Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 27

ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI-27

 



Advertisement

எதோ ஒரு வேகத்தில் வீம்புக்காக வீட்டை விட்டு வந்து விட்டாலே ஒழிய அவளால் இங்கே இருக்க முடிய வில்லை என்பது என்னவோ உண்மை

 

அவளின் சிறு பிள்ளை தனமான கோபம் தான் எப்போதும் வந்த சுவடே அறியாமல் சென்று விடுமே!!!! அது போலவே இப்போதும் ரெண்டே நாளில் சென்று விட்டது

Advertisement

 

Advertisement

அதுவும் ஹாஸ்டல் வாழ்க்கை அவளுக்கு நரகமாக இருந்தது  விவரம் அறிந்த வயதில் இருந்து தனி அறையை பயன்படுத்தியவள்  அவள் விருப்பப்பட்ட நேரம் வரை நிம்மதியாக தூங்கி எழுந்தவளால் இந்த பெண்கள் போடும் சத்தத்தில் உறங்க கூட முடிய வில்லை

 

உணவு சொல்லவே வேண்டாம்  அவளால் வாயில் வைக்கவே முடிய வில்லை  அண்ணன் பிள்ளைகளை மனம் தேட சோர்ந்து விட்டாள்   அந்த அறையில் இருக்கும் பெண்கள் ஸ்நேகத்தோடு  பழக வந்தாலும் ஏனோ அவளால் அவர்களிடம் ஓட்ட முடிய வில்லை   ஒரு புன்னகையோடு நிறுத்தி கொண்டாள்

Advertisement

 

அவர்களும் ஹோம் ஸிக் போல என்று நினைத்து கொஞ்ச நாள் போனா தானா சரியாகிடுவா என்று விட்டுவிட்டனர்

 

எப்போதும்  பட்டாம்பூச்சியாக சுற்றி கொண்டிருப்பவள்  இங்கு வந்த நாட்களில் இருந்து அமைதியாக தனக்குள் சுருண்டு கொண்டாள்

 

பணிபுரியும் இடம்   இதை விட மிரட்டலாக இருப்பதாய் தோன்ற நம்மளால முடியாது பேசாம சென்னை போய்ட்டு ஏதாவது காலேஜ்ல ஜாயின் பண்ணிட வேண்டியது தான் என்று  மனம் சிந்திக்க ஆரமித்தது

 

அதற்கும் கரணம் இல்லாமல் இல்லை  இதே கல்லூரியில் தான் காவியாவின் சகோதரி பிரியா பணிபுரிகிறாள்  யாரையும்  அறியாத ஊரில் தன் சொந்தத்தை கண்டதும் இவள் மகிழ்ந்து போக

 

ப்ரியாவோ இவளை எதிரியை போல் பார்த்து  வைத்தாள்  அதோடு நில்லாமல் அவளின் தோழிகளான மற்ற பேராசிரியர்கள்   இருவரிடமும் மதுவை பற்றி  தவறாக உரைத்து இவளிடம் பேசவிடாமல் செய்து  விட்டாள்

 

இதனால் மதுவின் மனம் மேலும் காயப்பட  சீக்ரம் ஊருக்கு போய்டணும் என்று சிந்தித்தது

 

[the_ad id=”6605″]

 

 

அடுத்த நொடியே அவளின் மனம் என்னை நானே பாத்துக்கு வேன்னு சொல்லிட்டு இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு திரும்ப செல்ல என்று கேக்க  கூடவே  அவளின் மூளை           நம்ம வீட்ல யாரு துணையும் இல்லாம  நீயா ஒரு வாரம் வாழ்ந்து  காட்டு  பாக்கலாம்  என்ற சக்தியின் குரலை செவியில் கேக்க வைக்க

 

இவன் ஒருத்தன் எப்போ பாரு அந்நியன்படம் அம்பி மாதிரி எதையாவது பேசி கடுப்படிப்பான்  இவனை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரியலை  என்று வாய் விட்டு யோசிக்க ஆரம்பித்தாள்

 

