம்மா பேசும் போது அவங்க ஆசையாசையா வாங்கித் தந்த ரெட் கலர் ரெஸ் அஹ் வெயார் பண்ண சொன்னாங்க இல்லையா? அது தான் வெயார் பண்ணியிருக்கேன் மதி”.
“அது என்னயத்தான் வெயார் பண்ண சொன்னாங்க உன்ன இல்லடீ கள்ளி என மதி சொல்ல “இங்க பாரு அவங்க ரெஸ் அஹ் வெயார் பண்ணச் சொல்லும் போது நான் தான் பேசிட்டு இருந்தேன் இல்லையா? என்று கேள்விக் கணைகளை சுமி தொடுத்தாள் “ஆஹ் நீ தான் பேசிக்கிட்டு இருந்த அதுக்கு? என்ன என்று மதியும் வினவ “அவங்க பேசினப்போ நான் தானே பொண்ணு அப்போ அம்மா எனனத்தான் வெயார் பண்ண சொன்னாங்க, எனக்கே அளவெடுத்துச் தைச்சாப்போல இருக்கு… என்றாள் சுமி.
மதியோ பொய்க்கோபம் காட்டி “உன்ன என்று அடிக்கப் போக “ஐயய்யோ என்று தலையில் கையை வைத்தாள் சுமி. என்னடீ என்று பதறிப் போய் மதி கேட்க “லெக்சர்ஸ்கு டைம் ஆகிடிச்சே என்றாள் சுமி வெகு இலேசாக. “நான் ஒரு நிமிஷம் பதறிப் போய்ட்டேன்.. காலைலயே கடுப்பேத்தாம வாடீ..” என்று மதி கோபப்பட “இனி ஏங்கிட்ட ஏதாவது கேள்வி கேட்பியா நீ சொல்லுடீ ”.. “அம்மா தாயே நீ எத வேண்டாலும் எடுத்துக்கோ உன்ன ஒன்னுமே சொல்ல மாட்டேன் மன்னிச்சுக் கொள்.. (அழுதவாறு முகத்தை பாவனை செய்து விட்டு) லேட் ஆகிட்டுதுடீ பிளீஸ் வாடா சுமி செல்லம்” என்றாள் மதி.
அந்த பயம் இருக்கனும் என்று இருவரும் வேகமாக பஸ்தரிப்பிடத்தை நோக்கி ஓடினார்கள். கொழும்பிலுள்ள ஒவ்வோர் பஸ’ஸிற்கும் இலக்கமிடப்பட்டு இருக்கும். எண் பார்த்தே பஸ்ஸினை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவர்கள் செல்ல வேண்டிய பஸ் தயாராக இருந்தது. அது புறக்கோட்டையிலிருந்து மஹரகம் செல்லும் 138 இலக்கத்தைக் கொண்ட பஸ். மதி பஸ்ஸில் ஏறி விட்டாள்.
சுமியோ ஏறாமல் அப்படியே நின்றாள். ஏறிய மதி மீண்டும் இறங்கி என்னடீ ஒனக்கு..(என்றவாறு பஸ்ஸைப் பார்த்தாள்) ஐயோ பஸ் கிளம்பிட்டு வாடீ என அவளது கையை இழுக்க.. பிடிவாதமாக நின்றவள் திடீரென மதியின் கையை விளக்கி விட்டு சற்று நகர்ந்த பஸ்ஸில் ஓடிச் சென்று ஏறிக் கொண்டாள். மதியோ செய்வதறியாது திகைத்து நிற்க என்னடீ உனக்கு பெகல்டி வாற ஐடியாவே இல்லயா? யாருக்காக வெயிடிங்? என்று கேட்ட மதியும் திடுக்கிட்டவளாய் ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறினாள்.
மதி சுமியுடன் பழகிய கொஞ்ச நாளிளேயே மதியின் விளையாட்டுத் தனங்கள் தெரியும் என்பதால் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சுமியின் ஒவ்வோர் சிரிப்பிலும் விளையாட்டுத் தனத்திலும் ஓரு ஏக்கம் நிறைந்திருப்பதை மதி கவனிக்கத் தவறவில்லை.
