Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 13 2

அவன் கண்களைக் கட்டவும் விழிகளை சுருக்கியவள் , அடுத்து அவன் பேச்சில் அப்படியே நின்று விட்டாள்.

 

“மா… அம்மா….. ” எனத் திக்கியவள் தாயின் நினைவில் அமைதியாகி நிற்க …

 



Advertisement

அதோடு அவன் விரல்கள் உடலை உரசி கூசச் செய்ய , பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு இப்போதும் அழுகைதான் வந்தது. ஆனால் இது ஏதோ சந்தோஷ அழுகை என்றே சொல்லலாம் ,

 

கண்களை கட்டி விட்டால் அவன் பார்வை அவளைத் தொடாது தான் … ஆனால் அவன் விரல்கள் முதுகில் மென்மையாக உரசுகையில் பதின்பருவ மங்கையின் உடலில் மாற்றம் வராமல் இருக்குமா என்ன….

Advertisement

 

Advertisement

தாயின் மறைவிற்குப் பின் அப்பாவோ அண்ணனோக்கூட  இப்படியான உதவிகளைச் செய்ததில்லை அவர்கள் வீட்டில் சமையல் செய்யும் குஜராத்தி பெண்ணான சுஷ்மா மட்டுமே செய்து விடுவார் .இப்போது முதன் முறையாக ஒரு ஆண் … அதுவும் அவன் சொன்ன ,

 

“என்னையவே உங்கம்மாவா நினை” என்ற வார்த்தை அவனை மெய் மறந்து பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

Advertisement

 

ஆனால் விக்ரமோ உடலில் மட்டுமல்ல அவள் மனதிலும் அவன் நடத்தையின் மூலம் ஏதேதோ மாற்றங்களைக் கொண்டு வருவதை உணராமலே முடிச்சுகளை விடுவித்துக் கொண்டே ….

 

“என்ன இப்படி… லேடீஸ் ட்ரஸ் பண்ண அது தான் நேரமாகுதா … ஆன் …. கம்ப்ளீட் ” என்றவாறு அவிழ்த்து விட்டுத் தான் அவன் கீழே விழுந்தது.

 

அந்த சத்தத்தில் தான் அவனைப் பார்க்க முதலில் மல்லாக்கப் படுத்து கண்களை அவனது கையால்  மூடிக்கொண்டே

 

“இனி சைட் கூட அடிக்க மாட்டேன்….. அது தப்பு ஏன்னா சகலைக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சாம்….. லட்சு …லட்சுனு  எங்கிட்ட புலம்பித் தள்ளுறான்… அவன் விரும்புற பொண்ணப் பார்க்க கூடாது தப்பு … சரி அதை மாத்திட்டு கிளம்பு” என்றவாறு குப்புறப் படுத்துக் கொண்டான்.

 

” என்ன மாத்தணும்..” எண்ணியவாறே அவனைப் பார்க்க சட்டையில்லாத அவனது முதுகை தான் பார்த்தாள் வரு. அவன் தன் சட்டையை அவள் முதுகை மறைத்து போட்டு விட்டிருந்தான். அவனை மட்டுமே கவனித்தவள் இதை முதலில் கவனிக்கவில்லை.

 

கொஞ்சம் கொஞ்சமாக மனதினுள் நுழைந்தவன் … இப்போது இதயத்திலயே அமர்ந்து விட்ட உணர்வு … அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டே , தண்ணீர் தொட்டி அடியில் இருந்த மறைவில் சென்று அணிந்துக் கொண்டு வந்து அவனைப் பார்க்க வெறும் தரையில் நன்கு உறக்கத்திலிருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்

 

என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்

கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்

எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்

 

எனக்கு என்னானது மனம் தடுமாறுது

விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது’

 

இவ்வளவு நேரம் அவனோடு வாயாடிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது ,

 

“வெறும் தரையிலப் படுத்திருக்காங்க ” என்பதாகத் தான் நினைத்தாள். கீழிருந்து சத்தம் கேட்கவும் அதற்கு மேல் அங்கு நிற்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவள் படியிறங்கி கீழேச் சென்று விட்டாள்.