அவளின் மனம் க்கும்  அந்த அம்பி இவ மேல இருக்க காதல்ல ரெமோவா மாறி ரொம்ப  வருஷம் ஆச்சின்னு இவ கிட்ட எத்தனை முறை சொல்றது  நான் டயர்டாயிட்டேன் ஏப்பா மூளை இப்போவாவது  நீ கொஞ்சம் வேலை செய்ப்பா இல்லை அவன் சீக்ரம் அந்நியனா  மாற  போறான் என்று அறிவுறுத்த

 

அவளின் மூளை நீ பேசாம போ எனக்கு தெரியும் அவன் இன்னும் இவ கிட்ட லவ் யு னு ஒரு வார்த்தை கூட சொல்லலை என்றது

 

கடைசியில் அப்போ சரி வீட்ல யாராவது வந்து கூப்டா  பேசாமல் போய்ட்டனும்   அது வரைக்கும் கெத்தா இருக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்து  அவள் எண்ணிற்கு வீட்டிலிருந்து யார் அழைப்பு விடுதாலும்  நாம பேசினா பத்ரமாதான இருக்க  அங்கவே இருன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க

 

மத்தவங்க  ஊருக்கு வர சொன்னாலும் இந்த அய்யனாரும்  பரிமளாவும் சேர்ந்து  தடுத்துடுவாங்க என்று எண்ணி அழைப்பை  ஏற்க்காமல்  விட்டு விட்டாள்

 

அவள் எண்ணியதை போலவே  அந்த  ஞாயிறு  அவளை பார்க்க விசிட்டர்ஸ்  வந்திருப்பதாக ஒரு பெண் கூறிவிட்டு செல்ல  அவளின் மனமோ அப்படியே ஒரு குத்தாட்டம்  போடு மது என்றது

 

ஆசை ஆசையாக  காண சென்றால் அங்கு இருப்பவனை பார்த்தவளுக்கு  சப் என்றாகி விட்டது

 

ஒரே நொடியில் மனம் வெறுமையான உணர்வு  வந்திருப்பவன் மேல் பாசம் இல்லை என்று கிடையாது  இவனை பிரிந்து இருக்க முடிந்தவளால் அவனை பிரிந்து இருக்க முடிய வில்லை   அன்றும் சரி இன்றும் சரி

 

என்ன இருந்தாலும் நண்பன் வேறு கணவன் வேறு இல்லையா அவள் தன கணவனை எதிர் பாத்திருக்க வந்திருந்தது அவளின் தோழன்  தன்னவனை எண்ணி வேதனையில் உழலும் போது எல்லாம் ஆதரவாய் இருந்தவன்   ஆம் அங்கு அவளுக்காக காத்திருந்தது மனோ

 

அவளை கண்டதும்   மனோ “கிளம்பு போலாம் “என்று  கோபமாய் உரைக்க  ஓடிச் சென்று அவன் மார்பில் சாய்ந்து அழ தொடங்கி விட்டாள்  சக்தி வந்திருந்தால் கூட தன்  உணர்வை வெளிப்படையாய் கட்டி இருக்கமாட்டாள்  மனோவிடம்  மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே !!!!!

 

அவளை அப்படியே அழைத்து கொண்டு அங்கிருந்த பார்க்கில் நுழைந்தவன்

 

” உனக்கு அண்ணாவைப் பற்றி தெரியாதா ஏதோ கோபத்துல சொன்னால் சொல்லிட்டு போறான்னு விடாம இப்படி தான் கிளம்பி வந்துதுடுவியா  போனையும் எடுக்க மாட்ற

 

அங்கு வீட்டை நினைச்சி பாத்தியா எல்லாரும்   எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா  உன்ன நெனச்சு பெரியம்மா அழுதுட்டு இருக்காங்க முதல்ல அவங்க கிட்ட பேசு”

 

சக்திக்கு அழைத்து “மது பேசுறா   பேசுங்க  “என்று மதுவிடம் நீட்ட சக்தி பேசாமல் அலைபேசியை கொண்டு சென்று லவுட்  ஸ்பீக்கரை ஆன் செய்து தன் அன்னையிடம்  கொடுத்து விட்டான்

 

மது பேசும் முன் பேசிய காவேரி அழ ஆரம்பித்து விட்டார்   இவள் தன்னை மறந்து அவரை சமாதானம் செய்ய வெகுநேரம் ஆனது   சமாதானமானவர் “மது இப்பவே கிளம்பி வா”என்றுரைக்க   அவளுக்கும் அதே எண்ணம் தானே உடனே சரி என்றாள்   காவேரி அவளை நம்பாமல்