[the_ad id=”6605″]
“சோரி மதி என்னால உனக்கு ரொம்ப கஷ்டம் இல்லையா?” என்றாள் ஒரு வித முக வாட்டத்துடன்.. “உன்னோட மூச்சிய சோகமா வச்சுக்காத பார்க்க சகிக்க முடியல..” என்று கூறி அவளது முகத்தை பார்த்தவள் உணர்ந்து கொண்டாள் அது உதடுகள் பேசிய வார்த்தையில்லை, உள்ளம் பேசிய வார்த்தையென்று. “ஏய் லூசு ச்ச்சீ.. அப்பிடி எல்லாம் ஒன்னுமில்ல. எக்சுவலி உன்னோட இந்த குறும்புத்தனம் தான் எனக்குப் பிடித்ததே, அது தான் என்ன இப்பிடி கட்டிப் போட்டிருக்கு உன்கிட்ட… என்று தனது தோளை சுமியின் தோளுடன் தட்டிக் கொடுத்தாள் மதி. “உண்மையாவா சொல்லுற” என்று சுமி கேட்க
“ஆமாம்டீ லூசு.. எனக்கு இதெல்லாம் புதுசு.. எனக்கு இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லடீ, சோ பழகிக்க கொஞ்சம் டைம் வேணும்… அதோட இப்பதானே உன்ன மாதிரி ஒரு லூசு பிரண்ட் கிடைச்சிருக்கு” என மதி கூற ஏன் என்று பார்வையாலேயே கேள்வியெழுப்பினாள் சுமி.. “உன்னோட லூசுத்தனத்த டொலரேட் பண்ணுறதுக்கு” என்று தலையில் செல்லமாகத் தட்ட வெடுக்கென்று சிரித்தாள் சுமி.
மதியின் பார்வையில் சுமி ஒரு குழந்தையாகவே தெரிந்தாள், தன்னுடைய கண்கூட அவளது சிரிப்பில் பட்டுவிடக் கூடாது என்று அவளது முகத்தையள்ளி திருஷ்டி களித்துக் கொண்டாள் மதி. சுமி மதியை நோக்கி “மதி ஒரு நிமிஷம் நீ இதுதான் சாட்டென்று என்ன சைக்கள் கேப்ல லூசு லூசு என்று சொல்லிட்ட தானே.. பண் என்றதால இப்போ சும்மா விடுறேன், வாடீ போர்டிங்ல உன்ன பார்த்துக்கிறேன்.. அதற்கு மதி சிரித்துக் கொண்டே “ஓ இது பஸ’ஸென்டு உனக்கு ஞாபகம் இருக்கா நல்ல விசயம் என நக்கலாகக் கூறினாள்.
நீயும் வரவர என்ன மாதிரியே பேசுறடீ.. மதி, என்ன செய்ய சுமி சேர்கை சரியில்ல.. என்று சுமியின் பாணியில் பதில் கொடுத்தாள் மதி. இருவரும் கலகலப்பாகப் பேசிக் கொண்டே பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர். மதி தன்னைப் பற்றி ஒன்று விடாமல் சுமியிடம் சொல்லிவிட்டாள். மதி தொடர்பாக சுமிக்கு தெரியாத இரகசியம் ஒன்றும் இல்லை. மதி யாரையும் அவ்வளவு இலேசாக நம்ப மாட்டாள்.
ஆனால் அதே கெடுபிடியை ஏனோ சுமியிடம் காட்ட மதிக்கு தோன்றவில்லை. ஆனால் சுமி தன்னை வளர்த்த பாட்டியைப் பற்றி சொல்லியிருக்கிறாளே தவிர தன்னுடைய பெற்றோரைப் பற்றியோ தனது சிறுவயதைப் பற்றியோ, குடும்ப சூழ்நிலையைப் பற்றியோ மதியிடம் எதுவும் சொல்லவில்லை சுமியிடம் அதைப் பற்றி மதி எதுவும் கேட்பதுமில்லை.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய விடயங்களை அவள் சொல்லும் வரைக்கும் சுமியிடம் அதைப் பற்றி கேட்க மதிக்கு விருப்பமில்லை. அது ஒழுக்ககரமான செயல் இல்லையென்பதால் மற்றவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் வரையிலும் அதைப் பற்றி அறியும் பழக்கத்தை தனக்கு எல்லாம் அறியும் வயது வந்த காலத்திலிருந்தே மதி தன்னகத்தே கொண்டிருந்தாள். ஆனால் மதி தன்னிடம் பழகும் முறை, தனது பெற்றோரிடம் அவள் கொண்டிருக்கும் அன்பு, உரிமை என்பன சுமியை பாசத்திற்காக ஏங்கும் ஒரு ஏக்கமிக்கவளாகவே சித்தரித்தது.