 

சங்கீதா நன்கு உறங்கிக் கொண்டிருக்க கட்டிலில் அமர்ந்தவள் உடை மாற்றலாம் என்று எண்ணினாலும் ஏனோ அவனது சட்டையை மாற்ற மனம் வரவில்லை. எனவே வித்யாவின் பாவாடை ஒன்றை அணிந்துக் கொண்டவள், போர்வை ஒன்றை போர்த்தி படுத்துக் கொண்டு விக்ரமுடனான நிகழ்வுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

சங்கீதாவின் மொபைலில் ஐந்து மணிக்கான அலாரம் ஒலிக்கவும் தான் , தான் இரவு முழுவதும் உறங்காமலே இருந்தது தெரிந்தது. சங்கீதா எழவும் தானும் எழுந்து போர்வையைப் போர்த்திக் கொண்டே எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

 

எழுந்த சங்கீதா வருவைப் பார்த்து திடுக்கிட , அதற்குள் வித்யாவும் அறைக்குள் நுழைந்திருந்தாள்.அவளோ வருவின் அருகிலேயே வந்து,

 

” என்ன வரு….… கண்ணெல்லாம் சிவந்திருக்கு… ஜுரம் அடிக்குதா ….”

 

சங்கீதாவும் , “அதுதான் நானும் பார்க்கிறேன் அடிக்கிற வெயிலுக்கு ஏசி எவ்வளவு கூலா வச்சாலும் வியர்க்கிற மாதிரி தான் இருக்கு…. நீ இப்படி போர்த்திட்டு இருக்க….”

 

சங்கீதாவின் பேச்சில் போர்வையை இன்னும் நன்றாகப் போர்த்திக் கொண்டு

 

“ஐயோ … இவங்க எந்திரிக்கிறதுக்குள்ள டாப்ஸ் மாத்திரலாம்னு நினைச்சேனே  இப்ப என்னனு  கேட்பாங்களே….”யோசனை செய்தவள் ,

 

“அது ….. லைட்டா குளிருது…” என்றவள் … இரவு முழுவதும் உறங்காதது அழுதது எல்லாம் சேர்ந்து தலைவலியைத் தர , அவளது டாப்ஸ் அருகில் கிடக்க போர்வைக்குள் மறைத்து எடுத்து குளியலறைக்குள் நுழைந்து மாற்றி விட்டு வந்தவள் , அவர்கள் அறியாமல் விக்ரம் சட்டையையும் தன் உடைப் பைக்குள் வைத்துக் கொண்டாள்.

 

“கொஞ்சம் தலைவலி… உனக்கு எப்படி இருக்கு பரவாயில்லையா” என வித்யாவின் காலைப் பார்க்க ,

 

“எனக்கு ஒன்னுமில்ல சரியாகிடுச்சு … சொல்ல மறந்துட்டேன் உங்கப்பா வந்துட்டாங்க போல ,தாத்தாவும் சித்தியும் அவங்களப் பார்க்க கிளம்பிட்டு இருக்காங்க , நீ எழுந்துட்டா கூட கூட்டிட்டுப் போக கேட்டாங்க… ”

 

“மறந்தே போய்ட்டேன் … நான் கிளம்புறேன்….” என்றவளிடம் வித்யா ,

 

“சாயந்திரம் முளைப்பாரி எடுத்துட்டு ஆத்தங்கரை போகணும் மறந்துராதே… ”

 

வேகமாக படியிறங்கியவள் வித்யாவிடம் திரும்பி தலையாட்டி விட்டு மொட்டை மாடியைப் பார்க்க அது அவள் திறந்து வைத்ததுப் போலவே இருக்கவும் ,

 

[the_ad id=”6605″]

 

 

 

முகத்தில் தானாக முறுவல் தோன்ற , “விக்ஸ்டப்பா உன்னால விடிஞ்சது தான் தெரியலனுப் பார்த்தா … எங்கப்பாவயே மறந்து போய்ட்டேன் பாரு ….”