 

[the_ad id=”6605”]

 

 

போனை மனோவிடம் தர சொல்ல மதுவும் ஸ்பீக்கரை ஆன் செய்து மனோவிடம் நீட்டினால்  அவனிடம் அவளை அழைத்து வரச் சொல்லிவிட்டு  சக்தியிடம் “பேசுப்பா” என்று கொடுத்து விட்டு உள்ளே சென்றார்

 

இவ்வளவு நேரம் தன் மனைவியின் அழுகையை கேட்டு உறைந்து நின்று இருந்தவன் தன்னை சமாளித்து கொண்டு “மனோ அவளை உடனே கூட்டிட்டு வந்துருடா அவளால தனியா இருந்து சமாளிக்க முடியாது

 

ஆல்ரெடி ரொம்ப பயந்துட்டா போல ”

 

சக்தி என்னவோ அவளுக்கு தனிமையின் அவஸ்தை வேண்டாம் என்று எண்ணி கூற அந்த வார்த்தை மதுவின் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டது

 

ரொம்ப தான் அக்கறை குப்புற விழுது நான் தனியா கஷ்டபடறேன்னு  கூட்டிட்டு போக ஓடி வந்துட்டாரு பாரு என்று உள்ளே நொடித்து கொண்டவள்

 

“ஹலோ  நான் வந்து உங்க கிட்ட ரொம்ப பயந்துட்டேன்னு சொன்னேனா என்னால தனியா இருக்க முடியும் என்று ஆங்காரமாய் கத்த ஆரம்பிக்க

 

சக்தி “இப்போ எதுக்கு தேவையில்லாம  கத்திட்டு இருக்க  ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்து  சேரு அப்படியே கெளம்பி போய்ட்டா  மனசுல பெரிய ஜான்சிராணிண்னு நெனைப்பு” நக்கலாய் கூற

 

“அப்படி எல்லாம் வர முடியாது  நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன்   எப்போ தோணுதோ அப்போ தான் வருவேன்   நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை   நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுட்டு தலையாட்றத்துக்கு

 

நான் தான் சொல்லிட்டேன்ல உங்களுக்கு டிவோர்ஸ் தரேன்னு அப்புறம் எதுக்கு என்னை  கூப்பிடுறீங்க

 

பேப்பர் ரெடி பண்ணி அனுப்புங்க சைன் பண்ணிக் கொடுக்கறேன்  ” என்றவள்” ஹோ உங்களுக்கு ட்ரெயின் பண்றதுக்கு யாரும் கிடைக்கலையா” என்று இழுத்து அவனைவிட நக்கலாய் கூற

 

“ஸ்ரீ  யுவர் கிராசிங் யுவர் லிமிட் “என்று அவன் புயலை உள்ளடக்கிய குரலில் கூற

 

அவன் உரைத்ததை கண்டுகொள்ளாமல் “எங்க காலேஜ்ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க  நீங்க டிரெயின் பண்ண யாரையாவது செலக்ட் பண்ணி அனுப்பவா”என்று குத்தலாய் பேசிக்கொண்டே இருக்க

 

அடுத்த நொடி பெரும் சத்தத்தோடு இணைப்பு துண்டித்தது

 

அந்தப்பக்கம் சக்தியின் விலையுயர்ந்த அழைப்பேசி மூலைக்கு ஒன்றாய் சிதறி இருந்தது

 

மனோவிடம் அலைபேசியை கொடுத்தவள்   தன் இரு கைகளையும் தலைக்கு தாங்கியவாறு அமர்ந்துவிட்டாள்   தான் இதுவரை நினைத்தது என்ன இப்போது அவனிடம் பேச பேசியது என்ன என்று அவளுக்கு அவளே யோசித்துக் கொண்டிருந்தாள்

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் மனோவின் அழைப்பேசி அலர சக்தியின் எண் தான் மதுவை ஒரு பார்வை பார்த்தவன்   “ஆபீஸ் கால் பேசிட்டு வரேன்” என்றவாறு எழுந்து சென்றான்

 

இங்கு மதுவின் மனமோ உலை இருப்பது போல் எரிந்து கொண்டிருந்தது  கோவை மாநகரின் குளிர்ச்சியால் கூட அவளை குளிர் விக்க முடியவில்லை

 

எப்போ பாரு என்னை அண்டர் எஸ்டிமேட் பண்றதே இவனுக்கு வேலையா போச்சு  அவன் எவ்வளவு பேசினாலும் அவன் பின்னாடி போறேன்ல அதான்

 

எப்படி பார்த்தாலும்  அவன் நெனைக்கிறது தான் நடக்குது

 

மனோ போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் “அண்ணா இந்த லூசு எதுக்கு தான் இப்படி பேச தெரியாம பேசுதுன்னு தெரியலை   அப்படியே தலையில ரெண்டு போடலாம் போல இருக்குன்னா  நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க என்று சக்தியின் மனதை தேற்ற

 

“சரி விடு டா அவ ரொம்ப லோன்லியா பீல் பண்ணி இருப்பா அவளை பாக்க நான் வருவேன்னு நெனச்சி இருப்பா நான் வரலை இல்லையா அதான் இப்படி பேசறா

 

நீ அவளை வெளியே கூட்டிப் போய் சாப்பிட வை   அங்க அவ பேவரட் ஹீரோ விஜய் சேதுபதியின் படத்துக்கு ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்   கூட்டிட்டு போ அவ மூடு கொஞ்சம் நார்மல் ஆனதும்  பொறுமையா வீட்ல எல்லாரும் பீல் பண்றாங்க கெளம்பி வான்னு சொல்லி கூட்டிட்டு வா  நான் வைக்கிறேன்  ”

 

“அண்ணா எப்படி  இப்படி இருக்க         முன்னாடி எல்லாம் உன் வாயை விட கைதான் அதிகம் பேசும்   இப்போ என்னடான்னா அவ அவ்வளவு பேசும்போதும்   ஆரூஸையும் யாழினியையும் ட்ட்ரீட்   பண்ற மாதிரி ட்ரீட் பண்ற

 

பொண்டாட்டிகிட்ட  அடங்கி போறதுல நீ அர்ஜுன் மாமாவை விட ஒரு படி மேல போய்ட்ட

 

இவ்ளோ தெரிஞ்ச  நீ பேசாம வந்து அவளை கூட்டிட்டு போய் இருக்கலாம்  அதனால தான் அவ உன் மேல ரொம்ப கோபமா இருக்கா  ”

 

[the_ad id=”6605″]

 

 

“டேய் போன்லயே இந்த கத்து கத்துறா  நான் நேர்ல வந்து இருந்தா அவ்வளவுதான்  சாமி ஆடியிருப்பா  இந்நேரம் எல்லாரும் பிரிஸோ பார்த்திருப்பாங்க  அதனாலதான் உன்னை அனுப்பினேன்

 

மனோ ” என்னமோ சொல்ற  செய்கிறேன் நீ அவளை பாப்பா மாதிரி பார்த்துக்கணும் சொல்லு   நானும் அப்படியே பார்த்துக்குவேன்   அப்புறம் வந்து எல்லாம் செல்லம் கொடுத்து என் பொண்டாட்டிய கெடுக்குறீங்கன்னு  எங்க மேல எரிஞ்சு விழு

 

உங்க கிட்ட மாட்டிகிட்டு நான் தான் லூசு ஆயிடுவேன் போல என்று சலித்து கொள்வது போல் போனை அணைத்தான்

 

இங்கு போனை வைத்த சக்தியின் முகத்தில் வேதனையின் சாயல் எதிரில் இருந்த அவளின் புகைப்படத்தை வருடியவன்  “எப்போ தான் என்னை புரிஞ்சுப்ப  ரொம்ப கஷ்டப்படுத்துற டீ வலிக்குது என்று தன் நெஞ்சை நீவிக் கொண்டான்

 

சக்தி சொன்னது போல் மதுவை சாப்பிட வைத்து தியேட்டர் அழைத்து வந்திருக்க  மதுவும் சற்று சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்   படம் முடிந்ததும் வெளியேற   மது பிரியாவுடன் இருக்கும் ஒரு பேராசிரியயின் கண்களில் பட்டாள்

 