 

அங்கு தயாராக நின்றிருந்த பரணியோடும் விக்ரமின் தாத்தாவோடும் கிளம்பி விட்டாள்.

 

“கீதுமா உங்கண்ணன் எப்ப வந்தான். சாப்பிட்டானா … உங்க பெரியப்பா அவன் சாப்பிட்டுட்டுத்தான் வந்திருப்பான் நீ படுனு சொல்லிட்டாங்க … போய் எழுப்புமா திருநெல்வேலி வரை போய்ட்டு வர வேலை இருக்கு …”

 

அப்போதுதான் அண்ணனின் ஞாபகம் வரப் பெற்றவள் , லதாவிடம் சரி என்பதாக தலையாட்டிக் கொண்டே ,

 

“ஃபோன் பண்ணதும் கதவு திறக்க சொன்னாங்க , ஆனா ஃபோனும் வரல … நானும் திறக்கலயே… “யோசித்துக் கொண்டே விக்ரம் அறைக்கதவைத் தட்டி விட்டு கதவைத் திறக்க அங்கு அவனில்லை என்றதும், அவன் வழக்கமாக காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய மொட்டை மாடி செல்வான் என்பதால் அங்குச் சென்றாள்.

 

கைகளை மடக்கி தலைக்கு கொடுத்திருந்தவன் குப்புறபடுத்திருக்கவும் ,

 

“அண்ணா…” சத்தமே இல்லை எனவும் அருகில் வந்தவள் ,

 

“அண்ணா நீ எப்போ வந்த …. இங்கப் படுத்துருக்க…” என சங்கீதா உலுக்கவும் , விழிகளை கஷ்டப்படுட்டு திறந்த விக்ரம் ,

 

” கதவு திறந்துட்டியா ….” என்றவன் நன்கு விழிக்க விடிந்துருப்பதைக் கண்டவன் , கண்களைக் கசக்கிக் கொண்டே எழ முற்பட ,

 

” எப்போண்ணா வந்த ….கதவு யார் திறந்தா…. ஃபோன் பண்றேன் சொன்ன … அத்… அத்தானும் நைட் ஃபோன் பண்ணல … ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன் அவங்க எடுக்கல….” எனத் தடுமாறிக் கொண்டே கேட்க…

 

” என்ன … நான் வீட்டுக்கு வந்தப்ப கீது கதவ திறக்கலயா … ஐயோ அம்மா வா … ” சுற்றிப் பார்த்தவன் “மொட்டை மாடிக்கு எப்ப வந்தேன்… ” யோசித்துக் கொண்டே ,

 

“அது மா ….அம்மாதான்.. அம்மாதான் திறந்து விட்டாங்க … ” இடுப்பில் கைவைத்துக் கொண்டு தன்னை முறைத்த தங்கையை பார்த்து விழித்தவன் ,

 

“எ… என்னாச்சு”

 

“ஓ… பெரியம்மா திறந்து விட்டாங்க சரி… இங்க ஏன் படுத்திருக்க ….”

 

“அது… அது …..” என்றவன் படக்கென்று தரையில் கையூன்றி தண்டால் எடுக்க ஆரம்பித்து விட்டான்.

 

“எக்சசைஸ் பண்ண வந்தேன் … அப்படியே கொஞ்சம் அசந்துட்டேன்….”

 

விக்ரம் முன்புறம் வந்து அமர்ந்தவள் …

 

” ண்ணா … உண்மையச் சொல்லு அத்தான்  நாங்க எல்லோரும் குற்றாலம் போய்ட்டு லேட்டா தான் வருவோம்னு சொன்னாங்க….. ஒரு டைம் மேல ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் … பெரியம்மா நீ எப்ப வந்தனு எங்கிட்ட கேட்கிறாங்க … நீ வெளிவாசல் வழியா இங்க வந்திருக்க .. ஐ திங்க் ….ஐ திங்க் …. ”

 

அமர்ந்து தங்கையின் கையைப் பிடித்தவன் ,

 