மது அவளை கவனிக்கவில்லை   ஹாஸ்டலிற்கு அழைத்து வந்தவன்  ” டிரஸ் பேக் பண்ணிட்டு வா போலாம் வீட்ல எல்லாம் நீ வருவன்னு  எதிர்பாப்பாங்க  ”

 

“இல்லை மனோ நான் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கேன்    என்று உறுதியாய் மறுக்க

 

“வீட்ல இருக்கவங்களை யோசிச்சு பாரு குழந்தைங்க ரெண்டு பெரும் உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க மது “என்று மனோ வாதாட

 

“நான் போன் பண்றேன் எல்லார்கிட்டயும் பேசிக்கிறேன் ப்ளீஸ் மனோ எனக்கு ஒரு change தேவைப்படுது அப்படியே வந்தாலும் எனக்கும் உங்க அண்ணனுக்கும் சண்டை தான் அதிகம் ஆகும்   புரிஞ்சிக்கோ “என்று கூற

 

அவளை ஒரு நிமிஷம்   இரு என்றவன் தனியே வந்து தன் அண்ணனிடம் கூற அவனும் யோசனையோடு “சரி தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு நீ கிளம்பு என்று விட்டான்

 

அண்ணன் சொன்னதை போல் செய்து விட்டு அவளிடம் விடைபெற  முதன்முதலில் பள்ளியில் விடும் குழந்தை தன் அன்னையை கட்டிக்கொண்டு அழுவது போல்  அவன் மேல் சாய்ந்து அழுக

 

அவளை சமாதானப்படுத்தி “உனக்கு எப்போ வரணும்ன்னு தோணுதோ அப்போ கிளம்பி வந்துடு  இல்லனா என்னை கூப்பிடு நான் கூட்டிட்டு போறேன்   என்னால முடிஞ்சவரைக்கும் வீகெண்ட் வரேன் என்று உறுதியளித்து விடை பெற   அவனை பார்த்து சோகமாய் புன்னகைத்தவள்   ”

 

“மனோ எப்பவும் எங்க பிரச்சனையில உன்னை அல்லாட விடுறோம்

 

நீ காவியா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம போயிடுது இல்லை   சாரி “என்று வருத்தத்துடன் உரைக்க

 

” பார்ரா என் அத்தை பொண்ணு என் கிட்ட சாரி கேக்குற அளவுக்கு பெரிய ஆளா ஆயிட்டா  என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்   உனக்கு இந்த பீலிங் செல்லாம் செட் ஆகலை  எப்பவும் போல ஜாலியா இரு

 

நீ எனக்கு அன்னின்றதை விட  என்னோட ஃப்ரெண்ட்   என் ஃப்ரண்டு எப்பவும் ஹாப்பியா இருக்கணும்  அது தான் எனக்கு முக்கியம்   இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை   உனக்கு தெரியாம நீ காவியாவிற்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கே!!! என்று காவியா தற்கொலை செய்ய முனைந்ததை நினைத்து பார்த்தவன்   தலையை உலுக்கி விட்டு

 

தேவை இல்லாமல் எதையும் யோசிக்காம இந்த நிமிடத்தை அனுபவித்து வாழு நான் இங்க வந்துட்டுப் போறதுல எனக்கும் காவியாவுக்கும் எந்த கஷ்டமும் இல்லை   அமைதியா இரு எல்லாம் சரியாயிடும் என்று விட்டு கிளம்பினான்

 

அவன் சென்றதும் விழிகளில் சுரந்த நீரோடு படுக்கையில் சாய்ந்தாள்   கடந்த ஆறு வருடமாக தன்னவனை நினைத்து ஏங்கி கொண்டிருக்க  இன்னும் அந்த ஏக்கம் முடிந்தபாடில்லை

 

ஒருவேளை இந்த ஏக்கத்தோடே !!!தன் வாழ் நாள் கழிந்து விடுமோ என்று நினைத்து அழுகையில் கரைந்தாள்  தன் தவறான புரிதல் தான் இந்த பிரிவிற்கும் ஏக்க கத்திற்கும் காரணம் என்று இன்னும் அவள் உணரவில்லை  அதை உணரும் வேளையில் சக்தியை தேடி செல்வாளோ!!!  இல்லை   தனிமையில் கரைவாளோ !!!

 

மொழி தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!