” கீது மா… ப்ளீஸ்.. ப்ளீஸ்… உன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் நான் இங்க வர முடியும் …. அப்ப  பேச்சிலர் பார்ட்டி தர நேரமிருக்குமோ என்னவோனு…. ” எனத் தயங்கிய விக்ரமிடம் ,

 

” என்ன பார்ட்டியா….. எப்பவோ பார்ட்டி போற நீயே எப்ப வீட்டுக்கு வந்தனு தெரியாம இருக்கிறப்போ …. (Klonopin) வீக்கெண்ட் பார்ட்டி அட்டெண்ட் பண்ற உன் ஃபிரண்ட்… நினைச்சாலே கடுப்பாகுது” என அவன் கையில் அடித்து விட்டு எழுந்தாள்.

 

“ஆ…. ” என்றுக் கத்தி விட்டான் விக்ரம்.விழித்த சங்கீதா ,

 

“ஏய் அண்ணா … என்ன சும்மா தட்டுனதுக்கே இந்த சவுண்ட் … எனக்கு வர்ற கோபத்துக்கு …. இரு உன்னைய அப்புறம் பார்த்துக்கிறேன் …பெரியம்மா திருநெல்வேலி வரை போகணுமாம் உன்னைய சீக்கிரம் கிளம்பி வரச் சொன்னாங்க….  ” என்றவள் தன் மொபைலை நோண்டிக் கொண்டே கீழே சென்று விட்டாள்.

 

கையைப் பார்த்தவன் அதில் பற்தடங்களும், வீக்கமும் இருப்பதைப் பார்த்து விட்டு ஃபோன் எடுக்க சட்டையைப் பார்க்க , அங்கு சட்டையே இல்லை என்றதும் ,மாடியைச் சுற்றி பார்வையைச் சுழல விட அங்கு அவன் ஃபோன் சிதறிக் கிடப்பதைப் பார்த்து வேகமாகச் சென்று சரி செய்தவன் திலீபனுக்கு அழைப்பு விடுத்தான். அந்தப்புறம் அமைதியாக இருக்கவும் ,

 

“டேய் மாப்ள…. ”

 

“மச்சான் நீ தானடா… நான் எங்க மங்கி தான் உன் நம்பர்ல இருந்து அடிக்கிறாளோனு பயந்துட்டேன் ….”

 

“போன் அடிக்கிறாளோ இல்லயோ உன்னைய நேர்லப் பார்த்தா நீ தொலைஞ்ச … சரி அத விடு …ஏன்டா நேத்து நாய் எதுவும் என்னையக் கடிச்சிருச்சா டா… கை வீங்கி பல் தடம் இருக்கு மச்சான்…”

 

[the_ad id=”6605″]

 

 

“என்ன மாப்ள சொல்ற … நானே இப்பதான் டா எந்திரிக்கிறேன்…. இரு நாய் எதுவும் உன்னையக் கடிச்சா … என்னையும் கடிச்சிருக்குமே… ” என்றவன் சிறிது நேரம் கழித்து ,

 

“அப்பாடா என்னைய ஒன்னும் கடிக்கல….”

 

“டேய் அப்ப எவனாவது சண்டையப் போட்டு போதைல என்னையக் கடிச்சிட்டீங்களா டா ….டேய் கை வலிக்குது…”

 

“இருடா நம்மள்ல அரவிந்த் தான் ஆப்பிள் ஜூஸ் குடிச்சவன் … அவன் தான் உன்னையும் என்னையும் வீடு வந்து சேர்த்ததே .. கேட்டுக்கலாம் .. ” திலீபனின் சமாதானத்தில் மாடி முழுவதும் தன் சட்டையைத் தேடினான் விக்ரம ஆதித்தன்.

 

ஆம்… தன் சட்டையை மட்டுமல்ல தன்னையே ஒருவள் நெஞ்சுக்குள் பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டிருக்க போகிறாள் என்பதை அறியாமல் தேடிக் கொண்டிருந்தான் ஆதி.

துளித்துளியாய் தூவும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!